Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனை நீக்கப்பட்டு விட்டதா?

Featured Replies

யாராவது இதுவரை யாழ்களத்தை தொடர்ந்து நடத்த காசு கொடுத்தார்களா?

கருத்துக்கள உறவுகள் இல்லாத நிலையில் நிருவாகம் மட்டும் தனியே நின்று கருத்துக்களத்தை நடாத்தமுடியுமா? :rolleyes:

யாழில் நிருவாகத்தினால் சுய ஆக்கங்கள் படைக்கமுடியுமா? :rolleyes:

யாழ் இணையம் நடாத்தப்படுவதற்கு காசு ஒன்று மட்டும் போதுமா? :rolleyes:

  • Replies 50
  • Views 7.6k
  • Created
  • Last Reply

அந்தச் செய்தி தற்போது அகற்றப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அது குறித்த அறிவிப்பு எதனையும் காணவில்லை.

நிர்வாகத்தினரால் ஒவ்வொரு செய்தியாகப் பார்த்து அகற்றுவது சிரமமானதே. ஆனால் இப்படியான இணைப்புகளைச் சேர்ப்பவர்கள் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமல்லவா?

அல்லது உங்கள் நிபந்தனைகளை நீக்கி விடுங்கள்.

நீங்கள் பிழையாக ஏதும் இருக்கின்றது என அறிந்தால் முறைப்பாட்டு பொத்தானை அழுத்தி நிருவாகத்திற்கு அதை தெரியப்படுத்தலாமே? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மாதம் 1000- 3000 பிரித்தானிய பவுன்ஸ் எண்டால் வருசம் 12000 தொடக்கம் 36000 பவுண்ஸா ?

உந்தக் காசுக்கு நான் வைத்திய கலாநிதிக்கு படிச்சு முடிச்சிடுவன்..! :rolleyes::rolleyes:

நன்றி நுனாவிலான்.

இதில் நெடுக்காலபோவான் ஆங்கிலச் செய்தியின் சுருக்கத்தை (உள்ளடக்கத்தை) தமிழில் எழுதி மூலச் செய்திக்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறார். இதில் தவறு காணவில்லை நாம். மற்றும் முழுச் செய்தியையும் கருத்துக்களத்தில் இணைத்துவிட்டு தமது தளத்தின் முகவரியை மூலமாகக் குறிப்பிடுவதையும் நாம் தடுக்கவில்லை. மூலம் குறிப்பிடப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் அது அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் ஒருவர் தனது இணையத்தளத்துக்கு அறிமுகம் கொடுப்பதையும் நாம் தடுக்கவில்லை. அதற்கு யாழ் வழிகாட்டி என்கிற பகுதி உள்ளது. மற்றும்படி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் - செய்தியை அரைகுறையாக இணைத்து அல்லது பரபரப்பான தலைப்புகளையிட்டு மிகுதியை அங்கு சென்று படியுங்கள் என்று இணைப்புக் கொடுப்பதையே கருத்துக்கள விதிமுறையின் மூலம் தடுக்க நினைக்கிறோம்.

உந்தக் காசுக்கு நான் வைத்திய கலாநிதிக்கு படிச்சு முடிச்சிடுவன்..! :rolleyes::rolleyes:

அங்க உந்தக்காசுக்கு ஒரு கலாநிதி பட்டம்தான் எடுக்க ஏலும். இஞ்ச நாங்கள் நோபல் பரிசே தருவமே! :rolleyes:

மேலும்,

இஞ்சயே ஆக்களுக்கு படிப்பிச்சு வைத்திய கலாநிதி பட்டம் கொடுக்கிறதுக்கும் ஒழுங்கு செய்யலாம். இதுபற்றி என்ன நினைக்கிறீங்கள்? :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுனாவிலான்.

இதில் நெடுக்காலபோவான் ஆங்கிலச் செய்தியின் சுருக்கத்தை (உள்ளடக்கத்தை) தமிழில் எழுதி மூலச் செய்திக்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறார். இதில் தவறு காணவில்லை நாம். மற்றும் முழுச் செய்தியையும் கருத்துக்களத்தில் இணைத்துவிட்டு தமது தளத்தின் முகவரியை மூலமாகக் குறிப்பிடுவதையும் நாம் தடுக்கவில்லை. மூலம் குறிப்பிடப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் அது அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் ஒருவர் தனது இணையத்தளத்துக்கு அறிமுகம் கொடுப்பதையும் நாம் தடுக்கவில்லை. அதற்கு யாழ் வழிகாட்டி என்கிற பகுதி உள்ளது. மற்றும்படி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் - செய்தியை அரைகுறையாக இணைத்து அல்லது பரபரப்பான தலைப்புகளையிட்டு மிகுதியை அங்கு சென்று படியுங்கள் என்று இணைப்புக் கொடுப்பதையே கருத்துக்கள விதிமுறையின் மூலம் தடுக்க நினைக்கிறோம்.

http://www.orunews.com/?p=1111

வலைஞன்,முரளி, நான் குறிப்பிட்டது போண்ட்007 ஆல் இணைக்கப்பட்ட செய்திக்கு இணைப்பு மட்டும் கொடுத்துள்ளார் என்பதை தான் சுட்டி காட்டினேன்.

- இவையும் இன்னும் நீக்கப்படவில்லை வெண்ணிலா. இன்று நீக்கப்பட்ட கருத்தில் இருந்த சொல் "சூப்பர்ப்". இதனை நீங்கள் பல இடங்களில் தொடர்ந்தும் பயன்படுத்துகிறீர்கள். அதேபோல் "அங்கிள்" என்ற சொல். சில இடங்களில் "மாமா" என்று பயன்படுத்துகிற நீங்கள், சில இடங்களில் "அங்கிள்" என்று பயன்படுத்துவது அவசியமில்லாததே. ஒரு கருத்தில் "தரவிறக்க" என்ற தமிழ்ச் சொல்லை பயன்படுத்தியிருக்கிறீர்கள் - அதே கருத்தில் முதல் வசனத்தில் "டவுண்லோட்" என்று பயன்படுத்தியிருக்கிறீர்கள். இவையெல்லாம் தவிர்த்துக் கொள்ளக்கூடியதே. சில சொற்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்றன. சில இடங்களில் இன்னும் நெகிழ்வுப் போக்கை கருத்துக்கள நிர்வாகம் கடைப்பிடிக்கிறது. ஆனால் இந்த நெகிழ்வுப்போக்கு எல்லா நேரத்திலும் இருக்கும் என்றில்லை. எனவே, நீங்கள் உங்கள் கருத்துக்களில் தெரிந்த தமிழ்ச் சொற்களை புறக்கணிக்காமல் பயன்படுத்தினால் - அவர் எழுதுகிறார் இவர் எழுதுகிறார் - என்னுடையது மட்டும் நீக்கப்படுகிறது என்று குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லையல்லவா.

நான் தப்பு பண்ணவில்லை என சொல்லவில்லை. ஆனால் நீங்கள் தப்பு என கண்ணில் பட்டதை அப்போதே நீக்கி இருக்கலாமே. ஏன் நீக்கவில்லை? இப்ப மட்டும் என்னவாம்?

சூப்பர்ப் என்று எழுதியதை அதற்குள்ளேயே அச்சொல்லை நீக்கிட்டு ஆங்கிலப்பதம் நீக்கப்பட்டுள்ளது ன எழுதி இருக்கலாமே. உங்கள் ஏகமனதற்ற கண்காணிப்பு பற்றி எழுத நினைத்தால் நிறைய எழுதிட்டே போகலாம். ஆனால் அது தேவையற்ற வேலை எனக்கு :rolleyes:

என்ன நடக்குது உங்க விளங்கவில்லை எனக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது உங்க விளங்கவில்லை எனக்கு

நல்லவடிவாய் ஒருக்கால் நித்திரை கொண்டுட்டு வந்து பாருங்கோ அப்ப தெரியும் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தப்பு பண்ணவில்லை என சொல்லவில்லை. ஆனால் நீங்கள் தப்பு என கண்ணில் பட்டதை அப்போதே நீக்கி இருக்கலாமே. ஏன் நீக்கவில்லை? இப்ப மட்டும் என்னவாம்?

சூப்பர்ப் என்று எழுதியதை அதற்குள்ளேயே அச்சொல்லை நீக்கிட்டு ஆங்கிலப்பதம் நீக்கப்பட்டுள்ளது ன எழுதி இருக்கலாமே. உங்கள் ஏகமனதற்ற கண்காணிப்பு பற்றி எழுத நினைத்தால் நிறைய எழுதிட்டே போகலாம். ஆனால் அது தேவையற்ற வேலை எனக்கு :lol:

செய்கின்றது தப்பு என்று தெரிந்து கொண்டு செய்தபடி, இப்படிக் கேட்க வெட்கமாக இல்லையா? நீங்கள் என்ன குழந்தையா? எல்லாத்துக்கும் பாடம் எடுப்பதற்கு?? பார்க்கின்றதற்குப் பொறுப்புள்ளவராக நடந்து கொள்ள வேண்டாமா?

இங்கு பல தடவை கள நிர்வாகம் பற்றி விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது இப்போது மட்டுமல்ல, நான் களத்தில் இணைந்த காலத்திலிருந்தே நடந்துவருவதாக இருந்தாலும் இப்போது அடிக்கடி கள உறவுகள் பலரும் நிர்வாகத்தை அடிக்கடி குறைப்பட்டு கொள்கிறனர். அதற்கான பல காரணங்களை கள உறவுகள் சொன்னாலும் முக்கியமாக சொல்லப்படுவது கருத்துக்கள் தணிக்கை/ நீக்கம், அண்மையில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஆங்கில வார்த்தைகளை தமிங்கிலத்தில் கலந்து எழுதுவது.

கருத்து தணிக்கை என்பது பல சந்தர்பங்களில் வேவ்வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக எடுக்கப்பட்டுவந்துளதுடன், புதிதாக விதிகளும் சேர்க்கப்பட்டு வந்துள்ளன.

1.

எனக்கு தெரிந்து, முகக்குறிகளுடன் மட்டும் பதில் அனுப்புவது, ஒரு சொல்லில் மட்டும் பதில் அனுப்புவது போன்றவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஆரம்ப காலத்தில். அது இப்போதும் தொடர்கிறது என நினைக்கிறேன்??? முன்னர் 3 சொற்களுக்கு குறைவாக பதில் இருந்தால் பதில் அனுப்ப முடியாத படி கூட இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு இந்த விதியுடன் உடன்பட முடியாது இருந்ததுடன் மனதுக்கு கஸ்டமாக கூட இருந்தது. ஆனால் ஆறுதலாக சிந்தித்து பார்த்த போது இங்கு நாம் பல்வேறு பட்ட சிந்தனைகளை, செய்திகளை, ஆக்கங்களை பற்றி வாசிப்பதற்கும் கருத்துக்களை பகிர்வதற்கும் இருக்கும் சந்தர்ப்பங்களையும், ஒரு படைப்பளி எதிர்பார்க்க கூடிய தனது ஆக்கம் பற்றிய நிறைகளையும், அந்த ஆக்கத்தை இன்னும் எப்படி மேம்படுத்தலாம், இன்னும் சிறப்பாக செய்யலாம் என்று சொல்வதை சொல்வதை விட்டு விட்டு முக குறி மூலமும், ஒரு சொல்லில் பதிலிடுவதன் மூலமும் எமது கருத்து எண்ணிக்கையை மட்டும் கூட்டும் முயற்சியில் இருப்பது போல உணர்ந்தேன். அப்போது கூட முதலில் சில முறை நிர்வாகம் நட்பான முறையில் களத்தில் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் யாரும் அதை சரியாக கடைப்பிடிக்காது அசாட்டை செய்த போது முகக்குறியுடன் மட்டும் இருந்த கருத்துக்கள், ஒரு சொல்லில் பதில் எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் 3 சொற்களுக்கு குறைவாக பதில் எழுதினால் பதில் அனுப்ப முடியாதவாறும் செய்யப்பட்டது. கள உறவுகள் அனை வரும்முதலில் சொல்லிய அறிவுறுத்தல்களை மதித்திருந்தால். இப்படியான ஒரு நிலை நிச்சயம் ஏற்பட்டிருக்காது

உதாரணத்துக்கு ஒரு சில திரைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் கருத்துகளங்களில் திரைப்படத்தின் இணைப்பு வெளித்தெரிய வேண்டும் என்ரால் நாம் பதிலிட வேண்டும் என்று நிபந்தனை போட்டிருப்பார்கள். அந்த தலைப்பு சில நேரம் 50 பக்கங்களை கடந்திருக்கும். ஆனால் 50 பக்கங்களையும் ஒவ்வொன்றாக பார்த்தால் முகக்குறியும், நன்றி, நல்ல பணி என்பவை மட்டும் தான் இருக்கும். நான் கூட அதை தான் அங்கு சில நேரம் செய்திருக்கிறேன். அதுவா யாழ் களத்துக்கும் வேணும் என யோசித்துபார்த்தேன். இல்லை என்று தான் எனக்கு பட்டது.

2. கள உறவுகள் உள் நுளைந்தவுடன் எல்லா பகுதிகளிலும் பதிலிட முடியாத நிலை.

ஆரம்பத்தில் அப்படி இருக்கவில்லை. புதிதாக இணையும் ஒரு சிலருக்கு தமிழில் எழுத தெரியாமல் ஆங்கில எழுத்துக்களிலேயே தமிழ் உச்சரிப்புக்களை களத்தின் அறிமுக பகுதிகளிலும், ஏனைய பகுதிகளிலும் எழுதியவர்கள் பலரை அவதானித்து இருக்கிறேன். அவர்களின் தமிழ் எழுதும் முறையில் அறிமுகமற்ற நிலையை புரிந்து கொண்டு மட்டுறுத்துனர்கள் உறவுகள் ஆங்கிலத்தில் எழுதியவற்றை தமிழ் படுத்தியும், தமிழ் எழுதுவது சம்பந்தமான விளக்கங்களையும் பகிர்ந்து கொண்டும் வந்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் தமிழ் எழுத தெரிந்தவர்கள் எமது போராட்டத்தை கொச்சை படுத்தும் நோக்கிலும், களத்தின் மதிப்புக்கு பங்கம் வர கூடிய தகாத இணைய தளங்களுக்கு இணைப்புக்களை கொடுக்கவும், அதை நோக்கமாக கொண்டே களத்துக்கு புதிய பெயர்களில் பதிய தொடங்கவும், அப்படியானவர்கள் எப்ப வருவார்கள், எங்கெல்லாம் பதிலளித்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று தேடி கண்டு பிடித்து கருத்துகளை நீக்கவே நிறைய நேரம் செலவிட வேண்டிய சூழலும், மட்டுறுத்துனர்கள் யாரும் களத்தில் இல்லாத போது அந்த கருத்துக்கள் பல மணி நேரம் நீடித்து இருந்ததையும் அதை பற்றி கள உறவுகள் நிர்வாகத்துக்கு அறிவிக்க வேண்டியும் வந்தது. இதன் பின்னரே இந்த விதி அறிமுகத்துக்கு வந்தது.

3. தற்போது ஆங்கில கலப்புடன் எழுதுவது சம்பந்தமாக அதிகம் பிரச்சனைக்குள்ளன விடயம்.

எம்மில் பலருக்கு பொது பயன் பாட்டுக்கு உரிய அனைத்து தமிழ் சொற்களும் தெரிந்தே இருக்கிறது. அப்படி தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். சில சொற்களுக்கு தமிழ் தெரியாத போது அந்த சொல்லு வர வேண்டிய இடத்தில் குறிப்பிட்ட ஆங்கில சொல்லை ஆங்கிலத்தில் (விரும்பினால் தமிங்கில உச்சரிப்பிலும் எழுத முடியும்) அப்படி தான் கள விதிகள் சொல்கிறது.

உதாரணத்துக்கு உயிரியலில் ஒரு சொல்லை பார்ப்போம். டி ஒக்சி ரைபொ நியுக்கிளிக் அமிலம் Deoxyribonucleic acid), றைபோ நியுக்கிளிக் அமிலம் (Ribo nucleic acid) - இவை இரண்டுக்கும் சரியான தமிழ்ச்சொல் இல்லை. கரு அமிலம் என்று பொதுவாக சொல்ல முடியும் என்றாலும் கரு அமிலம் என்பது இரண்டு அமிலங்களையும் குறிக்கும். அவற்றை தனித்தனியாக பாவிக்கும் போது தமிங்கிலத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ தான் எழுத வேண்டும். இப்படியான சந்தர்பங்களில் உங்களுக்கு சரியான மொழி பெயர்ப்பு தெரியாத போது ஆங்கில சொல்லை நேரடியாக அல்லது தமிங்கிலத்தில் எழுத முடியும் என்று தான் கள நிர்வாகம் அறிவுறுத்தி வந்தாது. இப்போதும் அதை தான் சொல்கிறது. இதற்கு ஏன் இந்தளவு வாத பிரதிவாதம்?? உண்மையில் புரியவில்லை.

இப்போது சாதாரண பொது வளக்கு சொற்களுக்கு ஆங்கிலம் கலந்து எழுதினால் கருத்துக்கள் நீக்கப்படும் என்ற அறிவிப்பு கூட பல முறை இப்படி செய்யாதீர்கள் என்று நட்பான முறையில் சொல்லிய பிற்பாடும் யாரும் அதை சரியாக கடைப்பிடிக்காத ஒரு நிலையில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் விதிகளை அறிமுகப்படுதினாலும் பல சந்தர்பங்களில் நெகிள்வு போக்கை நிர்வாகம் கடைப்பிடிக்கும் போது அதை தொடர்ந்து தமிங்கிலத்தில் எழுத கொடுத்த அங்கிகாரமாக கருதி மேலும் அதிகமாக எழுத முற்படுவது யாருடைய தவறு? இதனால் சில சந்தர்பங்களில் பிரயோசனமான கருத்துக்களையும் எந்த வித நெகிள்வும் காட்டாது நீக்கவேண்டிய நிலைக்கு நிர்வாகம் தள்ளபட்டது தான் நடந்தது.

4. இப்போது சொல்லப்படும் செய்தி இணைப்பது சம்பந்தமானது.

செய்திகளை இணைக்கும் போது எப்படியான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று களத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. இருந்தும் ஒரு சிலர் அவற்றை சரியாக கடைப்பிடிக்காத போதும் நெகிழ்வு போக்குடனே நடந்து கொண்டார்கள். அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்ட பின்னும் தொடர்ந்து விடப்பிடியாக அதே தவறை செய்யும் போது நிர்வாகம் என்ன செய்யலாம் என்கிறீர்கள்??

உண்மையில் மேலே சொல்லிய கருத்துக்கள் கள உறவுகள் யாரையும் குறைசொல்லவோ அல்லது நிர்வாகத்தை ஆதரிக்கவோ சொல்லப்பட்டவில்லை. அதை புரிந்து கோள்வீர்கள் என நினைக்கிறேன். களத்தில் எந்த விதிமுறையும் இல்லாது போனால் களம் சீர்கெட்டு விடும் என்பதை வேறு சில களங்களை அவதானித்தன் மூலம் அறிந்து கொண்டுளேன். அந்த நிலை யாழுக்கு வரக்கூடாது.

Edited by KULAKADDAN

டொலரை தமிழில எப்பிடி சொல்லிறது?

ஓ.."டொலரை" எப்படி தமிழில சொல்லுறது என்டு நேக்கும் தெரியாது அல்லோ :lol: ..ஆனா உங்க வானொலி வழிய ஏதாச்சும் நிகழ்ச்சிக்கு நுழைவுகட்டணம்.. :lol:

20 வெள்ளிகள்

30 வெள்ளிகள்..

என்டு சொல்லுவீனம் நானும் உது என்ன என்டு "வெள்ளி பார்த்தா" பிறகு தான் விளங்கிச்சு "டொலரை" தான் உவையள் உப்படி சொல்லீனம் :lol: ..ஆனா "டொலருக்கும்"..வெள்ளிக்கும் என்ன சம்பந்தம் என்டு தான் நேக்கு விளங்கள்ள பாருங்கோ... :lol:

உங்களுக்கு விளங்குதோ பாருங்கோ... :D

அப்ப நான் வரட்டா!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் டொலர் என்பதை அப்படியே மொழி பெயர்க்க வேண்டும் என்கின்றீர்களா?

ஏன் டொலர் என்பதை அப்படியே மொழி பெயர்க்க வேண்டும் என்கின்றீர்களா?

நான் அப்படி சொல்லவில்லையே அதில் பொன்னையா மாமா :D .."வெள்ளி" என்பது டொலரின் சரியான தமிழ் பதமா என்டு அல்லவா வினாவினேன்??.. :lol:

உணர்ச்சிவசபடாம சற்று சிந்தித்தா எல்லாருக்கும் நல்லது அல்லவா :lol: ..வீணாக நாங்கள் நோய்களை கூட தேட வேண்டிய அவசியம் இருக்காது..(அட மாமா மேல இருக்கிற அக்கறையில தான் சொன்னான் பிழையா இருந்தா கோவித்து போடாதையுங்கோ என்ன).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகள், பெயர் வைப்பது என்பது ஒரு மொழியின் அடையாளம். ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழில் எழுதினால், தமிழின் தேவை இல்லாமல் போகின்றது. அதைத் தவிர்க்கவும், வேறுபடுத்தவும் வேறு பெயர் தேவைப்படுகின்றது. டொலர் என்பதற்கு என்ன அர்த்தம் என்று ஆங்கிலேயனிடம் கேட்டால் அவனிடம் பொருள் இருக்காது. அவர் அதை ஒரு குறியீடாகப் பாவிக்கின்றான். தமிழன், அது போன்ற ஒரு வித்தியாசமான பெயரை டொலருக்குக் குறியீடாகப் பாவிக்கின்றான். அதில் என்னம்மா தப்பு??

மகள், பெயர் வைப்பது என்பது ஒரு மொழியின் அடையாளம். ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழில் எழுதினால், தமிழின் தேவை இல்லாமல் போகின்றது. அதைத் தவிர்க்கவும், வேறுபடுத்தவும் வேறு பெயர் தேவைப்படுகின்றது. டொலர் என்பதற்கு என்ன அர்த்தம் என்று ஆங்கிலேயனிடம் கேட்டால் அவனிடம் பொருள் இருக்காது. அவர் அதை ஒரு குறியீடாகப் பாவிக்கின்றான். தமிழன், அது போன்ற ஒரு வித்தியாசமான பெயரை டொலருக்குக் குறியீடாகப் பாவிக்கின்றான். அதில் என்னம்மா தப்பு??

ஓம்..ஏற்று கொள்கிறேன் மாமா இல்லை என்டு சொல்லவில்லை.. :lol: (சரி ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே எழுதினால் தமிழின் தேவை அற்று போகிறது)..முற்று முழுதாக என்னால் இதனை ஏற்று கொள்ளமுடியாவிடிலும் நான் ஏற்று கொள்கிறேன் மாமா.. :lol:

ஏன் நாங்கள் பயப்பிடுகிறோம்??..மாமா தமிழ் சிதைவடைந்திடும் என்டு அப்ப ஏதோ ஒரு பிழை இருக்கு அல்லவா எங்கையோ ஏற்று கொள்கிறீர்களா?? :D

சரி உங்கள் வாதம் அதாவது அவர்கள் "டொலர்" எனும் பதத்தை குறியீடாக பயன்படுத்துகிறார்கள்...நாங்க

நல்ல கேள்விதான்.. இதுக்கும் பார்க்க நல்ல கேள்வியொன்றும் இருக்கு.. நட்சத்திரத்தையும் வெள்ளி என்கிறாங்கக.. கிழமையையும் வெள்ளி என்கிறாங்க.. உலோக வகை ஒன்றையும் வெள்ளி என்கிறாங்க.. டொலரையும் வெள்ளி என்கிறாங்க.. இது கோமாளியோ கோமாளித்தனமாக இல்லையா என கேட்காம இருந்த யம்மு பேபிக்கு கோடானுகோடி நன்றிகள்.. :unsure:

யம்மு பேபி!

டொலர் = வெள்ளி

வெள்ளி = நட்சத்திரம்

நட்சத்திரம் = திரைப்பட நடிகை

ஆகவே,

டொலர் = திரைப்பட நடிகை

இப்பிடியும் கேட்டு கொல்லமாட்டீர்கள் என நினைக்கிறேன்!!

நன்ன கேள்வி என்டு சொல்லி என்ன புகழ்ந்ததிற்கு ரொம்ப நன்றி தாத்தா.. :D (இப்படி எல்லாம் சிந்திகனும் பாருங்கோ)..ம்ம் தாத்தா "குறியீடாக" ஒரு பதத்தை பாவிக்கிறோம் என்று போட்டு அப்ப கண்டதையும் பாவிக்கிறதோ..இன்னைக்கு அவுஸ்ரெலியாவில "டொலருக்கு" வெள்ளி என்பீனம்.. :lol:

நாளைக்கே "சோழியன்" தாத்தா இருக்கிற இடத்தில.."டொலருக்கு" ஞாயிறு என்டு சொல்லுவீனம் இதை எல்லாம் பார்த்து விசில் அடிக்க சொல்லுறியளோ..(அல்லது தமிழ் சிதையடையாம இருக்கிறது என்டு கோமாளிதனமாக பெருமை பட சொல்லுறீங்களா??)...

அட நன்றி எல்லாம் என்னதிற்கு தாத்தா..(இப்படி பல கேள்விகளை நான் கேட்பன் பாருங்கோ)..தமிழ்சிதைவடையாம காப்பாற்ற போறோம் என்டு போட்டு கண்டதையும் செய்யலாமோ பாருங்கோ.. :unsure:

இப்ப சோழியன் தாத்தா... :)

"டொலர்" - திரைபடநடிகை..

என்று கடசியா உங்களின்ட சமன்பாடு வருது அல்லோ..(அருமையான சமன்பாடு :lol: )...இப்ப நானும் ஒரு சமன்பாடு சொல்லுறன் பாருங்கோ.. :)

வெள்ளி - நட்சத்திரம்

வெள்ளி - கிழமை

வெள்ளி - உலோகம்

ஆகவே முடிவு... :D

வெள்ளி = நட்சத்திரம் +கிழமை+உலோகம்....

இப்ப நாங்கள் சமன்பாட்டை தீர்க்கும் போது எல்லாமே பெறுமதி அற்று போகும் ஆகவே கடசியில் எல்லாரும் வெள்ளி தான் பார்க்க வேண்டும்.. :lol: (என்பது போல் இருக்கிறது தங்களின் விடை).. :)

ஆனபடியா சோழியன் தாத்தா தெரியாம நடிப்பதை விட தெரிந்து கொல்(ள்)வது மேல் அல்லவா..விளங்கும் என்டு நினைக்கிறன்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கிலத்தில் ஒரே சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருப்பதில்லையா? அதற்கும் ஏதும் சமன்பாடு போடுவீர்களோ??

ஆங்கிலத்தில் ஒரே சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருப்பதில்லையா? அதற்கும் ஏதும் சமன்பாடு போடுவீர்களோ??

ம்ம்..பொன்னையா மாமா.. :lol: (ஆங்கிலத்திலையும் ஒரு சொல்லிற்கு பல அர்த்தங்கள் உண்டு)..இல்லை என்டு சொல்லவில்லை இந்த சமன்பாடு "சோழியன் தாத்தா"..போட்ட சமன்பாட்டிற்கு பதில் சமன்பாடு மட்டுமே.. :lol:

ஏன் இதனை போட்டனான் என்டா.."டொலர்" என்ட பதம் வெள்ளியாகும் என்று கூறுகிறீர்களே தவிர அதற்கு போதுமான விளக்கம் உங்கள் தரப்பில் இருந்து இதுவரை வரவில்லையே மாமா?? :unsure: ..அதற்கு தங்களின் பதில் தான் என்ன?? :D

ஆகவே கண்ட சொற்களையும் தமிழ் சிதைவடையாம இருக்க புகட்டினால்..என் சமன்பாட்டின் படி "வெள்ளி" என்ட சொற்பதம் எவ்வாறு பெறுமதி அற்று போனதோ அவ்வாறு தான் ஆகும் என்பதை மட்டும் தான் காட்டினான் :) ..நீங்கள் போதிய ஆதாரத்துடன் கூறீனீர்கள் ஆனால் என்னை போல் "குழந்தைகளிற்கு" பேருதவியாத இருக்குமல்லவா.. :)

இல்லாதுவிடில் இல்லை நாங்கள் சொல்லுவோம் நீங்கள் கேட்கனும் என்டா..(மற்றவைய பற்றி நேக்கு தெரியாது) :lol: ..என்னால முடியாது..விளங்கிச்சோ மாமா..(பிறகு எப்படி தங்களின் சுகங்கள் காலையில பார்த்தது சாப்பிட்டியளோ??).. :)

அப்ப நான் வரட்டா!!

இங்கே பலர் விவாதத்தை புரிந்து கொள்ளாமலேயே பதில் அளிக்கின்றீர்களோ ன எண்ணத் தோன்றுகின்றது. காரணம் நிர்வாகம் விதிமுறைகளை ஏற்படுத்தி களத்தை நிர்வகிப்பதில் எவருக்கும் ஆட்சேபனையில்லை. ஆனால் அந்த அறிவித்தல்களை அறிவிக்கும் முறையும், அதை பாரபட்சமாக கையாளும் முறையும் தான் பலரை வெறுப்படைய வைத்துள்ளது.

உதாரணமாக ஒருவர் புதிதாக உள்நுழைந்தால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கருத்தெழுதிய பின்தான் மற்றைய பகுதிகளில் கருத்தெழுத அனுமதிக்கப்படுவார். ஆனால் சிலர் அறிமுகம் கூடச் செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே அனைத்துப் பகுதிகளிலும் எழுத முடிகின்றது. அதுபோல் சிலரை மட்டுமே நிர்வாகம் குறிவைத்து நடவடிக்கைகளை எடுக்கின்றது. சிலர் எவ்வளவு மோசமான கருத்துக்களை எழுதினாலும் நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. தவறான கருத்துக்கள் பற்றி நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டினாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆனால் அப்படியான கருத்தை விமர்சித்து பதில் கருத்து எழுதினால் நிர்வாகம் ஓடோடி வந்து தூக்குகின்றது. நீர், உமது போன்ற சொற்களைப் பாவித்தால் ஒருமையில் எழுதுவதாக சுட்டிக் காட்டும் நிர்வாகம் நீ, நாய், சனியன், டேய், எருமை போன்ற சொற்களை விட்டு வைக்கின்றது. சிலவேளை நிர்வாகத்தைப் பொறுத்தவரை இவைதான் பண்பான சொற்களோ தெரியவில்லை. தயவு செய்து எனியும் எவரும் நிர்வாகத்திற்கு எல்லாவற்றையும் கவனிக்க நேரமில்லை என்று வக்காலத்து வாங்க வேண்டாம்.

அரிச்சந்திரா நாடகத்தில் ஒரு பாடல்.. அதில் சில வரிகள்..

வெள்ளிக்காசு கொடுத்த கையால்

கொள்ளிக்கட்டை தூக்க நேர்ந்ததே.. பராபரமே..

அரிச்சந்திரன் ஆட்சியிலேயே 'டொலர்' புழக்கம் இருந்தது என்று கருதலாமா, யம்மு பேபி?! :unsure:

அதுபோல் இங்கு செய்திகளில் சிறுபகுதியை மட்டும் இணைத்துவிட்டு, மிகுதியை தமது இணையத்தளத்திற்கு இணைப்பை பலர் கொடுத்து விடுகின்றார்கள். அவர்களில் நடவடிக்கையை நிர்வாகம் எடுப்பது தவறல்ல. ஆனால் சிலரில் மட்டுமே நடவடிக்கை எடுப்பதன் மர்மம் என்ன??

மீண்டும் இங்கு குறிப்பிடுவது புதினம் செய்திச் சேவையை யாழ் இணையம் பயன்படுத்தி - தாயக செய்திகளை உடனுக்குடன் பெற்று - யாழ் இணைய வாசகர்களுக்கு வழங்குகிறது. எனவே அந்தச் செய்திகளை குறையாக இணைத்து மிகுதிக்கு இணைப்புக் கொடுக்கப்படுகிறது. புதினம் செய்திச் சேவை தவிர்ந்த வேறு எந்த செய்திச் சேவையை யாழ் இணையம் (நிர்வாகம்) உடனுக்குடன் பயன்படுத்த விரும்பினாலும் அவர்களுடன் எட்டப்படும் உடன்பாட்டுக்கு அமைய குறையாக இணைத்து மிகுதிக்கு இணைப்புக் கொடுக்கப்படும்.

ஆகவே குறையாக புதினம் செய்தியை இணைத்து அங்கு போய் படிக்கும் படி யாழ்களம்தான் முதலில் ஆரம்பித்தது... அப்படி செய்திகளை NewBot இணைக்கும் செய்திகளால் புதியபல தலைப்புகளின் தோற்றம் கட்டுக்குள் வரும் எனும் காரணம் சொல்லப்பட்டது... ஆனால் அப்படியான கட்டுக்குள் செய்திகள் இணைப்பு இல்லை மட்டுறுத்துனர்களின் வேலை அதனால் குறையவும் இல்லை...!!!

முக்கியமாக தேவை அற்ற குழப்பங்கள்தான் இதனால் ஏற்படுகிறது..

இதன் அடிப்படை பிரச்சினையை பார்த்தீர்கள் எண்றால் இன்னும் ஒரு தளத்துக்கு (புதினம்) வழங்கப்படும் உரிமை மற்றய தளங்களுக்கு மறுக்க படுகிறது....!! ஏன் இந்த பாகுபாடு....?? இல்லை புதினம் தளம் யாழ்களத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, அந்த தளத்தினால் யாழ்களம் பயன் பெறுகிறது என்பதானால் உங்களின் முடிவை ஏற்று கொள்ள முடியும்....!! அதோடு புதினம் தளத்தில் யாழுக்கான ஒரு இணைப்போ விளம்பரமோ கிடையாது... அப்படி இருக்க புதினத்துக்கு எதுக்காக அதிகமான ஒரு சலுகை...!!

அண்மைக்காலமாக பல இடத்து செய்திகள் விரைவாக ( மிகவிரைவாக) யாழில் அனேக உறுப்பினர்களால் இணைக்கப்படுகிறது...! இது முன்னரான காலங்களிலும் இணைக்கப்பட்டது போலவே இருக்கிறது... யாழில் கருத்து எழுதாதவர்கள் கூட யாழுக்கு இட்டு வருவதும் அந்த காரணம்தான்....!! அதனால்தான் யாழ் பலரது கவனிப்பில் இருக்கிறது...!!

எனது வேண்டுதல் என்ன எண்றால் முன்னர் இருந்த செய்தி குழுமம் மட்டுமே செய்திகளை இணைக்கலாம் எணும் கட்டுப்பாட்டை கொண்டுவாருங்கள்... அல்லது தானியங்கி முறையில் புதினத்துக்கு அளிக்கப்படும் (( அங்கு சென்று முழுச்செய்தியையும் படிக்கும்)) சலுகையை இரத்து செய்யுங்கள்....!

பதில் அளிக்க வேண்டாம் எண்றுதான் முதலில் நினைத்தேன்...! ஆனால் தேவை ஏற்பட்டது...

Edited by தயா

தயா நீங்களும் நானும் வாய் உலைய கத்தி என்னத்த செய்யுறது..? :unsure:

புதினம் மட்டுமே தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் ஊடகம் என்று யாராவது நினைக்கும்போது அதற்கு நீங்கள் என்ன செய்யமுடியும்..?

மேலும் ------

சரிதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.