Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்

Featured Replies

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்

சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.

தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.

சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...

ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...

நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...

மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.

http://femina.mywebdunia.com/2008/09/10/1221046704753.html

உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
:) நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அதே காதலியை திருமணம் செய்தபின் கதையே வேற ! நான் அனுபவப்பட்டவன் ! இதற்காக நான் இன்னும் அப்படியே மாறாமல் இருக்கிறேன் என்று சொல்ல வரவில்லை. வாழ்க்கை எல்லாவற்றையும் மாற்றிவிடும் !
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை வாசிக்கவே பரவசமாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்

:):):wub::lol::):)

  • தொடங்கியவர்

முனிவர் ஐயா எதுக்கு திரு திரு என்று முளிக்கிறீங்ககள்? உங்க அனுபவங்களை எடுத்துவிடுங்க. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் கூட எழுத ஆசைப்படுறார்.

[ஃஉஒடெ நமெ='ஆதிபன்' டடெ='ஸெப் 15 2008, 10:07 ஆM' பொச்ட்='446172']

முனிவர் ஐயா எதுக்கு திரு திரு என்று முளிக்கிறீங்ககள்? உங்க அனுபவங்களை எடுத்துவிடுங்க. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் கூட எழுத ஆசைப்படுறார்.

[/ஃஉஒடெ]

முனிவர் எல்லாம் துறந்தவராக்கும். அவர் பரவசப்பட மாட்டார். மற்றவர்களை பரவசப்படுத்துவார்.

ஏம்பா அதிபா,

இருக்கிற பலத்தையும் இல்லாமல் ஆக்கிறதென்டே முடிவு பண்ணிட்டீரா?

உள்ளதிலேயே ரொம்பப் பலவீனமா இருந்து நொந்து நூலாகி........... அங்கால நெடுக்கு சொல்லுவார்.

அதென்ன முனி முற்றும் துறந்தவர் எண்டா.... ஆணவம், கன்மம், மாயையா? அல்லது வேற ஏதாச்சுமா?

  • கருத்துக்கள உறவுகள்

aathipan Posted இன்று, 03:07 PM

முனிவர் ஐயா எதுக்கு திரு திரு என்று முளிக்கிறீங்ககள்? உங்க அனுபவங்களை எடுத்துவிடுங்க. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் கூட எழுத ஆசைப்படுறார்

என்னத்த சொல்ல அனுபவப்படவில்லை

இருந்தாலும் காதலித்தேன் அவளிடம் போய் விருப்பத்தை கேட்டேன் புராணம் பாடி விட்டாள் :unsure:

அன்றைக்கு ஏத்தின கொடிதான் இன்னும் இறக்கவில்லை காவி உடுப்பும்

முனிவர் எல்லாம் துறந்தவராக்கும். அவர் பரவசப்பட மாட்டார். மற்றவர்களை பரவசப்படுத்துவார்

சரியாக சொன்னீர்கள் ஈஸ் இருந்தாலும் இன்னும் முற்றும் துறக்க வில்லை சில ஜந்துக்கள் உள்ளன :wub::lol:

அதென்ன முனி முற்றும் துறந்தவர் எண்டா.... ஆணவம், கன்மம், மாயையா? அல்லது வேற ஏதாச்சுமா

ஆதி வந்துட்டயல் போல தேன் எடுக்க போனதாக கேள்விபட்டேன் என்ன எடுத்தாச்சா நிறைய இடத்தில் தேன் பூச்சு குத்தியதாக கேள்வி பட்டேன் உன்மையோ மருந்து போட ஆச்சிரமத்துக்கு வாரது எல்லாத்தையும் துறக்க முடியாது தெரியும் தானே உங்களுக்கு :):unsure:

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்

தலைப்பு நல்லா தான் இருக்கு... விஷயங்களும் தான்.

அது சரி..., யாராவது ஆண்களிடம் பெண்கள் பரவசமடையும் தருணங்கள் என்ற தலைப்பில் ஏதாவது எழுதகூடாதா? பசங்கள் நன்றியுடன் பாராட்டுவாங்கள். :unsure:

ஆதி வந்துட்டயல் போல தேன் எடுக்க போனதாக கேள்விபட்டேன் என்ன எடுத்தாச்சா நிறைய இடத்தில் தேன் பூச்சு குத்தியதாக கேள்வி பட்டேன் உன்மையோ மருந்து போட ஆச்சிரமத்துக்கு வாரது எல்லாத்தையும் துறக்க முடியாது தெரியும் தானே உங்களுக்கு :wub::lol:

ஓய் முனியாரே!

அது தேன் பூச்சு இல்லை தேனீ....

திட்டுத் திட்டா வீங்கி ஆதி பட்ட வேதனையைச் சொல்லி மாளாது. :lol:

ஆசிரமத்திற்கு வாரதோ..... வேண்டாம்டா சாமி.

எனக்கென்டாலும் தேனீதான் கொட்டிச்சு.....

உம்மை ஆசிரமத்தில வச்சு கரடிகள் உருட்டி உருட்டி நக்குவதாகக் கேள்விப்பட்டன் உண்மையோ முனி? :):unsure::lol:

அதெப்படி...... தேனில் குதித்து நீச்சலடிக்கவும் ஆசிரமத்தில் படிப்பிக்கிறீரோ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='Mallikai Vaasam'

அது சரி..., யாராவது ஆண்களிடம் பெண்கள் பரவசமடையும் தருணங்கள் என்ற தலைப்பில் ஏதாவது எழுதகூடாதா? பசங்கள் நன்றியுடன் பாராட்டுவாங்கள். :unsure:

வேற என்ன நகையும் உடுப்பும் வாங்கிக்கொடுக்கும் போதுமட்டும் தான் :unsure:

சயீவா அப்பிடியே உங்க திருவுருவத்தையும் இங்கு போட்டு விடுங்க......அப்பத்தானே மகளிர் அணி அடையாளம் கண்டு சாத்த முடியும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்

தெரிஞ்சதை எழுதினால் இங்க மட்டுறுத்தினர்மார் பரவசப்பட்டுடுவினம்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் முனியாரே!

அது தேன் பூச்சு இல்லை தேனீ....

திட்டுத் திட்டா வீங்கி ஆதி பட்ட வேதனையைச் சொல்லி மாளாது. :unsure:

ஆசிரமத்திற்கு வாரதோ..... வேண்டாம்டா சாமி.

எனக்கென்டாலும் தேனீதான் கொட்டிச்சு.....

உம்மை ஆசிரமத்தில வச்சு கரடிகள் உருட்டி உருட்டி நக்குவதாகக் கேள்விப்பட்டன் உண்மையோ முனி? :wub::lol::)

அதெப்படி...... தேனில் குதித்து நீச்சலடிக்கவும் ஆசிரமத்தில் படிப்பிக்கிறீரோ? :unsure:

அதற்காக தனி வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறேன் ஆதீ தேனில் குளிப்பது எப்படி என்று ஆனால் என்னை தேடி நிறைய தேனீகள் வருகின்றன என்ன செய்யலாம்

ஓ கரடியோ அது நக்கு வதில்லை கடிக்கிறதாக்கும் உங்களுக்கு தெரியாததா என்ன நமக்கு இடைஞ்சல் கொடுப்பவர்களை ஒருக்கா கரடியிடம் கொடுத்து பின்பு பூசைக்கு எடுத்து கொள்வதுதானே இந்த ரகசியத்தையெல்லாம் வெளியில் சொல்லாதீங்கோய் ஆதீ

ஆதிவாசியின் ............. பக்கங்கள் நிறைய வீங்கியுள்ளதாக கேள்வி பட்டேன் அதனால் அவர் ..........அலைவதாக சற்று முன் தெரியவந்தது ஜயோ பாவமே

Edited by muneevar

  • 2 months later...

உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்

தெரிஞ்சதை எழுதினால் இங்க மட்டுறுத்தினர்மார் பரவசப்பட்டுடுவினம்..! :wub:

ஹிஹி :wub: நல்ல பகிடி டங்குவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Before the marriage:

He: Yes. At last. It was so hard to wait.

She: Do you want me to leave?

He: NO! Don't even think about it.

She: Do you love me?

He: Of course!

She: Have you ever cheated on me?

He: NO! Why you even asking?

She: Will you kiss me?

He: Yes!

She: Will you hit me?

He: No way! I'm not such kind of person!

She: Can I trust you?

He: Yes.

Now after the marriage you can read it from below to up!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு. நெடுக்கை இந்தப்பக்கம் காணவில்லையே :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க எதக்கன்டு பரவசமடையிறது பென்களைப்பார்த்தாலே இப்ப பயமாக்கிடக்கு இதில நாங்கள் எங்க பரவசம் அடையிறது எங்க எங்களைக்கொண்டுபோய் பாதாளத்தில விழுத்திடுவாங்களோ (இவன் சின்னப்பிள்ளையா என்டெல்லாம் கேடகக்கூடாது) என்டுதான் பயமாக்கிடக்கு. சரி பார்ப்பம் ம் இனியும் பரவசத்த எப்ப பார்க்கிறது ம் இங்க பரவசத்தை பார்த்தாக்கள் கனபேர் இருக்கினம் சொன்னா நாங்களும் கொஞ்சம் றை பன்னலாமெல்ல

நல்ல தலைப்பு. நெடுக்கை இந்தப்பக்கம் காணவில்லையே :)

முதல்ல நீங்கள் சொல்லுங்கோ பேந்து நெடுக்கிட்டபோவம் நீங்களும் பரவசமடைஞ்சனியலா

சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

அழகையா ஓங்கி நாலுஅப்அப்பனாத்தான் சரி

காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...

அடப்பாவி தொலைஞ்சது சனியன் என்டு போன்நம்பரை மாத்திடுவமெல்ல

Edited by புஸ்பாவிஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தலைப்பு ஆனா பதில் தான் தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

பரவசம்னா என்னங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு. நெடுக்கை இந்தப்பக்கம் காணவில்லையே :unsure:

வர வேணாம் என்று தான் பார்த்தன்.. விடமாட்டியலே.

பரவசம்னா என்னங்கோ

ஊரில பெண்கள் சாமி ஆடுவினம்.. உங்க பெண்கள் வைன்.. பியர் குடிச்சிட்டு ஆடிவினம்.. அது. :D

-----------

என்ர அனுபவத்தைச் சொன்னால் பரவசம் என்றதை விட ஊரில நம்மட அண்ணமார் சொல்லுற கிளுகிளுப்பு என்ற பதம் தான் நல்லது என்று நினைக்கிறன்.

நான் யுனில முதலாம் ஆண்டு (போன புதிசு) படிக்கேக்க... சிங்களப் பெட்டை ஒன்று படிச்சது. அது கண்டியில இருந்து கொழும்புக்கு வாறது. ஏல் கொழும்பில படிச்சது என்ற படியால். அந்தப் பெட்டை நல்ல அழகு. அவள் கூட கதைக்கவே ஒரு சிங்களக் கூட்டம் அலையும். ஆனால் அவள் பெரிசா கதைக்கிறதில்லை.

நான் இரசாயனவியல் பிரக்டிக்கல் போக.. அந்தப் பெட்டையும் எங்கட (4 பேர் ஒரு குறூப்பில) குறூப்பில வந்து சேர்ந்திச்சு. அந்த நாலு பேருக்கையும்.. சோடி சோடியா பிரிச்சு வேற விட்டாங்க.. . அந்தப் பெட்டையை என் கூட சோடி சேர்த்துவிட்டாங்க. (நான் சேர்ந்த முதற் சோடி... ஏனென்றால் நான் ஆண்கள் பாடசாலையில படிச்சிட்டு.. யுனிக்குப் போனனான் எல்லோ)

ஆரம்பத்தில ஆகா ஒரு அழகான பெட்டை நம்ம குறூப்பில இருக்கே.. என்று ஒரே கிளுகிளுப்புத்தான். அவள் கிட்ட வந்து கதைச்சா கிளுகிளுப்பு.. அவளுக்கு நீண்ட கூந்தல் அது பறந்து முட்டினா கிளுகிளுப்பு.. போட்டிருக்கிற சட்டை முட்டினா கிளுகிளுப்பு.. தற்செயலா கை முட்டி.. உடல் உரசுப்பாட்டா.. அவளோ.. நானோ "சொறி" கேட்டால் கிளுகிளுப்பு..(கவனிக்கவும்.. நானே அவளோ.. வேண்டும் என்றெல்லாம் முட்டுறதில்ல)..மிகவும் ஆரம்பத்தில் அவள் சிரிக்கிறதே ஒரு கிளுகிளுப்பு..பின்னர் அது மறைஞ்சிட்டுது.. உதுகளில கவனம் செலுத்தப் போய்.. அவள் மெசரிங் சிலிண்டரை உடைக்க நான் குறுசிபிளை உடைக்க.. அதுக்கு தண்டம் கட்டி...ஐயோ ஐயோ பட்டபாடு.

அதுமட்டுமா.. ஆண் demonstrators பார்வையெல்லாம் நம்ம குறூப் மேல. ரெம்பக் கஸ்டமாப் போச்சுது. சுத்துமாத்தும் பண்ண ஏலாது...

சரியென்று.. பிரக்டிக்கல் செய்து முடியுற கட்டத்தில.. எல்லாரும் அவரவர் பெற்ற செய்முறை முடிவு மாதிரிகளை கையளிக்க வேணும். ஆரம்பத்தில பொதுவா சேர்ந்து செய்தாலும்.. இறுதிக்கட்டத்தை தனித்தனியதான் செய்யனும். ஆனால் அந்தப் பெட்டைக்கு றிசல்ட் சரியா வரல்ல. அது எங்கிட்ட வந்து உண்ட விடை மாதிரில கொஞ்சத்தத் தா என்றாள்.

அப்பதான் நான் விழிச்சுக் கொண்டன். அடிபாவி.. என்னை மாட்டிவிடுற பிளான் என்று. சரி.. இவளுக்கு என்ன செய்யலாம்.. கெல்ப் பண்ணுறதாயும் இருக்கனும்.. பிடியும் படக்கூடா.

பின்ன என்ன செய்தன்.. பிரக்டிக்கல் மேசையில படிஞ்சிருந்த ஊத்தையை சுரண்டி.. என்ர மாதிரி கொஞ்சத்தில கலந்து போட்டு அவளிட தலைல கட்டிவிட்டன். பாவமாத்தான் இருந்திச்சு. அவளும் சொன்னாள் பறவாயில்லை தா என்று.

பிறகு பார்த்தா.. அந்த மாதிரிக்கும் 10க்கு 7.5 .. எனக்கு 10 க்கு 8... எப்படி இருக்கும். ஒரு 0.5 தான் வித்தியாசம்.

அந்தப் பிராக்டிக்கலே.. ஆரம்பம் முதல் ரிப்போட் எழுதிக் கையளிக்கிறது வரை.. ரெம்ப கிளுகிளுப்பா இருந்திச்சு. அப்புறம் கண்டால் எல்லாம் கதைப்பாள். ஆனால்.. இறுதியில சோ சாட்.. கட்டுநாயக்கா அடியோட அவள் என்னைக் கண்டாலும் சிரிக்கிறது கூட இல்ல..! அதுவும் ஒரு இழப்புத்தான்.. கட்டுநாயக்கா தாக்குதலால எனக்கு ஏற்பட்டது. :D

இது ரகசியம். வீட்டுக்கே தெரியாத சங்கதி. (யுனில என்ன நடந்தாலும் நான் அம்மாவிடம் சொல்லிடுவேன். ஆனால்.. இதையெல்லாம் சொல்லேல்ல) உங்களுக்கு சொல்லுறன். ரகசியம் காக்கவும்.. ம்ம்ம் செய்வியள் செய்வியள்..! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இவ்வளவு விசயம் நடந்திருக்கா இத யாருட்ட சொல்லுவம்? :D

ஆதியையும் காணல்ல ,டங்குவாரையும் காணவில்லை :unsure:

அது சரி அந்த சிங்கள பெண் கோபத்தில கந்தகத்தை கொழுத்தி போட்டிருந்தா நம்ம நெடுக்ஸ்சின் கெதி ?? :D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரவசம்னா என்னங்கோ

இதத்தான் நானும் கேற்கிறன் எனக்க கடுப்பாயெல்ல இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இதத்தான் நானும் கேற்கிறன் எனக்க கடுப்பாயெல்ல இருக்கு

புஸ்.. நீங்கள் எப்பவாவது விபத்தில் சிக்கி நினைவிழந்து இருந்திடுக்கிறீங்களா. ஏன்னா அப்படியானவங்களுக்கு.. இப்படியான சின்னச் சின்ன உணர்வுகளை மூளை உணராமல் போகலாம்..! :D:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புஸ்.. நீங்கள் எப்பவாவது விபத்தில் சிக்கி நினைவிழந்து இருந்திடுக்கிறீங்களா. ஏன்னா அப்படியானவங்களுக்கு.. இப்படியான சின்னச் சின்ன உணர்வுகளை மூளை உணராமல் போகலாம்..! :D:unsure:

அடப்பாவி கடைசியில என்னப்போய் அவனோட சேர்த்துப்போட்டியல் அதில நான் புலி என்னத்த செய்யுறது எங்க இப்படி புருவத்தில சாஞ்சு போட்டு முதுகில குத்திடுவாளவேயோ என்டு தான் பெரிய பயமாக்கிடக்கு முந்தியென்டால் ஓரளவுக்கு நம்பலாம் ஆனா இப்ப படுமோசமெல்ல பாப்ம் எங்களுக்கும் பரவசம் வரத்தான வேனும்.

நெடுக்ஸ் நீங்கள் நிகனக்கிற ஆள் நான் இல்ல :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.