Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

images.jpg

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.

உங்களுடைய செல்போனில் *ஜ06ஜ என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.islamkalvi.com

உங்களுடைய செல்போனில் *ஜ06 ஜ என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

கு.சா அண்ணா நீங்கள் சொன்னமாதிரி எண்ட மொபிலில அமத்திப் பார்த்தன். ஒண்டையும் காண இல்ல? :D நீங்கள் செய்து பாத்தீங்களா?எப்பிடி அமத்துறது?

கு.சா அண்ணா நீங்கள் சொன்னமாதிரி எண்ட மொபிலில அமத்திப் பார்த்தன். ஒண்டையும் காண இல்ல? :) நீங்கள் செய்து பாத்தீங்களா?எப்பிடி அமத்துறது?

*ஜ06 ஜ இதையா அழுத்தினீங்கள்? :D

அது இப்படி வரும் *#06#*

  • கருத்துக்கள உறவுகள்

*#06# என்று அழுத்திப் பாருங்கள்.. phone serial number வரும்.. நம்மட 01 காட்டுது..

  • கருத்துக்கள உறவுகள்

என்ர 01 காட்டுது. நன்றி.. கு.சா. :D

என்னுடையதிலும் 01 வருது... :D

  • கருத்துக்கள உறவுகள்

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

கீழே ஓங்கி அடித்து பாருங்க. அதன் தரம் தெரியும் :D

  • கருத்துக்கள உறவுகள்

கீழே ஓங்கி அடித்து பாருங்க. அதன் தரம் தெரியும் :D

உங்கட போனுக்கே இந்தக் கதி என்றால்.. பாவம் உங்கட மனுசனார். உச்சந்தலையில பொல்லால ஓங்கி ஒரு அடி அடிச்சுத்தான் அவற்ற தரத்தைப் பார்ப்பீங்க போல இருக்குதே..! :wub::)

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடையதிலும் 01 வருது... :D

நீங்கள் nokia போன் பாவிக்கிறீங்கள்...! சரியா..??! :)

அடடா எல்லாருக்கும் ஒண்டுக்கு வருகிதோ? இதுக்க அசுத்தம் செய்யாமல் வெளியில போய் இருங்கோ.. ஹாஹா..

எல்லாருக்கும் 00 வருகிறதில இருந்து என்ன தெரியுது எண்டால் எல்லாரிண்ட மடியுக்கையும் நல்லா காசு புழங்கிது போல...

கு.சா அண்ணா இந்த தகவல் சரியானது எண்டு நான் நினைக்க இல்லை. ஏன் எண்டால் நீங்கள் சொன்னபடி செய்து பார்க்க எண்ட மொபிலில முதலில சில ஆங்கில எழுத்துக்களும் அதுக்கு பிறகு 17 இலக்கங்களும் வருகிது. நீங்கள் சொன்னதின்படி 15 இலக்கங்கள் அல்லவா இருக்கவேணும்?

மேலும்... 7வது 8வது இலக்கங்கள் எனக்கு 01 எண்டு இருக்கிது. நீங்கள் சொன்னதின்படி இந்த மொபில் பின்லாந்தில் செய்யப்பட்டு இருக்கவேணும். ஆனா நான் மொபிலிண்ட பற்றரிய திறந்து உள்ளுக்க பார்க்க

Made in Korea, Finished in Malasia எண்டு எழுதி இருக்கிது... :icon_mrgreen:

நான் பாவிக்கிறது.. Sony Ericsson

நீங்கள் nokia போன் பாவிக்கிறீங்கள்...! சரியா..??! :icon_mrgreen:

இல்லையே.... என்னுடையது Samsung , அப்பா பாவிப்பது Nokia... இரண்டிலும் 01 வருது.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல் கு.சா!

சகோதரி கறுப்பி! இப்ப உங்களிடம் போன் இருக்கா? அல்லது குழந்தை அதை வைத்து விளையாடுகிறானா? :lol::(

ம்ம்...கு.சா தாத்தா செல்போனின்ட தரத்தை இப்படி எல்லாம் கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் இல்ல பாருங்கோ :wub: ..(பிகோஸ் செல்போன் தரமா இருக்கும் ஆனா கிரடிட் இல்லாம இருக்கும் :lol: )..முதலில செல்போனிற்கு கிரடிட் இருக்குதா என்று பார்கணும்..(என்ன பார்க்கிறியள் சொன்னான் பிறகு கோவிக்க கூடாது என்ன)... :lol:

ம்ம்...சில பேர் பொண்ணுகளுக்கு பிலிம் காட்ட நன்ன செல்போன் எல்லாம் வைத்து இருப்பீனம் பாருங்கோ பட் கிரடிட் மட்டும் இருக்காது :lol: ..(ஆனா என்ன மாதிரி அவையள் கேள்சிற்கு முன்னால கதைப்பீனம் பாருங்கோ)...அடடடடா.. :lol:

ம்ம்ம்..இப்ப நான் சொல்லுறன் செல்போன் தரமா இருக்கிறது முக்கியமல்ல கிரடிட்டோட இருக்கிறது தான் முக்கியம் பாருங்கோ..(முடியல என்னால :lol: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா உன்ட தரதிற்கு ஏற்ற மாதிரி தாரத்தையும் செலக்ட் பண்ணு செல் போனையும் செலக்ட் பண்ணு" :wub:

அப்ப நான் வரட்டா!!

  • 8 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசி அசலா ? போலியா ? ? என நீங்கள் சோதித்திருக்கிறீர்களா ? இல்லையெனில் இதோ அருமையான முறை * பின்வரும் இலக்கங்களை அழுத்துங்கள் *#06#

* 7வது 8வது இலக்கங்களில் உள்ளவற்றை கவனமாக பார்த்து கீழுள்ளவற்றோடு ஒப்பிடுங்கள்.

Number---------Phone serial no

1 ----------------------x

2 ----------------------x

3 ----------------------x

4 ----------------------x

5 ----------------------x

6 ----------------------x

7th------ --------------?

8th------- -------------?

9 -------- ------ -------x

10----------------- ----x

11 ---------------------x

12 ---------------------x

13 ---------------------x

14------------- --------x

உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது 20 ஆக இருந்ததால் உங்களுடைய போன் ஐக்கிய அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டது மிகவும் கூடாதது. விரைவில் பழுதடையும்.

சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08 அல்லது 80 ஆக இருந்ததால உங்களுடைய போன் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .

சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 01 அல்லது 10 ஆக இருந்ததால உங்களுடைய போன் பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.

உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 00 ஆக இருந்தால் உங்கள் போன் ஒரிஜினல் கம்பனியில் தயாரிக்கப்பட்டது. பல வருடங்கள் பாவிக்கும்.

உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 13 ஆக இருந்தால் உங்கள் போன் Azerbaijan இல் தயாரிக்கப்பட்டது. மிகவும் மோசமானது. உங்களுடைய உடல் நலத்துக்கு ஆபத்தானது.

இனியாவது மொபைல் போன் வாங்கும்போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோக்கியா கைத்தொலைபேசி வாங்குகிறீர்களா...? எச்சரிக்கை...!

அருமையான பதிவு, பொருத்தமான இடத்தில்... :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய N70 இல் 00 உம் N95 இல் 01 உம் வருகிறது. இது உண்மை போலத்தான் இருக்கு :D . ஏனென்றால் என்னுடைய N70 எத்தனையோ தடவை நிலத்திலே விழுத்தப் பட்டும் இப்பவும் நன்கு வேலை செய்கிறது ஆனால் N95 சில மாதங்களிற்கு முன்னர் பழுதாகி warrenty மூலம் திருத்திக் கொடுத்தார்கள். இப்போது சரி :( .

Edited by Thumpalayan

இது Nokia நிறுவனத்தின் விற்பனை தந்திரம். எல்லா Nokia போன்களையும் தொடர் இலக்கத்தை சோதித்து பார்தால் 01 - 10 என தான் வருகின்றது. ஆனால் சோனி எரிச்ஸனை சோதித்தால் 02-20 என வருகின்றது இதெல்லம் வியாபாரத்துக்காக விடும் டூப்பு

Edited by mathuka

நானும் இரண்டு NOKIA கைதொலைபேசிகளை சோதித்து பார்த்தேன், அவற்றில் ஒன்று இலங்கையில் வாங்கியது மற்றயது சிங்கப்பூரில் வாங்கியது இரண்டுக்கும் 00 என்றுதான் வருகிறது!

வேறுயாருக்காவது வேறு இலக்கம் வந்தால்தான் இதை நம்பலாம்!

இது Nokia நிறுவனத்தின் விற்பனை தந்திரம். எல்லா Nokia போன்களையும் தொடர் இலக்கத்தை சோதித்து பார்தால் 01 - 10 என தான் வருகின்றது. ஆனால் சோனி எரிச்ஸனை சோதித்தால் 02-20 என வருகின்றது இதெல்லம் வியாபாரத்துக்காக விடும் டூப்பு

இவர் சொல்வதுதான் சரிபோல் உள்ளது... samsung க்கு 02 வருது nokia க்கு 00 வருது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் blackbery 00 கட்டுகிறது. நொக்கியா 02. எல்ஜி 02 காட்டுகிறது. blackbery கனடாவில் செய்தது. நொக்கியா மெக்ஷிக்கோவில் செய்தது எல்ஜி சய்னாவில் செய்தது

  • கருத்துக்கள உறவுகள்

கை தொலை பேசி எனது , தனி மனித சுதந்திரத்துக்கு இடையூறாக இருப்பதால் , அதனை நான் இப்போது பாவிப்பதில்லை .

அதனால் நான் சந்தோசப் படுகின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கை தொலை பேசி எனது , தனி மனித சுதந்திரத்துக்கு இடையூறாக இருப்பதால் , அதனை நான் இப்போது பாவிப்பதில்லை .

அதனால் நான் சந்தோசப் படுகின்றேன் .

மச்சான் சிறி, ஏன் வெளியில போனாலும் கால் பண்ணி கூப்பிடினமோ :unsure: ?

எண்ட வோக்கிடோக்கிக்கு ஒன்றுமே வரலையே கிர் கிர் என்று சத்தம் தான் வருகுது :unsure:

Edited by suppannai

இது Nokia நிறுவனத்தின் விற்பனை தந்திரம். எல்லா Nokia போன்களையும் தொடர் இலக்கத்தை சோதித்து பார்தால் 01 - 10 என தான் வருகின்றது. ஆனால் சோனி எரிச்ஸனை சோதித்தால் 02-20 என வருகின்றது இதெல்லம் வியாபாரத்துக்காக விடும் டூப்பு

மதுகா நீங்க சொன்னதுதான் சரியா இருக்கும்போல எனக்கும் படுகுது. ஏன் எண்டா உங்கட பிரச்சினைதான் எனக்கும்... :unsure::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் செய்து பார்த்தேன் 7வது இலக்கம் 01 என வருகிறது எனவே நல்ல தயாரிப்பாயிருக்குமென நினைக்கிறேன்

நான் இன்று பலவிதமான செல்லிடப்பேசிகளை சோதனை செய்து பார்த்தேன். நொக்கியாக்கள்ல் எல்லாம் முதல் இடத்திலும் , சைமன்ஸ் இரண்டாவது இடத்திலும், சம்சுங்,எல் ஜீ,மோட்டரோலா, சொனி எரிக்சன் இவைகள் எல்லாம் 3 இடத்திலும் தான் இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.