Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் பிக்கு ஒருவரால் தெய்வ உருவச்சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது

Featured Replies

கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் புகுந்து அங்கிருந்த தெய்வ உருவச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய பிக்கு ஒருவர் உட்பட மூவரை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்நிலையில் அருகிலுள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு உள்ளிட்ட மூவர் தேவஸ்தானத்தின் கோபுரத்தில் ஏறி சிலைகளை உடைத்துள்ளனர் என கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட மூவரிடம் கிராண்ட்பாஸ் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதாரம் வீரகேசரி இணையம்

  • Replies 75
  • Views 6.9k
  • Created
  • Last Reply

சிங்களவனுகள் எம்முடைய எதை விட்டு வைத்திருக்கின்றான்.யாழ்பாணத

என்னமா அனியாயம் பண்ணுறாங்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களை எல்லாம் கோவில் சூலத்திலையே தூக்கி செருகனும் :):wub: அப்பத்தான் அடுத்தவன் இதை பார்த்திட்டாவது செய்யமாட்டன். (ஆனால் இவங்களை சூலத்திலை செருகினால் சூலம் அழுக்காயிடும் :D )

சரி விடு சுப்பர்..

இது இடிபட்டதைவிட இதை இடிச்சதால தான் கூடின டமேச்...

Edited by Sooravali

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான காடைக்கும்பல் தாக்கி சேதமாக்கிள்ளது. இதில் ஆலயத்தின் முன்பக்க கோபுரமும் உட்பக்கத்தில் உள்ள விக்கிரகங்களும் சேதமடைந்துள்ளன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் புகுந்து அங்கிருந்த தெய்வ உருவச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய பிக்கு ஒருவர் உட்பட மூவரை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்த பிக்குவுக்கு நீதிமன்றம் தண்டனை தானே கொடுக்கப்போகிறது . சும்மா யாருக்கு பம்மாத்து காட்டிக்கொண்டு இருக்கினம் .

இவங்களை எல்லாம் கோவில் சூலத்திலையே தூக்கி செருகனும் :):wub: அப்பத்தான் அடுத்தவன் இதை பார்த்திட்டாவது செய்யமாட்டன். (ஆனால் இவங்களை சூலத்திலை செருகினால் சூலம் அழுக்காயிடும் :D )

சரியாச் சொன்னியள் சுப்பண்ணை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kodumai2.jpg

இதைப்பாத்தாவது இஞ்சை குத்தியாட்டம் போடுற நாத்தீகவாதிகள் சந்தோசப்படட்டும்

கையில் உவ்வளவு ஆயுதங்கள் வைத்திருக்கின்ற அம்மன் பிக்குவுக்கு ஒரு போடு போட்டிருக்கலாமே??!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களை எல்லாம் கோவில் சூலத்திலையே தூக்கி செருகனும் :huh::mellow: அப்பத்தான் அடுத்தவன் இதை பார்த்திட்டாவது செய்யமாட்டன். (ஆனால் இவங்களை சூலத்திலை செருகினால் சூலம் அழுக்காயிடும் :( )

சிங்களவருடன் சேர்ந்துவாழலாம் என்பவரகளுக்கு இவ்விடயம் சமர்ப்பணம்..................

புலிகள்போராடத்தேவையில்லை என்பவர்களுக்கும் இவ்விடயம் சமர்ப்பணம்..................

புலிகள்போராடாவிட்டால் ?????

என்ன நடக்கும்????????....................???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் அமைச்சர் பெருமக்கள் இதற்க்குஎன்ன சொல்லப்போகின்றார்கள் குறிப்பாக மக்களை அடகுவைத்த மலையக அமைச்சர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையில் உவ்வளவு ஆயுதங்கள் வைத்திருக்கின்ற அம்மன் பிக்குவுக்கு ஒரு போடு போட்டிருக்கலாமே??!!!

இதில் பகுத்தறிவுவாதிகளின் சதிஏதும் இருக்குமோ என்று சந்தேகிக்கின்கிறேன்!

Edited by தேவன்

இதில் பகுத்தறிவுவாதிகளின் சதிஏதும் இருக்குமோ என்று சந்தேகிக்கின்கிறேன்!

அப்போ புத்தபிக்கு பகுத்தறிவுவாதி என்று சொல்கின்றீர்களா????.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கொழும்பில குடியிருக்கிற தமிழர்கள் எல்லாம் சிங்களவர்களோட இருக்க முடியாது என்று உணர்ந்து வீறுகொண்டு போராட வன்னிக்குப் போகப் போகிறார்களா?

மானங்க் கெட்ட தமிழரே அம்மனை ஒரு பிக்கு மானபங்கம் படுத்த பார்த்து இருக்கிறான் ஆனல் நாங்கள் ?

புறப்படு தமிழா இருக்கும் கோவணம் பறி போகும் முன் மதத்தை யாவது காப்போம்.

இந்திய இந்துமுண்னனி இராமகோபாலனுக்கு ஆராவது செய்தி சொல்லலாமே.....

தட்டினவுடன உடையுது சிலை, தட்டினது இன்னொரு மத்தப்பூசாரி.... இதில கடவுள் எங்கே?...

சிந்தியுங்கள்..... சிந்தியுங்கள்..... சிந்தியுங்கள்...

நாம் வாழவேண்டுமானால் மதங்களில் இருந்தும் விடுதலை பெறவேண்டும்.... எமக்கு விடுதலை வேண்டும்

தட்டினவுடன உடையுது சிலை, தட்டினது இன்னொரு மத்தப்பூசாரி.... இதில கடவுள் எங்கே?...

சிந்தியுங்கள்..... சிந்தியுங்கள்..... சிந்தியுங்கள்...

நாம் வாழவேண்டுமானால் மதங்களில் இருந்தும் விடுதலை பெறவேண்டும்.... எமக்கு விடுதலை வேண்டும்

யாரும் தட்டாமலே விழுந்து இறந்து விடுகிறான் மனிதன்!!!

இதில் மனிதன் எங்கே?

எங்கிருந்து வந்தான்?

ஏன் இங்கே சிலகாலம் வாழ்ந்தான்?

ஏன் சொல்லிக்கொள்ளாமல் போனான்?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள்!!!

உன் உள்ளே உறைந்திருக்கும் ஒரு சக்தியை நீ புரிந்து கொள்ளாதவரை வாழ்வே சுமை தான்!

இதில் யார் வாங்கி தரமுடியும் உனக்கு விடுதலை?!!!

Edited by vettri-vel

kodumai2.jpg

இதைப்பாத்தாவது இஞ்சை குத்தியாட்டம் போடுற நாத்தீகவாதிகள் சந்தோசப்படட்டும்

சிலையை உடைத்தவன் ஒரு மத வெறியன்.இதில் நாத்திகவாதிக்கு என்ன சம்பந்தம்?.மத வெறியர்கள் தான் சிலைகளை உடைகிறார்கள் மனிதரைக் கொல்கிறார்கள்.கோவில்களில் ஏற்படுத்தப்படும் வீண் விரயங்களைத் தவிர்த்து மக்களுக்கு உதவுங்கள் என்று சொல்வதைக் கூட ஏற்றுக்கோள்ள முடியாத இந்து மத வெறியருக்கும் இந்தப் பவுத்த மத வெறியனுக்கும் வித்தியாசம் இல்லை.

அன்பே சிவம் என்பதையோ , பிற ஜீவராசிகள் மீது அன்பு செலுத்து என்று போதித்த புத்தனை வழிபடுபவர்களே மதம் கொண்டு அலைகின்றனர்.மாற்றாக கடவுள் மத மறுப்பாளர்களே மனிதாபிமானத்தோடு நடவுங்கள் மதம் கொண்டு அலையாதீர்கள் என்று சொல்கின்றனர்..

மதவெறியர்களால் 50 ஆயிரம் கிறிஸ்துவர்கள் ஒரிசா காடுகளில் மறைந்து தவிக்கின்றனர்

ஒரிசாவில் சங் பரிவார அமைப்புகளின் தாக்குதல்களையடுத்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களில் 50 ஆயிரம் பேர் தப்பியோடி, உயிருக்குப் பயந்து காடுகளில் ஒளிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிலர் மிகக் குறைந்த அளவில் உள்ள அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடித்து நொறுக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தேவாலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்ற வலியுறுத்தி வரும் கொலைகாரக் கும்பல்களிடமிருந்து தப்பித்த கிறிஸ்தவர்கள் காடுகளுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து வாழ்கின்றனர். இந்த வன்முறை ஒரிசா மாநிலத்தில் மட்டுமல்லாது, தற்போது அண்டை மாநிலமான மத்தியப் பிரதேச மாநிலத்திலும் பரவியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் குழு ஒன்று திங்கள் கிழமையன்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலைச் சந்தித்து ஒரு மனுவை அளித்தது.

திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான மகேஷ் பட் தலைமையிலான அந்தக் குழுவில் ஜாமியத் உலேமா தலைவர் மவுலானா மஹ்மூத் மதானி, தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உறுப்பினர் டாக்டர் ஜான் தயால், ஒரிசா ஆர்ச் பிஷப் ரேபேல் சீனால், டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் கான் செசாவ், அனைத்திந்தியக் கிறிஸ்தவக் குழுச் செயலாளர் மது சந்திரா, டில்லி மற்றும் மும்பை கத்தோலிக்கர் மற்றும் மஹாராஷ்டிர மாநில சிறுபான் மையினர் ஆணையத் தலைவர் டாக்டர் ஆப்ரகாம் மத்தாய் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்திய அரசியல் சட்டப் பிரிவு 355 இன் கீழ் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஹிந்துத்துவ வன்முறையாளர்களிடமிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கப் போதிய நடவடிக்கை எடுக்க 355 ஆவது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக் குழுவினர் குடியரசுத் தலைவரைக் கோரினர்.

இம்மனுவில் ஒரிசா நிலைமை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த லட்சுமணானந்த சரசுவதி, மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதைப் போலவே இப்போதும் கந்தமால் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படவேண்டும் என்று குழு கூறியுள்ளது.

http://files.periyar.org.in/viduthalai/20080904/news08.html

படிக்கவும்.

விரட்டி விரட்டி வேட்டையாடிய ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், சங் பரிவார் மதவெறி வன் முறை இயக்கங்களைத் தடை செய்க!

காஷ்மீரும்-சீரங்கமும்! கிருஸ்துவர்களுக்கு மட்டும் உதவுவதா?- ஜெயலலிதா கேள்வி

எல்லாக் குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. தான் காரணம்.அம்பலப்படுத்துகிறார் திக்விஜய்சிங்

http://idhuthanunmai.blogspot.com/2008/09/50.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலையை உடைத்தவன் ஒரு மத வெறியன்.இதில் நாத்திகவாதிக்கு என்ன சம்பந்தம்?.மத வெறியர்கள் தான் சிலைகளை உடைகிறார்கள் மனிதரைக் கொல்கிறார்கள்.கோவில்களில் ஏற்படுத்தப்படும் வீண் விரயங்களைத் தவிர்த்து மக்களுக்கு உதவுங்கள் என்று சொல்வதைக் கூட ஏற்றுக்கோள்ள முடியாத இந்து மத வெறியருக்கும் இந்தப் பவுத்த மத வெறியனுக்கும் வித்தியாசம் இல்லை.

அன்பே சிவம் என்பதையோ , பிற ஜீவராசிகள் மீது அன்பு செலுத்து என்று போதித்த புத்தனை வழிபடுபவர்களே மதம் கொண்டு அலைகின்றனர்.மாற்றாக கடவுள் மத மறுப்பாளர்களே மனிதாபிமானத்தோடு நடவுங்கள் மதம் கொண்டு அலையாதீர்கள் என்று சொல்கின்றனர்..

சரி இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? :lol:

கையில் உவ்வளவு ஆயுதங்கள் வைத்திருக்கின்ற அம்மன் பிக்குவுக்கு ஒரு போடு போட்டிருக்கலாமே??!!!

விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!

உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!

ஒரிஸா மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெருமெடுப்பிலான ஒரு இனப்படு கொலைகளுக்கான அசாதாரணமான ஆயத்தங்கள் அதில் தென்பட்டன.

ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத்திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வரலாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது.

3ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார்.

சம்பல்பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.

பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட்டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.

ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.

கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சைகள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டையாடினர் வி.ஹெ.பியினர்.

ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.

அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத்தப்பட்டன.

முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.

6 மணிக்கு...

அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.

6.45 மணி...

பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.

இரவு 7 மணிக்கு..

ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக்குள் சென்றனர்.

ஆகஸ்ட் 25, 2008...

வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.

காலை 7 மணி..

புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மையினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.

10.30 மணி..

பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.

முற்பகல் 11.30 மணி...

நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மணி..

ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.

தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.

2 மணி...

கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.

இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.

ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.

சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.

1. விஜய் பரிச்சா2. ஆர்.கே. நாயக்3. ஜோசப் நாயக்4. சூசன் நாயக்5. சந்தோஷ நாயக்6. ஹரி ஹர்தாஸ்7. மோசே நாயக்8. பிரகாஷ் நாயக்9. மோசே நாயக்10. ராஜு மற்றும் பலர்

ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.

பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.

குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சட்டத்தை கையிலெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.

முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச்சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.

இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக் கொன்றாய் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன. >>சர்ஜுன் .tmmkonline.

http://idhuthanunmai.blogspot.com/2008/09/...-post_4174.html

In the name of God - Orissa Anti Christian violence 1 of 3

In the name of God - Orissa Anti Christian violence 2 of 3

In the name of God - Orissa Anti Christian violence 3 of 3

சரி இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? :lol:

கடவுளர்ளையும் மதங்களையும் மனிதனே உருவாக்கினான்.இவற்றிற்காக மதம் கொண்டு அலைவதில் எந்தப் பயனும் இல்லை.தன்னையே பாதுகாக்க முடியாத ஒரு கற்சிலை எங்கனம் எல்லாம் வல்ல கடவுளாக இருக்க முடியும் என்பதே அறிவார்ந்து சிந்த்திப்பவர்கள் தமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வி.

பவுத்த மத வெறி மட்டும் அல்ல இந்து கிரித்துவ இசுலாமிய மத வெறிகளும் உலகில் மனிதரைக் கொல்கின்றன.

மனிதரைக் கொல்கின்ற இந்த மதங்களும் தம்மையே பாதுகாக்க முடியாத இந்த மதங்கலின் கடவுளர்களும் மனிதருக்கு அவசியமானவையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திக வெறியர்களுக்கு தங்களின் நாத்திக கொள்கைகளை திணிப்பதே பிரதானமாக இருக்கிறதே தவிர.. நடந்த சம்பவத்தின் பின்னால் அரச பயங்கரவாதம் இருக்கிறது என்ற பிரச்சாரப்படுத்தல் அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒரு நாத்திகவாதி கேட்கிறார்.. அம்மனின் கையில் இருந்த ஆயுதங்கள் ஏன் பிக்குவைத் தாக்கவில்லை என்று. நாளை அவர் கேட்கக் கூடும்... அம்மன் தனது நிலைக்கு ஏன் ஜோர்ஜ் புஸ்ஸிடம் முறையிடவில்லை என்று. இப்படிப்பட்ட முட்டாள் தனம் நிறைந்த நாத்திக வாதமல்ல இப்போது தேவை.

சிங்கள பெளத்த பேரினவாதம் என்பதன் கொடிய பயங்கரவாத செயற்பாடுகளில் இதுவும் ஒன்று. தலதாமாளிகையை தாக்கிய போது.. அதை பெளத்தத்துக்கு எதிரான தமிழ் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று உலகம் பூராவும் பிரச்சாரம் செய்தது சிங்கள அரசு.

ஆனால்.. எம்மவர்களோ.. இதை நாத்திகப் பிரச்சாரத்துக்கு கையில் எடுக்க முண்டியடிப்பதைச் செய்கிறார்களே தவிர.. தமிழ் மக்களுக்கு உண்மையில் அவர்களின் மதச் சுதந்திரம் கூட அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இல்லை என்பதை சொல்ல இதைப் பாவிக்க முயலவில்லை. அதுமட்டுமன்றி சிங்கள அரசு இந்து மதத்துக்கு எதிராக நடத்திய மத வெறித்தாக்குதல் என்பதாகவும் இது காட்டப்படலாம். இது ஒரு தொடர் தாக்குதலின் விளைவு என்று பழைய வரலாற்று துர்ப்பாக்கிய நிகழ்வுகளை கூட மீள உலகின் கண்களின் முன் கொண்டு வரலாம். ஆனால் அதைச் சொல்ல அவர்கள் தயாரில்லை. ஏனெனில் அதைச் சொன்னால்.. அது நாத்திக கோமாளித்தனத்துக்கு கேடாகிடும் என்று நினைக்கிறார்கள்.

இந்துக்களை அதிகமாகக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளே.. சிறீலங்காவுக்கு இராணுவ ரீதியில் உதவி வருகின்றன. அங்குள்ள மக்களும் அவை குறித்து அக்கறை செய்வதில்லை. இவ்வாறான சம்பவங்களை சரியான வடிவில் பிரச்சாரப்படுத்துவதன் மூலம்.. இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் சிறீலங்காவில் இந்து மதத்தைப் பின்பற்றும் தமிழ் மக்கள் மீதும் சிங்கள பெளத்தம் ஒரு அழிப்பு நடவடிக்கையை செய்வதாக.. ஆதாரத்துடன் காட்டி.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உண்மை முகத்தை அவர்களுக்கு காட்ட முடியும். இது இன்று நேற்றல்ல நிகழ்கிறது.. நயினை நாகபூசனி அம்மன் தேரை எரித்ததில் இருந்து.. இதைத்தான் செய்கிறது சிங்கள பெளத்த பேரினவாதம்.

ஆனால் நாம் அவற்றை சரியான வடிவில் வெளி உலகுக்கு கொண்டு வராததால் தான்.. பல கோடி இந்துக்களின் அனுதாபத்தை எம் பக்கம் வைத்திருக்கத் தவறி இருக்கிறோம்.

நல்லூரில் மக்கள் மத்தியில் இராணுவ சீருடையில் அரச படைகள் செயற்பட்டு சமயத் தொண்டாற்றுவதாகப் பிரச்சாரம் செய்ய சிங்களப் பேரினவாத அரசுக்கு என்ன தேவை இருக்கிறது. அதில் உள்ள பிரச்சார நோக்கிற்கு பதிலடியாக இச்சம்பவத்தை மாற்ற முடியும். காரணம்.. இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகவியலாளர்கள் அவதானிக்கக் கூடிய இடமொன்றிலேயே நிகழ்ந்துள்ளமை தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு சாதகமான காரணி.

ஆனால்.. அதைச் செய்ய விளையாத தமிழ் மக்கள் விரோத நாத்திகக் கூட்டம்.. தங்களின் வறண்டு போன செத்துப் போன.. கொள்கைகள் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடுவது தமிழ் மக்களின் கையறு நிலையையே காட்டுகிறது.

மனோ கணேசன் இச்சம்பவத்தை கண்டித்திருப்பதுடன்.. பெளத்த பிக்குகளின் இன மத வெறித்தன்மையை வெளிக்கொணரவும் செய்துள்ளார். ஏன் எம்மவர்களுக்கு அப்படியான ஒரு கோணத்தில் இதை பாவிக்க முடியவில்லை.

தேங்காய் உடைக்கிறதாகட்டும்.. இச்சம்பவம் ஆகட்டும்.. சிங்கள பெளத்த பேரினவாத மத வெறிக்கு நிகராக ஈழத்தில் இந்து மத வெறி இருக்கிறது என்று ஒரு போலி தன்மையை நிலைநாட்ட ஒரிசா வரை போய் ஆதாரம் தேடி வரும் நாத்திகக் கூட்டம்.. ஈழத்தில் தமிழ் மக்களின் நிலைக்காக நீலிக்கண்ணீரும் வடித்துக் கொள்கிறது. இது அவர்களின் போலி அக்கறையைத் தானே காட்டுகிறது.

இதையேதான் டக்கிளசும் செய்கிறான். கருணாவும் செய்கிறான். இக்கூட்டங்கள் எம்மத்தியில் இருக்கும் வரை... சிங்கள பெளத்த பேரினவாதம்.. தமிழ் மக்களை அழிப்பது நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்..! :D:D:lol::lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.