Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்காணிப்புத் திரைகளில் மண்ணைத்தூவிய வான் புலிகள்--என்ன நடந்திருக்கலாம் ஐரோப்பிய தொலைகாட்சி ஆய்வு

Featured Replies

மன்னார் தள்ளாடி மற்றும் கொழும்பு களனிதிஸ்ஸ ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 40 நிமிட இடைவெளியில் வான் புலிகள் துல்லியமான தாக்குதல் நடத்திய போதிலும், வான் புலிகளது வானூர்திகளில் ஒன்றுகூட சிறீலங்கா வான் படையினர், மற்றும் ஏனைய இடங்களிலுள்ள வான்காப்பு பொறிமுறைக்குள் சிக்கவில்லை எனவும்,

கண்காணிப்புத் திரையில் பதியப்படவில்லை எனவும் சிறீலங்கா படைத்தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவினால் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட அதியுயர் வலுக்கொண்ட முப்பரிமாண கண்காணிப்புக் கருவியான இந்திரா ராடரில்கூட வான் புலிகளின் வானூர்திகளின் அசைவுகள் பதியப்படவில்லை எனும் கருத்தை சிறீலங்கா வான் படையின் பெயர் குறிப்பிட்ட விரும்பாத உயரதிகாரி அதிகார் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பறப்பை மேற்கொள்ளும் வானூர்தியின் வேகம், பறப்பு நடைபெறும் கடல் மட்டத்திலிருந்தான உயரம், மற்றும் கண்காண்ப்புக் கருவியில் இருந்து பறப்பின் தூரம் என்பனவற்றை ஒருங்கே காண்பிக்கும் திறன் கொண்ட இந்தியாவின் இந்திரா வான் கண்காணிப்பு திரையில் புலப்படாது வான் புலிகளின் வான் பறப்பு எவ்வாறு இடம்பெற்றது என்ற குழப்பத்தில் தற்பொழுது சிறீலங்கா வான்படை இருக்கின்றது.

வான் புலிகளின் பறப்பின் ஒலியை வன்னிக் களமுனையிலுள்ள படையினர் இரவு 10:40 அளவில் அவதானித்ததாகக் கூறப்படுகின்ற போதிலும், வானூர்தி எங்கு செல்கின்றது என்பதை தாக்குதல் நடைபெறும்வரை சிறீலங்கா படைகளால் அனுமானிக்க முடியாமல் இருந்ததையும் படைத்தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

வவுனியா, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மற்றும் கட்டுநாயக்கா பொதுமக்கள் வான்தளம் மற்றும் வான்படைத் தளம் ஆகியவற்றில் விடுதலைப் புலிகளின் வான் பறப்பு பற்றிய தகவல்கள் பெறப்படாத நிலையில், விசாரணைகள் எதனையும் முன்னெடுக்க வழியின்றி மிகவும் இக்கட்டான நிலைக்கு விசாரணைகள் தள்ளப்பட்டுள்ளன.

நேற்றய தாக்குதலில் புலிகள் புதிய வானூர்திகள் எதையாவது பய்படுத்தியுள்ளனரா? இல்லை புதிய தொழில்நுட்பங்கள் ஏதாவது பரீட்சிக்கப்பட்டதா என்பது பற்றியே சிறீலங்கா படைகளின் ஆரம்ப விசாரணைகள் நகர ஆரம்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் இந்த மர்ம வான் பறப்பு பற்றி சில பௌதீகவியல் அறிஞர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

முப்பரிமாண கண்காணிப்பு கருவியான இந்திரா வான்காப்பு கருவி போன்றவை தெறிப்பு பொறிமுறைக்கு அமைவாக தமது கண்காணிப்பை மேற்கொள்பவை.

அதாவது பிரதான கண்காணிப்பு கருவியில் இருந்து பிறப்பிக்கப்படும் மின் அணுக்கதிர்கள் வான வெளியில் பறப்பை மேற்கொள்ளும் வானூர்தி மீது பட்டுத்தெறித்து மீண்டும் பிரதான கட்டுப்பாட்டறையில் உள்ள உள்வாங்கிகள் மூலம் சேகரிக்கப்பட்டே முப்பரிமாணத் தகவல்களை பெற்றுக் கொடுக்கின்றன. இங்கு பறக்கும் சாதனத்தின் தெறிப்பு விளிம்புகளின் பரப்பை மையப்படுத்தியே செயற்பாடுகள் அமைந்திருக்கும்.

இதில் இருந்து தப்பும் உத்தியை, அல்லது யாருக்கும் தெரியாமல் செய்வதை ஆங்கிலத்தில் STEALTH உத்தி என்பர்.

இவ்வாறான உத்திகள் கொண்ட அமெரிக்காவின் F117 வானூர்திகள் மிகவும் பிரபல்யமானவை.

அதேபோன்று தெறிப்புப் பரப்பளவைக் குறைக்கும் உத்தியை தமது முன்னைய வானூர்திகளுக்கு வான் புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் அவர்கள் தமது கருத்தை தெரிவிக்கின்றனர்.

வல்லுனர்களின் இந்த கருத்துக்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது, விடுதலைப் புலிகள் காங்கேசன்துறையில் தரித்திருந்த படையினருக்கான வழங்கல் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்திய படகுகளின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு என்பன.

இத்துடன் சிறீலங்கா படையினரின் சில கண்காணிப்புக் கருவிகள் வெப்ப கதிர்ப்பு வாங்கிகளின் உதவியுடன் இயங்குபவையாக இருந்துள்ள போதிலும், அவற்றிலும் வான் புலிகளின் வானூர்திகளின் அசைவுகள் பதியப்படாத காரணத்தினால் மேலும் சில சந்தேகங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

அதாவது வான் புலிகள் தமது வானூர்திகளுக்கு வெப்ப கதிர்ப்பு உறிஞ்சிகள் எதையாவது பொருத்தியுள்ளார்களா என்பது தான் அடுத்த முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.

அத்துடன் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய சில வர்ணப்பூச்சுக்கள் பாவனையில் உள்ளதாகவும், அவற்றை வான் புலிகள் தமது வானூர்திகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் சாத்தியப்பாடு பற்றி சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சும் தற்பொழுது பாசீலித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் சிறீலங்கா படைத்தரப்பு தற்பொழுது கூறும் காரணம், வான் புலிகளின் வானூர்தி மிகவும் சிறியதாக இருப்பதால், அவை தமது கண்காணிப்புத் திரையில் புலப்படவில்லை என்பதாகும்.

இதனை ஏற்றுக்கொள்வது சற்றுக்கடினமானகும்.

சிறிய வானூர்தி எனின் குண்டுகளைச் சுமந்தவாறு கொழும்புவரை சென்று தாக்கிவிட்டு, மீளத் திரும்பிச் செல்வது கடினமானது, மற்றும் அதன் வேகம் மிகக்குறைவானது எனின் களனிதிஸ்ஸவில் தாக்கிவிட்டு திரும்பிச் செல்ல முன்னர் சிறீலங்கா வான் படையினரின் மிகையொலி வானூர்திகள் மிக இலகுவாக வழிமறித்துத் தாக்குவது சுலபம். ஏன் வன்னியில் வைத்து தரையிறங்கும்போது தாக்கி அழித்தலும் இலகு. ஆனால் இவை இரண்டும் நடக்கவில்லை.

நேற்றிரவும் வான் புலிகள் தாக்குதல் நடத்தியவுடன் கட்டுநாயக்கவில் இருந்து கிபீர் மிகையொலி தாக்குதல் வானூர்திகள் புறப்பட்டுச்சென்றதாக கொழும்புச் செய்தியாளர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும், நேற்றும் வான் புலிகளது வானூர்திகளை சிறீலங்கா படையினரால் கண்டறிய முடியவில்லை.

சிறீலங்காவிற்கு ஆள்க்கொல்லி ஆயுதங்கள் எதையும் தாம் வழங்கவில்லை எனவும், விடுதலைப் புலிகளின் வான் படையால் தமது நாட்டுக்கு ஏற்படும் என ஏதிர்பார்க்கும் அச்சுறுத்தலில் இருந்து தம்மை பாதுகாக்கவே இந்திரா வான் கண்காணிப்புப் கருவிகளையும், பயிற்சிகளையும் வழங்குவதாக இந்திய அரசு கூறிவந்த நிலையில், வான் புலிகளின் வானூர்திகள் இந்திரா கண்காணிப்பு கருவியை ஏமாற்றியதைத் தொடர்ந்து இந்தியா என்ன செய்யப் போகின்றது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அத்துடன், இலகுரக வானூர்தியைக்கொண்டு தாக்குதல் நடத்தும் வான் புலிகள் பலமுறை தாக்கிய போதிலும், அவை அனைத்தும் படை நிலைகள், மற்றும் பொருண்மிய மையங்களை இலக்குகளாகக் கொண்டவையாக அமைந்திருக்கின்றனவே தவிர, பொதுமக்களை இலக்குகளாகக் கொண்டவை அல்ல என்பதை அனைத்துலக சமூகம் நன்றாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் உயர் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்புடன் சிறீலங்கா வான் படையினர் நாளாந்தம் மேற்கொள்ளும் தாக்குதல்கள் எப்பொழுதும் தமிழ் பொதுமக்களை இலக்கு வைப்பவை என்பதை இந்திய அரசு உட்பட அனைத்துலக சமூகம் இனியாவது புரிந்து கொண்டால் தமிழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவர்.

நிறைவில் இன்னொரு விடயத்தையும் நாம் உற்று நோக்கலாம். கடந்த செப்ரெம்பர் 9ஆம் நாள் வவுனியா முப்படை வன்னித் தலைமையகம் மீது வான் புலிகள் தாக்குதல் நடத்தியபோது, தமது வான் படையினரது தேடியழிக்கும் நடவடிக்கையில் வான் புலிகளது வானூர்திகள் அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா படைத்தரப்பு கூறியிருந்தது.

இருப்பினும் நேற்றிரவு போன்று அன்றைய தினமும் தமது வானூர்தி பாதுகாப்பாக வன்னிக்கு தளம் திரும்பி விட்டதாக, வான் புலிகள் அறிவித்திருந்தனர்.

இன்னுமொன்றையும் இங்கே அவதானிக்கலாம். இம்முறை வன்னிக்கு அருகிலுள்ள மன்னாரில் தாக்குதல் நடத்திவிட்டு, அதன் பின்னரே 40 நிமிடங்கள் கழித்து மிகவும் தூரத்திலுள்ள கொழும்பில் வான் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனூடாக விடுதலைப் புலிகள் ஒன்று அல்லது பல செய்திகளை சிறீலங்கா அரசுக்கும், அதற்கு படைக்கல உதவி புரியும் நாடுகளுக்கும் சொல்ல முனைகின்றனர் என்பது புலப்படுகின்றது.

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

அது என்ன வான்புலிகள் அறிவித்தனர்?

இதுவரை புலிகளிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லையே?

இதுவரை சிறீலங்கா தானே சொல்லியிருக்கு. அதை விட ஊடகங்கள் சாதாரண மக்களின் அனுபவங்கள்.

சிறீலங்கா அரசு ஊடக தணிக்கை செய்திருகின்றது ஆனால் நாம் எமது வாயை மூடப்போவது இல்லை.எங்கடா தாக்குதல் நடக்கும் நடந்தவை என்ன என ஆய்வு எழுத பலர் காத்து இருகின்றனர் சிலவேளை இவை உண்மையாக கூட இருந்தாலும் ஏன் அதனை எதிரிக்கு நாமே காட்டிக்கொடுக்க வேண்டும் என தயவு செய்து சிந்தியுங்கள்

சிங்களவனிடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லாதது தூரதிஸ்டமே

அலசிட்டாங்கையா அலசிட்டாங்க...

பிளேன் வந்து இறங்கி சூடு தணியமுன்னம் அலசிட்டாங்கயா அலசிட்டாங்க....

இந்திரா ராடர் முப்பரிமாண ராடரா?

சொல்லவே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன்.. இவர்களின் ஆய்வை விட இத்தாக்குதல் குறித்து இவ்வளவுக்கும் ஆராய்ந்து அறிக்கை தந்திருக்கும்.. அமெரிக்காவும் இந்தியாவும். சிறீலங்காவுக்கு அதில் பிரச்சனையில்லை. இவர்களின் ஆய்வின் படியா.. விடுதலைப்புலிகள் செயற்படுகின்றனர் இல்லையே. அவர்கள் தங்களுக்குரிய தனித்துவத்தோடு செயற்படுகின்றனர். அதை கண்டறிவது என்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இந்த ஆய்வுகளால் தான் சிங்களவன் விசயங்களை அறியுறான் என்பது.. அவ்வளவு சரியான பார்வையற்று.

விடுதலைப்புலிகளின் ஆட்லறிகள் திருமலைத்துறைமுகத்துக்கு ஆபத்தாக இருக்கின்றன என்பதை மையமாக வைத்தே இந்தியா மற்றும் அமெரிக்காவின் பணிப்பின் பெயரில் இந்த யுத்தம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கு சாட்டு மாவிலாறு. இன்று மன்னாரின் உள்ள எண்ணை வளத்தை மையமாக வைத்து மன்னாரில் படை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்நிய சக்திகள் தங்களின் வசதிக்காக சிறீலங்காப் படையினரைப் பயன்படுத்தி வரும் வேளையில்.. விடுதலைப்புலிகளிடம் இருந்து புதுச் சவால்கள் எழுவதை.. சிங்களவன் ஆராய முதல் இந்தியாவும் அமெரிக்காவுமே ஆராயும். அவர்களிடம் இல்லாத ஆராய்வுத்திறனையா.. இவர்கள் எழுதிடப் போகிறார்கள்.

சிறீலங்கா விசாரணை செய்கிறதோ இல்லையோ அமெரிக்காவும் இந்தியாவும் செய்து.. தேவையான பரிந்துரைகளை சிறீலங்காவுக்கு வழங்கும். ஏலவே விடுதலைப்புலிகளின் கப்பல்கள் தொடர்பில் இவ்வாறு வழங்கிச் செயற்பட்டமை இங்கு நினைவு கூறத்தக்கது. அதுமட்டுமன்றி அமெரிக்கா சிறீலங்காவோடு வான் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றையும் செய்திருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. :)

ராடார் எண்டதுக்கு தூய தமிழ்சொல்லு தூரபுலமானி எண்டு தாயகத்தில் இருந்து வந்த ஆக்கங்களை படித்த பிறகு ஆகுதல் டமில்டேசிய ஆதரவு ஊடகங்கள் கவனத்தில எடுக்கலாமே?

யாழ்களத்திலாவது தொடங்குவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராடார் எண்டதுக்கு தூய தமிழ்சொல்லு தூரபுலமானி எண்டு தாயகத்தில் இருந்து வந்த ஆக்கங்களை படித்த பிறகு ஆகுதல் டமில்டேசிய ஆதரவு ஊடகங்கள் கவனத்தில எடுக்கலாமே?

யாழ்களத்திலாவது தொடங்குவம்.

கதுவி என்றும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் :)

ராடார் எண்டதுக்கு தூய தமிழ்சொல்லு தூரபுலமானி எண்டு தாயகத்தில் இருந்து வந்த ஆக்கங்களை படித்த பிறகு ஆகுதல் டமில்டேசிய ஆதரவு ஊடகங்கள் கவனத்தில எடுக்கலாமே?

யாழ்களத்திலாவது தொடங்குவம்.

தடித்த எழுத்தில் இருப்பதை நீக்கி விட்டுப்படிக்கவும்.

இந்திரா ராடர் முப்பரிமான ராடர் அல்ல. 2D மட்டுமே.

விமானம் தாழ்வாக பறக்கும் போது ( 100 அடிக்குக் கீழ் ) இந்த ராடர் இனால் தொலைவில் வைத்து கண்டுபிடிக்க முடியாது.

"X" km இற்குள் அண்மிக்கும் போதே கண்டு பிடிக்க முடியும். ஆகவே "X" km ஆரையை கொண்ட வட்டத்திற்கு வெளியே பறந்தால் வவுனியா விமானப்படை ராடரின் கண்னில் மண்.

"X" ஐ கிட்டத்தட்ட 30 km ஆக எடுத்துக்கொள்ளலாம்.

சரியான ஆய்வு மட்டுமில்லை தெளிவான ஆய்வும் கூட முக்கியமாக சிங்களவனை புலிகளின் விமானத்தாக்குதலை விட ஆயுவுகளால் சரீயாக குழப்பிவிட்டு இருகிறார்கள்.........

இந்த ரிவியாவது தடை செய்ய படாமல் இருக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த ஊடகங்களில் கருத்துக் களங்களில் வரும் தகவல்களில் அதன் தன்மைக்கு ஏற்ப வெளியாருக்கு 2 வகையான பயன்கள் அல்லது நன்மை இருக்கு.

-1- குறித்த விடையம் பற்றிய துல்லியமான தகவல் அல்லது ஏற்கனவே கசிந்த தகவலை உறுதிப்படுத்துவதாக கிடைக்கும் மேலதிக 2ஆம் நிலைத் தகவல்கள். இதற்கு காலப் பெறுமதியும் இருக்கு.

-2- எந்த தகவலும் அற்ற புதிராக இருக்கும் ஒரு விடையம். அதை முறையடிக்க பலவித ஊகங்களை பல கோணங்களில் model பண்ணிக் கொள்வார்கள். கிடைக்கும் தகவல் துளிகளை அதற்குள் பொருத்த முடியுமா என்று முயற்சிப்பதற்கு. இப்படியான சந்தர்ப்பங்களில் முறையடிக்கப்பட வேண்டியவர்களின் பின்னணியைக் கொண்ட மனிதர்களின் சிந்தனைகள் ஊகங்கள் ஏனையவர்களின் ஊகங்களை விட அருகில் உள்ளதாக அனுபவரீதியான புள்ளிவிபரங்கள் சொல்கிறது. இது tacit knowledge இன் அடிப்படையில்.

2004...2006 காலப்பகுதிகளில் தவிர்க்கப்பட்டிருக்க கூடிய-வேண்டிய 1 ஆவது வகை தகவல்கள் ஊடகங்களில் கருத்துக்களங்கள் குடில்களில் வந்திருக்கிறது. 2007 பிற்பகுதி முக்கியமாக 2008 இல் படிப்படியாக குறைந்துவிட்டது.

இப்பொழுது இக்பால் அத்தாசிற்கும் ஏனை சிங்கள் ஊடகர்களிற்கும் கிடைக்கும் 1 ஆவது வகை தகவல்கள் கூட நம்மது புலம்பெயர்ந்த ஊடகங்கள் ஆய்வாளர்களிற்கு கிடைப்பதில்லை. அவற்றில் இருந்து பொறுக்கி எடுத்து தமது ஊகங்களில் (tacit knowledge இன் அடிப்படையில்) நல்லதொரு authentic spin குடுத்து எழுதுகிறார்கள்.

இப்போதைய ஆக்கங்களின் சில தவிர்க்கக் கூடிய அவசியமற்ற கோணங்கள் புதிர்களை முறையடிக்க முனைபவர்களிற்கு பயனுள்ள ஊகங்களைக் கொடுக்கலாம்.

இந்த ஆய்வுகள்தான் பல நேரங்களில ஆப்பாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆய்வுகள்தான் பல நேரங்களில ஆப்பாகிறது.

நிட்சயமாக இவர்கள் ஆராய்ந்துவிட அவர்களோ தேவையானதை பொறக்கிகொள்கிறான் ஆனால் இவர்களோ நான் முந்துவதா நீமுந்துவதா என ஆய்வறிக்கை விடுகின்றனர் :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடையள் திண்ணையிலையும் மடத்திலையும் குந்தியிருந்து

ஊரான் வீட்டு பிரச்சனகளை ஆராஞ்சு ஆராஞ்சு எல்லாம் இரத்ததிலை ஊறீட்டுது கண்டியளோ.

  • கருத்துக்கள உறவுகள்
:) இந்தியா சொன்னதுதானே தாங்கள் எந்த உதவியும் சிறிலங்கா அரசுக்கு செய்யவில்லை என்று.இப்பவாவது நம்புங்கப்பா

சரியா சொன்னீர்கள்..

அவர்கள் சிறீலங்கா இராணுவத்துக்குத்தான் செய்வார்கள். செய்கிறார்கள்...

அரசாங்கத்துக்கு கூப்பிட்டு குடுப்பார்கள்...

திருகோணமலை துறைமுகத்தை பிரபாகரன் பிடித்து விட்டால்.....எந்த நாட்டின் உதவியோ. மத்தியஸ்தமோ தேவைப்படாது....

அப்புறம் இந்தியா ( ராடர்) பிரபாகரனுக்கு அன்பளிப்பு செயும் என எதிர்பார்க்கலாம்....

என்ன நான் சொல்றது....

தனியா இருந்து யோசிச்சால்...தான் விளங்கும்.....

இந்த முப்பரிமான கதுவியோ அல்லது தூரபுலமானியோ இனிவரும் காலங்களில் இலங்கை அரசிக்கு பயனளிக்காது போல கிடக்கு, இந்த குறையை நிவர்த்தி செய்ய எங்கட சுப்பண்ண்மையின் தலமையிலான கிழவாராச்சி நிலையத்தால் தயாரிக்கப்பட்ட நாற்பரிமான கதுவியோ அல்லது தூரபுலமானியோ மிகச்ச்சிறப்பானதாம்.

இது வருகின்ற விமானத்தின் தூரம் நீளம் அகலம் வேகத்துவன் நின்ருவிடாது ஓட்டுபவரின் பேரும் வயசு ஏன் ஊரைக்கூட சொல்லவல்லது...

தயவுசெய்து இந்த கதுவி அல்லது தூரபுலமானி பற்றிய விபரங்களை இங்குவந்து பூராயும் புலனாய்வுத்துறைக்கு எட்டவிடாமல் பாதுகாக்கவும்.

Edited by Sooravali

யூதர்களிற்கு அடுத்தபடியாக தலைக்குள்ள பலமாக இருப்பது தமிழர்களிற்குத்தான் அதுவும் ஈழத்தமிழர்களிற்குத்தான் என்று சீமான் சொன்னதை இடைக்கிடை நிரூபிக்கத்தான் வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னீர்கள்..

அவர்கள் சிறீலங்கா இராணுவத்துக்குத்தான் செய்வார்கள். செய்கிறார்கள்...

அரசாங்கத்துக்கு கூப்பிட்டு குடுப்பார்கள்...

திருகோணமலை துறைமுகத்தை பிரபாகரன் பிடித்து விட்டால்.....எந்த நாட்டின் உதவியோ. மத்தியஸ்தமோ தேவைப்படாது....

அப்புறம் இந்தியா ( ராடர்) பிரபாகரனுக்கு அன்பளிப்பு செயும் என எதிர்பார்க்கலாம்....

என்ன நான் சொல்றது....

தனியா இருந்து யோசிச்சால்...தான் விளங்கும்.....

நான் சொன்னது இந்தியா கொடுத்தது கதுவி அல்ல மண்வெட்டி செய்யும் இரும்பு.

யூதர்களிற்கு அடுத்தபடியாக தலைக்குள்ள பலமாக இருப்பது தமிழர்களிற்குத்தான் அதுவும் ஈழத்தமிழர்களிற்குத்தான் என்று சீமான் சொன்னதை இடைக்கிடை நிரூபிக்கத்தான் வேணும்

மோட்டுச்சிங்களவனிற்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூதர்களிற்கு அடுத்தபடியாக தலைக்குள்ள பலமாக இருப்பது தமிழர்களிற்குத்தான் அதுவும் ஈழத்தமிழர்களிற்குத்தான்

உதைத்தான் அண்டு தொடக்கம் எங்கடை பெரிசுகளும் சொல்லிக்கொண்டிருக்கினம் :unsure:

யூதர்களிற்கு அடுத்தபடியாக தலைக்குள்ள பலமாக இருப்பது தமிழர்களிற்குத்தான் அதுவும் ஈழத்தமிழர்களிற்குத்தான் என்று சீமான் சொன்னதை இடைக்கிடை நிரூபிக்கத்தான் வேணும்

ஓமோம்

அதை வெல்ல துரும்பை எடுத்துக் கொடுக்கிறவையும் அதே தமிழர்தான் கண்டியளோ :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.