Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனிக்குளத்தில் பாரிய மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 60 பேர் படுகாயம்- உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் ஆடி அமாவசை வந்தால்..........

அதைப்பற்றி அறிவீர்கள் .

நானும் விரதம் பிடித்தேன்

ஆனால் அதற்கும் இதற்கும்?????????

  • Replies 58
  • Views 11.3k
  • Created
  • Last Reply

யாழுக்கை ஓட்டுனராய் கொஞ்சப்பேர்... நடத்துனராய் கொஞ்சப்பேர்...!! இவையுக்கை இடிபட கொஞ்சப்பேர்...!!

சுதந்திரம் எண்டா தனது எண்ணத்தை மற்றவருக்கு சொல்ல உரிமை இருக்கு என்பார்கள்... தாங்கள் நினப்பது போல கருத்து எழுது எண்றோ இல்லை, தங்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப்ப கருத்து எழுது எண்று சொல்வது பாசிசம்...!! எனக்கு தெரிய புலிகள் அப்படி எதையும் வரை அறுப்பது கிடையாது... ஆனால் அவர்களின் பெயரை பாவித்து சில நாதாரிகள் செய்கிறார்கள்....!!

யாழையும் ஒரு பாசிச தளமாக காட்டும் முயற்சி போல...

எனக்கு தெரிய தமிழன் சுதந்திரமாய் மலசல மட்டும்தான் இருக்கலாம் போல...!!

வாழ்க சோசலீசம்...

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே , நான் விரதம் இருந்தது இறந்த பெற்றோருக்காக

அதே நாழில் இந்த முறியடிப்பும் வெற்றிகரமாக முடிவடைந்ததை இட்டு தான் எனது சந்தோசத்தை வெளிப்படுத்தினேன் .

இங்கே யாருடைய ஆலோசனையும் எனக்கு வேண்டாம் .

இதையே முதலில் சொல்லியிருக்கலாமே

சும்மா ஏன் வம்பளப்பான்?????????

வந்திற்றினம் மற்றவ...........

ஓட்டுனர்.........

நடத்துனர்...........

என்று ஏதேதோ எழுதினம்..........

கேட்டகேள்விக்கு பதிலெழுத முன்னம்

உனக்கு வரும் பார் அதேகெதியென்பதற்கு முன்னர் ..........

கேட்டகேள்விக்கு சொல்லியிருக்கலாமே

கண்டகண்டதிற்கெல்லாம் முடிச்சுபோட்டுக்கொண்டு..........

எனக்கு யாரும் புத்திசொல்லவேண்டாம் என்று சொல்வதற்கு முன்....................

மற்றவருக்கு நீங்கள் புத்திசொல்லாதிருப்பீராக??????

அப்படிச்சொன்னால் .........அதற்கும் இங்கே நீங்கள் சொல்வதுபோல்

ஏகாஅதிபதி???????????என்றுதான் பேருங்கோ????????????.........................

  • கருத்துக்கள உறவுகள்

தயா , தயவு செய்து பாசிசம் , சோசலிசம் என்றால் என்ன என்று விளங்கப்படுத்துவீர்களா ?

  • தொடங்கியவர்

ஓம் ஓம் புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை, ஒரு அய்ந்து சதவிகிதம் தான் புலிகளை ஆதரக்கினம் எண்டும் எழுதலாம், அதுவும் கருத்துச் சுதந்திரம் தான் ஆனால் அதில் எள்ளளவாவது உண்மை இருக்கிறதா?

அதே போல் நான் ஆடி அமாவசைக்கு விரதம் இருந்து தான் புலிகள் களம் ஆடி வென்றனர் என்று எழுதுவதில் எதாவது உண்மை இருக்கிறதா? அதில் எதாவது நியாயம் இருக்கிறதா?இந்தத் தலைப்பிற்க்கும் ஒருவர் ஆடி அமாவசைக்கு விரதம் இருப்பதற்க்கும் என்ன சம்பந்தம்?எல்லோரும் செய்ய வேண்டிய வேலைகளை விட்டு விட்டு விரதம் இருக்கலாமே, அதைப் போல் இலகுவான ஒரு வழி இருந்தால் இத்தினை பேர் போராடி தமது உயிரை இழக்க வேண்டியதில்லயே? இவ்வாறு பொறுப்பற்று எழுதுவது போராடி மரணித்தவர்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா?

புலிப் போராளிகள் இரத்தமும் சதையுமாயைப் போராடி வெற்றி ஈட்டினால் அதற்கு உரிமை கொண்டாட இங்கு பல பேர்.ஆனால் களத்தில் பின்னடைவுகளைச் சந்திக்கும் போதெல்லாம் புலிகள் என்ன புடுங்கின்றனரா என இங்கு வரைபடம் கீறி விளக்கம் கேட்க பல பேர்.

உண்மை என்பது என்ன? களத்தில் நிற்பவனுக்குத் தான் போராட்டத்தின் வலியும் சுமையும் தெரியும்.அவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்பதற்க்கு உங்களுக்கு நிச்சயமகக் கருத்து உரிமை இருக்கிறது.ஆனால் அப்படிக் கேட்பதற்க்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்பதையும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

பாசிசப் பூச்சாண்டி காட்டுபவர்கள் கருத்துகளை கருத்துகளால் வெல்ல முடியாதவர்கள்.மாற்றுக் கருத்துக்களை எழுதுபவர்கள் எவ்வாறு புலிகளைப் பாசிஸ்ட்டுக்கள் என்று சொல்லி தமது பலவீனக்களை மறைக்கிறர்களோ அவ்வாறே இவர்களும்.சொல்லப்பட்ட கருதுக்களின் நியாயங்களை விட்டு விட்டு கருத்துச் சொலபவர்களைப் பெயர் கூவித் தாக்குவதே சிலரின் கருதியல் வாடிக்கை.

புலிகளுக்கு எனத் தனிதுவமான ஒரு அரசியல் இருக்கிறது போராட்டம் பற்றிய பார்வை இருக்கிறது.

அதனைப் புலிகளின் அரசியற் பிரிவு மேற் கொண்டு வருகிறது.இவை பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.இவற்றை மக்களிட்ம எடுதுச் செல்லாமால் வெறும் இராணுவ வெற்றி தோல்விகளில் ஸ்கோர் கேட்டு பொப் கோன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் விசிலடிச்சான் குன்ச்சுகளாக இருப்பவர்கள் அரசியல் ரீதியாக ஊசலாட்டமானவர்களாக இருப்பார்கள்.மக்களின் ஆதரவு என்பது இவ்வாறான் ஒரு செயற்கையான உணர்வினூடாக தக்க வைக்கப்படுவது என்பது நீண்டகாள நோக்கில் போராட்டதிற்க்கு ஆபாத்தனாது.ஏனெனில் இந்த ஆதரவு என்பது இராணுவா ரீதியான் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது போராட்டத்தின் மீதான ஊசலாட்டத்தையே உண்டு பண்ணும்.

ஆகவே எல்லோருக்கும் தமது கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது.சொல்லப்படும் கருதுக்களுக்கு இங்கே எதிர்க் கருதுக்களை நீத் நீயாயம் உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்கவும் இங்கே கருத்து உரிமை இருக்கிறது.அவ்வாறக விமர்சிப்பவர்களைப் பாசிஸ்ட்டுக்கள் என்பதன் மூலம் அவ்வாறான விமர்சனக்களை கருதுக்களால் எதிர்க் கொள்ள முடியாதவர்களே கருதியல் ரீதியில் பலவீனமானவர்களாக கருத்துக்களை முன் வைப்பவர்கள் மீதான தனி நபர் தாக்குதலைத் தொடுக்கும் பாஸிட்டுக்களாக இருக்கின்றனர் என்பதே உண்மை ஆகும்.

ரம்புக்கெல தாடி வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் புலிகளுக்கும் அல் கொய்தாவுக்கும் தொடர்புபென்று இன்று கூறியிருக்கின்றான்.ஆனால் அங்கு சண்டை நடக்குது.இதுக்கும் உஎன்னிடம் கேட்க வேண்டாம் என்ன சம்பந்தம் என்று ஏன் என்றால் எனக்கு பதில் சொல்ல தெரியாது.

Edited by THEEPAN0007

சிறி தமிழ் நெட்றில படங்கள் வந்திருக்கின்றது யாராவது இணைத்து விடுங்கள்.எனக்கு இணைக்க தெரியாது

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

02_08_08_sladeadbodies_05.JPG

02_08_08_sladeadbodies_04.JPG

02_08_08_sladeadbodies_06.jpg

02_08_08_sladeadbodies_01.jpg

tamilnet

பச்சை நிறத் தொப்பியைப் பார்த்தால், துணைப்படையினரும் இவ்முறியடிப்பில் பங்குபற்றினர் போலும்.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

சங்கதியில் மேலும் படங்கள் இருக்கின்றது.நீங்கள் சொல்வது போல் தான் இருக்கின்றது.

Edited by THEEPAN0007

யாழ் உறவுகளே விதண்டாவாதம் போதும், தமிழ் நெட்டில் களத்தின் படங்கள் வெளியிட்டுள்ளார்கள் சென்று பாருங்கள்.

www.tamilnet.com/art.html?catid=13&artid=26517

ஜானா

மற்றப் பகுதிகளில்தான், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கருத்தாடுகிறீர்கள் என்றால், இங்கேயுமா???? தயவுசெய்து, இவ்வாறான செய்திகளில் இப்படிக் கருத்தாடுவதை தவிர்ப்பது நல்லது என நினைக்கிறேன். எமது போராட்டம் புனிதமான ஒரு போராட்டம். இப்போராட்டத்திற்காக நாம் இழந்தது, இழந்துகொண்டிருப்பது அதிகம். நீங்கள் எழுதப்போகும் கருத்து, இத்தலைப்பிற்கு ஏற்புடையதாஅல்லது தலைப்பைத் திசை திருப்பி விடுமா எனக் கொஞ்சம் சிந்தித்த பின்பு எழுதலாமே!!!

உங்களின் இந்தக் கருத்தாடல்களினால், அங்கு தம் உன்னத உயிர்களை இழந்த மாவீரர்களின் தியாகங்கள் திசை திருப்பப்பட்டுவிட்டது. கார்த்திகை 27ஆம் நாள் மட்டும் நாம் அவர்களை நினைக்காமல், இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் அவர்களை நினைவில் வைத்துக் கொள்வோமே. அதுமட்டுமின்றி, ஏற்கனவே மக்கள் ஓரளவு தளர்வடைந்திருக்கிறார்கள். அவர்களை மேலும் தளர்வடைய வைக்காமல், எழுச்சி கொள்ளும் வகையில் உங்கள் கருத்தாடல்களை முன்னெடுங்கள்.

(மேலே கூறப்பட்ட கருத்திற்காக, என்னுடனும் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். அதைச் சமாளிக்கும் மனநிலை என்னிடம் இல்லை.)

களமாடி மரணித்த வேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: எதுக்கு இவ்வளவு தர்க்கம்? சரி , விடுங்கள். தொடங்கப்பட்ட தலைப்பைத் துலைத்துப் போட்டு எங்களுக்குள் அடிபாடு ?!

எவராச்சும் இப்படி நடக்க வேண்டும் எண்டு நினைத்துக்கொண்டு இங்கு வருவார்களா? விட்டுத் தொலையுங்கள். வந்திருக்கிற படங்களைப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: ஒரு சின்னச் சந்தேகம், புலிகளின் தாக்குதல் படையணிகளில் ஒருவர் வைத்திருக்கும் இயந்திரத் துப்பாக்கி நேட்டோ நாடுகளில் மட்டுமே பவிக்கப்படும் ஒரு போராயுதம். அதுபற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். நெடுக்கு, மின்னல்...எங்கே ஐய்யா போய் விட்டீர்கள் ? படங்கள் வந்திருக்கு, வந்து ஒரு கருத்து எழுதுறது ?!!!!!!!!
  • தொடங்கியவர்

நாரதருக்கு நடுங்குது குடையுது என்று எழுதுவதை விட்டு விட்டு உந்தப் புது முகமூடியிலையாவது கருத்தாளத்துடன் கருதுக்களை நிதானமாக எழுதப் பழகவும் பிறகு உதையும் கழட்டி விட்டுடுட்டு வேற முகமூடி போட வேண்டி இருக்கும். நெடுக்காலபோவான் துணை இல்லாம தனித்துக் கருதுக்களை எழுத முடியாதோ?

நெடுக்கலபோவான் உருப்படியாகப் பிரியோசனமாக நிதானமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.அவரை உசுப்பேத்தி முருக்கையில ஏத்தி வேடிக்கை பார்க்க வேண்டாம். :lol:

இனி வேறு எதையும் இங்கே எழுதப் போவதில்லை.தமிழ்ச்சியின் கருத்துடன் உடன் படுகிறேன்.

களத்தில் செருப்புடன் நின்று போராளிகள் சண்டை பிடிக்கின்றார்கள்.

இங்கு எப்போது பார்த்தாலும் சண்டை தான் நடக்கின்றது.என்ன மனிதர்கள் நாங்கள்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ற கடவுளே...எல்லாரும் எப்பதான் திருந்த போறியளோ தெரியாது... என்னைய இங்க நடக்குது.. பேச்சு சுதந்திரம், ஆய்வறிக்கை , நக்கல் நளினம்....இதில்லாம் வேணாமப்பு இப்ப... அடிப்பட பெடியள் எவ்வளவு கஷ்டப்பட்டான்களோ , எத்தினை வீடுகள்ல 'மோட்ட சைக்கில்' சத்தம் கேக்க நெஞ்சில கைய வைத்துக்கொண்டு இருகுதுகளோ... இப்படி உயிர் , ரத்தம் , உறவிகளை வச்சு நடக்கிற போராட்டத்தை தயவு செய்து விளையாட்டோ அல்லது மேல்லுற அவல் மாதிரி ஆக்கதீங்கோ...வாசிக்க உண்மையிலையே கஷ்டமாய் இருக்கு...

:lol: ஒரு சின்னச் சந்தேகம், புலிகளின் தாக்குதல் படையணிகளில் ஒருவர் வைத்திருக்கும் இயந்திரத் துப்பாக்கி நேட்டோ நாடுகளில் மட்டுமே பவிக்கப்படும் ஒரு போராயுதம். அதுபற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். நெடுக்கு, மின்னல்...எங்கே ஐய்யா போய் விட்டீர்கள் ? படங்கள் வந்திருக்கு, வந்து ஒரு கருத்து எழுதுறது ?!!!!!!!!

Rifle_Type_95.jpg

படத்தில் போராளி வைத்திருக்கும் துப்பாக்கி சீனத்தயாரிப்பான கியூ.பி.சற் 95. சீனா, கம்போடியா மற்றும் சிறிலங்கா (வான்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை) நாடுகளே இவற்றபை; பயன்படுத்துவதாக விகிப்பீடியாவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வகைத்துப்பாக்கிகள் அனுராதபுர வான்படைத் தள அழிப்பிற்கு கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

http://en.wikipedia.org/wiki/QBZ-95

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் செருப்புடன் நின்று போராளிகள் சண்டை பிடிக்கின்றார்கள்.

இங்கு எப்போது பார்த்தாலும் சண்டை தான் நடக்கின்றது.என்ன மனிதர்கள் நாங்கள்......

அவர்களது வெற்றிகளைக்கொண்டாடும் நாம் அவர்கள் எவர்கள் சுமக்கும் பிரச்சினைகள் குறித்து கதைக்க மறுக்கின்றோம்

நானும் கவனித்தேன்

அவர்கள் வெறும்காலுடனும் மார்பில் எந்தவித பாதுகாப்பு கவசமுமின்றி போராடுவதை............

தயவு செய்து இவற்றை ஏற்படுத்தி இழப்பைக்குறைக்க முயற்சிக்கலாமே????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rifle_Type_95.jpg

படத்தில் போராளி வைத்திருக்கும் துப்பாக்கி சீனத்தயாரிப்பான கியூ.பி.சற் 95. சீனா, கம்போடியா மற்றும் சிறிலங்கா (வான்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை) நாடுகளே இவற்றபை; பயன்படுத்துவதாக விகிப்பீடியாவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வகைத்துப்பாக்கிகள் அனுராதபுர வான்படைத் தள அழிப்பிற்கு கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

http://en.wikipedia.org/wiki/QBZ-95

Users

People's Republic of China

Cambodia - Use by the 911 Special Forces, QBZ-97 and QBZ-97A[5].

Sri Lanka - Used by the Sri Lanka Air Force, and the Special Task Force so far.

இதைப் பாவிப்பவர்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் உள்ளன என இருக்கின்றது. எனவே அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாகவும் இருக்கலாம். கம்போடியா, சீனா கூடப் தொடர்பாம் என்று கண்மண் தெரியாமல் எழுதமாட்டீர்கள், வெட்டி விளாசமாட்டீர்கள் என நம்புகின்றோம்.

இன்றைக்கு 30 ராணுவம், நாளைக்கு இந்த எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம், ஏன் நாம் கூட இளைஞர்களை இழக்கலாம்...

இதெல்லாம் பெரிதல்ல.... முடிவான இலக்கை அடைவதே இறுதிவெற்றி.... இறுதி வெற்றிக்கு எங்களின் பங்கு அளப்பரியது..

ஆனால் உங்களின் கெடுபுடிச்சண்டை கவலையளிக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

ஏனெனில் என்னைப்பொறுத்தவரை தமிழர் இதுவரை இழந்ததுடன் ஒப்பிடும்பொழுது இது எதிரிக்கு அதில்0;000000001வீதம்கூட இல்லை

உண்மையைச்சொல்லுங்கள் 1லடசத்து60 இராணுவத்திற்கு 100 ஆமியின் இழப்புடன் மண்டியிடுவானா????

ஆனால் போராளிகளால் இத்தாக்குதல் ஏதோ காரணத்திற்காக செய்யப்பட்டுள்ளது

அது வெற்றி அளித்துள்ளது

அதற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாமே தவிர இதை கொண்டாட முடியாது

அப்போ நீங்கள் கேட்கலாம் எது கொண்டாடக்கூடிய வெற்றியென்று..........

ஆம்

அது யாழ் வீழ்வது

அதுவும் நான் பலாலியில் போய் இறங்குமாப்போல் இருக்கவேண்டும்

மதவாச்சியில் புலிக்கொடி நிரந்தரமாகப்பறப்பது

திருகோணமலை துறைமுகத்தில் எமது கப்பல்கள் புலிக்கொடியுடன் தரித்து நிற்பது

அண்ணே பொன்னையா

சீனா கம்போடியா போன்ற நாடுகளுடன் தொடர்பு எழுதி விளாசாட்டிலும் குறித்த நாடுகளிடமிருந்து வாங்கியிருக்கலாம் எண்டு எழுதலாம்தானே. இந்த வகைதுப்பாக்கி பி.எப்.89 கவச எதிர்ப்பு ஆயுதம் போன்றவை 2006ம் ஆண்டின் பின்பே புலிகளிடமிருப்பது தெரியவந்தது. கியூபிசற்85 துப்பாக்கி படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென்று வைத்தாலும் பி.எப்.89 ஆயுதம் படையினரிடம் இருக்கவில்லை. புலிகள் பயன்படுதத் தொடங்கிய பின்னரே படையினரும் அவற்றைக் கொள்வனவு செய்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடம் வாங்கினது, புடுங்கினது என்ற கட்டுரைகள் இந்த நிலமையில் தேவையா? இதில் என்ன சாதிக்கப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். வாங்காட்டிலும் சிறிலங்கா அரசு 4 தரம் போய் அங்கே அந்த நாடுகளுக்குப் பிரச்சனை கொடுக்கும். இதைத் தான் பலநாடுகளில் சிறிலங்கா அரசு செய்தது.

புலிகள் மல்ரிபரல் பாவிக்கின்றார்கள்என்று எழுதினார்கள் எங்களின் கட்டுரையாளர்கள். இது வரை புலிகள் அதை நிருபிக்கவில்லை. மட்டகளப்பில் சிறிலங்கா அரசு காட்டியது மிகச் சிறியது. ஆனால் கட்டுரையாளர்கள் எழுதிய பின் சிறிலங்கா அரசுக்கு அது பற்றிய எண்ணம் உதிர்த்து அதை வாங்கிப் பாவிக்கின்றது. தமிழரால் முடியவில்லை ஏனென்றால் அந்தளவு வசதி இல்லை.

தலைவர் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார். உங்களின் பங்களிப்பைச் செய்யுங்கள் என்று ஏற்கனவே ஒரு தடவை அறிவுரை கூறியிருந்தீர்கள். இது தான் நீங்கள் செய்கின்ற பங்களிப்பின் இலட்சணமா?

உங்களின் பங்களிப்பு பிரமாதம்

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடம் வாங்கினது, புடுங்கினது என்ற கட்டுரைகள் இந்த நிலமையில் தேவையா? இதில் என்ன சாதிக்கப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். வாங்காட்டிலும் சிறிலங்கா அரசு 4 தரம் போய் அங்கே அந்த நாடுகளுக்குப் பிரச்சனை கொடுக்கும். இதைத் தான் பலநாடுகளில் சிறிலங்கா அரசு செய்தது.

புலிகள் மல்ரிபரல் பாவிக்கின்றார்கள்என்று எழுதினார்கள் எங்களின் கட்டுரையாளர்கள். இது வரை புலிகள் அதை நிருபிக்கவில்லை. மட்டகளப்பில் சிறிலங்கா அரசு காட்டியது மிகச் சிறியது. ஆனால் கட்டுரையாளர்கள் எழுதிய பின் சிறிலங்கா அரசுக்கு அது பற்றிய எண்ணம் உதிர்த்து அதை வாங்கிப் பாவிக்கின்றது. தமிழரால் முடியவில்லை ஏனென்றால் அந்தளவு வசதி இல்லை.

தலைவர் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார். உங்களின் பங்களிப்பைச் செய்யுங்கள் என்று ஏற்கனவே ஒரு தடவை அறிவுரை கூறியிருந்தீர்கள். இது தான் நீங்கள் செய்கின்ற பங்களிப்பின் இலட்சணமா?

உங்களின் பங்களிப்பு பிரமாதம்

உண்மைதான்

இது வேதனையளிக்கும் விடயம்

இன்னும் நேரமுள்ளது........

இப்போவது முயற்சிக்கலாமே......

இதைப் பாவிப்பவர்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் உள்ளன என இருக்கின்றது. எனவே அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாகவும் இருக்கலாம். கம்போடியா, சீனா கூடப் தொடர்பாம் என்று கண்மண் தெரியாமல் எழுதமாட்டீர்கள், வெட்டி விளாசமாட்டீர்கள் என நம்புகின்றோம்.

அண்ணே பொன்னையா

சீனா கம்போடியா போன்ற நாடுகளுடன் தொடர்பு எழுதி விளாசாட்டிலும் குறித்த நாடுகளிடமிருந்து வாங்கியிருக்கலாம் எண்டு எழுதலாம்தானே. இந்த வகைதுப்பாக்கி பி.எப்.89 கவச எதிர்ப்பு ஆயுதம் போன்றவை 2006ம் ஆண்டின் பின்பே புலிகளிடமிருப்பது தெரியவந்தது. கியூபிசற்85 துப்பாக்கி படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென்று வைத்தாலும் பி.எப்.89 ஆயுதம் படையினரிடம் இருக்கவில்லை. புலிகள் பயன்படுதத் தொடங்கிய பின்னரே படையினரும் அவற்றைக் கொள்வனவு செய்தனர்.

எழுதப்படும் கருத்துக்கள் எதற்காக எழுதப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டுவிட்டு உங்களின் பதில் கருத்துக்களை எழுதுங்கள். முதலில் நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பதைக்கூட மறந்து அல்லது தெரியாமல் அதற்கு மின்னல் கொடுத்த பதிலுக்கு ஏதோ ஏதோவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.

நாங்கள் எங்களின் பங்களிப்பை தலைவர் எதிர்பார்க்கும் வரை செய்து கொண்டிருக்க வேண்டும். அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்வார். இப்போதும் அதை மீளவும் சொல்கிறேன். இதற்கு முரண்பாடாகவா? அல்லது போராட்டத்தின் மீது நம்பிக்கையற்ற வகையிலா? மேலே எழுதப்பட்ட எனது கருத்து அமைந்திருக்கிறது? எதற்கு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.