Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் புலிகள் விட்டது தவறா? அல்லது தந்திரமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் புலிகள் விட்டது தவறா? அல்லது தந்திரமா? - லண்டனிலிருந்து வன்னியன்,

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையின் முதலாவது மனிதக் குடியேற்றம் என்று குறிப்பிடப்படும் தம்பபன்னியே இன்றைய மன்னார் பெருநிலப்பரப்பு.; வடக்கில் மேற்குக் கடற்கரையில் கலக்கும் பாலியாறு தொடக்கம் தெற்கே மோதகம் ஆறு என்றழைக்ப்படுகின்ற கலாஓயாவுக்கு இடைப்பட்ட ஏறக்குறைய 65 மைல் நீளமான பாக்கு நீரிணைக் கடற்கரைப் பகுதியையும், சராசரி 20 தொடக்கம் 35 மைல் அகலமும் கொண்ட இன்றைய மன்னார் மாவட்டம். இலங்கையின் வரலாற்றில் ஆரம்பப் புள்ளி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இப்பிரதேசத்தின் மனித நாகரிகம் என்பது சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவது போலன்றி இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதித் தமிழர்களான இயக்க, நாகர்களின் நாகரிகப் பண்பாட்டுத் தலமாக விளங்கியிருந்தது.

வரலாற்றுத் தொன்மை மிக்க பொன்பரப்பி, முத்தரிப்புத் துறை, போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளும், இடிபாடுகளும் இப்பிரதேசத்தின் தமிழர் தொன்மையினை பறைசாற்றி நிற்கின்றன. இப்படியான வரலாற்றுத் தொன்மை மிக்க தமிழர் இறமையின் ஆரம்பத் தோற்றுவாயாகிய மன்னார் பிரதேசத்தில் நிகழ்ந்த படையெடுப்புக்கள் வரலாற்றுக் காலம் தொட்டு அப்பிரதேசத்தின் மக்களின் பண்பாட்டு வாழ்வியலில் தலைகீழான மாற்றங்களை ஏற்படுத்தியதனை நாம் மறந்து விடுவது இலகுவானதல்ல.

மன்னார்ப்பிரதேசத்தில் நிகழ்ந்த வரலாற்றுக்கால ரீதியான படையெடுப்புக்கள் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆய்வோம். எனவே வரலாற்றுக் காலங்களிலிருந்து விடுபட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார்ப் பிரதேசம் சந்தித்த படையெடுப்புக்களும், அழிவுகளும் பற்றிய ஒரு குறுகிய ஆய்வொன்றை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன். எனவே மன்னாரில் புலிகள் வ5pட்டது தவறா? அல்லது தந்திரமா? என்பது எனது ஆய்வுப் பொருளாகிறது.

வடதமிழீழத்தின் மிக வரட்சியான (மழைவீழ்ச்சி குறைந்த) ஆனால் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படுகின்ற மன்னார்ப் பிரதேசம் பாலியாறு, பறங்கியாறு, நாயாறு, அருவியாறு (மல்வத்து ஓயா), மோதகம் ஆறு (கலாஓயா), மற்றும் பொன்பரப்பியாறு (தற்போது புத்தளம் மாவட்டம்). ஆகிய ஆற்று நீரினால் வளங்கொழிக்கின்றது. அத்தோடு நீண்ட கடற்கரையும், ஆழ்கடல் உவர்நீர் மீன் பிடிக்கைத்தொழிலினால் அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதோடு இப்பிரதேசத்தின் நிலத்துக்கடியில் பயன்படுத்தப்படாது கிடக்கின்ற எண்ணை வளமும், சிங்கள தேசத்தை மட்டுமல்லாது பிராந்திய ஏகாதிபத்தியங்களையும், இதன் பக்கம் ஈர்ந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இப்பிரதேசம் ஆரம்ப காலம் தொட்டே மிகப்பெரிய பங்களிப்பினைச் செய்து வந்திருக்கிறது. தமிழகத்துக்கும் ஈழத்துக்குமான போராளிகளின் போக்குவரத்துக்கு 18 மைல் நீளமான பாக்கு நீரினை மிகச்சாதகமாக இருந்ததனால் சிங்கள அரசு எப்போதும் இப்பிரதேசத்தினை தன்னுடைய இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கவே முயன்றிருக்கிறது. அதேநேரம் போராளிகளும் தமது பிடியை இறுக்கமாக வைத்திருக்கவே முனைந்திருக்கிறார்கள். இதற்கு புலிகளி;ன் மூத்த தளபதி லெப். கேணல். விக்ரர் நடத்திக் காட்டிய சண்டைகள் சான்றாக அமைகின்றது. (முதன்முதலில் 1985 இல் இராணுவத்துடனான சண்டையில் இராணுவச் சடலங்களைக் கைப்பற்றியதும், உயிருடன் கைது செய்ததும்).

இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானபோது மன்னார்த்தீவும் அதைவிட பெருநிலப்பரப்பில் தள்ளாடி, சிலாவத்துறை, கொண்டைச்சி ஆகிய முன்று இராணுவ முகாம்கள் மாத்திரமே இருந்தன. எனவே வன்னிப் பிராந்தியத்தின் மேற்குப் பகுதியான மன்னார்ப் பொருநிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்காக விடுதலைப் புலிகள் கொண்டைச்சி இராணுவ முகாமை கைப்பற்றி இருந்த நிலையில் சிலாவத்துறை, தள்ளாடி ஆகிய இரண்டும் கடலோரம் அமைந்திருந்ததனால் தாக்குதலுக்கு சாதகமற்ற தன்மை இருந்த நிலையிலும் 1991 மார்ச் மாதம் புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலுடன் கூடிய பெருந் தாக்குதல் வெற்றியி;ன் விளிம்பில் நின்ற வேளை முகாமைத் தக்க வைக்க முப்படைகளும் சேர்ந்து மேற்கொண்ட புலியை விரட்டுவோம். தரையிறக்கத் தாக்குதல் மூலம் (ரைகர் செஸ்) முகாமைத் தக்கவைத்ததோடு ஏற்படவிருந்த பேரிழப்பை இராணுவம் தற்காலிகமாகத் தடுத்ததாயினும் தனிமைப் பட்டிருந்த இம்முகாமை சிறிது காலத்துக்குள் இராணுவம் மூடிவிட்டது. ஆனால் இங்கு நடந்த மிகப்பெரும் சண்டையினால் சிலாவத்துறை நகரமே மண்ணோடு மண்ணாகிப்போய் இன்று மண் மேடாகவே காணப்படுகிறது. அங்கு தரைக்கு மேல் ஒன்றுமே இல்லை என்றே சொல்லலாம்.

சிலாவத்துறை இராணுவ முகாம் மூடப்பட்டதனால் மன்னார்த் தீவின் நுழைவாயிலில் அமைந்திருகின்ற தள்ளாடி தவிர்ந்த பொநிலப்பரப்பு முழுவதும் புலிகளின் பூரண கட்டுப்பாட்னுள் வந்திருந்தது. இதனால் வடக்கே பூநகரியில் இருந்து - தெற்கே குதிரைமலை முனை வரையான ஏறக்குறைய 90மைல் நீளமான கடற்கரைப் பகுதி புலிகளின் பூரண கட்டுப் பாட்டுக்குள் வந்தது. இப்பகுதியின் புலிகளின் ஆளுகையின் ஆபத்தினை காலம் கடந்த பின்புதான் சிங்கள தேசம் உணர்ந்தது. ஏனெனில் அரிப்பு, சிலாவத்துறை, முள்ளிக்குளம், குதிரைமலைமுனை, ஆகிய இடங்களிலிருந்து புலிகளின் கடல்த் தாக்குதல் களும் விநியோகங்களும் தென்பகுதியின் காலித் துறைமுகம் வரை விரிந்திருந்தது. எனவே தென்பகுதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த மன்னார்ப் பிரதேசத்தை படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டிய தேவை உணரப்பட்டது.

மன்னார் பிரதேசத்தின் தென் எல்லலையாக இருந்த புத்தளம் மாவட்டம் மற்றும் அனுராதபுரத்தின் எல்லைக் கிராமங்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிரு

"எனவே கடந்த காலப் படிப்பினைகளை கருத்தில் கொண்டு புலிகள் இனிவரும் காலங்களில் மிகச்சிறந்த முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்."

இப்படியெல்லாம் எதிர்பார்க்கிற நிலை மாறவேண்டும். களத்தின் தன்மையறிந்து தீர்மானத்தினைப் புலிகள் எடுப்பார்கள்.

மிக மிக அதிகப்பிரசங்கித்தனமான ஒரு கட்டுரை

இன்றைய தேவை ஆலோசனை அல்ல ஆதரவு மட்டுமே. தவறுகளை சுட்டி காட்டுவதாக இருந்தாலும் சம்மந்த பட்டவர்களிடம் தனிப்பட அறிவுறுத்துவது மட்டுமே இன்றைய போர் சூழலில் தேவை மாறாக இது போன்ற கட்டுரைகள் நம் மக்களை அதைரிய படுத்தவே பயண்படும்.

காலத்தின் தேவையறிந்து கருத்துரைக்க கட்டுரையாளர்கள் முயல வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். மக்களின் பங்களிப்பை நேரடியாக பெறுவதற்க்கு உதவ கூடிய கட்டிரைகளை வரைந்து காத்திருப்பீர்களானால், காலம் நமக்கான காலமாக மாறும் களத்திலும் வெற்றிகள் விரைந்து வரும்.

நன்றி

:rolleyes: என்ன கொடுமையிது சரவணா

மன்னாரில் புலிகள் விட்டது தவறா? அல்லது தந்திரமா? - லண்டனிலிருந்து வன்னியன்

இது யாருக்காக எழுதுகிறீர்கள்? எம்மினத்தை வேரோடு அழிக்கத்துடிக்கும் மகிந்தஅன்கோவிற்கா?? அல்லது எம்மினத்துக்குக் காவல் தெய்வங்களாக கண்விளித்துப்போராடும் போராளிகளுக்கா? போராளிகளுக்காக இருந்தால் சற்றுப்பொறுத்திருங்கள் ஈழம்மலரும் உங்கள் கேள்விக்கு களத்திலேயே பதில்கிடைக்கும்.

நாமும்குளம்பி நம்மவரையும்குளப்பாமல் எம்மால்முடிந்த உதவிகளை இன்றேசெய்வோம் நன்றேசெய்வோம்.

:rolleyes: என்ன கொடுமையிது சரவணா

எனக்கு ஒண்டு விளங்கவில்லை குறுக்கு!

இதில இப்ப ஏன் சரவணன்?...

Edited by Sooravali

"பதிவு" இணையம் இக் கட்டுரையை நீக்கி விட்டது!

"பதிவு" இணையம் இக் கட்டுரையை நீக்கி விட்டது!

5) களமுனையில் பாரிய வெற்றிகளை ஈட்டி வருவதாக தினமும் அறிவித்துவரும் சிறிலங்கா அரசும் இராணுவத் தலைமையும் அரச ஊடகங்கள் தவிர கொழும்பில் வெளிவரும் எந்த ஊடகத்திலும் இராணுவ நடவடிக்கை தொடர்பாக செய்திகளையோ விமர்சன கட்டுரைகளையோ ஆய்வுகளையா வெளிவர விடாமல் மறைமுக தணிக்கை ஒன்றை அமுல்படுத்தி வருவது ஏன்? தாம் வெற்றிகளை தனியே களத்தில் கண்டுவருவது உண்மையான விடயம் என்றால் அதனை பகிரங்கமாக ஆய்வுசெய்ய அனுமதிப்பதில் என்ன பிரச்சினை அல்லது அச்சம் இருக்கிறது?

சமர்க்கள செய்திகளின் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வேண்டிய புரிதல்கள்

-ப.தெய்வீகன்-

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43194

இராணுவம் எங்கு எங்கு நகர வேண்டும் என்பதைப் புலிகளே தீர்மானிகிறார்கள் என்னும் நிலை இருக்கும் போது, புலிகள் இராணுவத்தை நகரவிட்ட இடங்களில் தவறிழைத் திருகிறார்கள் என்று எவ்வாறு இந்தக் கடுரையாளர் எதிர்வு கூறுகிறாரோ தெரியவில்லை.

புலிகளின் மூலோபாயாம் என்ன என்பது இது வரை எவருக்கும் தெரியவில்லை.

அந்த மூலோபாயாம் என்ன என்பது வெளிப்படும் வரையாவது புலம் பெயர் கதிரைக் கணனி ஆய்வாளர்கள் பொறுத்து இருப்பதே அவர்களின் பெயரைக் காத்துக் கொள்ள உதவும்.

இல்லாதுவிடின் எல்லோரதும் நகைப்புக் கிடமாக வேண்டி இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகப்பிரசங்கத்தனமான கட்டுரை மட்டுமல்ல, தவறான தகவல்களையும் விளக்கங்களையும் கொண்டுள்ள கட்டுரை.

முதலில் முசலிப் பகுதியை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியென்று சொல்ல முடியாது. இப்போது கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதி மேல் புலிகள் கொண்டுள்ள ஆதிக்கம் அளவுக்குக்கூட முசலிப்பகுதியில் கொண்டிருந்ததில்லை. புலிகள் அங்குச் செயற்பட்டார்கள்தான். நிலையான வதிவிடங்கள் அமைத்து இருந்தார்கள்தான். ஆனால் இராணுவம் இடையிடையே பெருமெடுப்பில் முன்னேறி தேடுதல் நடத்தும், அப்போது புலிகள் பின்வாங்கிவிடுவார்கள்.

அரிப்புப் பகுதியில் இது அடிக்கடி நடக்கும். முன்னேறும் இராணுவம் அங்குள்ள கொட்டில்களையும் ஏனைய பொருட்களையும் எரித்துவிட்டுச் செல்லும். புலிகள் மீள அங்குப் போய் இயங்குவார்கள். வன்னிக்கான பொருட்கள் கடத்துவதற்கான முக்கிய தளமாக இப்பகுதி செயற்பட்டது.

மற்றும்படி படையணிகள் எவையும் அங்கு இருக்கவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடியளவு போராளிகளே - அதுவும் நிதித்துறை, அரசியற்றுறைப் போராளிகள் மட்டுமே அங்குச் செயற்பட்டார்கள். வன்னியுடன் நிலையான வினியோகத் தொடர்பு அப்பகுதிக்கு இருந்ததில்லை. கடல்வழியாக இரகசியமாகவே தொடர்பு இருந்தது. அதுவும் தலைமன்னாரைச் சுற்றி இலுப்பைக்கடவை வரவேண்டும்.

பெருமெடுப்பில் முன்னேறும் இராணுவத்தை எதிர்த்துச் சண்டைபிடிப்பதற்கு பெரும் படையணி அங்கு இருக்க வேண்டும். சீரான வினியோகத் தொடர்பு வன்னியுடன் இருக்க வேண்டும். மோட்டர்கள், ஆட்லறிகள் என்று கனரக ஆயுதங்களும் அவற்றுக்கான எறிகணைகளும் சீரான வினியோகத்துடன் இருக்க வேண்டும். (அவ்வளவும் இருந்தும்கூட சம்பூரையோ வாகரையையோ கனநாள் தாக்காட்ட முடியவில்லை, ஏன் வன்னிக்குள்கூட சிலவிடங்களை எதிரி சண்டை செய்துதான் கைப்பற்றியிருக்கிறான்) காயக்காரரை முதன்மை மருத்துவமனைகளுக்குக் கொண்டுவர வேண்டும். எண்பதுகளில் தமிழகத்துக்குக் காயக்காரரைக் கொண்டு போனதைவிட இது சிக்கலான விடயம்.

அங்கு நின்று இராணுவத்தையெதிர்த்துச் சண்டைசெய்யப் புறப்பட்டிருந்தால் நாலைந்து நாட்களில் அத்தனைபேரையும் செஞ்சிலுவைச் சங்கமூடாக வித்துடல்களாகத்தான் வன்னிக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.

=================================

பதிவு தளத்திலே இப்படியான கட்டுரைகள் வருகின்றனவா?

காலம் வந்தா எருமைகூட ஏரோபிளேன் ஓட்டும். இன்னும் உங்க கனபேர் புலிக்குச் சண்டை படிப்பிக்க வெளிக்கிடுவினம். என்ன, புலத்தில கனபேர் வீடுகளில கதைக்கிறதை அந்தாள் வலைத்தளத்தில எழுதுது.

அய்யா நல்லவன் இத்தாவிலில பெரிய படையணிகள் நிரந்தரமாக இருந்து வழங்கல் பாதைகள் இருந்தே சண்டை நடந்தது. இல்லைத்தானே? புலிகளால் முடியாதது எண்டு ஒண்டில்லை.

மோட்டுச் சிங்களவர்களை பாக்கு வெட்டியாலை நறுக்கி பிடரியில 2 தட்டு தட்டியிருந்தா புலம்பெயரந்த நாடுகளில் சனம் எவ்வளவு எழுச்சி கொண்டிருக்கும் யோசிச்சு பாருங்கோ?

புலிகள் ஏன் அப்பிடி ஒரு தவறை விட்டார்கள்? நாங்கள் வேறு வழியில்லாமல் குசேலன் டிக்கட்டுக்கு கியூவில நிக்க வேண்டிய நிலமை ஏன் வந்தது? புலிகள் இனியாவது இந்த தவறை உணர்ந்து ரோபோ வெளிவரும் போது யாழ்பாணத்தில நிக்கிற சிங்களவர்களை நொங்கு சீவினமாதிரி சீவுவார்களா அல்லது ரோபோவுக்கு கியூவில நிக்கவிட்டு வேடிக்கை பாக்கப் போகிறார்களா? :rolleyes: காலம் தான் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு தளத்திலே இப்படியான கட்டுரைகள் வருகின்றனவா?

காலம் வந்தா எருமைகூட ஏரோபிளேன் ஓட்டும். இன்னும் உங்க கனபேர் புலிக்குச் சண்டை படிப்பிக்க வெளிக்கிடுவினம். என்ன, புலத்தில கனபேர் வீடுகளில கதைக்கிறதை அந்தாள் வலைத்தளத்தில எழுதுது

:rolleyes::unsure::D:D:D

மன்னார் மாவட்டத்தின் கட்டளைத் தளபதியாக இவரை நியமிப்பதற்கு புலிகளுக்கு பரிந்துரை செய்வொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவு யாழ்களத்தில் வந்த கருத்துக்களைப் பார்த்துவிட்டு கட்டுரையை தூக்கிவிட்டதாக்கும்..

புலம் பெயர் ஆட்டுமந்தைகளுக்காக(நன்றி குறுக்ஸ்) எழுதி இருபார் ஆனால் சில அறிவாளிகள் அவரையே ஆட்டு மந்தை என்றதும் அவர் தூக்கி கொண்டு ஓடிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் ஆகா ஓகோ என்று இந்த எல்லா ஆய்வாளர்களின் கட்டுரைகளையும் புகழ்ந்த நாங்கள், இன்று அதே கட்டுரைகளை தவறு என்று சொல்கிறோம். ஏன் புலிகள் தவறே விட முடியாதவர்களா? அதில் என்ன பிழை இருக்கிறது ? தவறுகளால்த்தானே எம்மை நாம் திருத்திக்கொள்ள முடியும் ? நினைத்ததிலெல்லாம் வெற்றி கொள்வதற்கு புலிகள் ஒன்று அவதார புருஷர்கள் இல்லையே?

வரலாறு எமது வழிகாட்டி என்று எதற்காகச் சொல்லிக் கொள்க்கிறோம்? அந்த வரலாறு எப்படியானதிச் செய் அல்லது எப்படியானதைச் செய்யாதே என்று எமக்குக் சொல்லித் தந்ததால்த்தானே?

தவறுகள் விடப்படுவது எமக்கு நல்லதுதான். அப்போதுதான் எதிர்காலத்தில் இன்னும் கவனமாக இருப்போம்.

அதற்காக இந்தக் கட்டுரையாளர் சொல்வதை உண்மை என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் தவறுகள் பற்றிய எனது மனநிலயைத்தான் சொல்ல வந்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவான்,

நீங்கள் நக்கலடிக்கிறியளோ, இல்லை உண்மையாத்தான் சொல்லிறியளோ தெரியேல (கனகாலம் தொடுப்பில்லாததால் இப்ப ஆரார் என்னென்ன செய்யிறியள் எண்டதை உடனடியாக் கண்டுபிடிக்கக் கடினமாயிருக்கு).

எண்டாலும் உங்கட கருத்தையொட்டிச் சொல்ல ஒண்டிருக்கு.

இத்தாவிலில வழங்கற் பாதையில்லாமல் சண்டைபிடிச்சதாக ஆர் சொன்னது? முதல் நான்கு நாட்களும்தான் தரைவழி வினியோகமில்லை. அதன்பின் எல்லாம் சரியாகத்தான் நடந்தன.

+++++++++++++++++++++++++

ரகுநாதன்,

நீங்கள் ஆருக்குச் சொன்னியளோ தெரியேல, என்னையும் நோக்கித்தான் சொன்னியள் எண்டு நான் நினைக்கிறதால என்ர கருத்தையும் கொஞ்சம் கேளுங்கோவன்.

புலிகளையும் அவர்களின் செயற்பாடுகளையும் விமர்சிப்பதில் எனக்கொன்றும் சிக்கலில்லை. இன்னும் சொல்லப்போனால் போரியல் ரீதியில் அவர்களை விமர்சிப்பதிலும் எனக்கு உடன்பாடே. இவ்விடத்திலே நான் இரண்டு விதங்களில் இவர்களை எதிர்க்கிறேன்.

ஒன்று: தவறான தகவல்களையும் ஆய்வுகளையும் வழங்குவது. இக்கட்டுரையாளரின் தவறான தகவலையும் ஆய்வையும் முன்னரிட்ட கருத்திலே சுட்டியுள்ளேன்.

இரண்டு: இக்கட்டுரைகள் எழுதுபவர்களும் அதை வெளியிடும் வலைத்தளமும்.

இவர்கள் மிகத் தீவிரமான புலிவால்பிடிகளாகவே இணையவுலகில் அறியப்பட்டார்கள், அறியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமேயில்லாததற்கெல்லாம் 'இந்தா அந்தா' என்று புளுகித் தள்ளிக்கொண்டிருந்தவர்கள். புலிகள் பற்றிய அதிதீவிரப் புனைவுகளைப் பரப்பியவர்கள். (இதுபோலவே யாழ்க்களத்திலும் முட்டாள்தனமான வால்பிடிக் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள

அய்யா நல்லவன் நல்லா விமர்சியுங்கோ. ஆனா புலிகள் வலிந்த தாக்குதல்களை (பொறுமையில் எல்லையை அடைந்து விட்டார்கள் என்பதால் அதிக காலம் இல்லை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்) ஆரம்பிச்சு ஓயாத அலையாக அக்கினிக்களத்தை அணைக்கவோ பூனகரியில புயலாகவோ கிளம்பும் போது அதை யாழ்களத்தில நேர்மையாக நிண்டு எதிர்கொள்ளுங்கோ. அதைவிட்டுப்புட்டு ஓடி ஒழிச்சுப்போட்டு தமிழீழம் கிடைச்சவுடன் வேற பெயரில வந்து எழுதிறது இல்லாட்டி தப்பித்தவறி இன்னொரு கட்ட பேச்சுவார்த்தை என்று எதாவது அசம்பாவிதங்கள் நடந்து முறிய திருப்பி அகல கால்வைக்க விட்டுட்டு பாக்கு வெட்டியை தீட்டிக் கொண்டு நிக்கேக்க வாறதில்லை விமர்சனம் செய்ய.

நான் டொயிலெர் ரிசு முடிஞ்சு போச்சு எண்டு சொல்லிப்போட்டு ஓடி ஒளிக்கலாம் எண்டு இருக்கிறன். கழுவவும் தயார் எண்டு தண்ணி வாளியோடை களத்தில நிக்கிற துணிவு இல்லை.

வாவ்வ்வ்...... குறுக்ஸ்! கொன்னுட்டீங்க, முதல் முறையாக ஒரு ஆக்கபூர்வமான பதில்!! வாழ்த்துக்கள்!!

வெகுவிரைவில் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கில் கையளிப்புகள் நடக்கும்!! காத்திருப்போம்!!!!

புலிகள் செய்த்து தவறு தான் மன்னாரை விட்டு புலிகள் வெளியேறாமல் அனைவரும் மனாரிலையே அழிச்சு போய் இருக்கனும் , பாருங்கள் இண்டைக்கு கண்ட கண்ட பெயரில ஆய்வு என்று அறி(வு)க்கைகள் வேற வருது

பின்னிப்புட்டிங்க குறுக்கு... ஆனாலும் அடைப்புக்குள்ள இருக்கிறது சரியானது எண்டு படேல்ல; புலிகள் பொறுமையின் எல்லையை கடந்துவிட்டோமெண்டு எழும்பி அடிக்கிறதுலும் விட ... அனேகமான காலங்களில் அவர்கள் சரியான காலத்திலேயே விஸ்வரூம் எடுத்திருக்கிறார்கள்...

அந்தக்காலம் வந்திருக்கலாம் அல்லது என்னும் கொஞ்சக்காலம் இருக்கலாம்... அதுக்காக விட்டதெல்லாம் பிழை சரி எண்டு சொல்லக்கூடிய தார்மீகம் களத்தில இல்லாதவர்களுக்கு இல்லை...

Edited by Sooravali

பதிவு யாழ்களத்தில் வந்த கருத்துக்களைப் பார்த்துவிட்டு கட்டுரையை தூக்கிவிட்டதாக்கும்..

இப்பிடியே கத்திக் மன்னாரில இருந்து ஆமியை விலகப் பண்ணலாதோ???

இப்பிடியே கத்திக் மன்னாரில இருந்து ஆமியை விலகப் பண்ணலாதோ???

:rolleyes:

:rolleyes::unsure::o:lol:

Edited by TAMILNANPAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.