Jump to content

திருவிழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

என்னடா கடைசியா இவனும் அறுகக்க வெளிக்கிட்டான் என்று யோசிக்காதையுங்கோ

இப்பகொஞ்ச நாளா ஊர் சம்பந்தமான பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்கும் சநதர்ப்பங்கள்

கிடைத்ததன் விளைவுதான் இது. :unsure:

ஊரில பொதுவாக கோயில் திருவிழாக்கள் தான் பெரியோர் முதல் சிறியோர் வரை கொண்டாட்டங்களின்

மையம்.கலை நிழச்சிகளை ரசித்தால் என்ன,கச்சான் தும்பு மிட்டாய் போன்றவை வாங்கி சாப்பிட்டால்

என்ன,பெரிசுகள் தங்கள் மலரும் நினைவுகளை மீட்ப்பதும் இளசுகள் உயிர்ச்சிலைகளை ரசிப்பதும்

சிறுசுகள் தேர்முட்டியில் நித்திரையிலிருக்கும் தங்கள் சகாக்களுக்கு மீசை வைப்பது தொடக்கம் வால்

கட்டுவது என்று சகல திருவிளையாடல்களுக்கும் என்று இந்த திருவிழாக்கள் களைகட்டும்.

இதை விட தமது வசதி வாய்ப்புகளை மற்றவர்களுக்கு காட்டுவதுக்கும் இந்த திருவிழாக்கள்தான் களம்.

முதள் நாள் கட்டிய சேலை அடுத்தநாள் திருவிழாவுக்கு கட்டமாட்டார்கள்.இதைவிட நகை நட்டு

இத்தியாயிகள்.இந்த விசையத்தில் ஆண்களின் நிலை ரொம்ப மோசம்.கீளே ஒரு வேட்டி மேலுக்கு

திறந்த மேனிதான்.இதைவிட திருவிழா உபயகாரர்களும் தங்கள்,விலாசங்களை,காட்ட வேண்டாமோ?

அவர்களும் தங்கள் பங்கிற்க்கு முதல் திருவிழாக்காரர் இரன்டு கூட்டம் மேளம் பிடித்தால் மற்றவர்

நாலு கூட்டம் அல்லது இசைக்குளுவோ வில்லுப்பாட்டோ பிடித்து பின்னிப்போடுவார்.

இதில மகேஸ்வர பூசை அதுதான் அன்னதானம் என்றால் சொல்லவே வேண்டாம்.சாப்பாட்டு

வாழியோட திரிபவகர்கள்தான் அந்தநேரத்து கதாநாயகர்கள்.முன்னுக்கு,பின்

னுக்கு,சைற்றுக்கு என்று

எந்தப்பகமும் பார்ககாமல் நேராய் பெண்கள் இருக்கும் பக்கத்தில் போய்தான் நிப்பினம்.இஞ்சால

பக்கம் குஞ்சுகுறுமன்கள் அண்ணை இஞ்சை கொஞ்சம் சாம்பார் விடுங்கோ என்றும் பெரிசுகள் அப்பு

ராசா இஞ்சை எப்பன் சோத்தைப்போட்டுட்டு போவப்பு என்றும் வாய் கிளிய கத்தினாலும் சாம்பாரும்

வராது சோறும் வராது.சாப்பிட்ட கையும் காஞ்சுபோயிடும்.

ஆணால் அங்கால பெண்கள் பக்கம் ஒரு இலைக்கு சாம்பாரோ சோறோ போட நாலு பேர் வாழியோட

நிப்பினம்.அப்ப யோசிக்கிறது எங்களுக்கும் ஒருகாலம் வரும் அப்ப நாங்களும் சாப்பாட்டு வாழியோட

கதாநாயகர் ஆகலாம் என்று.இதைவிட தேர்த்திருவிழா என்றால் அது ஒரு தனிச்சிறப்பு.இப்படி ஊர் கூடி

தேர் இழுத்த கூட்டம் இப்ப ஊர்ஊரா அலையுது.திரும்புமா அந்தக்காலம்.

Posted

சஜீவனும் முதன்முதலாய் சொந்தமாக ஒரு கதை எழுதிப்போட்டு இருக்கிறீங்கள். வாழ்த்துகள். இப்பிடி திருவிழா பற்றி கிட்டடியில ஒரு மூண்டு நாலு மாதத்துக்க யாழில எங்கையோ நாங்கள் எல்லாரும் நீண்ட கருத்துக்கள் எழுதி இருந்தம். எதில எண்டு மறந்து போச்சிது. எங்களுக்கு ஊரே அகதியாய் போனதால உதுகள் எல்லாம் சின்னவயசிலயே ஒண்டும் அனுபவிக்க முடியாமல் போச்சிது. நாங்கள் பார்த்த திருவிழா ஷெல்லடியும், குண்டு விழுறதும், சூடுபாடும், மண்டையில போடுறதும்.. ஊர் ஊராய் அகதியா ஓடுறதும்.. உதுகள்தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சஜீவனும் முதன்முதலாய் சொந்தமாக ஒரு கதை எழுதிப்போட்டு இருக்கிறீங்கள். வாழ்த்துகள். இப்பிடி திருவிழா பற்றி கிட்டடியில ஒரு மூண்டு நாலு மாதத்துக்க யாழில எங்கையோ நாங்கள் எல்லாரும் நீண்ட கருத்துக்கள் எழுதி இருந்தம். எதில எண்டு மறந்து போச்சிது. எங்களுக்கு ஊரே அகதியாய் போனதால உதுகள் எல்லாம் சின்னவயசிலயே ஒண்டும் அனுபவிக்க முடியாமல் போச்சிது. நாங்கள் பார்த்த திருவிழா ஷெல்லடியும், குண்டு விழுறதும், சூடுபாடும், மண்டையில போடுறதும்.. ஊர் ஊராய் அகதியா ஓடுறதும்.. உதுகள்தான்

நன்றி மாப்பு வாசித்து கருத்து சொன்னதுக்கு.நீங்கள் சொல்வது நான் எழுதியகாலத்துக்கு முந்தியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகிவன் வாழ்த்துக்கள்....உந்த கதாநாயக செட்டைகளை இப்ப புலத்தில நம்மன்ட வாரிசுகளும் செய்யுதுகள்....ஒரு வித்தியாசம் இங்கிலிசில செய்யுதுகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகிவன் வாழ்த்துக்கள்....உந்த கதாநாயக செட்டைகளை இப்ப புலத்தில நம்மன்ட வாரிசுகளும் செய்யுதுகள்....ஒரு வித்தியாசம் இங்கிலிசில செய்யுதுகள்

வாசித்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி புத்தன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

sagevan

சிறுவயது நினைவுகளை மீட்டிப் பார்க்க வைத்ததற்கு வாழ்த்துக்கள்.....

பக்கத்து இலைக்கு பருப்பு வேணுமாம் என்று விட்டு கூப்பிட்டுவிட்டு எனக்கும் கொஞ்சம் போடுங்கோ அண்னை என்று கேட்பதெல்லாம்.....! ஆகா.. அந்தக்காலம்....

பழைய நினைவுகளின் நல்ல மீட்பு....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது வீடு கூட கோவில் வீதியில்த் தான் உள்ளது.திருவிழா தொடங்கினால் எமது வீட்டு கொண்டாட்டம் போல் இருக்கும்.தேருக்கு எல்லோரும் மடை வைப்பார்கள்.இப்போதும் கூட.

சஜீவன் இப்போது உள்ளவர்களுக்கு இப்படியான அனுபவங்கள் வரவே வராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகீவன் நானும் ஊரிலை குருபூசை, பிள்ளையார் கதை,திருவம்பா , பாறணை எண்டு மோதகத்தை பாதியாய் வெட்டி குடுக்குறதிலிருந்து கதலிவாழைப்பழத்தை பிரிச்சு குடுக்குறவரைக்கும் எல்லாத்தையும் முன்னுக்கு நிண்டு செய்தனான்.

அப்ப நான் மினைக்கெட்ட என்ரை அவவுக்கு :o இரண்டு பாதி மோதகத்தை நைசாய் குடுத்திட்டன்.

இதை பாத்த என்ரை வில்லன் கோயில் மணியகாரரிட்டை போட்டுக்குடுத்துட்டான் . :)

அண்டு புடிச்ச தரித்திரம் இண்டைவரைக்கும் நிக்குது. இப்பவும் பந்தியிலை அப்பளம் மிளகாய் கூட போட விடுறாங்களில்லை :D

என்ரை பழையவில்லன் பிரான்சிலையோ இல்லாட்டி கனடாவிலை தான் இருக்கிறானாம் டேய் எண்டைக்காவது உனக்கு இருக்கடா திருவிழா :unsure:

சகீவன் இதைமாதிரி கலியாணவீட்டு பந்தியிலை பாயாசம் குடுத்த கதையும் இருக்குமெண்டு நினைக்கிறன்.எனவே தொடர்ந்து குட்டிசுயவிபரங்கள் எழுதவும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சகி ஊர் நினைவெல்லாம் வருகுது ஏன் நெப்போலியனோட கதைத்தனிங்களோ :unsure: (சும்மா கோவிக்கப்படாது ) எனக்கு ஒரு பழக்கம் திருவிழா என்றால் கோவிலுக்கு போறதில்லை சும்மா நாட்களில தான் போவேன் ஆனால் திருவிழாவில கட்டுத்தேர் கட்டுறது நானும் எனது நண்பர்களுமே கட்டி கொடுத்திட்டு வந்திடுவோம்.பழைய நினைவுகளை தொடர்ந்து மீட்டுங்கோ எங்களுக்கும் சொல்லுங்கோ என்ன

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளங்கவி,ஈிழப்பிரியன்,கு.சா மற்றும் சுப்பண்ணை பதிவை வாசித்து கருத்து சொன்னதுக்கும் ஊக்கம் தந்ததுக்கும் மிக்க நன்றி :lol:

Posted

சஜீவன் உங்கள் அனுபவங்களை மீட்டி என்னை மீண்டும் பருப்பு வாளி தூ(தா)க்கின சம்பவங்களை நினைக்க வைத்ததற்கு நன்றிகள். நீங்கள் வாளி தூக்கினதிற்கும் ஏதும் பிரயோசனம் கிடைச்சதா?? :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சஜீவன் உங்கள் அனுபவங்களை மீட்டி என்னை மீண்டும் பருப்பு வாளி தூ(தா)க்கின சம்பவங்களை நினைக்க வைத்ததற்கு நன்றிகள். நீங்கள் வாளி தூக்கினதிற்கும் ஏதும் பிரயோசனம் கிடைச்சதா?? :rolleyes::o

எங்கே கிடைச்சுது :D .வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றி சாத்திரி.

Posted

இப்படி ஊர் கூடி தேர் இழுத்த கூட்டம் இப்ப ஊர்ஊரா அலையுது.திரும்புமா அந்தக்காலம்.

ம்ம்ம்... "அது ஒரு அழகிய நிலாக்காலம். தினம் தினம் கனவினில் உலாப்போகும்... நிலவுகள் கூடி பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்". :wub::(

சஜீவன், தொடருங்கள் உங்கள் அனுபவங்களை பதிவுகளாக. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி மல்லிகை வாசம் உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்க்கும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நகைச்சுவையாக உண்மையை , கூறிய சஜீவனின் ஏக்கம் நன்றாக இருந்தது . :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நகைச்சுவையாக உண்மையை , கூறிய சஜீவனின் ஏக்கம் நன்றாக இருந்தது . :lol:

நன்றி தமிழ் சிறி உங்கள் கருத்துக்கு :)

  • 2 weeks later...
Posted

சகிவன் தாத்தா..!!

திருவிழா எல்லாம் கலைகட்டுது வாழ்த்துகள்..ள்.. :lol: நானும் எல்லாம் திருவிழாவிலையும் சாமியை கும்பிட தான் போறனான் ஆனா திருவிழா முடிந்தா பெறகு சாமி மாயமா மறைந்திடுது ஒவ்வொரு முறையும் தாத்தா..தா எந்த சாமியை சொல்லுறன் எண்டு விளங்குது தானே.. :lol:

உதுக்கு ஏதாச்சும் பரிகாரம் இருக்கோ..கோ..??.. தொடரட்டும் தாத்தாவின் விழாக்கள்..ள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகிவன் தாத்தா..!!

திருவிழா எல்லாம் கலைகட்டுது வாழ்த்துகள்..ள்.. :lol: நானும் எல்லாம் திருவிழாவிலையும் சாமியை கும்பிட தான் போறனான் ஆனா திருவிழா முடிந்தா பெறகு சாமி மாயமா மறைந்திடுது ஒவ்வொரு முறையும் தாத்தா..தா எந்த சாமியை சொல்லுறன் எண்டு விளங்குது தானே.. :lol:

உதுக்கு ஏதாச்சும் பரிகாரம் இருக்கோ..கோ..??.. தொடரட்டும் தாத்தாவின் விழாக்கள்..ள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

கருத்துக்கும்,ஊக்கத்திற்க்க

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.