Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவில் 15 கடற்படையினர் பலி - எப்படி பலியாயினர் என்பதில் மர்மம்

Featured Replies

நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமில் 15ற்கும் அதிகமான கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளனர். இவர்களின் சாவிற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. எனினும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி இதுவொரு கூட்டுத் தற்கொலையென தெரியவருகிறது.

கடற்படையில் புதிதாக இணைக்கப்பட்ட 16 - 20 அகவை வரையான இளைஞர்களிற்கு நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமில் பயற்சியளிக்கப்பட்டு வந்த நிலைலேயே அவர்களில் 15ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடுமையான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியினால் விரக்கியடைந்த இவர்கள் தற்கொலை செய்திருக்கலாமென கூறப்படுகிறது.

திங்கள் இரவு சம்பவம் நடைபெற்ற கடற்படை முகாமிலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்டுகிறது. உயிரிழந்த படையினரின் சடலங்கள் செவ்வாய் அதிகாலை வேலணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளபோதம் இதுவரை நீதி விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

Mysterious death of 15 young SLN recruits in Delft

[TamilNet, Friday, 20 June 2008, 22:40 GMT]

More than 15 young Sri Lanka Navy (SLN) recruits between 16 to 20 years of age were found dead following a mysterious shooting incident in their camp, last Monday, in Delft (Neduntheevu), the farthest island off Jaffna. Unconfirmed reports allege collective suicide due to frustration caused by isolation and harsh training. Before the incident, the trainees had conveyed their frustrations to reliable sources. The trainees were reportedly deceived by their recruiters that they were to be trained somewhere in the South of Sri Lanka, but had been brought to Nedunththeevu in the North.

Gunshots were heard Monday night in the SLN base.

The bodies of the deceased were transported to Kayts in the early hours of Tuesday. But, no judicial inquiry was conducted.

The SLN is reported to have alleged an LTTE attack for the death of the 15 recruits.

After the successful Sea Tiger raid on Neduntheevu in May 2007, the SLN has extended and strengthened its fortifications in the island and is believed to be using it as a training base.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: நல்ல திருப்பம்தான். ராணுவமே போருக்கு எதிராகத் திரும்பும்போது சிங்களத்தின் ஆதிக்கக் கனவுகள் தவிடு பொடியாகும்.

பேசாம புலிகளிட்ட சரன் அடஞ்சிருந்திருக்கலாம்... பக்குவமா செஞ்சிலுவை சங்கத்தினூடாக வீட்டுக்கு அனுப்பி இருப்பாங்கள்...

தமிழற்ற நிலங்களை ஆக்கிரமித்திருக்கிற ஆமிக்கரங்கள் எல்லாரும் தாங்களா யோசிச்சு ஒரு நல்ல முடிவெடுத்தா நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசன சூராவளி. இப்படித் தற்கொலை செய்வதைக் காட்டிலும் புலிகளிட்டச் சரணடையலாம்.

  • தொடங்கியவர்

சூறாவளி மற்றும் ரகுநாதன் அண்ணாக்கள் நெடுந்தீவிலை இருந்து கொண்டு எப்படி சரணடைகிறது. தப்பியோடி வழியில்லாமல்தானே அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: அதுவும் சரியான கேள்விதான் மின்னல். அங்க இருந்து கொண்டு எப்படிச் சரணடையிறது ? ஒண்டு செய்யலாம், பேசாம ரோந்துக்குப் போறது போல வெளிக்கிட்டு முல்லைத்தீவில போய் கரையேற வேண்டியதுதான்.
  • தொடங்கியவர்

:icon_idea: அதுவும் சரியான கேள்விதான் மின்னல். அங்க இருந்து கொண்டு எப்படிச் சரணடையிறது ? ஒண்டு செய்யலாம், பேசாம ரோந்துக்குப் போறது போல வெளிக்கிட்டு முல்லைத்தீவில போய் கரையேற வேண்டியதுதான்.

நெடுந்தீவு தீவு எண்டதும் அது இலங்கைத் தீவின் வடமேற்குப் புறத்தில் இருக்கிறதும் தெரியும்தானே? ஏனென்றால் முல்லைத்தீவு கிழக்கு திசையில் இருக்கிறது. சுத்தி வர நீண்ட நேரமெடுக்கும் அதுதான் கேட்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்புலியின் தாக்குதலாக இருக்கலாம்.

:icon_idea:

தனிமைப் படுத்தி பயிற்சி கொடுப்பது, ஒன்றும் தவறில்லை. ஏமாற்றி அங்கு கொண்டு செல்லப்பட்டு, விடுமுறையுமில்லாமல் வெளித் தொடர்புகளுமில்லாமல் எங்கே இருக்கிறோம் என்றும் தெரியாமல் ஒரு வகை விரத்திக்குள் சென்றதனால் இவர்கள் கூட்டுத் தற்கொலையில் இறங்கியிருக்கலாம். அவர்களின் நிலைக்கு வருந்தத்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

படைத்தரப்பில் 749 பேர்

ஹெய்டிக்கு இன்று பயணம்

ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கைப் படையினர் 749 பேர் இன்று ஹெய்ட்டிக்குச் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கு செல்லவுள்ள படையினரில் 52 அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்களும் 697 ஏனைய தரங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவர்கள் 6 மாதம் வரை ஹெய்ட்டியில் ஐக்கிய நாடுகளின் சமாதானப்படையினருடன் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்று கூறப்பட்டது.

குக்குலைக்களையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை முகாமில் பயிற்சிபெற்ற இப்படையினர் தமது பயிற்சிகளை நிறைவு செய்து நேற்று வெளியேறியுள்ளனர்.

இவர்கள் ஹெய்ட்டியைச் சென்றடைந்ததும் அங்கு ஏற்கனவே பணியாற்றிவரும் 750 பேரைக் கொண்ட படையினர் மீண்டும் இலங்கை திரும்பவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

http://www.sudaroli.com/pages/news/today/21.htm

கெயிட்டி தான் அவர்களின் மொழியில் நெடுந்தீவோ........

ரகுநாதன் சொன்னமாதிரி ரோந்துக்குபோறமாதிரி வெள்ளையடிக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

கெயிட்டி தான் அவர்களின் மொழியில் நெடுந்தீவோ........

எல்லரும் ஹெய்ட்டிக்கு வாங்கோ.. குஜாலா இருக்கலாம் எண்டு கூட்டிட்டு வந்து இங்க நெடுந்தீவில இறக்கி விட்டுட்டாங்களோ தெரியேல்லை..! :icon_idea:

எல்லரும் ஹெய்ட்டிக்கு வாங்கோ.. குஜாலா இருக்கலாம் எண்டு கூட்டிட்டு வந்து இங்க நெடுந்தீவில இறக்கி விட்டுட்டாங்களோ தெரியேல்லை..! :icon_idea:

அப்படித்தான்

தமிழற்ற நிலங்களை ஆக்கிரமித்திருக்கிற ஆமிக்கரங்கள் எல்லாரும் தாங்களா யோசிச்சு ஒரு நல்ல முடிவெடுத்தா நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரம் ஆமியிட்ட தப்பலாம்

நேவியிட்டயும் தப்பலாம்

பின்னால டக்கிலசு அல்லோ இருக்கிறார்

அவரெட்ட எப்படித்தப்பிறது

பிறகு அவற்ற விசுவாசத்தில இல்லையோ சந்தேகம் வந்திடும்????

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த திங்கட்கிழமை நெடுந்தீவு பகுதியில் புதிதாக படையில் இணைந்த இளைஞர்களில் 15 பேர் மர்மமான முறையில் சூட்டுக்காயங்களுடன் பலியாகியுள்ளனர்.

இவர்கள் 6 முதல் 20 வரையான வயதெல்லை உடையவர்கள் எனவும் இவர்களை இராணுவத்தில் சேர்க்கும்போது தெற்குபகுதியில் வைத்தே பயிற்சி வழங்கப்படும் எனத்தெரிவித்தபோது இவர்களை நெடுநடதீவுக்கு கொண்டு வந்ததையடுத்து இவர்கள் ஆத்திரமும் விசனமும்அடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி இவர்கள் சேர்ந்து தற்கொலை செய்துள்ளதாக அறியமுடிகிறது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றதாகவும் இவர்களது உடலங்கள் செவ்வாய்கிழமை ஊர்காவற்துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிறீலங்கா படையினர் இது தொடர்பில் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளே இவர்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மேமாதம் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து சிறீலங்கா படையினர் கடுமையான பாதுகாப்பு விதிகளை அமுல்படுத்தி பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.

http://www.pathivu.com/?p=1349

சிலவேலை பட்டினியால் செத்துஇருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா கடற்படையினர் 15 பேர் நெடுந்தீவில் தற்கொலை!

சிறீலங்கா கடற்படையைச் சேர்ந்த இளம் அங்கத்தவர்கள் 15 பேருக்கு மேற்பட்டோர் யாழ் நெடுந்தீவில் தற்றொலை புரிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 முதல் 20 அகவையுடைய இவர்கள் தென்னிலங்கையில் பயிற்சி வழங்கப்படும் என கடற்படையில் இணைக்கப்பட்ட போதிலும்இ போர் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால்இ கோபமடைந்து கூட்டாக தற்கொலை புரிந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

கொல்லப்பட்ட கடற்படையினரது உடலங்கள் ஊர்காவற்துறைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும்இ தகவல் வெளியாகும் என்ற காரணத்தினால் விசாரணைகளோஇ உடல பரிசோதனைகளோ நடத்தப்படவில்லை என கூறப்படுகின்றது.விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக சிறீலங்கா கடற்படையினர் கூறிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக சிறீலங்கா கடற்படையினரால்இ அல்லது பாதுகாப்பு அமைச்சினால் இதுவரை எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் செய்தி - இணையத்தளத்திலிருந்து

முடியல இது என்னப்பா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.