Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாலாட்டும் ஞாபகங்கள்..!!

Featured Replies

தாலாட்டும் ஞாபகங்கள்..!!

05sl5ri5.jpg

எல்லாருக்கும் ஜம்மு கொழந்தையிண்ட வண்ண தமிழ் வணக்(கம்).. :lol: யோசித்து பார்த்தா இப்ப தான் பள்ளிக்கு போன மாதிரி இருக்குது அதுகுள்ள பல்கலைக்கும் வந்து அதுவும் முடியிற மாதிரி வந்திட்டுது.வாழ்கை எப்படி போது என்று இருந்து யோசிக்கிறதிற்குள்ள வாழ்க்கை ஓடிடுது..என்னை மாதிரி தான் நீங்களும் நினைப்பியள் என்று நினைக்கிறேன்.ஆனால் என்னடா இன்னைக்கு இவன் என்னைக்கும் இல்லாத மாதிரி கதைக்கிறானே என்று நீங்க எல்லாரும் யோசிக்கிறது எனக்கு விளங்குது.. :D

அது ஒண்டும் இல்லை இருந்தா போல யோசித்து பார்த்தனான் எப்படி எப்படி எல்லாம் காலங்கள் ஓடி விட்டது என்று ஆனால் என்ன தான் காலங்கள் ஓடினாலும் சில விசயங்களை மறக்க ஏலாது என்பது எல்லாரிண்டையும் பொதுவான கருத்து.

இவன் சும்மா அலட்டினாலே பெரியபாடு இதில "சென்டிமண்டா" வேற அலட்டுறானே எண்டு நினைத்திடாதையுங்கோ ஏன் என்றா இனி தான் நான் விசயதிற்கே வரபோறன் :D .அன்னைக்கு இப்படி தான் எனக்கு தெரிந்த ஒரு அக்காவோட கதைத்து கொண்டிருகக்க அவா கேட்டா மறக்க முடியாத காதல் என்று எல்லாருக்கும் ஒன்று இருக்குமே உங்களிண்ட அநுபவத்தை சொல்லுங்களேன் என்று..

எனக்கு தூக்கிவாறி போட்டிட்டுது,வாழ்க்கையில அனுமான் பக்தனா இருக்கிற என்னை பார்த்து இப்படி கேட்டா எப்படி இருக்கும் நீங்களே யோசியுங்களேன்..?? :D ..உடன நான் சொன்னேன் அப்படி ஒன்றும் இதுவரைக்கும் இல்லை என்று உடன அவா உது தானே பொய் என்று சொல்லி சிரிக்க தொடங்கிட்டா..

அதுக்கு பிறகு வீட்ட வந்து படுத்து கொண்டு யோசிக்க தொடங்கினன் அப்படி ஏதாச்சும் காதல் என்ற உணர்வு என்னை அறியாமலே எனக்கு வந்ததோ என்று..ஆனா அப்படி ஒரு உணர்வு வரவில்லை என்று என் மனசு சொன்னாலும் அந்த நேரம் சில ஞாபகங்கள் வந்தன.. :lol:

நான் நினைக்கிறன் அப்ப நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருப்பன் என்று நான் இருந்த றோட்டில எண்ட வயசில ஒரு ஆள் இருந்தவா சும்மா சொல்ல கூடாது நல்ல வடிவு அதை விட அவாவிண்ட கதைக்கிற வடிவு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாருங்கோ.ஒரே வீதியில இருந்த படியால இரண்டு பேரும் நல்ல பழக்கம்.நான் போற "ரீயுசனிற்கு" தான் அவாவும் வாறவா பிறகு இரவு "ரீயூசன் "முடித்து நேரமாகிடும் தானே அப்ப என்னோட தான் வாறவா வரக்க கதைத்து கொண்டு வாறனாங்க.. :unsure:

அப்ப கதைத்ததே எல்லாம் இப்ப யோசித்து பார்க்க எனக்கு சிரிப்பா இருக்கு.அவா சொல்லுவா இந்த பாட்டு பிடிக்கும் எனக்கு என்று உடன நானும் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்லி இருக்கிறன் ஏன் அப்படி எல்லாம் சொன்னான் அப்ப என்று இப்ப தான் யோசிக்கிறன்..

அது மட்டுமில்லை காலம எழும்பி ஓடி போய் பஸ் தரிப்பிடத்தில நண்பர்களோட நிற்கிறது அவாவும் வந்து சிரித்திட்டு போவா அதுக்கு பிறகு தான் பள்ளிக்கு போறது இப்படி எண்டு பல விளையாட்டுகள் செய்திருக்கிறன். :huh:

ஆனா ஏன் அப்படி எல்லாம் செய்தன் என்று தான் எனக்கு விளங்கள்ள...?? ஏன் ஒரு நாள் அவாவை "ரீயூசனில' காணாட்டி அங்கையும் இங்கையும் தேடி பார்த்த நாட்களும் என்ற அகராதியில இருக்க தான் செய்கின்றன.அதை எல்லாம் இப்ப நினைத்து பார்த்தா சிரிப்பா வருது.

இந்த ஞாபகங்களை எல்லாம் அன்னைக்கு படுத்து கொண்டிருந்தபடி யோசித்து விட்டு இதை தானா காதல் என்று அந்த அக்கா கேட்டவா என்றும் யோசித்தன்.பிறகு எண்ட இன்னொரு மனசு சொல்லிச்சு இது எல்லாம் எப்படி காதல் ஆகும் என்று..அதுவும் எனக்கு சரியாக தான் பட்டது..

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் இவை எல்லாம் காதலா..??..ஆனாலும் அன்னைக்கு யோசித்தனான் பேசாம அப்பவே அவாவை காதலித்து இருந்தா இப்ப எனகொரு ஆள் இருந்திருக்கும் இப்ப வெறுமனே கிடக்கிறேன் என்று.இப்ப அவா எங்க இருக்கிறாவோ எனக்கு தெரியா.

அன்னைக்கு தான் எனக்கே அந்த நினைப்பு வந்தது..

இவற்றை போல் எல்லாருக்கும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.சிலர் நிஜமாகவும் காதலித்தும் இருப்பீங்கள் உங்கள் அநுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளளாமே :) அத்துடன் அநுபவங்களை பகிர்ந்து கொள்ள பயப்பிடுறவை என்னும் உங்களின் பழைய காதலை நினைத்து பார்க்கிறனீங்களோ இல்லையோ என்கிறதைவாயவது சொல்லிபோட்டு போங்கோவன்..ன்..

இந்த பாடலை கேட்ட வண்ணம்..ம் உங்கள் இளமை காதல் ஊற்றுடன் சங்கமியுங்கோ..கோ..ஆனா பிறகு உங்க வந்து அழுறதில்ல சொல்லி போட்டன்..ன்..!!.. :o

அன்று நான் கிறுக்கியதை

கவிதை என்றுரைத்தாய்

அன்றெனக்கு புரியவில்லை

நீ

கூட

ஒரு கிறுக்கல்

தான்

எண்டு..டு..!!

இன்று நானோ கிறுக்கன்..(எப்படி இருக்கு நம்ம கவி).. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அதுவே நாறிப்போய் கிடக்கு அதை வேறு கிளறவோ :lol::unsure:

  • தொடங்கியவர்

அதுவே நாறிப்போய் கிடக்கு அதை வேறு கிளறவோ :huh::unsure:

முனி மாமு..மு..!!

என்ன இப்படி சொல்லி போட்டியள்..ள் எதையும் கிளற..கிளற தான் சொகமே இருக்கு..கு..எங்களுக்காக உங்கள் தாலட்டும் ஞாபங்களை சுமந்து வாங்கோ..கோ.. :D

நான் கேட்டு இல்லை எண்டு சொல்லமாட்டியள் தானே மாமு..மு..!!.. :o

மாமுவிற்காக..க தாலாட்டும் ஞாபங்களை..ளை சுமந்து வரும் பாடல்..ல் இதோ கேட்டு மகிழுங்கோ மாமு..மு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அந்தந்த பருவங்களில் இப்படியான அனுபவங்கள் வருவதுண்டு. இது வயதுக்கோளாறு. சரி... அப்படி இல்லை, இது உண்மையான காதல் தான் என்று இருவரும் காதலித்து வாழ்வில் ஒன்றிணைந்திருந்தால் அது உங்கள் கெட்டித்தனம்.

அல்லது தூய நட்பாகவும் கூட இருக்கலாம்.

தாலாட்டும் ஞாபகங்கள்..!!

அன்று நான் கிறுக்கியதை

கவிதை என்றுரைத்தாய்

அன்றெனக்கு புரியவில்லை

நீ

கூட

ஒரு கிறுக்கல்

தான்

எண்டு..டு..!!

இன்று நானோ கிறுக்கன்..(எப்படி இருக்கு நம்ம கவி).. :unsure:

அப்ப நான் வரட்டா!!

நல்ல கிறுக்கல்

Edited by Mallikai Vaasam

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் இவை எல்லாம் காதலா..??..ஆனாலும் அன்னைக்கு யோசித்தனான் பேசாம அப்பவே அவாவை காதலித்து இருந்தா இப்ப எனகொரு ஆள் இருந்திருக்கும் இப்ப வெறுமனே கிடக்கிறேன் என்று

:D

:D:lol::lol: அட இதுவும் இருக்குதா? சொல்லவே இல்ல்லை..

அச்சோ பாவம் பேபி :)

எனக்கும் ஒரு தாலாட்டும் ஞாபகம் இருக்குது

அப்போ எனக்கு 5 வயசு ... :(

மிகுது நாளைக்கு சொல்லுறன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்முபேபியின் தாலாட்டும் ஞாபகங்கள் என்னையும் தாலாட்டுகிறது நித்திரைக்கு :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு,

உங்கள் தாலாட்டு சுகமாகத்தான் இருக்கு....'அட...இப்படி இப்படி எத்தனை பேரைக் கண்டிருக்கிறம் ; ஊரில படிக்கும் போது!! உதெல்லாம் காதல் எண்டு சொல்ல ஏலாது. அந்த வயதின் ஈர்ப்பு...தங்களை கவனியுங்கள், கவனிக்கப்படுகின்றார்கள் என்றவுடன் வருகின்ற ஒரு அற்புத உணர்வு...:lol:)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவின் ஞாபகம் ரொம்ப அழகு..:P

அண்ணா டெய் ஞாபகம் என்ர உடனே எனக்கும் நிரைய்ய ஞாபகம் வருதுடா:lol::D

  • தொடங்கியவர்

அந்தந்த பருவங்களில் இப்படியான அனுபவங்கள் வருவதுண்டு. இது வயதுக்கோளாறு. சரி... அப்படி இல்லை, இது உண்மையான காதல் தான் என்று இருவரும் காதலித்து வாழ்வில் ஒன்றிணைந்திருந்தால் அது உங்கள் கெட்டித்தனம்.

அல்லது தூய நட்பாகவும் கூட இருக்கலாம்.

நல்ல கிறுக்கல்

ஜஸ்மின் அண்ணா..ணா..!!. :lol:

ம்ம்..அந்தந்த பருவங்களிள்..ள் அனுபவங்களிள்..ள் உங்களாள் மறக்க முடியாத அனுபவத்தை எங்களுக்கு கொஞ்சம் சொல்லலாமே..மே..??.. :lol:

அப்படியே தங்களின் தாலாட்டும் ஞாபகத்தையும் மீட்டி பார்த்தது போல் இருக்கும்..ம்..அச்சோ சின்னனில எண்ட எத்தனை நண்பர்கள் காதலிச்சு இருக்கீனம்..ஆனா இப்ப அவைய காதலிச்ச பெட்டைகள் எல்லாம் வேற யாரோவை கை பிடித்து சந்தோஷமா இருக்கீனம்..ம்.. :D

நீங்க ஏலவே சொன்ன மாதிரி..ரி வயது கோளாறு பிரச்சினை..னை அந்த வயது தாண்டா தானா முடிந்திடும் எண்டு நினைக்கிறன்..ன்.. :lol:

ஆனால்..ல்..!!

சில ஞாபங்கள் மட்டும் எண்டும் மறக்க முடியாதவை..வை..ஏன் பள்ளி நாட்களிள ஒரு பெட்டை எங்களோட கதைச்சிட்டாலே ஏதோ அமெரிக்கன் ஜனாதிபதியான சந்தோசத்தில இருப்பீனம்..ம் உதை விட வேற உதாரணம் வேண்டுமா என்ன..ன.. :)

என் கிறுக்கலை கூட..ட ரசித்தமைக்கு நன்றிகள்..ள்..இந்த நேரத்தில் ஜஸ்மின் அண்ணாவின் இதமான தாலாட்டை தொடர ஒலிக்கும் பாடல் இதோ..தோ.. :D

  • தொடங்கியவர்

அட இதுவும் இருக்குதா? சொல்லவே இல்ல்லை..

அச்சோ பாவம் பேபி :D

எனக்கும் ஒரு தாலாட்டும் ஞாபகம் இருக்குது

அப்போ எனக்கு 5 வயசு ...

மிகுது நாளைக்கு சொல்லுறன்

நிலா..லா அக்கா..கா..!!.. :D

நிலவிற்கு கூட ஏதோ ஞாபகம் இருக்கின்றது போல்..ல் அது தான் தாலட்டும் ஞாபகம் கேட்டு..டு ஓடோடி வந்துவிட்டதோ என்ன..ன.. :lol:

சரி வாங்கோ நிலா அக்கா..கா..

ம்ம்..சில விசயங்களை சொல்ல முடியாது..து அதுவா வரணும்..ம் இப்ப ஒருவாவை பார்த்து நான் உன்னை காதலிக்கிறன் எண்டு உடன சொல்ல ஏலாது தானே..னே :lol: அதை போல தான் இதுகளும்..ம்..இதில என்ன பாவம் இருக்கு அக்கா..கா எப்பவுமே..மே..

சில புத்தகங்களின் பக்கங்களை புரட்டி..டி புரட்டி பார்க்கலாம்..ம் அது போல தான் இதுவும்.. :) என்ன 5 வயசிலையே தாலட்டும் ஞாபகமோ..மோ..பிறகு வந்து அம்மா "ஆரோரோ" எண்டு தாலாட்டினவா எண்டு சொல்லுறதில்ல சொல்லிட்டன்..ன்.. :(

நாளை நிலவின் தாலட்டும்..ம் ஞாபகங்களை கேட்கும்..ம் ஆவலில்..ல் நிலவிற்காக ஒலிக்கும் பாடல் இதோ..தோ இதை கேட்ட வண்ணம் உங்கள் பசுமை காலத்துடன் மூழ்கவும்..ம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவின் ஞாபகம் ரொம்ப அழகு..:P

அண்ணா டெய் ஞாபகம் என்ர உடனே எனக்கும் நிரைய்ய ஞாபகம் வருதுடா:lol::D

அதையும் சொல்லுடா பையா .......

நாங்களும் ஜம்மு பேபியோடையிருந்து கேப்பம் தானே .......

  • தொடங்கியவர்

ஜம்முபேபியின் தாலாட்டும் ஞாபகங்கள் என்னையும் தாலாட்டுகிறது நித்திரைக்கு

ம்ம்..கறுப்பி அக்கா..கா..!!. :lol:

பரவாயில்லை ஒருவாவிற்காகவ்து என் தாலட்டில்..ல் நித்திரை வந்தது எண்டா சந்தோஷம் தான்..ன் :D அப்படியே கனவில் உங்கள் தாலட்டும் ஞாபகங்களை பார்த்த வண்ணம் இந்த பாடலையும் கேளுங்கோ..கோ.. :D

பிறகு..கு

நாளைக்கு வந்து உங்கள் தாலாட்டும்..ம் ஞாபகங்களையும்..இங்கே ஓட விடுங்கோ கறுப்பி அக்கா..கா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அட பள்ளிப் பருவத்தில் பாலுணர்வு இல்லையானால் குறை பாடான ஆட்கள் என்பார்கள்.

  • தொடங்கியவர்

ஜம்மு,

உங்கள் தாலாட்டு சுகமாகத்தான் இருக்கு....'அட...இப்படி இப்படி எத்தனை பேரைக் கண்டிருக்கிறம் ; ஊரில படிக்கும் போது!! உதெல்லாம் காதல் எண்டு சொல்ல ஏலாது. அந்த வயதின் ஈர்ப்பு...தங்களை கவனியுங்கள், கவனிக்கப்படுகின்றார்கள் என்றவுடன் வருகின்ற ஒரு அற்புத உணர்வு...:lol:)

தமிழ் தங்கை அக்கா..கா..!!. :(

ம்ம்..தமிழ் தங்கை அக்கா..கா அப்ப எல்லாம் யாரும் ஒருவா என்னை திரும்பி பார்பாவோ எண்டு எல்லாம் நெனைத்திருக்கிறன் தான்..ன்.. :D

இப்ப யோசிக்க சிரிப்பா அல்லோ இருக்கு..கு..எல்லாம் தமிழ் படம் பார்த்த பாதிப்பு தான்..ன் அதை பார்த்து போட்டு தான் நாமளும்..ம் அதை மாதிரி செய்ய போறது..து.. :lol:

அது இருகட்டும்..ம்..

தங்களின் தாலாட்டும் ஞாபங்களையும் சுமந்து வரலாமே..மே..??..அதுவரை இந்த பாடலை கேட்டு மகிழுங்கோ..கோ.. :)

  • தொடங்கியவர்

அதையும் சொல்லுடா பையா .......

நாங்களும் ஜம்மு பேபியோடையிருந்து கேப்பம் தானே .......

ம்ம்..தமிழ் சிறி அண்ணா..ணா..!!.. :lol:

குட்டிபையனோட தாலாட்டின் நனைவதோடு மட்டுமில்லாமல்..ல் உங்கள் தாலட்டினையும் எடுத்து வாருங்கோவேன்..அது வரைக்கும் தமிழ் சிறி அண்ணாவின்..ன் தாலாட்டை மீட்டி பார்க்க இந்த பாடல்..ல்..!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அட பள்ளிப் பருவத்தில் பாலுணர்வு இல்லையானால் குறை பாடான ஆட்கள் என்பார்கள்.

படிப்பிலையா அல்லது வேறு எங்கு குறைபாடு வரும் ?

  • தொடங்கியவர்

அட பள்ளிப் பருவத்தில் பாலுணர்வு இல்லையானால் குறை பாடான ஆட்கள் என்பார்கள்.

ம்ம்..ஈழபிரியன் பெரியப்பா..பா..!!.. :D

ம்ம்..பள்ளி பருவத்தில பாலுணர்வு இல்லாட்டி குறைபாடான ஆட்கள் எண்டு சொல்லுறது எல்லாம் சரி தான்..ன் இப்ப உங்க நேரம்..ம் அது தான் தங்கள் தாலாட்டினை சுமந்து வரும் நேரம்..ம் :lol:

பெரியம்மாவிற்கு பயந்து சொல்லாம இருக்கிறதில்ல சொல்லிட்டன்..ன் இப்பவும் பள்ளி கால காதலியை யோசித்து பார்க்கிறனியளோ..ளோ..??.. :lol:

அந்த இனிய பள்ளி காதலியின் நினைவலைகளை தாங்கி வரும் பாடல் இதோ..தோ.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நாம படித்தது யாழ் இந்துவில் .இவைகளுக்கு சான்ஸ்சே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..தமிழ் சிறி அண்ணா..ணா..!!.. :lol:

குட்டிபையனோட தாலாட்டின் நனைவதோடு மட்டுமில்லாமல்..ல் உங்கள் தாலட்டினையும் எடுத்து வாருங்கோவேன்..அது வரைக்கும் தமிழ் சிறி அண்ணாவின்..ன் தாலாட்டை மீட்டி பார்க்க இந்த பாடல்..ல்..!! :D

அப்ப நான் வரட்டா!!

குறும்பும் , நகைச்சுவையும்

காதல் கலந்த ஊடல் பாடலை ரசித்தேன் ஜம்மு பேபி . :D

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பிலையா அல்லது வேறு எங்கு குறைபாடு வரும் ?

படிப்பு என்று பார்த்தால் பொதுவா எல்லோருக்கும் ஒரு பிரச்சனையே.

  • கருத்துக்கள உறவுகள்

நாம படித்தது யாழ் இந்துவில் .இவைகளுக்கு சான்ஸ்சே இல்லை.

யாழ். இந்து கல்லூரியிலிருந்து , யாழ். இந்து மகளிர் கல்லூரி கன தூரமில்லையே ..........

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தங்கை அக்கா..கா..!!. :lol:

ம்ம்..தமிழ் தங்கை அக்கா..கா அப்ப எல்லாம் யாரும் ஒருவா என்னை திரும்பி பார்பாவோ எண்டு எல்லாம் நெனைத்திருக்கிறன் தான்..ன்.. :o

இப்ப யோசிக்க சிரிப்பா அல்லோ இருக்கு..கு..எல்லாம் தமிழ் படம் பார்த்த பாதிப்பு தான்..ன் அதை பார்த்து போட்டு தான் நாமளும்..ம் அதை மாதிரி செய்ய போறது..து.. :)

அது இருகட்டும்..ம்..

தங்களின் தாலாட்டும் ஞாபங்களையும் சுமந்து வரலாமே..மே..??..அதுவரை இந்த பாடலை கேட்டு மகிழுங்கோ..கோ.. :lol:

">

Edited by kuddipaiyan26

ம்ம்..அந்தந்த பருவங்களிள்..ள் அனுபவங்களிள்..ள் உங்களாள் மறக்க முடியாத அனுபவத்தை எங்களுக்கு கொஞ்சம் சொல்லலாமே..மே..??.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

நான் என்னத்தை புதுசா சொல்லப்போறன். எல்லாம் இதே உணர்வுகள் தான். :)

நீங்கள் இணைத்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி :o

  • கருத்துக்கள உறவுகள்

பிரக்கு எங்கட காதல் ஒரு வருட நாள் வந்த பிரக்கு என்ர அந்த பேரை தன் உடம்பில் பச்சை குத்தினவா....

எண்ட பெயரிண்ட ஆங்கில முதல் எழுத்தையும் இப்பிடித்தான் எனோட காதலி தண்ட காலில அழியாமல் எழுதினவா ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் அவ பாவிச்சது கத்தி. :lol: நாங்க காதலிக்க தொடக்கி ஒரு வருடத்திலும் கூட இருக்கும், எனக்கும் அவளுக்கும் இடையில ஒருநாள் ஒரு வாக்குவாதம். மாட்டார் ரொம்ப சின்னது, இப்ப நினைச்சாலும் சிரிக்காத அழுகிறதா எண்டு யோசினைவாறது. சரி அத விடுவம், அப்ப அந்த வாக்குவாத்ததில நான் கொஞ்சம் ஓவராய் கதைச்சுப்போட்டன். ஒரு கட்டத்தில நீ என்னை உண்மையாய் காதலிக்கவில்லை சும்மாய் நடிக்கிறாய் எண்டன். அந்த நேரத்தில நாங்கள் ரெண்டுபேரும் வேற இடங்களில இருந்த நாங்கள். உடனே கோல் வந்தது, வேறயார் அவள்தான். "நான் உங்களை காதலிக்கிறன் எண்டு எப்பிடி நிரூபிக்கிறது?" "நீ என்ன செய்தாலும் உன்னை நம்ப நான் தயாரில்லை" என்றேன். "கையிலே கத்தி வைத்திருக்கிறேன்" எண்டு அவ சொல்ல, "என்னை சும்மா வெருட்டாதை உனக்கு துணிவு காணாது" எண்டு சொல்லிப்போட்டு லைனையும் கட் பண்ணீட்டன். கொஞ்ச நேரத்தில "உன்னை என்னில பதிச்சிட்டன்" எண்டு SMS வந்தீச்சுது. நானும் சினிமாப்பட டயலாக் எல்லாம் விடுறாள் எண்டிட்டு கண்டும் காணாதமாதிரி இருந்திட்டன் :o . பிறக்கு நாங்களெலாம் சமாதானப்பட்டு கண காலத்திக்குப் பிறகு நாங்கள் ரெண்டுபேரும் சந்திகேக்க உந்த பழைய கதை வரவே எனேண்டாலும் நீ அண்டைக்கு விட்ட உல்டா டூமச் எண்டு சொல்லத்தான் காலில அவ செய்த வேலயைக்காட்டினா :lol: . அதுக்குப் பிறகு இண்டை வரையிலும் ஒருநாளும் அந்தக் கேள்விய நான் கேக்கேல்ல.

இது எண்ட முதலாவது காதல் எண்டாலும் சின்ன வயதில சில ஈர்ப்புகள் இருந்தன தான். முதலாவது ஈர்ப்பு 5ஆம் ஆண்டு படிக்கும் போது வந்தது. எனக்கு அப்போது அந்த ஈர்ப்புக்குக் காரணமாக இருந்தது, அந்தப் பிள்ளையில பிடித்தது அவளின் எழுத்தின் அழகும், அவள் வெளிக்கிடும் விதமும். அவள் என்ன செய்தாலும் அதிலொரு ஒழுங்கு, நேர்த்தி இருக்கும். இன்னொரு காரணம் அவள் நல்ல நிறம். எனக்கு முந்தி வெள்ளை நிறம் எண்டால் உயிர் மாதிரி. அவளை என்னை கவனிக்கப் பண்ண நான் பட்ட பாடு கனக்க பாருங்கோ. வெள்ளனயாய் வந்து அவளுக்கு பக்கத்தில எப்பிடியும் இடம் பிடிச்சிடுவன். எனக்கு அந்த எடம் கிடைக்கிறது எம்.பி சீட் கிடைக்கிற மாதிரி. மற்றது அவளுக்கு உந்த கோகுலம், அம்புலிமாமா எல்லாம் நல்ல விருப்பம். இவளுக்காக அந்த வயதிலையும் நான் அம்புலிமாமா கோகுலங்களை வாங்கிக்கொண்டு திரிந்ததை நினைக்க இப்பவும் சிரிப்பு வாறது. 5ஆம் ஆண்டு முடிய அவளும் நாட்டு சூழ்நிலையால எங்கயோ போயிட்டாள். பிறகு விசாரிச்சதில அவட அப்ப வெளிநாடு எண்டதால வெளிநாடு போயிடினமாம் எண்டு கேள்விப்பட்டன். அவளிண்ட பெயர் ஜனனி. :) யாரும் கண்டா எனக்கு ஒருக்கா சொலுங்கோ என்ன... :lol:

இரெண்டாவது ஈர்ப்பு 10ஆம் 11ஆம் அண்டு படிக்கும்போது கல்விநிலையத்தில என்னோட படிச்ச ஒரு பிள்ளையில வந்தது. அவள் மிகவும் அமைதியானவள். மிக மென்மையாகத்தான் கதைப்பாள். நல்ல உடல்வாகும், வாளிப்பான தோற்றமும், இடையையும் தாண்டி வளர்ந்திருக்கும் நீண்ட கருங்கூந்தலும் கொண்டவள். சாதாரண தரம் படிக்கும்போது இரட்டைப் பின்னலும் உயர்தரம் வந்த பின்னர் ஒற்றைப் பின்னலும் போடுவாள். சில நாட்களில் இது ரெண்டும் இல்லாமல் தலை மயிரைப் பறக்க விட்டபடி வருவாள். உந்த கோபிகா, நயன்தாரா எலாம் தோத்துப் போடுவீனம். அப்பிடி ஒரு வசீகரம் இருக்கும். அவள் சைக்கிள் ஓடுவதே ஒரு தனி அழகு. இதை ரசிபதற்காக நானும் எனது நெருங்கிய நண்பன் ஒருவனும் அவளுக்குத்தெரியாமல் அவளுகுப்பின்னால அலைஞ்சிருக்கிரம். எனக்கு அவளில் ஈர்ப்பை ஏற்படுத்தியது அவளின் கலவியிலிருந்த கெட்டித்தனம், மற்றயது அவளின் சாயல், சரியா எனது அம்மா போல இருக்கும். எனது பாடசாலை நீங்கள் அனைவரும் அறிந்த ஹாட்லிக் கல்லூரி. அவளும் எங்களின் சகோதர பாடசாலை மாணவிதான். நான் போகும் எல்லா போட்டிகளுக்கும் அவளும் வருவாள். இடங்கள் கிடைக்கும் போதும், நான் ஒன்று அவள் இரண்டு அல்லது அவள் ஒன்று நான் இரண்டு எனப் பலமுறை வந்திருக்கிறோம். உயர்தரம் வந்த பின்னர் அவளும் எனது அதே துறை அதே கல்வி நிலையம். ஆனால் நான் ஒருபோதும் அவளிடம் எனது விருப்பத்தை கூறவில்லை. அதைக் கூற துணிவும் என்னிடம் இருக்கவில்லை. கூறியிருந்தால் ஒருவேளை.... :lol: அவள் இப்போதும் அங்கேயே இருக்கிறாள். ஓர் ஆசிரியையாக பயிற்சி முடிந்து வேலைசெய்வதாக நண்பர்கள் சொன்னார்கள். இப்போதும் சிலவேளைகளில் எனது மனதில் ஒரு நெருடல், எங்கோ ஓர் மூலையில் வலி. :lol: அவளின் பெயர்.... அது இரகசியம். :unsure:

உண்மைதான் பல காதல்கள்(!) எனக்கு வந்து போன பின்பும், இன்னமும் முதல் காதலும், அதன் போது இட்டுக்கொண்ட முதல் முத்தமும் இன்னும் நினைவில் நின்று, இனிக்கின்றது... வேதனையும் தருகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.