Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கேள்வி

Featured Replies

இம்முயற்சி வரவேற்கத்தக்கதே. ஆயினும் தவிர்க்கவியலா இடங்களுக்கு மட்டுமாவது கருணை காட்டவும் :mellow:

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லையென்றால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அல்லது படைப்புக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கவில்லை. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தும் கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதுவது அல்லது திணிப்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. :wub:

ஆர்வமும் அக்கறையும் இருக்கிற கருத்துக்கள உறுப்பினர்கள் யாராவது யாழ் கருத்துக்களத்தில் பயன்படுத்தப்படுகிற இந்தவகை ஆங்கிலச் சொற்களை (பிளீஸ், ஹாய் போன்ற) பட்டியலிட்டு அவற்றுக்கான தமிழ்ச்சொற்களையும் பக்கத்தில் எழுதிவிடுங்கள். தமிழ் தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

நன்றி

  • Replies 100
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கு தமிழ் பகுதியில் கருத்துத் திணிப்பு அடிப்படையில் பல தலைப்புக்கள் ஈ வெ ராமசாமி என்பவரை மையப்படுத்தி திணிக்கப்படுகின்றன. சுமார் 10 தலைப்புக்கள் வரை கடந்த இரண்டு தினங்களுக்குள் திறக்கப்பட்டு ஒரே விடயம்.. பல வடிவங்களில் திணிக்கப்படுகிறது.

ஆறுமுகநாவலர் என்ற கள உறவு இந்து மதம் சார்ந்து இப்படி செய்த போது.. கருத்துத் திணிப்பு பிரச்சாரம் என்று அவற்றை தூக்கியவர்கள்.. இவற்றை அனுமதிப்பது ஏன்..???!

ஈ வெ ராமசாமி சாற்றிய கருத்துக்களின் அடிப்படையில் அவரின் பொய்த்தோற்றங்களை இனங்காட்டிய போது அவற்றை கருத்துத்திணிப்பாகக் கருதி நீக்கியவர்கள்.. பொங்கு தமிழுல் ஈ வெ ராமசாமி பற்றிய புகழ்பாடல்களை அனுமதிப்பதன் பின்னணி என்ன..???! அவற்றை அவர்கள் திணிப்பாகக் கருதாததற்கு காரணங்கள் என்ன... என்பதைச் சொல்வார்களா..???! :D:mellow::wub:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்வது கேள்விப்படவில்லையோ. தமிழனுக்குப் புத்தி சொல்ல கன்னடன் வரவேணும், ஆரியன் வரவேணும் என்று எதிர்பார்ப்பார்கள்.

நாளைக்கு கன்னடனுக்கும் இதே ஆரியன் கதை தான் நடக்கும்.

நிர்வாகதினருக்கு,

ஆங்கில சொற்களை சேர்க்க கூடாது என்ற

சர்ச்சை சம்பந்தமாக சில கருத்துகளை

முன் வைக்க விரும்புகிறேன்.

தமிழ் மொழியை ஆங்கிலம் கலந்த

வார்த்தைகளோடு எழுதுவது

தவறு என்று எடுத்து கொண்டாலும்

அடுத்த கட்டமாக சில யதார்த்த உண்மைகளை

நோக்க வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் சில ஆங்கில சொற்களுக்கு

தமிழை பிரயோகிக்கும் போது நிச்சயமாக பொருள்

விளங்காமல் தடுமாறுபவர்கள் பலர்,

இந்த சர்ச்சை காலம் காலமாக இருந்து வருகிறது

அதற்கு முடிவு என்று வரும் பொழுது எப்போழுதும்

சில ஆங்கில வார்த்தைகளை பிரயோகிப்பதில்

தவறு இல்லை என்பது ஏகமானதான முடிவு.

(சில தமிழ் பண்டிதர்களால் அவுஸ்ரெலியாவிலும்

இது ஏற்று கொள்ளபட்டது).

உதாரணமாக சில ஆங்கில சொற்களை பார்த்தால்

ஹல்லோ,கவ் ஆர் யூ இந்த வார்த்தைகள் அல்லது

வசனங்கள் இது பாமர மக்களிற்கும் எளிதாக விளங்கும்

இப்படி எழுதுவதால் தமிழ் அழியும் என்பது கோமாளிதனம். :mellow:

எதை சொல்பதிலும் ஒரு நாகரிகம் இருக்கிறது

"ஈவிரக்கமின்றி" முற்றுமுழுதாக நீக்கப்படும்.

என்பதிற்கு பதிலாக ஒரு நாகரிகதோடு கூறினால்

ஏற்று கொள்ள முடியாத கருத்துகளையும் மக்கள்

ஒரு முறை சிந்திப்பார்கள்.

நீங்கள் கூறி இருப்பதை பார்த்தால் சிந்திபதிற்கு பதிலாக

யாழை விட்டு சிதறி ஓடி விடுவார்கள் போல இருக்கிறதே

உதாரணம்.

பழம் இருக்க காயை பறித்து உண்ணுவது போல்

உங்கள் நிபந்தனை இருக்கிறது. :wub:

நன்றி.

கனிஷ்டா நீங்கள் சொல்வது வரவேற்கத்தகக்து.

ம்ம் நிர்வாகத்தினரின் சொற்பிரயோகம் ""ஈவிரக்கமின்றி" முற்றுமுழுதாக நீக்கப்படும்." என்பது பயங்கரமாக கட்டளை இடுவது போல தான் இருக்கின்றது.

கொம்ப்யூட்டர் என்றால் தான் பலருக்கு தெரியும். அதையே கணணி என்றால் பலருக்கு புரியாது. இபப்டி நிறைய இருக்கின்றது என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே ஒருசில சட்டதிட்டங்கள் ஒருசிலருக்காகவே இயற்றப்படுகின்றது. :)

தமிழில் புதுப்புதுச் சொற்கள் இலகுவானதாக உருவாக்கப்படாமை தான் இப்பிரைச்சினைக்கு முக்கிய காரணம். ஆனால் சிலரோ இது தான் தூய தமிழ் என்று சில சொற்களைத் திணிக்கின்றார்கள் அவற்றைப் பார்த்தால் எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை. உதாரணமாக cafe என்பதை காப்பி அல்லது கோப்பி என்கின்றோம். ஆனால் cafe க்கு தமிழ் கொட்டைவடிநீராம். நான் காலையில் கொட்டைவடிநீர் அருந்தினேன் என்று கதைக்கும் போது சொன்னால் கேட்பவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார். இதையெல்லாம் நினைக்க என்னாலும் இப்போ முடியலை. :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவாளர் வசம்பு அவர்களே! நீங்கள் கொட்டைவடிநீரை எப்படி தயாரிப்பீர்கள்?

கொட்டைவடிநீரை எந்த பாத்திரத்தில் வடித்து அருந்தி மகிழ்வீர்கள்?

இப்படியே போனால், சில காலத்தில் ஹாய், ஹலோ எல்லாம் தமிழ் சொற்களாகவே மாறிவிடும். கட்டுமரம் போன்ற தமிழ் சொற்கள் ஆங்கிலமானது இப்படித்தானோ!

Edited by தூயா

  • கருத்துக்கள உறவுகள்

கொம்ப்யூட்டர் என்றால் தான் பலருக்கு தெரியும். அதையே கணணி என்றால் பலருக்கு புரியாது. இபப்டி நிறைய இருக்கின்றது என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

இப்பதில்கள் வெண்ணிலாவிற்காக அல்ல. பொதுவாகவே எழுதுகின்றேன். :)

கொம்பியூட்டர் என்ற சொல்லை நீங்கள் பிறக்கும்போதே பழகிக் கொண்டு வந்தீர்களா? பிறகு தானே தெரிந்து கொண்டீர்கள். அவ்வாறு கணனி என்பதையும் அறிந்து கொள்வது தானே? தமிழில் போதுமான தமிழ் சொற்கள் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று தான். ஆனால் இருப்பதைப் பாவிக்கமட்டும் ஏன் முடியாமல் போகின்றது.

ஹாய், ஹவ்வாயு போன்றவற்றை அனுமதித்த தமிழ்ப் பண்டிதர்கள் என்போர் யார் என கனிஸ்டாவிடம் அறிந்து கொள்ள விரும்புகின்றோம்.

நிர்வாகத்தினர் மன்னிப்பு, சலுகை, இட ஒதுக்கீடு என ஆங்கிலச் சொற்களைப் பாவிக்க விட்டீர்கள் என்றால் பழைய குருடி, கதவைத் திறவடியாகத் தான் போய், வழமை மாதிரிக் கொஞ்சலும், கூத்துமாகத் தான் யாழ்களம் மாறும்.

இங்கே ஹலோ, ஹவ்வாயு என்ற சொற்கள் எல்லாம் தேவைப்படுகின்றவையா? விவாதக்களம் ஒன்றில் அச்சொற்களுக்கான தேவை என்ன? மற்றவர்களை விளிக்க வணக்கம் என்ற சொல்லைப் போட்டுக் கொள்ளலாம்.

தமிழில் புதுப்புதுச் சொற்கள் இலகுவானதாக உருவாக்கப்படாமை தான் இப்பிரைச்சினைக்கு முக்கிய காரணம். ஆனால் சிலரோ இது தான் தூய தமிழ் என்று சில சொற்களைத் திணிக்கின்றார்கள் அவற்றைப் பார்த்தால் எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை. உதாரணமாக cafe என்பதை காப்பி அல்லது கோப்பி என்கின்றோம். ஆனால் cafe க்கு தமிழ் கொட்டைவடிநீராம். நான் காலையில் கொட்டைவடிநீர் அருந்தினேன் என்று கதைக்கும் போது சொன்னால் கேட்பவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார். இதையெல்லாம் நினைக்க என்னாலும் இப்போ முடியலை. :):D

திருவாளர் வசம்பு அவர்களே! நீங்கள் கொட்டைவடிநீரை எப்படி தயாரிப்பீர்கள்?

கொட்டைவடிநீரை எந்த பாத்திரத்தில் வடித்து அருந்தி மகிழ்வீர்கள்?

நான் எழுதியதை வாசிச்ச கு.சாவிற்கே இந்தக்கதியென்றால் :wub: கதைக்கும் போது பாவித்தால் கேட்பவரின் நிலை என்னவாக இருக்கும்??? :):rolleyes:

இப்படியே போனால், சில காலத்தில் ஹாய், ஹலோ எல்லாம் தமிழ் சொற்களாகவே மாறிவிடும். கட்டுமரம் போன்ற தமிழ் சொற்கள் தமிழானது இப்படித்தானோ!

தூயா

நீங்கள் குறிப்பிடுவது தவறு. உண்மையில் ஆங்கிலேயர் கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தான் கட்டுமரா என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லையென்றால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அல்லது படைப்புக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கவில்லை. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தும் கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதுவது அல்லது திணிப்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. :D

அட மட்டுறுத்துனர் கூட சிரிக்கிறாருப்பா? :)

என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. கோமாளித்தனம் எனக்கும் எரிச்சலையே தருகிறது. என் பதிவுகளில் ஏதாவது கோமாளித்தனமாக பட்டாலும் கூட தயவுதாட்சணியமின்றி வெட்டலாம். ஆனாலும் இங்கே நேரம் செலவழித்து பதிவெழுதும் உறுப்பினர்களின் ஆர்வத்தையும், உழைப்பையும் நீங்கள் மதிக்கவேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இங்கே வைக்கிறேன்.

***

நான் எழுதியதை வாசிச்ச கு.சாவிற்கே இந்தக்கதியென்றால் :rolleyes: கதைக்கும் போது பாவித்தால் கேட்பவரின் நிலை என்னவாக இருக்கும்???

கொட்டைவடிநீர் என்ற சொல்லை கேட்டதுமே எனக்கும் தாவூ தீர்ந்துவிட்டது.... :)

'தாவூ' என்பதும் தமிழ் சொல் தான். அண்மையில் தமிழில் சேர்த்தோம்.... :wub:

Edited by இணையவன்
*** சக உறுப்பினர்கள் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

தூயா

நீங்கள் குறிப்பிடுவது தவறு. உண்மையில் ஆங்கிலேயர் கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தான் கட்டுமரா என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார்கள்.

இதை தான் சொல்லவந்தேன்

தவறா எழுதிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மல்லிகை 43 ஆண்டு மலர் வாசிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது அதன் ஆசிரியர் இப்படி கூறி இருக்கின்றார்.

"உயர் சாதி வெறி திமிர் தலைகேறிய பண்டித பண்டாரங்கள் இழிசனர் வழக்கு என எனது இலக்கிய படைப்புகளை இழித்தும் பழித்தும் பேசிய சம்பவம் வட பிரதேச மண்ணில் இருந்து தான் முதலில் முகிழ்ந்தெழுந்து வந்தது."

இந்த ஆசிரியருக்கு இத்தகைய சம்பவம் 30 வருடங்களிற்கு முன் நடந்தது என்று நினைக்கிறேன் இன்று அது யாழில் நடைபெறுவது போல் தெரிகிறது.அது போக ஆனாளபட்ட தமிழ் சினிமா,சன் தொலை காட்சி எல்லாம் யாழை விட பிரபலயமான ஊடகம் பலராலும் கருத்துகளை உள்வாங்க கூடிய ஊடகம் அதுவே தமிழ் வளர்க்காமல் ஆங்கிலம் வளர்க்க போட்டிக்கு நிற்குது.

நாங்க மிஞ்சி போனா ஒரு நாலு பேர் கோமணத்தை கட்டி கொண்டு தமிழ் வளர்க்க தமிழில் எழுத சொன்னா சரி வருமா? :)

(சில தமிழ் பண்டிதர்களால் அவுஸ்ரெலியாவிலும்

இது ஏற்று கொள்ளபட்டது).

அந்த பண்டிதர்களின் கூட்டதிற்கு பண்டிதராகிய நான் சமூகமளிக்கவில்லை அதானால் தான் அவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பார்கள் போல் நினைக்கிறேன். :):D

அந்த பண்டிதர்களின் கூட்டதிற்கு பண்டிதராகிய நான் சமூகமளிக்கவில்லை அதானால் தான் அவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பார்கள் போல் நினைக்கிறேன். :):rolleyes:

ம்ம்..மாமா நீங்க சொல்லுறது எல்லாம் சரி தான்..(அது ஒன்னும் பன்னிகள் கூட்டமில்ல) :) ..பண்டிதர் கூட்டமாக்கும் நீங்க அங்க போய் என்ன செய்ய போறியள்.. :D

அப்ப நான் வரட்டா!!

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லையென்றால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அல்லது படைப்புக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கவில்லை. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தும் கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதுவது அல்லது திணிப்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. :)

ஆர்வமும் அக்கறையும் இருக்கிற கருத்துக்கள உறுப்பினர்கள் யாராவது யாழ் கருத்துக்களத்தில் பயன்படுத்தப்படுகிற இந்தவகை ஆங்கிலச் சொற்களை (பிளீஸ், ஹாய் போன்ற) பட்டியலிட்டு அவற்றுக்கான தமிழ்ச்சொற்களையும் பக்கத்தில் எழுதிவிடுங்கள். தமிழ் தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

நன்றி

நீ உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானக திருந்திவிடும். இது ஒரு அறிஞரின் வாக்கு

களத்தில் Reply என்பதற்கு பதிலாக பதிலளி. Quote என்பதற்கு பதிலாக மேற்கோள் என்றும் இன்னும் பல ஆங்கில சொற்கள் உள்ளதே அவற்றையும் தமிழ் சொற்களால் பாவித்து முன்மாதிரியாக நிர்வாகம் நடந்து கொள்ளலாமே? :):D:rolleyes::wub::lol:

New topic ...... புதிய பகுதி

Fast Reply ......விரைவாக பதிலளி

Edit ................திருத்தம்

Preview .........பார்வையிடு அல்லது காண்பி

Memmber ....உறுப்பினர்.

Joind..............இணைந்தது

Edited by வன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவ் ஆர் யூ இதை தமிழில வாசிக்கத்தான் எனக்கு வாந்தி வர்ற மாதிரி கிடக்கு - how are you என்று எழுதினால் பரவாயில்லை -

தவிர எப்பிடி சுகம்? நலமாயிருக்கிறீரா என்று கேட்டால் புரியாதாம். கவ்வு ஆர் சூ என்றால் விளங்குமாம் என்றால் விளங்குமா இது :)

எனக்கு வீ கேத் எஸ் என்டால்தான் விளங்கும்.

கவ் ஆர் யூ இதை தமிழில வாசிக்கத்தான் எனக்கு வாந்தி வர்ற மாதிரி கிடக்கு - how are you என்று எழுதினால் பரவாயில்லை -

தவிர எப்பிடி சுகம்? நலமாயிருக்கிறீரா என்று கேட்டால் புரியாதாம். கவ்வு ஆர் சூ என்றால் விளங்குமாம் என்றால் விளங்குமா இது :)

எனக்கு வீ கேத் எஸ் என்டால்தான் விளங்கும்.

தனித்தமிழிலையே பலர் வாந்தி வாறமாதிரி எழுதிறீனமே இது பற்றி என்ன நினைக்கிறீங்கள் காவடி ஐயா?

மேலும்...

நாங்கள் எழுதுவதே கீமானை பாவிச்சு ஆங்கில கீபோர்டில்... ஆங்கில உச்சரிப்பில தமிழை எழுதுகின்றோம். ammaa என்று ஆங்கிலத்தில எழுதினால் தான் அம்மா என்று தமிழில வரும்.

முதலில எல்லாரும் ஆகாயத்தப் பார்த்து துள்ளிக்குதிக்கும் முன்னம் அடிப்படையில் நீங்கள் காலை எங்கு ஊன்றி வச்சு இருக்கிறீங்கள் என்று ஒருக்கால் தலையைக் குனிஞ்சு பாருங்கோ.

சிரிப்பது தவிர வேறு என்ன கூறுவது என்று அடியேனுக்கு தெரியவில்லை.

ஒரு மொழியை ஒருவன் விரும்பி எழுதமுடியுமே, படிக்க முடியுமே தவிர... பலாத்காரமாக ஒன்றை ஒருவரிடம் திணிக்க முடியாது. திணிப்புக்கள் மூலம் மொழி வளரப்போவாதில்லை. மாறாக அது அழிவையே நாடிச்செல்லும்..

ஹாய், பாய் எண்டு சொல்லிறது கோமாளித்தனமாக உங்களுக்கு தெரிகின்றது என்றால் உங்களைத் தவிர இந்தப் பூவுலகத்தில் வேறு அறிவாளிகள் இருக்க முடியாது.

வாழ்த்துகள்!

என்ன முரளி உங்களை போல எல்லாரையும் நினைக்கிறியள் போலை

நாங்கள் அம்மா என்று எழுதுவதற்கு mk;kh

பாமுனி எழுத்து மூலம் எழுதுகிறறோம்.

யாழ்களம் நல்ல ஒரு செயற்பாட்டை ஆரம்பிப்பது பலருக்கு பிடிக்கவில்லை. மற்றவர்களைப்பற்றி கவலையில்லை. நாம் தனித்துவமாக இருக்க ஆசைப்படுவது தவறில்லை. மற்றவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அப்படி பல இணையங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க விழைவதில் தவறில்லை. ஆனால் அவர்களும் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்

உங்களை திருத்திக்கொண்டு மற்றவர்களை திருத்துவதே சிறந்தவழி ......

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் திருந்தாமல் மற்றவர்களை திருத்த நினைப்பது முட்டாள் தனம்.

Edited by வன்னியன்

முரளி நீங்கள் சொல்வது போல் ஆங்கில தமிழ் தட்டச்சு முறைக்கப்பால் பாமுனி, இன்னும் பல தமிழ் எழுதிகள் உள்ளன. அவற்றில் நீங்கள் சொல்வது போல் தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் தட்டச்சுவதன் மூலம் தமிழ் எழுத்துருவை பெற முடியாது. அவற்றைத்தான் பலரும் பயன் படுத்துகிறனர். உதாரணம் தமிழ்நெட் 99

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

Edited by KULAKADDAN

என்ன முரளி உங்களை போல எல்லாரையும் நினைக்கிறியள் போலை

நாங்கள் அம்மா என்று எழுதுவதற்கு mk;kh

பாமுனி எழுத்து மூலம் எழுதுகிறறோம்.

யாழ்களம் நல்ல ஒரு செயற்பாட்டை ஆரம்பிப்பது பலருக்கு பிடிக்கவில்லை. மற்றவர்களைப்பற்றி கவலையில்லை. நாம் தனித்துவமாக இருக்க ஆசைப்படுவது தவறில்லை. மற்றவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அப்படி பல இணையங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க விழைவதில் தவறில்லை. ஆனால் அவர்களும் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்

உங்களை திருத்திக்கொண்டு மற்றவர்களை திருத்துவதே சிறந்தவழி ......

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் திருந்தாமல் மற்றவர்களை திருத்த நினைப்பது முட்டாள் தனம்.

நல்ல ஒரு செயற்பாடு என்று நீங்கள் சொல்லுறீங்கள். இது நல்லதா அல்லது கெட்டதா என்று காலம்தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் தனித்துவமாக இருக்க ஆசைப்பட்டால் நீங்கள் தாராளமாக தூய செந்தமிழில் எழுதலாம். அதற்காக மற்றவர்களும் அப்படி எழுதவேண்டும் என்று கட்டுப்பாடு, அதிகாரம் போடுவன் மூலம் தமிழ் வளரும், மற்றும் நீங்கள் தனித்தன்மையுடன் இருக்க முடியும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

முரளி நீங்கள் சொல்வது போல் ஆங்கில தமிழ் தட்டச்சு முறைக்கப்பால் பாமுனி, இன்னும் பல தமிழ் எழுதிகள் உள்ளன. அவற்றில் நீங்கள் சொல்வது போல் தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் தட்டச்சுவதன் மூலம் தமிழ் எழுத்துருவை பெற முடியாது. அவற்றைத்தான் பலரும் பயன் படுத்துகிறனர். உதாரணம் தமிழ்நெட் 99

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

யாழில் எழுதும் எத்தனைபேர் ஆங்கிலம் மூலம் எழுதாது தமிழ் தட்டச்சு பலகையை மாத்திரம் பாவிச்சு எழுதுகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா குளக்காட்டான்?

தமிழை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ பல வழிகள் இருக்கின்றன. இப்படி அதிகாரம் போடுவதன் மூலமும் பூச்சாண்டி காட்டுவதன் மூலமும் தமிழை வளர்க்க முடியுமென்று நீங்கள் நினைத்தால் அப்படியே செய்து கொள்ளுங்கள்.

திரு முரளி அவர்களே நான் தமிழ் தட்டச்சு பலகையைதான் உபயோகிக்கிறேன்.

என் கருத்தை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்வில்லை என நம்புகின்றேன். களம் தங்களையும் திருத்திக்கொள்ள முயலவேண்டும். அவர்கள் யாழில் பல ஆங்கில சொற்களை பாவிக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் திருந்தமாட்டம் நீங்கள் திருந்துங்கள் என்று ஹிட்லர்தனமாக சொன்னால் அது அடக்குமுறை. இங்கு அதுதான் நடக்கின்றது. பல உறுப்பினர்கள் யாழில் கருத்துக்களை எழுதுவதில்லை. போயேவிட்டார்கள். பல உறுப்பினர்களை அதிகார துஸ்பிரயோகமூலம் மட்டுறுத்துனர்கள் பழிவாங்கியபோது மௌனமாக இருந்துவிட்டீர்கள். இனியும் அப்படியே இருக்க பழகிக்கொள்ளுங்கள் :):):D

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

காலக்கண்ணாடி செய்தால் தான் யாழின் மரியாதையே காப்பாற்றப்படும் எனக் கருதுகின்றபோது நிர்வாகம் இப்படி ஒரு செயலை எடுத்ததில் என்ன தவறு?

திரு முரளி அவர்களே நான் தமிழ் தட்டச்சு பலகையைதான் உபயோகிக்கிறேன்.

என் கருத்தை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்வில்லை என நம்புகின்றேன். களம் தங்களையும் திருத்திக்கொள்ள முயலவேண்டும். அவர்கள் யாழில் பல ஆங்கில சொற்களை பாவிக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் திருந்தமாட்டம் நீங்கள் திருந்துங்கள் என்று ஹிட்லர்தனமாக சொன்னால் அது அடக்குமுறை. இங்கு அதுதான் நடக்கின்றது. பல உறுப்பினர்கள் யாழில் கருத்துக்களை எழுதுவதில்லை. போயேவிட்டார்கள். பல உறுப்பினர்களை அதிகார துஸ்பிரயோகமூலம் மட்டுறுத்துனர்கள் பழிவாங்கியபோது மௌனமாக இருந்துவிட்டீர்கள். இனியும் அப்படியே இருக்க பழகிக்கொள்ளுங்கள் :wub::lol::lol:

:) அது :)நாலு வரி எழுதினாலும் நச்சென்று எழுதியிருக்கீங்க. :D:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.