Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களும், மன அழுத்தமும்................

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் மூக்கி என்பவரும் என்னுடன் செய்த வாதங்கள் இருக்கின்றன.

இன்றைய ஆண்களின் மன அழுத்தத்துக்கு பெண்ணாதிக்கமும்.. தான் என்ற பெண்களின் சுயநலப் போக்கும்.. அன்பு செலுத்தா மனித இயல்பற்ற பெண்களின் நடத்தையும்.. கண்டவனோடும் கண்டதும் செய்யலாம் என்ற மிருகத்தனமான சிந்தனையும் முக்கியமானவை.. என்பதை உலகமே அறியும்..!

இப்போ எல்லாம் பிரிட்டனில் உள்ள பெண்கள்.. கணவனை விட்டிட்டு.. தனிய இருந்தால்.. கூடின அரச உதவிப்பணம் கிடைக்கும் என்பதற்காகவே கணவன் மீது அன்பு செலுத்துவதை எல்லாம் பொருட்டாக எடுப்பதில்லை. அண்மையில் கூட பிரிட்டன்.. நீடித்த குடும்ப வாழ்வை ஊக்குவிக்க குடும்பமாக வாழ்பவர்களுக்கு அதிகரித்த உதவிச் சலுகைகள் அறிவிப்பது குறித்து ஆராய்ந்திருக்கிறது. ஏன் பெற்ற பிள்ளைகளைக் கூட தங்களின் சுயநலத்துக்காக வீதியில் அலைய விட்டிட்டு.. பல ஆண்களின் பின்னால் உடல் சுகம்.. பொருட்சுகம் தேடும் நிலையில் தான் பெண்கள். அதனால் குழந்தைகளை பராமரிக்க தமக்குள்ள இயற்கைத்தனமான பொறுப்பைக் கூட இன்றைய பெண்கள் சுயநலத்தால் இழந்து மன அழுத்தத்தோடு வாழ முனைகின்றனர். அதற்கு அவர்களின் தவறான சிந்தனைப் போக்கே காரணம் அன்றி.. ஆண்கள் அல்ல..!

நீங்கள் வசதியாக பெண்களின் பக்கம் உள்ள அவர்கள் செய்யும் அனைத்துக் கோமாளித்தனங்களையும் மனித சிந்தனையற்ற மனிதாபிமானமற்ற அன்பற்ற செயற்பாடுகளையும் மறைத்துவிட்டு நெடுக்ஸ்.. நீங்கள் அரை வட்டத்துக்க நிக்கிறீங்க... நாங்க முழுவட்டத்துக்க நிற்கிறம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

நீங்கள் தான் உங்களையே மட்டும் மையப்படுத்தி கருத்து எழுதுகிறீர்கள். நான் என்னை மட்டும் மையப்படுத்திக் கொண்டால் இங்கு கருத்தெழுத ஏதும் இருக்காது. என்னைப் பொறுத்தவரை எனக்கு பெண்களால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் நான் சார்ந்த சமூகம் காணும் பாதிப்புப் பெரியது..! அதையேதான் இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன்..!

ஒரு இளைஞனை வட்டிக்கு காசு எடுத்து வெளிநாட்டுக்கு காசுழைக்க அனுப்பும் தாய்.. அந்த இளைஞன் தனிமைப்பட்ட சூழலில் உணரக் கூடிய உணர்வுகள்.. மற்றும் அவனுக்கான அன்பு அரவணைப்பு.. அவனுக்கான வழிகாட்டல் பற்றி சிந்திக்கிறாளா..???! இதையே ஒரு பெண் பிள்ளையை அனுப்புவது என்றால்.. அவளின் கற்புத்தொடங்கி.. அவள் உடல் அலுப்பு வரை கவனம் செலுத்துகிறார்கள். ஆண் அடுத்தவைக்காக உழைக்கப் பிறந்தவன். பெண் உழைத்தாலும் தன்ர சுயநலத்தை மட்டும் கவனிக்கப் பிறந்தவள்.. இதுதான் உங்கள் நியாயமான கருத்தா..??!

ஈழத்தில் இருந்து எத்தனை தாய்மார் தங்கள் பெண் பிள்ளைகளை வட்டிக்கு காசெடுத்து வெளிநாட்டுக்கு உழைக்க அனுப்பினர்..???! வந்த தகப்பனோ.. அண்ணணோ.. தம்பியோ.. மகனோ தனிமைச் சூழலுக்குள் சிக்கித் தவித்து.. பணம் புரட்டி.. உடலால் வருந்தி.. பட்ட துன்பங்கள் அறிவார்களா.. அந்தப் பெண்கள். ஊரில் அவர்கள் செய்யும் தான்தோன்றித்தனமான செலவுகளே இதைச் சொல்கிறது.

நானே கண்டிருக்கிறேன்.. கொழும்பில் மாம்பழம் வாங்குவம் என்று போனால்.. எம்மவர்கள் ஆட்டோவில் வந்து 20 ரூபா மாம்பழத்துக்கு 50 ரூபா கொடுத்து வாங்கிப் போகிறார்கள். 5 ரூபாவில் பயணிக்கும் தூரத்தை 50 ரூபா செலவில் பயணிக்கிறார்கள். இது என்னைச் சுற்றிய நெருங்கிய உறவுகளிடத்தில் அல்ல நடக்கிறது. நான் வாழும் சமூகத்தில் நடக்கிறது.

வெளிநாட்டுக்கு வாருங்கள்.. பெண்கள் அணிந்திருக்கும் நகைகளைப் பாருங்கள். இன்று தங்கத்தின் விலை 120 பவுண். ஒவ்வொரு பெண்ணின் கழுத்திலும் கையிலும் காலிலும் 50 பவுண் நகை தொங்குகிறது. இத்தனைக்கு இவர்கள் வேலைக்குக் கூட ஒழுங்காப் போறதில்லை. ஒரு கோவில் திருவிழாவுக்கு போங்கள். அங்கு உங்கள் பெண்ணினம் அணிந்து கொண்டிருக்கும் ஆடம்பரக் கோலத்தை காணுங்கள். உழைக்கும் பெண்கள் கூட இத்தனைக்கு அணியமாட்டார்கள்..! உயர் பதவியில் உள்ள வெள்ளையினப் பெண்கள்.. ஒரு வீடு வாங்கவே துடியாய் துடிக்கிறார்கள்.. ஆனால்.. எம் பெண்கள்..???! இதெல்லாம் யார் உழைப்பில் வருகிறது. இவர்களா ஆணின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவனுக்கு நகையல்ல.. அன்பும்.. அரவணைப்புமே தான் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போதுதான் அவனும் அன்பைக் காட்டுவான் என்று நினைக்கிறார்கள். இல்லையே..!

வெளிநாட்டுக்குப் போய்.. காரில் போகலாம்.. நகை போடலாம்.. அப்பப்ப தேவைக்கு குட்டி போடலாம்.. வயிறாற உண்ணலாம்.. என்றுதான் அநேகம் பெண்கள் இங்கு வருகிறார்கள்.

எனி வாற பெண்களில் அவை இளம் பெண்கள் என்றால்.. பள்ளி போவார்கள்.. அங்கு காணாததைக் கண்டவுடன.. தலை முடியை நீட்டுவார்கள்.. பறக்க விடுவார்கள்.. பின்னர் புதர்களுக்குள்ளும்.. கார்களுக்குள்ளும்.. பீசா கட்களுக்குள்ளும்... குச்சுமுச்சு மூட்டி விளையாடுவார்கள்..! சும்மா நிற்கிற பையனைக் கூட கையைப் பிடித்து இழுத்துச் சென்று தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய நினைக்கிற இளம் பெண்களே இன்று அதிகம். உசுப்பேத்தி ஒரு ஆணைக் கெடுத்துவிட்டு... அலுத்து விட்டதும்.. தூக்கி எறிந்துவிட்டு இன்னொருத்தனிடம் அதே விளையாட்டைத் தொடரும் அயோக்கியத்தனமான நிலைதான் இன்றைய புலம்பெயர் இளம் பெண்களிடம் அதிகரித்திருக்கிறது..! இல்லை என்று உங்களால் சாதிக்க முடியுமா..???! அல்லது அவைதான் உங்கள் பார்வையில் பெண் விடுதலையோ.. ஆணாதிக்கத்துக்கு எதிரான நடவடிக்கையோ..??! :unsure::mellow:

இவர்களால்.. எப்படி மன அமைதி கிடைக்கும். அவர்களுக்கும் மன அமைதியில்லை.. அவர்களைச் சார்ந்தோருக்கும் மன அமைதியில்லை.

அதுமட்டுமா இன்றைய வீதிவன்முறைகளில் பெரும்பாலானவைக்குக் காரணமே பெண்கள் தான். ஒருவனோடு சுற்றித் திரிவது.. அனுபவிக்கும் மட்டும் அனுபவிச்சிட்டு.. அவனிடம் குறைகண்டுவிட்டு.. இன்னொருத்தன் கூட தொத்திக்கிறது. பின்னர் சண்டைகளை மூட்டி விடுறது. ஆண்கள் அடிபட்டு... குத்துப்பட்டு.. அழிய வேண்டியதை வேடிக்கை பார்க்க வேண்டியது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் யார். இந்தப் பரதேசிகளாக அலையும் பெண்களே..! இல்லை என்பீர்களா..??! இன்று இந்தப் பரதேசிப் பெண்களின் நிலையே உலகில் அதிகரித்து வருகிறது. அதனால் தான்.. மன அழுத்தங்களும் அதிகரித்து வருகிறது.

ஒரு குடும்ப வாழ்வு சிறக்க வேண்டின்.. ஒரு பெண்.. உண்மையான தாய்மை உணர்வோடு.. அனைவர் மீதும் அன்பை.. பாசத்தை.. நேசத்தை.. பரிவை.. அக்கறையைக் காட்ட வேண்டும். அப்போதுதான்.. அந்த உணர்வுகளுக்கான அர்த்தம் எல்லோராலும் உணரப்படும். அவர்களும் பிரதிபலனாக அவற்றைக் காட்ட நினைப்பர். ஒரு ஆண் எவ்வளவுதான் அன்பைக் காட்டினாலும்.. அதை சந்தேகிக்கிற நிலையில் கூட பெண்கள் இருக்கிறார்கள். ஒரு ஆண் மனிதாபிமானமாகக் கூட ஒரு உதவியைச் செய்தால்.. இவன் எதுக்கு செய்யுறான்.. ஒருவேளை எனது உடல் மீது ஆசை வைக்கிறானோ.. இல்ல எனது வேலை.. உழைப்பு மீது ஆசை வைக்கிறானோ.. என்று நினைக்கும் நிலைதான் இன்று பெண்கள் இடத்தில். இது எப்படி புரிந்துணர்வுக்கு இட்டுச் செல்லும்..! அயோக்கியத்தனமான சிந்தனைகள் அவளை மட்டுமன்றி அவளை நாடி வருபவர்களையும் அப்படியே மாற்றும்.

நாம் ஒழுக்கமாக இருக்கனும் என்று நினைத்தால் அதனை எவராலும் தகர்க்க முடியாது. அதற்குரிய வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டு.. அடுத்தவன் மீது சந்தேகப் பார்வைகளை வீசுவதும்.. குறைபிடிப்பதும்.. அல்ல.. புரிந்துணர்வு. இன்றைய இளம் பெண்கள் செய்வது மேற்கூறியதையே என்பதை.. உங்கள் வாதத்தில் இருந்து தெளிவாக உணர முடிகிறது. இந்த நிலையில்.. மன அழுத்தம் எகிறாமல். பணியுமா.. உலகில் மனிதரிடத்தில்..??!

ஏன் இந்தப் பிரச்சனைகள் இன்றைய நவீன உலகில் அதிகரித்து வருகின்றன.. ஏன் அன்றைய சமூகங்களில் இந்தளவுக்கு இவை இருக்கவில்லை..! இதற்கு முதற்காரணம்.. பெண்களின் சமூக.. குடும்பப் பொறுப்பற்ற நடத்தைகள்.. அதிகரித்திருப்பதே. அதை ஆணாதிக்கக்கு எதிரான பெண் விடுதலை என்ற பெயரில் அவர்கள் செய்வதாகச் சொல்லிக் கொள்ளலாம்.. ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லிக் கொண்டே பெண்ணாதிக்க.. நிலையை சமூகத்தில் மனிதாபிமான எல்லைக்கு அப்பால் நிலை நிறுத்த விளைகின்றனர்..! இது வாதமல்ல.. இதுவே இன்றைய யதார்த்தம். :):mellow:

இன்றைய பெண்களின் மன அழுத்தத்திற்கு ஆண்களின் ஆதிக்கப்போக்கே காரணம்.

ஒரு பெண்ணை அனைத்துவிடயங்களிலும் தனக்குச் சமமாகப் பார்க்கும் தன்மை ஆணிடம் இல்லை. எப்போதுமே தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டே பெண் என்பவள் சீவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆணுக்கு, பெண்ணானவள் தன்னாளுமையுடன் நிமிர்வது ஏற்க முடியாத நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கிறது அதனால் தன்னாளுமை கொண்ட பெண்ணை ஒடுக்குவதற்கு ஆண் வர்க்கம் இலகுவாக பயன்படுத்தும் ஒருலு சொற்பதமே 'நடத்தை கெட்டவள்.' இவ்வார்த்தைப் பிரயோகம் குறிப்பாகப் பெண்களுக்கு மனோரீதியான பெரும் பாதிப்பை உருவாக்கும் வல்லமை கொண்டது. இங்குகூட நெடுக்காலபோவான் என்ற ஆண் பெண்களைச் சீண்டவோ, தாக்கவோ உடனடியாக பெண் என்பவள் நடத்தைப் பிறழ்விற்கு உரியவள் என்று பெண் சமூகத்தின் மீதே முத்திரை குத்த முயல்வது கண்கூடு.

நெடுக்கால போவான்,

ஒரு இளைஞனை வட்டிக்குக் காசெடுத்து வெளிநாடுகளுக்கு உழைக்க அனுப்பி அவனைத் தனிமையில் வழிகாட்டலின்றித் தவிக்கவிடுலதாகப் புலம்புகின்ற நீங்களே...... பெண்கள் உடல் சுகத்திற்காகவும், பொருட்சுகத்திற்காகவும் ஆண்கள் பின்னால் அலைகிறார்கள் என்று உறுதியான நம்பிக்கையில் இருக்கும் போது..... உங்களைப் போன்ற உள்ளப்பாங்குடையவர்களை உள்ளடக்கியுள்ள சமூகம் பெண்கள்மேல் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கமுடியுமா? அப்படியே அச்சமூகம் விட்டாலும் உங்களைப்போன்ற சிந்தனைவாதிகள்தான் விட்டுவிடுவீர்களா? :(

ஐயா நெடுக்கரே!

நாய்ச்சங்கிலியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அதுவும் தங்கத்தில் புலிப்பல்லு அல்லது புலிநகங்களோடு ஆண்களுந்தான் கோயில்களில் உலா வருகிறார்கள் நீங்க காணவில்லையா? இப்போதெல்லாம் ஆண்கள் தத்தம் பொருளாதாரப்பின்னணியை மற்றவர்களுக்குப் பறைசாற்றுவதற்காகவே மனைவிற்கு அன்பென்ற பெயராலும், ஆசை என்ற நிலையாலும் பொன் நகைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். இந்தப் புதினங்களெல்லாம் உங்களுக்குத் தெரியாவிட்டால்?....... :o

அடுத்து ஆண்களெல்லாம் அப்பாவிகள் பெண்கள்தான் அவர்களைக் கெடுக்கிறார்கள். அருமையாக வாதாடுகிறீர்கள். பின்னாலே எழுதுகிறீர்கள் இப்போதெல்லாம் பெரும்பாலான வீதி வன்முறைகளுக்குக் காரணம் பெண்களென்று என்னய்யா முன்னுக்குப் பின் முரணாக கதையளக்கறீர்கள்?

வீதி வன்முறைகள் என்ற அடாவடித்தனத்தை பெண்கள் கன்களையும், உருட்டுக்கட்டைகளையும் கொண்டு தெருவில் இறங்கிச் செய்கிறார்களா? நீங்கள் பெண்களை அடிப்படைக்காரணியாகக் காட்ட முயல்வதன் மூலம் ஆண்வர்க்கத்திற்கே அறிவில்லை என்று வாதிட முற்படுகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. :lol::):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பெண்களின் மன அழுத்தத்திற்கு ஆண்களின் ஆதிக்கப்போக்கே காரணம்.

ஒரு பெண்ணை அனைத்துவிடயங்களிலும் தனக்குச் சமமாகப் பார்க்கும் தன்மை ஆணிடம் இல்லை. எப்போதுமே தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டே பெண் என்பவள் சீவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆணுக்கு, பெண்ணானவள் தன்னாளுமையுடன் நிமிர்வது ஏற்க முடியாத நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கிறது அதனால் தன்னாளுமை கொண்ட பெண்ணை ஒடுக்குவதற்கு ஆண் வர்க்கம் இலகுவாக பயன்படுத்தும் ஒருலு சொற்பதமே 'நடத்தை கெட்டவள்.' இவ்வார்த்தைப் பிரயோகம் குறிப்பாகப் பெண்களுக்கு மனோரீதியான பெரும் பாதிப்பை உருவாக்கும் வல்லமை கொண்டது. இங்குகூட நெடுக்காலபோவான் என்ற ஆண் பெண்களைச் சீண்டவோ, தாக்கவோ உடனடியாக பெண் என்பவள் நடத்தைப் பிறழ்விற்கு உரியவள் என்று பெண் சமூகத்தின் மீதே முத்திரை குத்த முயல்வது கண்கூடு.

நெடுக்கால போவான்,

ஒரு இளைஞனை வட்டிக்குக் காசெடுத்து வெளிநாடுகளுக்கு உழைக்க அனுப்பி அவனைத் தனிமையில் வழிகாட்டலின்றித் தவிக்கவிடுலதாகப் புலம்புகின்ற நீங்களே...... பெண்கள் உடல் சுகத்திற்காகவும், பொருட்சுகத்திற்காகவும் ஆண்கள் பின்னால் அலைகிறார்கள் என்று உறுதியான நம்பிக்கையில் இருக்கும் போது..... உங்களைப் போன்ற உள்ளப்பாங்குடையவர்களை உள்ளடக்கியுள்ள சமூகம் பெண்கள்மேல் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கமுடியுமா? அப்படியே அச்சமூகம் விட்டாலும் உங்களைப்போன்ற சிந்தனைவாதிகள்தான் விட்டுவிடுவீர்களா? :)

ஐயா நெடுக்கரே!

நாய்ச்சங்கிலியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அதுவும் தங்கத்தில் புலிப்பல்லு அல்லது புலிநகங்களோடு ஆண்களுந்தான் கோயில்களில் உலா வருகிறார்கள் நீங்க காணவில்லையா? இப்போதெல்லாம் ஆண்கள் தத்தம் பொருளாதாரப்பின்னணியை மற்றவர்களுக்குப் பறைசாற்றுவதற்காகவே மனைவிற்கு அன்பென்ற பெயராலும், ஆசை என்ற நிலையாலும் பொன் நகைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். இந்தப் புதினங்களெல்லாம் உங்களுக்குத் தெரியாவிட்டால்?....... :lol:

அடுத்து ஆண்களெல்லாம் அப்பாவிகள் பெண்கள்தான் அவர்களைக் கெடுக்கிறார்கள். அருமையாக வாதாடுகிறீர்கள். பின்னாலே எழுதுகிறீர்கள் இப்போதெல்லாம் பெரும்பாலான வீதி வன்முறைகளுக்குக் காரணம் பெண்களென்று என்னய்யா முன்னுக்குப் பின் முரணாக கதையளக்கறீர்கள்?

வீதி வன்முறைகள் என்ற அடாவடித்தனத்தை பெண்கள் கன்களையும், உருட்டுக்கட்டைகளையும் கொண்டு தெருவில் இறங்கிச் செய்கிறார்களா? நீங்கள் பெண்களை அடிப்படைக்காரணியாகக் காட்ட முயல்வதன் மூலம் ஆண்வர்க்கத்திற்கே அறிவில்லை என்று வாதிட முற்படுகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. :mellow::mellow::unsure:

உலகில் எந்த ஆணும் தனது ஆளுமையை பெண் தடுக்கிறாள் என்று குற்றம்சாட்டிக் கொண்டு தனது பலவீனங்களை மறைத்து வாழ்ந்ததாகச் சரித்திரம் கிடையாது. ஆனால் பெண்கள் தங்களின் தவறுகளை பலவீனங்களை ஆணாதிக்கம் என்பதற்கு எதிரான தமது செயற்பாட்டின் வடிவம் என்ற போலித் தோற்றத்தினூடு மறைத்து வாழ்ந்து விடலாம் என்று சமீபகாலமாக சிந்திக்க முற்படுகின்றனர். மனிதத் தன்மை அற்று நடக்க விளைகின்றனர். அவையே அவர்கள் மத்தியில் மன அழுத்தங்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

நான் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு மனிதன் ஒழுக்கத்தோடு வாழ்வதை எவரும் தகர்க்க முடியாது. ஆனால் அந்த மனிதன் தான் தீர்மானிக்க வேண்டும் தனது நடத்தை ஒழுக்கத்தின் பால் அமைந்திருக்கிறதா என்பதை. இன்றைய பெண்களில் அநேகருக்கு.. இந்த உண்மை புலப்படுவதாக இல்லை..! தாங்களா.. தெளிவாகத் தெரிந்து கொண்டும்.. ஒழுக்கமின்றி நடந்து கொண்டு விட்டு.. ஆண்கள் தம்மை "நடத்தை கெட்டவர்கள்" என்று சொல்லிவிடத்தானே போகிறார்கள்.. எனவே நாங்கள் நடத்தை கெட்டவர்களாகவே வாழ்ந்து விடுவோம் என்று தீர்மானிக்கிறார்களாம். கடவுளே.. ஆண்கள் இல்லையேல்.. பெண்களின் பலவீனங்களை இயலாமைகளைப் பொறுப்பேற்க உலகில் மரம் செடி கொடிதான் பெண்களிற்கு கருவியாகி இருந்திருக்குமோ என்னமோ..! மரம் தம்மைக் கற்பழித்தது என்றும் கதை கட்டக் கூடியவர்கள் இந்தப் பெண்கள்..! :lol::)

ஆண்கள் நகையைக் காட்டி பெண்களை மயக்கிப் போடுகிறார்களாம். நல்ல வேடிக்கையாக இருக்கிறது. நகைக்கு மயங்கி ஆண்களை வறுத்தெடுப்பதே பெண்கள் தான் என்பதை உலகம் நங்கு அறியும். ஏன் இந்தப் பூசிமொழுகல்கள்..??!

சரி உங்களின் வாதப்படியே.. ஏன் ஆண்கள் வாங்கும் நகைக்கு பெண்கள் அடிபணிகிறார்கள். தூக்கி மூஞ்சியில் விட்டெறிந்துவிட்டு.. உங்கள் அன்பை மட்டும் பரிசாகத் தாருங்கள்.. அதுபோதும் என்று கேட்கலாமே..! ஏன் செய்கிறார்கள் இல்லை பெண்கள்..???! மாறாக வாங்கிக் கொடுக்கிறதுகளை பூட்டிக் கொண்டு வீட்டில இருந்தாலும் பறுவாயில்லை.. ஊருக்கு காட்டிக் கொண்டு அலைவதன் நோக்கம் என்ன..??!

இப்படித்தான் நயமாக பேசி.. பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வாழப் பழகி விட்ட பெண்களுக்கு மன அழுத்தம் வராமல்.. என்ன வரும்..???!

யார் நாய்ச் சங்கிலி போல பவுண் சங்கிலி போடுறான். அப்படியானவர்களின் பின்னால் பெண்கள் அலையும் போக்குத்தான் அதைத் தூண்டி இருக்கிறது. நாய் சங்கிலி போடுறவனை கண்டும் காணாமலும் விடுங்கள்.. அவனே தன்னை மாற்றிக் கொள்வான்..! நல்ல வழிக்கு திருந்த முற்படுவான்.

யார் துப்பாக்கியும் கத்தியுமா திரியுறான். பெண்களோடு கூடி அலைபவன் தான் அதிகம் அப்படித் திரிகிறான். அதற்குக் காரணம் யார்.. பெண்களே. ஏன் சில பெண்களே தங்களின் தரத்தைச் சொல்ல.. தன்னை பல ஆண்கள் தூக்க அலைகிறார்கள் என்று கதையளப்பதைக் கூட நான் கேட்டிருக்கிறேன். இந்தப் புலம்பெயர் தேசத்தில். ஏன் பெண்களுக்கு இந்தக் கேடுகெட்ட நாய்ப் பிழைப்பு..! இவற்றில் இருந்தெல்லாம் இவர்கள் எப்போ வெளியே வந்து மனிதத் தன்மையோடு உயர்ந்த ஒழுக்கத்தோடு உலகில் வாழ நினைக்கிறார்களோ அப்போ மன அழுத்தங்கள் அதிகரிப்பது குறையும்..! :o

Edited by nedukkalapoovan

பெண்களின் மன அழுத்தத்துக்கு பெண்களின் எதிர்மாறான சிந்தனனயும் கற்பனையில் வாழுவதுமே காரணம்,,,,,,,, :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் புலம்பெயர் வாழ்வில் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்

உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.

எங்களது ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்ததிலிருந்து ஒரேமாதிரி உண்டு உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அதாவது பெண் குழந்தைக்குப் பத்து வயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண் குழந்தையின் மனதில் விசனங்களும் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகின்றது.

ஆண்பிள்ளை வெளியில் போய் விளையாடலாம். நினைத்த நேரம் வெளியில் போய் நினைத்த நேரம் வீட்டுக்குத் திரும்பலாம். ஆனால் ஒரு பெண்பிள்ளை ஏதாவதொரு காரணத்துக்காகப் பத்து நிமிடங்கள் பிந்தினாலே ஏன்...? ஏதற்கு...? என்ற கேள்விகளால் குடைந்தெடுக்கப் படுகின்றாள்.

பெண்பிள்ளைகளைக் கவனமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் எத்தனை அநாவசியத் தடைகள் போடப் படுகின்றன. இந்தத் தடைகளும் அளவுக்கு மீறிய கண்டிப்பும் பெண்பிள்ளைகளைச் செப்பனிட்டு வளர்த்து விடப் போதுமானவை என்றுதான் அனேகமான பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதுதான் பெண்பிள்ளைகளை வளர்க்கும் முறை என்றதொரு ஆழ்ந்த கருத்தை அவர்கள் தமக்குள் பதித்தும் வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்களது இந்தச் செயற்பாட்டுக்கான முக்கிய காரணங்களில்

ஒன்று, அவர்கள் தம் பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பாசம். இரண்டாவது, இந்த சமூகத்தின் மேலுள்ள அதீத பயம்.

இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தீர்களானால் இந்த சமூகம் தமது பெண்பிள்ளையை அடக்கமில்லாதவள் என்றோ, ஆட்டக்காரியென்றோ சொல்லி விடும் என்றும், அதனால் தமது மகளுக்கு திருமணம் நடக்காது போய் விடும் என்றும் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படுகின்றார்கள். இது போன்று இன்னும் வேறு சில காரணங்களும், அதனால் ஏற்படும் பயங்களும்தான் பெற்றோர்களை இப்படியான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அவர்களின் இந்த முடிவினால் அவர்கள் பெண் பிள்ளைகளின் முன் கட்டி யெழுப்பும் தடைகள் அதிகமாகின்றன.

தடைகள் அதிகமாக அதிகமாகத்தான் அதை உடைத்தெறியும் வீறாப்பு ஏற்படும் என்பதை எந்தப் பெற்றோரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

அதேநேரம் இந்த உடைத்தெறியும் துணிவு எத்தனை பேருக்கு வரும்? உடைத்தெறியும் துணிவு வந்தாலும் அதை செயற்படுத்தும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்? இந்தத் துணிவு, தைரியம் எதுவும் வராதவர்கள் தான், எல்லாவற்றையும் மனதுக்குள்ளே வைத்து வருந்தி வருந்தி உளவியல் பிரச்சனைக்கு அடிமையாகிறார்கள்.

வீட்டிலே அம்மாவும் அப்பாவும் ஐரோப்பிய ஸ்ரைலில் எல்லாம் செய்வார்கள். ஆனால் அவர்களின் பெண் பிள்ளை வகுப்பு மாணவியின் அல்லது நண்பியின் பிறந்தநாள் விழாவுக்குப் போகவேண்டுமென்று கேட்டால் மட்டும் எமது கலாச்சாரத்தைச் சொல்லித் தடுத்து விடுவார்கள்.

பெண்பிள்ளை பாடசாலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் வீட்டுக்கு வரப்போகும் விருந்தினரை வரவேற்க அவளைக் கொண்டும் வேலைகள் செய்விப்பார்கள். விருந்தினர் வந்தவுடன் அப்பா போத்தலும் கிளாசுமாக இருந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். அம்மா அப்பாவின் நண்பர்களது மனைவியருடன் சமையலறையில் சமையலும் அரட்டையுமாக நிற்பார்.

அண்ணன், தம்பி எல்லோரும் நண்பர்களிடமோ அல்லது விளையாடவோ வெளியில் போய்விடுவார்கள். அந்தப் பெண்பிள்ளை என்ன செய்யும்?

அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் தொலைக்காட்சியில் என்ன பார்க்கிறார்களோ! அதையே பார்த்து... அம்மாவும் அப்பாவின் நண்பர்களின் மனைவியரும் என்ன அரட்டை அடிக்கிறார்களோ! அதையே கேட்டு... இதுதான் பத்து வயது தாண்டிய ஒரு பெண்பிள்ளையின் அறிவை வளர்க்கும் விடயங்களா? அல்லது அந்த வயதில் அவளின் மனிதில் சிறகடிக்கும் இனிய கனவுகளுக்கும், நினைவுகளுக்கும் போடும் தீனியா?

வீட்டு வேலைகளைப் பிள்ளைகள் பழகத்தான் வேண்டும். ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை என்றில்லை. அது போகப் பெண்பிள்ளைகள் மட்டும் தான் வீட்டு வேலைகளைப் பழக வேண்டுமென்றுமில்லை. பெண்பிள்ளைகள் வெளியுலகத்தையும் பார்க்க வேண்டும்.

இந்த வயதில் அவர்களிடம் பல ஆசைகள் இருக்கும். ஆனால் அனேகமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள், இந்த வயதில் பிள்ளைகளிடம் காதல் ஒன்று மட்டும் தான் இருக்குமென்று. அந்த நினைவுகள் அவர்களைப் பயமுறுத்த தவறுகள் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற ஒரே எண்ணத்தைக் கருத்தில் கொண்டு பெண்பிள்ளைகளைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள். இங்கு கூட பெண்பிள்ளைகளை மட்டுந்தான் கட்டிப் போடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் தவறினால், அது தவறு இல்லை, இயல்பு என்பது எமது சமூகத்தின் கணிப்பீடு.

பெற்றோர்களினதும், சமூகத்தினதும் இந்தத் தவறான கணிப்பீடு, பெண் பிள்ளைகளின் மனதில் ஒரு வித விரக்தியையும், வேதனையையும் ஏற்படுத்தி அதுவே நாளடைவில் உளவியல் தாக்கமாகி விடுகிறது.

இதனால் அந்தப் பெண்பிள்ளைகளின் மனம் மட்டுமல்லாமல், உடல் கூடப் பாதிக்கப் படுவது ஆராய்ச்சி ரீதியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஐரோப்பிய மருத்துவர்களும், அமெரிக்க மருத்துவர்களும், ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்களை விட புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்கள் தோள்மூட்டு வலியாலும், மிக்ரேனே எனப்படும் கபாலஇடியாலும் மிகவும் அவஷ்தைப் படுவதைக் கண்டு பிடித்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார்கள்.

இந்த ஆராய்ச்சியிலிருந்து அவர்கள் கண்டு கொண்டது புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான ஆசியத்தமிழ்ப் பெண்கள் ஏதோ ஒரு வித மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதனால் அவர்களின் தோள் மூட்டில் வலியோ அல்லது தாங்க முடியாத தலை இடியாகிய கபால இடியோ ஏற்படுகின்றது. அல்லது அதையும் மீறி எல்லோர் மீதும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டு அதை வெளியில் கொட்ட முடியாது உள்ளுக்குள்ளேயே அடக்கி, அடக்கி அது மூளையின் சில நரம்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, இரண்டு காதின் பின் புற நரம்புகளும் புடைத்து, அவர்களுக்கே, இது ஏன் என்று தெரியாமல் அவர்கள் நோயாளிகள் ஆகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களை அனேகமான பெற்றோர்கள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது சற்று கவலைக்குரிய விடயம்.

பெற்றோர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதாவது, பெண்பிள்ளைகளை அளவுக்கதிகமாக அடக்கி வளர்ப்பது தான் அவர்களைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கான வழி இல்லை, என்பதை.

அவர்களுக்கு ஓரளவுக்காவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களைப் பேச விட வேண்டும். அவர்களை மற்றவர்களுடன் பழக விட வேண்டும். வாழும் முறை பற்றி அவர்களுக்குப் பக்குவமாய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதை விடுத்து

"நீ பெண் - அதனால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்றோ

"நீ பெண் - அதனால் இப்படித்தான் பேச வேண்டும்" என்றோ அல்லது

"நீ பெண் - அதனால் இன்ன இன்னதுதான் செய்யலாம்" என்றோ வரையறைகள் போடுவது மிகவும் தப்பானது.

ஒரு பெண்குழந்தையின் திறமைகள் இப்படியான செயற்பாடுகளால் கட்டிப் போடப்படுகின்றன. அந்த நிலையில், தன் திறமையை வெளிப்படுத்த முடியாத கோபத்தில், அது பற்றிப் பேசக் கூட முடியாத விரக்தியில் அந்தக் குழந்தை உளவியல் நோயாளியாகிறது.

ஆதலால் பெற்றோர்கள் சற்று அல்ல, நிறையவே சிந்திக்க வேண்டும். தமது பிள்ளைகளை தாமே உளவியல் நோயாளியாக்கும் அவல வேலையைச் செய்யாமல், அன்பு, நட்புடன் சுதந்திரத்தையும் கொடுத்து, ஒழுக்கத்தையும் சரியான முறையில் போதித்து அவர்களை வளர்க்க வேண்டும்.

பிள்ளையின் நடத்தையில் தவறு கண்டால், நீ பெண்பிள்ளை என்றோ, எமது கலாச்சாரம் என்றோ அவளைப் பயமுறுத்தாமல், அவளை அன்போடு அணுகி, ஆதரவோடு பேசி, நானிருக்கிறேன் உனக்கு என்ற நம்பிக்கையை அவள் மனதில் விதைக்க வேண்டும்.

அப்போதுதான் அவள் நட்போடு உங்களைப் பார்ப்பாள். பயம் தெளிந்து உங்களுடன் பேசி நல்ல பாதைக்குத் திரும்புவாள். வீட்டுக்குள்ளேயே வைத்து, அடக்கம் என்ற பெயரில் அடக்கிவளர்க்கப் படும் பிள்ளைகளை விட, உங்கள் பிள்ளை நல்லது, கெட்டதைப் பகிர்ந்துணரும் தன்மை கொண்டவளாக இருப்பாள்.

மிக மிக முக்கியமான விடயம், பெற்றோர்கள் தங்கள் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காகச் செலவு செய்யும் நேரத்தை விடக் கூடிய நேரத்தை தமது பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதற்குச் செலவு செய்ய வேண்டும். அது பிள்ளைகளின் மனதில் ஒரு சந்தோஷத்தையும், பெற்றோரிடம் எதையும் மனம் திறந்து பேசி, ஆலோசனை கேட்கும் தன்மையையும் ஏற்படுத்தும்.

அதை விடுத்து கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளை அடக்க நினைத்தால் இந்த உளவியல் பிரச்சனை எமது பெண்பிள்ளைகளின் மத்தியில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

--------------------------------------------------------------------------------

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது.

புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.

ஒரு பெண்ணிடம் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிந்தனை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு முன்னர் அவள் பெற்றோரோ, அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

திருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று "பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிடையும்தான் முக்கியம்" என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து, படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.

"என்ன புதுமை வேண்டிக்கிடக்கு. பொம்பிளையெண்டால் புருஷனைக் கவனிக்கிறதை விட்டிட்டு...! வேறையென்ன அவவுக்குத் தேவை...?" என்று சொல்லும் ஆண்கள் இன்றும் புலத்தில் இருக்கிறார்கள். இப்படியான எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் எதிர்காலம் பற்றிப் பார்ப்போமேயானால் அதில் கூட பல விதம் இருக்கிறது.

அதில் முதலாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், சமைப்பது, சாப்பிடுவது, பணிவிடை செய்வது, தொலைக்காட்சியில் வெறுமனே மகிழ்வூட்டும் சினிமா போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது.... என்றிருக்கும். இந்தப் பெண்களின் எதிர்காலம் வெளியுலகம் தெரியாமல், பொது அறிவுகளில் அக்கறையில்லாமல், எதற்கும் யாரையாவது தங்கி வாழும் தன்மையுள்ளதாகவும், இதுதான் வாழ்க்கை என்ற எண்ணத்தில் அமைதியாகவும் அதே நேரம் ஒரு வித அர்த்தமற்ற வாழ்க்கைத் தன்மையுள்ளதாகவும் அமைந்திருக்கும்.

இரண்டாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் முதலாவது ரகப் பெண்கள் செய்வதையே செய்து கொண்டு, ஆனால் அந்த வாழ்க்கையைத் துளி கூட ஏற்றுக் கொள்ள முடியாததொரு மனப் புழுக்கத்தில் வெந்து, மனதுக்குள் மௌனப்போர் நடத்தி மாய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

மூன்றாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் புழுக்கம் தாங்காது பொங்கியெழுந்து, போராடி, தமக்குப் பிடித்தமான பாதையை நோக்கி நடக்கத் தொடங்குவார்கள். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஏனெனில் இவர்கள் கணவனுடன் போராடியே இப் பாதையைத் தேர்ந்தெடுப்பதால், வீட்டிலே ஒரு ஆதரவான தன்மை இல்லாமல், கணவன் என்பவனின் அழுத்தம், குத்திக்காட்டல், வீட்டிலே ஏற்படும் சின்னச் சின்னத் தவறுகளுக்கும் "நீ வேலைக்குப்போவதுதான் காரணம்" என்பதான பிரமையை ஏற்படுத்தி மனைவியை குற்ற உணர்வில் குறுகவைக்கும் தன்மை... இத்தனையையும் தாண்டித்தான் இவர்களால் வெளியிலே நடமாடமுடியும். இது இவர்கள் மனதில் நிறையவே பாதிப்பை ஏற்படுத்தி மனஅழுத்தம் நிறைந்ததொரு அமைதியற்ற வாழ்க்கைத் தன்மையைக் கொடுக்கும். இந்த நிலையில் இப்பெண்களின் எதிர்காலமும் நிட்சயம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இதைவிட சில கணவன்மார் சுதந்திரம் கொடுப்பது போல் கொடுத்து, நான் ஆண் என்ற ஆங்காரத்திலிருந்து சிறிதேனும் இறங்கிவராமல் வீட்டில் பெண்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களுடனான பெண்களின் எதிர்காலமும் சந்தேகத்துக்கிடமின்றி ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இங்கு நான் மேலோட்டமான பெரிய பிரச்சனைகளை மட்டுமே பார்த்தேன்.

இவைகளைவிட இன்னும் சின்னச் சின்னதான எத்தனையோ அழுத்தங்கள் ஆண்களால் பெண்களுக்குக் கொடுக்கப் பட்டு, பெண்கள் பல விதமான பாதிப்புக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறார்கள். இப் பெண்களின் எதிர் காலமும் மிகுந்த ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இதே நேரம் சில கணவன்மார் நல்ல ஆரோக்கியமான சிந்தனையுடன்

வீட்டுவேலைகளையும் மனைவியுடன் பகிர்ந்து கொண்டு, பிள்ளைகளை வளர்ப்பதிலும் முமுமையான பங்களிப்பை மனைவியுடன் சோந்து செய்து கொண்டு, மனைவியை வெளி உலகத்திலும் சுயமாக நடமாட விடுகிறார்கள்.

இப்படியான கணவன்மார்களுக்கு மனைவியராக வாய்த்த பெண்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். இந்தப் பெண்களின் எதிர்காலம் நிட்சயம் பிரகாசமானதாகவும் ஆரோக்கியமானதாகவுமே அமையும்.

21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்

இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள்.

இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது.

ஆங்காங்கு ஓரிரு பெண்களுக்கு சந்திரமண்டலத்தில் காலடி வைக்கவும், ரெயின் ஓட்டவும், விமானமோட்டவும், ஏன்...! இன்னும் பெண்களால் முடியாதென்று சொல்லி வைத்த வேலைகளிலெல்லாம் தடம் பதிக்கவும் அனுமதி கிடைத்தாலும், அவை சாதனைகளாகவே அமைந்தாலும், மிகுதி ஒட்டு மொத்தப் பெண்களுக்கும் இவைகளையே சுட்டிக் காட்டி வெறுமனே கண்துடைப்புத்தான் செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இன்னும் எத்தனையோ பெண்கள் அடக்கப் பட்டுக் கொண்டும் ஒடுக்கப் பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

பெண்கள் மீதான அநீதியும் அடக்குமுறையும் உலகெலாம் பரந்து இருக்கும் அதே வேளையில், ஆங்காங்கு பலபெண்கள் தம்பலம் உணர்ந்து, தாழ்வு மனப்பான்மை துறந்து வாழ்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

பின் வளவுக்குப் போகவே துணை தேடிய எமது தாயகப் பெண்கள் இன்று எம் மண்ணிலே நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆணுக்கு நிகராக ஆயுதந்தூக்கி வீரியத்துடன் போராடுகிறார்கள். தாமே போர்க்கப்பல்களைத் தயாரித்து எந்த ஆண் துணையும் இன்றி தாமே அதைக் கடலில் இறக்கி.... தனித்து நின்று தைரியமாக போரியலில் காவியம் படைக்கிறார்கள். சமூகத்தின் போலிக் கலாச்சார அடக்கு முறைகளைத் தூக்கியெறிந்து, அநீதி என்று கண்டதை வெட்டிச் சாய்த்து தாய் மண்ணுக்காய் உயிரை விடுவதும் போராட்டக் களங்களிலும் ஆங்காங்கு வேறு கல்வி கலை, சார்ந்த இடங்களில் சாதனை புரிவதும் என்று பெண் இனத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் எமது தமிழ்ப் பெண்களின் விகிதாசாரத்தில் அவர்கள் மிகவும் சொற்பமானவர்களே! அவர்கள் தவிர்ந்த எஞ்சியுள்ள பெண்கள் மீதான அடக்குமுறைகளும் வன்முறைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

எல்லாப் பொருட்களையும் பணம் பெறுவதற்காக விற்பார்கள். கல்யாண சந்தையில் மட்டும் பெண் என்ற உயிர்ப்பொருள் பணம் கொடுத்து இன்னொருவனுக்குச் சுகம் கொடுப்பதற்காக விற்கப் படும்.

இந்த வேடிக்கையான விற்பனைச் சந்தையில் திருமண பந்தத்தில் இணைந்தால்தான் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலையில், தாய் தந்தையரின் திருப்திக்காகவேனும் திருமணத்துக்கு முகம் கொடுப்பதற்காக, முகம் தெரியாத பொறுப்பற்ற கணவன்மார்களிடம் வாழ்வைத் தொலைத்து ஜடமாகிப் போன எமது தமிழ்ப் பெண்கள் எத்தனையோ பேர். இவர்கள் புலத்தில் மட்டுமல்ல. போரியலில் புதுச் சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் எமது தாய்நிலத்திலும் இன்னும் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள். ஆனாலும் புலத்தில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

பிரச்சனை என்று வரும் போது தாய்நிலத்தில் உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் என்ற பக்கத் துணைகளும் அவர்களது உதவிகளும் ஓரளவுக்காவது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கிறது. ஆனால் இங்கே புலத்தில் கணவன் என்ற ஒருவனை மட்டும் நம்பி கனவுகளைச் சுமந்து வந்த தமிழ்ப்பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் அவலத்துக்குரியதாகவும் அமைந்து விடுகிறது.

எதைச் செய்ய நினைத்தாலும் கருவிலேயே ஆரம்பிக்கப் பட்ட, "நீ பெண்! அதனால்..." என்ற திணிப்புக்கள் பதியப் பட்ட மூளையிடமிருந்து மீளமுடியாததொரு குற்ற உணர்வினாலும், கணவன், சமூகம் இணைந்த ஒரு கும்பலின் பல் வேறுவிதமான அழுத்தங்களை எதிர் நோக்க முடியாத ஆனால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையினாலும், துரோகங்களினால் ஏற்படும் ஏமாற்றங்களினாலும் இவர்கள் துவண்டு நட்டாற்றில் விடப்பட்ட வள்ளங்கள் போலத் தள்ளாடிப் போகிறார்கள்.

தம்மை வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களாகத் தாமே கருதி விரக்தியடைந்து உளவியற் தாக்கங்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த உளவியற் தாக்கங்களுக்கு எந்த விதமான சிகிச்சைகளும் கிடைக்காத ஒரு காலகட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மெதுமெதுவாக மனநோயாளிகளாகித் தற்கொலைக்குத் தயாராகியும் விடுகிறார்கள்.

இதனால் இன்று புலத்தில் கலாச்சாரம் என்ற போலி வேலிக்கு நடுவே தற்கொலை என்ற சமாச்சாரம் ஆழ வேரூன்றி விட்டிருக்கிறது. ஏன் இது தமிழ் சமூகத்தில் அடிக்கடி ஏற்படுகிறது என ஐரோப்பியர்கள் ஆராய்ச்சி செய்யுமளவுக்கு துன்பியல் நிறைந்த இந்தத் தற்கொலைச் சமாச்சாரம் புலத்தில் பிரபல்யமானதொன்றாகி விட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவம் -

19 வயது மட்டுமே நிரம்பிய அந்தப் பெண் தாய்க்கு ஒரு மகளாம். யேர்மனிய மாப்பிள்ளையிடம் என்று சொல்லி சகல சீதன சம்பிரதாயங்களுடன் கனவுகளையும் சுமந்து கொண்டு இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். வந்த பின்தான் கணவனுக்கு வேற்று நாட்டைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. எந்தப்

பெண்ணால்தான் இதைத் தாங்க முடியும்.

இவள் வந்த பின்னாவது அவன் அந்தப் பெண்ணை விட்டு வந்து இவளுடன் ஒழுங்காகக் குடும்பம் நடத்தியிருக்காலம். அவன் அதைச் செய்ய வில்லை. தான் ஆண் என்ற திமிர்த்தனத்துடன் இருவருடனும் குடித்தனம் நடத்தியிருக்கிறான். அதுமட்டுமல்லாமல் அடி உதைகளால் அவள் வாயைக் கட்ட முனைந்திருக்கிறான். இந்தக் கொடுமையினால் மனம் துடித்த அந்தப் பெண் அக்கம் பக்கம் உள்ள தமிழ்க் குடும்பங்களிடம் சாடைமாடையாக தனது மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறாள்.

ஒரு ஆண் என்ன செய்தாலும் பிரச்சனையில்லை. பெண் சரியாக நடக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்கள்தானே எம்மவர்கள். அவர்கள் அவளை அனுசரிச்சுப் போகும் படியும் சமாளிக்கும் படியும் புத்தி சொல்லியுள்ளார்கள்.

அவளை, அவள் வாழும் நாட்டின் மொழி படிக்கவோ அல்லது ஏதாவது வேலைக்குப் போகவோ அந்தக் கணவன் அனுமதிக்கவில்லை. அதனால் அவளுக்கு யேர்மனியரிடம் தனது பிரச்சனையைச் சொல்லி உதவி கேட்குமளவுக்குப் பாசை தெரியாது. யாருடனும் பரிட்சயமும் கிடையாது.

இந்த நிலையில் கணவன் என்பவன் இன்னொருத்தியிடம் போய் விட்டான் என்பது தெரிந்த பொழுதுகளில், தனியாக வீட்டில் இருந்து அலை மோதும் கொடிய நினைவுகளோடு போராடிக் கொண்டு எத்தனை காலத்துக்குத்தான் ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியும்...?

முழுமையான இரண்டு வருடம் கூட அவள் வாழ்வு இங்கே நீளவில்லை. தனியான ஒரு பொழுதில் கழுத்துக்குக் கட்டும் சால் எனப்படும் சால்வை போன்ற நீண்ட துண்டை தான் வாழும் இரண்டாவது மாடியின் யன்னலில் கொழுவி அதைத் தன் கழுத்தில் போட்டுத் தொங்கி தன்னை மாய்த்துக் கொண்டு விட்டாள்.

இவள் இறப்புக்கு யார் காரணம்? கணவன் என்ற கயவன் முதற் காரணமாக இருந்தாலும், அவன் மட்டுமல்ல அந்தப் பெண்ணின் இறப்புக்குக் காரணம். பாரா முகமாய் இருந்த எமது தமிழ்ச் சமூகமும்தான்.

அந்தப் பெண்ணுக்கு அவர்கள் ஆறுதல் கூறியிருக்கலாம். நிலைமை மோசமாகும் கட்டத்தில் அவள் தற்கொலை வரை போகாத படிக்கு அவளை ஒரு பெண்கள் பாதுகாப்பு நிலையத்தில் சேர்த்து விட்டிருக்கலாம். ஆனால் செய்ய வில்லை. அசிரத்தையாக இருந்து விட்டார்கள். மறைமுகமாக ஒரு கொலைக்குத் துணை போயிருக்கிறார்கள்.

இவைகள் மட்டு மல்ல. புலத்தில் இப்போதெல்லாம் பல புதுப் புதுக் கலாச்சாரங்கள் முளை விடவும் கிளை விடவும் தொடங்கியிருக்கின்றன.

அவற்றில் ஒன்று, மனைவியை வீட்டில் வைத்து விட்டு கணவன் என்பவன் வேறு பெண்களைத் தேடிச் சென்று அரட்டை அடித்து வருவது. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது போன்ற செயற்பாடுகள். இது பற்றி மனைவி அறிந்து கேட்டால் அவளை அடியால் உதையால் வார்த்தையால் அடக்கி விடுவது.

இதனால் மனைவி என்பவள் சமைப்பவள், படுக்கை விரிப்பவள்... என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு அதிலிருந்து விலக முடியாமலும், அடி உதை நச்சரிப்பு போன்ற வதைகளிலிருந்து மீள முடியாமலும் ஒரு வேலைக்காரி போன்றதான பிரமையைத் தனக்குள் தானே வளர்த்துத் தனித்து வாழ்கிறாள்.

வெளியில் சொன்னால் மானம் போய்விடும்...! என்ன நினைப்பார்கள்...? என்றதான போலிக் கௌரவத்துக்குள் தன்னைப் புதைத்து விடுகிறாள். கணவனை விட்டுப் போனால் கலாச்சார வேலி தாண்டி விட்டாள் என சமூகம் சொல்லும் எனப் பயந்து உள்ளுக்குள்ளேயே தன்னை ஒடுக்கி உடைந்து போகிறாள்.

இப்படியாக, எமது பெண்கள் இதை யாருடனும் பேசாது தற்கொலை வரை போவதற்கும் எமது சமூகமே முக்கியமான காரணமாகிறது. பாதிக்கப் பட்டவளுக்கு உதவுவதை விட அவள் ஆற்றாமை தாங்காது தன் வீட்டுப் பிரச்சனையை சொல்லி உதவி கேட்கும் போதோ அல்லது மன ஆறுதல் தேடும் போதோ அதைக் கேலிக்குரிய விடயமாக எடுத்து மற்றவருடன் சேர்ந்து பாதிக்கப் பட்ட பெண்ணையே பரிகசிக்கத் தொடங்கி விடும் எமது சமூகம் இது விடயத்தில் பாரிய குற்றவாளியாக தன் மேல் முத்திரை குத்திக் கொள்கிறது.

தற்கொலை என்று நடைபெறும் போது அதிர்ச்சியில் வாய்பிழந்து விட்டு, அடுத்த நிமிடமே அந்தப் பெண் மேல் இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் கட்டி விட்டு நின்று வேடிக்கை பார்க்கிறது.

இதுவே கணவன் என்ற பெயரில் பெண்களை வதம் செய்யும் ஆடவர்க்கு நல்ல சாதகமாகி விடுகிறது. இறந்தவள் மனநோயாளி. அவள் இங்கே வந்ததிலிருந்து இப்படித்தான். எல்லாத்துக்கும் சந்தேகம்தான்... என்பது போன்றதான கணவனின் பொய் பிரச்சாரத்துக்கு உறுதுணையாகிவிடுகிறது.

இந்த நிலை மாற வேண்டும். எமது சமூகம் திருந்த வேண்டும். பிரச்சனைகளில் வீழ்ந்து போன பெண்களைக் காக்க சமூகம் ஆரோக்கியமான பிரயோசனமான உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும். ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்று வரும் போது அதைத் தமக்கு வந்ததாக எண்ணி உடனடியாக அதைத் தடுப்பதற்கான வழிகளில் தம்மை ஈடு படுத்த வேண்டும். வலிந்து உதவ வேண்டும்.

ஊரென்ன சொல்லும்? உலகமென்ன சொலலும்? சமூகமென்ன சொல்லும்? என்று தாமே தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் விலங்கிடும் பேதைத்தனம் பெண்களிடமிருந்து ஒளிய வேண்டும். அதற்கான தைரியத்தை சுற்றியுள்ள சமூக உறுப்பினர்கள் வலுவோடு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும்.

தமது பிரச்சனைகளை மற்றவர்களுடன் பேசும் துணிவும் தைரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும். தமது பிரச்சனைகளை மட்டுமின்றி தம்மைச் சுற்றியுள்ள மற்றைய பெண்களின் பிரச்சனைகளையும் கூடத் தயக்கமின்றி வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

நாம் என்ன செய்கிறோம்? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்பதையும், உண்மை , நேர்மை, கடமை, கண்ணியம், சரியெனப் பட்டதைச் செய்யும் துணிவு, நினைத்ததை செயற்படுத்தும் தைரியம், அறிவார்ந்த செயற்பாடு... இப்படியான விடயங்கள்தான் எமது வாழ்வுக்குத் தேவை என்பதையும், யாருக்கும் பயந்து வாழ்ந்தோமேயானால் எமக்கான வாழ்வு இல்லாமல் போய்விடும், என்பதையும் மன உளைச்சலினால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தன்னம்பிக்கையை முடிந்தவரை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

இப்படியான செயற்பாடுகளால்தான் இந்தத் தற்கொலைக் கலாசாரத்திலிருந்து நாம் எம்மை மீட்டுக் கொள்ள முடியும்.

எமது சமூகத்தில் உள்ள இன்னொரு பெரிய பிழையும் பிரச்சனையும் என்ன வென்றால் அனேகமான ஆண்கள் தமது கூடிய பொழுதை வெளியிலேயே கழிக்கிறார்கள். ஒரு சாராருக்கு நாள் முழுக்க வேலையென்றால் இன்னொரு சாரார் வேலை முடிய வெளியில் நண்பர்களிடம் சென்று விடுகிறார்கள். இன்னும் சிலரோ நண்பர்களையே வீட்டுக்கு அழைத்து வந்து வரவேற்பறையிலோ சாப்பாட்டு மேசையிலோ இருந்து அரட்டை அடிக்கவோ குடிக்கவோ தொடங்கி விடுகிறார்கள்.

இந்த வெளியுலகமும், பொழுது போக்கும் ஆண்களுக்கு மட்டுமே என்பதான பிரமை எமது சமூகத்தில் ஏற்படுத்தப் பட்டு விட்டது. இந்தப் பிரமையின் பாதிப்பை பல ஆண்கள் உணர்ந்து கொள்வதும் இல்லை. இதனால் அவர்களது மனைவியர் தனிமைப் படுத்தப் படுவதைப் புரிந்து கொள்வதும் இல்லை.

மனைவி என்பவள் சமையல், சாப்பாடு, உடைகள்... நேரம் கிடைத்தால் தொலைக்காட்சி அல்லது வானொலி போன்றவைகளுடனேயே வாழ்கிறாள். கணவன் வீட்டில் நிற்கும் நேரத்தில் கூட தனிமைதான் அவளுக்குத் துணையாகிறது.

கணவனும் அவரது நண்பர்களும் வீட்டில் நிற்பதால் ஒரு மனைவி மன நிறைவாக இருக்கிறாள் என்றும் கலகலப்பாக இருக்கிறாள் என்றும் கருத்துக் கொள்ள முடியாது. கணவன் என்பவன் தன்னோடு கூட இருந்து மனம் விட்டுப் பேசி வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் பங்கு கொள்ளும் போதுதான் ஒரு மனைவி தனக்கென ஒருவன் இருப்பதை உணர்கிறாள்.

ஆனால் எம்மவர்களில் எத்தனை பேர் மனைவியின் ஒவ்வொரு வேலையிலும் பங்கெடுக்கிறார்கள். எத்தனைபேர் ஒவ்வொரு நாளும் ஒரு கொஞ்ச நேரத்தையாவது மனைவிக்காக ஒதுக்கி அவளை அழைத்துக் கொண்டு வெளியில் போய் ஒரு ரம்மியமான இடத்திலிருந்து கதைத்து விட்டு வருகிறார்கள். எத்தனை பேர் குடும்பம் என்ற கூட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஓட்டு மொத்தக் கணவன்மாரும் அப்படி ஏனோதானோ என்று நடந்து கொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையான கணவர்கள் "இஞ்சரும், நான் கொஞ்சம் வெளியிலை போட்டு வாறன். " என்று சொல்லி தாம் மட்டுமாய் வெளியில் போய் விட்டு வருகிறார்கள். `என்னால் இந்த சொற்ப நேரத்தில் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. எனது மனைவி நாள் முழுக்க வீட்டில் இருக்கிறாளே! அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டுமே!` என்று. அனேகமான எந்தக் கணவன்மாரும் யோசிப்பதில்லை.

உழைப்பு, பணம்... இவைகள் மட்டுந்தான் குடும்பம் என்ற கோயிலின் தனித்துவங்கள் என்றும், இதனால் ஒரு பெண் திருப்திப் பட்டு விடுவாள் என்றும் ஆண்கள் நினைத்துக் கொண்டு செயற்பட எத்தனையோ ஆயிரம் புலம்பெயர் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி மனம் பொசுங்கிக் கிடக்கிறார்கள். இவர்கள் கூட நாளடைவில் உளவியற் தாக்கங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது.

அடுத்து, நாம் இங்கே எதிர் நோக்கும் பிரச்சனைகளில்... இப்படியான தனிமைப் படுத்தப் பட்ட பெண்களின் தனிமையைச் தமக்கு சாதகமாக்கி தமது நண்பனின் மனைவிக்கே வலை விரிக்கும் ஆண்கள்..., ரீன்ஏஜ் பருவத்தில் பெண்குழந்கைளிடம் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து ரீன்ஏஜ் குழந்தைகளுக்கே வலை விரிக்கும் அப்பாவின் நண்பர்கள்..., என்று புலத்தில் ஒரு பெரிய சீரழிவு தலை விரித்து ஆடுகிறது. இவைகளில் இருந்து எமது பெண் பிள்ளைகளும் இளம் பெண்களும் காப்பாற்றுப் பட விழிப்புணர்வு குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டப் பட வேண்டும். அந்தத் தலையாய கடமை பெற்றோரையே சார்ந்தது.

http://www.nerudal.com/content/view/50/38/

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுனாவிலன் .

ஒவொரு பெண்ணும் வாசிக்க வேண்டிய தலைப்பு .தொகுத்து தந்த உங்களுக்கு நன்றி .

யாழ் களத்தை வாசிபவர்களுக்கு கிடைக்கும் மற்றவர்களுக்கு ? போய் சேர வழி உண்டா ? கணனியில்

வாசிக்க முடியாதவர்களுக்காக ,கவலை அடைகிறேன் உண்மை சில சமயம் ஆண்களுக்கு உறைக்குமோ ?

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? .

ஆகா... அனுபவம் ஒண்டும் இல்லை எண்டு சொல்லிட்டு என்ன பக்காவா புட்டு புட்டு வைக்கிறிங்கள். விசயம் புரிஞ்சிட்டுதில்லோ... எனி வாழ்கையில கஸ்ரப்பட மாட்டிங்கள் (உதுதான் உண்மையெண்டு காதலியிடமோ மனைவியிடமோ சொல்லாமல் இருக்குமட்டும்).

அச்சோ..எல்லாமே கேள்வி ஞானம் தான் சபேஷ் மாமா..(உங்கள மாதிரி எனக்கு அனுபவம் எல்லாம் இல்ல மாமா)..சா..சா அவையிட்ட போய் உதை எல்லாம் சொல்லுவனோ.. :(

எல்லாரையும் விட நீங்க தான் ரொம்ப அழகு..எண்டு பொய்யை சொன்னா..அதை உண்மை எண்டு நம்பி கொண்டு இளிச்சு கொண்டு இருப்பீனம் :) ..அதில நாம காலத்தை தள்ளிட மாட்டோமா என்ன..நான் ஏன் மாமாவிற்கு சொல்லனும் மாமாவிற்கு தெரியாதா என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேராண்டிக்கு ஒரு ஓப் போடுங்கோ. அப்படியே பெண்களின் மூளைக்குள்ள உள்ளதை ஸ்கான் செய்து போட்டிருக்காப்பா..!

இது 100% உண்மை...!

ஆனால் பெண்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கிறது.. அதைவிட முட்டாள் தனம். கற்பனையில மட்டும் தான் ஆண்களுக்கு பெண்களை அவங்க விரும்பிற வடிவில பார்க்க முடியும். அதனால் தான் ஆண் எல்லாம் பெண்ணை தன் கற்பனை வடிவில்.. அப்பாவித்தனமா கண்டு.. ரசிச்சு... பாடி கவிஞன் ஆனான். எந்தப் பெண்ணாவது கற்பனையில் கூட ஒரு ஆணை நல்லா பார்த்திருக்காளா..???! கிடையாது.

ஆனால்.. ஒப்பிட்டுப் பார்த்திருப்பாள் அடுத்தவனா இவனா இன்னொருத்தனா உயர்த்தி என்று. ஆண் பெண்ணை ஒப்பிடும் போது கூட இன்னொரு பெண்ணோட ஒப்பிடமாட்டான். தனது மனதுக்குப் பிடித்த இயற்கையோடுதான் ஒப்பிடுவான்.. ஆண்கள்... நேரடியாக பல பெண்களைத் தேடி வாழ.. பெண்கள் அவங்க எண்ணத்தில் பல ஆண்களைச் சுமக்கிறதுதான் காரணம்..! அதுதான் அவைக்கு மன அழுத்தம் வரவும் காரணம்..!

அட..அட..(எங்க எல்லாரும் எனக்கு "ஓ" போடுங்கோ).."ஓ" போடுறோம் எண்டிட்டு ஆள ஒரடியா போட்டிடாதையுங்கோ என்ன..உவையள பத்தி படிக்கிறது பெரிய விசயமா என்ன தாத்தா..தா.. :D

ம்ம்..நீங்க சொல்லுறதும் சரி போல தான் இருக்கு எனக்கு..உவையள திருத்துற நேரம் நாய் வாலை நிமித்திடலாம் பாருங்கோ..எப்பாவாச்சும் எதிலையும் குறை கண்டு பிடிக்காம இருக்க ஏலுமோ இவைக்கு எதிலையும் குறை கண்டு பிடிக்கிறது இவைக்கு ஒரு அலாதி பிரியம்..(நீங்க கவனித்து இருக்கிறியளோ..??).. :lol:

மற்றது உவையளுக்கு இன்னொரு பிரச்சினை தங்களை யாரும் பார்க்க வேண்டும்..அதுக்காக உவையள் படுறபாடு இருக்கே..சொல்லி வேளையிள்ளை :lol: ..இதில இவைக்கு எங்க தாத்தா கற்பனை பண்ண எல்லாம் நேரம் இருக்குது யாரையும் பத்தி கதைக்கிறது எண்டா..நன்னா கற்பனை பண்ணுவீனம்..

தாங்களாவே இவையள் மன அழுத்தத்தை வரபண்ணி கொள்ளுறது..பிறகு மற்றவன் மேல பழியை போடுறது என்ன செய்யிறது..பாவம் ஆண்கள்.. :lol:

அதோட ஒரூ புகழ்பெற்ற மேதை சொல்லி இருக்கிறார்..(பெயர் உடனடியா வரவில்லை)..யாருக்கும் தெரிந்தா சொல்லவும் அதாவது.."பெண்ணை பத்தி குறை சொல்லும் ஆணிற்கு பெண்ணை பத்தி சிறிதேனும் தெரிந்திருக்க வாய்புண்டு புகழும் ஆண்களிற்கு அவர்களை பத்தி தெரிந்திருக்க வாய்பில்லை"..எண்டு..

அது 100% உண்மை என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

வணக்கம் ஐம்மு. பெண்கள் என்றாவுடன் ஏன் உங்கள் வயதையொத்த பெண்களையே நினைத்து கருத்துக்களை கொட்டுகின்றீர்கள்? மற்றப்பக்கம் கொஞ்சம் வயது வந்தவர்களாக பாருங்கள். உங்கள் அம்மா அக்கா அம்மம்மா ஒருவரும் உங்களைப்பற்றி கவலைப்படுவது இல்லையா? அவர்கள் எல்லாம் தங்கள் நலனில் மட்டுமா அக்கறை கொண்டு இருக்கின்றார்கள்? உங்கள் அம்மா உங்கள் அப்பாவின் நிம்மதியை விரும்பவில்லையா? ஒரே பிரச்சனையை உங்கள் அப்பாவிற்கு கொடுத்துக் கொண்ட இருக்கின்றார்கள். கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் பற்றி கதைக்கமால் நீங்கள் உங்கள் கருத்துகளில் பெண்களை தாக்கி எழுதுவதையே குறியாக்கின்றீர்களே ஏன்?

வணக்(கம்) ரமா மாமி...மாமி இப்ப எண்ட வயதை ஒத்த பெண்கள் தானே நாளைய தாய்மார்கள்..(அப்ப நீங்களே அவையள அப்படி பார்க்கவில்லையா..??) :lol: ..அப்ப நீங்களே உண்மையை ஒத்து கொள்கிறீர்களா..??..பரவாலையே நீங்களாவது உண்மையை ஒத்து கொண்டிருக்கிறீர்கள்.. :lol:

சரி அதை விடுவோம்..விசயதிற்கு வருவோம்..

என் அம்மா,அக்கா,பாட்டி இது தானா பெண்சமுதாயம்..??..இல்லையே நான் வேலையில் பணி புரியும் போது என்னுடம் வேலை பார்க்கும் சக பெண் ஊழியர் ஏன் "யூனியில்" படிக்கும் போது சக நண்பி இப்படி பலபேரையும் உள்ளடக்கியது தானே பெண்சமுதாயம்..என் வீட்டை மட்டும் பார்த்தால் பிரச்சினை தீர்ந்திடுமா என்ன..??? :D

அப்படி பார்க்க போனால்..நான் மேலே குறிப்பிட்டது யாவும் என் சூழலில் என்னை சார்ந்த பெண்களின் மனநிலையை பத்தி தான்..

இல்லையே கட்டுரையில் குறிப்பிட விசயத்துடன் தான் நாம் வாதாடுகிறோம் ரமா மாமி..முதலி அந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்கள் "ஆண்கள் கோபத்தின் மூலம் மன அழுத்தத்தை வெளியேற்றி விடுவார்கள் பெண்கள் அப்படி இல்லை எண்டு"..

ம்ம்..ஏன் பெண்கள் கோபபடுவதில்லை என்றால்..(எல்லாத்தையும் மனசில வைத்து குமுறுறது)..சரியோ பிறகு வெளி உலகதிற்கு நன்னவை மாதிரி நடிக்கிறது. :lol: .

அடுத்து கட்டுறையில் குறிபிடபட்டிருந்த விசயம்..

*ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டி கொண்டிருப்பதால் அவளிற்கு மன அழுத்தம் வருகிறது எண்டு..(இது நான் சொல்லவில்லை கட்டுரையில் சொல்லபட்டிருக்கிறது)..

இப்ப நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறன்..உங்கள் அப்பா,தம்பி,அண்ணா மற்றும் உங்கள் உறவினர்கள் உங்களை திட்டி கொண்டா இருக்கிறார்கள்..?? :lol: ..அப்படி அவை திட்டீனம் எண்டால் அதுக்கு விடை எனக்கு தெரியல உங்களை தவிர்த்து இன்னொரு பெண்ணை உதாரணதிற்கு எடுத்து கொண்டால்..

அவளை தொடர்ந்து திட்டீனம் எண்டால்..அவள் அவ்வளதிற்கு அவையள் வெறுக்கும்படி நடந்து கொள்வதால் தானே எண்டு நாங்கள் எடுகோள் எடுக்கலாம் தானே ரமா மாமி.. :lol:

இப்படி அந்த கட்டுரையில் ஆண்களை தேவையில்லாமல் இழுத்திருந்தார்கள் அதனை தாங்கள் கவனிக்கவில்லையா அல்லது கவனித்தும் கவனிக்காதது போல் இருந்து விட்டீர்களா..??..ஆனபடியால் தான் நாங்களும் எங்கள் பக்க நியாயங்களை எழுதினாங்கள்..

இப்ப சொல்லுங்கோ அந்த கட்டுரைக்கும்..நாங்கள் எழுதினதிற்கும் சம்பந்தம் இல்லையா எண்டு...மற்றது நான் பெண்கள் எண்ட பததினுள் எண்ட வீட்டை மட்டும் பார்பதில்லை சகல மட்ட பெண்களையும் பார்த்தனான் அல்லோ ரமா மாமி..அதுக்காக என்னோட கோபம் போட்டிடாதையுங்கோ..பாவம் நான் சின்ன பிள்ள.. :(

அப்ப நான் வரட்டா!!

ஒரு பெண்ணைச் சுற்றி 4 பசங்கள் அலைவதும், பிறகு சுடுபட்டுச் சாவதும் புலத்தில் நடக்கின்ற இளைஞர்களின் பிரச்சனை. அது பலருக்கும் தெரியும். இது கூட ஒரு வி த ஆண்களின் மனநோயே

ம்ம்.. பொன்னையா மாமா ஒரு பெண்ணிற்கு பின்னால 4 பசங்க அலையிறாங்க எண்டு சொல்லுறியள் :) ..இவா வந்து அந்த நாலு பசங்களையும் பார்த்து வாய் இளிச்சிருப்பா அது தான் அவங்க 4 பேரும் அவாவிற்கு பின்னால போய் அடிபட்டு சாகிறாங்க :D ..இதுவும் பெண்களின் மனநோய்..(பேய்)..எண்டு குறிபிடலாம்.. :D

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அதில நாம காலத்தை தள்ளிட மாட்டோமா என்ன..நான் ஏன் மாமாவிற்கு சொல்லனும் மாமாவிற்கு தெரியாதா என்ன.. :rolleyes:

ஆப்பு வைக்கிறதிலையே திரியுங்கோ. :rolleyes: நெடுக்கான நெடுக்கே இதில அமத்தி வாசிக்க நான் எல்லாம் எந்த மாத்திரம். :(நானே வல்லைசாறா வந்து சூடா போன விவாதத்தை கெடுத்து போட்டா எண்டு பீலிங் இல இருந்தனான்.

http://thesamnet.co.uk/?p=2203#comments

saraninavaneethanjo4.jpg

charshaltonbabyvictim01rk9.jpg

sanjayannavaneethanyi3.jpg

அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன்

≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த | ≅

தெற்கு லண்டனில் இடம்பெற்ற குரூரமான சம்பவம் பற்றிய விசாரணைகளை பொலிசார் இன்னமும் தொடர்கின்றனர். சம்பவத்தில் கொல்லப்பட்ட சஞ்சயன் நவநீதன் (5), சாரனி நவநீதன் (4) இரு சிறார்களதும் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று (ஓகஸ்ட் 21) லண்டனில் நடைபெறுகிறது. பிரேத பரிசோதணைகள் யூன் 3ல் கிரேட் ஓர்மன் ஸ்ரீற் மருத்துவமனையில் முடிந்த போதும் அவர்களது உடல் உறவினர்களுக்கு கையளிக்கப்படாமலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட குழந்தைகளின் தாயார் சசிகலா நவநீதன் (35) கைது செய்யப்பட்டு Mental Health Act, பிரிவு 2 சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். தந்தை நடராஜா நவநீதன் (39) கைது செய்யப்பட்டு யூன் 1ம் திகதி குற்றப் பதிவுகள் எதுவும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார்.

தற்போது அமைதியான கிராமப் புறமான அவர்கள் வாழ்ந்த வீட்டில் மரண விசாரணைக் குழுவினரும் சிறுவர் துஸ்பிரயோக விசாரணைக் குழுவினரும் விசாரணைகளில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் காயத்திற்கு உள்ளான ஆறுமாதங்களேயான பெண் குழந்தையின் உடல்நிலை ஆபத்தான நிலையத் தாண்டி தேறிவருகின்றது.

சம்பவம்:

மே 30ம் திகதி தெற்கு லண்டனில் கார்ஸ்ஹோல்ரன் பகுதியில் இருந்து பொலிசாரின் 999ற்கு இரவு 10:30க்கு அழைப்பு வந்துள்ளது. பொலிசாருக்கு ஒரு மொழி பெயர்ப்பாளரும் அவசியமாக இருந்து உள்ளது. 10:50 அளவில் பொலிஸ் வாகனங்களும் மருத்துவ வண்டிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 4 அல்லது 5 மருத்துவ வண்டிகளும் 10க்கு மேற்பட்ட பொலிஸ் கார்களும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளது. பொலிசார் சம்பவம் இடம்பெற்ற பார்க் லேனில் உள்ள வீட்டுக்குள் சென்று சில நிமிடங்களிலேயே ஒரு பிஞ்சுக் குழந்தையை போர்த்தியவாறு தூக்கி வந்தனர். அதன் உடல் இரத்தத்தில் தோய்ந்து இருந்தது. அப்பிஞ்சுக் குழந்தையை காக்க பராமெடிக் முயற்சித்தவாறே அவர்கள் உடனடியாக மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.

குழந்தையைத் தொடர்ந்து சாரனி மருத்துவ வண்டிக்கு கொண்டு வரப்பட்டார். அவரைத் தொடர்ந்து சஞ்சயன் மருத்துவ வண்டிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர்களுக்கு ஒக்ஸிஜன் வழங்கப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டபடியே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களது உடலும் இரத்தத்தில் தோய்ந்து இருந்தது. சசிகலா மௌனமாக இவற்றை பார்த்தபடி நின்றார். மூன்று சிறார்களுமே கார்ஸ்ஹோல்ரன் பகுதியில் உள்ள சென் ஹேய்லியர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குழந்தைகளை மருத்தவமனைக்கு அனுப்பியதன் பின் அரைமணி நேரம் கழித்து சசிகலாவுக்கு பொலிசார் கை விலங்குமாட்டி அழைத்து வந்தனர். உடுத்திருந்த உடுப்பில் இரத்தம் பட்டு இருந்தது. அவரைத் தொடர்ந்து நவநீதன் வீட்டில் இருந்து அழைத்த வரப்பட்டார். அவர் பொலிஸ் வாகனத்தின் இருக்கையில் அமர்த்தப்பட்டார். அதன் பின் கைத்தொலைபேசியில் சில நிமிடங்கள் உரையாற்றிய அவர், பின் பொலிசாருடன் வாக்குவாதப்படவே அவரை பொலிஸ் வாகனத்தில் இருந்த கூண்டுக்குள் அடைத்தனர்.

அதற்கிடையே சம்பவத்தை கேள்விப்பட்டு சில நண்பர்களும் உறவினர்களும் நவநீதனுடைய வீட்டுக்கு விரைந்தனர். அவர்கள் பிள்ளைகள் உயிரிழந்து விட்டனர் என கண்ணீர்விட்டுள்ளனர்.

மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவர்களைக் காக்க மருத்துவர்கள் எவ்வளவோ போராடிய போதும் சாரணி இரவு 11:41க்கு மரணமானார். அடுத்த 15 நிமிடத்திர் சகோதரன் சஞ்சயனும் மரணமானார்.

ஆறுமாதக் குழுந்தையை மட்டுமே மருத்துவர்களால் காப்பாற்ற முடிந்தது. குழந்தை மத்திய லண்டனில் உள்ள சென் தோமஸ் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

பின்னணி:

இச்சம்பவம் பற்றி இக்குடும்பத்தினரது உறவினர் ஒருவர் தேசம்நெற்றுக்குத் தெரிவிக்கையில் தாயே குழந்தைகளை குத்திவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிவித்தார். அண்மைக் காலத்தில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்றே தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் எட்டு வருடங்களக்கு முன் லண்டனுக்கு புலம்பெயர்ந்து உள்ளனர். ஒரு வருடத்திற்கும் குறைவான காலப் பகுதியிலேயே கார்ஸ்ஹோல்ரன் பகுதியில் உள்ள பார்க் லேன் வீட்டுக்கு குடியேறி உள்ளனர்.

மரணமான சிறார்கள் இருவரும் அருகில் உள்ள All Saints Church of England Primary Schooly கல்வி கற்றனர்.

இவர்கள் Best Save Food & Wine சிறிய கடையொன்றை நடத்தி வந்தனர். நவநீதன் பெரும்பாலும் கடையிலேயே நீண்ட நேரம் வேலை செய்து வந்தார். சசிகலாவும் கைக்குழந்தையுடன் பிள்ளைகளையும் பராமரித்து கடை வியாபாரத்தையும் கவனித்து வந்தார். குழந்தைப் பேற்றுக்கு பின்னான மன உளைச்சலால் இவர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என உறவினர்கள் கூறுகின்றனர்.

இவ்வறான சம்பவம் தமிழ் சமூகத்தில் நடந்திருப்பது இதுவே முதற்தடவையாக உள்ளது. குழதைகளை கொலை செய்த தாயார் தான் தற்கொலை செய்ய முயற்சித்த போது கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன் ரொறன்ரோவில் இடம்பெற்றது. தமிழ் சமூகம் வேறுசில சமூகப் பிரச்சினைகளையும் எதிர்கொள்வதையே இவை காட்டுகின்றன.

உங்கள் கருத்து

வெற்றி on August 21, 2008 4:54 am சிக்கல் எங்கே உள்ளது?

தமிழக் குடும்பங்கள் அதே குடும்பக் கட்டமைப்பில் இன்னும் உள்ளன. நடைமுறையில் வெளித்தெரிவது இப்படித்தான். ஆனால் உண்மை அதுவல்ல.

இதுவரைநாளும் புலப்பெயர்வுக்குள் வரும் வரைக்கும் தமிழப் பெண்களுக்கான பிள்ளபை;பேற்று நடைமுறையும், மருத்துவமும், அதற்கான முன்னேற்பாடுகளும், பக்கத் துணைகளும் எனப் பல வகைப்பட்ட கூறுகள் பிள்ளைப்பேற்றின் பின்னால் பெண்களுக்கு விடுபட்டுப்போயுள்ளன.

அது மட்டுமல்லாது பெண்களுக்கான பிள்ளைப்பேற்றின் பின்னான வேலைகளும் வீட்டில் முன்பைவிட் அதிகமாக உள்ளன. ஏற்கெனவே 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

புதிதாகப் பிறந்த குழந்தையாயின் அதன் பராமரிப்புக்காகக பல வேளைகளில் தூக்கம் இழந்துபோகும். தொடர்ந்த நித்திரையின்மை மனநிலையை எவ்வாறு குழப்பும் என்பது சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவை அனைத்துமே சேர்ந்து இந்த நிலைக்குக் கொண்டு வந்து விடுகின்றது. மற்றைய வேறு சமூகங்களின் அணுகுமுறையும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வு அணுகுமறையும் பலவாறு வேறுபடுவதும் இதற்குக் காரணம்.

நான் ஒருமுறை ஐரோப்பிய நாடொன்றில் பிள்ளைபேறு முடிந்த அன்றே தனது காரிலேயே தனது பிள்ளையையும் கொண்டு வண்டியையும் ஓட்டிச் சென்ற வெள்ளையினப் பெண்மணியைப் பார்த்து வியந்திருக்கின்றேன். அவர்கள் உடல் திடமும் செயற்பாட்டு முறையும் சற்று வேறுபட்டது. உணவும் உளநிலையும் கூட…இன்னொரு வகையில் சமூக எதிர்பார்ப்புக்களும்கூட தமிழ்ச் சமூகத்திடம் வேறுபட்டது. வீட்டுக்கான உழைப்பை தனது துணை செய்தாலும்கூட பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு தன்னை அந்த வேளையில் அதிகம் நேரம் செலவிட்டு கனவனித்துக்கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தமிழ்ப் பெண்களிடம் அதிகம் உண்டு.

இவ்வாறு ஓர் நிகழ்வு வீட்டில் உறவினர்கள் சேர்ந்து குடியிருந்திருப்பானார்களான

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி இந்த விவாதம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் இப்ப இந்த விவாதம் செய்ததில எத்தனை பேருக்கு மன அழுத்தம் வந்திருக்கு :):lol: ? எல்லோரும் உண்மையை மறைக்காமல் சொல்லுங்கோ :( (என்னை யாரும் திட்டாதேங்கோ :D )

ஆப்பு வைக்கிறதிலையே திரியுங்கோ. நெடுக்கான நெடுக்கே இதில அமத்தி வாசிக்க நான் எல்லாம் எந்த மாத்திரம். நானே வல்லைசாறா வந்து சூடா போன விவாதத்தை கெடுத்து போட்டா எண்டு பீலிங் இல இருந்தனான்.

பின்ன..ன ஆப்பு வைக்கிறதில..ல இருக்கிற சுகமே தனி சுகம் மாமோய் :( ..ஓ அப்ப மாமிக்கு உப்படி பொய் சொல்லி கொண்டு தான் காலத்தை ஓட்டுறியள் என்ன..(முடியல).. :lol:

ஓ..இப்ப சூடான விவாதம் சப்பையா போயிட்டுது எண்டு தானே "பீலிங்" மாமாவிற்கு..மறுபடி எடுத்து விடட்டோ அது ஒன்னும் பெரிய வேல இல்ல மாமோய்..ய்.. :(

சூடா நடக்கிற விவாதத்தை தள்ளி நின்று பார்க்கிறது தனிசுகம் என்ன..ன எனக்கும் உவ்வளவு நாளும் தெரியா இப்ப கொஞ்ச நாளா வேலைபளு அப்ப எட்டி நின்று பார்க்கிறனான்..ன் அப்ப தான் விளங்கிச்சு மாமோய்..ய்..!! :D

அப்ப நான் வரட்டா!!

சரி சரி இந்த விவாதம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் இப்ப இந்த விவாதம் செய்ததில எத்தனை பேருக்கு மன அழுத்தம் வந்திருக்கு ? எல்லோரும் உண்மையை மறைக்காமல் சொல்லுங்கோ (என்னை யாரும் திட்டாதேங்கோ )

சா..சா உங்கள போய் யாரும் திட்டுவீனமோ..மோ சித்தப்பு.. :D (நீங்க ரொம்ப நல்லவர் எண்டு சொல்ல வந்தனான்)..அச்சோ எனக்கு..கு மன அழுத்தம் எல்லாம் வரல்ல..ல..சித்தப்பு..பு.. :D

கொஞ்சம் "ரிலாக்ஸா" இருந்துச்சு எண்டா பாருங்கோவன்..ன்..அதுவும் கும்பலில கோவிந்தா எண்டா என்னும் நன்னா இருந்திருக்கும்..ஆனா ஒருத்தரையும் காணல்ல..ல..!! :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.