Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபோர்ஜினல்ஸ் (அவுஸ்ரெலிய பூர்வீக குடிகள் தமிழர்களா?)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு புத்தகம் சிட்னியில் வெளியிட்டிருந்தார்கள் அதற்கு சமூகமளிப்பதிற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது.புத்தகத்தை நுனிபுல் மெய்வதிற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது புத்தகத்தை வெளியிட்டவர் இலங்கையின் தலை சிறந்த எழுத்தாளர் தற்பொழுது புலம்பெயர் வாழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் பிரபலமான மாத்தளை சோமு அவர்கள்.புத்தகத்தின் பெயர் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்.

அதில் எனக்கு பிடித்தது.

அவுஸ்ரெலியாவில் வாழ்கின்ற கறுப்பின ஆதிவாசிகளுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அவுஸ்ரெலிய கறுப்பின ஆதிவாசிகளின் பண்பாடு பழக்க வழக்கங்கள் பழந்தமிழர்களோடு ஒத்து போகின்றது மலைகளை,பெரிய மரங்களை பாம்புகளை,சூரியனை,சந்திரனை அவர்கள் வியந்து மரியாதை வணக்கம் செய்கின்றனர் தேகத்தில் வீபூதி போன்ற வெள்ளை நிறத்தை பூசி கொண்டு நடனம் ஆடுவார்கள் அவர்கள் பேசுகின்ற மொழியே பழந்தமிழ் மொழியோடு ஒத்தது என ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர் அதற்கு ஏற்றாற் போல் தமிழ் சொற்கள் அவுஸ்ரெலியா ஆதிவாசிகளின் அவுஸ்ரெலிய ஆதிவாசிகளின் மொழிகளிள் கலந்து இருக்கின்றன.

அவுஸ்ரெலியா சிட்னி மாநகரின் புறநகர் பகுதியின் பெயர் "விண்மலே".அந்த இடத்தை போய் பார்த்தால் ஆகாயமும் மலைகளும் ஒட்டி நிற்பது போல் தெரியும்.அவ்வாறு விண்ணும் மலையும் இணைந்திருப்பதே "விண்மலை" என்று சொல்லலாம்.

அதையே விண்மலை என்கின்றனர்.இன்னொரு இடம் காகாடு.தமிழில் "கா" என்றால் சோலை.காடு என்றால் வனம் என்று சொல்லுவர் காகாடு என்றால் சோலைவனம் தான்.உண்மையில் அந்த இடம் சோலைவனம் தான்.ஆயிர கணக்கான பயணிகளை இழுக்கும் அந்த காகாடு ஒரு சோலைவனம் தான்.

இன்னொரு ஆதிவாசி வசனம். "பூனங்கா யிங்காவா" அதன் அர்த்தம் பெண்ணே இங்கே வா என்பது தான் இப்பொழுது அந்த ஆதிவாசி வசனத்தை திரும்பவும் படியுங்கள்."பூனங்கா யிங்கவா".அதன் உண்மையான உச்சரிப்பு "பூணங்கையே இங்கே வா" என்பதே!இப்படி தமிழிற்கும் அவர்களுக்கும் ஒரு உறவு இருக்கிறது;இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் அவுஸ்ரெலியா ஆதிவாசிகளும் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டில் குடியேறினவர்கள் அவர்கள் எங்கிருந்து குடியேறினார்கள் என்பது இன்னுமே ஆய்விலேயே இருக்கிறது.

இப்படி தொடர்கிறது.

மேடையில் பேச்சாளர் ஒருவர் இன்னுமொரு தகவல் சொன்னார் அவுஸ்ரெலியா சுதேசிகள் வாயில் வைத்து வாசிக்கும் இசைகருவி எங்களுடையை நாதஸ்வரத்தை ஒத்ததாக உள்ளதாகவும் மேலும் ஒரு தகவலை சொன்னார்.

எனக்கு ஒரே மகிழ்ச்சி நான் ஒரு அகதி அல்ல நான் என்னுடைய மூதாதையரின் நாட்டில் தான் வசிகிறேன் என்று நினைத்தவுடன் என்னை அறியாமலே ஒரு வித "இது" வந்து விட்டது,அந்த "இது" வை சொல்ல தமிழில் வார்த்தைகளே இல்லை.

மச்சி அகதியாக வந்து பிராஜாஉரிமை பெறுவது பெரிய விசயமல்ல,அகதியா வந்து பூர்வீக குடி என்பதிற்கு ஆதாரம் தேடுவது தான் பெரிய விடயம் அங்க தான் தமிழன் இஸ் கிரேட்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் முன்னர் எங்கேயோ இத்தகவலை வாசித்திருக்கிறேன். மீள்நினைவு படுத்தியதற்கு நன்றிகள் புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்நிகழ்வுக்கு சென்றிருந்தேன். தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழர்கள் அறிவியல் பற்றி சொல்லப்பட்டதை மாத்தளை சோமு அவர்கள் சொல்லியிருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வந்தநீங்களா?அப்பு அந்த மேடையில் ஒரு ஆச்சி இருந்தா அவ யார் ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வந்தநீங்களா?அப்பு அந்த மேடையில் ஒரு ஆச்சி இருந்தா அவ யார் ?

நிச்சயமாக குஞ்சாச்சி அல்ல

தமிழ் "நல்ல" என்ற சொல் அபோர்ஜினீஸ் மொழியிலும் "நல்ல (Nalla)" என்று அதே அர்த்தத்துடன் பயன்படுத்தப்படுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்

Edited by vettri-vel

அதற்கு ஏற்றாற் போல் தமிழ் சொற்கள் அவுஸ்ரெலியா ஆதிவாசிகளின் அவுஸ்ரெலிய ஆதிவாசிகளின் மொழிகளிள் கலந்து இருக்கின்றன.

அவுஸ்ரெலியா சிட்னி மாநகரின் புறநகர் பகுதியின் பெயர் "விண்மலே".அந்த இடத்தை போய் பார்த்தால் ஆகாயமும் மலைகளும் ஒட்டி நிற்பது போல் தெரியும்.அவ்வாறு விண்ணும் மலையும் இணைந்திருப்பதே "விண்மலை" என்று சொல்லலாம்.

உண்மை தான். நாம் இங்கு அடிக்கடி கேள்விப்படும் அபோர்ஜினல் இடங்களின் பெயர்கள், அவை எமக்கு ஏற்கனவே பரிச்சயமானவை போன்ற உணர்வு ஏற்படுவது தான். 'அபோர்ஜினீஸ்'ன் முக அமைப்பும், நிறமும் கூட திராவிட மக்களினதை ஒத்தவையாக இருகின்றன.

எனது நண்பர் ஒருவர் சொன்னார், அவுஸ்திரேலியா, தென்னாசியா, ஆபிரிக்கா & தென்னமெரிக்கா கண்டங்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இணைந்து இருந்தனவாம். எனக்கு இவை பற்றி ஆழமாக தெரியாது. இது உண்மையா?

நல்ல ஒரு தகவல். நன்றி புத்தன்.

உங்களது நண்பர் சொன்னது உண்மை தான் மல்லிகை வாசம் . நீங்கள் உலகப் படத்தில் ஆபிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியையும் , தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதியையும் அவதானித்தீர்கள் என்றால் அதன் தொடர்பு தெரியும் .

நீங்கள் உலகப் படத்தில் ஆபிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியையும் , தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதியையும் அவதானித்தீர்கள் என்றால் அதன் தொடர்பு தெரியும் .

ஆமாம்... நீங்கள் சொன்ன பகுதிகள் அச்சொட்டாக பொருந்துகின்றன...! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பர் ஒருவர் சொன்னார், அவுஸ்திரேலியா, தென்னாசியா, ஆபிரிக்கா & தென்னமெரிக்கா கண்டங்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இணைந்து இருந்தனவாம். எனக்கு இவை பற்றி ஆழமாக தெரியாது. இது உண்மையா?

"ஈழ வரலாற்றுப் பதிவுகள்"என்கிற நூலில் கண்டங்களின் நகர்வு பற்றிய சில விளக்கங்கள் உள்ளன.

ஆசிரியர் :ஏகநாயகி சிவராசசிங்கம்

வெளியீடு:ARROW WEB PUBLISHERS,Toronto,Canada,2003

Edited by putthan

ப்ளூமவுண்டணின் வரலாற்றை சொல்ல மறந்துவிட்டீர்களே புத்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ப்ளூமவுண்டணின் வரலாற்றை சொல்ல மறந்துவிட்டீர்களே புத்தன்

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ப்ளூமவுண்டணின் வரலாற்றை சொல்ல மறந்துவிட்டீர்களே புத்தன்

:D அடுத்த சிட்னி கோசிப்பில சொன்னா போச்சு :lol:

"ஈழ வரலாற்றுப் பதிவுகள்"என்கிற நூலில் கண்டங்களின் நகர்வு பற்றிய சில விளக்கங்கள் உள்ளன.

ஆசிரியர் :ஏகநாயகி சிவராசசிங்கம்

வெளியீடு:ARROW WEB PUBLISHERS,Toronto,Canada,2003

நன்றி புத்தன். உங்கள் Bப்ளு மௌன்ரின் வரலாற்றை விரைவில் எதிர்பார்க்கின்றேன். அங்கே போய் வந்தோரிடம் கேட்டேன். அவை சொல்ல மாட்டினமாம். அப்படி என்ன ரகசியமோ... அறிய ஆவலாக இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமட்டா எண்ட பெயர் கூட பரமபிதா எண்டதிலிருந்துதானாம் வந்தது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரமட்டா எண்ட பெயர் கூட பரமபிதா எண்டதிலிருந்துதானாம் வந்தது. :D

:lol: இருக்கும்ம் இருக்கும்... :):D

இதனைப் பற்றி நானும் வாசித்திருக்கிறேன். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவும் இந்தியாவும் சேர்ந்து இருந்ததாகவும் பின்னர் கண்டங்கள் பிரியும்போது, இந்தியா வடக்காகவும், அவுஸ்ரேலியா தெற்காகவும் பிரிந்தது எனவும், அவற்றில் பல இடங்கள் கடல்கோளுள் அமிழ்ந்துவிட்டதாகவும் படித்திருக்கிறேன். இதனை நான் நேச்சுரல் சயன்ஸில் படித்திருக்கிறேன். அதேபோல், அவுஸ்ரேலிய ஆதிவாசிகளின் மொழி, கலாச்சாரம் என்பன தமிழை ஒத்ததாக இருப்பதாகப் பின்னர், தமிழ் அறிஞர் ஒருவரின் தொலைக்காட்சிப்பேட்டியில் கேட்டிருக்கிறேன்.

புதுமையான விடயங்கள் தான். பள்ளிப்பாடத்தில் படித்தீர்களா தமிழச்சி?

Edited by Mallikai Vaasam

யூனியில் படித்தேன் மல்லிகைவாசம். பள்ளிப்பாடத்தில் இப்படி ஆழமாகப் படிப்பிப்பது குறைவு. யூனியிலுள்ள பாடங்களில்தான் இப்படியான நுணுக்கங்களான பாடங்கள் உள்ளது. நாம் வசிக்கும் நாடுகள், மிகநுண்ணியஅளவில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் எமது தட்பவெட்ப நிலைகளும் மாறும். இப்போது அமெரிக்கக் கண்டத்தில் வருட இறுதியில் பனிக்காலமும் நடுப்பகுதியில் வெயில் காலமும் உள்ளது. அவுஸ்ரேலியாவில் இதற்கெதிராக உள்ளது. ஆனால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இது நேரெதிராக இருந்தது. அதேபோல்தான், எமது நிலங்கள் படிப்படியாகக் கடலுக்குள் போய்க்கொண்டிருக்கிறது. இயற்கையைப் பற்றி அறிவதற்கு எமது ஆயுள் போதாது.

நாம் வசிக்கும் நாடுகள், மிகநுண்ணியஅளவில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் எமது தட்பவெட்ப நிலைகளும் மாறும். இப்போது அமெரிக்கக் கண்டத்தில் வருட இறுதியில் பனிக்காலமும் நடுப்பகுதியில் வெயில் காலமும் உள்ளது. அவுஸ்ரேலியாவில் இதற்கெதிராக உள்ளது. ஆனால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இது நேரெதிராக இருந்தது. அதேபோல்தான், எமது நிலங்கள் படிப்படியாகக் கடலுக்குள் போய்க்கொண்டிருக்கிறது. இயற்கையைப் பற்றி அறிவதற்கு எமது ஆயுள் போதாது.

உண்மை தான்... கற்றது கைமண் அளவு தான். கற்க வேண்டியது உலகளவு.. விளக்கத்துக்கு நன்றி தமிழச்சி...

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் தமிழர்கள் என்பதைவிடவும் பெரிய ஆச்சரியமான விடயமொன்றிருக்கிறது. அது என்ன தெரியுமா?

முழு மனித இனமுமே ஒரே ஒரு மூதாதையியிலிருந்து தோன்றியதாம். இப்படி பெரிய ஆச்சரியமான விடயங்கள் பல உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தகவல்கள் நன்றி புத்தன். :)

எனக்கு ஒரே மகிழ்ச்சி நான் ஒரு அகதி அல்ல நான் என்னுடைய மூதாதையரின் நாட்டில் தான் வசிகிறேன் என்று நினைத்தவுடன் என்னை அறியாமலே ஒரு வித "இது" வந்து விட்டது,அந்த "இது" வை சொல்ல தமிழில் வார்த்தைகளே இல்லை.

confused0036.gifconfused0036.gifconfused0036.gif

இந்த படத்தை முன்பு ஒரு முறை யாழ்களத்திலேயே சுட்டதாக நினைவு.

பலமுறை இந்துசமுத்திரத்தில் ஏற்பட்ட ஊழிகள் என்பட்ட சில ஆழிகளுக்கு முன்... இப்படியிந்ததாக

kumarikandamiy6.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை ராமர் கட்டிய பாலத்தை காணவில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.