Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து நாட்களுக்கு ஒரு ஆயுதக்கப்பலை சிறிலங்காவுக்கு அனுப்ப பாகிஸ்தான் இணக்கம்: கொழும்பு ஊடகம்

Featured Replies

வரும் மாதங்களில் பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைப் படைகளுக்கு தேவையான ஆயுதத் தளபாடங்களைத் தவறாது அனுப்பி வைப்பதற்கு இலங்கைக்கு உறுதியளித்துள்ளது பாகிஸ்தான்.

கொழும்பு ஆங்கில வார ஏடோன்றில் இவ்வாறு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த வார இதழில் மேலும் தெரிவித்திருக்கும் சில தகவல்கள் வருமாறு :-

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்குகின்றது.

இராணுவ நடவடிக்கைக்கு அவசியமான பொருட்களுடன் கப்பல்கள் கொழும்பிற்கும் கராச்சிக்கும் இடையில் அடிக்கடிப் பயணிக்கின்றன.

பாகிஸ்தான் தனது ஆயுதத் தளபாட தொழிற்சாலைகளிலிருந்தும் தனது இராணுவத்தின் சேமிப்புக் களஞ்சியங்களிலிருந்து இலங்கைக்கு அவசியமானவற்றை வழங்குகின்றது.

மேலும் இலங்கைக்கான தனது உறவின் ஆழத்தைப் புலப்படுத்துவதற்காக எதிர்வரும் மாதங்களில் இராணுவ நடவடிக்ககளுக்கு அவசிமான பொருட்களுடன் பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைக்கு அனுப்பி வைக்க இஸ்லாம்பாத் உறுதியளித்துள்ளது.

இவ்வாறான உறுதிமொழியும், வலுவான ஆதரவுமே இவ்வருட இறுதிக்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றி விடுவோம் என்று அரசு அறிவிப்பதற்குக் காரணமாக அமைந்துள்னன.

இலங்கை இராணுவத் தளபதிக்கும் பாக். முப்படைத் தளபதி அஸ்வக் பேர்வெஸ் கயானிக்கும் இடையில் தனிப்பட்ட நட்புறவு காணப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கை படைகளுக்கு உடனடியாக விநியோகம் தேவைப்பட்ட வேளை அவர் அவற்றை வழங்க முன்வந்தார்.

இலங்கைக்கு அவரசமாகத் தேவைப்பட்ட இராணுவத் தளபாடங்களை உற்பத்தி செய்து வழங்குவதற்குச் சில் காலம் பிடிக்கும் என்பதால், அதுவரை காத்திருக்காமல் உடனடியாக அவற்றை விநியோகிக்கும் நோக்கில், பாக். இராணுவத்திற்கு எழக்கூடிய பாதிப்பையும் புறமொதுக்கி, அதன் சேமிப்புக் களஞ்சியங்களில் இருந்து அவற்றை எடுத்து வநியோகிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். என்றும் கூறப்பட்டுள்ளது.

நன்றி : சுடர் ஒளி

இலங்கைக்கு அவரசமாகத் தேவைப்பட்ட இராணுவத் தளபாடங்களை உற்பத்தி செய்து வழங்குவதற்குச் சில் காலம் பிடிக்கும் என்பதால், அதுவரை காத்திருக்காமல் உடனடியாக அவற்றை விநியோகிக்கும் நோக்கில், பாக். இராணுவத்திற்கு எழக்கூடிய பாதிப்பையும் புறமொதுக்கி, அதன் சேமிப்புக் களஞ்சியங்களில் இருந்து அவற்றை எடுத்து வநியோகிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நகைச்சுவைக்கு கவுண்டரும் வடிவேலுவும் பிச்சை எடுக்கவேண்டும். :rolleyes::o:D

இது போன்ற அறிக்கைகள், சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளில் சில கோமாளிகள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

புலிகள் நிச்சயம் வெல்வார்கள் என்ற நம்பிக்கையை மேலும் உறுதி செய்கிறது

அவர்கள் மனோதத்துவ போர் செய்கிறார்களாம்! நாம் எல்லாம் மடையர்களாம்!! :lol:

Edited by vettri-vel

உதைப்பாத்திட்டு இந்தியாவும் 5 நாளைக்கு ஒரு கப்பல் வீதம் ஆயுதங்கள் அனுப்பி உதவி செய்யப் போகுது. அதைப் பாத்து கருணாநிதி கவிதை எழுதப் போறார்.

மீண்டும் மீண்டும் இலங்கை இந்தியாவுக்கு ஆப்பு வைத்துக்கொண்டே இருக்கின்றது இதை புரிந்து கொள்ளாத இந்திய கொள்கை வகுப்பளர்கள் நீங்கள் இலங்கை அரசால் முட்டாளாக்கப்ப்டுகிறீர்கள் என்பதை எத்தனை தரம் சொல்வது இந்தியாவுடன் சீபா உடன் படிக்கை வேண்டாம் ஆனால் பாக்கிஷ்தானுடன் சீபா உடன் படிக்கை வேண்டும் , சீனாவுடன் தீவிரமான வர்த்தக உறவு.

பாக்கிஷ்தான் அரசும் ஐ.எஷ்.ஐ யும் இரு துருவங்கங்களான அமேரிக்கவையும் சீனாவையும் எவ்வாறு கையாண்டதோ அதே பாணியில் இலங்கையும் அந்த முறையை பின்பற்றுகின்றது ஆனால் உங்கள் இந்திரா ராடார் பற்றி நீங்கள் அறிந்ததை விட பாக்கிஷ்தானும் சீனாவும் அறியும்...நீங்கள் தமிழ் மக்கள் பக்கம் செல்ல மாட்டீர்கள் என்ற துணிவுடன் இலங்கை அரசு ஆடும் ஆட்டத்தை நீங்கள் வெறுமனே ஆப்பிளந்த குரங்காக பார்த்துக்கொண்டிருப்பதை விட கடந்த கால கசப்புணர்வுகளை விட்டு விட்டு தமிழர் தரப்புடன் கூட்டு சேர்ந்து தெற்காசியப்பிராந்தியத்தை உலகமே திரும்ப்பிப்ப்பார்கும் வண்ணம் அபிவிருத்தி செய்யலாம் உங்களுக்கு வட கிழக்கில் முதலீடு செய்ய வாய்ப்பு தரப்படும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உளைப்போம் நாம் ஒன்று சேர்ந்தால் அதனுடைய வளர்ச்சி சில தேசங்களுக்கு பிடிக்காது அதனாலே பிரச்சனை தான் நீங்களும் சரி நாங்களும் சரி இலங்கையில் நடைபெறும் யுத்தத்திற்காக எவ்வளவு செலவளிக்கின்றோம் இதை நாம் பொருளாதார எழுச்சிக்கும் மக்களுடைய அடிப்படை வசதிக்கும் செலவளிக்க முடியும் இலங்கை யுத்தம் தீராமல் உங்கள் சேதுக்கால்வாயாலும் கூட அவ்வளவு வெற்றிகிடைக்காது

நான் சொல்வதை இந்திய உயர்மட்டக்ட்திற்கு முடிமானால் யாழ் களத்தை நோட்டமிடும் இந்திய புலனாய்வாளரை கேட்டுக்கொள்கிறேன்

நீங்கள் தினமும் அனுப்பும் அறிக்கையில் இதை சேர்துக் கொள்ளுங்கள்

இப்படிக்கு

தராக்கி

முசாரப் இராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு - Musharraf to resign

ஆதாரம் : http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கி நீங்கள் கொத்து கொத்தாக எழுதினாலும் சரி அல்லது பந்தி பந்தியாக எழுதினாலும் சரி

அங்குள்ள சில நாரதர்களுக்கு விளங்காது விளங்கவும் மாட்டாது

ஆப்புக்கு மேல் ஆப்பு வைத்திருக்கும் இலங்கை ஒரு நாள் இறுக்கிவிடும் இந்தியாவை பாருங்கள்

அன்று தின்னவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் போதே விளங்கும்

இந்த எலங்கையை பற்றி

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: இந்தியாவுக்கு இலங்கை வைக்கும் ஆப்புக்கள் தெரியாமலில்லை. ஆனால் ஈழத்தமிழரை அளவுக்கதிகமாக இந்தியா பகைத்துக்கொண்டு விட்டது. அதனால் மீண்டும் எம்முடன் நட்புப் பாராட்ட முடியாது. இப்போதைக்கு இந்தியாவுக்கு நெருக்கமானவர்களாகத் தெரிவது சிங்களவர்தான். ஆகவே அது தொடர்ந்தும் தனது உதவிகளையும், ஒத்தாசைகளையும் சிங்களத்துக்கு வழங்கி வரும்.அதுமட்டுமல்லாமல் இந்திய வெளியுறவுக் கொள்கையை முன்னின்று செயல்படுத்தி வருபவர்கள் ஈழத் தமிழருக்கு எதிரான கடும்போக்குடைய நாராயணன்கள். ஆகவே இப்போதைக்கு இந்தியாவின் ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் மாற்றம் வருமென்று எதிர்பார்க்க முடியாது.

இந்தியா 5 நாட்களுக்கு ஒரு கப்பல் வழங்கினாலும் ஒன்றுதான் அல்லது பாக்கிஸ்த்தான் 10 நாளுக்கு ஒரு கப்பல் வழங்கினாலும் ஒன்றுதான், வித்தியாசம் எதுவுமில்லை. நாம்தான் எமது தரப்பைப் பலப்படுத்த வேண்டும்.

5 நாட்களுக்கு 1 கப்பல் 10 நாட்களுக்கு 1 கப்பல் எண்டு 2 நாடுகளும் மாறி மாறி கொடுத்தா 3 கிழமையில குறைந்தது 6 கப்பலில வரும். பிறகு உதுகளை மோட்டுச் சிங்களவர் வன்னியில கொண்டுவந்து அகலக் கால்பரப்பி முன்னரங்குகளுக்கு கொண்டு வந்து வைச்சுக் கொண்டிருக்க அடி தொடங்க எல்லாத்தையும் விட்டுட்டுத்தானே சாறியை கட்டிக்கி கொண்டு ஓடப்போறாங்கள்.

ரணிலோடான சமாதான காலத்தில கூட உந்தளவுக்கு புலிகள் கப்பலில (நன்றி ப தெய்வீகன்) ஆயுதங்கள் கொண்டுவந்து இறக்கியருப்பார்களா? அதாவது 3 கிழமைக்கு 6 கப்பல்கள் எண்ட கணக்கில என்பது சந்தேகமே? ஆனபடியா நடப்பது எல்லாம் நன்மைக்கே.

கருணாவை பற்றி கணிக்கிற, கணக்கு எடுக்கிற ஆயுத்தையும் பாக்கிஸ்தானிலை இருந்துதான் அரசாங்கம் உந்த கப்பல்களிலைதான் வாங்கி இருக்குமோ...??

  • 1 month later...

பத்து நாட்களுக்கு ஒரு ஆயுதக்கப்பலை சிறிலங்காவுக்கு அனுப்ப பாகிஸ்தான் இணக்கம்: கொழும்பு ஊடகம்

[புதன்கிழமை, 24 செப்ரெம்பர் 2008, 07:05 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்]

எதிர்வரும் மாதங்களில் வன்னிப்பெரு நிலப்பரப்பில் மோதல்கள் தீவிரமடையும் அறிகுறிகள் தோன்றியுள்ள நிலையில், சிறிலங்கா படையினருக்கு பத்து நாட்களுக்கு ஒரு ஆயுதக்கப்பலை அனுப்ப பாகிஸ்தான் இணங்கியுள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

எதிர்வரும் மாதங்களில் ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒவ்வொரு ஆயுதக்கப்பலை அனுப்புவதற்கு பாகிஸ்தான் இணக்கம் தெரிவித்துள்ளது.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பாகிஸ்தான் சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகளை அதிகரித்துள்ளது.

சிறிலங்கா படையினர் மிகவும் செறிவான சூட்டாதரவுடன் படை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதனால் அதிகளவான ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அதனை ஈடுசெய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

சீனா, பாகிஸ்தான், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களை பெற்று வருகின்றது.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பென்சேகாவுக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பக் பெர்வஷ் கஜானிக்கும் இடையில் நடைபெற்ற தனிப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்தே பாகிஸ்தான் இதற்கு இணைங்கியுள்ளது.

தொழிற்சாலைகளில் இருந்து ஆயுதங்களை அனுப்புவதற்கு காலம் எடுக்கும் என்பதனால், தமது படையினரின் சேமிப்பில் உள்ள ஆயுதங்களை சிறிலங்காவுக்கு அனுப்புவதாக கஜானி தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினர் யாழ். குடாநாட்டில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த போது பாகிஸ்தான் பல்குழல் உந்துகணை செலுத்திகள் மற்றும் ஆயுதங்களை சிறிலங்கா அரசிற்கு வழங்கியிருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

நாம் 10 நாட்களுக்கு ஒரு கோவில் திருவிழா நடத்தி எமது தரப்பை பலப்படுத்துவோம். அனைத்து பக்த கேhடிகளும் திரண்டு வாரீர்.

A5XSFx7W.gif

-உதயன் -

:lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.