Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமாதேவி சிரிக்கிறாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூமாதேவி சிரிக்கிறாள்

பூமாதேவி சிரிக்கிறாளா அப்பிடியெண்டால் என்னவெண்டு யோசிக்கிறவைக்கு இப்ப உலகத்திலை நடக்கிற இயற்கை அழிவுகளைத்தான் பூமாதேவி சிரிக்கிறாள் எண்டு எழுதினனான்.சீனாவிலை பூகம்பம் பல்லாயிரம்பேர் மரணம். பர்மாவிலை சூறாவளி இரண்டுலச்சம்பேர் மரணம். அமெரிக்கா கலிபோர்ணியாவிலை காட்டுத்தீ பலநூறுபேர் கருகிக்போச்சினம் எண்டு இந்தமாதம் முழுக்க எல்லா செய்திகளிலையும் பாத்து பாத்து பாதிவாழ்க்கை வெறுத்துப்போச்சுது. அப்ப இன்னமும் பாதி இருக்கிதுதானே எண்டு கேக்கக்கூடாது. அது எங்கடை இனத்தின்ரை இழப்பை பாத்து அந்தப் பாதியும் ஏற்கனவே வெறுத்துப் போச்சுது. அதுதான் மொத்தமாய் வெறுத்துப்போச்சுதே பிறகேன் எங்களை வெறுப்பேத்திறாயெண்டு கேக்கிறவைக்கு......அதுதான் என்ரை நோக்கமே யான்பெற்ற இன்பம் பக்கத்து வீட்டுக்காரனும் பெறவேண்டும் எண்டிறதுதான் என்ரை விருப்பம்

..அதாலை இனி விசயத்துக்கு வாறன். இந்த சுனாமி வந்தால்பிறகு உலகத்தின்ரை வழைமையான காலநிலையிலை பெரிய மாற்றங்கள். இவனுக்கென்ன விசரோ மாறி மாறி வாறதுக்கு பேர்தானே காலநிலையெண்டு வியாக்கியானம் கதைக்கக்கூடாது. காலநிலை மாறி மாறித்தான் வாறது ஆனால் ஒரே சீராய்மாறும். இப்ப எப்பிடியெண்டால் போன வருசம் கோடை தொடங்க முதலே ஜரோப்பா எல்லாம் கெழுத்திற வெய்யில். பூமாதேவி சூடாயிட்டாள் அதாலை அவளை குளிர வைக்கவேணுமெண்டு குட்டி குட்டி தாடி வைச்ச பெரிய பெரிய விஞ்ஞானிமாரெல்லாம் ஒரு இடத்திலை சேர்ந்து காலாட்டினபடி கதைச்சுப்பேசி ஒரு அறிக்கையும் விட்டவை. ஆனால் இந்தவருசம் பாத்தால்நான் ஜரோப்பாவிலை பூமாதேவி மட்டுமில்லை எங்களுக்கும் உச்சிகுளிர்ந்து தடிமன்வாற அளவுக்கு மாசி மாசக் கடைசி மட்டும் பனி கொட்டித் தள்ளிச்சிது.ஆனால் இப்ப ஆனி மாதம்.பிரான்சிலை நான் இருக்கிற நீஸ் எண்டிற கடற்கரை நகரத்திலை சாதாரணமாய் கோர வெய்யில் மண்டையை பிளக்கத்தொடங்கியிருக்கும். சனமெல்லாம் வெக்கை தாங்கமுடியாமல் கடலுக்குள்ளையும் கடற்கரையிலையும் படுத்திருக்க வேண்டிய காலம். ஆனால் இந்தவருசம் நிலைமை தலைகீழ்....;

இரண்டு கிழைமையாய் ஒரே மழையும் குளிருமாய் இருக்கு.என்ரை முதலாளியும் ஒவ்வொரு வருசமும் கோடை தொடங்க. கடற்கரையிலை உள்ள தன்ரை உணவுவிடுதியை திறந்து அதைக்கவனிக்க என்னை அனுப்பிறது வழக்கம். அப்பிடித்தான் இந்தவருசமும் வந்து கடையைத்திறந்து போட்டு காவலிருக்க வெறும் கடற்கரைகாத்துத்தான் கடையுக்கை வருகிது. ஒரு சனத்தையும் காணேல்லை. இண்டைக்கு காத்தாலை கொஞ்சம் வெய்யில் வாறமாதிரி இருந்திச்சிது சனமும் கொஞ்சம் கரையிலை ஊலாவத்தொங்கிச்சிது. இந்த வெள்ளைக்காரருக்கு ஒரு பழக்கம் கொஞ்சம் வெய்யிலைக்கண்டால் காணும் உடைனை கடற்கரையிலை ஓடியந்து உடம்பிலை கிறீமை பூசிப்போட்டு படுத்திடுவாங்கள். என்ணெண்டால் சண்பாத்தெடுத்து எங்கடை பிறவுண் கலருக்கு வாறதுக்காம்.வெள்ளையள் என்ரை நிறத்தை பாத்து நீ குடுத்து வைச்சனியெண்டு பெருமூச்சு விடுவாங்கள். அதுவும் வெள்ளைக்காரியள்....சீ....வேண்டாம

் அங்காலை எழுதமாட்டன் பிறகு பேப்பரிலை என்ரை கதை வந்தஉடைனையே வீட்டிலை என்ரைகதை கந்தலாயிடும்.அதாலை விசயத்துக்கு வாறன் இண்டைக்கும் இப்பிடித்தான் கொஞ்சமாவது வியாபாரம் நடக்குமெண்டு கடற்கரையிலை கதிரை மேசையெல்லாத்தையும் அடுக்கச் சொல்லிப்போட்டு அண்டைக்கு என்ன சாப்பாடு செய்யிறது எண்டு குசினிக்காரரோடை கதைச்சுக்கொண்டு நிக்க திடீரெண்டு பெரிய அலையள் அடிக்கதொடங்கிச்சிது.

அங்கை காவலுக்கு நிண்ட முதலுதவிப்படை சிவப்பு கொடியை ஏத்திப்போட்டு எல்லாரையும் கடற்கரையை விட்டு வெளியாலை வரச்சொல்லி விசிலடிச்சுக்கொண்டிருக்க. சனங்களும் அவசரமாய் துண்டைக்காணேல்லை துணியைக்காணேல்லையெண்டு கடற்கரையை விட்டு ஓடத்தொடங்கிட்டினம். இந்தப் பழமொழி சிலநேரம் இந்த இடத்துக்கு பொருந்தாது ஏணெண்டால் எங்கடை கடற்கரையிலை ஒருதரும் ஒரு துண்டு துணியொண்டும் இல்லாமல்தான் படுத்துக்கிடக்கிறவை. ஆண்களோ பெண்களோ கீழை உள்ளாடை கட்டாயம் போட்டிருக்கவேணுமெண்டு சட்டம் போட்டிருக்கிறபடியாலை இடுப்பிலை றிபன் சைசிலை ஒரு துணிஏதாவது ஒட்டியிருப்பினம்.மேலை ஒண்டும் கிடையாது. என்னைப்பாத்து குடுத்து வைச்ச ஆளய்யா எண்டு உங்கடை மனசுக்குள்ளை மணியடிக்கிற சத்தம் கேக்கிது. ஆனால் எனக்கென்னவோ உதுகளை பாத்துப் பாத்து அலுத்தே போச்சுது. சரி அங்காலை அலையடிக்கிது இதுக்குள்ளை இது வேறையா???? நானும் அடுக்கின கதிரையளை தூக்கிறதுக்கிடையிலை ஒரு நாலைஞ்சு கதிரை அலை கடலிலை ஆடியசைஞ்சு போய்க்கொண்டிந்திச்சிது.

பிறகென்ன எல்லாத்தையும் அடிச்சு மூடிப்போட்டு மற்ற வேலைகாரரையும் வந்தவழியைப்பாத்து போகச்சொல்லிப்போட்டு. அடுத்ததாய் முதலாளிக்கு போனடிச்சு நிலைமையை சொல்லவேணுமெல்லோ ?? அதாலை என்ரை குரலையும் சோகச்செய்தி சொல்லுற நிலைமைக்கு கஸ்ரப்பட்டு மாத்தி ஒருமாதிரி அண்டையான் நிலைமையை ஒரு நேரடி வர்ணனையைபோல சொல்லி கடல் இழுத்துக்கொண்டு போன கதிரையளுக்கும் கண்ணீரஞ்சலி செலுத்திப்போட்டு. முதலாளியிட்டை வாங்கிற சம்பளத்துக்கு ஏதாவது வேலை செய்ய வேணுமெல்லோ அதுதான் இதை எழுதிறன். இதை எழுதேக்குள்ளைதான் யோசிச்சன் என்னதான் விஞ்ஞாமெண்டிறாங்கள் கண்டு பிடிப்பு எண்டிறாங்கள் இயற்கையின் மாற்றத்தை கட்டுப்படுத்த இன்னமும் மனிசராலை முடியேல்லை. பயந்து ஓடத்தான் முடியிது. இப்பிடித்தான் நான் படிச்சுக்கொண்டிருந்த காலத்திலை ஒரு சம்பவம். 1979 ம் ஆண்டு ஸ்கைலாப் எண்டொரு செயலிழந்த விண்வெளிக்கலமெண்டு பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது.

அதுவும் இலங்கை இல்லாட்டி இந்தியாவிலைதான் விழப்போகுதெண்டும் விழுகிற இடத்திலை பெரிய பாதிப்பு வருமெண்டும் செய்தியளும் வெளியாகிக்கொண்டிருந்த நேரம். அந்த நேரம் இந்த விண்கலங்கள் இல்லாட்டி இதுபற்றின விஞ்ஞான அறிவுகள் எஙகடை சனத்திட்டை பெரியளவிலை இருக்காத காலகட்டம்;. அப்ப எங்கடை ஊரிலை உள்ளவையெல்லாம் ஸ்கைலாப் விழுந்தால் உலகம் அழிஞ்சிடுமாம் எண்டும் சிலபேர்.. இல்லை உலகத்திலை பாதி அழிஞ்சிடுமாம் எண்டும். சிலபேர் சிறீலங்காவும் இந்தியாவும்தான் அழியுமாம் எண்டும் ஆளாளுக்கு பயப்பிடுறமாதிரி கதை சொல்லிக் கொண்டு திரிஞ்சாங்கள். ஆனால் அதுபற்றின செய்தியளும் தொடர்ச்சியாய் ஊடகங்களிலை வந்துகொண்டிருந்தாலும் வதந்திகளைத்தான் சனம் அதிகமாய் நம்பிச்சினம். சரி உண்மை என்னவெண்டு படிப்பிக்கிற விஞ்ஞான வாத்தியாரிட்டை விளக்கம் கேட்டம். அது ஒரு 79 தொன் நிறையுள்ள விண்கலம். விழுற இடத்திலை தண்ணிவாற அளவு பெரிய பள்ளம் வரலாம் அது விழுற இடத்தைபொறுத்து சேதம் இருக்கும். அதேநேரம் அதிலை இருந்து ஏதாவது இரசாயனக் கதிர்வீச்சுகள் வெளியாலை வந்தால் அது பாதிக்கும் எண்டு விளக்கமும் தந்தார். எங்களுக்கு அந்த நேரம் நெல்லுக்கதிர் மட்டும்தான் தெரியும் இரசாயனக் கதிருகளைப்பற்றி ஒண்டும் தெரியாது.

ஆனால் விளக்கம் சொன்ன வாத்தியார் விஞ்ஞானத்தோடை சமயமும் படிப்பிக்கிறவர் அதலை ஸ்கைலாப் எங்கடை ஊருக்குள்ளை விழக்கூடாதெண்டு பிள்ளையாருக்கு ஒரு நேத்தியும் வையுங்கோடா பெடியள் எண்டிட்டு போட்டார்.இந்தப் பரபரப்பிலை ஒருநாள் " இன்றிரவு ஸ்கைலாப் பூமியை வந்தடையும் ஆனால் அதனை இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் விழ வைக்க முடியுமென்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் " என்று இலங்கை வானொலி அறிவிச்சிது. இந்த நாசமாய் போன விஞ்ஞானியளாலைதானே இவ்வளவு பிரச்சனையெண்டு நினைச்சபடி பிள்ளையாருக்கு நேத்தியும் வைச்சிட்டு தொடர்ச்சியாய் இலங்கை வானெலியிலை ஸ்கைலாப் பற்றி அடிக்கடி போய்க்கொண்டிருந்த விசேட செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தன்.அண்டை

Edited by sathiri

எண்டாலும் உங்களுக்கு குசும்புதான்,

கிளாலி கடலில சண்டை நடக்கும் ஆரம்ப காலத்திலை இப்பிடித்தான் தலைக்கு மேலாலை எல்லாம் சிவப்பு சிவப்பா போகும், நான் இருந்த படகிலை இருந்த ஒருவர் எழும்பி நிண்டு "அரோகரா பாருங்கப்பா முருகனின் திருவருளை" எண்று சாமி கும்பிட்டத்து தான் நினைவிலை வந்தது.

ஸ்கைலாப் எண்டது வால் நச்சத்திரமா.?

அது சரி சாத்திரி நீங்க ஒரு பொறுத்த நேரத்தில உதவி செய்யக்கூடிய நிலயில் இருக்கிறியள். உண்மையைச் சொல்லப்போனா எனக்கும் இந்த 'றீ மிக்ஸ்" பண்ணின தேவாரம் தேவைப்படுகிது. ஏனெண்டு கேட்காதீங்க அது ஒரு ரகசியம்.

அனுப்பி விட்டீங்கண்டா உதவியாயிருக்கும். எதிர்பார்த்துக்கொண்டிருப்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அந்தக்கதிரைகள் தானாக கடலுக்கை போனதோ இல்லை அடுக்கிற பஞ்சியில நீங்களே தூக்கிப்போட்டிங்களோ :lol: கன காலத்துக்கு பின் மங்களகரமாக கதையை முடித்து இருக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார் உங்கடை கதை நல்லாய் இருக்கு :)

வெள்ளைக்காரியளுக்கு எண்ணை பூசின அனுபவம் நிறைய இருக்கு போலை கிடக்கு :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் உங்களுக்கு குசும்புதான்,

கிளாலி கடலில சண்டை நடக்கும் ஆரம்ப காலத்திலை இப்பிடித்தான் தலைக்கு மேலாலை எல்லாம் சிவப்பு சிவப்பா போகும், நான் இருந்த படகிலை இருந்த ஒருவர் எழும்பி நிண்டு "அரோகரா பாருங்கப்பா முருகனின் திருவருளை" எண்று சாமி கும்பிட்டத்து தான் நினைவிலை வந்தது.

ஸ்கைலாப் எண்டது வால் நச்சத்திரமா.?

பொய்கை கதையை ஒழுங்காய் படிக்கிறேல்லையோ ஸ்கைலாப் எண்டது ஒரு விண்கலம் :o:o

அது சரி சாத்திரி நீங்க ஒரு பொறுத்த நேரத்தில உதவி செய்யக்கூடிய நிலயில் இருக்கிறியள். உண்மையைச் சொல்லப்போனா எனக்கும் இந்த 'றீ மிக்ஸ்" பண்ணின தேவாரம் தேவைப்படுகிது. ஏனெண்டு கேட்காதீங்க அது ஒரு ரகசியம்.

அனுப்பி விட்டீங்கண்டா உதவியாயிருக்கும். எதிர்பார்த்துக்கொண்டிருப்

பொய்கை கதையை ஒழுங்காய் படிக்கிறேல்லையோ ஸ்கைலாப் எண்டது ஒரு விண்கலம் :rolleyes::rolleyes:

ஹி ஹி. :lol:

எங்கட வழமையான கதாசிரியர்கள் கதை திருப்பத்துக்கு வரும் சாமானை அரைப்பக்கத்துக்கு விளக்கம் கொடுக்கிறவை. :) நான் நீங்கள் எழுதின ஒரு வரி விளக்கத்தை தவற விட்டதாலை குழம்பீட்டன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் உங்கடை கதை நல்லாய் இருக்கு :lol:

வெள்ளைக்காரியளுக்கு எண்ணை பூசின அனுபவம் நிறைய இருக்கு போலை கிடக்கு :lol::lol:

ஒய் கு.சா இப்பிடியா பல பேருக்கு முன்னாலை சத்தமாய் கேக்கிறது மெதுவாய் காதுக்குள்ளை கேளும் எண்ணை பூச உமக்கும் ஒரு சந்தர்ப்பம் வாங்கித்தாறன்.அதை விட்டிட்டு வயித்தெரிச்சல் படாதையும். :):rolleyes: கருத்து சொன்ன சஜீவனுக்கும் நன்றிகள். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹி ஹி. :lol:

எங்கட வழமையான கதாசிரியர்கள் கதை திருப்பத்துக்கு வரும் சாமானை அரைப்பக்கத்துக்கு விளக்கம் கொடுக்கிறவை. :) நான் நீங்கள் எழுதின ஒரு வரி விளக்கத்தை தவற விட்டதாலை குழம்பீட்டன். :lol:

ஓமோம் காசுகுடுத்து சினிமாப்படம் பாக்கேக்கை இந்தப்புத்தி எங்க போச்சுதாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பூமாதேவி சிரிக்கிறாளோ இல்லையோ எங்களச் சிரிக்கவைக்க உங்களால் முடிகிறது நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூமாதேவி சிரிக்கிறாளோ இல்லையோ எங்களச் சிரிக்கவைக்க உங்களால் முடிகிறது நன்றிகள்

கண்மணியக்கா கடைக்கண் பார்வை பதித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றிகள். நீங்களே சிரிச்சிருக்கிறியள் அந்த ஸ்கைலாப் பற்றின ஞாபகத்தை நீங்களும் எங்களோடை பகிர்ந்தால் என்ன ?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி அந்த அரசியல்வாதி நம்ம வினோதன் அண்ணலோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி அந்த அரசியல்வாதி நம்ம வினோதன் அண்ணலோ

:lol::lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி மாமா நல்ல கதை. கதையை நகைச்சுவையுடன் எழுதிற உங்கள் திறமையே தனி. அது சரி ஸ்கைலாப் பிறகு எங்கை விழுந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி மாமா நல்ல கதை. கதையை நகைச்சுவையுடன் எழுதிற உங்கள் திறமையே தனி. அது சரி ஸ்கைலாப் பிறகு எங்கை விழுந்தது.

என்ரை தலையிலை எண்டு சொல்லத்தான் ஆசை ஆனால் அது இந்து சமூத்திரப் பகுதியிலை விழுந்தது. :lol::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நான் குரும்பைத் தேரி இழுத்த காலத்தில ஸ்கைலாப் என்று கதை அடிபட்டதுதான் ஞாபகம் இருக்கு...

அந்தக் காலத்தில சனங்கள் எதெதுக்கோ எல்லாம் ஆரவாரப்பட்டார்கள் இப்போது...........

அட சாத்திரி அங்கிள் நீங்கள் பெற்ற இன்பம் பக்கத்து வீட்டுகாரனும் பெற வேண்டும் எண்ட உங்கன்ட நல்ல மனசை நினைக்கையில் நேக்கு அழுறதோ,சிரிக்கிறதோ எண்டு தெரியல :o ..நானும் உந்த பூமா தேவியோட சேர்ந்து சிரிக்கிறன் எண்டா பாருங்கோவன்.. :o

எல்லாம் சரி உங்கன்ட முதாலாளி உங்களை நம்பி கடையை தாறார் அவரை சொல்லனும் கடசியா அவரும் தேவாரத்தை "ரீமிக்சில" தான் பாடனும் :D ..அந்த பழனியில இருக்கிற முருகனே ஒரு துண்டை தான் கட்டி கொண்டிருக்கிறார் உந்த வெள்ளைகள் கடற்கரையில சின்ன துண்ட கட்டினா என்னவாச்சு உதை எல்லாம் கண்டு கொள்ள கூடாது சொல்லிட்டன் பேசாமா பார்த்திட்டு இருந்திட வேண்டும்.. :o

சாத்திரி அங்கிள் வழமை போலவே சிரிக்க வைத்திட்டார்..எங்க கடசியா மனிசன் அழவைக்க போதோ எண்டு யோசித்து கொண்டிருந்தனான் கடவுளே எண்டு அப்படி ஒண்டும் நடக்கல.. :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நான் குரும்பைத் தேரி இழுத்த காலத்தில ஸ்கைலாப் என்று கதை அடிபட்டதுதான் ஞாபகம் இருக்கு...

அந்தக் காலத்தில சனங்கள் எதெதுக்கோ எல்லாம் ஆரவாரப்பட்டார்கள் இப்போது...........

உண்மைதான் சகாரா அப்பவெல்லாம் கண்ணாலை காணாத ஸ்கைலாப்புக்கு பயந்த சனம் இப்ப கண்ணுக்கு முன்னாலை கிபீர்.மிக் வந்து குத்திப்போட்டு எழும்பி போக சனமும் படுத்து எழும்பிட்டு தங்கடை அடுத்த வேலையை பாக்கப் போகினம் என்ன கால மாற்றம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட சாத்திரி அங்கிள் நீங்கள் பெற்ற இன்பம் பக்கத்து வீட்டுகாரனும் பெற வேண்டும் எண்ட உங்கன்ட நல்ல மனசை நினைக்கையில் நேக்கு அழுறதோ,சிரிக்கிறதோ எண்டு தெரியல :unsure: ..நானும் உந்த பூமா தேவியோட சேர்ந்து சிரிக்கிறன் எண்டா பாருங்கோவன்.. :unsure:

எல்லாம் சரி உங்கன்ட முதாலாளி உங்களை நம்பி கடையை தாறார் அவரை சொல்லனும் கடசியா அவரும் தேவாரத்தை "ரீமிக்சில" தான் பாடனும் :D ..அந்த பழனியில இருக்கிற முருகனே ஒரு துண்டை தான் கட்டி கொண்டிருக்கிறார் உந்த வெள்ளைகள் கடற்கரையில சின்ன துண்ட கட்டினா என்னவாச்சு உதை எல்லாம் கண்டு கொள்ள கூடாது சொல்லிட்டன் பேசாமா பார்த்திட்டு இருந்திட வேண்டும்.. :lol:

சாத்திரி அங்கிள் வழமை போலவே சிரிக்க வைத்திட்டார்..எங்க கடசியா மனிசன் அழவைக்க போதோ எண்டு யோசித்து கொண்டிருந்தனான் கடவுளே எண்டு அப்படி ஒண்டும் நடக்கல.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு என்ரை முதலாளிக்கு கொஞ்ச தேவாரம் சொல்லிக் குடுக்கத் தொடங்கிட்டன். அனேகரின் வேண்டு கோளுக்கு இணங்க என்னுடைய நகைச்்சுவைக் கதைகளை இனிமேல் முடிந்தளவு சோகத்தில் முடிப்பதில்லையென்று முடிவெடுத்்திருக்கிறன். :)

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்களின் அனுபவங்களை சுவைபடப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சாத்திரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கந்தப்பு :)

நல்லா கெழப்புறாங்கப்பா பீதியை...

ஸ்கைலாப் பத்தி எரியுதோ இல்லையோ ஆனால் பனை ஒலையை கொழுத்தின அண்ணை எங்கை இருக்கிறார் எண்டு ஒருக்க சொல்லுங்கோ...

பனை ஈழத்தின் வழம் அதை கொழுத்தியவனை கொழுத்துவோம்... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா கெழப்புறாங்கப்பா பீதியை...

ஸ்கைலாப் பத்தி எரியுதோ இல்லையோ ஆனால் பனை ஒலையை கொழுத்தின அண்ணை எங்கை இருக்கிறார் எண்டு ஒருக்க சொல்லுங்கோ...

பனை ஈழத்தின் வழம் அதை கொழுத்தியவனை கொழுத்துவோம்... :huh:

என்ன தயா சாத்திரியை பிடித்து இரண்டு போட்டால் சொல்ல போகிறார் :wub::lol::lol:

பனைஓலையை யார் எரித்தது என்று

  • கருத்துக்கள உறவுகள்

அட அவர்தான் தெளிவாய்ச் சொல்லுறாரே அண்ணன்தான் எரித்தென்டு! பிறகென்ன!!!

நல்ல கதை சாத்திரி. நன்றி!!!

அக்காலத்தில் ஸ்கைலாப் எங்கே விழப்போகிறது என்பது பற்றியே எல்லோரினதும் பேச்சாக இருந்தது. சனம் இலங்கைக்கு மேல் வந்து விழப் போகிறது என்றும் கதைத்தார்கள். வானொலியில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. பிறகு வடபகுதியில் விழமாட்டுது, ஆனால் கண்டிப்பக்கம் விழுந்தாலும் விழும் என்று செய்திகள் வர, எங்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. சிங்களவனுக்கு வேணும் என்றும் சிலர் கதைத்தார்கள். சிலர் சிங்களவனும் பாவம் தானே என்றும் கதைத்தார்கள். பிறகு அவுஸ்திரெலியாவுக்கு பக்கத்தில் உள்ள சமுத்திரத்தில் விழுந்ததாகவும், சிலர் அவுஸ்திரெலியாவில் விழுந்து ஒரு மாடு ஒன்று செத்ததாகவும் சொன்னார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.