Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளராக தமிழ்ப் பெண்மணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவநீதம்பிள்ளை ஐநாவின் மனிதஉரிமைகளுக்கான தலைமை பதவியில்? வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்]

தென்னாபிரிக்காவில் நீதிபதியாகவும் 2003 ம் ஆண்டு சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் பணியாற்றியவருமான நவநீதம்பிள்ளை ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகளுக்கான தலைவர்பதவி வகிப்பதற்கு பான் கீ மூன் அவர்களிடம் முன்மொழியப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இவர் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் எட்டுவருடங்களுக்கு மேலாக கடமையாற்றியவர் என்பதுவும் றுவாண்டாவில் நிகழ்ந்த மனிதப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இவர் மேற்கொண்ட தீர்ப்புக்கள் முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிள்ளை அவர்கள் தென்ஆபிரிக்காவை சேர்ந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதுவும் ஹவாட் பல்கலைக்கழகத்தில் 1982 ம் ஆண்டு டொக்ரர் பட்டம் பெற்றவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இவர் 1941 ம் ஆண்டு தென்ஆபிரிக்காவில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளராக தமிழ்ப் பெண்மணி

[வெள்ளிக்கிழமை, 18 யூலை 2008, 07:37 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி திருமதி நவநீதம் பிள்ளையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் பரிந்துரைத்துள்ளார் என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக அவர் பணியாற்றி வருகிறார்.

றுவாண்டா இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது பாலியல் வல்லுறவு என்பது போரில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட ஆயுதம் என்றும் அது ஒரு இனப்படுகொலைக் குற்றமே என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்களை அறிவித்தவர் திருமதி நவநீதம் பிள்ளை.

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த தமிழர் அவர்.

1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார்.

தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்காவும் தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் அவர் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.

பூகோள ரீதியாகவும் பாலியல் மற்றும் அனுபவ ரீதியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதினம்

தமிழ்நெட்டில இந்த செய்தி இருந்திச்சிது பாத்தன். தமிழ்பெண்மணியா இருந்து என்ன... நமக்கு ஏதும் உதவினால் ஒழிய மற்றும்படி தமிழன் வந்தால் என்ன சிங்களவன் வந்தால் என்ன... நம்மோட கும்பக்கசாமியும் ஒரு டமிழ் பெண்தானே

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட்டில இந்த செய்தி இருந்திச்சிது பாத்தன். தமிழ்பெண்மணியா இருந்து என்ன... நமக்கு ஏதும் உதவினால் ஒழிய மற்றும்படி தமிழன் வந்தால் என்ன சிங்களவன் வந்தால் என்ன... நம்மோட கும்பக்கசாமியும் ஒரு டமிழ் பெண்தானே

முதலில்

இன்முகத்துடன் வருக வருக என வரவேற்போம்

நல்லதே செய்வார் என எதிர்பார்ப்போம்

எங்களுக்காக ஒன்றும் செய்யவேண்டாம்

உண்மையை கதைத்தால்போதும்...........

இந்தியப்படையை இப்படித்தான் வரவேற்றுப்போட்டு அடிவாங்கியது இன்னும் மறக்கவில்லை......

நவனீதன் பிள்ளை எனும் தென்னாபிரிக்க உயர்நீதி மண்ற நிதிபதி தெரிவு செய்யபட இருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம் நாளேடு தெரிவிக்கிறது...

தென்னாபிரிக்க தலைநகர் டாபணின் பேரூந்து ஓட்டுநர் ஆக வேலை பார்த்த தமிழரின் மகளான நவனீத பிள்யே தென்னாபிரிக்காவின் முதல் பெண் கறுப்பு நீதிபதி எனும் பெருமையை கொண்டவர்...

http://www.latimes.com/news/printedition/a...,0,455496.story

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தருக்கும் ஒரு பிரயோசனமுமில்லை இவவைப்பற்றி வாயளக்கிறதை விட்டுட்டு வேறையேதும் அலுவல் பாக்கலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

:) குமாரசாமி,

தென்னாபிரிக்கத் தமிழர்கள் எமது போராட்டம் பற்றி அக்கறை உள்ளவர்கள். யார் கண்டார் இவர் கூட எமக்குச் சார்பானவராக இருக்கலாம். எமக்கு ஆதரவாகச் செயற்படாவிட்டாலும் பரவாயில்லை, எமக்கெதிராக நடக்கும் மனித்வுரிமை மீறல்களை வெளிச்சத்துக்க் கொண்டுவர உதவினாலே பெரிய விடயம்.

அதனால் அவரை வரவேற்போம். அதற்காக நீலன் திருச்செல்வத்தின் அன்புச் சிநேகிதியான ராதிகா குமாரசாமியை இவருடன் ஒப்பிட வேண்டாம். அவ யாரென்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி நவநீதம் பிள்ளைக்கு வாழ்த்துக்கள் .

ஏன் என்று கேட்கின்றீகள் போல் உள்ளது .......?

1941 ஆம் ஆண்டில் பிறந்து உங்கள் பெயரை தமிழ் பெயராக வைத்து கொண்டிருப்பதற்காகத்தான் .

ஆனால் நேற்று வந்த எங்களில் சிலர் வாயில் நுளையாத பெயரை வைத்துக்கொண்டு பெருமைப்படுகின்றார்கள் .

மேலும் .... தற்போதைய நிலைமையில் உங்கள் மனச்சாட்சியுடன் ஈழத்தமிழர்களையும் கவனியுங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியப்படையை இப்படித்தான் வரவேற்றுப்போட்டு அடிவாங்கியது இன்னும் மறக்கவில்லை......

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்முகத்துடன் வருக வருக என வரவேற்றோம் என்பதற்காக எழுதினேன்.....

இப்பொழுதே ஞாபகப்படுத்தவும் நீங்களும் தமிழ் பெண் என்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

நிறவெறியை வென்ற தமிழ்ப் பெண்

sphoto04be8.jpg

நவநீதம்பிள்ளை... தென் ஆப்பிரிக்க தேசத்தின் முதல் பெண் நீதிபதியான இவர், தமிழ் மரபு வழிப் பெண்!

நிறவெளி மிகுந்த தென் ஆப்பிரிக்காவில், இந்தியப் பெண்ணான இவர் நீதிபதி யாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான். இப்போது, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக அகில உலகமும் ஆச்சரியத் துடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார் இந்த நீதி தேவதை, சமீபத்தில், தன் முன்னோர்களின் ஜென்ம பூமியான இந்தியாவுக்குச் சென்ற நவநீதம் பிள்ளை, தலவல் சாதனங்களின் முக்கிய செய்தியானார்.

தன் வாழ்க்கை முழுக்க வுமே பல வேதனைகளை சந்தித்த இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்பிரிக்காவில்தான். ஏழை குடும்பத்தில் ஒரு பஸ் டிரைவரின் மகளாகப் பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் புனிவர்சிட்டி வரை சென்று சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மா தானாம்.

`என் அம்மாவை என் தாத்தா பள்ளிக்கு அனுப்ப வில்லை, எழுத, படிக்க தெரிந்து விட்டால், என் அம்மா யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம் காரணமாம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்கள் நால்வருக்கும் ஏற் பட்டுவிடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல் வியும் சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந் திருக்கிறேன்! என்கிறபோது ஈரத்துடன் பளபளக்கின்றன அவர் விழிகள்!

1950-களில் வழக்கறிஞராக பணியாற்ற ஆரம்பித்த போதே நிறவெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப் பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப்போதைய தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களால் இவர் சந்தித்த பிரச்சினைகள் ஏரா ளம். ஒரு கட்டத்தில் இவ ருடைய கடப்பிதழ் முடக்கி வைக்கப்பட்டது. அதற்கெல் லாம் அசந்து விடாமல் சட்டத்தின் மூலமே தன்னைத் தற்காத்துக் கொண்டதோடு, நிற வெறியால் பாதிக்கப்பட் டவர்களுக்கு விடிவெள்ளி யாகவும் விளங்கினார்.

`நிற வெறிக்கு எதிராக 28 ஆண்டுகள் போராடினேன். சட்டக் கல்லூரியில் வெள் ளையர் அல்லாதவர்களுக் கான தனி வகுப்பறையில் படித்துத்தான் சட்டம் முடித் தேன். ஒரு வழக்கறிஞராக, நீதிமன்றத்தில் பிறரின் உரிமை களுக்காக வாதாடிய சமயத் திலும்கூட, நான் வெள்ளை யர்களில் ஒருத்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியின் அறைக்குள் நுழைகிற உரிமை எனக்குத் தரப்படவில்லை. ஆனால், அந்த வலிகளெல்லாம்தான் எனக்கு வலிமை தந்தது என்று தன் வாழ்நாளில் கறுப் புப் பக்கங்களை கசப்போடு திரும்பிப் பார்க்கிறார் நவநீதம் பிள்ளை.

1992-இல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக் கறிஞர்கள் இருவர் துணை யுடன் `இக்வாலிட்டி நவ் (Equality Now) என்ற பெண் களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து பெண்களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில் எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார்.

``இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கு இருக்கிறது. அவரும் வழக் கறிஞர்தான். நிறவெறிக்கு எதி ராக அவர் வாதாடியாதால் ஐந்து மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டார்.

இப்போது அவர் உயி ருடன் இல்லை என்றாலும் என் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக் கிறார் என்று உணர்வு பூர்வமாக நினைவு கூர்கிறார் தன் கணவரை.

``ஒரு காலத்தில் வெள்ளை யர்கள் எங்களை `பிளாக் பியூட்டி என்று அழைத்தனர். ஆனால் குதிரைகளைத்தான் அப்படி அழைப்பார்கள் என்று தெரிய வந்தபோது அந்த வார்த்தையையே நான் வெறுத்தேன். அப்படி, அவர் களின் ரத்தத்திலேயே கலந் திருக்கும் நிறவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என நான் நினைத்துக்கூட பார்த்த தில்லை. இப்போது உள்ள குழந்தை களுக்கு நிறவெறி என்றால் என்ன என்று கூட தெரிய வில்லை. அதுதான் எங்களின் வெற்றி.. என்று கண்களை மூடி மெதுவாக சிரிக்கிறார் இந்த 66 வயதான நீதிபதி.

http://viduthalai.com/20080412/snews06.html

நல்லது செய்யணுமே...

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்காக(positive) சிந்திப்போம். காலம் ஒன்று எங்களுக்காக கனியாமலா போகும் தூயா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறவெறியை வென்ற தமிழ்ப் பெண்

இப்படி பார்க்கப்போனால் வேற்றுமொழியில் வாழும் தமிழ்ப்பிரபலங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆனால் ஈழத்திற்கு இவர்களால் ஒன்றும் ஆகப்போவதில்லை சிலவேளைகளில் உபத்திரத்தை தவிர :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்போக்காக(positive) சிந்திப்போம். காலம் ஒன்று எங்களுக்காக கனியாமலா போகும் ?

முப்பதுவருடமாக சிந்தித்து இப்போது எம்மிடம் என்ன இருக்கின்றது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதானே பதவிக்கு வந்திருக்கார் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.