Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் எம்.என். நம்பியார் மரணம்

Featured Replies

பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மரணமடைந்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர் தற்ஸ்தமிழ்.காமில் செய்தி வெளியாகியுள்ளது.மேலதிக விபரம் இன்னமும் இணைக்கப்படவில்லை.

தற்ஸ்தமிழ்

சினிமாத்துறையினர் பலராலும் "குருசாமி" என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் நம்பியார் அவர்களின் ஆன்மா சாந்தியடைவதாக!

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் மற்றும் ரசிகப் பெருமக்களுக்கும் எமது அனுதாபங்கள்!!!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் மரணம்!

சென்னை: அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:

எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.

அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.

நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.

நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.

பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

அஞ்சலி

கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

http://thatstamil.oneindia.in/movies/news/...asses-away.html

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த எம். என். நம்பியார் அவர்கள் திரைப்படங்களில் வில்லனாக தோன்றினாலும் , தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர் .

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறைந்த நடிகர் நம்பியாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

நம்பியார் ஒரு ஐயப்பன் பக்தர். சபரிமலை உற்சவம் ஆரம்பமாகியுள்ள வேளையில் காலமாகியுள்ளார்.

சினிமாவில் கூட ஒழுக்கமாக இருக்கலாம் என்பதற்கு நம்பியார் ஒரு முன்னுதாரணம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

நடிகர் எம்.என். நம்பியார் மரணம்!

புதன், 19 நவம்பர் 2008( 15:54 IST )

முதுபெரும் நடிகர் எம்.என். நம்பியார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து வந்தார். அவரது நிலைமை இன்று காலை மிகவும் கவலைக்கிடமானது. பிற்பகல் 1.30 மணியளவில் நம்பியார் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நம்பியாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முக்கியப் பிரமுகர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், பொதுமக்கள் நம்பியாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கடந்த 1935ஆம் ஆண்டில் இருந்து நடித்து வந்த, நம்பியாரின் வில்லத்தனமான நடிப்பிற்கு தமிழகத்தின் பட்டி-தொட்டியெல்லாம் பாராட்டு கிடைக்கப்பெற்றது.

அதிலும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பல படங்களில் நம்பியார் ஏற்று நடித்திருந்த வில்லன் வேடங்கள் அனைத்தும், அந்தப் படங்களின் வெற்றியில் முக்கியப் பங்காற்றின எனலாம். எங்கவீட்டுப் பிள்ளை, குடியிருந்த கோயில், நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், படகோட்டி, நாளை நமதே என எம்ஜிஆருடன் நம்பியார் வில்லனாக நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் படங்களாக அமைந்தன.

வில்லன் நடிப்பு என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருபவர் நம்பியார். அவரது வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், கட்டுடல்வாகு, ஹீரோக்களுடன் போடும் சண்டைகள், நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று அந்தக் காலத்தில் ரசிகர்களை எண்ண வைத்தன எனலாம்.

எத்தனையோ ஹீரோக்களின் படங்களில் அவர் வில்லனாக நடித்திருந்தாலும், அவரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தால் அதன் ஸ்டைலே தனி. இருவரும் பேசும் வசனங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் பொறி பறக்கும்.

http://tamil.webdunia.com/newsworld/news/t...081119052_1.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த எம். என். நம்பியார் அவர்கள் திரைப்படங்களில் வில்லனாக தோன்றினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர் .

படங்களில் மட்டுமே வில்லனாக நடித்த நல்ல மனிதர்

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சிறந்த நல்ல நடிகர்.அன்னாருக்கு அஞ்சலிகளும்.அவரது குடுமபத்துக்கு அனுதாபங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் கதாநாயகர்களையே தனது வில்லத்தனமான நடிப்பால் மிளிர வைத்த தனித்துவக்குரலோன் எம் என் நம்பியார். இவரின் நடிப்பு வயது வேறுபாடுன்றி அன்றிலிருந்து இன்று வரை எல்லோரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருந்தமை அவரின் புகழை அவரின் மறைவின் பின்னும் மறையாது காக்கும். :)

Edited by nedukkalapoovan

நம்பியார் என்றதும் ஞாபகத்திற்கு வருவது அவரது உருட்டும் விழிகளும் கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து அவர் செய்யும் சேட்டைகளும். திரைப்படத்தில் மட்டுமே வில்லனான நடித்தவர். நிஜ வாழ்க்கையில் எல்லோராலும் மதிக்கப்பட்ட நல்லவராகவும், ஐயப்ப பக்தனாகி குருசாமியாகவும் திகழ்ந்தவர். நடிகர் சரத்பாபு தனது முதல்மனைவி ரமாபிரபாவை விவாகரத்து செய்த பின், மறு திருமணம் செய்ததும் இவரது மகளைத்தான்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அன்னாரது குடும்பத்தினர் மன அமதி பெறவும் எல்லோருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன்கள் என்றாலே அது நம்பியாருக்கு பின்னர் தான். அது அன்றும் சர் இன்றும் சரி. வில்லன் என்பதற்கு வரவிலக்கணமாக திகழ்ந்தவர். அவரின் இழப்பு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பாகும். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.iconcryvg6.gif

நம்பியார் மிக அற்புதமான நடிகர், மிகச் சிறந்த மனிதர். அன்னாரிற்கு என் அஞ்சலிகள்

நிச வாழ்வில் ஒரு நல்ல மனிதர்.

அஞ்சலிகள்

எனது அஞ்சலிகளும்...

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா ஐயப்பன் நிழலில் அமைதி கொள்ள எமது அஞ்சலிகள். அவரின் குடும்பத்தாரின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன் வீரப்பாவுக்கு அடுத்ததாக வந்த வில்லாதி வில்லன் நம்பியாரைத் தமிழுலகம் இன்று இழந்துவிட்டது. சிறுவனாயிருந்த போது நம்பியார் எம் ஜி யாரிடம் அடிக்குமேல் அடிவாங்கும்போது உற்சாகத்தில் கைகொட்டி ரசித்த நினைவுகள் நிழலாடுகின்றன. இன்று அந்த மாபெரும் கலைஞன் தனது எண்பத்தொன்பது வயது வரை வாழ்ந்து ஐயப்பனடி சேர்ந்துவிட்டார். எல்லாரும் இருமுடிகட்டி சபரிமலை யாத்திரைக்குப் போகும் காலத்தில் அவரும் தனது இஷ்டதெய்வத்தை நோக்கிப் பயணமாகிவிட்டார்.

அன்னாரின் ஆன்மா இறைவனடியில் பூரண சாந்தி பெற வேண்டி ஒரு நிமிட மௌனத்துடன் எனது அஞ்சலியையும் தெரிவிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.