Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்: இந்திய மத்திய அரசு உத்தரவாதம்

Featured Replies

இலங்கைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்: இந்திய மத்திய அரசு உத்தரவாதம்

நீண்டகாலமாக இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியிடம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னைக்கு சென்று முதலமைச்சர் மு. கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஒர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல் இடம்பெறும் பிரதேசங்களில் அவதியுறும் அப்பாவி தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.சீ.ஆர்.சீ மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகிய சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 800 தொன் நிவாரணப் பொருட்களை இந்திய மத்திய அரசு அனுப்பி வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மக்களும் இலங்கைத் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க முடியும் என பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மகிழ்ச்சியடையும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாந நீடித்து வரும் பிரச்சினைக்கு சில தினங்களில் முடிவு காண முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து முடிவெடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

www.tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞருக்கு கொடுக்கப்பட்ட வாழைப்பழம்

இலங்கை அரசுக்கு கொடுப்பாங்களாம் ஆயுதம் இடம் பெயர்ந்தமக்களுக்கு கொடுப்பாங்களாம் உணவு இவனுகள் கொடுக்கிறதாலதான் அவனுகள் அடிக்கானுகள் என்று தெரியாமால் போய்விட்டது அந்த பிற நாப்புக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசுக்கு இந்தியா செய்துவரும் ஆயுத மற்றும் ஆள்வள உதவியை முதலில் நிறுத்தட்டும் அப்புறமா இனப்பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாமா என்று யோசிக்கலாம்.

மத்திய அரசு வைக்கிது வெத்து வேட்டு கொடுக்கிது அல்வா.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தை?

யாருடன்? இந்திய அடி வருடிகளான டக்கி இலையான் போன்றோருடன். தீர்வில் கட்டாயம் இறையாண்மை என்ற பதம் இருக்க வேணும் என்பது நிபந்தனையாக இருக்கும்.

நாங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். அரசியல் வாதிகள் சொல்வது செய்வது எல்லாத்தயும் ஒரு குப்பையில் போட்டு விட்டு புலிகளைப் பலப்படுத்த வேண்டியது தான். இதை விட்டுப் போட்டு சிலர் கவிதை வரைவதும் பழைய கவிதையைக் கிண்டியெடுத்து மீள இணைப்பதும் வாந்தி தான் வருகுது!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்: இந்திய மத்திய அரசு உத்தரவாதம்.இப்படித்தான் நெடுகச் சொல்லுறாங்கள்.அப் ஏனாம் ஆயுத உதவி செய்கினம்.அதை வைச்சு எப்படி பேசுறது.

இப்ப பேச்சுவார்த்தை எல்லாம் ஆயுதங்கள் மூலம்தான் பேசப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தை?

யாருடன்? இந்திய அடி வருடிகளான டக்கி இலையான் போன்றோருடன். தீர்வில் கட்டாயம் இறையாண்மை என்ற பதம் இருக்க வேணும் என்பது நிபந்தனையாக இருக்கும்.

நாங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். அரசியல் வாதிகள் சொல்வது செய்வது எல்லாத்தயும் ஒரு குப்பையில் போட்டு விட்டு புலிகளைப் பலப்படுத்த வேண்டியது தான். இதை விட்டுப் போட்டு சிலர் கவிதை வரைவதும் பழைய கவிதையைக் கிண்டியெடுத்து மீள இணைப்பதும் வாந்தி தான் வருகுது!

இப்ப பேச்சுவார்த்தை எல்லாம் ஆயுதங்கள் மூலம்தான் பேசப்படுகின்றன.

பலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும்

நாம் முடிவெடுத.துவிட்டால்.................

எந்த அரசியல்வாதியும் எமக்கு ஒரு பொருட்டல்ல

ஒன்றாகுவோமா........

ஒருமைப்படுவோமா...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றுவரை யுத்தம் மூலமே இனப்பிரச்சனையை தீர்க்கலாம் என சொல்லி வந்த இந்தியா கலைஞரின் ராசதந்திரத்தின் முன் அடிபணிந்து - பேச்சுமூலமே தீர்வு என சொல்லியிருக்கிறது.

வாழ்க தமிழர்

வளர்க அவர்தம் புகழ்

அல்வா கிண்டி கொடுத்து விட்டார்கள். இப்படி நடக்கும் என்று தெரிந்ததுதானே. எங்களின்ர சூட்டில அவர்கள் குளிர்காய்ந்தாலும் நாங்கள் விடுதலை நெருப்பை அணைய விட முடியாது பாருங்கோ. வலியும் வலிமையும் எங்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். நமது செயற்பாடுதான் ஈழத்தின் திறவுகோல். அதன் வடிகாலாக வேண்டுமெனில் தமிழகம் இருக்கட்டும்.

நேற்றுவரை யுத்தம் மூலமே இனப்பிரச்சனையை தீர்க்கலாம் என சொல்லி வந்த இந்தியா கலைஞரின் ராசதந்திரத்தின் முன் அடிபணிந்து - பேச்சுமூலமே தீர்வு என சொல்லியிருக்கிறது.

வாழ்க தமிழர்

வளர்க அவர்தம் புகழ்

என்ன எப்போ இந்தியா சொன்னது இராணுவ தீர்வு?

அப்பவும் சொன்னார்கள் இராணுவ தீர்வு சரி வராது என்று ஆனால் அப்போ சொன்னார்கள் ஆயுதம் கொடுக்கவில்லை என்று இப்போ சொல்கிறார்கள்

அயுத உதவி செய்வோம் ஆனால் பேச்சு மூலமே தீர்வு என்று கி கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.

அடுத்த செய்தி வரும்:

இந்தியா வந்திருக்கும் இலங்கை ராசதந்திர குளுவினரை இந்திய அதிகாரிகள் சந்தித்து கலைந்துரையாடியபின்னர், இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் சீலைதான் சத்தியமென்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான இந்திய உதவிகள் மற்றும் பயங்கரவாத ஒழிப்புப்பற்ரியும் கலந்துரையாடப்பட்டது.... பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவுமென உறுதிமொழியும் வழங்கப்பட்டது.

அத்துடன் எல்லாதமிழ் உறவுகளுக்கும் முனுக்கும் பின்னுக்குமக நன்கு நமம் பூசுவதற்கான முழு நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ.. முன்பு யுத்தம் மூலம் தீர்வென்று சொல்ல வில்லையா..

அப்ப என்ன... மயி........க்கு - ஏதோ புதுசா சொல்ற மாதிரி சொல்லுறார் முகர்சி

வன்னியில் பாதிக்கப்படும் மக்களிற்கான நிவாரணம் என்ற பெயரில் தென்னிலங்கையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு இந்தியா வழங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு கருணாநிதியின் பதிலும் மற்றைய தமிழக தலைவர்களினதும் பதில் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு கருணாநிதியின் பதிலும் மற்றைய தமிழக தலைவர்களினதும் பதில் என்ன ?

"கடைசி ஈழத்தமிழன் உயிர் வாழும் வரை குரல் கொடுப்பேன் எனது கதிரைக்காக" :lol::lol:

ஜெயலலிலதா அம்மையாரின் வாய்க்கு நல்ல தீனி கொடுத்துவிட்டார் முதல்வர். இனி அவர் மென்று தின்று ஏப்பம் விடப்போகின்றார். இன்னுமொரு இறுவட்டின் தேவை தற்போது ஏற்பட்டிருக்கின்றுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.