Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு - ரம்புக்வெல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு. கிளிநொச்சியை முழுமையாகக் கைப்பற்றி அதனைக் கொண்டாடும் நாள் வெகு விரைவில் இல்லை. விடுதலைப் புலிகள் தற்போது பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர். விடத்தல் தீவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியது கடற்புலிகளினது தளபதி சூசைக்கு இது பாரிய தோல்வி என அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல மேலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படையினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியை கைப்பற்றவதே என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் அந்த இலக்கை அடைந்து பூரண வெற்றியை கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை என சுட்டிக் காட்டியுள்ளார். அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். படையினர் விடத்தல்தீவைக் கைப்பற்றியதன் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கடற்புலிகள் தலைவர் சூசைக்கு இதுஓர் பாரிய தோல்வியெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://puspaviji.blogspot.com/

போகும் போது முறிகண்டியில நின்று கச்சான் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு போங்கோ என,,

Edited by அகதி

  • கருத்துக்கள உறவுகள்

துணுக்காய் பகுதிக்கு சத்தமில்லாமல் வந்தது போல கிளிநொச்சிக்கும் வரலாம் என்று ஆசை வந்துவிட்டதாக்கும்!

அரசு பெறும், பெற்றுக் கொண்டதாக நம்பும் பாரிய வெற்றிகளின் கனவுகள் சிதைக்கப்படுநாள் விரைவில் வரும். பின்னடைவுகள் என்று புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு என்ன காரணம் என்பதை நாம் மட்டுமல்ல எவரும் அறியார். பின்னடைவு என்றால் தோற்கின்றார்கள் என்ற அர்த்தங்களே மேலோங்கி நிற்கின்றன. இந்த நிலை எவ்வளவு தூரம் அனுமதிக்கப்படப் போகின்றதென நாம் அறியமாட்டோம். இவ்வாறான வல்வளைப்புகளுக்கு தமிழர் பிரதேசம் உள்ளாக்கப்படும் போது பேசாதிருக்கும் உலகம், தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்படவிருக்கும் எதிர் நடவடிக்கைகளுக்கும் அனுமதித்துப் பேசாதிருக்கும் என நம்பலாமா? அல்லது பின்னடைவு தோல்வி என்ற மாயைகளை ஏற்படுத்தி, பேச்சு மேடைக்கு இலங்கையரசை இழுத்து மீண்டுமொருதடவை அதனது சுயரூபத்தினை வெளிப்படுத்தும் நோக்கங்களிற்காக இந் நிலை அனுமதிக்கப்படுகின்றதா?

பேசாமல் நெடுங்கேணிக்காலை ஓட்டு சுட்டானுக்கை போனால் முல்லைதீவு பக்கம் அல்லது மணலாறும். மாங்குளமும் சண்டை இல்லாமல் வாறத்துக்கு சந்தர்ப்பம் இருக்கு.

பேசாமல் நான் இராணுவ ஆலோசகரா போகலாம் போலகிடக்கு.

Edited by பொய்கை

பேசாமல் நெடுங்கேணிக்காலை ஓட்டு சுட்டானுக்கை போனால் முல்லைதீவு பக்கம் அல்லது மணலாறும். மாங்குளமும் சண்டை இல்லாமல் வாறத்துக்கு சந்தர்ப்பம் இருக்கு.

பேசாமல் நான் இராணுவ ஆலோசகரா போகலாம் போலகிடக்கு.

உண்மைதான் பேசாமல் ரம்புக்கல மாதிரி ஒரு பதவி கிடைத்துவிட்டால் சுகமாயிருந்துவிடலாம்.

போகும் போது முறிகண்டியில நின்று கச்சான் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு போங்கோ என,,

கிகிகிகிகி விட்டால் போய் வாங்கி குடுப்பிங்க போல :lol:

ஈஈஈஈஈஈ இந்த தாடிக்காறன் தொல்லை தாங்க முடியல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சார்க் மாநாடு முடிந்தவுடன் இதற்கான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். :lol: (இந்தியாவின் பூரண ஒத்துழைப்போடு)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ரம்புக்வெலவ நையாண்டி காட்டினதுதான் மிச்சம். பார்க்கப் போன அந்தாள் சொன்னதெல்லாம் நடந்திட்டுது தான் இருக்குது..!

கிழக்கைப் பிடிப்பம் எண்டாங்கள்.. பிடிச்சாங்கள்.

மடுவைப் பிடிப்பம் எண்டாங்கள் பிடிச்சாங்கள்.

விடத்தல் தீவைப் பிடிப்பம் எண்டாங்கள் பிடிச்சாங்கள்.

இப்ப துணுக்காய் மல்லாவிக்கு கிட்டவே வந்திட்டாங்கள்.. அங்கால மாங்குளம் போறது பெரிய காரியமில்ல.

மேற்கால விடத்தல் தீவை தாண்டி இலுப்பக்கடவையையும் பிடிச்சிட்டாங்கள். வெள்ளாங்குளம் தான் பாங்கி.. மன்னார் மாவட்டத்தில. அதைத் தாண்டிட்டா.. கிளிநொச்சி...

மணலாறு பக்கத்துக்காலும் குடைஞ்சிட்டு வாறாங்கள்.

***

அப்படியே இதையும் வாசியுங்கோ.. அத்தாஸ் என்ன சொல்லுறார் என்று கேளுங்கோ..

http://www.sundaytimes.lk/080720/Columns/sitreport.html

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்வாங்கல் என்பது சிலநேரங்களில் அவசியமாகின்றது அது ஒரு தற்காலிகமான பின்னடைவே ஆனால் அவை நிரந்தரமில்லை என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பின்வாங்கல் என்பது சிலநேரங்களில் அவசியமாகின்றது அது ஒரு தற்காலிகமான பின்னடைவே ஆனால் அவை நிரந்தரமில்லை என்பதே உண்மை.

உண்மையாக இருக்கலாம் அண்ணை.

ஆனால் ரம்புக்வெலவுக்கு போட்டியா விட்ட அறிக்கைகளோட ஒப்பிடேக்க.. ரம்புக்வெல விட்டதுகள் நடந்திட்டுத்தானே இருக்குது.

எனி யுத்தம்.. தென்னிலங்கையில எண்டவையும்.. இதோ இறுதி யுத்தம் எண்டவையும்.. இதோ அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழீழத்தில நிப்பம் எண்டவையும்.. எதிரி ஒரு அடிதானும் எமது மண்ணை எனி அபகரிக்க முடியாது எண்டவையும்... அறிக்கை விட்டு சாதிக்காததை... ரம்புக்வெல.. செய்து காட்டித்தானே இருக்கிறார்.. அதை ஏற்றுக் கொண்டு தானே ஆகனும்.

எனி நாங்க.. புதிசு புதிசா.. பழசுகளை உதாரணம் காட்டி அறிக்கை விட்டிட்டு இருப்பம்.. ஆனால்.. அவங்கள் விட்டதெல்லாம் பிடிச்சுக் கொண்டு வாறதைக் கூட வெளில சொல்லமாட்டம். சனமா ஓடேக்கதான் தெரியும்.. கிளிநொச்சிக்கும் வந்திட்டாங்களாம் என்று..! :lol::lol:

நெடுக்

நீங்கள் சொல்வது சரி தான்.ஆனால் ஒன்றை மறந்து விட்டீர்கள்.இதே நிலைதான் 96 97ல் நடந்தது ஆனால் அந்த நேரத்தில் எம்முடைய ஊடகத்துறை சொல்லும்படியான வளர்ச்சியை எட்டவில்லை.அதனால் எமக்கு அது பெரிதாக காட்டவில்லை.விடுதலை புலிகள் 2 கிழமையில் விட்ட இடங்களை பிடித்த பின்தான் எமக்கு தெரிந்தது.ஆனால் இப்போது எமது ஊடகத்துறை வளர்ச்சியடைந்து விட்டது.அதனால் நாம் கவலைபடுகின்றேம்.

பொறுத்திருங்கள் பொறுத்தார் பூமி ஆழ்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாக இருக்கலாம் அண்ணை.

ஆனால் ரம்புக்வெலவுக்கு போட்டியா விட்ட அறிக்கைகளோட ஒப்பிடேக்க.. ரம்புக்வெல விட்டதுகள் நடந்திட்டுத்தானே இருக்குது.

எனி யுத்தம்.. தென்னிலங்கையில எண்டவையும்.. இதோ இறுதி யுத்தம் எண்டவையும்.. இதோ அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழீழத்தில நிப்பம் எண்டவையும்.. எதிரி ஒரு அடிதானும் எமது மண்ணை எனி அபகரிக்க முடியாது எண்டவையும்... அறிக்கை விட்டு சாதிக்காததை... ரம்புக்வெல.. செய்து காட்டித்தானே இருக்கிறார்.. அதை ஏற்றுக் கொண்டு தானே ஆகனும்.

எனி நாங்க.. புதிசு புதிசா.. பழசுகளை உதாரணம் காட்டி அறிக்கை விட்டிட்டு இருப்பம்.. ஆனால்.. அவங்கள் விட்டதெல்லாம் பிடிச்சுக் கொண்டு வாறதைக் கூட வெளில சொல்லமாட்டம். சனமா ஓடேக்கதான் தெரியும்.. கிளிநொச்சிக்கும் வந்திட்டாங்களாம் என்று..! :lol::lol:

இது வரைக்கும் புலிகள் வலிந்த ஒரு தாக்குதலை இன்னமும் செய்யவில்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும் . நெடுக்ஸ் உங்கள் ஆதங்கம் எனக்கு விளங்குது நாம் எல்லாவற்றையும் இழக்கிறோமே என்று நீங்கள் ஆதங்கப்படுகிறீர்கள் உங்கள் உணர்வு மதிக்கப்படவேண்டியது ஆனால் நாங்கள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டிய நிலையில் இருக்கிறோம் எங்கள் போராட்டம் முழுக்க முழுக்க மக்களை நம்பியே இருக்கிறது ஆகவே அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் செயற்பாடுகளில் நாம் ஈடுபடவேண்டும்.மீண்டும் சொல்கிறேன் தற்போது ஏற்பட்டுள்ளவை ஒரு தற்காலிகமான பின்னடைவே ஆனால் அவை நிரந்தரமில்லை .

உண்மையாக இருக்கலாம் அண்ணை.

ஆனால் ரம்புக்வெலவுக்கு போட்டியா விட்ட அறிக்கைகளோட ஒப்பிடேக்க.. ரம்புக்வெல விட்டதுகள் நடந்திட்டுத்தானே இருக்குது.

எனி யுத்தம்.. தென்னிலங்கையில எண்டவையும்.. இதோ இறுதி யுத்தம் எண்டவையும்.. இதோ அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழீழத்தில நிப்பம் எண்டவையும்.. எதிரி ஒரு அடிதானும் எமது மண்ணை எனி அபகரிக்க முடியாது எண்டவையும்... அறிக்கை விட்டு சாதிக்காததை... ரம்புக்வெல.. செய்து காட்டித்தானே இருக்கிறார்.. அதை ஏற்றுக் கொண்டு தானே ஆகனும்.

எனி நாங்க.. புதிசு புதிசா.. பழசுகளை உதாரணம் காட்டி அறிக்கை விட்டிட்டு இருப்பம்.. ஆனால்.. அவங்கள் விட்டதெல்லாம் பிடிச்சுக் கொண்டு வாறதைக் கூட வெளில சொல்லமாட்டம். சனமா ஓடேக்கதான் தெரியும்.. கிளிநொச்சிக்கும் வந்திட்டாங்களாம் என்று..! :lol::lol:

உங்கள் ஆதங்கம் புரிகிறது! ஆனால் இராணுவ திட்டங்களை எதிரியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு மாற்றிவிட முடியாது.

தமிழர் தரப்பின் மிதமிஞ்சிய பொறுமை பலவீனத்தின் அறிகுறி அல்ல என்பது மட்டும் எனக்கு புரிகிறது!

இதற்கு மேல் இதை ஆய்வு செய்வது கூட உகந்ததல்ல என்றே நான் நினைக்கிறேன். :lol:

Edited by vettri-vel

சிறிலங்கா ஆமிக்காரங்கள் எல்லாத்தையும் புடிச்சாலும் போராட்டம் தொடரும்..... எந்த நிலை வந்தாலும் எங்கள் ஆதரவு தொடரும்....

எங்கட பத்திரிகைகாரர் சாத்தப் போகினம் ஓரு சாத்து ! பாரங்கொவன் தெரியும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலுப்பைகடவை - முழங்காவில் - பூநகரி ஊடாக கேரதீவு - யாழ்ப்பாணம்

என்றுதான் நினைக்கிறன்.

எனி நாங்க.. புதிசு புதிசா.. பழசுகளை உதாரணம் காட்டி அறிக்கை விட்டிட்டு இருப்பம்.. ஆனால்.. அவங்கள் விட்டதெல்லாம் பிடிச்சுக் கொண்டு வாறதைக் கூட வெளில சொல்லமாட்டம். சனமா ஓடேக்கதான் தெரியும்.. கிளிநொச்சிக்கும் வந்திட்டாங்களாம் என்று..! :unsure::o

பொங்கு தமிழில் கஜேந்திரகுமார் அவர்களின் உரையை உற்று கேட்டு( கேட்டு இருப்பீர்கள்) இருந்தால் நிலை புரியலாம்... எங்கள் மீது தடை போட்டவர்கள் எல்லாம் எங்களை தடுக்க வில்லை... ஆனால் எங்களின் தலைமையை மாற்ற நினைக்கிறார்கள்... அதனால்த்தான் பெரிய அளவில் கூடி அவர்களின் பெயரை கூட சொல்ல தடுக்கிறார்கள் என்பதை தெளிவு படுத்தினார்...

அதோடு தமிழர்களின் தலைமையின் தலையில் இலங்கை அரசை அரசியலாலும், பொருளாதார ரீதியிலும் ( உடனடியாக படைகளை அல்ல) பலவீனப்ப்படுத்தும் கடமை தங்கி உள்ளது.... இலங்கை பொருளாதாரம் தேங்கும் போது தமிழீழ மக்களும் பாதிக்கப்படுவார்கள்... ஆதாலால் அதை விரைவு படுத்த முடியாது... அப்படி விரைவு படுத்தினால் போராட்டம் பாதிக்கப்படும்...

மற்றது முக்கியமாக தமிழர் தரப்பின் கை ஓங்கும் நிலை ஏற்பட்டால் இன்னும் இன்னும் ஒரு சமதான தூதர்கள் வந்து ஏற்பாடு செய்யும் நிலை வரும்... அதையும் மீண்டும் அனுமதிக்க முடியாது...!!

இப்போதைக்கு இராணுவத்தை இன்னும் பரவ விடுவது மட்டும்தான் நல்லது... அதுதான் மேலே சொன்ன எல்லாவற்றையும் நிர்ணயிக்கும்....

இன்று இலுப்பைகடவையை பிடித்ததாக அறிவித்து உள்ளார்கள்

இலுப்பைகடவை - முழங்காவில் - பூநகரி ஊடாக கேரதீவு - யாழ்ப்பாணம்

என்றுதான் நினைக்கிறன்.

வந்தது போல இன்னும் இரண்டு மடங்கு தூரம் போக வேண்டும்....!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ஆமிக்காரங்கள் எல்லாத்தையும் புடிச்சாலும் போராட்டம் தொடரும்..... எந்த நிலை வந்தாலும் எங்கள் ஆதரவு தொடரும்....

இதுதான் உண்மை

பாதைகள் மாறலாம்

பயணங்களும் மாறலாம்

பயணிகளும் மாறலாம்

ஆனால் போகவேண்டிய இடம் மட்டுமே ஒன்று....

அதை அடையும்வரை.......................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேகத்தில போனால்.. இராணுவம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வெள்ளாங்குளம் வரும் வரை வரும்.. பின் கிழக்கே.. மாங்குளம் வரை போகும். அதன் பின்னர் கிழக்கே கிளிநொச்சி நோக்கியும் மேற்கே பூநகரி நோக்கியும் நகரும்..!

இப்படியே விட்டா... வன்னி.. ஆமியிட கையில போகும் போலத்தான் தெரியுது.

தமிழீழம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு சாத்தியப்படுற விசயமா இல்ல என்று தீர்மானிச்சிட்டினம் போல..!

வடக்கின் முதல்வரா டக்கிளசை ஏற்றுக் கொண்டு மக்கள் இராணுவத்தின் அடிமைகளாக வாழ வேண்டியதுதான்.. 30 வருட போராட்டத்தில் கண்ட மிச்சம்.. கருணாவும் பிள்ளையானும் டக்கிளசும்..! :unsure::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் வன்னிக்குள் முன்னேறி வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதில் ரம்புக்வெல்லவைக் கிண்டலடிப்பதில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. கோமாளித்தனமாக இருந்தாலும் அவர் சொன்னவைகள் காலம் தாழ்த்தியாவது நடைபெற்று வருகிறது என்பதுதான் உண்மை.

சமாதானக் காலம் எமக்கு மிகவும் பெரிய இழப்புக்களை ஏற்படுத்தி விட்டது. கருணா தன்னுடன் கிழக்கு மாகாணப் போராளிகளைப் பிரித்துக் கொண்டு சென்றதில் இருந்து ஆரம்பமாகிய இந்த பின்னடைவு, மாவிலாறு மூதூர் தொடங்கி வாகரை உற்பட்ட கிழக்கு மாகாணம் முழுவதற்குமான இழப்பாகப் போனது எமது துரதிஷ்ட்டம் தான். இன்று வன்னிக்குள்ளும் ராணுவம் மெதுவாக முன்னேறி வருகிறது.

இப்போது உள்ள நிலவரத்தின்படி எம்மால் சிந்திக்கக் கூடியது ஒன்றுதான். புலிகள் களத்தில் போராளிகளுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்காக முடிந்தளவுக்கு மோதல்களைத் தவிர்த்து தமது நிலைகளில் இருந்து பின்வாங்குகிறார்கள் என்பதே அது.

ஆயுதக் கப்பல்களின் வருகையும் அடுத்தடுத்த கப்பல் அழிப்புகளில் குறைவடைந்து இருக்கலாம். இது மோதல்களில் புலிகளின் எல்லையற்ற சுடுதிறனைப் பாதித்துமிருக்கலாம். ஆகவே உள்ள வளங்களைப் பாதுகாத்துக்கொண்டு தேவையான அல்லது அவசியமான களங்களில் மட்டுமே போரிடுவது என்றுங்கூட முடிவெடுத்திருக்கலாம். இதற்கு நல்ல உதாரணம், முகமாலைக் களம். அங்கு முன்னேறத் தடுமாறும் ராணுவம் மிக இலகுவாக வன்னிக்குள் முன்னேறுகிறது.

எல்லா போராட்ட இயக்கங்களுக்கும் போல் எமது போராட்டமும் சமாதானக் காலத்தில் சற்றுப் பின்னடைவைச் சந்தித்தது உண்மைதான். தனிநாடு பெறும் காலம் நெடுந்தூரமாகத் தெரிந்தாலும் அதற்கான தேவை எப்போதும் போல அதிகரித்தே வருகிறது. இழப்புகளைக் கண்டு சலனமடையாது தொடர்ந்து முனேறுவது எப்படியென்று சிந்திப்பதுதான் இன்று அவசியமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.