Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு: 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

Featured Replies

பிரித்தானியா பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.றிச்சர்ட் இவன்ஸ் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 3:00 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது நிருபர் தெரிவித்தார்.

ஈழத்தமிழ் மக்களின் பொங்குதமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், இன்றைய பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பவற்றை வலியுறுத்தி இந்த பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

- தமிழ்செய்தி நிருபர்

http://www.tamilseythi.com/tamilar/uk-pong...2008-07-12.html

Edited by tamilarasu

  • Replies 57
  • Views 6.4k
  • Created
  • Last Reply

ஓ..அப்படியா மிகவும் மகிழ்ச்சியான செய்தி <_< ..தலைவரின் கரத்தை பலபடுத்த ஒன்றினைந்த அனைத்து பிரித்தானிய உறவுகளுக்கும் நன்றிகள்..அது சரி எங்கன்ட யாழ்கள பிரித்தானிய உறுப்பினர்கள் எல்லாரும் அங்க போயீட்டீனமோ.. :o

அப்ப நான் வரட்டா!!

பிரித்தானியாவில் இன்று பல்லாயிரக்கணக்கானோருடன் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு தொடங்கியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு: 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

[சனிக்கிழமை, 12 யூலை 2008, 08:46 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வு பிரித்தானியாவின் வேல் பகுதியில் உள்ள றிச்சர்ட்சன் இவன்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:40 மணிக்கு தொடங்கியது.

நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஏற்றினார்.

தொடர்ந்து, அகவணக்கம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அரங்க நிகழ்வுகள் தொடங்கின.

பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் ஐம்பதுக்கும் அதிகமானோர் மஞ்சள், சிவப்பு வர்ண உடையணிந்து மேடையில் பொங்கு தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடினர்.

"We want Tamileelam" என மேடையில் இளையோர் முழங்க, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் சேர்ந்து முழங்கினர்.

நாடகம் மற்றும் தமிழர்களின் மங்கல வாத்தியங்களான தவில், நாதஸ்வரக் கச்சேரி ஆகியன நடைபெற்றன.

தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மகன் டேவிட் பரராஜசிங்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் டேவ் உரையாற்றினார்.

தொடர்ந்து, பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டோனா உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் உள்ளுராட்சி அமைப்பின் சார்பாக சுரேஸ் கிருஸ்ணா உரையாற்றினார்.

தொடர்ந்து, சோசலிச எதிர்ப்பின் ஆசிரியரும் அதன் கெளரவ உறுப்பினருமான லியாம் மக் எய்ட் உரையாற்றினார்.

தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளரும் கவிஞருமான புதுவை இரத்தினதுரையின் உரை ஒலிக்க விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்த சர்மா உரையாற்றினார்.

தொடர்ந்து, "உலகத் தாயே ஒன்றுபடு" எனும் பொங்கு தமிழ் பாடலுக்கு இளையோர்கள் எழுச்சி நடனம் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, பத்து வருடங்களுக்கு மேலாக பிரித்தானிய தொழிற்கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த மைக் கிறசன் உரையாற்றினார்.

தொடர்ந்து, மனித விவகாரங்களுக்காக குரல் கொடுத்துவரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பானாட்ஸ் சாறா லுட்பேட் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய தமிழ் உள்ளுராட்சி மன்ற அமைப்பின் தலைவர் தயா இடைக்காடர் உரையாற்றினார்.

தொடர்ந்து, பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோன் பற்றின் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் பகுதியின் முன்னாள் நகரபிதா யோகன் யோகநாதன் உரையாற்றினார்.

தொடர்ந்து, நடன நிகழ்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

கொசவோ விடுதலை அமைப்பின் முக்கிய பிரதிநிதி ஒருவரும் தென்னாபிரிக்க தேசிய காங்கிரசின் முக்கிய உறுப்பினர் ஒருவரும் நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.

அரங்க நிகழ்வுகளைத் தொடர்ந்து "We want Tamileelam" என மேடையில் இளையோர் முழங்க, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் சேர்ந்து முழங்கினர்.

இதனைத் தொடர்ந்து பொங்கு தமிழ் பிரகடனம் படிக்கப்பட, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் பிரகடனத்தினை முழங்கினர்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனும் உறுதிமொழியுடன் இரவு 7:30 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது.

பிரித்தானியாவில் முதல் தடவையாக நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்றனர். அரங்க நிகழ்வினை நோக்கி மக்கள் வந்து கொண்டிருந்த போது லண்டனின் பிரதான சாலை முடக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வினை விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலும், லண்டன் ஐபிசி தமிழ் வானொலியும் நேரடி ஒலிபரப்புச் செய்திருந்தன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

london_pongu_tamil_20080712003.jpg

london_pongu_tamil_20080712004.jpg

images: puthinam.com

தமிழீழ விடுதலைக் கனவுடன் எழுச்சி பொங்க கலந்து கொண்ட எம் தமிழ் உறவுகளுக்கு நன்றிகள்..!

மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் அடக்க முடியாது என்பதை பிரித்தானியாவில் குறிப்பாக லண்டன் வாழ் தமிழீழ மக்களின் ஒரு பகுதியினர் காட்டியுள்ளனர். மிகுதிப் பகுதியினரும் எதிர்வரும் காலத்தில் இன்னும் இன்னும் பேரெழுச்சி கொண்டு இவ்வாறான நிகழ்வுகளில் பங்கெடுப்பது தாயக விடுதலைக்கு சர்வதேச அரங்கில் உரம் சேர்க்கும்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைக் கனவுடன் எழுச்சி பொங்க கலந்து கொண்ட எம் தமிழ் உறவுகளுக்கு நன்றிகள்..!

இந்தப்படையைப்பார்த்தாவது மாற்றுமா உலகம் தன் கொள்கைகளை???

அல்லது பாலுக்கும் காவல்..................தோழன் என்று நழுவுமா????

மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடந்து முடிந்தது. இறுதி நேரத்தில் மழை இலேசாக தூறிய பொழுதும்

மக்கள் இடம்பெயராமல் நிகழ்ச்சி முடியும் வரை மைதானத்தில் நிறைந்திருந்தார்கள்.

அதுமட்டுமல்லாது பொங்குதமிழில் கலந்து கொண்ட பொது மக்களே மைதானத்தை சில நிமிடங்களில்

துப்பரவு செய்து கொடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். பொங்குதமிழ் நிகழ்விற்காக உழைத்த தொண்டர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். தொடர்க உங்கள் சேவை.

Edited by Thamilachchi

போகும் போதும் வரும்போதும் வாகன நெரிசல் தாங்க முடியேல்லை. 2 மைல் தூரம் தாண்ட ஒரு மணி நேரம் ஆனது.

போகும் போதும் வரும்போதும் வாகன நெரிசல் தாங்க முடியேல்லை. 2 மைல் தூரம் தாண்ட ஒரு மணி நேரம் ஆனது.

இத எப்பிடி நம்புறது. நிரூபிக்க முடியுமா. வீடியோ கிளிப் ஏதாவது இருக்கிதா. :icon_mrgreen: எனக்கும் மழையில கொஞ்சம் நனைஞ்சு கொஞ்சம் தும்மல் வந்திட்டிது இஞ்ச போன இடத்தில. புதுவை இரத்தினதுரை அவர்களின் உரையும் கேட்க நன்றாக இருந்திச்சிது

இத எப்பிடி நம்புறது. நிரூபிக்க முடியுமா. வீடியோ கிளிப் ஏதாவது இருக்கிதா. :lol: எனக்கும் மழையில கொஞ்சம் நனைஞ்சு கொஞ்சம் தும்மல் வந்திட்டிது இஞ்ச போன இடத்தில. புதுவை இரத்தினதுரை அவர்களின் உரையும் கேட்க நன்றாக இருந்திச்சிது

அது புதுவையாரின் கவிதை. :icon_mrgreen:

வாகன நெரிசலை காட்ட என்னிடம் எதுவுமே இல்லையே.

பிருத்தானியவாழ் தமிழ் உள்ளங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்.... பொங்குதமிழே பொங்கு

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொண்ட பிரித்தானிய தமிழ் உள்ளங்களுக்கு நன்றிகள்.

நான் வீட்ட வரும்போது 1.40 ஆயிட்டு....நாங்க உதவி செய்து முடிந்தபின்பு தானே புறப்பட்டோம்.....மக்கள் அலைபோல் வந்திருந்தார்கள்

அதிகாலையில் இனிமையான ஒரு செய்தி...வாழ்த்துக்கள் லண்டன் ஈழத்தமிழர்கள்

பிரித்தானியா பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.றிச்சர்ட் இவன்ஸ் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 3:00 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது நிருபர் தெரிவித்தார்.

ஈழத்தமிழ் மக்களின் பொங்குதமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், இன்றைய பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பவற்றை வலியுறுத்தி இந்த பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

- தமிழ்செய்தி நிருபர்

http://www.tamilseythi.com/tamilar/uk-pong...2008-07-12.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொங்கு தமிழில் பங்குபற்றிய லண்டன்வாழ் ஈழத்தமிழர்களுக்கு நன்றிகள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

pong_uk_13_07_08_02_70151_445.jpg

பிரித்தானியாவின் முக்கிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்.. மற்றும் கொசவோ விடுதலையில் பங்காற்றியவர்.. ஐயர்லாந்துப் பிரதிநிதி.. தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்.. என்று பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட லண்டனில் நடந்த பொங்கு தமிழில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தமிழ்நெட் தெரிவிக்கிறது.

தமிழீழக் கலை பண்பாட்டுக்கழக புதுவை இரத்தினதுரை அவர்களின் ஒலி வடிவப் பேச்சும்.. சிறீலங்காவின் (NSSP) டாக்டர் விக்கிரமபாகு கருணாநாயக்காவின் செய்தியும் மற்றும் பல பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் செய்திகளும் இந்த நிகழ்வுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

லண்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியதன் படி இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தொகை 10,000 என்று அமைகிறது. அதேவேளை சுயாதீன தரப்புக்களின் உறுதிப்படுத்திய தொகை 25,000 க்கும் மேல் என்று அமைகிறது.

இதில் கொசாவோவில் நகரம் ஒன்றின் நகரபிதாவாக உள்ள Dr Bajram Rexhepi கூறிய கூற்றுக்கள் எமக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளது.

Dr Bajram Rexhepi, the Mayor of Mitrovica in Kosovo, spoke of the similar history between the Tamils and the Kosovans. He mentioned that though they had international support, the intransigence of the Milosevic government meant that Kosovo remained oppressed until they fought for their freedom. Mentioning that the Kosovo Liberation Army (KLA) was identified as a terrorist organisation by a number of countries, he said his country was finally freed in 1999, but even then they had to prove that they would not abuse their people’s human rights, which they finally succeeded in doing in February this year.

It was not easy, he said, adding that we will show solidarity and support for your struggle.

மேலும் 2008இல் உலகெங்கும் நடந்த பொங்கு தமிழில் சுமார் 1,50,000 தமிழ் மக்கள் கலந்து கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் தொகுப்புக்கு, படங்களுக்குப் பயன்படுத்திய ஊடகம்: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=26338

Edited by nedukkalapoovan

நன்றி எல்லோருக்கும்

londonpongutamil20084lz4.jpg

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

வாழத்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானிய தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கு தமிழில் பங்குபற்றிய லண்டன்வாழ் ஈழத்தமிழர்களுக்கு நன்றிகள். :)

சுப்பண்ணா உதுகெல்லாம் நன்றி சொல்ல கூடாது நாங்கள்.ஏன் என்றால் இது ஒவ்வொருவரினதும் கடமை.அது தான் அவர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.