Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாவும் பொட்டு அம்மானும் தொடர்ந்து யுத்தம் செய்ய முடியாத நிலையில் என்கிறர்கள் துரோகிகள் பிள்ளையானும், கருணாவும்.

Featured Replies

அரச படையினர் கடந்த ஒரு வருடகாலத்துக்கு மேலாக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைளில்; புலிகள் இயக்கத்தினர் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதுடன், அண்மையில் மன்னார் மாவட்டிலிருந்து முற்றும் முழுதாப் பின்வாங்கிவிட்டனர். இவவாறான பாரிய வெற்றிகளை அடைந்துள்ள அரச படையினர் தற்போது புலிகளிடமிருந்து பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடடிக்கையின் இறுதிக் கட்டமாக புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கிளநெச்சி, முல்லைதீவுப் பிரதேசங்களை மீட்பதற்கான தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு கிளிநொச்சி பிரதேசத்ததுக்குள்ளும் முல்லைத்தீவு பிரதேசத்திலும் வெற்றிகரமாக பிரவேசித்துள்ள அரச படையினர் அந்தப் பிரதேசத்துக்குள்ளான களமுனைகளிலும் புலிகளைப் பின்வாங்கச் செய்துள்ள நிலையில், புலிகள் இயக்கத்தினர் தமது இறுதியான படுதோல்விக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டுள்ளனர். இந்த நிலையில் புலிகள் இயக்கத்தின் தலைவரும் மற்றும் பொட்டு அம்மான் உட்பட உயர்மட்டத் தலைவர்களும் தமது இயக்கததின் எதிர்காலத்தைக் காட்டிலும் தமது எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுபற்றி (இனத்துரோகிகளான) பிள்ளையானும் கருணாவும் தெரிவிக்கையில், தற்போது படுதோல்விகளை அடைந்துள்ள நிலையில், புலிகள் இயக்கத் தலைவா பிரபாகரனும் அடுத்த உயர்மட்டத் தலைவர் பொட்டு அம்மானும் தொடர்ந்து அரச படையினருக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டிய நிலையைக் காட்டிலும் தமது உயிரைத் தாமே அழித்துக் கொள்ள வேண்டிய நிலையிலோ அல்லது உயிரைப் பாதுகாப்பதற்காகத் தப்பியோட வேண்டிய நிலையிலேயே உள்ளனர் எனவும், தவிரவும் தொடர்ந்து யுத்தம் செய்யக்கூடிய இயலுமையைப் பிரபாகரனும் அவருடைய மூத்த தலைவர்களும் இழந்துவிட்டதாகவும் அவ்வாறு யுத்தம் செய்வதற்கான வருங்காலத்திட்டம் எதுவும் தற்போது பிரபாகரனிடமோ பொட்டு அம்மானிடமோ கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.

திவயின

நன்றி தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் இந்த ஒட்டுண்ணிகளின் வாயால் கேட்கவேண்டிய காலமாய் கிடக்குது . :icon_idea:

காலம் கலிகாலம்...

இப்படித்தான் சிங்கள ஊடகங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே சொல்லி வயித்த கழுவித்து கிடக்கிறான்

...................................................

வாயில வருது வேண்டாம்

கிழக்கின் வெடிவெள்ளி செல்லலாம்.

அவர்தானே ஓயாத அலைகள் 2 மற்று 3 ற்கெல்லாம் திட்டங்களைத் தீட்டி படை நடவடிக்கைகளை வெற்றிகரமாக களத்தில் நின்று நேரடியாக வழி நடத்தி வெற்றி கண்டவர்.

எதிரியிடம் சரணடைந்தவன் இயலாதவன். இயலாதவன் கதைக்கு ஏதையா மவுசு?

நெருப்பில்லாமல் புகையாது.

புகையே இல்லையே நெருப்பைப் பற்றி ஏன் கவலை?

நெருப்பில்லாமல் புகையாது.

பொறாமை கொண்டவர்களின் நெஞ்சங்கள் நெருப்பில்லாமல் புகையும் !!! :icon_idea:

Edited by vettri-vel

ஒரு அடர்ந்த காடு இருந்தது!!!!!

அங்கே நரிகள் சில புலி வேடமிட்டு நடமாடி கொண்டிருந்தன!

பெய்த ஒரு பெரு மழையில் நரிகள் பூசியிருந்த வரிகள் கலைந்தன!

சாயம் வெளுத்த நரிகள் காட்டை விட்டு ஓடி விட்டன!

ஓடிச்சென்ற நரிகள் ஒரு நரி வியாபாரியின் கூட்டில் மாட்டிக்கொண்டன!

கூட்டில் மாட்டிக்கொண்டவை இப்போது ஓயாமல் ஊளையிட்டு கொண்டிருக்கின்றன!

அப்படி ஓயாமல் ஊளை இடாவிட்டால் அவற்றின் உயிருக்கு உத்தரவாதமில்லை!

ஏனென்றால் அந்த நரிவியாபாரி ஊளையிடாத நரிகளை நோயாளி நரிகள் என நினைத்து சுட்டுக்கொன்று விடுவான்!!!

வெற்றி நன்றாக சொன்னீர்கள்.புலி வேடமிட்ட நரிகள் யாழ் களத்தில் அதிகம் உண்டு.

வடிவேல் இன்ஸ்ரன்ர் கதை கவிதைகளிலை புயலா இருக்கிறேள். பேஸா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி நன்றாக சொன்னீர்கள்.புலி வேடமிட்ட நரிகள் யாழ் களத்தில் அதிகம் உண்டு.

:unsure::icon_idea::o:(:D:D:D:(

வடிவேல் இன்ஸ்ரன்ர் கதை கவிதைகளிலை புயலா இருக்கிறேள். பேஸா இருக்கு.

அப்புவுக்கு வயசு ஏற ஏற வெற்றிவேலும் வடிவேலாக தெரிகிறது. முக்திக்கு நாள் நெருங்க நெருங்க அப்படித்தான் எல்லா வேலும் ஒரு வேலாக தெரியும்!!! :icon_idea:

தள்ளாத வயதிலும் தள்ளாடாத நக்கல் தான் நம்ம அப்புவோட ஸ்பெசாலிட்டி!

பேஷ்! பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு ஓய்!!!

:(:unsure::o

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் உச்சத்துக்கு வரும்போது வெறும் விடிவெள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பில்லாமல் புகையாது.

மக்னீஸியம் தகரத்தை உரசினால் புகையுதே????

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் உச்சத்துக்கு வரும்போது வெறும் விடிவெள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமே.

அப்ப இவங்கதான் குடைபிடிப்பினம்

நாங்களல்ல??????????

குடை பிடிப்பினம் சூரியனுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் இப்படிப்பட்ட கருத்துக்கள் வருவதற்குக் காரணம், நாம் என்னும் பலமடையாமல் இருப்பதே. அந்த நிலையை நாங்கள் எட்ட, என்னும் எங்களை வளப்படுத்த வேண்டும்.

வௌ;வேறு முனைகளுடாதகக் கால் பதித்தால் புலிகளின் கவனம் திரும்பும் என்பதையே சிங்கள அரசு செய்து கொண்டிருக்கின்றது. பல முனைகளுடாக முன்னேறுவதால் புலிகளின் பலம் குறையும் என அது நினைக்கின்றது. ஆனால் அதே பலவீனம் தனக்கும் ஏற்படும் என்பதை அது உணர மறுக்கின்றது.

Edited by பொன்னையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்னீஸியம் தகரத்தை உரசினால் புகையுதே????

இதுக்கெல்லாம் பதில்சொல்ல நம்ம குறுக்குக்கு நேரமில்லை. :(

எதிரி இப்படியான செய்திகளை அடிக்கடி சொல்லி சீண்டிப்பார்க்கிறான்

தமிழ்மக்களிடையே ஒரு விதமான அவ நம்பிக்கையை எற்படுத்தல்...

சிங்களமக்களிடம் பெறும் வெற்றி நம்பிக்கையை ஏற்றி மேலும் பலர் இராணுவத்தில் இணைப்பதற்கும் பயன்படுத்தல்....

வெளினாடுகளிலும் ஆதரவு பெற்று காலியாகிற பணப்பெட்டி, ஆயுதங்களை நிரப்புதல்....

இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம்.....

ஆனாலும் புலிகள் சில காரணங்களால் பிற்போடும் தாக்குதல் நடவடிக்கைகள் இப்படியான பின் விளைவுகளை எற்படுத்துகிறது....

கடந்த கால நடவடிக்கைகள் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும்....

எதிரியின் தற்போதைய ஆயுத வளங்களும் நவீன தொழில்னுட்ப ஆயுத, செய்மதி தொழில்னுட்பங்கள்

இராணுவ எண்ணிக்கை,அண்மைக்கல சண்டைகளின் இடங்களை கைப்பற்றி வைத்திருத்தல் என்பன போன்றன

ஒரு சாதரண ஒருவரை அவனம்பிக்கை கொள்ளவைக்கும் என்பது இயற்கை....

இன்றைய செய்திப்படி முல்லைதீவு வைத்தியசாலை எறிகணைத்தாக்குதலில் சிறு குழந்தை உடல் சிதறி

பலி,அரச அதிபர் உடபட பலர் காயம்...

இசெய்திகளளின் மூலம் எதிரியின் தாக்குதல்(பீரங்கி) எல்லைக்குல் முல்லைத்தீவு வந்துவிட்டது....

இனிதாமதமின்றி கடைசி பிரங்கி தாக்குதல் பலத்தையாவது அழிப்பதன் மூலம் தற்காலிக

நிம்மதியை ஏற்படுத்த முடியும்...இதனால் பல உயிர் இழப்புகளை தவிர்க்க முடியும்....

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்....

இப்படியான செய்திகளுக்கும் ஆப்பு வைக்கமுடியும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.