Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா திவாலாகி விட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்கட்டுரை போய்ச் சேருவதற்கு உதவி செய்ய முடியும்.

………………………………………………

அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.

கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.

தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.

ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.

அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.

எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். “ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக” ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.

“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.

திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் ‘மக்கள் பிரதிநிதிகள்’ ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.

அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். “தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா..” என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். “குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!” என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள். வால் ஸ்ட்ரீட் வங்கிகளின் நெடிதுயர்ந்த கட்டிடங்களில் அமெரிக்க மக்களின் முழக்கம் மோதி எதிரொலிக்கின்றது ‘முதலாளித்துவம் ஒழிக!’

•••

இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். “கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்…” (நாணயம் விகடன், அக்15)

எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.

அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை ‘நெருக்கடி’ என்று கூறுகின்றது முதலாளித்துவம்.

வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி’ தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 100 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். 2003 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வங்கிக் கடன்களின் சரிபாதி அடமானக்

இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.

“வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்” என்று முடிவு செய்தார்கள்.

ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.

நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். ‘ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். தயங்கியவர்களிடம், ‘10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்’ என்று ஆசை காட்டினார்கள். ‘வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்’ என்று வலையில் வீழ்த்தினார்கள். ‘அதுவும் கஷ்டம்’ என்று மறுத்தால், ‘பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்’ என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.

இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் ‘கடன் வேண்டுமா?’ என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல ‘வீடு வேண்டுமா?’ என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.

ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. ‘விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்’ என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.

ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. ‘ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ’ என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.

விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் ‘வீடு வேண்டாம்’ என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.

•••

இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?

ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதே

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இங்கு தோற்றது

அமெரிக்காவோ அல்லது மேற்குநாடுகளோ அல்ல

முதலாளித்துவமே தோற்றுள்ளது???

வீடமைப்புக்கடன் நெருக்கடி (பகற்கொள்ளை), பங்குவர்த்தகம் (சூதாட்டம்), அமெரிக்க அரசு நிதி உதவி (மோசடி) போன்ற அண்மைய நாட்களில் மிகவும் பிரபலமான சொற்களுக்கு இடையிலான தொடர்பையும் அதன் பின்புலத்தையும் வணிகவியலில் பாமரனான எனக்கு புரியும்படி சொல்லித்தந்த கட்டுரையாளருக்கு நன்றிகள்.

இருந்தபோதிலும் முதலீடுகள், பங்குபரிவர்த்தனைகள் தனியே வீடமைப்புக்கடனில் மட்டும் கொட்டப்படவில்லை, அவை இலகுவில் ஆட்டம்காணாத தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் முதலிடப்பட்டுள்ளதால், எப்படியும் இன்று தடக்கி விழுந்த அமெரிக்க முதலாளி தட்டுத் தடுமாறி எழுந்து மீண்டும் தொழிலாளிகள் தலையில் உரமா மிளகாய் அரைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

ஒரு காலத்தில் சேவியத் ஒண்றியம் தடம் பிரட்டிய அனுபவத்தை கொண்டு இருந்த அமெரிக்கர்கள் தாங்கள், தங்களின் கொள்கைகளை உள் நாட்டுக்குள் செய்ய வெளிக்கிட்டு தடம்புரண்டார்கள் எண்றும் சொல்ல முடியும்...

இன்னும் சொன்னால் ஏக போக பெரியண்ணன் தனத்தை பலரோடு பங்கு போட வேண்டிய நிலைக்கு போகிறார்கள்....!!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மற்றும் அவர்களின் வால் பிடிகளின் பொருளாதாரம்.. அவர்களாலேயே பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளதே தவிர... வேறேதும் நடக்கவில்லை.

இவர்கள் இப்படிச் செய்து கொண்டிருக்கும் அதேவேளை.. ரஷ்சியாவோ.. ஏவுகணைச் சோதனை செய்து கொண்டிருக்கிறது..! :rolleyes:

இந்த அமெரிக்ாவை நம்பி அங்கு முதலீடு செய்த பல வெளிநாடுகளுக்கும் அமெரிக்கா நாமம் போட்டுவிட்டது. உதாரணம் சுவிசின் மிகப்பெரிய வங்கியான UBS வங்கி அமெரிக்காவில் கடனாக கொடுத்த பல மில்லியன் டாலர்களை அறவிட முடியாமல் இழந்து மிகப்பெரிய நட்டத்தை அடைந்துள்ளது.

puspaviji அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்: ஒரு செய்தியை இணைக்கும் போது அது எடுக்கப்பட்ட தளத்தின் முகவரியையும் இணையுங்கள். அதுதான் பண்பு.

Edited by Vasampu

U.K. Used Anti-Terrorism Law to Seize Icelandic Bank Assets

By Kitty Donaldson and Gonzalo Vina

Oct. 9 (Bloomberg) -- Chancellor of the Exchequer Alistair Darling used anti-terrorism rules to take control of assets held in Britain by a troubled Icelandic bank.

Darling stepped in to protect deposits made by U.K. residents in Reykjavik-based Landsbanki Islands hf, which the government of Iceland seized yesterday. About 300,000 U.K. account holders held deposits at Landsbanki's Internet bank, Icesave.

``To protect U.K. economic interests the government has frozen the funds and financial assets held by Landbanksi,'' Stephen Timms, financial secretary to the Treasury, said in Parliament in London today.

Icesave yesterday blocked customers from accessing deposits at its online bank. The U.K. Treasury said it will guarantee all customer deposits at Icesave, even those above the Britain's 50,000-pound ($87,800) deposit protection plan.

The Treasury released a document to Parliament yesterday showing it used sections of the Anti-terrorism, Crime and Security Act 2001 to take control of the bank's assets, saying in the statement the bank's collapse may harm the U.K. economy.

``The reason we took this action which was extraordinary action was in order to protect the interest and to try to ensure there was money there for creditors and depositors in the U.K,'' Prime Minister Gordon Brown's spokesman, Michael Ellam, told reporters in London today. ``In the view of the chancellor there was clearly a potential systemic risk, and that is why the action was taken yesterday in relation to depositors.''

Lawmakers in Parliament's upper House of Lords today debated the new Counter Terrorism Bill. Some lawmakers have said the rules would curb the civil liberties by extending the time police can detain terrorism suspects without charging them for up to 42 days. The Lords vote on the plan on Oct. 13.

http://www.bloomberg.com/apps/news?pid=206...5c&refer=uk

Lost in Iceland: 1 billion from councils, charities and police

• More than 100 public bodies had money in collapsed banks

• Brown accuses Icelandic authorities of acting illegally

Gordon Brown last night branded Iceland's failure to guarantee British savings in its failed banks as "totally unacceptable and illegal", amid warnings that more than 100 local councils, police authorities and fire services have up to £1bn lost in its bankrupted system.

...

With no sign of Iceland being able to repay the money and councils lobbying ministers for reassurance that the cash would be recovered, Britain went on the offensive. "What happened in Iceland is completely unacceptable," said Brown. "I've spoken to the Icelandic prime minister, I have told him this is effectively an illegal action that they have taken. We are freezing the assets of Icelandic companies in the UK where we can. We will take further action against the Icelandic authorities where necessary to recover the money.

"The responsibility for this lies fairly and squarely with the Icelandic authorities, and they cannot simply default. The Icelandic authorities are responsible for this, and we are demanding the money is paid back to the local authorities, and we are prepared to consider all forms of action, including, as we did, attempting to freeze assets."

Geir Haarde, Iceland's prime minister, said he was surprised by Brown's remarks, and urged him to consider resolving the issue in the courts. The Treasury said it had no imminent plan for a wider move against Icelandic companies operating in the UK saying the only action taken so far was the freezing of the Landsbanki's estimated £7bn of UK assets.

The British government invoked the Anti-Terrorism Crime and Security Act 2001 to freeze the British assets of Landsbanki, something for which Brown refused to apologise, saying he had a responsibility to recover the assets in the most effective way possible.

Referring to the move, Haarde said: "I told the chancellor that we consider this to be a completely unfriendly act."

Asked if the financial crisis engulfing Iceland had become a diplomatic crisis with Britain, Haarde added: "I thought so for a few minutes this morning when I realised that a terrorist law was being applied against us. That was not very pleasant. I'm afraid not many governments would have taken that very kindly, to be put into that category."

...

http://www.guardian.co.uk/business/2008/oc...banking-iceland

தமது மக்களின் நலன் தேசியத்தின் நலன் என்று வந்துவிட்டால் இறைமை உள்ள அரசால் பல விடையங்களை செய்ய முடியும். 2001 பின்னர் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் மேற்குலக நாடுகளால் விடுதலைப்புலிகள் மீதும் தமிழர் தரப்பு மீதும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதும் அழுத்தங்களை போட மாத்திரம் பயன்படுத்தப்படவில்லை. தேவை வரும் போது மேற்குலகில் உள்ள ஒரு நாட்டின் மீதும் பிரயோகிக்கப்படுகிறது.

பயங்கரவாத சட்டங்கள் தடைகள் நிதி முடக்கங்கள் என்பன சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப தேவை கருதி தமது நலன்களை முன்னெடுக்க பயன்படுத்தப்படும் கருவிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க முதலாளித்துவம் வயிறுபுடைக்க உண்டதால் இப்போது வாந்தி எடுத்துள்ளது. அதை பார்த்தவுடன் அதன் கூட்டாளிகளும் வயிற்றைக்குமட்டி சத்தி எடுப்பார்கள். இதையெல்லாம் அள்ளி எடுக்க சில நாடுகள் வரிசையில் நிற்கும். கம்யூனிசம் அதைப்பார்த்து கைகொட்டி சிரிக்கும். உலகின் முதலாளித்துவ வல்லரசுகளின் கூட்டு சதியால் கம்யூனிசத்தை ஒரே இரவில் அவசர அவசரமாக தலைமுழுகிய எத்தனையோ நாடுகள் இன்று பிச்சா பாத்திரத்துடன் அலைகின்றன.

உண்மையில் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பங்குச் சந்தைகளும் அதன் மூலம் நடாத்தப்பட்ட ஊக வர்த்தகங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மற்றும் அவர்களின் வால் பிடிகளின் பொருளாதாரம்.. அவர்களாலேயே பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளதே தவிர... வேறேதும் நடக்கவில்லை.

இவர்கள் இப்படிச் செய்து கொண்டிருக்கும் அதேவேளை.. ரஷ்சியாவோ.. ஏவுகணைச் சோதனை செய்து கொண்டிருக்கிறது..! :lol:

அமெரிக்க மற்றும் அவர்களின் வால் பிடிகளின் பொருளாதாரம் தான் பாதிக்கப்பட்டுள்ளது என்று அல்ல :unsure: . உலகிலுள்ள அநேகமான எல்லா பங்கு வர்த்தகங்களும், ஏனைய வ்ரதகங்களும் அமெரிக்க Wall street இன் அடிப்படையிலேயே நடை பெறுகின்றன. எனவே அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணும்போது அது மற்றைய பொருளாதாரங்களையும் பாதிக்கும். உலகப் பொருளாதார வரலாற்றிலே அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் தளம்பும் போதே பாரிய பொருளாதார நட்டங்களும் வீழ்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன என்பது நான் படித்த மட்டில் விளங்கியது :lol: . கடைசியா இப்பிடியான் ஒரு நிலைமை 1989/1990ல ஜப்பான் விட்ட ஒரு பிழையால வந்தது..

கம்யுனிச நாடுகளான ரஷ்யா, சீனா போன்றவற்றின் பொருளாதாரங்களை எதிர்வு கூறுவது கடினம் ஆனாலும் என்னுடன் பல்கலையில் படிக்கும் பல சீன மாணவர்களின் கருத்துப்படி அங்கும் சில நிதி நிறுவனங்கள் பாரிய நட்டத்தினை அடைந்துள்ளன. ரஷ்சியா ஏவுகணைச் சோதனை செய்வதை மட்டும் வைத்து அதன் பொருளாதார நிலையை எதிர்வுகூற முடியாது. சீனா கூட விண்வெளிப்பயணத்தை நடத்தினது தானே.. ஏன் இலங்கை கூட எல்லரிடையும் பிச்சையும், அறா வட்டிக்குக் கடனும் வாங்கி ஆயுதங்களும் புது விமானங்களும் வாங்குறாங்கள். அதை பார்த்துப்போட்டு இலங்கயிண்ட பொருளாதாரம் நல்ல நிலையில இருக்கு எண்டு சொல்ல முடியுமோ.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கச்சா எண்ணை விலை உயர்வுக்கு மத்திய கிழக்கில உற்பத்தி காணாது.. அது இது எண்டு கனக்க காரணமெல்லாம் அமெரிக்காவில சொன்னாங்கள். இப்ப என்னடா எண்டால் விலை குறைஞ்சிட்டுது. ஆரும் உற்பத்தியை கூட்டின மாதிரியும் தெரியேல்ல. எல்லாம் களவாணிப் பயலுகள்..! :rolleyes:

ஏன் கண்ட படி கடன் பட்டு alberta பக்கம் வீடு வேண்டிப் போட்டியளே? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கண்ட படி கடன் பட்டு alberta பக்கம் வீடு வேண்டிப் போட்டியளே? :rolleyes:

போக மாட்டன்..! குழல் புட்டு, இடியப்பம் எல்லாம் கிடைக்காதாம்..! :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கச்சா எண்ணை விலை உயர்வுக்கு மத்திய கிழக்கில உற்பத்தி காணாது.. அது இது எண்டு கனக்க காரணமெல்லாம் அமெரிக்காவில சொன்னாங்கள். இப்ப என்னடா எண்டால் விலை குறைஞ்சிட்டுது. ஆரும் உற்பத்தியை கூட்டின மாதிரியும் தெரியேல்ல. எல்லாம் களவாணிப் பயலுகள்..! :D

உண்மை தான் டங்குவார் , இங்கும் எரிபொருளின் விலை மிக குறைந்து விட்டது .

இது வரை எரி பொருளின் மூலம் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் . :o

உலகமயமாக்கலின் மூலம் பொருளாதர வல்லரசாக மாறிவரும் சீனா போன்ற நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி உலக பொருளாதரத்தின் சாவியை மேற்குலகின் பைக்குள்ளேயே வைத்திருக்க அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஆடும் ஒரு பொருளாதர சித்து வேலையே தற்போதைய உலகப் பொருளாதர நெருக்கடி என்னும் நாடகம்.

இதைத் தவிர வேறொன்றும் இல்லை!!!

மேற்குலக நிதி நிறுவனங்கள் ஊடாக நிதிவர்த்தகத்திலும் (Money Market) பங்குச்சந்தையிலும் (Equities & Futures) முதலீடுகள் செய்துள்ள பல ஆசிய நாடுகளின் முதலீடுகளின் உண்மை பெறுமதி இதன் மூலம் விழுங்கி ஏப்பம் விடப்படும். அவ்வளவு தான். தோல் இருக்க சுளை விழுங்கும் பொருளாதர சித்து வேலைகளில் மேற்குலகின் அனுபவமும் திறமையும் இன்னும் எவருக்கும் வரவில்லை என்பதே உண்மை

Edited by vettri-vel

மாயைப்பணத்தை நம்பி கடன் பெற்றவர்கள் இன்று நடுத்தெருவில்... முதலாளித்துவத்தின் முடிவே பொதுவுடமையின் ஆரம்பம்.....

இங்கு ஒஸ்ரேலியர்கள் புலம்பதொடங்கிவிட்டார்கள்

இந்தக் கட்டுரை

புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது

அதை நாங்கள் எங்களுடைய வினவு தளத்தில் சிறு முன்னுரையுடன் வெளியிட்டிருந்தோம்.

இங்கே அதை வெளியிட்டவர்கள் 'புதிய கலாச்சாரம் ' மற்றும் 'வினவு' பெயர்களை குறிப்பிடவில்லை.

கட்டுரையின் இறுதியில் அதை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் அந்த கட்டுரைக்கு வந்த மறுமொழிகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்

http://vinavu.wordpress.com/அமெரிக்கா

நன்றியுடன்

வினவு

நன்றிகள் பல புஸ்பா விஜி.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா திவாலான செய்தியுடன் சேர்த்து இனி வரவிருக்கும் அந்நாட்டின் அதிபருக்கான தேர்தலையும் வைத்துப் பார்க்குமிடத்து, இப்போது சீர்கெட்ட பொருளாதார நெருக்கடி நிலையிலுள்ள அமெரிக்காவை ஒபாமாவின் தலையில் கட்டியபின் அவரின் நிர்வாகக் குறைபாடுகள் தான் நாட்டில் பின்னால் ஏற்படப்போகும் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று மற்றவர்கள் கூறுமளவுக்கு வைத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது உண்மையென்று ஆகுமிடத்து எதிர்காலத்தில் கறுப்பினத்தவர் எவரும் அதிபர் தேர்தலில் நிற்க நினைத்துக்கூட பார்க்க முடியாது.

அன்றும் இன்றும் அமெரிக்காவின் பலம் தமது தவறுகளை சுயவிசாரணை செய்து அதைப்பற்றி விவாதித்து தம்மைத்தாமே திருத்திக் கொள்ளும் பக்குவம். அபிவிருத்தியடைந்த நாடாக மாத்திரமல்ல ஏகப்பெரு வலராசாக இருக்க விரும்பும் நாட்டின் சமூகத்திற்கும் அதன் ஆழும் வர்க்கத்திற்கும் மிகவும் அத்தியாவசியமான பண்பு.

அமெரிக்க சாம்ராச்சியத்தை தெடர தக்க வைக்க தந்திரோபாய ரீதியில் பலப்படுத்த கிடைத்த 1 ஆவது சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுவிட்டது. அதற்கான 2 சந்தர்ப்பத்தை வென்றெடுப்பதை உறுதி செய்வதற்காக பரக் ஒபமா களமிறக்கப்பட்டிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அமெரிக்கா திவாலான செய்தியுடன் சேர்த்து இனி வரவிருக்கும் அந்நாட்டின் அதிபருக்கான தேர்தலையும் வைத்துப் பார்க்குமிடத்து, இப்போது சீர்கெட்ட பொருளாதார நெருக்கடி நிலையிலுள்ள அமெரிக்காவை ஒபாமாவின் தலையில் கட்டியபின் அவரின் நிர்வாகக் குறைபாடுகள் தான் நாட்டில் பின்னால் ஏற்படப்போகும் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று மற்றவர்கள் கூறுமளவுக்கு வைத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது உண்மையென்று ஆகுமிடத்து எதிர்காலத்தில் கறுப்பினத்தவர் எவரும் அதிபர் தேர்தலில் நிற்க நினைத்துக்கூட பார்க்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.