Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் தோன்றியே தீரும். -கமல்

Featured Replies

நன்றி தமிழ்கலையுலகே. உங்கள் ஆதரவுக்கு ஈழத்தமிழர் சார்பில் நன்றி.

ஜானா

  • Replies 72
  • Views 8.7k
  • Created
  • Last Reply

ஆதரவு தெரிவித்த அனைத்து நடிக, நடிகைகளுக்கும் நன்றி. சிறு துளிகள் தான் பெரு மழையின் ஆரம்பம். ஒவ்வொருவரின ஆதரவும் எமக்கு மிக அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுச்சி..எழுச்சி.. எழுச்சி...

ஈழத்தில் வன்னியில் மக்கள் வான் குண்டுக்கும், செல் வீச்சுக்கும், பருவ மழைக்கு ஒதுங்கக் கூட வழியின்றி ஓடித்திரிகிறார்கள். அவர்கள் படும் துன்பம் கல்நெஞ்சையும் கரைய வைப்பது. எதிரியையும் ஒருகணம் திகைக்க வைப்பது. அப்படியானால் புலம்பெயர் தமிழர்களில் இதன் தாக்கம் எப்படியிருக்கும்? ஆம்.. தீயென மூண்டெழுந்த எம் தமிழ் உறவுகள் ஒரு திட்டத்துடன் இதோ களத்தில் இறங்கிவிட்டார்கள்.

இத்திட்டத்தின்படி கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா சேர்க்கப்படும். பிரிட்டன், ஒஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பியா நாடுகளிலும் நிதி வசூலிக்கப்படும். அந்த அந்த நாட்டுக்கென்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நிதி சேர்க்கப்படும்.

இதில் விந்தை என்னவென்றால், இதில் ஈடுபட்டுள்ள பலபேர் எனக்குத் தெரிந்து ஈழப் போராட்டத்தில் ஈடுபாடே இல்லாதவர்கள். அவர்கள் பிள்ளைகளில் பலருக்குத் தமிழும்தெரியாது.. ஈழம் எங்கே இருக்கிறது என்றும் தெரியாது. பலருக்கு தமிழீழம் அமையும் என்கிற நம்பிக்கையே இல்லை. அவர்களின் கூற்றுப்படி, அவர்களுக்கு அது தேவையும் இல்லை. அப்படியானவர்களிடம் கூட இப்படி ஒரு எழுச்சி.

சரி.. சேர்க்கப்பட்ட பணம் எவ்வாறு செலவழிக்கப்படப் போகிறது? அதுதானே முக்கியம்?

யாழ் மாவட்டத்திலுள்ள பல வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் இருக்கும் ஒரு கோயிலைப் புனரமைக்கப் போகிறார்களாம். அந்த ஊரில் எங்கட ஆக்கள் ஒருத்தருமே இல்லை. வேற ஆக்கள்தான் இப்ப இருக்கினம் எண்டு ஒரு காலத்தில குறைபட்டுக் கொண்டவை. இப்ப ஏன் திடீர் அக்கறை எண்டு கேட்டால், அந்தக் கடவுளால நாங்கள் எல்லாரும் நல்லா இருக்கிறமாம். ஆகவே எல்லாரும் கணக்குப் பாராமல் தர்மம் பண்ணுங்கோ..

ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தமிழ் திரையுலகிற்கும் தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகள். எங்களில் பலர் தடம் மாறினாலும் உங்களின் மாறாத அன்பு நம்பிக்கையையும், ஏன் சிறிது திகைப்பையும் கூட ஏற்படுத்துகின்றன.

மீண்டும் நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மிக உணர்வுடன் கலந்து கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும்.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர்களே

திரு. ரஜினிகாந்த் உரை

Edited by vettri-vel

எங்கே எங்கள் தொப்புள்கொடியுறவுகள் அறுக்கப்பட்டு விட்டதோ என்றளவிற்கு இந்திய மத்திய அரசால் திட்டமிட்ட ரீதியில் அடக்கி ஒடுக்கப்பட்ட எம் ஆதரவுக்குரல்கள், நெருப்பு தணலாகி சாம்பராகும் தறுவாயில் எண்ணை ஊற்றி மீண்டும் பற்ற வைத்தவர் தமிழ் கலைத்திரை உலகின் மூத்தமகன் கலைஞர் கருணாநிதியையே சாரும்.

கலை உலகின் இன்றைய எழுச்சி நிச்சயம் தமிழ் நாட்டு பாமரமக்கள் மட்டும் சென்று சேரும். மூத்த கலைஞனின் தொடக்கம் இன்று இளம் கலைஞர்கள் வரை ..... இன்றைய முன்னணி கலைஞகளின் குரல்களுக்கு மீண்டும் இந்திய கியூ பிரிவு இரும்புச்சங்கிலி போட்டு பூட்டப்போகிறதா?

தடை உடைத்து குரல் கொடுத்த எல்லோருக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை!

"விடிவு வெகுதூரத்தில் இல்லை"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய முன்னணி கலைஞகளின் குரல்களுக்கு மீண்டும் இந்திய கியூ பிரிவு இரும்புச்சங்கிலி போட்டு பூட்டப்போகிறதா?

ஓ.. அப்போ சீமானையும் அமீரையும் கைது செய்தது கியுபிரிவு தன் விருப்பப் படிதானா ?

நான் கூட கலைஞரை தப்பா நினைத்திட்டேன்.

ஒரு மீள்பார்வை 2007... சிவாஜி புறக்கணிப்பு...

பிரபு, அஜீத், கார்த்திக், விஜய், சிரஞ்சிவி, சிவக்குமார் என்று ஏராளம் நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் ரஜனியோடு மட்டும் என்ன கோபம்! ஓரு முகாமைத்துவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி மனுவை யாரிடம் கொடுப்பார்கள்? அலுவலக உதவியாளர், கணக்காளர், வரவேற்பாளர் என்று பலர் இருக்க ஏன் முகாமையாளரிடம் கொடுக்கின்றனர்? அவர்தான் முதன்மையானவர். அந்தவகையில் எங்களிடம் தன் பொருளை விற்க வருபவரிடம் எங்கள் மனக்குறையை சொல்கிறோம்.

சரி சொல்லி என்ன ஆகப்போகிறது? இவரா எங்கள் உணர்வுகளை புரிந்து எங்களுக்காக தென்னிந்தியாவின் மிகப்பலம் வாய்ந்த சினிமா என்ற ஊடகத்தினூடாக குரல் கொடுக்கப் போகிறார்? எதற்காக ஜனநாயக போர்வைக்குள் இருக்கும் சர்வாதிகார சர்வதேச சமுகத்திடம் தமிழ் மக்கள் "வெல்க தமிழ்" என்ற நிகழ்வின் மூலம் வேண்டுகோள் விட்டனரோ அதே நம்பிக்கையில்தான் இந்தச் செயற்பாடும் உள்ளது. அது வெற்றி பெற்றதா, ஈழத்தமிழர்களின் ஆதங்கங்கள் உரிய இடத்தை சென்று சேர்ந்ததா என்பதை காலம் தீர்மாணிக்கும். இப்போதே அது வெற்றியா தோல்வியா என்று கணிப்பிட முடியாது.

காதல், கட்டைப்பஞ்சாயத்து, பழிவாங்கல், கடவுள்கதை என்ற வட்டத்தையே சுற்றிச் சுற்றி வரும் வெற்றிப்படங்களின் பிதாமகன்களே,

1) உங்கள் அண்டை வீட்டில் நடக்கும் கொடூரத்தையும், அதை எதிர்த்து உங்கள் இரத்த உறவுகள் நடத்தும் விடுதலை வேள்விகளையும் நீங்கள் கொண்டாடும் ஜனநாயக வரம்புக்குள் நின்று எடுத்துக் கூறுங்கள்.

2) எவ்வாறு தணிக்கை தடைகளை எல்லாம் தாண்டி ரசிகர்கள் கேட்கிறார்கள் என ஆபாசத்தை புகுத்துகின்றீர்களோ, அப்படியே இந்த ரசிகர்களுக்காகவும் வைரமுத்துவின் வைரவரிகள் கொண்டு வரிந்து விடுங்கள்! எங்கள் சாதனைகளையும், சாகசங்களையும் சங்கரைக் கொண்டு பிரமிக்க வையுங்கள். எங்கள் துயரங்களை ரகுமானின் ராகத்தில் இழைய விடுங்கள்.

3) நீங்கள் எத்தனை பேர் என கேட்காதீர்கள்? இன்று நாங்கள் பழக்கப்பட்டுப் போன பாழாய் போன சினிமா மோகத்தை விட்டு வெளிவர முடியாமல் விழி பிதுங்குகிறோம். ஆனால் நாங்கள் மானமுள்ளவர் பரம்பரை. உரிமைக்காக உயிரை துறக்கத்துணிந்தவர் பரம்பரை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் கேட்கும் குரல்கள் இனி வரும் காலங்களில் வானதிர உலகமெங்கும் கேட்கும்!

ஈழத்தமிழர் துன்பம் நித்திய துன்பம் தானே என்றிராது, எங்கள் துயர வாழ்வின் நீட்சியை குறைக்க உதவுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=318762

சினிமா என்பது இந்தியர் வாழ்வில் இரத்தம் போல இன்றி அமையாதது. அது மேல் மட்டம், நடுத்தர வர்க்கம், அடி மட்டம் என சகல மட்டங்களுக்கும் பாயக் கூடிய மிகவும் பலம் வாய்ந்த ஆயுதம். ஈழத்தமிழருக்கு கதவு மூடிய அனைத்து வீடுகளின் கதவிடுக்குகளினுடே புகுந்து செல்லக் கூடியது. இதனை உணர்ந்துதான் புலிகள் கூட சில சினிமாதுறையினரை வன்னிக்கு அழைத்து சுமுக உறவை பேண முயல்கின்றனர். அதன் ஒரு அங்கமாகத்தான் இந்த நடவடிக்கையும் அமையும். அதாவது இன்னும் ஈழத்தமிழர் பிரச்சனை வேறு சினிமா / தொழில் வேறு என்று முகம் திருப்பிக் கொண்டவர்களுக்கு, இல்லை நாங்கள் உணர்வுள்ளவர்கள் எங்கள் உணர்வுகளை மதியுங்கள் என்று இடித்துரைத்து எம்பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=274553

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் அது ஒரு வருந்தத்தக்க சம்பவம்

காலம், நேரத்துக்கு ஏற்ப மாறுவோம், என்றில்லாமல், குட்டையை குழப்பும் சாக்கடைகள் இன்னும் எம்மில் ..... வேதனை!!

அதில் ஒரு சந்தோஷமும்!!

காலம், நேரத்துக்கு ஏற்ப மாறுவோம், என்றில்லாமல், குட்டையை குழப்பும் சாக்கடைகள் இன்னும் எம்மில் ..... வேதனை!!

அதில் ஒரு சந்தோஷமும்!!

ஒரு அடிமை பட்ட இன்னம் மாதிரி இல்லாமல் அடிச்சாட்டூளியமா செயற் படுவீங்கள். உங்களுக்கு சாதகமில்லாத நேரம் வந்தா, உங்களுக்கு சாதகமாய் எல்லாத்தையும் எல்லாரும் மறந்து போட வேணும்...!!!

என்ன ஒரு உயர்ந்த உள்ளம்... புல்லரிக்குது...!

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பதிளுக்கு .....

எண்டு வள்ளுவர் சொன்னதை படிக்கிறதோட சரி போல...

Edited by தயா

ஐயோ...... அறிவு எப்பதான் வரப்போகிரதோ???????? ஏதோ நாலை யாழில் எழுத மோகன் வீட்டு விட்டார் என்றவுடன் ..... நாங்கள் யோசிப்பது எம்மை தராகி என்று!!!!!!!!

அன்று அமெரிக்கன் போட அணுகுண்டுக்காக, இன்றும் யப்பான் அமெரிக்காவை எதிரியாக கருதினால்????? அழிக்கப்பட்ட ஜேர்மன் அமெரிக்க கூட்டுநாடுகளை இன்றும் கருதி நடந்தால்?????????? /..............

அது மட்டுமல்ல கடந்த காலங்களில் ஈழவிடுதலை என போய் விட்டு திசை தடுமாறி, எம்மையே அழிக்க முனைந்து, இன்று தவறை உணர்ந்து வந்திருக்கும் முன்னால் போராட்ட இயங்கங்களாகட்டும் .......

இவர்களேல்லாம் குட்டையை குட்டையை குழப்பி கொண்டிருப்பார்களேயாயின் .......???????????????

வேண்டாம்!! விளங்குபவர்களுக்கும், விளக்கமுள்ளவர்களுக்கும் விளங்கும்!! ...

அரூஸ், இதயசந்திரன் ரசனி புதினம், புண்ணாக்கு எண்டு எழுந்த மானத்துக்கு தாக்கி தள்ளுறது.... பிறகு நாங்கள் அமெரிக்கா மாதிரி ஜப்பானிலை போட்ட அணு குண்டு போல மறக்க வேணும் மன்னிக்க வேணும் எண்டு புலம்புறது...

தூர நோக்கு எண்ட கோதாரி இருந்து இருந்தால் இவ்வளவு பகை வளர்ப்புக்கள் தேவை பட்டு இருக்காது...!! அதை மறக்க வேண்டிய தேவையும் இல்லை...

இங்கை கன பேர் இருக்கினம் எதையும் தங்களுக்கு சாதகமானதாக மாற்று முயற்ச்சியை விட்டு அது ஒவ்வாதது பகீஸ்கரிக்க வேணும், தடை செய்ய வேணும் எண்டு முழங்குவினம்....!!! தங்கட காள்ளபுணர்வு எல்லாத்தையும் கொட்டி தள்ளுறது...

சிறு துரும்பும் பல் குத்த உதவும் எண்டு பழமொழி உண்டு...!!!

தமிழ் சினிமா ஏண்டதை எங்களுக்கு அனுதாபிகளாக்க முடியும் எண்டதை நம்பாத சிலரின் புலம்பல்தான் நான் இணைத்த இடுக்கை...!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாகாவா ராயினும் நாகாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

உண்மையான தமிழுணர்வாளர்களே! எங்களுக்குள் கலந்திருக்கும் தமிழுணர்வு அரிதாரம் பூசிய நடிகக் கிருமிகளை அடையாளங்கண்டு குரைக்கிற எதுக்கோ கோல் கொடுக்கிற செயலை செய்யாதீர்கள்.

எல்லா உறவுகளிற்கும் நன்றிகள்.

அஜித் வராமலேயே இருந்திருக்கலாம். ஒரு வார்த்தை சாட்டுக்கு சொல்லிவிட்டு ம் எங்கடை சனம் திருந்தாது தமிழ்வானத்தின் ஆதரவில் இன்று வெற்றிகரமாக நோர்வே மண்ணில் ஏகன் திரைப்படம் திரையிடப்பட்டது.; . .

Edited by Paranee

அது பரவாயில்லை படம் ஓடட்டும். எங்கையோ உல்லாசமாக வாழ்கிற தமிழக கலை உலகம் எங்கள் ஈழத்தமிழருக்காக அடையாள உண்ணாவிரதம் இருந்து ஏதோ ஒரு வகையில் அந்த மக்களின் துயர வாழ்வில் ஒரு நாள் பங்கெடுக்க

இங்கே இலண்டனுக்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் நடாத்தும் தெற்குஇலண்டன் தமிழ் பாடசாலை இன்று தீபாவளி விழா நடாத்தினார்கள்

அது ஒரு விழா என்றதை விட ஒரு பார்ட்டி என்றே சொல்லலாம். ஆட்டிறைச்சி கறி, கோழிப்பொரியல், புரியாணி என்று நாக்குக்கு சுவையான சாப்பாடுகள். அவரவர்களுக்கு விருப்பமான மதுபானவகைகள், பியர் புட்டிகள் என்று அனைத்து பரிமாறல்களுடன், இடைக்கிடை பிள்ளைகளின் நிகழ்ச்சிகள், வர்ண ஒளி விளக்கில் பெரியவர்கள் சிறியவர்கள் சினிமா , ஆங்கில பாடல்களுக்கு நடனங்கள் என ஒரே கொண்டாட்டம்.

ஆனால் ஒருத்தர் கூட வன்னிமக்களின் இன்றைய அவல நிலை , அங்கு என்ன நிலமை என்பதை பற்றி ஒரு மூச்சு கூட இல்லை. சந்தோசமாக ஆடி பாடி சாப்பிட்டு விட்டு தங்கள் கார்களில் ஏறி பறந்து விட்டார்கள்.

நாங்கள் எங்கே போகிறோம் ,இந்த பாடசாலை எங்கே நிற்கிறது, இந்த பாடசாலையின் பொறுப்புதான் என்ன?

பிறகு ஏன் தமிழக கலைஞர்கள் பற்றி விமர்சிக்கிறீர்கள். எங்களில் இருக்கும் சளியை துடையுங்கள்.

அதற்காக சொல்லவில்லை நண்பரே அரசின் காசில் திரையரங்கை எடுத்து (கலாச்சாரப்படம் ஓடுறம் எண்டு) தங்கள் வயிற்றை நிரப்புகின்றார்கள் அங்கே சனம் செத்திடடு இருக்கு . . ம் நடக்கட்டும்

ஒரு சதம் காசு கேளுங்க ம் வந்திட்டாங்கள் காசு சேர்க்க இதுதான் வேலை என்று திட்டுறது இதுதூன் நாம். என்றுமே எமக்கு விடிவும் இல்லை எதுவும் இல்லை திருந்தினால்தானே சிங்களவன் ஏறிமிதிக்காமல் இருப்பான். எனக்கு தெரிந்த தமிழ் நண்பர் ஒருவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகநேர வேலை செய்து அந்த வருமானத்தை ஈழத்திற்கு வழங்குகின்றார் அவரைப்போல வேண்டாம் ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க எவனாவது முன்வருவானா ? வரமாட்டாங்கள் ஆனால் தீபாவளி உமாவளி எல்லாம் கொண்டாடுவாங்கள்

கால் கை ஏலாதவர்கள் வயது முதிர்ந்தவர்கள் ஒரு மாதம் ஆயிரம் ரூபா சம்பளம் வாங்குறவர்களே பண உதவி செய்து 10 லட்ச ரூபாய் சேர்த்து இருக்கின்றார் லோறன்ஸ் அவரால் முடிந்ததை இந்த மனிதர்களால்தான் முடியலை என்ன கொடுமை இது பாருங்கள் அவர்களைப்பார்த்தாவது திருந்துங்கள்

நேற்றைய உண்ணாநோன்பு நிகழ்வில் சரத்குமார் மற்றும் சூர்யா Times of India வுக்கு வழங்கிய ஆங்கில பேட்டியின் வீடியோ

http://broadband.indiatimes.com/toishowvideo/3661960.cms

Edited by vettri-vel

நடிகர் அஜித்குமாரும் நேற்று கலைஞரை சந்தித்து பணவுதவி அளித்துள்ளார்.

இன்று வெளியான தினத்தந்தி நாளிதழ் முழுவதும் நடிகர்கள் ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தை ஆதரித்துப்பேசியதை ..... சிறப்பாக எழுதி தமிழகத்தின் குக்கிராமங்களுக்கும், பாமர மக்களுக்கும் செய்தியை கொண்டுபோய் சேர்த்துள்ளது.

திரையுலகினருக்கு மிக்க நன்றி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.