Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)

Featured Replies

  • தொடங்கியவர்

தூயா ....இடைவெளியை நிரப்பி உங்கள் பதில் கிடைத்தது நன்றி :wub::lol:

கிடைக்கலையோன்னு யோசிட்டு இருந்தேன்.. இப்ப தான் நிம்மதி ;)

  • Replies 235
  • Views 28.2k
  • Created
  • Last Reply

கிடைக்கலையோன்னு யோசிட்டு இருந்தேன்.. இப்ப தான் நிம்மதி ;)

:wub:அட அப்படி என்னங்கோ அதிலை இரகசியம். எனக்கும் தனிமடல் போடுங்கோ பார்ப்போம். :lol:

  • தொடங்கியவர்

:wub:அட அப்படி என்னங்கோ அதிலை இரகசியம். எனக்கும் தனிமடல் போடுங்கோ பார்ப்போம். :lol:

சின்னக்குட்டி நான் அனுப்பியதை உங்களுக்கு அனுப்புவார்.. ;) கிகிகிகி

சின்னக்குட்டி நான் அனுப்பியதை உங்களுக்கு அனுப்புவார்.. ;) கிகிகிகி

:wub:இது ஏதோ சின்னக்குட்டியையும், என்னையும் வைத்து காமெடி, கீமெடி பண்ணுற மாதிரிக் கிடக்கு. :lol:

  • தொடங்கியவர்

QUOTE(தூயா @ Aug 14 2008, 01:03 AM) *

சின்னக்குட்டி நான் அனுப்பியதை உங்களுக்கு அனுப்புவார்.. ;) கிகிகிகி

rolleyes.gif இது ஏதோ சின்னக்குட்டியையும், என்னையும் வைத்து காமெடி, கீமெடி பண்ணுற மாதிரிக் கிடக்கு. unsure.gif

மாதிரியெல்லாம் இல்லை...அதே தான் ;)

யக்கோவ் ...நன்னாய்த்தான் ..கப்சா விட இப்ப பழகிட்டீங்க...

வசம்பு சார்.......என்னங்க ..நீங்க இப்படி அப்பிராணியாய் ஈக்கீங்களே... :)

மாமோவ் ...சின்னக்குட்டி கிழத்துக்கும் ஊங்களுக்கும் தூயா அம்மா நன்னா கயிறு விடுறா கண்டுக்குங்க... :wub:

பகுதி 2

அதில் எனக்கு ஒஸ்திரேலியாவில் ஒரு அருமையான அன்பான சகோதரனும், ஒரு அருமையான Mentor என குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு நண்பனும், என்னையும் மதித்து யோசனையெல்லாம் கேட்கும் ஒரு நண்பனும் கிடைத்துள்ளனர். அவர்களை பற்றியும் சில வார்த்தைகள் எழுதவுள்ளேன்.

எனக்கு இங்கிலிசு பெரிசாத் தெரியாது. Mentorல் என்ன ? மெண்டலா?

  • தொடங்கியவர்

யக்கோவ் ...நன்னாய்த்தான் ..கப்சா விட இப்ப பழகிட்டீங்க...

வசம்பு சார்.......என்னங்க ..நீங்க இப்படி அப்பிராணியாய் ஈக்கீங்களே... :huh:

மாமோவ் ...சின்னக்குட்டி கிழத்துக்கும் ஊங்களுக்கும் தூயா அம்மா நன்னா கயிறு விடுறா கண்டுக்குங்க... :wub:

இதில ரொம்ப கொடுமை என்னவென்றால்,,, இவர்கள் இருவரும் புரியாதது போல் நடிப்பதை நம்பி நீங்கள் சொல்வது தான்..கிகிகிகிகி

  • தொடங்கியவர்

எனக்கு இங்கிலிசு பெரிசாத் தெரியாது. Mentorல் என்ன ? மெண்டலா?

எனக்கு தமிழில் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுவார்கள் என நம்புவோம்.

மெண்டல் என்ற ஆங்கிலம் மட்டும் நல்லா தெரியுதே ;)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பகுதி 12

இந்த பகுதியிலும் யாழ் எனக்கு தந்த அண்ணன் ஒருவரை பற்றி எழுத போகின்றேன். யாழில் இவரை சந்தித்த பின்னர், புகைப்பட கருவியை எங்கு பார்த்தாலும் இவரின் ஞாபகம் மறக்காமல் வந்துவிடும். யாரை பற்றி எழுத போகின்றேன் என கண்டுபிடித்திருப்பீர்களே! நீங்கள் நினைப்பது சரி தான். இப்பகுதியில் எங்கள் புகைப்படக்காரர் குளக்காட்டான் அவர்களை பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்ள போகின்றேன்.

cartoon_the_jetsons_elroy.gif

எனக்கு மிகவும் பிடித்த அவருடைய கையெழுத்து படம்:

good6qs.jpg

இணைந்தது: 30-November 04

அதிகம் எழுதியது: கவிதை/பாடல்

பிடித்தது: படம் எடுப்பது

பிடிக்காதது: ஈழத்து கடைகளை இந்தியன் கடைகள் என மக்கள் அழைப்பது

இனி அறிமுகம்: இன்றிலிருந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் யாழில் காலடி எடுத்து வைத்த குளம்ஸை இங்கு பாருங்கள். எத்தனை பேருக்கு தமிழில் எப்படி எழுதுவது என சொல்லி தந்தவரே கேட்டிருக்காரே என்பது அதிசயமான விடயம் தான். ( இரண்டாவது மறுமொழியிலேயே தமிழில் எழுதிவிட்டார் என்பது கூடுதல் செய்தி. )ஆனால் தான் கற்றதை மற்றவர்களுக்கு சொல்வது ஆரோக்கியமான விடயம் தானே. இதில் பெரிய பகிடி என்னவென்றால், தமிழில் எப்படி எழுதுவது என குளம்ஸ் கேட்டதிற்கு; எங்கள் சின்னப்பு சொன்ன பதில் "கையால தான் எழுதுவது" :)

வந்த புதிதில் குளம்ஸ் பதிந்த கருத்துக்களையும், ஆரம்பித்த பதிவுகளையும் பார்த்தாலே அவருக்கு தாய்நாட்டில் உள்ள அன்பு இலகுவாக புரிந்துவிடும். தங்கள் கருத்தை கூறும் போது சிலர் சத்தமாக சொல்வார்கள். சிலர் மெதுவாக சொல்வார்கள். இதில் ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்வது தான் மற்றவர்களுக்கு புரியும். இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர் குளம்ஸ் என நான் சொல்வேன். ஆர்ப்பாட்டமில்லாத, ஆணித்தரமான கருத்துக்களுக்கு சொந்தக்காரன்.

குளம்ஸின் சமையல் மீதான ஈடுபாடு எப்படியானது என்பது அனைவரும் அறிந்த விடயம். தற்போது கூட அடிக்கடி தான் சமைக்கும் உணவுகளை பற்றி எழுதிவருகின்றார். அவரது வலைப்பூவிலும் பதித்து வருகின்றார். வந்த புதிதிலேயே மைக்ரோவேவில் புட்டு அவிப்பது எப்படி என பயனுள்ள ஒரு செய்முறையை யாழுக்கு தந்திருக்கின்றார். தொடர்ந்து கோதுமை மா ரொட்டி செய்வது எப்படி என சொல்லி தந்திருக்கார். அந்த காலத்தில் தான் வீட்டை விட்டு வெளியேறி வெளிநாடிற்கு சென்றிருப்பார் போல. தான் பெற்ற இன்பத்தை இவ்வையகத்திற்கும் தந்திருக்கார். தொடர்ந்து வந்த கொத்தமல்லி சம்பலை பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும் என என் மனம் அடம்பிடிக்கின்றது. காரணம் இந்த செய்முறையை பார்த்து நானும் முயற்சித்துள்ளேன். அருமையான சுவைதான். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால், குளம்ஸின் செய்முறைகளில் பெரும்பாலானவை ஈழத்து உணவுகள் தான். எமது உணவு செய்முறைகளை இணையத்தில் காண்பது எளிதல்லவே.

எனக்கு மிகவும் பிடித்த மரவள்ளிகிழங்கு பொரியல் செய்முறை.

புகைப்படகாரன் என சொல்லிவிட்டு அதை பற்றி எதுவுமே சொல்லலையே என எனக்கே தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஆகவே மற்றையதை சற்று நேரம் நிறுத்தலாம். குளம்ஸின் படம் எடுக்கும்/ படம் ரசிக்கும்/ படம் போடும் சேவை ஆரம்பித்த பதிவு இது தான். இந்த பதிவிற்கு மறுமொழிகள வரவில்லை. ஆனால் அடுத்த பதிவை பாருங்களேன் எத்தனை மறுமொழிகள் கிடைத்திருக்கென. அடுத்து வந்த ஒரே இடம் வேறு வேறு காலத்தில் பதிவு யாழில் மிகவும் பிரபலமானது.

சமூகம், விஞ்ஞானம் போன்ற பகுதிகளிலும் ஆர்வமுள்ள குளம்ஸ் எழுதிய செவ்விளநீர் பதிவு நிச்சயம் காலம் எத்தனை கடந்தாலும் படிக்க கூடிய ஒன்று. யாழில் குருவிபபாவை அடுத்து சுகாதார/விஞ்ஞான தகவல்கள் தருவதில் வல்லவர் குளம்ஸ் தான். அதே போல ஊர் நினைவுகளை கொண்டுவரும் பதிவுகள் பல குளம்ஸிடம் இருந்து அடிக்கடி வரும். அப்படி வந்த பதிவொன்று தான்; ஞாபகம் வருதே ஞாபகம் வருதே. ஆண்பூ/பெண்பூ பார்ப்பதெப்படி என சொல்லிதந்ததை பாருங்கள். இதைப் போலவே எங்களுக்குள் இருக்கும் சில நடிகர்களை அறிமுகப்படுத்திய பதிவு: நாம் பங்குபற்றிய நடகங்கள்

உணவு செய்முறை தருவதோடு நிற்காமல் எப்படியான உணவு வகைகளை உண்ணலாம் என சொன்ன பதிவு: நல்வாழ்வுக்கான உணவு கூம்பகம்/பிரமிட். பொதுவாக நான் சமைத்து வீட்டில் உள்ளவர்களை சாப்பிட வைத்து தான் பரிசோதனை செய்வேன். ஆனால் குளம்ஸ் தைரியமாக ஐரோப்பியரையெல்லாம் பரிசோதனை கூட எலியாக்கிய கதை தெரியுமா? இங்கே போய் பாருங்களேன். உடல்நலத்திற்கு ஏற்ற பாகற்காய் கறியெல்லாம் குளம்ஸ் செய்வார் என்றால் பாருங்களேன்!

பொதுவாக செய்முறை எழுதினாலே சிலரின் சாபத்திற்கு உள்ளாவோம். நாங்கள் தனிய இருந்து கஸ்டபடுறோம், எங்களை வெறுப்பேற்றவே விதவிதமா சமைக்கிறீர்களா என நக்கலடிப்பார்கள். அதிலும் குளம்ஸ் எப்படி பெரிய சாபத்திற்கு ஆளாகியுள்ளார் என பாருங்கள்: ஒரு தடவை என்றாலும் பரவாயில்லை, இரண்டாவது தரமும் லட்டை காட்டி பலரை வாயூற வைத்துள்ளார்.

பயணகுறிப்புகள் எழுதும் சம்பிரதாயத்தை ஆரம்பித்து வைத்த ஒரு சிலரில் குளம்ஸும் ஒருவர் என சொல்லலாமா?: லக்ஸம்பேர்க் பயண காட்சிகளும் குறிப்புக்களும். யாழ் உறவுகள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிய நாள்: தொரந்தோ (ரொறன்ரோ) வில் இரு சந்திப்புக்கள்

இத்தனை பதிவுகள் எழுதியிருந்தாலும் குளக்காட்டன் என்ற பெயர் யாழில் பொறிக்கப்பட காரணமாக இருந்த பதிவு இது தான்: நமது கமராவுக்குள் சிக்கியவை. இப்பதிவு 50 பக்கங்களை வெற்றிகரமாக கடந்த பின்னர் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட பதிவு: இவை நாங்கள் எடுத்த ஒளிப்படங்கள், ஒளிப்படம்.

யாழில் இணைந்த நாள் முதல் குளம்ஸை எனக்கு தெரியும். மதன் அண்ணாவுக்கு பின்னர், என் புலம்பல்களை அதிகம் கேட்டது குளம்ஸாக தான் இருக்கும். என்ன சொன்னாலும் பொறுமையாக கேட்கும் நல்ல குணம். முன்னர் கூறியது போல குளம்ஸுடனும் தினம் பேசி, தினம் எழுதும் பழக்கம் கிடையவே கிடையாது. தினம் யாழுக்கு வரும் போது குளம்ஸ் வந்திருக்காரா என பார்ப்பேன். அவ்வளது தான். (சிலரை இப்படி பார்ப்பதுண்டு) வலைப்பூ உலகத்திலும் எனக்கு குளம்ஸ் பெரிய பலம். சில சமயங்களில் அண்ணன் ஒருவர் பேசாவிடினும், கூட இருப்பது மிக முக்கியமாகின்றது.

நான் எந்தவொரு தொடர் எழுதும் போதும் சரி, நகைச்சுவைக்காக எழுதும் போதும் சரி; குளம்ஸ் பற்றி எழுதினால் அதை ஒரு போதும் தப்பாக எடுக்க மாட்டார். நகைச்சுவைக்காக நான் பலமுறை எழுதியதுண்டு. யாழில் குளம்ஸ் போல இன்னும் சிலர் உள்ளனர். அவர்களில் பெயர்களை என் எழுத்தில் எடுத்தால் என்னை ஊக்கப்படுத்துவார்களே தவிர, கோபப்பட மாட்டார்கள். என் எழுத்துக்களுக்கு மறக்காமல் ஊகம் தருபவர் என்பதை நான் சொல்லி தான் யாழ் அறிந்து கொள்ள வேண்டும் என்றில்லை தானே.

அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, ரசனை அதிகம் கொண்ட குளம்ஸ் அண்ணா என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். என்றும் போல் யாழிலோடு இணைந்திருக்க வேண்டும். என்னோடு சேர்ந்த்து நீங்களும் குளம்ஸை வாழ்த்துங்கள் உறவுகளே...

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டானை பற்றி நேக்கு அவ்வளவா தெரியாது. ஆனா..... அவர் எடுக்கும் படங்களை பிடிக்கும்

குளக்காட்டானின் ஆர்ப்பாட்டமில்லாத கருத்துக்களும் அவர் எடுத்த அழகான புகைப்படங்களும் என்னையும் கவர்ந்தவை தான். அருமையான ஒரு கருத்தாளர், ஆனால் தற்போது களத்தில் காண்பது அரிதாகவேயுள்ளது. அவர் பணிகள் மேன்மேலும் சிறப்படைய மனமார வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

குளைக்காட்டான் யாழில் எப்படி அமைதியாக கருத்துக்களை வைப்பாரோ அப்படியேதான் நேரிலும் இருப்பார்.யாழ்கள உறவொன்றினை நான் முதன் முதலில் சந்தித்தது குளைக்காட்டானைத்தான்.அவரைப் பார்க்கப் போன பொழுது அவர் அவித்துத்தந்த புட்டு இப்பொழுதும் நினைத்தால் ருசிக்கிறது. ஆனால் அவர் மைக்றோவனில் அவிக்கவில்லை றைஸ்குக்கரில் அவித்துத் தந்தார்.யாழ் மட்டுமல்ல ஆரம்பகால வலைப்பதிவுகளையும் செய்து வந்தார். நான் கூட வலைப்பதிவு செய்வது பற்றி அவரிடம் உதவிகள் கேட்டுத்தான் என்னுடைய அவலம் வலைப்பதிவை தொடங்கினேன்.இப்ப எங்கை தும்படிக்கிறாரோ தெரியேல்லை???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் கருத்துக்களையும் , ஆக்கங்களையும் விரும்பிப்படிப்பேன்.

குளக்காட்டானின் கையெழுத்து படத்தை பார்க்கும் போது சாவகச்சேரி இந்துவில் படித்திருப்பார் என நினைக்கின்றேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டான் இப்போது யாழ் களத்துக்கு வருவது குறைவு ஏன் என்று தெரியாது .

இவரை துயர் பகிர்வோம் பகுதியில் அண்மையில் மறைந்த சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னை நாள் அதிபர் பூலோகசிங்கம் வெற்றிவேல் அவர்களுக்கு இரங்கல் கருத்து எழுதியவர் என்று நினைக்கின்றேன் .

:) தூயா நான் கூட மறந்த என்னுடைய பல பதிவுகளை மீண்டும் தேடி எடுத்து நினைவூட்டியிருக்கிறீர்கள். நன்றி.

வசம்பு, கறுப்பி, சாத்திரியார், குமாரசாமி, தமிழ்சிறி உங்கள் அன்புக்கு நன்றி.

சாத்திரியார் இன்னும் புட்டையும், கடலை கறியையும் மறக்கேல்லையோ? :wub:

குமாரசாமி நீங்கள் நினைக்கிறது சரி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

குளைக்காட்டான், நலமே நாடுக , புரிக , ஒளிர்க என்ற லோகோவை பார்த்தவுடேனேயே தெரிந்து விடும்? எனது அயல் வீட்டுக்காரரான திரு. பூ.வெற்றிவேலு அவர்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

குளைக்காட்டான், நலமே நாடுக , புரிக , ஒளிர்க என்ற லோகோவை பார்த்தவுடேனேயே தெரிந்து விடும்? எனது அயல் வீட்டுக்காரரான திரு. பூ.வெற்றிவேலு அவர்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

நுணாவிலான் , உங்களுக்கு அயல் வீட்டிலா காலம் சென்ற வெற்றிவேல் அவர்கள் இருந்தவர் . அது நான் சின்னனிலை பழகிய இடமெல்லோ ......

பாருங்கள் உலகம் எவ்வளவு சிறியது என்று .

  • கருத்துக்கள உறவுகள்

குளக்கட்டானின் படங்கள் சிலவற்றை பார்த்து ரசித்துள்ளேன். தொடரட்டும் உங்கள் பணி நல் வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<_< தூயா நான் கூட மறந்த என்னுடைய பல பதிவுகளை மீண்டும் தேடி எடுத்து நினைவூட்டியிருக்கிறீர்கள். நன்றி.

வசம்பு, கறுப்பி, சாத்திரியார், குமாரசாமி, தமிழ்சிறி உங்கள் அன்புக்கு நன்றி.

சாத்திரியார் இன்னும் புட்டையும், கடலை கறியையும் மறக்கேல்லையோ? :lol:

குமாரசாமி நீங்கள் நினைக்கிறது சரி தான்.

எத்தினையாம் ஆண்டு எந்த வகுப்பிலை தடக்குப்பட்டனியள் எண்டு சொன்னியளண்டால் நானும் வாய்ப்பாடு வைச்சு கூட்டி கழிச்சு பெருக்கி உங்களை ஆரெண்டு கண்டுபிடிக்கலாமெல்லே :D

  • கருத்துக்கள உறவுகள்

தூயா எழுதியது போலவே குளக்காட்டான் நல்ல கருத்தாளன்.

எவர் தவறு என்று பக்கம் சார்ந்து நோக்காது.. காணும் தவறுகளை துணிந்து சுட்டிக்காட்டி வாதிடக் கூடியவர்.

உணவு பற்றிய அறிவியல் ஆகட்டும் அவியல் ஆகட்டும் இரண்டிலும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் யாழ் களத்தில்..!

அவர் கண்ணால் பார்த்து கமராவால் கிளிக் செய்தவை ரசிக்கக் கூடியவை. <_<

Edited by nedukkalapoovan

இந்தமாதிரி நல்ல அண்ணாக்கள் யாழிலை இருந்திருக்கினம் .இப்ப சாத்தான்கள் பல இருக்கின்றன. தூயா அக்கா உங்கள் பயணத்தை தொடருங்கள். ஆனால் நாட்களை இழுத்தடிக்காமல் விரைவாக அடுத்த அண்ணா பற்றிய விபரங்களை தாருங்கள்

புத்தன் நன்றி.

எத்தினையாம் ஆண்டு எந்த வகுப்பிலை தடக்குப்பட்டனியள் எண்டு சொன்னியளண்டால் நானும் வாய்ப்பாடு வைச்சு கூட்டி கழிச்சு பெருக்கி உங்களை ஆரெண்டு கண்டுபிடிக்கலாமெல்லே :D

என்னத்தை கண்டு பிடிக்க போறியாள்.... ... நான் படிச்சு முடிச்சு பள்ளிகூடத்தாலை வேளிக்கிட்டது 90 களின் இறுதி பகுதி. அதிபர் வெற்றிவேலு அவர்கள் ஓய்வுபெற்ற பின் தான் பள்ளியில் இணைந்தேன். நீங்கள் அதிபர் வெற்றிவேலு அவர்கள் காலத்தில் படித்திருந்த்தால் அது 70 ஆம் 80 ஆம் ஆண்டுகளில். என்னுடைய சகோதரங்கள் தடக்குபட்டாலும் தடக்கு படுவினம் உங்களோட...................... :D சரி கண்டை தேடி பிடியுங்கோ............ :lol:

நன்றி நேடுக்கால போவான், மற்றும் சோழன்.

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

உணவு பற்றிய அறிவியல் ஆகட்டும் அவியல் ஆகட்டும் இரண்டிலும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் யாழ் களத்தில்..!

100% உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

குளம் பற்றிய தகவலுக்கு நன்றிகள் தூயா.குளக்காட்டனுக்கு" ஈழத்து கடைகளை இந்தியன் கடைகள் என மக்கள் அழைப்பது" பிடிக்காதது என்று எழுதியிருக்கிறீர்கள். இது பற்றிய கருத்துக்களை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். உங்களால் இதனை இங்கே இணைக்க முடியுமா?. எனென்றால் எனக்கும் இவ்வாறு எம்மவர்களின் கடைகளை இந்தியர்களின் கடைகள் என்று அழைப்பது பிடிப்பதில்லை. இவ்வாறே யாழ்கள உறுப்பினர் இரகுநாதனும் எம்மவர்களை இந்தியர்கள் என்று அழைப்பது பிடிப்பதில்லை என்று கருத்து ஒன்றினை ஊர்புதினம் பகுதியில் எழுதியிருந்தார்.

சிட்னியிலும் பல எம்மவர்களின் கடைகளை இந்தியாக் கடைகள் என்றே விளம்பரங்களில் எழுதுகிறார்கள். இந்தியர்களும் அது தங்களின் கடைகள் என்று அவுஸ்திரெலியாவில் இந்தியர்கள் என்ற தலைப்பில் எம்மவர்களின் கடைகளையும் சேர்த்து வெளியீடுகளில் வெளியிடுகிறார்கள். குளக்காட்டனின் புகைப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பதுண்டு.

குளக்காட்டான் யாழில் இணைத்த சில என்னைக் கவர்ந்த பயனுள்ள இணைப்புகள் சில

http://www.yarl.com/forum/index.php?showtopic=5041

http://www.yarl.com/forum/index.php?showtopic=6485

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.