Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரிய மடுவை இராணுவம் கைப்பற்றியது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் - முல்லைத்தீவு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பெரிய மடுப் பிரதேசத்தை இராணுவம் இன்று கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 7 சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது. பெரியமடுப் பகுதி முன்னரும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் ஓயாத அலைகள் 3 இன் போது விடுவிக்கப்பட்ட பகுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

போர்நிறுத்த கால எல்லைக் கோட்டில் இருந்து மன்னார், வவுனியா கள முனையில் இராணுவம் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு பல முனைகளில் விடத்தல் தீவை நோக்கி நெருங்கி வருகின்ற போதும் மணலாறு மற்றும் யாழ்ப்பாண கள முனைகளில் அதற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Heavy fighting in Vavuniyaa front.

[TamilNet, Thursday, 26 June 2008, 14:33 GMT]

The Liberation Tigers of Tamileelam (LTTE) officials in Vanni told reporters Thursday that their fighters confronted the Sri Lanka Army (SLA) from 8:30 a.m. till 3:20 p.m. at Paalamoaddai in Vavuniyaa claiming that 8 SLA troopers were killed and 24 wounded in repeated clashes. Meanwhile, the Sri Lanka Army officials in Colombo claimed that their troops have brought Periya Madu in Maanthai West of Mannaar district, under their control.

The bordering Maanthai East division comes under Mullaiththeevu district.

போர் நிறுத்த கால எல்லைக்கோட்டில் இருந்து வன்னிக்குள் இராணுவம் நகர்ந்துள்ள பகுதிகள் (26-06-2008) வரை

வவுனியா கள முனை:

20080523_57.gif

மன்னார் கள முனை

20080523_TF.gif

மணலாறு கள முனை

20080523_WLO59.gif

தரவுகள் சிறீலங்கா இராணுவ இணையத்தளம். இவற்றில் மிகைப்படுத்தல்களும் இருக்கலாம்.

(முதலாவது படத்தை கள விதிக்கமைய மீளமைக்க முயன்றேன் சரிவரவில்லை. கள நிர்வாகம் நேரம் கிடைத்தால் அதனை கள விதிக்கமைய மீளமைத்து ஒட்டிவிடக் கேட்டுக் கொள்கிறேன்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலும் எமது பூமி சிறிது ,சிறிதாக பறி போகப்போகின்றதா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலும் எமது பூமி சிறிது ,சிறிதாக பறி போகப்போகின்றதா ?

உண்மை தான் சிறி. சிறிது சிறிதாகப் போய்க் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் புதினம்... பதிவு இணையத்தளங்களை வாசித்தீர்கள் என்றால் இராணுவம் நகராத போன்ற தோற்றம் தான் தெரியும். ஆனால் அடுத்த நாள் செய்தியில் விடத்தல்தீவில் முன்னகர்வு முடியடிப்பு எனும் போது தான் அட இராணுவம் அங்கு வர வந்திட்டா என்ற உண்மை தெரிய வரும். :lol:

நிறையப் போராளிகளை இழந்தும் நிலங்கள் பறிபோகின்றன என்பது கவலையளிக்கின்ற விடயமாக இருப்பினும்.. நம்பிக்கை வைப்போம். எமது போராளிகளின் கரங்களைப் பலப்படுத்துவதே தற்போதைய தேவை.

எதிரியின் மிகப் பெரிய பலமும் தயார் படுத்தலும் ஆரம்பத்தில் அவனுக்கு சாதகமாக இருப்பினும் தொடர்ந்து அவ்வாறு அமையும் என்று சொல்ல முடியாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ உதைக்குதே!!!!!!!!!!!!!!!

Posted on : Sun Jun 15 7:28:52 EEST 2008

மன்னார் பெரியமடு மீட்கப்பட்டதாக படைத்தரப்பில் நேற்று அறிவிப்பு

மன்னார் பெரிய மடுப்பகுதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற கடும் சண்டையை அடுத்து அப்பகுதி தமது கட்டுப்பாட்டில் வந்துள்ளது என படைத்தரப்பு அறிவித்துள் ளது.

நேற்றுக்காலை படையினரின் முன்னேற்றத்தை முறியடிக்க விடுதலைப்புலிகள் கடும் தாக்குதலை நடத்தினர்.

கடும் மோதலின் பின் படையினர் பெரிய மடுவை முழுமையாக மீட்டனர்.

இந்தச் சண்டையில் ஏழு படையினர் காயமடைந்தனர் .

2.5 கிலோ மீற்றர் நீளமான பெரியமடுக் குளப் பகுதியை முழுமையாக படையினர் மீட“டுள்ளனர் என்று பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்தது (அ1)

http://www.innovaylk.com/uthayan/FullView.php?ntid=3352

எனக்கென்னமோ ஜெயசிக்குறு ஞாபகம்தான் வருகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,

அப்ப முன்னம் கைப்பற்றினது சின்னமடுவோ? இன்னும் எத்தின மடுக்கள் இருக்துங்கோ? நிலமைமோசம் எண்டால் எங்கட நெடுக்காலபோவான் தலமையில ஒரு சிறப்பு படை அணிய நாங்கள் களத்திற்கு அனுப்பி வைப்பமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முன்னம் கைப்பற்றினது சின்னமடுவோ? இன்னும் எத்தின மடுக்கள் இருக்துங்கோ? நிலமைமோசம் எண்டால் எங்கட நெடுக்காலபோவான் தலமையில ஒரு சிறப்பு படை அணிய நாங்கள் களத்திற்கு அனுப்பி வைப்பமோ?

முரளி அவர்கட்கு

நெடுக் .....அவர்கள் உண்மையான அக்கறையுடன்தான்

அப்படி எழுதியிருந்தார்

அதை நீங்கள் கேவலப்படுத்துவது மட்டுமல்ல

அப்படியாயின் அவரே சென்று போராட வேண்டியதுதானே என கூறுவது சரியல்ல

முறையுமல்ல.....

உங்களைப்போல் பலர் எவராவது போராட்டத்தின்பால் தமது கவலைகளை வெளிக்காட்டும்போது இப்படித்தான் விமர்சிக்கின்றீர்கள்....

இது எம்மிடையே ஒற்றுமையின்மையையும் போராட்டத்தின்பாலான எமது ஒன்றுபட்ட முனைப்புக்களையும் மழுங்கடிக்கக்கூடியது...

இந்த முக்கியநேரத்தில் நாம் இன்னும் இன்னும்

ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறுபவராகவும் அரவணைப்பவராகவும் தோள்கொடுப்பவராகவும் இருக்கவேண்டுமே ஒளிய காலைவாருபவர்களாக இருக்கக்கூடாது

துரோகம் காட்டிக்கொடுத்தல்.......

என்பன போன்றவற்றை விட இப்படி அக்கறையுடன் விசாரிப்பவர்களை....

விமர்சிப்பவர்களை .............கேவலப்படுத்துவதனால் எதைச்சாதிக்கப்போகின்றோம்????

படையினர் இன்னும் சில கிலோ மீட்டர்கள் வன்னிப் பகுதிக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படுவர் போல அண்மைக்கால முக்கியஸ்தர்களின் உரைகள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக அகலக்கால் பதிப்புப் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகத்தானோ என்னவோ மன்னாரில் ஒரு சில நூறு மீட்டர்கள் என்ற வல்வளைப்பு முயற்சிகள் கடந்த சில நாட்களில் கிலோ மீட்டர்கள் என்று வல்வளைப்பு வேகம் பெற்றிருக்கிறது.

மன்னார் களமுனையில் படையினரின் முதன்மை இலக்குகளில் ஒன்று விடத்தல்தீவு. அதனை நோக்கி ஏ-32 மன்னார் ப+நகரிச் சாலைல் தென்புறத்தாலும் ஏற்கனவே வல்வளைக்கப்பட்ட பாலம்பிட்டிப் பகுதியிலிருந்து கிழக்குப் புறத்தாலும் தமது நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர். பாலம்பிட்டியில் இருந்து முன்நகர்ந்த படையினரே பலம்பிட்டி - பள்ளமடு - விடத்தல்தீவு சாலைக்கு வடக்காக உள்ள பெரியமடுவைக் கைப்பற்றியுள்ளனர். விடத்தல்தீவு நோக்கிய படையினரின் எதிர்கால நகர்வுகள் பெரும்பாலும் இப்பகுதிகளிலிருந்தே முன்னெடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது கைப்பற்றப்பட்ட பெரியமடுவிலிருந்து திருக்கேதிச்சரம் வரையிலான நீண்ட முன்னரங்கலிருக்கும் விடுதலைப் புலிகளைத் தமது பொறிக்குள் சிக்க படையினர் முயலக்கூடும். எனினும் விடத்தல் தீவை நோக்கி எத்திசையிலிருந்து முன்னகர்ந்தாலும் பாரிய வெளிகளைக் கடந்தே ஆகவேண்டுமெனச் சொல்லும் எமது ஆய்வாளர்கள் குறித்த பகுதிகளைப் படையினர் கைப்பற்ற பாரிய விலை கொடுக்க வேண்டுமென மதிப்ப்பிடுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம். புலிகள் என்ன செய்வார்கள் என்று.

அப்ப முன்னம் கைப்பற்றினது சின்னமடுவோ? இன்னும் எத்தின மடுக்கள் இருக்துங்கோ?

அண்ணை வன்னியில் நூற்றுக்கணக்கில் மடுக்கள் இருக்கின்றன.

பெரியமடு என்ற பெயரிலேயே பல இடங்கள் இருக்கின்றன.

மன்னார் ப+நகரிச் சாலையிலும் ஒரு பெரியமடு இருக்கிறது. இப்போது படையினர் கைப்பற்றியதாகச் சொல்லும் பெரியமடு விடத்தல்தீவு - பாலம்பிட்டி சாலைக்கு வடக்காக ஒரு சில கி.மீ தொலைவில் இருக்கிறது.

அதேபோல ஏ-9 சாலையில் ஓமந்தைக்கும் புளியங்குளத்திற்குமிடையே ஒரு பெரியமடு இருக்கிறது.(ஜெயசிக்குறு காலத்தில் பிரபலம் பெற்ற இடமிது) அதேபோல கனகராயன்குளத்திற்கு கிழக்காக சில கி.மீ தொலைவிலும் ஒரு பெரியமடு இருக்கிறது. இவை எனக்குத் தெரிந்தவை. தெரியாமல் இன்னும் பல இருக்கலாம்

குகதாசன் அண்ணை கோவிக்காதிங்கோ. இஞ்ச சீரியசா கதைச்சு சீரியசா விசயங்கள் ஒண்டும் நடக்கிறது இல்ல. இப்ப என்ன நெடுக்காலபோவான் கவலைப்படுறார் அவரது கவலையக் குறைக்க அவரக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கவேணும் எண்டு சொல்லுறீங்களோ? அந்தக்காலத்தில ஆமி ஊருகளப் பிடிக்கத் துவங்கேக்க முதலாவதா எழும்பி இடம்பெயர்ந்தது நாங்கள்தான். இப்பிடி கதைகள் கேட்டுக்கேட்டு புளிச்சுப்போச்சிது. ஆமி ஊருகளப்பிடிக்கிறான் எண்டு சொல்லி நாங்கள் எல்லாரும் சேந்து கட்டிப்பிடிச்சு அழுவுறதால என்ன பிரயோசனம் அண்ணை?

உங்களுக்கு ஒரு கதை சொல்லிறன் கேளுங்கோ. அப்ப இப்பிடி ஆமி ஊருகளப்பிடிக்கேக்க.. நாங்கள் இயக்கத்தில அந்தப்பகுதிக்கு பொறுப்பா இருந்த எங்கட ஒரு நண்பனைக் கேட்டம் "என்ன மச்சான் எல்லாத்தையும் விட்டிட்டு வந்திட்டியள் ஊர் ஆமியிட்ட போச்சிதே" எண்டு. அதுக்கு அவன் சொன்னான். "ஓமடாப்பா அதுக்க நிண்ட எங்கள் 400 பேரிண்ட உயிரவிட உங்களுக்கு நாங்கள் ஊர விட்டுட்டு வந்திட்டம் எண்டுறதுதான் பெரிசா தெரியுது என" எண்டு.

அதாவது விடுறதும், பிடிக்கிறதும் உள்ளுக்க இருக்கிற ஆக்களுக்குத்தான் எப்ப என்ன செய்யவேணும் எண்டு தெரியும். எப்ப என்ன செய்யுறது எண்டு நாங்கள் குழம்பி என்ன செய்யுறது? இதுக்க நிண்டு நாங்கள் ஆலோசனைகள் சொல்லி என்னத்த செய்யுறது?

நாங்களும் இந்தப்போராட்டத்தின் அச்சுக்கள்தான் என்பதை மறுக்காதீர்கள்

எமது சோர்வுகளும் பெரும் பின்தள்ளுதலை ஏற்படுத்தும் மறக்காதீர்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் இன்னும் சில கிலோ மீட்டர்கள் வன்னிப் பகுதிக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படுவர் போல அண்மைக்கால முக்கியஸ்தர்களின் உரைகள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக அகலக்கால் பதிப்புப் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகத்தானோ என்னவோ மன்னாரில் ஒரு சில நூறு மீட்டர்கள் என்ற வல்வளைப்பு முயற்சிகள் கடந்த சில நாட்களில் கிலோ மீட்டர்கள் என்று வல்வளைப்பு வேகம் பெற்றிருக்கிறது.

மன்னார் களமுனையில் படையினரின் முதன்மை இலக்குகளில் ஒன்று விடத்தல்தீவு. அதனை நோக்கி ஏ-32 மன்னார் ப+நகரிச் சாலைல் தென்புறத்தாலும் ஏற்கனவே வல்வளைக்கப்பட்ட பாலம்பிட்டிப் பகுதியிலிருந்து கிழக்குப் புறத்தாலும் தமது நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர். பாலம்பிட்டியில் இருந்து முன்நகர்ந்த படையினரே பலம்பிட்டி - பள்ளமடு - விடத்தல்தீவு சாலைக்கு வடக்காக உள்ள பெரியமடுவைக் கைப்பற்றியுள்ளனர். விடத்தல்தீவு நோக்கிய படையினரின் எதிர்கால நகர்வுகள் பெரும்பாலும் இப்பகுதிகளிலிருந்தே முன்னெடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது கைப்பற்றப்பட்ட பெரியமடுவிலிருந்து திருக்கேதிச்சரம் வரையிலான நீண்ட முன்னரங்கலிருக்கும் விடுதலைப் புலிகளைத் தமது பொறிக்குள் சிக்க படையினர் முயலக்கூடும். எனினும் விடத்தல் தீவை நோக்கி எத்திசையிலிருந்து முன்னகர்ந்தாலும் பாரிய வெளிகளைக் கடந்தே ஆகவேண்டுமெனச் சொல்லும் எமது ஆய்வாளர்கள் குறித்த பகுதிகளைப் படையினர் கைப்பற்ற பாரிய விலை கொடுக்க வேண்டுமென மதிப்ப்பிடுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம். புலிகள் என்ன செய்வார்கள் என்று.

எனக்கு இந்த

குறிப்பாக அகலக்கால் பதிப்புப் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்படுவது தொடர்பாக சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன

யாராவது தெரிந்தவர்கள் தெரியப்படுத்த முடியுமா???

ஒரு புள்ளியில் இருந்து விரிந்து செல்வதைத்தானே அகலக்கால்வைத்தல் என்று சொல்வது???

இப்போ இராணுவம்பரந்துபட்ட வெளியிலிருந்து ஒரு புள்ளியை நோக்கி நகர்கிறது???

அதாவது முல்லைத்தீவை நோக்கி சகல பக்கமிருந்தும் உள்ளே செல்கிறது????

அது எப்படி அகல விரிவதாய் அர்த்தமாகும்???

சக்கர வியூகம் என்று முன்பு மகாபாரத்தத்தில் படித்திருக்கின்றோம். இங்கும் அதுதான் நடைபெறப்போகின்றது. அதற்கான விடையை தலைவர் கட்டாயம் மிகவும் காட்டமாக வழங்குவார்

இப்போ இராணுவம்பரந்துபட்ட வெளியிலிருந்து ஒரு புள்ளியை நோக்கி நகர்கிறது???

அதாவது முல்லைத்தீவை நோக்கி சகல பக்கமிருந்தும் உள்ளே செல்கிறது????

அது எப்படி அகல விரிவதாய் அர்த்தமாகும்???

நெடுக்காலைபோவான் இணைத்த இராணுவ இணையத்தளம் வெளியிட்ட வரைபடத்தை ஒருக்காப் பாருங்கோ படை நகர்வு முல்லைத்தீவு நோக்கித்தான் போகுதோ எண்டு?

அகலக்கால் பதிப்பு என்பது படையினரினை செறிவை பலத்தை பல்வெறு பகுதிகளிற்கு விரிவாக்கம் செய்வதால் பலம் குறைவடையும். நாள்தோறும், ஓய்வில்லாத சண்டைகளால் என்னதான் வெற்றி(நிலத்தை கைப்பற்றல்) பெறுகிறோம் என்ற மனநிலையை விட மனஉளைச்சலே படையினர் மத்தியில் உருவாக்கும். அகலக்கால் பதிக்க அனுமதிப்பது படையினரின் படைச்செறிவை ஐதாக்கி பலவீனமாக்க மாத்திரமல்ல அவர்களின் உளவுரணையும் குலைக்க உதவும். இதுவே வருடக்கணக்கில் இழுத்திழுத்து ஜெயசிக்குறு விழுங்கிய நிலம் ஓயாத அலைகள் மூன்றிடம் சில நாட்களிற்குள் மீண்டதற்கான காரணம்.

Edited by மின்னல்

வெற்றிச் செய்திகளைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடுவதும்; பின்னடைவுச் செய்திகளைக் கேட்டால் சோர்வுற்று விழுவதும் எமது குணங்களில் ஒன்றாக உருவாகி வருகி;ன்றது. காலமும் சூழலும் சரியாக வருகின்ற போதெல்லாம் தம்முடைய பேராற்றலையும் தம்முடைய வல்லமையையும் காலத்திற்குக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடமும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் முற்று முழுதாக நம்பிக்கை வைத்து நாம் அவர்களுக்கு பின்னால் நிற்போம். அவர்களுடைய வல்லமையையும்; வழிகாட்டலையும் கேள்விக்குறியாக்கும் எண்ணத்தைக் கைவிட்டு தேசியத் தலைவரின் கரங்களைப் பலப்படுத்துவதையே எமது குறிக்கோளாக கொள்ளுவோம்.

இழப்பதற்கு இனி ஒண்டுமில்லை

இதில இனி என்ன சோகம் வேண்டி கிடக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலைபோவான் இணைத்த இராணுவ இணையத்தளம் வெளியிட்ட வரைபடத்தை ஒருக்காப் பாருங்கோ படை நகர்வு முல்லைத்தீவு நோக்கித்தான் போகுதோ எண்டு?

அதே வரைபடத்தை நீங்கள் பார்த்தீர்களா???

அகலவெளிகளிலிருந்து

ஒரு புள்ளியை நோக்கி அவர்கள் குவிவது உங்களுக்கு தெரியவில்லையா???

உண்மையில் எனக்கு இதில் அகலக்கால் வைத்தல் என்பது புரியவில்லை

அதை விளங்கப்படுத்தமுடியுமாயின் முயற்சிக்கவும்

முடியாவிட்டால் .......

தயவுசெய்து என்னைக்குழப்பவேண்டாம்

நான் முல்லைத்தீவு என்று கூறியதுக்கு காரணம்

அவர்களின் குறி தலைவருக்குத்தானே??

என் அறிவுக்கு எட்டியபடி

இனிவரும் காலங்களில் இராணுவம் பாதுகாக்க வேண்டிய இடம் குறைவடைந்து கொண்டே செல்வதுபோலும்

இனி இயக்கம் இதை உடைத்துக்கொண்டு வெளியே வந்தால் அவர்களே அகலக்கால் பதிப்பவராக ஆகிவிடும் அபாயம் இருப்புது போலவும் என் அறிவுக்கு படுகிறது????

தலைவர்மீது நம்பிக்கை

போராளிகள் மேல் நம்பிக்கை....

மக்கள்மேல் பற்று .....

அவற்றிற்கு என் மனதில் துளியும் சோர்வு கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிச் செய்திகளைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடுவதும்; பின்னடைவுச் செய்திகளைக் கேட்டால் சோர்வுற்று விழுவதும் எமது குணங்களில் ஒன்றாக உருவாகி வருகி;ன்றது. காலமும் சூழலும் சரியாக வருகின்ற போதெல்லாம் தம்முடைய பேராற்றலையும் தம்முடைய வல்லமையையும் காலத்திற்குக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடமும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் முற்று முழுதாக நம்பிக்கை வைத்து நாம் அவர்களுக்கு பின்னால் நிற்போம். அவர்களுடைய வல்லமையையும்; வழிகாட்டலையும் கேள்விக்குறியாக்கும் எண்ணத்தைக் கைவிட்டு தேசியத் தலைவரின் கரங்களைப் பலப்படுத்துவதையே எமது குறிக்கோளாக கொள்ளுவோம்.

நீங்கள் கூறுவது தான் என் கருத்:தும்....

ஆனால் என்கேள்விக்கு ஏன் நீங்கள் பதில் சொல்ல மறுக்கின்றீர்கள்

இனிவரும் காலங்களில் இராணுவம் பாதுகாக்க வேண்டிய இடம் குறைவடைந்து கொண்டே செல்வதுபோலும்

இனி இயக்கம் இதை உடைத்துக்கொண்டு வெளியே வந்தால் அவர்களே அகலக்கால் பதிப்பவராக ஆகிவிடும் அபாயம் இருப்புது போலவும் என் அறிவுக்கு படுகிறது????

தலைவர்மீது நம்பிக்கை

போராளிகள் மேல் நம்பிக்கை....

மக்கள்மேல் பற்று .....

அவற்றிற்கு என் மனதில் துளியும் சோர்வு கிடையாது.

உண்மைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் எனக்கு இதில் அகலக்கால் வைத்தல் என்பது புரியவில்லை

அதை விளங்கப்படுத்தமுடியுமாயின் முயற்சிக்கவும்

முடியாவிட்டால் .......

அகலக்கால் வைத்தல்: தனது புள்ளியில் இருந்து படைப்பலத்தை ஐதாக்கல் என்றும் கொள்ளலாம். இப்போது வன்னியை நோக்கி இராணுவம் முன்னேறும் போது அவர்கள் இப்போது இருக்கும், முதல் இருந்த நிலைககளை விட்டு வெயியேறுவர் அல்லது அங்கே இருக்கும் படைப்பிரிவின் ஒருபகுதியை புதிய இடத்துக்கு நகர்த்துவர். அப்படி பார்க்கையில் இராணுவத்தின் பழைய நிலைகள் செறிதாக்கப்டட்டுள்ளது. அதாவது இராணுவம் அகலக்கால் வைத்துள்ளது. இப்போது இப்படியான பகுதி ஒன்றின்மேல் விடுதலைப்புலிகள் பாய்தால் இராணுவத்தால் தாக்குப்பிடிக்கமுடியுமா? அப்படி இல்லை என்றால் வன்னியை நோக்கி முன்னேறும் இராணுவத்தை பின்நகர்த்தி அந்த இடங்களைத்தக்க வைப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இடங்கள் பறிபோவது கவலையளிப்பதுதான். ஆனால் புலிகள் தமது கழுத்துக்கு தாமே சுருக்கு மாட்டுவார்களா ? இதற்குப் பின்னால் நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். ராணுவம் புலிகளின் இதயப் பகுதிக்குள் எவ்வளவு தூரத்துக்கு முன்னேறலாம் என்ற கணிப்பு புலிகளிடத்தில் இருக்கலாம். அதுவரை ராணுவம் உள்நுழைய அனுமதிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

களத்தில் உள்ள நிலவரம் தெரியாமல் நாம் எந்த முடிவிற்கும் வருவது சரியில்லை. எந்தப் போராட்டத்துக்கும் ஒரு காலத்தில் சில பின்னடைவுகள் வரலாம். அவற்றைக் கடந்து மீண்டும் புதிய உத்வேகத்துடன் எழும் போராட்டங்கள்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. இப்போது உள்ள நிலை சந்திரிக்காவின் காலத்திலும் நடந்தது. ஆனால் அதன் பின் நடந்தது எல்லோருக்கும் தெரியும்.

ஆகவே பொறுத்திருப்போம். களத்தில் போரிடுவது இயந்திர மனிதர்கள் அல்ல.விழ விழ எழும் கற்பனைக் கதாப் பாத்திரங்களும் அல்ல. எம்மைப்போன்ற ரத்தமும் சதையும் கொண்ட எம் உடன்பிறப்புகள்தான். அவர்களுக்கும் வலி, இழப்பு, சோகம், களைப்பு என்று எல்லாம் இருக்கு. எதிரிக்குச் சாதகமான ஒரு களத்தில் அநியாயமாக போராளிகளப் பலி கொடுப்பதைக் காட்டிலும் பின்னேறி தமக்குச் சாதகமான களத்தில் எதிரியைச் சந்திப்பதே சரி. இதுதான் இப்போதும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எதை எப்போது செய்ய வேண்டும் என்று தலைவருக்குத் தெரியும்.இதுவரை எல்லாவற்றையும் சரியாகவே நடத்தி வருகிறார். இனியும் அவ்வாறே நடத்டுவார். நம்பிக்கையுடன் இருப்பதே நாம் செய்ய வேண்டியது.

புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம் !

அண்ணைமார்.. நீங்கள் உதுக்க இருந்து என்ன ஆராய்ச்சிகள் செய்யுறீங்கள் எண்டு தெரிய இல்ல. இந்தச்செய்தி வந்தாப்பிறகு குகதாசன் அண்ணை என்னப்பேசினாப்பிறகு.. நானும் கொஞ்சம் சீரியசாகி.. நல்லா இதுபற்றி விசயம் தெரிஞ்ச ஒரு ஆளிட்ட இதுபற்றி தெரியுமோ எண்டு கேட்டன். அதுக்கு அவர் சொன்னபதில்... மடுவில இருந்து பெரியமடுவுக்கு ஆமிக்காரன் முன்னேறி வாறது பெரிய விசயம் இல்லையாம். அது வெட்ட வெளியும், சதுப்பு நிலமுமாம். மற்றது பெரியமடு பிடிச்சதால பள்ளமடு எண்டு ஒரு இடத்துக்கு போறதுக்கான பாதை துண்டிக்கப்படுமாம். வேற பெருசா இதுபற்றி சொல்லிறதுக்கு ஒண்டும் இல்லை எண்டு சொன்னார். :)

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

:) முரளி,

ஒருக்கால் அவரிட்ட சிராட்டிக் குளத்தில என்ன நடந்தது எண்டும் கேட்டுச் சொல்லுங்கோ. என்னெண்டு 25 போராளிகள் எதிர்ப்புக்காட்டாம இறந்துபோனார்கள் எண்டு கேளுங்கோ. இங்க எந்தச் செய்தியிலும் உண்மை சொல்லுறாங்களில்லை.

நன்றி முரளி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D முரளி,

ஒருக்கால் அவரிட்ட சிராட்டிக் குளத்தில என்ன நடந்தது எண்டும் கேட்டுச் சொல்லுங்கோ. என்னெண்டு 25 போராளிகள் எதிர்ப்புக்காட்டாம இறந்துபோனார்கள் எண்டு கேளுங்கோ. இங்க எந்தச் செய்தியிலும் உண்மை சொல்லுறாங்களில்லை.

ஜெயசிக்குறு காலத்தில் ஒலுமடுப் பகுதியில் இராணுவத்தின் சிறப்பு கொமோண்டோ படையணிகள் ஊடுருவித் தாக்கி போராளிகளுக்கு இழப்பையும் ஏற்படுத்தி உடலங்களையும் கைப்பற்றிக் கையளித்திருந்தது.

அதன் பின்னர் பிறிதொரு நகர்வை அதே பாணியில் செய்ய முற்பட்டு போராளிகளால் சுமார் 100 படையினர் கொல்லப்பட்டு உடலங்களும் கையளிக்கப்பட்டிருந்தது.

பெரிய மடுவைக் கைப்பற்றிய பின் இராணுவம் சிராட்டிக்குளம் பகுதிக்கு கொமோண்டோ அணியை அனுப்பி இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம். ஏனெனில் இத்தாக்குதல் பிற்பகல் 6 மணிக்கு மேல் நடந்துள்ளதாக இராணுவத்தின் ஒரு செய்தி சொல்கிறது.

இன்னொரு செய்தியோ 26ம் திகதி மொத்தச் சமரிலும் ஆங்காங்கே கொல்லப்பட்டு சிதறிக் கிடந்த உடலங்கள் இவை எங்கிறது.

இதில் இராணுவமும் சில உண்மைகளை மறைக்கிறது. தனது எதிர்காலத்திட்டங்கள் கருதி அப்படிச் செய்திருக்கக் கூடும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.