Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தில் தற்போது உள்ள இழுபறிகள், கெடுபிடிகள், மனக்கசப்புக்கள் நீக்கப்படுவதற்கு நாங்கள் கூறுகின்ற ஆலோசனைகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெட்படவேண்டும் என்பதற்காகவே........... எழுதினால் வெட்டத்தான் செய்வார்கள்!

எனது கருத்து வெட்டபட கூடாது என்பதற்காக எழுதினால்....... எழுத்தில் கொஞ்சம் கவனமெடுக்க வேண்டும்!

இது எழுதுபவரின் பொறுப்பே தவிர வெட்டுபவரின் பொறுப்பல்ல. ஒரு நாளைக்கு 1000ம் கருத்து எழுதுகிறார்கள் இதில் சில தவறான கருத்துக்கள் வெட்டபடமால் இருப்பதை வைத்து நிர்வாகத்தை குறை கூறுவது நியாயமானதாக படவில்லை. பாரபட்சம் என்பது எவ்வாறு தோற்றுவிக்கபடும் என்பது விளங்கமுடியாமல் உள்ளது???? காரணம் (யாவருமே) 95வீதமானோர் முகம் தெரியாத மாற்று பெயர்களில் உள்வர்களே கருத்தை முன்வைக்கின்றார்கள் அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு பாரபட்சம் சாத்தியம்??? நான் இப்படித்தான் கருத்தை முன்வைப்பேன் என அடம்பிடித்தால் வெட்டத்தான் செய்வார்கள்.

ஒரு முக்கியமான விடயம் சக உறவுகள் கவனத்தில் கொள்ள வேண்டியது இங்கே பல நபர்கள் தேசவிரோத கும்பல்கள் நல்ல மனிதர்போல் வேடமிட்டு நச்சு கருத்துக்களை விதைப்பதை நீங்களே பார்த்தீருப்பீர்கள். அந்த விரோத குப்பைகளுக்கு உங்களுவாதம் பால் வார்ப்பது போன்றாகிவிடும் இதை கவனத்தில் கொள்க.

மற்றைபடி உங்கள் கருத்து அநியாயமன முறையில் வெட்டபட்தாக நீங்கள் நினைத்தால் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளலாம்தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெட்படவேண்டும் என்பதற்காகவே........... எழுதினால் வெட்டத்தான் செய்வார்கள்!

எனது கருத்து வெட்டபட கூடாது என்பதற்காக எழுதினால்....... எழுத்தில் கொஞ்சம் கவனமெடுக்க வேண்டும்!

இது எழுதுபவரின் பொறுப்பே தவிர வெட்டுபவரின் பொறுப்பல்ல. ஒரு நாளைக்கு 1000ம் கருத்து எழுதுகிறார்கள் இதில் சில தவறான கருத்துக்கள் வெட்டபடமால் இருப்பதை வைத்து நிர்வாகத்தை குறை கூறுவது நியாயமானதாக படவில்லை. பாரபட்சம் என்பது எவ்வாறு தோற்றுவிக்கபடும் என்பது விளங்கமுடியாமல் உள்ளது???? காரணம் (யாவருமே) 95வீதமானோர் முகம் தெரியாத மாற்று பெயர்களில் உள்வர்களே கருத்தை முன்வைக்கின்றார்கள் அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு பாரபட்சம் சாத்தியம்??? நான் இப்படித்தான் கருத்தை முன்வைப்பேன் என அடம்பிடித்தால் வெட்டத்தான் செய்வார்கள்.<<<<

மிகச்சரியாக சொன்னீர்கள். நிர்வாகம் ஒவ்வொருவரையும் ஒரு கொஞ்சக்காலம் அவதானிக்கும். அந்த அவதான காலத்துள் அதிகம் வீண் தர்க்கம், வேண்டாத வார்த்தைப் பிரயோகம், சச்சரவு,சண்டை என்று மாட்டுப்பட்டவர்களைத்தான் தொடர்ந்து கவனிப்பார்கள். அதனால் சிலருடையது அடிக்கடி வெட்டுப்படக் காரணமாகலாம்.

எனக்கும் அதே சந்தேகம் தான். பாரபட்சம் எப்படி வரும்? யாரும் யாரையும் அறிந்திலர். ஆக கருத்துத்தானே நமக்கான முகம்...

தமிழ்த் தங்கையும் மருதங்கேணியும் சரியாகச்சொல்லி உள்ளீர்கள்.

சிலருக்குக் கருத்தாடல் என்றால் கூட்டமாகச் சேர்ந்து எதிர்க் கருத்து வைப்பவரைக் தனிப்படத் தாக்குவதே தெரிந்த ஒன்றாக இருக்கிறது.வைக்கப்படும் கருத்துக்கு எதிர்க்கருத்து என்றில்லாமால் கருத்தை வைப்பவர் மீதான் தாக்குதலகாத் தான் கருதுக்களை வைக்கத் தெரியும்.இவர் கன்னடன்,இவர் ஆளமான சிந்தனை அற்றவர், இவருக்கு ஒன்றும் தெரியாது இவர் இப்படி இவர் அப்படி என இது விரியும்.இவ்வாறு கருதாடலுடன் சம்பந்தம் அற்று இடையில் வந்து கருத்தாளர் பற்றி எழுதும் போதே பல கருதுக்கள் வெட்டப்படுவதைக் காணலாம்.இவ்வாறு கருத்தியல் வன் முறை செய்பவர்கள் தம்மை மாற்றாதாவரை இவர்களே தொடர்ந்தும் எச்சரிக்கைகளுக்கு ஆளாகின்றனர்.இது அவர்களுக்குப் பாரபட்சமானதாகத் தெரிகின்றது.தம்மில் இருக்கும் குறைபாடு இவர்களுக்குத் தெரிவதில்லை.

இங்கே எனது கருதுக்களும் வெட்டப்படுள்ளன.அவை வெட்டப்படும் என்று தெரிந்தே நான் சிலவற்றை எழுதுவதுண்டு.ஏனெனில் ஒருவர் என்னைத் தனிப்படத் தாக்குவதாகத் தெரிந்தால் அவரை நான் அவர் உணரும் வண்ணம் அவர் எழுதியதைத் திருப்பி அவருக்கே எழுதி உள்ளேன்.இதன் மூலம் அவ்வாறு எழுதுபவர்கள் திருந்தி நடப்பார்கள் என்பதற்காக.மற்றவரைத் தாக்கும் போது அந்தச் சொல்லாடலின் வலி தெரியாது,ஆனால் அது தமக்கே திருப்பி விடப் போடும் மட்டுமே அதன் தாக்கம் சிலருக்குத் தெரிகிறது.அவர் அவர்களே திருந்தி தமது கருதுக்களைச் செழிமையாகப் பண்பாக யோசித்து வைப்பார்கள் என்றால் அவர்கள் கருத்துக்கள் வெட்டப்படாது.அனேகமாக எனது அவதானிப்பில் இவ்வாறு வெட்டப்படுபவர்கள் தாம் எழுதும் கருதுக்களையோ மற்றவர்கள் எழுதும் கருதுக்களையோ ஆர அமர வாசித்து அவற்றை உள்வாங்கிப் பதில் எழுதுவதில்லை.அந்த நொடியில் என்ன தொன்றுகிறதோ அப்படியே எழுதி விடுவார்கள்.இதனாலையே சில நேரங்களில் இவர்களின் கருதுக்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் குழம்பிய நிலைலும் மற்றவர்களைப் புண் படுத்தும் வண்ணம் இருப்பதையும் அவதானிக்கலாம்.இல்லை நாங்கள் எம்மை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்றால் வெட்டு வாங்கத் தான் வேண்டும்.இதற்கு நிர்வாகத்தைக் குறை கூறிப் பிரியோசனம் இல்லை. :o

நாரதரின் கருத்து நூறு வீதம் உண்மை.

களத்தில் சரியான கருத்துக்கள் கூட தவறான முறையில் வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

உதாரணமாய் தேச விரோத சக்திகளை அவர்கள் தவறுகளை பட்டியலிட்டால் அது நிண்டு கொண்டே போகும். ஆனால் மாறாக எடுத்த எடுப்பிலேயே அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை மீதே தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் அண்மையில் கொல்லப்பட்ட மகேஸ்வரி வேலாயுதம் குறித்த விமர்சனங்களில் அவரது துரோகங்கள் தேச விரோத செயல்கள் எதுவுமே எழுதப்பட்டிருக்கவில்லை. மாறாக தனிப்பட்ட தாக்குதல்களே இருந்தன. ஆனால் இதே மகேஸ்வரி தொடர்பாக தினக்குரல் அற்புதன் ஆதாரங்களோடு அவரது உண்மை முகத்தைத் தோலுரித்திருந்தார்.

அதுபோலவே முன்பு இங்கே சிலர் தேசியத்திற்கெதிரான கருத்துக்களை முன்வைக்கின்ற போது உடனடியாக இன்னும் சிலர் பதில்கருத்தை எழுதுவார்கள். ஆனால் அந்தக் கருத்தில் அவர்களுக்குப் பதிலிருக்காது. ஆனால் கருத்தை எழுதியவரின் தாய் தந்தை யார் என்ற ஆராய்ச்சி தானிருக்கும்.

இதனை வெளியே இருந்து பார்க்கும் (ஈழப்போராட்டத்தைப் பற்றி அறிந்திராத வேற்று நாட்டு) உறவுகளிடத்தில்; அவர்கள் நாகரீகமாகக் கருத்தெழுத இவர்கள் அநாகரீகமாக எழுதுகிறார்களே இவர்கள் பக்கம் தான் தவறு உள்ளதோ என்ற எண்ணம் ஏற்படலாம்.

கள உறவுகள் விடயத்திலும் இப்படித்தான். ஒரு கருத்தை எழுதினால் கருத்திற்குப் பதிலாய் அவரது தனிப்படட விடயங்கள் அலசப்படும். நானும் அநுபவப்பட்டிருக்கிறேன்.

கோயில்களில் தமிழில் மந்திரம் சொன்னால் என்ன என்று கேட்டதற்கு நீர் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவது எனக்குத் தெரியும். கோயிலுக்குப் போனமா ஓசிச் சாப்பாட்டைச் சாப்பிட்டமா என்று இல்லாமல் ஏனிந்த ஆராய்ச்சி என்பதான பதில் எழுதப்பட்டிருந்தது.

இதுவும் கள உறவுகளிடையே கசப்புகளும் மோதல்களும் ஏற்படுவதற்கு ஒரு காரணம்.

எனது கருத்து என்னவென்றால்....

இங்கு கருத்து சொல்பவர்களில் பலர் Internet-ஐ மிகவும் சீரியசா (தமிழ் எப்படி சொல்ற? தீவிரமாக என்றா? :) ) எடுக்கிறார்கள்... இதை தவிர்த்தாலே மனம் கலங்காமல் இருக்கலாம்... இது வேறும் Internet கருத்தாடல் தானே. :)

அதுதவிர.... தங்கள் கருத்துகளில் அவர்களிற்கு நம்பிக்கை இருந்தால் கருத்தில் உண்மை இருக்கு என்று நினைத்தால் ஏன் அவர்கள் ஓடி ஒதுங்க வேண்டும்? எத்தனை முறை வெட்டினானும் திரும்ப திரும்ப எழுதுவதில் தப்பு ஏதும் இல்லையே...

சில விஷயங்களை எளிதினில் பெறமுடியாது.... அதற்காக போராட வேண்டும் இல்லையா??? :D

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு வழி சொல்லுறன் கோவிக்காதையுங்கோ ஒரு வழி வந்தமா எழுதினமா போனோமா என்று இருக்க வேண்டும் இல்லாதுவிட்டால் தனிமடல் மூலம் உங்களது திள்ளு முள்ளுகளை வைத்து கொள்ளுங்கோ அல்லது வரவேண்டாம் யாழிற்கு

நன்றி

வணக்கம் :):)

நான் ஒரு வழி சொல்லுறன் கோவிக்காதையுங்கோ ஒரு வழி வந்தமா எழுதினமா போனோமா என்று இருக்க வேண்டும் இல்லாதுவிட்டால் தனிமடல் மூலம் உங்களது திள்ளு முள்ளுகளை வைத்து கொள்ளுங்கோ அல்லது வரவேண்டாம் யாழிற்கு

நன்றி

வணக்கம் :):)

:D:D ஐயோ எங்களாலை யாழுக்கு வராமல் இருக்கவே முடியாதுங்கோ. இன்ரநெட் புரவுசிங் கிளிக் செய்தாலே யாழுக்கு போகணும் னு தோணுதே. எப்படி கட்டுபப்டுத்துவது என நினைச்சால் உடனே மோகன் அண்ணாக்கு தனிமடல் அனுப்பினால் அவர் தடை பண்ணி வைப்பார் :D:lol::o

நான் ஒரு வழி சொல்லுறன் கோவிக்காதையுங்கோ ஒரு வழி வந்தமா எழுதினமா போனோமா என்று இருக்க வேண்டும் இல்லாதுவிட்டால் தனிமடல் மூலம் உங்களது திள்ளு முள்ளுகளை வைத்து கொள்ளுங்கோ அல்லது வரவேண்டாம் யாழிற்கு

நன்றி

வணக்கம் :D:D

புத்ஸ்..வாங்க/வராதிங்க எல்லாம் சொல்லாதிங்க ...நான் பட்ட அனுபவம் பார்த்திங்க தானே ;) கிகிகிகி

நான் ஒரு வழி சொல்லுறன் கோவிக்காதையுங்கோ ஒரு வழி வந்தமா எழுதினமா போனோமா என்று இருக்க வேண்டும் இல்லாதுவிட்டால் தனிமடல் மூலம் உங்களது திள்ளு முள்ளுகளை வைத்து கொள்ளுங்கோ அல்லது வரவேண்டாம் யாழிற்கு

நன்றி

வணக்கம்

மாமோய் எப்படி உங்களா இப்படி எல்லாம் முடியுது..(என்னால முடியல்ல :lol: )...சா..சா நான் கோவிக்கவில்லை பாருங்கோ கோவித்து தான் என்னத்தை காண போறோம் என்டு தான் :D ..நேக்கு என்னவோ உங்க வழி பிடிகல பாருங்கோ ஆனா ஒன்னு செய்யலாம்... :D

"வாங்கோ மட்டுஸ் கூட பழகி பார்போம்

பிடித்திருந்தா எழுதுவோம் இல்லாட்டி

அத வேற சொல்லனுமா" :D

இத பற்றி என்ன நினைக்கிறியள் மாமா...(சொல்லவே இல்ல பாருங்கோ)...அட உங்களுக்கு மட்டுமா நன்றி,வணக்கம் சொல்ல தெரியும் இப்ப நான் சொல்லுறன்.. :D

மீண்டு மற்றுமொரு இனிய சண்டையில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெற்று செல்லும் நான் என்றும் தோழமையுடன் ஜம்மு பேபி :D ...(இது எப்படி இருக்கு)..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில இழுபறி வேணும் ஆனா வாழ்க்கையே இழுபறி ஆகிட கூடாது" :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு வழி சொல்லுறன் கோவிக்காதையுங்கோ ஒரு வழி வந்தமா எழுதினமா போனோமா என்று இருக்க வேண்டும் இல்லாதுவிட்டால் தனிமடல் மூலம் உங்களது திள்ளு முள்ளுகளை வைத்து கொள்ளுங்கோ அல்லது வரவேண்டாம் யாழிற்கு

நன்றி

வணக்கம் :D:D

உண்மைதான் புத்தனே, நீங்கள் சொல்லும் ஆலோசனையைப் பின்பற்றினால் பிரச்சனையே இல்லை, அத்தோடு நாரதர் சொல்லும் கருத்தும் தான் 'கோவம் வந்த உடனேயே அதை வெளிக்காட்டும் விதமாக பதிலை எழுதிவிடாமல் எழுதி விட்டு ஒரு தடவை வாசிச்ச்சுப் பாருங்கோ, உங்களுக்கே தெரியும் கோவத்தின் காரணமாக அதில் எத்தனையோ எழுத்துப்பிழைகள் விட்டிருப்பீங்கள் வேண்டாத வார்த்தைகள் பயன்படுத்தி இருப்பீங்கள்.அதைத் திருத்திற வாற கோவத்துக்கு அப்படியே அதை அழித்துவிடுங்கள் :D ஒரு இரண்டு நாள் கழிச்சு உங்களுக்கு கோவம் தந்த அந்த கருத்தாடலை வாசிச்சுப் பாருங்கோ..உங்களுக்குச் சிரிப்புத்தான் வரும், எப்படியும் கோவம் குறைஞ்சிருக்கும். இதுகளுக்கு பதில் எழுதி...என்னத்தை எண்டு....விட்டுடுங்கோ.

நாம் எல்லோரும் ஒரே வேரில் இருந்து வந்தவர்கள். சொந்தங்களை நண்பர்களை இழந்து அகதி என்ற பெயரில் தான் வெளிநாடு வந்தோம். இங்கும் வந்து நமக்கு பிரிவினைகளும் வேண்டாத கோபதாபங்களும் ஏன்?!!!

அப்படியும் உங்களுக்கு கோவத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தலைவரின் சிந்தனையில் உதித்தவை படிச்சுப்பாருங்கோ எமக்காக எம் தாய் நாட்டின் விடுதலைக்காக தம் உன்னத உயிரை அர்ப்பணித்த எங்களின் சோதரர்களை நினைச்சுப் பாருங்கோ.

கோவம் பறந்திடும்.

:D

நல்லதோ,கெட்டதோ சகல பிரச்சனைகளுக்கும் மோகன் வந்து பதிலளித்தால் நன்றாக இருக்கும்.(அமைதியாவார்கள்)

இனி அவர் வருவாரோ தெரியாது

சொந்தச்சுமையை தூக்கித்தூக்கிசோர்ந்து போனேன் எண்டு சொல்லிக்கொண்டு

இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி யாழ் மோகன் இங்காவது ஆறுதல் கிடைக்குமென வற்துள்ளேன் என்று அவுட் லுக்குக்குள் உறுப்பினராகிற்றார்

  • கருத்துக்கள உறவுகள்

உதில ஆலோசனை சொல்லுறவை.. தாங்கள் தாங்கள் அதைக் கடைப்பிடிச்சாலே பாதிப்பிரச்சனை தீர்ந்து களம் அமைதியாகிடும். கலகம் செய்து நன்மை பிறக்கும் என்ற மூடநம்பிக்கை எல்லாம் இங்க வளர்ந்திருந்த.. சா வளர்க்கப்பட்ட காலமும் இருந்ததை வசதியா மறந்திட்டமெல்லோ. இப்ப...???! :D

வெட்படவேண்டும் என்பதற்காகவே........... எழுதினால் வெட்டத்தான் செய்வார்கள்!

எனது கருத்து வெட்டபட கூடாது என்பதற்காக எழுதினால்....... எழுத்தில் கொஞ்சம் கவனமெடுக்க வேண்டும்!

இது எழுதுபவரின் பொறுப்பே தவிர வெட்டுபவரின் பொறுப்பல்ல. ஒரு நாளைக்கு 1000ம் கருத்து எழுதுகிறார்கள் இதில் சில தவறான கருத்துக்கள் வெட்டபடமால் இருப்பதை வைத்து நிர்வாகத்தை குறை கூறுவது நியாயமானதாக படவில்லை. பாரபட்சம் என்பது எவ்வாறு தோற்றுவிக்கபடும் என்பது விளங்கமுடியாமல் உள்ளது???? காரணம் (யாவருமே) 95வீதமானோர் முகம் தெரியாத மாற்று பெயர்களில் உள்வர்களே கருத்தை முன்வைக்கின்றார்கள் அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு பாரபட்சம் சாத்தியம்??? நான் இப்படித்தான் கருத்தை முன்வைப்பேன் என அடம்பிடித்தால் வெட்டத்தான் செய்வார்கள்.

வெட்டப்பட வேணும் எண்று எழுதுவதுக்கு இங்கை யாரும் வேலை மினக்கெட்டவை கிடையாது....

எனது கருத்தை நான் சுத்ந்திரமாக சொல்கிரேன். அதுக்கு ஒருவர் என்னை பன்னாடை எண்று திட்டுவார் ( திட்டினார்) அதுக்கு நான் அதே பாணியில் கருத்து எழுதினால் எனது கருத்து தூக்கப்பட்டு அவர் என்னை பன்னாடை எண்று திட்டியது அப்படியே இருக்கும்... ( அதை சுட்டிக்காட்டி இதே பகுதியில் தலைப்பை கூட திறந்து இருக்கிறேன்) இதைதான் நடு நிலை என்பீர்களோ...??

மட்டுறுத்துனர்களுக்கோ, இல்லை அவர்களுடன் MSN னில் நட்பை ப்பேணுபவர்களுக்கோ நான் எதிரி கிடையாது. ஆனால் அவர்களின் கருத்துக்களில் இருந்து நான் வேறு பட்டு இருக்கும் போது எனது கருத்துக்கள் தூக்கப்பட்டு இருக்கிறது...! அதாவது நண்பர்களுக்கு ஆதரவாக... அதுக்கான ஆதாரங்கள் பலருக்கு நிகள்ந்தவை களம்பூராவும் பரவிக்கிடக்கிறது....!!

வலைஞன் என்பவர் அதுக்கும் எல்லாம் ஒருபடி மேலே போய் நான் எழுதிய கருத்தை தூக்கி விட்டு காரணம் சொல்கிறார்.. "வலிந்த கருத்து திணிப்பு என்பதால் தூக்கப்பட்டது எண்று"..

அப்படி ஒரு களவிதி யாழில் கிடையாது... கருத்து களம் என்பதே கருத்தை எழுதுவதுக்குதான்... அதிலை என்ன வலிந்த கருத்து திணிப்பு...?? இங்கை தாங்களாக தலைப்புக்களை ஆரம்பீப்பவர்கள் எல்லாம் வலிந்துதான் கருத்தை வைக்கிறார்கள்... அதை எல்லாம் திணிப்பு என்பீர்களா...??

உண்மை என்ன எண்றால் அந்த கருத்து வலைஞனுக்கு பிடிக்கவில்லை.. ஆகவே அதை தூக்கிவிடுகிறார்... கருத்தை பதில் கருத்து சொல்வதின் மூலம் எதிர்க்க முடியாமல் கோழைத்தனமாக தூக்குவது எண்று அதை நான் எடுத்து கொண்டேன்.....!

ஒரு முக்கியமான விடயம் சக உறவுகள் கவனத்தில் கொள்ள வேண்டியது இங்கே பல நபர்கள் தேசவிரோத கும்பல்கள் நல்ல மனிதர்போல் வேடமிட்டு நச்சு கருத்துக்களை விதைப்பதை நீங்களே பார்த்தீருப்பீர்கள். அந்த விரோத குப்பைகளுக்கு உங்களுவாதம் பால் வார்ப்பது போன்றாகிவிடும் இதை கவனத்தில் கொள்க.

மற்றைபடி உங்கள் கருத்து அநியாயமன முறையில் வெட்டபட்தாக நீங்கள் நினைத்தால் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளலாம்தானே?

ஏன் நீங்கள் விரும்பும் கருத்தை எழுதாதவன் எல்லாம் தேச விரோதி எண்று நேரிடையாகவே கள விதியை அமைத்து விடலாமே....!

எங்களின் கருத்துக்கள் தூக்கப்பட்டதுக்கு காரணம் கேட்டல்தான் யாழ் உறவோசை பகுதி எங்கும் விரவி கிடக்கிறதே....?? அதுக்கான எதிர்வினைகள் எப்படி இருக்கிறது என்பதை ஒருக்கா விளக்க முடியுமா....??

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழில் உள்ளவர்கள் தங்கள் மனக்குறைகளை முன்னைய காலங்களைப் போல வெளிப்படையாக உறவோசையில் தெரிவிப்பதில்லை?

எல்லோரும் அயர்ச்சியடைந்து விட்டார்கள் போலிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கிருபன்,

யாழ்களத்தில் இப்போ கெடுபிடி, மனக்கசப்பு அப்படி எதுவுமில்லை. அதுதான் காரணம் ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.