Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மொரட்டுவையில் குண்டு வெடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான காலத்திலேயே எங்கடை பல்கலைக்கழகத்தில புலி படிக்குது எண்டு துண்டு பிரசுரம் ஒட்டினவை... இப்ப எங்கடை சக கனிஷ்ட மாணவர்களுக்கு என்ன நடக்கப் பொகுதொ தெரியவில்லை... :D

நான் முந்தி எல்லாம் யுனிக்கு போகேக்க வரேக்க ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கும் ஆமிட்ட மாட்டுப் பட்டிருக்கிறன். ஆனால் ஒன்று என்னை ரோட்டில நிப்பாட்டி வைச்சதோட விட்டிட்டாங்கள். ஒருக்காலும் ஏத்தல்ல...! ஆனால் வீட்டில வைச்சு பிடிச்சு ஏத்தியிருக்கிறாங்கள். தமிழர்கள் தென்னிலங்கையில் எங்க படிச்சாலும் அங்க எல்லாம் உந்த புலிப்பட்டம் இலவசமாக் கிடைக்கும். அதோட எங்கட டக்கிளஸ் அண்ணனின் ஆக்களும் ஒட்டி உரசி தகவல் திரட்டிறதுக்குத் திரியுறவ. இப்ப எல்லாம் சந்திரிக்கா அம்மையார் காலத்தை விட கெடு பிடிகள் கொஞ்சம் கடுமை என்றுதான் சொல்லுறாங்க நண்பர்கள். :)

Edited by nedukkalapoovan

சம்பவம் கட்டுபெத்த சந்திக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில்(பல்கலைக்கழக பக்கமாக).. கொட்டவையில் இருந்து கல்கிசை செல்லும் பேரூந்தில் நிகழ்ந்ததாம்..

நேரம் 7 30 என்றபடியால் தமிழ் மாணவர்கள் அப்பேரூந்தில் செல்லும் சாத்தியம் குறைவு ..எனவே தமிழ் மாணவர்கள் சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் மிகக் குறைவு.. :)

நெதர்லாந்த் இனையச் செய்தியில் இந்த செய்தியை வேறு கோனத்தில் போட்டு இருக்கிறார்கள்

வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டு இடங்களில் இராணுவம் ஊடுருவி தாக்குதல் செய்வதால் புலிகளும் தங்காலும் தலைநகர் வரௌ ஊடுருவி தாக்குதல் செய்ய முடியும் என்ற கோனத்தில் தா,

முதலும் மாங்குள தாக்குதலுக்கு பின் நடை பெற்ற தொடருந்து தாக்குதலையும் இப்படி தான் எழுதினார்கள்...

இதென்ன அனியாயமப்பா... அடிக்கடி நடக்குது...

இனி சிங்களவங்கள் பஸ்ஸில போகமாட்டாங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள மக்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேணும்..எது நடந்ததோ அது அரசாங்கத்தாலேயே நடந்தது எது நடக்கின்றதோ அது அரசாங்கத்தாலேயே நடக்கிறது...எது நடக்க இருக்கிறதோ அதுவும் அரசாங்கத்தாலேயே நடக்கும். 90 கலீல் திரை மறைவில் நடந்த பல விடயங்கள் இப்போது வெளிப்படையாக நடக்கின்றது. ஆனால் ஒன்றேஒன்று தான் வித்தியாசம். முதலில் பாதிக்கப்பட்டது எல்லைப்புற சிங்களவன் ..இப்ப கொழும்பு சிங்களவன்...எங்கை அடிச்சா எங்கை வலிக்கும் எண்டு வலியை சுமந்தவர்க்கு மட்டும்தான் தெரியும்....

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்கள் சிங்களப் படைகள் வடக்கில் நடத்தும் கிளைமோர் தாக்குதல்களுக்குப் பதிலடி என்ற வகையில் இன்று செய்திகளைப் பிரசுரித்துள்ளமை.. வடக்கிற்கு செய்தியாளர்களை அனுமதிக்காமல் அங்கு சிங்கள அரசு அரங்கேற்றி வரும் தமிழினப் படுகொலையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டச் செய்துள்ளது.

வன்னியில் நடந்த எந்தக் குண்டு வெடிப்புக்கும் அமெரிக்காவோ.. ஐரோப்பிய ஒன்றியமோ கண்டனம் தெரிவிக்கல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் வன்னிச் சம்பவங்களை சர்வதேச ஊடகங்கள் புறக்கணித்து வந்தன என்பதும் தெற்கில் தொடர்சியாக வெடிக்கும் குண்டுகளை அடுத்து அவை காரணம் தேடுவதும்.. அடித்தால் தான் புரியும் என்ற நிலைக்கு சர்வதேசத்தைக் கொண்டு வந்திருப்பது வேதனைக்குரிய உண்மை.

At least 21 people have been killed in a bomb explosion targeting a bus in the Sri Lankan capital, Colombo.

At least 47 others were injured in the blast in a southern suburb of the city.

The explosion comes as the Sri Lankan army continues a large-scale offensive against Tamil Tiger separatists in the north of the country.

There have been a string of recent attacks on public transport in the south, while the military is accused of killing civilians in rebel-held areas.

'I blacked out'

Military spokesman Brig Udaya Nananyakkara said the rebels had detonated a roadside bomb that targeted the bus in the suburb of Moratuwa.

Eyewitnesses said they saw bodies inside the bus, which had shrapnel marks all over it.

They said the bus was knocked over by the force of the explosion.

"I was standing in the middle of the bus when there was a loud noise and the whole bus toppled to the side," office worker Shanika Priyadharshani told the AFP news agency.

"I blacked out for a while. There was black smoke, people were dead around me. I shouted for help and someone pulled me out."

There have been a number of bomb attacks in Colombo recently blamed on the Tamil Tigers.

They follow accusations by the rebels that government commandos have carried out roadside bombings which have killed civilians in the country's rebel-held north.

On Wednesday, at least 24 people were injured when a packed commuter train in Colombo was hit by a bomb.

And the Tamil Tigers were blamed for last week's bomb attack at Dehiwela station that left at least eight dead.

In February, 11 people died in a suicide attack at Colombo's main train station.

Fighting

Sri Lanka's civil war has intensified since the government formally ended a ceasefire with the rebels in January. In practice the truce had been dead for months.

In the north of the island the military is carrying out an offensive which it says is aimed at crushing the rebels by the end of this year.

Troops drove the Tamil Tigers from strongholds in the east last year.

The rebels have fought for a generation for an independent state for the Tamil minority in the island's north and east.

About 70,000 people have been killed since the civil war began in 1983.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7439193.stm

Edited by nedukkalapoovan

மொரட்டுவ குண்டு வெடிப்பு தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது

மொரட்டுவ கட்டுபெத்த பேரூந்து குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கிளைமோர்க் குண்டொன்றின் மூலமே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamilwin.com

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பயணிகள் பேருந்தினை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 7:35 மணியளில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் கைது செய்யப்படுவதுடன், அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

Edited by மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

****

எமது விடுதலைப் போராட்டத்தைக் கடைசியில் பயங்கரவாதம் போல ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கே. சிங்களவர்களுக்கிடையே நடக்கின்ற குத்துவெட்டு;ககளோடு வன்னியில் நடந்த தாக்குதலை இணைக்காதீர்கள்.

இது ஒரு தேசத்திற்கான போராட்டம். சிங்கள மக்களைச் சாகடிப்பதல்ல, என்பதை நினைவில் வைத்திருங்கள். எம்மவர்கள் கொல்லப்பட்ட வேதனையை மறைக்கமுடியாது. ஆனால் அதற்காக எம் போராட்டத்தினையும் கொச்சைப்படுத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைப் போராட்டத்தைக் கடைசியில் பயங்கரவாதம் போல ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கே. சிங்களவர்களுக்கிடையே நடக்கின்ற குத்துவெட்டு;ககளோடு வன்னியில் நடந்த தாக்குதலை இணைக்காதீர்கள்.

இது ஒரு தேசத்திற்கான போராட்டம். சிங்கள மக்களைச் சாகடிப்பதல்ல, என்பதை நினைவில் வைத்திருங்கள். எம்மவர்கள் கொல்லப்பட்ட வேதனையை மறைக்கமுடியாது. ஆனால் அதற்காக எம் போராட்டத்தினையும் கொச்சைப்படுத்த முடியாது.

பொன்னையா இக்குண்டு வெடிப்புக்களுக்கு புலிகள் தான் காரணம் என்று இங்கு எவரும் சொல்லவில்லை. சிறீலங்கா அரசைத் தவிர வேறு எவரும் குற்றம் சாட்டவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழின அழிப்புக்குத் துணை போகும் சிங்களப் பேரினவாதக் கூட்டம் அழிவைச் சந்திக்கிறது போரின் வலியை சந்திக்கிறது என்ற உணர்வுதான் உள்ளதே தவிர வேறில்லை. இக்குண்டுத் தாக்குதல்களை சிங்களவர்களே செய்யலாம்.. இல்ல எவர் தான் செய்யலாம். அது அப்பாவி தமிழ் மக்களுடைய பிரச்சனையல்ல .

காலங்காலமா தமிழ் மக்களுக்கு அழிவைக் கொடுத்த சிங்கள தேசம் இன்று தன்னாலேயே அழிகிறது எனும் போது தமிழ் மக்களின் உணர்வுகளில் மனிதாபிமானத்தைக் கடந்த ஒரு ஆறுதல் என்பது இருக்கவே செய்யும். வலியை தந்தவனே வலியைச் சுமக்கிறான் என்பதில்.

அதைவிடுத்து இதில் புலிகளை சம்பந்தப்படுத்துவதாக எண்ணுவது அல்லது காட்டுவது அப்படிச் செய்பவர்களின் தவறே.

எது பயங்கரவாதம்.. அமெரிக்காவைத் தாக்கிவிட்டார்கள் என்பதற்காக அமெரிக்கா ஈராக் ஆப்கானிஸ்தான் சூடான் என்று தாக்கவில்லையா..! அதற்கு முதல் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா உலகமெல்லாம் தாக்குதல் நடத்தவில்லையா..??! அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் அமெரிக்கா உலகைத் தாக்கலாம் மக்களை அழிக்கலாம்.. ஆனால் இஸ்லாமிய உலகுகின் மீதோ.. அல்லது விடுதலை வாங்க நிற்கும் மக்கள் மீதோ அல்லது பலவீனப்பட்ட மக்கள் மீதோ அமெரிக்கா தாக்கி அதற்கு பதிலடி கொடுத்தால் அது பயங்கரவாதம்.

பலமுள்ளவை சொல்லுகீனம் என்றதற்காக பயங்கரவாதம் என்பதை உச்சரிக்காதீர்கள். முதலில் அமெரிக்கா நிறுத்த வேண்டும் பயங்கரவாதச் செயல்களை. இஸ்ரேல் நிறுத்த வேண்டும் பயங்கரவாதச் செயல்களை. அவர்கள் தான் உலகில் பயங்கரவாதத்தை உருவாக்குபவர்களும் வளர்ப்பவர்களும்..!

அவர்களிடம் போய் உன்னை உலகம் பயங்கரவாதி என்றுது தாக்குதலை நிறுத்திவிட்டு அமெரிக்காவிற்குள்ளும் இஸ்ரேலுக்குள்ளும் அடங்கிவிடு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.. அப்படிச் சொல்லி அவையை கேட்க வையுங்கள் உலகில் பயங்கரவாதம் என்பது அருகிவிடும் பிரச்சனைகளுக்கு அந்நியத் தலையீடுகளால் ஏற்படும் தடைகள் நீங்கி தீர்வுகள் கிட்டும். :)

Edited by nedukkalapoovan

மொரட்டுவ குண்டு வெடிப்பு தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை - இராணுவ ஊடகப் பேச்சாளர்

2008-06-06 5.30 கொட்டாவையிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் மீது மொரட்டுவ பல்கலைக்கழகமருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக உறுதிப்படுத்த நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

நன்றி : www.lankadissent.com

இன்றைய இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்களின் புகைப்படங்களைப் பார்வையிட : http://defence.lk/

Edited by Janarthanan

திணை விதைத்தால் திணைதான் விளையும் நெல் விதைத்தால் நெல்தான் விளையும் சிங்களம் என்ன விதைத்தது அதையே அறுக்கும் யாரைத்தான் குறை சொல்லுவது ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னர் சிங்களப்பகுதிகளில் ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருந்தபோதும் வலி ஏதும் அவர்களுக்கு தெரியாத போதும் புலி என்று சொன்னால் களிசான் ஈரமாகும் அளவிற்கு பயம் இருந்தது.

இப்போது சகலவற்ரையும் நேரடியாக காணும் போது ......?

இந்த குண்டு வெடிப்புக்களை யார் செய்தார்களோ தெரியாது. சிங்கள மக்களும் வலியை உணர வேண்டும்.

இந்த குண்டு வெடிப்புக்களை யார் செய்தார்களோ தெரியாது. சிங்கள மக்களும் வலியை உணர வேண்டும்.

சிங்கள மக்களிற்கு போரின் வலியைக் கொடுப்பதற்காக நடத்தப்படும் தாக்குதலாக இதனைப் பார்கக் வேண்டாம். முற்று முழுதாக எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் எச்சரிக்கைத் தாக்குதல்களாகவே இவை நடத்தப்படுகின்றன. வன்னியில் கிளைமோர் வெடித்தால் கொழும்பில் வெடிக்கும், கண்டியில் வெடிக்கும் தமது மக்களும் சாவார்கள் என்று சிங்கள அரசையும் சிங்களப் படைகளையும் எச்சரிக்கவே இத்தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இதுவரை சிங்கள அரசு இது தொடர்பில் திருந்தியதாகத் தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

name='மின்னல்' date='Jun 6 2008, 07:53 PM' post='416924']

சிங்கள மக்களிற்கு போரின் வலியைக் கொடுப்பதற்காக நடத்தப்படும் தாக்குதலாக இதனைப் பார்கக் வேண்டாம். முற்று முழுதாக எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் எச்சரிக்கைத் தாக்குதல்களாகவே இவை நடத்தப்படுகின்றன. வன்னியில் கிளைமோர் வெடித்தால் கொழும்பில் வெடிக்கும், கண்டியில் வெடிக்கும் தமது மக்களும் சாவார்கள் என்று சிங்கள அரசையும் சிங்களப் படைகளையும் எச்சரிக்கவே இத்தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இதுவரை சிங்கள அரசு இது தொடர்பில் திருந்தியதாகத் தெரியவில்லை

இதனை நான் பெரிதாக்க விரும்பவில்லை . எச்சரிக்கைக்கு நிறைய வழிகள் இருக்கின்றன .(இந்த பதில் உங்களுக்கு மட்டும்) என்றைக்காவது ஒரு நாள் புலத்தில் இருப்பவர்களினாத்தான் எமது ஈழத்திற்கு தடங்கல் என்றொரு செய்தி வரும் . அதுவரை

no8oq.jpg

வாழ்க தமிழீழம்

Edited by குமாரசாமி

இதனை நான் பெரிதாக்க விரும்பவில்லை . எச்சரிக்கைக்கு நிறைய வழிகள் இருக்கின்றன .(இந்த பதில் உங்களுக்கு மட்டும்) என்றைக்காவது ஒரு நாள் புலத்தில் இருப்பவர்களினாத்தான் எமது ஈழத்திற்கு தடங்கல் என்றொரு செய்தி வரும் . அதுவரை

சூழ்ந்து இருக்கும் எதிரியை, பரவாலக்கும் முயற்சி இது தான் என்று, எல்லாம் அறிந்த குமாராசாமி அண்ணைக்கு தெரியாத என்ன? பாரதத்தில் துரோணரும் இந்த ரெக்னிக்கை செய்தார். 2ம் உலக யுத்ததில், ரஸ்யர்களும் இதை செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களிற்கு போரின் வலியைக் கொடுப்பதற்காக நடத்தப்படும் தாக்குதலாக இதனைப் பார்கக் வேண்டாம். முற்று முழுதாக எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் எச்சரிக்கைத் தாக்குதல்களாகவே இவை நடத்தப்படுகின்றன. வன்னியில் கிளைமோர் வெடித்தால் கொழும்பில் வெடிக்கும், கண்டியில் வெடிக்கும் தமது மக்களும் சாவார்கள் என்று சிங்கள அரசையும் சிங்களப் படைகளையும் எச்சரிக்கவே இத்தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இதுவரை சிங்கள அரசு இது தொடர்பில் திருந்தியதாகத் தெரியவில்லை

இதுதான் உண்மை பொறுத்து...பொறுத்துப்பார்த்த

செய்தது யாரெண்டு தெரியமுன்னம் உங்கள் ஊகங்களை விவதமாக்கதேங்கோ...

  • தொடங்கியவர்

இதுவரை நடந்ததுகளை செய்தது யாரெண்டு எப்பவாவது கண்டுபிடிச்சனிங்களே!

பொதுமக்கள் என்று பட்டவர்த்தனமாக தெரிந்தும் தாக்கிற தாக்குதல்களை எப்பவாவது இருதரப்பும் ஒத்துக்கொண்டுள்ளதே?

இராணுவச் சமநிலையிலதான் சமாதானம் என்கிறதுக்குள்ள மனிதாபிமானத்தை தொலைச்சிட்டீங்களே?

இறந்தவர்களையும், வெளிநாட்டிற்கு தப்பியோடினவர்களையும் விட உயிருடன் இருப்பவர்களுக்காக சமாதானம் அவசியம் தேவைப்படுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

அரசு தான் தனது இயலா தன்மையால் பொதுமக்கள் மீது கிளைமோர் தாக்குதல்களை நடத்துகிறது. இதற்கு ஒட்டு குழுக்கள் அரசுடன் சேர்ந்தியங்கி தமது கைங்கரியத்தை சொந்த மக்களிடம் காட்டுகிறார்கள்.

சிங்கள மக்களை கொல்வதில் ஏன் அரசு, ஜே.வி.பி, யூ.என்.பி, வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது. வன்னியில் கிளைமோர் தாக்குதல் நடத்தபட்ட சூட்டோடு சூடாக தெற்கில் பரவலாக அதுவும் கண்டி கொழும்பு என தாக்குதல் அடுத்தடுத்த நாட்களே நடத்தப்படுவது எப்படி?. இப்படி ஒரு வலைப்பின்னல் புலிகளுக்கு இருக்குமேயானால் தெற்கின் கேந்திர இலக்குகளை அடிக்கடி தாக்கியிருப்பார்களே. ஆக அரசு புலிகள் பயங்கரவாதிகள், அவர்கள் அப்பாவி சிங்கள மக்களை தாக்குகிறார்கள் என்ற மாயையை உலகின் முன் காட்ட இப்படியான தாகுதல்களை செய்திருக்கலாம்.எல்லாமே ஒரு யூகமாகவே இருக்க முடியும். அத்தோடு சாத்தியகூறுகளை மட்டுமே ஆராய முடியும்.

சரி, புலிகள் தான் தெற்கில் மக்கள் மீது கிளைமோர் தாக்குதல் நடத்துகிறார்கள் என வைப்போம்.வன்னியில்(இப்போதைக்

கு) அரசால் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு உலகின் எந்த நாடும் கண்டனம் தெரிவிக்காத வேளையில், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டுமென்ற வகையில் தமிழ் மக்களின் வலியை சிங்கள மக்களும் உணர வேண்டும் என்ற வகையில் நடத்தப்பட்டிருக்கலாம்.

இவ்வகையான தாக்குதல்கள் இஸ்ரேலிய மக்கள் மீது கிஸ்புல்லாவால் தொடுக்கப்ப்பட்டதன் மூலம் இஸ்ரேலின் லெபலான் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இது இஸ்ரேலிய அரசின் மீது இஸ்ரேலிய மக்களால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் என்றால் மிகையாகாது.

சிங்கள மக்களும் இவ்வாறான நிலைமைக்கு வரமாட்டார்கள் என்று யாரும் கூற முடியாது. பொருளாதார நெருக்கடி ஒரு புறம், மறு புறம் சிங்கள மக்கள் போரினால் இறப்பது,காயமடைவது, சுதந்திரமாக இயங்கமுடியாமல் போவது போன்றன.

ஏதோ வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்று என்ற வார்த்தை பிரயோகம் வரும்போது கொழும்புக்கு வந்தவர்களையும் தப்பி ஓடிவந்தவர்களாகவே கருத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்று என்ற வார்த்தை பிரயோகம் வரும்போது கொழும்புக்கு வந்தவர்களையும் தப்பி ஓடிவந்தவர்களாகவே கருத வேண்டும்.

சின்ன திருத்தம் நுணாவிலான் தப்பலாம் என்று கொழும்புக்கு ஓடி வந்தவை. வன்னியில 3 இலட்சத்துக்கும் மேல மக்கள் ஒரு வேளை உணவுக்கு நோய்க்கு மருந்துக்கு அல்லாடும் போது வராத மனிதாபிமானம் கொழும்பில் குண்டு வெடிச்ச உடன சாணக்கியனுக்கு பிறக்குது.

வன்னியில, கிழக்கில சோதனைச் சாவடிகளை மூடி இராணுவ நடவடிக்கையில இறங்கி மக்களை குண்டு வீசிக் கொல்லேக்க வராத சமாதான கோசம் கொழும்பில வெடிக்கேக்க.. அதில சிங்களவன் சாகேக்க.. வருகுது. மனிதாபிமானம் பொங்கி வழியுது..! :lol::lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ். சாணக்கியன் தனது கருத்தை அளிப்பார் என நம்புவோமாக.

யாகள வித்துவான்கள் அப்ப இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீங்கள். இண்டைக்கு ஆறுதலா இருந்து இதில எழுதப்பட்டு இருக்கிறது எல்லாத்தையும் ஒவ்வொண்டு ஒவ்வொண்டா வாசிச்சன். அழுகிறதா சிரிக்கிறதா எண்டு தெரிய இல்ல.

யாராவது வந்து வெற்றிக்கிண்ணம் யாருக்கு எண்டு சொல்லுங்கப்பா..

அங்கால உதுக்கையும்போய் வாசிச்சன்... அழுகிறதா சிரிக்கிறதா எண்டு தெரிய இல்ல. நீங்களும் நேரம் இருந்தால் இதுக்க ஒருக்கால்போய் துட்டகைமுனுக்கள், ராஜராஜ சோழனுகள் என்ன சொல்லுதுகள் எண்டு ஒருக்கால் கேளுங்கோ.

www.lankanewspapers.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.