Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை நிறுத்தவே முடியாது: புதுடில்லியில் மகிந்த ராஜபக்ச திட்டவட்ட அறிவிப்பு

Featured Replies

போரை நிறுத்தவே முடியாது: புதுடில்லியில் மகிந்த ராஜபக்ச திட்டவட்ட அறிவிப்பு

[வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கையின் போரை நிறுத்தவே முடியாது- ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பேன் என்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புதுடில்லி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்த முடியும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் என் நாட்டு குடிமக்கள். அவர்களைப் பாதுகாப்பது எனது பணி என்பதை இந்தியப் பிரதமருக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கிறேன்.

இந்தியாவில் பயிற்சி பெற்ற 1,200 தமிழர்களை (துணை இராணுவக் குழுவினரை) சிறிலங்கா படையில் இணைத்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

புதினம்

PM tells Rajapaksa to ensure welfare of Tamils

NEW DELHI: Prime Minister Manmohan Singh told President Mahinda Rajapaksa on Thursday to ensure the safety and welfare of ethnic Tamils as he met the Sri Lankan leader for the first time since the recent uproar over their condition in the island nation.

Rajapaksa, while apprising Singh about the steps being taken to protect the interests of Tamils, made it clear that the military offensive against the LTTE will not stop as his government was determined to "eliminate" terrorism before initiating the political process of settlement.

During their meeting on the sidelines of the BIMSTEC Summit here, Singh and Rajapaksa discussed the situation in Sri Lanka, including the LTTE-held North where a military offensive is underway against the Tamil tigers, sources said.

The Prime Minister talked about the "humanitarian" aspect of the conflict and asked Rajapaksa to ensure protection and welfare of innocent Tamils caught in the war, the sources said.

Singh emphasised that the interests of innocent civilians should be protected even while dealing with terrorism, they said.

The two leaders also discussed the problem of firing by Sri Lankan Navy on Indian fishermen and Rajapaksa assured Singh that his forces would exercise restraint.

This was the first meeting between Singh and Rajapaksa since political parties in Tamil Nadu, including the UPA ally DMK, raised an uproar over the Sri Lankan military offensive and pressed New Delhi to intervene to stop it.

Amid threats of en masse resignations by Tamil MPs, Singh had a telephonic talk with Rajapaksa last month during which the matter was discussed.

After the meeting, a visibly satisfied Rajapaksa said he had assured the Prime Minister that his government would ensure welfare of Tamils.

"We will assure you. We assure not only the PM but the whole world that we will look after Tamils. Nothing will happen to Tamils. We are looking after our people, it is my duty," the Sri Lankan President said.

To a question on permanent solution to the ethnic conflict, Rajapaksa said, "we must eradicate terrorism first then give political solution. We can't pass this on to the next generation... This is the practical solution."

He ruled out any compromise on fight against terrorism as also the ceasefire against LTTE till the Tamil tigers lay down their arms.

"For over two decades, Sri Lanka has been facing a tremendous challenge to our democratic way of life through barbaric actions of a terrorist group, the LTTE," the President said.

"There is no doubt that such groups have to be dealt with militarily," he said.

On the LTTE's offer for ceasefire, Rajapaksa said it could be possible if the Tamil outfit lays down its arms.

"Ceasefire has been there for so many years.. 20 years.. there have been agreements. (But) every time we have ceasefire, they got themselves strengthened, got firepower and hit back," Rajapaksa said.

"We are ready for a negotiated settlement. But we are clear, they have to lay down arms," he said.

On his reported remark that LTTE was using Indian fishermen to carry arms, the Sri Lankan President said he had made a mention about it to the Prime Minister as it is a "national security issue". The matter would be discussed at minister-level, he said.

He said Sri Lanka believes that any underlying causes, exploited by terrorists in an attempt to seek legitimacy for their operations, should be dealt with politically.

Terror groups are able to sustain themselves by illegal fundraising, narcotics and people trafficking, money laundering, and arms and ammunition smuggling, including through the sea routes in the Bay of Bengal, he said.

He said the seven-nation BIMSTEC should consider setting up of a mechanism to "effectively police the Bay of Bengal, to deny these terrorists mobility and connectivity."

Insisting that his government was keen to empower the Tamils, he referred to Eastern Sri Lanka and said a former 'child soldier' of LTTE was now the Chief Minister there.

"We have also recruited 1200 Tamil policemen. Some of them are trained here in India," he said, adding "Whatever possible we can do, we have done."

With regard to the relief material sent by India for the people caught in the conflict, the Lankan President said it will be sent to the "last point", through the Red Cross.

On the 13th Amendment to the Sri Lankan Constitution that will give Tamils more powers, he said it has not been implemented for long and "now we are implementing."

http://www.dnaindia.com/report.asp?newsid=...52&pageid=0

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொழுப்பு!!!!!!!

முதலில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் -இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னதாக, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளை ராணுவ நடவடிக்கைகள் மூலம்தான் ஒடுக்க வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையிலான பல்முனை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பேசும்போதும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதும் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஏழு நாடுகளைக் கொண்ட பிம்ஸ்டெக் எனப்படும் அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ``கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, விடுதலைப் புலிகளின் கொடூரமான நடவடிக்கைகளால் ஜனநாயக ரீதியான வாழ்க்கை முறையில் இலங்கை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. அப்படிப்பட்ட குழுக்களை ராணுவ நடவடிக்கை மூலம்தான் கையாள வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு நியாயம் சேர்ப்பதற்காக எந்த காரணத்தை அடிப்படையாகக் கூறுகிறார்களோ, அந்தப் பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்க்க வேண்டும். நாங்கள் அரசியல் தீர்வு காண்பதற்கான வழியில் உறுதியாகச் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.

பயங்கரவாதிகளின் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க வங்காள விரிகுடா பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இருதரப்பு ஆலோசனைகள்

பிற்பகலில், மன்மோகன் சிங்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இருதரப்புப் பிரச்சினைகள் தொடர்பாக தனியாக ஆலோசனை நடத்தினார்கள். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விவரித்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இந்தியத் தரப்பில் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் தெரிவித்த கவலைகளையும் ராஜபக்ஷ அவர்களிடம் மன்மோகன் சிங் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம், போர் நிறுத்தத்துக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, ``கடந்த 20 ஆண்டுகளாக போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் விடுதலைப் புலிகள் அதைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதுடன், தங்களது ஆட்களுக்கும் பயிற்சி கொடுத்து, திருப்பித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் தயார். ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்’’ என்றார் ராஜபக்ஷ் அவர்கள்.

இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணப் போகிறீர்கள் என்று கேட்டபோது, `` முதலில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதன் பிறகு அரசியல் தீர்வு காண வேண்டும். பயங்கரவாதத்தை அடுத்த சந்ததிக்கு நாம் கொடுக்கக் கூடாது’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.

தமிழர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமரிடம் உறுதி அளித்தீர்களா என்று கேட்டபோது, ``பிரதமருக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே சொல்லிக் கொள்கிறோம். தமிழர்களை நாங்கள் பாதுகாப்போம். அவர்களுக்கு எந்தத் தீங்கும் நடக்காது. எங்கள் மக்களை நாங்கள் பாதுகாக்கிறோம். அது எனது கடமை’’ என்றார் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.

இந்திய மீனவர்கள் படகுகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவதாக ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார். அதுபற்றி இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மைதான் முதலில் அரசபயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மைதான் முதலில் அரசபயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.

அதுதான் எல்லாவற்றையும் உருவாக்கியது

அகதித்தமிழன் என்று என்னையும்.................

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் எல்லாவற்றையும் உருவாக்கியது

அகதித்தமிழன் என்று என்னையும்.................

வசதியாக இருக்கிறீர்கள்தானே. பிறகு ஏன் வருத்தம்?

இந்திய தலை நகரிலை வைத்து உதை சொன்னது நல்லதுதான்....

Bimstec கூட்டத்தில் இலங்கைக்கு உதவிகள் கிடைக்கும் எண்று உறுதி கிடைத்த கொழுப்பிலை எடுத்து விட்டு இருப்பார்....

இந்தியாவில் இருந்து அனுப்ப படும் உணவு பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் இருந்து பெற்று இலங்கை அரசே வழங்கும் எண்டும் வேற சொல்லி இருக்கிறார்...

  • கருத்துக்கள உறவுகள்

வசதியாக இருக்கிறீர்கள்தானே. பிறகு ஏன் வருத்தம்?

அதை நீங்கள் முடிபு பண்ணக்கூடாது

அடிபட்ட நான் சொல்லணும்

தாயை இழந்தவனுக்கே தாயின் அருமைதெரியும்

தாய்இருப்பவனுக்கல்ல

ஒருமையில் விழித்த கருத்தெழுதுவது தவிர்க்கப்பட வேண்டுமென களத்தில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது-யாழ்பாடி

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை இந்தியாவில் வைத்து மஹிந்தர் திட்டவட்டம் - புலிகள் போன்ற பயங்கரவாத இயக்கத்தை இராணுவ ரீதியிலேயே கையாள வேண்டுமாம்

[14 நவம்பர் 2008, வெள்ளிக்கிழமை 8:35 மு.ப இலங்கை]

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியாவில் வைத்துத் திட்டவட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தனது அரசு அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் உறுதியளித்திருக்கின்றார்.

நேற்று புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இப்படிக் கூறியிருக்கின்றார்.

தமிழர்கள் எமது மக்கள். நாங்கள் அவர்களைப் பாதுகாத்து வருகிறோம், வருவோம் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களாக நாங்கள் யுத்த நிறுத்தங்களைச் சந்தித்துள்ளோம். இனிமேலும் பயங்கரவாதம் தொடர்வதற்கு அனுமதிக்க மாட்டோம் - என்றும் ஜனாதிபதி கூறினார்.

முன்னதாக ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டின்போது இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் பேச்சுகளை மேற்கொண்டார்.

இந்தப் பேச்சுகளின்போது இந்திய மீனவர்கள் விடயம் குறித்து ஆராயப்பட்டதாகக் கூறப்பட்டது. இதேவேளை, இந்திய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இந்திய மீனவர்கள் விவகாரத்தை விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார் இலங்கை ஜனாதிபதி. எனினும் இது தொடர்பான பேச்சுக்குத் தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்குவதையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

இதேசமயம் -

விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதக் குழுவை இராணுவ ரீதியில் கையாள வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் ஜனாதிபதி பிறிதொரு கூட்டத்தில் உரையாற்றுகையில் கூறியிருக்கின்றார். புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பாதையில் தமது அரசு திடமாக இருப்பதாக ‘பிம்ஸ்டெக்’ அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வங்காள விரிகுடா பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அந்தப் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கான - வலுவான - ஏற்பாடொன்றை உருவாக்குவது குறித்தும் சிந்திக்குமாறு அவர் கோரியுள்ளார்.

‘பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பான வங்காள விரிகுடா முன்முயற்சிகள்’ (பிம்ஸ்டெக்) என்ற இந்த மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியவை வருமாறு:-

சர்வதேச பயங்கரவாதம் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கான ஒத்துழைப்பு குறித்த ‘பிம்ஸ்டெக்’ பிரகடனத்தை இலங்கை முழுமையான மனதுடன் ஆதரிக்கின்றது.

பயங்கரவாதத்திற்கு எதிரான எமது போராட்டத்தில் இது முக்கிய மைல்கல் என இலங்கை கருதுகின்றது.

சட்டவிரோதமாக நிதி திரட்டுதல், போதைப்பொருள் மற்றும் ஆள்கடத்தல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், ஆயுதக்கடத்தல் போன்றவற்றை வங்காள விரிகுடா ஊடாக மேற்கொள்வதன் மூலம் பயங்கரவாத அமைப்புகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்கின்றன.

இந்தப் பயங்கரவாதிகளின் நடமாட்டம் மற்றும் தொடர்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக வங்காள விரிகுடாவை வலுவாகக் கண்காணிப்பதற்கான ஏற்பாடொன்றை உருவாக்குவது குறித்து சிந்திக்குமாறு உங்களைக் கோருகிறேன்.

கடந்த இரண்டு தசாப்த காலமாக இலங்கை தனது ஜனநாயக வாழ்விற்கான கடும் நெருக்கடிகளைப் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளிடமிருந்து எதிர்கொண்டுள்ளது.

இந்த அமைப்பை இராணுவ ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதேவேளை, இப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களுக்கு அரசியல் ரீதியான தீர்வையே காணவேண்டும் என இலங்கை கருதுகின்றது.

இக்காரணங்களைப் பயன்படுத்தியே பயங்கரவாதிகள் தமது செயல்களை நியாயப்படுத்த முனைகின்றனர். - என்றார் ஜனாதிபதி.

uthayan

  • கருத்துக்கள உறவுகள்

வாய் இருந்தால் வாங்காளமும் போய் வரலாம் என்று ...இதைத்தான் சொல்லுரது போல....

30 நிமிடத்தில் பேச கூடிய விடயமா இது?

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி களிப்பில் இருக்கும் மகிந்த அரசாங்கம் போரையே நம்பி தங்கி நிற்கிறது ஆகையால் போரை கைவிடாது அதற்கு புலிகளின் பலம் நிருபிக்கப்படவேண்டும் அதுவரைக்கும்??.....

  • கருத்துக்கள உறவுகள்

:) புலிகளின் பலத்தை நிரூபித்தபின் என்ன செய்வது ? அது எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வுகளைக் கொண்டு வருமா?

எனது நெருங்கிய உறவினர் ஒருவருடன் நேற்றுக் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் வன்னியுடனும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடனும் தொடர்புள்ளவர். அவரிடம் வன்னியின் இன்றைய நிலை பற்றிக் கேட்டேன். அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

"ஏறக்குறைய 90, 000 துருப்புக்களை வன்னிக்குள் குவித்து அரசு இந்தப்போரை ஒரு கவுரப் பிரச்சனையாக நடத்துகிறது. அதை எதிர்த்து நிற்பது வெறும் 7000 - 8000 போராடக்கூடிய இளைஞர்களைக் கொண்ட ஒரு சிறிய மரபுவழி ராணுவந்தான். வன்னியில் நடக்கும் செல் மழையிலும், அகோர விமான குண்டுவீச்சிலும் தாக்குப்பிடிக்கும் அந்த உயர்ந்த மனிதர்கள் என்றும் எமக்குத் தேவை. வெறும் வறட்டு கவுரவத்துக்காக அவர்களை ஒரு ராட்சதச் சேனையின் எதிரில் நிறுத்த விரும்புவதோ அல்லது எதிர்த்துப் போராட கேட்பதோ அநியாயம். அவர்கள் தம்மால் முடிந்த களத்தில் எதிரிக்கு அழிவை ஏற்படுத்துகிறார்கள், பாதகமான களங்களில் தம்மையும், அரிதான தமது ஆயுத வளங்களையும் பாதுகாத்துக்கொண்டு பின்வாங்குகிறார்கள். அவர்கள் போராடுகிறார்கள் இல்லையே என்றோ, அல்லது ராணுவம் முன்னேறுகிறது என்று சொல்வதற்கோ எமக்கு அருகதையில்லை".

"இப்போதைக்கு எமது வளங்களைச் சேமித்து வைப்பதே சரி. எதிரி முன்னேறும்வரை முன்னேறட்டும். ஆனால் போராட்டம் வேறு வடிவத்தில் தொடரும். தலமையினதும் போராளிகளினதும் இருப்பே அவசியம்".

என்னிடம் மவுனந்தான் விடையாக இருந்தது. அவர் சொல்வது சரி. ராணுவத்தை இன்று எதிர்த்து நின்று அழிவதை விட பின்வாங்குவது நியாயமானதுதான். இதை விட எமக்கு வேறு சரியான தெரிவு இல்லை. எமக்கு எமது தலமையும் போராளிகளும் தேவை.

காலம் வரும்போது எமது போராட்டம் மீண்டும் வீறு கொண்டெழுந்து வரும்.

இங்கே பலராலும் ஜீரணிக்க முடியாத உங்கடை கருத்தை ரொம்ப கஸ்டப்பட்டு, கவனமா முன்வைச்சிருக்கீங்க ரகுநாதன் :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலராலும் ஜீரணிக்க முடியாத உங்கடை கருத்தை ரொம்ப கஸ்டப்பட்டு, கவனமா முன்வைச்சிருக்கீங்க ரகுநாதன் :)

ரகு அவர்களுடைய கருத்தை

நீங்கள் ஏற்றுக்கொண்டதுதான்

ஆச்சரியம்................

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன்

பலராலும் ஜீரணிக்க முடியாவிட்டாலும் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதைக் காலம் தாழ்த்தியாவது ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும் ?

குகன்,

எனது உறவினர் சொல்வதில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்? அப்படியில்லாமல், ராணுவத்துடன் சண்டையிட்டே வந்திருந்தால் இன்று புலிகளின் பெரும் பகுதியே அழிந்து போயிருக்குமல்லவா? எமது இலட்சியத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் ஒரு ராணுவ நடவடிக்கையிலேயே அழிந்து போயிருந்தால் எமக்கு விடிவு எப்போ ? ஆகவே எமது வளங்களைக் காத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை.சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம். புலிகள் இருந்தால்த்தான் எமக்கு விடிவே !!! ஆகவே அவர்கள் எடுத்த முடிவு சரியானதே, என்னால் 100 வீதம் விளங்கிக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியும்.

பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்து வளங்களும் ஆரம்பத்திலிருந்தே பாதுகாக்கப்பட்டுத்தான் வருகின்றன. புலிகள் தோற்கின்றார்கள், ஊடறுப்புத் தாக்குதல் செய்கின்றார்களில்லை, என்ற நிலைப்பாடுள்ளவர்களுக்கு நடேசன் அவர்கள் ஏற்கெனவே பதிலிறுத்துவிட்டார்.

வளங்களை மலினப்படுத்துதல் என்பது தேசியத் தலைமையிடம் என்றுமே இருந்ததில்லை. எவற்றை எப்போது எங்கு பயன்படுத்துவது என்பது, தலைமையினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தப் போரை நிறுத்தவே முடியாது என்பதும் எங்கோ ஓரிடத்தில் பயன்படுத்தப்படும். தலைமையின் நோக்கத்தை நடந்து முடிந்த பின்பே அறியலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.