Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் தயாரா?

41 members have voted

  1. 1. சுதந்திர தமிழீழத்தில் வாழத் தயாரா?

    • நிச்சையமாக, அடுத்த முதல் விமானத்தில் ஏறத் தயார்.
      16
    • நிச்சையமாக, சில காலம் களித்து.
      14
    • அங்குள்ள நிலமையைப் பொறுத்து, சில காலம் களித்து.
      7
    • அங்குள்ள நிலமையைப் பொறுத்து, பார்க்கலாம் ....
      1
    • இல்லை. (காரணம்?)
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

நான் உடனேயே போவன் :lol:

பொய் இல்லை உண்மை.

நான் எழுதுவது தமிழீழத்தில் சாத்தியப்படுமாயின் உடன் போவேன்.

நான் இங்கே வேறு ஒருத்தற்றபேரில வீடுவாங்கி வச்சிருக்கன்

நான் இருப்பதுஎனது வீடு என்று கவுன்சிலுக்கு தெரியாது அதனாலே எனக்கு கவுன்சில்[council]வீட்டு வாடகைபணம் தருது அதை எனது வீட்டைசொந்தமாக்க கட்டிகொண்டு இருக்கேன்.

மற்றது கிறெடிட் காட்டிலே ஏதும் சுத்துமாத்து செய்யஏலுமே?

நான் வந்து நேராய் லண்டன் வந்தனான் சும்மாஇல்லை.

இப்ப பிராஞ்சு ஜேர்மன் டென்மாக் இங்கிருந்தெல்லாம் நம்ம சனம் வருகுது.

ஏன்தான் வாறாங்களோ? எங்கை பாத்தாலும் டமில் சனம் .

பேசாமல் நாட்டுக்கே போகலாம் எண்டு இருக்கேன் :lol:

Edited by r.raja

  • Replies 77
  • Views 8.8k
  • Created
  • Last Reply

நானும் எனது மண்ணில் போய் வாழவே விருப்பப்படுகிறேன். பலகாலமாக, வெளிநாட்டு வசதிகளுக்குப் பழகிப் போயிருந்தாலும், நான் அங்கு சென்ற வேளையில் அது பெரிதாகத் தோன்றவில்லை. அங்கிருந்த சொற்ப வசதிகளோடே வாழப் பழகிக் கொண்டேன். கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குளிப்பது முதற்கொண்டு, பழைய கழிப்பறையைப் பாவிப்பதுவரை அனைத்தையும் அந்த வாழ்வியலோடு வாழ்ந்தேன். இங்கிருந்து போகும்போதே அப்படியான இடத்தில்தான் இருக்கவேண்டுமென விரும்பினேன். அப்படியே அமைந்தும் விட்டது. :lol: அதனால், எனக்குப் பிரச்சனையாக இருக்காது. ஆனால், அங்கிருந்த மக்களின் வாழ்வுநிலையை (ஏற்றத்தாழ்வு) அவதானித்தபோது என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அதனால், தமிழீழம் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து, எல்லா மக்களும் ஓரளவேனும் வசதிகளோடு வாழத் தொடங்கியபின்பே நான் அங்கு சென்று வாழுவேன். அதுவரையிலும், இங்கிருந்தே எனது கடமைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பேன்.

ஆனால், ஓரளவு பிரச்சனைகள் குறைந்ததும் நான் அடிக்கடி அங்கு சென்று வருவேன். அதற்கான நாட்களைத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். பதினைந்து வருடங்கள் தொடர்ந்து இங்கு வாழ்ந்தபோது அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால், அங்கு சென்று வந்தபின்பு, அடிக்கடி செல்லவேண்டும் போல் உள்ளது. இத்தனைக்கும், நான் பிறந்த மண்ணிற்குச் செல்லவில்லை. யார் நினைத்தாலும் இப்போது அங்கு போகமுடியாத சூழ்நிலை. இப்போதைய நிலையில், அந்த ஊர் இருந்த அடையாளமே இல்லாமல் இருப்பதாக, சமீபத்தில் அங்கு சென்று வந்தவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். எல்லாமே முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டு, முழுவதும் வெட்டவெளியாகக் காண்பதாகக் கூறினார். கேட்டபோது, எமது நெஞ்சே வெடித்தது போலிருந்தது. நான் அங்கு திரும்பச் சென்றாலும், நான் பிறந்து வளர்ந்த வீட்டையோ, ஏறி மகிழ்ந்த மரங்களையோ ஏன் ஒரு செடிகொடியைக்கூட காணமுடியாத நிலை. நாம் எவ்வளவுதான் தோண்டினாலும், நாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் ஆக்கிவிட்டார்களே. :lol::lol:

Edited by Thamilachchi

நான் உடனேயே போவன் :lol:

பொய் இல்லை உண்மை.

நான் எழுதுவது தமிழீழத்தில் சாத்தியப்படுமாயின் உடன் போவேன்.

நான் இங்கே வேறு ஒருத்தற்றபேரில வீடுவாங்கி வச்சிருக்கன்

நான் இருப்பதுஎனது வீடு என்று கவுன்சிலுக்கு தெரியாது அதனாலே எனக்கு கவுன்சில்[council]வீட்டு வாடகைபணம் தருது அதை எனது வீட்டைசொந்தமாக்க கட்டிகொண்டு இருக்கேன்.

மற்றது கிறெடிட் காட்டிலே ஏதும் சுத்துமாத்து செய்யஏலுமே?

நான் வந்து நேராய் லண்டன் வந்தனான் சும்மாஇல்லை.

இப்ப பிராஞ்சு ஜேர்மன் டென்மாக் இங்கிருந்தெல்லாம் நம்ம சனம் வருகுது.

ஏன்தான் வாறாங்களோ? எங்கை பாத்தாலும் டமில் சனம் .

பேசாமல் நாட்டுக்கே போகலாம் எண்டு இருக்கேன் :lol:

சொன்னால் நம்ப மாட்டீங்க நீங்க எழுதியதைப் பார்த்ததும் அப்படியே உடம்பெல்லாம் புல்லரிச்சுது. :lol: எங்க போனாலும் எங்கடை டமிழ் சனம் தான். அதாலை தான் நானும் யோசிக்கிறன் !!!!! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என்பதற்கு வாக்களித்துள்ளேன். அதுதான் உண்மையும் கூட. பென்சன் எடுக்கிற காலத்தில சிலநேரம் போக நினைப்பேன் மற்றபடி இல்லை. நாடு கிடைத்தாலோ, அமைதியான சூழல் உருவாகினாலோ பிறந்த ஊருக்கு நிச்சயம் போய்வருவேன். மற்றபடி அங்குவாழ்வதென்பது சாத்தியம் இல்லையென நினைக்கிறேன். முக்கியமான காரணங்கள்:

போட்டி, பொறாமைகளை சகிக்கமுடியாது

சூழலை அசுத்தபடுத்துபவர்களை பார்க்க சகிக்கமுடியாது - கேட்கவோ சொல்லவோ முடியாது

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை பார்க்க சகிக்கமுடியாது

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சட்டங்கள் இருப்பது சகிக்கமுடியாது

ஊழல்களை சகிக்கமுடியாது

இப்படிப்பல....என்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...எல்லாரும் ஏச நினைப்பதும் விழங்குகிறது. விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையின் அரைப்பகுதிக்கு மேல் இங்கு குப்பபை கொட்டியாச்சு. என்னைப்பொறுத்த மட்டில் எனது நாடு எனக்கு மிகவும் படித்தது. ஒண்டும் இல்லாமல் இவ்வளவு முன்னேற்றம் அடைவதற்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் சுதந்திரம் தந்தது. எனது நாட்டிற்க்குதான் முன்னுரிமை. தமிழீழம் கிடைத்ததன் பின்னர் தமிழீழ அரசோ மக்களோ எனது சேவைகளை எதிர்பார்த்தால் நிட்சயம் வழங்குவேன். 90 வீதத்திற்கும் மேலானவர்கள் நாட்டிற்கு திரும்பி போவதாக கூறுகின்ற படியால் எனது சேவைகள் எனக்கு தேவைப்படாதென்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிலைமைகளைப் பொறுத்து, சில காலம் கழித்து என்று வாக்களித்திருந்தேன்.

நான் எங்கள் ஊர்ப்பக்கம் கால்வைத்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகிவிட்டன. :lol: ஆனால் உடனடியாகப் போக முடியாது. அங்கேயுள்ள சூழ்நிலைகளைப் பொறுத்து ஏதாவது சுயதொழில் செய்ய முடியுமாயின் செல்வேன். எது எப்படியாயினும் ஓய்வு காலத்தில் நிச்சயம் இங்கு இருக்க மாட்டேன். இந்த நாட்டில் குளிரோடு மல்லுக்கட்டுவது கடினம். :lol:

வெளிநாடுகளில் பெரும்பாலும் வாழ்ந்திருந்தாலும் இலங்கைக்கு சிலமுறையும் இந்தியாவுக்கு அடிக்கடியும் சென்று தங்கியிருப்பதால் வசதிக் குறைவு எனக்கு ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. என்னைப் ப்றுத்தவரையில் வேலை வாய்ப்பே முக்கியம். அது உறுதிப் பட்டுவிட்டால் பிறகென்ன .. நாடுதான்..! :lol:

நான் நிலைமைகளைப் பொறுத்து, சில காலம் கழித்து என்று வாக்களித்திருந்தேன்.

நான் எங்கள் ஊர்ப்பக்கம் கால்வைத்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகிவிட்டன. :lol: ஆனால் உடனடியாகப் போக முடியாது. அங்கேயுள்ள சூழ்நிலைகளைப் பொறுத்து ஏதாவது சுயதொழில் செய்ய முடியுமாயின் செல்வேன். எது எப்படியாயினும் ஓய்வு காலத்தில் நிச்சயம் இங்கு இருக்க மாட்டேன். இந்த நாட்டில் குளிரோடு மல்லுக்கட்டுவது கடினம். :lol:

வெளிநாடுகளில் பெரும்பாலும் வாழ்ந்திருந்தாலும் இலங்கைக்கு சிலமுறையும் இந்தியாவுக்கு அடிக்கடியும் சென்று தங்கியிருப்பதால் வசதிக் குறைவு எனக்கு ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. என்னைப் ப்றுத்தவரையில் வேலை வாய்ப்பே முக்கியம். அது உறுதிப் பட்டுவிட்டால் பிறகென்ன .. நாடுதான்..! :lol:

வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால், சம்பளம்தான் குறைவாக இருக்கும். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால், சம்பளம்தான் குறைவாக இருக்கும். :lol::lol::lol:

இங்க மினக்கட்டு டொலர்ல உழைச்சும் ஏதும் தங்கிற மாதிரி தெரியேல்ல. வரியில எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போறான். :lol: அதுக்குப் பேசாமல் குறைவா உழைச்சாலும் நிறைவா ஊரில வாழலாம்போல இருக்கு. எதுக்கும் கொஞ்சம் சேமிச்சுக் கொண்டு போனல் நல்லம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால், சம்பளம்தான் குறைவாக இருக்கும். :lol::lol::lol:

தமிழீழம் கிடைத்தால் இன்னொரு சிங்கப்பூராகத் தமிழீழம் வளர்ச்சி பெறும். அப்பொழுது வேலை செய்வதற்காக பல வேற்று நாட்டவர்களும் செல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கிடைத்தால் இன்னொரு சிங்கப்பூராகத் தமிழீழம் வளர்ச்சி பெறும். அப்பொழுது வேலை செய்வதற்காக பல வேற்று நாட்டவர்களும் செல்வார்கள்.

அப்படி நடக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும். ஆனால் கொஞ்ச காலம் எடுக்கும் எண்டுதான் நினைக்கிறேன். சமாதானக்காலத்தில் வெளிநாட்டு பணங்களில் ஊருக்கு ஊர் மும்மரமாக நடந்த கட்டுமான வேலையென்றால் கோவில் கட்டுவதும் தேர் கட்டுவதுமாகத்தான் இருந்தது.

எனது ஊர் மிகச்சிறிய ஊர். இரு பெரிய கோவிலும் நிறைய சிறிய கோவில்களும் இருந்தன. ஒரு பெரிய கோவிலில் பெரிதாக திருவிழா நடக்கும். மற்றக்கோவில்களில் வருடா வருடம் சிறியதாக அலங்கார திருவிழா நடக்கும். சமாதான காலங்களில் மேலும் 2-3 கோவில்களை சுற்று வட்டார காணிகளை வாங்கி தேர் கட்டி தேர் இழுத்திச்சினம். பாழைய கோவில் தேர் இராணுவத்தால் சேதமாக்கபட்டது. ஆனாலும் சுவிசில் இருந்து போன உறவினர் ஒருவர் எவ்வளவு பணம் செலவானாலும் தான் அங்கு நிற்கும் வருடம் தேர் செய்யவேண்டும் என கூறி 50 இலட்சம் ரூபாக்கள் கொடுத்து தேர் செயது இழுக்க வைத்தாராம். ஆனால் அங்கு உள்ள பாடசாலையையோ, நூல்நிலையத்தையோ திருத்த கேட்டா... எங்கட பிள்ளையள் எல்லாம் வெளியூர் பாடசாலைகளில் படிக்கிறார்கள் என்பதும், அரைவாசி வெளியூரவரகளே அங்கு வசிக்கிறார்கள் என்பதும் ஆகத்தான் பதில் இரந்தது. அதோட பாடசாலைக்கு முன்னால் சினிமா தியேட்டர் கட்ட சிலர் முயற்சித்தனர். எல்லா கோவில்களிலும் ஒலிபெருக்கிகளை வைத்து போட்டிக்கு பாட்டு போடுவினம். சிறிய ஊர், கோவில்கள் பக்கம் பக்கம்.... எல்லா கோவில்பாட்டுகளும் கலக்க எப்பிடி இருக்கும் எண்டு யோசிச்சு பாருங்கோ.

என் ஊரில் நடந்தவற்றை தான் சொல்றேன்... ஆனாலும் ஊருக்கு ஊர் அப்படித்தான் இருக்குமெண்டு நினைக்கிறேன். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாராளமாக தண்ணீர் இருக்குதுங்கோ

நுளம்புக்கடிக்கு நுளம்புத்திரியும் இருக்கு

என்ன என்ன தேவையோ அதுக்கு மாற்றீட்டு பொருட்கள் இருக்கின்றன என நம்புகின்றேன் :lol:

ஏன்வென்னிலா அங்கேயும் எங்கட மக்கள் இந்த துயரம் எல்லாம் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் தானே. உன்மையில் நாங்கள் கோழைகள் இந்த நுழம்புக்கடியைக்கூட தாங்கமாட்டம் ஆனால் இங்க செல்லடியையே எதிர்கொள்கிறார்களே. வாழ்க எம்மக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சையமாக, முதல் விமானத்தில் ஏற முடியாவிட்டாலும், நான் எவ்வளவு சீக்கிரமாக அங்கு செல்ல முடியுமோ, அவ்வளவுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்வேன். சிலபேர் (என்னையும் சேர்த்துத்தான்) நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தாம் அங்கு போய் என்ன செய்வதின்றி உள்ளார்கள். இங்கிருந்து தேவையான பணத்தை சேகரித்து அங்கு ஓர் சுயதொழிலை தொடங்கத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்று எண்ணுகிறேன். நானும் அப்படித்தான், அங்கு நிரந்தரமாகத் தங்க முதல், சுயமாக ஓர் தொழிலை ஆரம்பிப்பதற்கு தேவையானவற்றை செய்து விட்டுத்தான் அங்கு செல்வென். ஆனாலும் எனது உள்மனதோ முதல் விமானத்திலேயேதான் ஏற ஏங்குகிறது.

இங்கு வெளிநாட்டில் வாழும் என்னைப் போன்ற இளையோர்களை எடுத்துக்கொண்டால், பெரும்பாலானவர்கள் இங்குள்ள வசதிகளை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு வரத் தாயார் இல்லை என்பதே நிஜம். தொழில்ரீதியாகத் தவிர மற்றும்படி அவர்களால் முடியாது.

சொன்னால் நம்ப மாட்டீங்க நீங்க எழுதியதைப் பார்த்ததும் அப்படியே உடம்பெல்லாம் புல்லரிச்சுது. :lol: எங்க போனாலும் எங்கடை டமிழ் சனம் தான். அதாலை தான் நானும் யோசிக்கிறன் !!!!! :lol::lol:

வசம்பு அண்ணா

போறபோக்கில முதல் விமானத்தில் நாங்கள் ஏறஏலாதுபோல இருக்கு :lol:

வசம்பு அண்ணா

போறபோக்கில முதல் விமானத்தில் நாங்கள் ஏறஏலாதுபோல இருக்கு :lol:

:icon_mrgreen:அட நீங்க முதலாவது விமானத்திலை ஏற முடியாதென்று வருத்தப்படுகின்றீங்கோ!! நான் 30 வதிலையாவது சீட் கிடைக்குமோ என்று மண்டையைப் போட்டுடைச்சுக் கொண்டிருக்கிறன். :lol:

நான் தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ என் தாய் மண்ணுக்குப் போகவே விரும்புகிறேன்.

:icon_mrgreen::lol: எப்ப வாறியல் நெடுக் தாத்தா? வரும்போது எனக்கு சொக்ளேட் கொண்டு வருவியளா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen::lol: எப்ப வாறியல் நெடுக் தாத்தா? வரும்போது எனக்கு சொக்ளேட் கொண்டு வருவியளா? :D

தாராளமா கொண்டு வரலாம். இங்கு சொக்கிலேட்டுக்குப் பஞ்சமே இல்ல. வந்து ஒரு வருசம்.. அதுதான் தொழிலே. எல்லா சொக்கிலேட்டும் உருசி பார்க்கிறது. அப்புறம் அலுத்துப் போச்சுது. ஆனா எப்ப வருவன் என்றதில தான் பிரச்சனையா இருக்குது..! நாட்டில பிரச்சனை ஓய்ஞ்சிட்டா வரலாம்..! உந்தப் பொலிஸ் பதிவும்.. இரவில ஐடி காட்டோட சோதனைக்கு வாறவ வரும் வரை நித்திரையில்லாம காத்திருக்கிறதும்.. எனக்கு என்னவும் நடந்திடுமோ என்று அம்மா அப்பா பதட்டப்படுறதும்.. எனக்கு அங்கை வாழ வெறுக்கப் பண்ணிப் போட்டுது. அந்த நிலை தீருது என்ற உடன வருவன்..! :lol:

Edited by nedukkalapoovan

இங்க மினக்கட்டு டொலர்ல உழைச்சும் ஏதும் தங்கிற மாதிரி தெரியேல்ல. வரியில எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போறான். அதுக்குப் பேசாமல் குறைவா உழைச்சாலும் நிறைவா ஊரில வாழலாம்போல இருக்கு. எதுக்கும் கொஞ்சம் சேமிச்சுக் கொண்டு போனல் நல்லம்.

உண்மைதான். மனம் இருந்தால் எங்கும் வாழலாம்.

தமிழீழம் கிடைத்தால் இன்னொரு சிங்கப்பூராகத் தமிழீழம் வளர்ச்சி பெறும். அப்பொழுது வேலை செய்வதற்காக பல வேற்று நாட்டவர்களும் செல்வார்கள்.

நிச்சயமாக. ஆனால், அது சாத்தியப்படுவதற்குச் சில காலங்கள் எடுக்கும். அதுவரையிலும், சமாதானகாலத்தில் இருந்த வசதிகளோடு வாழநினைப்பவர்கள் தாராளமாக அங்கு செல்லலாம். :icon_mrgreen::lol:

முதல் விமானத்தில் ஏறுவதாக இருந்தால் இப்பவே புக் பண்ணினால்தான் உண்டு. 2003ஆம் ஆண்டு இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்குக் கூட எமக்கு ரிக்கற் எடுக்க முடியவில்லை. சமாதான காலத்திலேயே இந்த நிலை என்றால், தமிழீழம் கிடைத்தால் நினைத்துக்ககூடப் பார்க்கமுடியாது.

எனக்கு என்னவும் நடந்திடுமோ என்று அம்மா அப்பா பதட்டப்படுறதும்.. எனக்கு அங்கை வாழ வெறுக்கப் பண்ணிப் போட்டுது. அந்த நிலை தீருது என்ற உடன வருவன்..! :rolleyes:

அப்ப ஏற்கனவே ஊரிலை நல்லதொரு வேலைக்கு பதிஞ்சு கிடைக்கும் எண்ட நம்பிக்கையிலை இருக்கிறீயள் போல...!! அப்ப எனக்கும் ஒரு வேலைக்கு சொல்லி வையுங்கோ....

அப்ப ஏற்கனவே ஊரிலை நல்லதொரு வேலைக்கு பதிஞ்சு கிடைக்கும் எண்ட நம்பிக்கையிலை இருக்கிறீயள் போல...!! அப்ப எனக்கும் ஒரு வேலைக்கு சொல்லி வையுங்கோ....

அட நீங்களொன்று அவற்றை ஏக்கமெல்லாம் கொழும்பிலை வாழுறதைப் பற்றியே!!

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்களொன்று அவற்றை ஏக்கமெல்லாம் கொழும்பிலை வாழுறதைப் பற்றியே!!

எனக்கு முதலாவது யாழ்ப்பாணம்.. அப்புறம் நுவரெலியா பிடிக்கும். கொழும்பு அவ்வளவா பிடிக்கல்ல. அங்க நான் ஏற்கனவே குறிப்பிட்ட காலம் வாழ்ந்துட்டன். இப்ப யாழ்ப்பாணத்திலும் கொழும்பு போலத்தானே சோதனை.. சாவடி.. கெடுபிடி.. எல்லாம். உதுகள் நீங்க வேணும். என்ர நண்பர்கள்.. இன்னும் யாழ் வைத்தியசாலையில் டாக்டர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள்..! பலர் நிர்வாகத்துறையில் இருக்கிறார்கள். எல்லோரும் கடந்த 5 ஆண்டுகளுக்குள் பணிக்கு அமர்ந்தவர்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சப்பேருக்கு நான் வேலைதர தயாராய் இருக்கிறன். மண்வெட்டியும் கலப்பையும் பிடிக்க நீங்கள் தயார் எண்டால் சொல்லுங்கோ.

மூண்டு நேர சாப்பாடும் சம்பளமும் தரலாம்.தாற சம்பளம் அங்கை வாழுறதுக்கு கணக்காயிருக்கும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேருக்கு நான் வேலைதர தயாராய் இருக்கிறன். மண்வெட்டியும் கலப்பையும் பிடிக்க நீங்கள் தயார் எண்டால் சொல்லுங்கோ.

மூண்டு நேர சாப்பாடும் சம்பளமும் தரலாம்.தாற சம்பளம் அங்கை வாழுறதுக்கு கணக்காயிருக்கும். :icon_mrgreen:

கு.சா உந்த நக்கல் தானே வேணாங்கிறது. உங்க பல பேர் புலம்பெயர்ந்துதான் "கொமட்" கண்டதா கனவில இருக்கினம். நான் நினைக்கிறன்.. நான் பிறந்ததில இருந்து "கொமட்" இருக்குது என்று..! யாழ் நகரில நவீன சந்தைக் கூடம் ஒன்றிருந்ததாமே. அங்க "விமாக்கி" என்ற ஒன்றிருந்ததாமே..! அங்க உதுகள் இருந்தததாமே.

உங்க கன பேருக்கு ஒரு விசயம் தெரியாது.. ஊரிலையும் முந்தி வாகனங்களை கடனடிப்படையில் வாங்கலாம் என்றது. புலம்பெயர் நாடுகளில தான்.. உதுகள் என்றிருக்கினம். யாழ் மின்சார வீதியில "த பினாஸ் கொம்பனி" என்ற ஒன்றிருந்ததாமே. அதில கடனெடுத்து.. வாகனம் ஓடினவை பலர்.

இன்னொரு விசயம்.. உலகத்தில உள்ள கார்கள் அனைத்தும் யாழ்ப்பாண வீதிகளில் ஓடித்திருஞ்சதாமே ஒரு காலத்தில.. போட்.. வொல்க்ஸ் வகன்.. வுல்வோ.. ரொயோரா.. மிற்சிபிசி... நிசான்.. பென்ஸ்.. என்று..!

ஊரில முந்தி இலவச வீட்டுத்திட்டங்கள் இருந்ததாமே. வருவாய் குறைஞ்சவைக்கு.. குடுக்க.

இப்ப புலம்பெயர்ந்து அந்தந்த நாடுகளில அரசாங்க வீட்டில இருக்க முண்டி அடிக்கிறவை.. முந்தி ஊரில உந்த வீடுகளில் இருக்கிறவையை நக்கல் அடிக்கிறவையாமே..! ஏன்னா பாருங்கோ.. எங்கட சனத்துக்கு வெள்ளைக்காரன் கக்கா துடைச்சிட்டு வீசிற பேப்பரில் கூட.. நறுமணம் வீசும் என்ற பிரமிப்பு இருக்குது. உடன எடுத்து இடுப்பில செருகிற குணம் இருக்குது... தன்ர வீட்டு முற்றத்து மல்லிகையிட வாசம் புரிவதில்லை..!

சிறீலங்காவின் இரண்டாவது பெரிய தலைநகராக யாழ்ப்பாணம் விளங்கியதாமே. வெள்ளைக்காரன் சுற்றுலா வந்து கசூர்னா பீச்சில.. உருண்டு எழும்பினவனாமே.. அப்படிப்பட்ட தமிழீழத்தை.. நீங்க.. இன்னும் மண்வெட்டி.. கலப்பை.. என்ற அளவில மட்டும் வைச்சுப் பேசிக்கிறது.. சரியில்ல.

இப்ப ஒரு 20 வருசத்துக்கு முன்னாடியே அங்க "லாண்ட் மாஸ்ரர்" தான் நிலம் உழுதது. அப்படிப்பட்ட தமிழீழத்தை.. நீங்க...! :lol:

ஒருவேளை இந்த யுத்தம் இல்லாம.. தமிழீழம் அமைதி வழியில அப்ப கேட்டவர்கள் கைக்குப் போயிருந்தா.. நிச்சயம் இப்ப கொழும்பை விட பலமடங்கு.. உயர்ந்து நின்றிருக்கும்.

இப்ப மேற்குலக நாடுகளுக்கு வந்து போக.. அகதி அந்தஸ்தும் கள்ளப் பாஸ்போட்டும் தேவைப்பட்டிருக்காது. மலேசியா சிங்கப்பூர் ஜப்பான் ஆக்களுக்குப் போல.. நமக்கும் சுதந்திரமா வந்து போக வாய்ப்பு உருவாகி இருக்கும்.

தமிழனும் கள்ள மட்டைக்கள்ளர்.. தறுதலைக் கொலைகாரக் கும்பல்கள் என்ற பட்டங்களை சுமக்காம உலகத்தில வாழ்ந்திருப்பினம்..! :rolleyes::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவும் தெரிஞ்ச நெடுக்குசாமி என்ன கோதாரிக்கு வெளிநாட்டிலை கிடந்து காயோணும். :icon_mrgreen:

இப்ப ஒரு 20 வருசத்துக்கு முன்னாடியே அங்க "லாண்ட் மாஸ்ரர்" தான் நிலம் உழுதது. அப்படிப்பட்ட தமிழீழத்தை.. நீங்க...!
விவசாயத்தைப்பற்றி விசயம் தெரியாமல் கனக்க கதைக்கிறியள் :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவும் தெரிஞ்ச நெடுக்குசாமி என்ன கோதாரிக்கு வெளிநாட்டிலை கிடந்து காயோணும். :lol:

விவசாயத்தைப்பற்றி விசயம் தெரியாமல் கனக்க கதைக்கிறியள் :o

வெளிநாட்டுக்கு நாங்க காய என்று மட்டும் வரல்ல. அப்பவும் எங்கட மக்கள் வெளிநாட்டில கல்வி கற்று பேராசியர்களா.. விரிவுரையாளர்களா.. ஊர்ப் பல்கலைக்கழகங்களில் படிப்பிச்சவை எல்லோ. அவை எப்பவும் இளமையானவையாவே இருப்பினமோ...! அடுத்த சந்ததிக்கு படிப்பிக்க.. அடுத்த சந்ததி.. அறிவியலாளர்களா உருவாக.. இந்தத் தலைமுறைதானே படிக்கனும்.. பட்டம் வாங்கனும்... அதைப் பயன்படுத்தனும்.

ஆண்டுக்கு 5000 முதல் 10000 (இதை விட அதிகம் ஒரு அண்ணளவுக்கு) வரை சிங்களவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாட்டு ஏன் வாறாங்க..! காயவா..???!

எல்லாரையும் மக்டொனால்டிலும்.. கே எவ் சியிலும்.. வேலைக்கு விடேலுமோ..!

உந்தளவு படிச்ச பேராசிரியர்.. துரைராஜாவும் மண்வெட்டி தூக்கினவர் தான்.. தோட்டம் செய்தவர் தான். இத்தனைக்கும் அவர் கனடாப் பல்கழைக்கழகத்தின் கெளரவப் பேராசிரியர் வேற..! அவர் ஏன் மாமனிதர் ஆக கெளரவிக்கப்பட்டார்.. சும்மாவே..! :rolleyes:

கு.சா ஊரில அப்ப எல்லாரும்.. ஏரும் கலப்பையும் வைச்சிருந்தே விவசாயம் செய்தவை. ரக்ரர்.. லாண்ட் மாஸ்ரர் என்று சாமானுகள் வைச்சிருக்கல்லையே.. இல்லக் கேட்கிறன்..! :icon_mrgreen::lol:

Edited by nedukkalapoovan

நான் இன்னும் ஒன்றுக்கும் வாக்களிக்கவில்லை ஆனால் ஊருக்கும் போகும் போது நல்ல பொருளாதரா பலத்துடனே செல்வேன் அடுத்தது பிள்ளைகளின் எதிர்காலங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் அவர்கள் விரும்பாது விடுத்து அவர்கள் தனித்து வாழும் வயதுக்கு வந்ததும் தமிழீழத்துக்கு செல்வேன்...

உண்மையை சொல்கிறேன் தமிழீழம் கிடைத்தால் மட்டுமே மாறாக தமிழீழம் கிடைக்காது போனால்( சரியான தீர்வு) தமிழும் வேண்டாம் யாழும் வேண்டாம் ஒரு பு***** என்று போய்டுவேன்( தமிழ் பெண்களை சயிட் அடிக்க கோவிழுக்கு மட்டும் வருவேன்......

சுதந்திர தமிழீழத்தில் வாழத் தயாரா?

நிச்சையமாக, அடுத்த முதல் விமானத்தில் ஏறத் தயார். [ 10 ] [30.30%]

நிச்சையமாக, சில காலம் களித்து. [ 12 ] [36.36%]

அங்குள்ள நிலமையைப் பொறுத்து, சில காலம் களித்து. [ 7 ] [21.21%]

அங்குள்ள நிலமையைப் பொறுத்து, பார்க்கலாம் .... [ 1 ] [3.03%]

இல்லை. (காரணம்?) [ 3 ] [9.09%]

இப்ப 2வதுக்கு வாக்களித்து இருக்கேன்....

TigerBlade ,

மிக நல்ல தலைப்பு, நன்றி,

Edited by பல்லவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.