Jump to content

எண்ட பள்ளிக்கூடத்தில பட்டப்பகலில நடைபெறும் சில திருட்டு சம்பவங்கள்


Recommended Posts

பதியப்பட்டது

அனைவருக்கும் இனிய திருட்டு வணக்கங்கள்,

இண்டைக்கு (நேற்று) நான் பள்ளிக்கூடம் போனால் என்ன நடந்திச்சிது தெரியுமோ? ரெண்டு அதிர்ச்சிகள் எனக்கு காத்து இருந்திச்சிது. ஒண்டு எனக்கு படிப்பிக்கிற வாத்திக்கு மாரடைப்பு. இனி அவர் படிப்பிக்க மாட்டாராம். புது வாத்தி ஒருத்தர பள்ளிக்கூடம் தேடிப்பிடிக்கவேணும். மற்றது, என்னோட படிக்கிற சக மாணவியிண்ட காரை உடைச்சு களவு.

இதில ரெண்டாவது கதைய மாத்திரம் சொல்லிறன் சுருக்கமா.

நேற்று என்னோட படிக்கிற சக மாணவி ஒருத்தி தன்ர காரை (car - மகிழூர்தி?) பள்ளிக்கூடத்திற்கு அருகில இருக்கிற ஒரு தெருவில விட்டுப்போட்டு அங்கால எங்கையோ போட்டு வாறதுக்கு இடையில யாரோ ரெண்டு திருட்டுப் பசங்கள் கார் கண்ணாடிய கல்லால குத்தி உடைச்சு காருக்க இருந்த பொருட்கள திருடிப்போட்டாங்கள். நாசமாப்போக..

எண்ட சக வகுப்பு மாணவர்களுக்கு மாணவி அனுப்பின மடலை இணைக்கிறன் பாருங்கோ..

Guys:

Apologies...I've had a brutal afternoon/evening. My car window was smashed with a rock, glass everywhere on ........ near the post office. Two young guys I saw sitting at ....... know it was them. They must be very disappointed. I had a great laptop bag I got from the greatest company I worked for but is no longer around. Had my text book, my binder with presentations, hand written notes, and my mini recorder in it...all gone. Still have the rock they used to break the window!! Drove home slowly sitting on glass. Had to tape the window up and now can't drive it or park it anywhere until I get it fixed with $$$ I don't have : o (

I'm truly sorry I missed class. Looking to buy another text book and if I can please please please get photocopied notes from the first class onwards I would really appreciate it as I've lost it all.

மற்றது, முக்கியமா காரை நிறுத்திவிட்டு செல்லும்போது காரினுள் ஒரு சாமாங்களையும் வைத்துவிட்டு போகக்கூடாது. காரை கள்ளங்கள் உடைப்பதற்கான மூலகாரணம் காருக்க ஏதாவது பொருட்களை நீங்கள் விட்டுச் செல்லுறதுதான். எண்டபடியால் கவனம் பாருங்கோ.

இப்பிடித்தான் எண்ட சைக்கிள்... நான் ஆசை ஆசையா கனடாவுக்கு வந்து உழைச்ச காசில ஒரு அழகிய துவிச்சக்கர வண்டி வாங்கி இருந்தன் $900 காசு குடுத்து. ரெண்டு வருசத்துக்கு முன்னம் பள்ளிக்கூடத்தில வாசலில நிறுத்திப்போட்டு (துவிச்சக்கரவண்டிகள நிறுத்தும் இடம்) நூலகத்துக்கு போயிட்டு வாறதுக்கு இடையில நாசமாப்போன திருட்டுப்பசங்கள் பூட்டு இரும்பு வயரை வெட்டிப்போட்டு (பெரிய ஒரு இரும்பு வெட்டுற கத்தரிக்கோலால) எண்ட அழகிய சைக்கிள திருடிக்கொண்டு போட்டாங்கள்.

இப்ப நினைக்கவும் வயித்தப்பத்தி எரியுது. எங்க காவல்துறையிட்ட எல்லாம்போய் முறைப்பாடு செய்ததுதான் ஆனா திருட்டுப்போனது போனதுதான்.

இதுதவிர பள்ளிக்கூடத்தில இன்னும் பல திருட்டுக்கள் எல்லாம் நடக்கும். முக்கியமா Laptop க்கள் அடிக்கடி களவுபோகும். அவசரத்துக்கு ஒண்டுக்கு போவம் எண்டாலும் அது பெரிய ரோதனை பாருங்கோ. கைக்கணணிய சும்மா விட்டிட்டு போக ஏலாது.

எங்கையாவது நாங்கள் ஏமலாந்தினால் அப்பிடியே பையோட எல்லாம் களவு போயிடும். இதால படிச்சுக்கொண்டு இருக்கேக்க நேரப்பற்றாக்குறை எண்டால் பள்ளிக்கூடத்தில ஒண்டுக்கு வந்தாலும் போகாமல் அடக்கிவச்சுக்கொண்டு இருக்கிறது. ஏன் எண்டால் ஒண்டுக்கு போறது எண்டால் கணணிய SHUT DOWN பண்ணி பையுக்க வச்சு, பையத்தூக்கிக்கொண்டு மலசலகூடத்துக்குபோட்டு, பிறகு திரும்பி வந்து கணணிய Start பண்ணி திரும்பவும் படிக்க துவங்க பதினைஞ்சு இருவது நிமிசம் அநியாயமா போயிடும்.

இப்பிடி ஒவ்வொருநாளும் சின்னதாவும், பெரியதாவும் களவுகள் நடந்துகொண்டு இருக்கிது. போலிசு இருக்கிதுதான். எண்டாலும் களவுகள் குறையுறதா காண இல்ல. கூடிக்கொண்டு போகிது. அட கனடா நாட்டிலயே அதுவும் பட்டப்பகலில அதுவும் பள்ளிக்கூடத்திலயே இப்பிடி நடக்கிது. எண்டபடியால் நீங்களும் கவனமா இருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
:lol: நீங்கள் உதை சொல்லுறியள் ,சில இடங்களில் ஆசன வாயில் துடைக்கும் கடுதாசி ( ரொய்லற் ரிசு ) கூட களவு போகுது.
Posted

அட ஏதோ சொர்க்கவாசலைசொல்லுற மாதிரி சொல்லுறீங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்களுடைய வகுப்பு மாணவிக்கு எனது அனுதாபங்கள்... எங்கடை 'பெடிய'மாருட்ட சொல்லு 'மட்டை'இல ஒரு கணணி இழுத்து குடுங்கோவன்..

Posted

எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு... ஒரு இரண்டு மாதம் முதல் நடந்தது.

நான் ஒரு project செய்து கொண்டு இருக்கும் போது.. போன் வர வெளியே போட்டு வந்தால்... என்னுடைய USB-stick கானோம்.. அடுத்த நாள் project குடுத்தாகனும்... எவ்வளவோ நாள் கஷ்டப்பட்டு செய்தது..... :D:lol:

செய்ததில் ஒரு பகுதி என்னுடைய mail box ல் இருந்ததால் மிகுதியை இரவு கண்விழித்து மறுபடியும் செய்து முடித்தேன். :lol:

இப்போ தெளிவாகி விட்டேன் ஆக்கும்... எப்பவும் இரண்டு இடத்தில பதிந்து வைக்கிற.... :rolleyes::lol:

Posted

இப்படி தான் நீண்ட நாளைக்கு முன் எனது சகோதரனின் இரு சக்கரவண்டியை இரவல் வாங்கி கொண்டு போய் புகையிரத நிலையத்தில் முன் சில்லுடன் வைத்து பூட்டிவிட்டு நான் புகையிரதத்தில் போய் விட்டு பின்னேரம் வந்து பார்த்தால் முன் சில்லும் பூட்டும் மட்டும் பூட்டிய படி இருந்தது. பின் பாகத்தை கொண்டு போய் விட்டார்கள். வீட்டுக்கு முன் சில்லுடன் நடந்து சென்று சகோதரனிடம் இப்படி இரு சக்கரவண்டியை களவெடுத்து விட்டார்கள் என்றேன். முதலில் சரியான கோவத்துடன் ஏதோ சொல்ல வந்தவர். பிறகு சிறுது நேரத்தின் பின் சரி சரி முன் சில்லை போகும் போது கொண்டு போனால் சாவகச்சேரி சந்தையில் உருட்டலாம் என்றார். :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடா....முதியோர் பாடசாலைகளிலும் இப்படி எல்லாம் நடக்குதா :rolleyes::lol: . வயசு போனதுகளுக்கு இது எல்லாம் தேவையா :D:lol:

Posted

அடடா....முதியோர் பாடசாலைகளிலும் இப்படி எல்லாம் நடக்குதா :lol::D . வயசு போனதுகளுக்கு இது எல்லாம் தேவையா :lol::lol:

நல்ல காலம் நானும் என்னுடைய வெத்திலை பெட்டியை (அட பாடசாலையிலதான்) நேற்றில இருந்து காணல்லை எண்டு சொல்லுவம் எண்டு நினைக்க, இப்படி சொல்லி எண்ட மானத்தை காப்பாத்தீட்டியள்.... :lol::)

இருந்தாலும் சின்ன வருத்தம், பிரான்ஸ், சுவிஸில உள்ள உறுப்பினர்கள்ட எது எங்க எப்படி களவு போனது எண்டு எனி தெரியாமல் போயிடிச்சே... :):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயா சோமாலியாக்காரரே! தாங்கள் இவ்வளவு காலமும் மறைந்திருந்ததின் மர்மம் என்னவோ? :rolleyes:

Posted

கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள். :lol:

நுணாவிலான், உங்களுக்காவது பரவாயில்ல, ஒரு சில்லாவது மிஞ்சிச்சிது. இத வச்சு உருட்டியாவது விளையாடலாம். எனக்கு இப்ப தலைக்கு போடுற தலைக்கவசம் (ஹெல்மட்) மற்றது பாவிக்க ஏலாத திறப்பு மாத்திரம் தான் மிஞ்சி இருக்கிது. இதவச்சு என்னத்த உருட்டுறது? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள். :D

நுணாவிலான், உங்களுக்காவது பரவாயில்ல, ஒரு சில்லாவது மிஞ்சிச்சிது. இத வச்சு உருட்டியாவது விளையாடலாம். எனக்கு இப்ப தலைக்கு போடுற தலைக்கவசம் (ஹெல்மட்) மற்றது பாவிக்க ஏலாத திறப்பு மாத்திரம் தான் மிஞ்சி இருக்கிது. இதவச்சு என்னத்த உருட்டுறது? :rolleyes:

கலைஞா,

பள்ளிக்கூட நிர்வாகத்திடம்(?!) முறையிட ஏலாதோ?!! துவிச்சக்கரவண்டி களவு போனால் ஒண்டும் செய்ய ஏலாது ஏனெனில் திருடின மறு கணமே அதை உதிரிப்பாகங்களா உதிர்த்திப்போடுவாங்கள். வசந்த /கோடை காலங்களில் துவிச்சக்கரவண்டியில் கடைக்குப்போயிட்டு ஏங்கிக்கொண்டு இருக்கிறது கடையில் ஒழுங்கா சாமான் வாங்காமல் எட்டி எட்டி வண்டி நிற்குதோ என்று பார்க்கிற அவஸ்தையை விட நடராஜாவே நமக்கெல்லாம் சரியெண்டு நடந்துதான் போவன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்களின்ட ஊரில இப்படியான களவுகள் இல்லை. எல்லாம் இந்த வெளிநாட்டில தான் இந்த பிரச்சனைகள்.பென்சில், பெனை,இறப்பர் எல்லாம்வைச்ச இடத்தில் அப்படியே இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்களின்ட ஊரில இப்படியான களவுகள் இல்லை. எல்லாம் இந்த வெளிநாட்டில தான் இந்த பிரச்சனைகள்.பென்சில், பெனை,இறப்பர் எல்லாம்வைச்ச இடத்தில் அப்படியே இருக்கும்...

நான் படிச்ச பள்ளிக்கூடத்திலேயும் எல்லாம் வைச்ச இடத்திலேயே இருக்கும் சாப்பாட்டு பார்சலை தவிர்த்து :wub:

Posted

கலைஞா,

பள்ளிக்கூட நிர்வாகத்திடம்(?!) முறையிட ஏலாதோ?!! துவிச்சக்கரவண்டி களவு போனால் ஒண்டும் செய்ய ஏலாது ஏனெனில் திருடின மறு கணமே அதை உதிரிப்பாகங்களா உதிர்த்திப்போடுவாங்கள். வசந்த /கோடை காலங்களில் துவிச்சக்கரவண்டியில் கடைக்குப்போயிட்டு ஏங்கிக்கொண்டு இருக்கிறது கடையில் ஒழுங்கா சாமான் வாங்காமல் எட்டி எட்டி வண்டி நிற்குதோ என்று பார்க்கிற அவஸ்தையை விட நடராஜாவே நமக்கெல்லாம் சரியெண்டு நடந்துதான் போவன். :lol:

பள்ளிக்கூட நிருவாகம் காவலதுறைய காட்டிப்போட்டு நைசாக கழன்றுவிட்டது.

என்களின்ட ஊரில இப்படியான களவுகள் இல்லை. எல்லாம் இந்த வெளிநாட்டில தான் இந்த பிரச்சனைகள்.பென்சில், பெனை,இறப்பர் எல்லாம்வைச்ச இடத்தில் அப்படியே இருக்கும்...

உண்மைதான் புத்தன் மாமா. அப்பிடி களவு போனாலும் களவு எடுத்தவன இலகுவா கண்டுபிடிச்சுடலாம். இஞ்ச ஆயிரம் நாட்டுக்காரங்கள் இருக்கிறாங்கள். யாரை எண்டு சந்தேகப்படுறது.

நான் படிச்ச பள்ளிக்கூடத்திலேயும் எல்லாம் வைச்ச இடத்திலேயே இருக்கும் சாப்பாட்டு பார்சலை தவிர்த்து :lol:

எங்கட பள்ளிக்கூடத்திலயும் சாப்பாடுகள் களவுபோகும். இதனால பள்ளிக்கூடத்தில ஒரு விதி கொண்டுவந்தவேள் என்ன எண்டால் காலையில் கடவுள் வணக்கம் நடக்கிற நேரத்தில ஒருத்தரும் வகுப்புகளுக்க நிக்கக்கூடாது எண்டு. ஏன் எண்டால் இந்த நேரத்திலதான் மற்ற ஆக்கள் சாமிகும்பிட்டுக்கொண்டு நிக்க அவேண்ட சாப்பாடுகள கள்ளக்காக்காக்கள் தூக்கிக்கொண்டு போயிடுங்கள்.

Posted

இதுதவிர பள்ளிக்கூடத்தில இன்னும் பல திருட்டுக்கள் எல்லாம் நடக்கும். முக்கியமா Laptop க்கள் அடிக்கடி களவுபோகும். அவசரத்துக்கு ஒண்டுக்கு போவம் எண்டாலும் அது பெரிய ரோதனை பாருங்கோ. கைக்கணணிய சும்மா விட்டிட்டு போக ஏலாது.

எங்கையாவது நாங்கள் ஏமலாந்தினால் அப்பிடியே பையோட எல்லாம் களவு போயிடும். இதால படிச்சுக்கொண்டு இருக்கேக்க நேரப்பற்றாக்குறை எண்டால் பள்ளிக்கூடத்தில ஒண்டுக்கு வந்தாலும் போகாமல் அடக்கிவச்சுக்கொண்டு இருக்கிறது. ஏன் எண்டால் ஒண்டுக்கு போறது எண்டால் கணணிய SHUT DOWN பண்ணி பையுக்க வச்சு, பையத்தூக்கிக்கொண்டு மலசலகூடத்துக்குபோட்டு, பிறகு திரும்பி வந்து கணணிய Start பண்ணி திரும்பவும் படிக்க துவங்க பதினைஞ்சு இருவது நிமிசம் அநியாயமா போயிடும்.

இதுக்குத்தானே Hibernate எண்டு ஒரு முறை இருக்கே, சும்மா மூடிப்போட்டு பிறகு வந்து துறந்தியள் எண்டா எல்லாம் அப்பிடியே இருக்கும். கொஞ்சம் Memory கூடத்தேவை!

Start > Settings > Control Panel > Power Options > Hibernate > Enable Hibernate

Posted

ஓம் சாணக்கியன் நன்றி. அப்பிடி செய்யலாம்தான். நான் இதுவரை காலமும் இத பாவிக்கிறது இல்ல. பிறகு இப்பிடி திறந்து மூட வேற ஏதாவது சிக்கல் வருமோ எண்டுற பயத்தில.

Posted

வணக்(கம்) குருவே :) ..அட நம்ம ஊரிலையும் உப்படி எல்லாம் நடக்கிறது தான் பாருங்கோ நீங்க சொல்லுற மாதிரி..(லாப்டொப் மற்றது கை கணணி) :( ..உதுகளை விட்டு போட்டு அங்கால போயிட்டு வரமுன்னம் காணகிடைக்காது அதை விட பாட புத்தங்களை மேசையில வைத்திட்டு அங்கால போயிட்டு வந்தா அத கூட காணகிடைக்காது அது தான் பெரிய ஆச்சரியம் பாருங்கோ.. :lol:

போயும்..போயும் புத்தகத்தை எடுக்கிறாங்களா எண்டு நினைக்கிறான்..(ஆனா அதையும் தான் பாருங்கோ)..உப்படி பல விசயங்கள் நடக்கிறது.. :)

மற்றது நீங்க சொன்ன மாதிரி காரும்,சைக்கிளும்...(கார உடைத்து உள்ளுகுள்ள இருக்கிற சாமான்களை எடுப்பாங்க இல்லாட்டி காரையே ஓட்டி கொண்டு போயிடுவாங்க) :lol: ..நேக்கு உப்படி ஒன்னும் நடக்கல்ல ஆனா எண்ட புத்தகங்கள் மற்றது கைகணணி எண்டு எல்லாம் இரண்டு கிழமைக்கு ஒருக்கா காணாம போகும்.. :D

உந்த காரை பத்தி சொல்லக்க தான் ஒரு விசயம் ஞாபகம் வருது பாருங்கோ..சில மாணவர்கள இருக்கீனம் தானே தாங்களே காரை உடைக்கிறது அல்லது ஆட்களை கொண்டு களவெடுக்க பண்ணுறது பிறகு "இன்சுரன்ஸ் கிளேம்" பண்ண தான் பாருங்கோ :) ..(உப்படி பல பேர் செய்து புது கார் வாங்கி இருக்கீனம்). :D .

ஆனபடியா யாரின்ட உண்மையா களவு போகுது யார் "இன்சுரன்ஸிற்கு "செய்யிறாங்க எண்டு தெரியுதே இல்ல குருவே.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

போயும்..போயும் புத்தகத்தை எடுக்கிறாங்களா எண்டு நினைக்கிறான்..(ஆனா அதையும் தான் பாருங்கோ)..உப்படி பல விசயங்கள் நடக்கிறது.. :lol:

நல்லா இருக்கிது உங்கட கதை. கடவுளே... புத்தகம் வாங்கிறது எண்டால் சும்மாவா? :unsure: எங்கட TEXTBOOK $100-$200 மட்டும் போகும். :D புத்தகத்த திருடினால் இலகுவாகவும் மிகவிரைவிலும் விற்று காசாக்க முடியும். :unsure: சும்மா யாராச்சும் $100, $150 காசு தருவாங்களா? அதான் பசங்கள் மற்றவன் எங்காச்சும் வாய்பாக்கேக்க புத்தகத்த திருடுறாங்கள். நீங்களும் ஏதோ படிக்கிற ஆர்வத்தில திருடுறாங்கள் எண்டு நினைச்சீங்களோ? :):D கடவுள் காக்க! அந்தக்காலம் எல்லாம் தோமஸ் அல்வா எடிசன் காலத்தோட முடிஞ்சு போச்சிது பாருங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள். :o

நுணாவிலான், உங்களுக்காவது பரவாயில்ல, ஒரு சில்லாவது மிஞ்சிச்சிது. இத வச்சு உருட்டியாவது விளையாடலாம். எனக்கு இப்ப தலைக்கு போடுற தலைக்கவசம் (ஹெல்மட்) மற்றது பாவிக்க ஏலாத திறப்பு மாத்திரம் தான் மிஞ்சி இருக்கிது. இதவச்சு என்னத்த உருட்டுறது? :icon_idea:

ஆருக்கும் காக்கா வலிப்பு வந்தால் கொடுக்கலாம் :rolleyes:

Posted

ஆருக்கும் காக்கா வலிப்பு வந்தால் கொடுக்கலாம் :icon_idea:

நல்ல யோசனை. உங்களுக்கு யாரும் காக்காவலிப்பு வாற ஆக்கள் தெரிஞ்சால் சொல்லுங்கோ. தபாலில அனுப்பி வைக்கிறன். :rolleyes: தலைக்கவசத்தயும் வச்சு என்ன செய்யுறது எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

Posted

நல்ல யோசனை. உங்களுக்கு யாரும் காக்காவலிப்பு வாற ஆக்கள் தெரிஞ்சால் சொல்லுங்கோ. தபாலில அனுப்பி வைக்கிறன். :D தலைக்கவசத்தயும் வச்சு என்ன செய்யுறது எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

சிறிலங்கா இராணுவத்திற்ற குடுங்கோ..

அவையள் எங்கட பெடியளிட்ட பத்திரமா சேர்ப்பினம்..

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.