Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாம் - படைத்தரப்பு அறிவிப்பு

Featured Replies

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாம் - படைத்தரப்பு அறிவிப்பு

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாகியுள்ளது என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அக்கராயன்குளம், திருமுறிகண்டி, கொக்காவில் ஆகிய பகுதிகள் ஊடாக படை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினரின் பல்வேறு படைப்பிரிவும் களமிற்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/

குருக்கள் குசுவிட்டால் குற்றம் இல்லை எண்டு இஞ்ச யாரோ முந்தி ஒருத்தர் ஒரு பழமொழி சொல்லி இருந்தார். யாழில இருக்கிற உறுப்பினர்கள் சிறீ லங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிடுற செய்திகளை இஞ்சகொண்டு வந்து ஒட்டுறது சமூகவிரோத செயலாக இஞ்ச இருக்கிற கடும்போக்காளர்களால கருதப்படுகிது. ஆனால்.. அதேவேளைய பதிவு, புதினம் செய்யேக்க கேட்பார் ஒருவரும் இல்லை. இப்ப பதிவுக்கும் செய்திகள் ஒண்டும் கிடைக்கிது இல்லப்போல இருக்கிது.

சிறீ லங்கா பாதுகாப்பு அமைச்சு தண்ட செய்திகளில உண்மை சொல்லுறானோ, பொய் சொல்லுறானோ எங்கட ஆக்கள் எல்லாரும் அதுக்கதான் தஞ்சம் போல இருக்கிது. அதாவது அவர்கள் அதைப்போட்டு பிறகு பகுத்தாறாய்ஞ்சு அதில தாங்கள் உண்மை எண்டு கருதுறதமாத்திரம் வெளியில சொல்லுவீனம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய இந்த கிளிநொச்சிக்கான யுத்தத்தில் இதுவரை தமது தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 70 பேர் காயங்களுக்குள்ளானதாகவும் ராணுவம் தனது செய்திக்குறிப்பில் சொல்லியுள்ளது. மூன்று முனைகளினூடாக முன்னேறும் ராணுவத்தைப் புலிகள் கடுமையாக எதிர்த்துச் சமர் செய்வதாகவும் கூறும் இந்தச் செய்திக் குறிப்பு, புலிகளின் முக்கிய அணிகள் இந்தத் தாக்குதலில் பங்கேற்றுள்ளதை அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் தெரிந்துகொண்டதாகவும் கூறியிருக்கிறது.

வழக்கம் போல அதிகளவான புலிகளும் இதில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்டதிலிருந்து அறிந்துகொண்டதாகவும் கூறியிருக்கிறது !

27 பேர் என்று ராணுவமே கூறும் கணக்கின்படி பார்த்தால் அது அதிக விலை கொடுத்துள்ளதாகவே படுகிறது. தணிக்கையின் பங்கையும் எடுத்துவிட்டால் இதன் இன்னும் இருமடங்காவது இருக்கும் உண்மையான இழப்பு.

27 திகதி பின்னேரத்துக்கு மூதல் வந்துடுவினமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தத்தான் சொன்னாலும் பார்ப்ம் பொறுத்திருந்து முரளி சொன்னது மாதிரி சிறிலங்காவின் இனையத்தளங்களைத்தான் வெட்டி ஒட்டிம் புதினம் சங்கதி போன்ற ஆக்கள் அவயல் இனைச்சாத்தப்பில்ல பாரும் ஏனென்டால் அவயல் பெரிய ஆக்கள் போலக்கிடக்கு

வன்னி மோதல்களில் இரு தரப்பிலும் கடுமையான இழப்பு

இலங்கையின் வடக்கே புலிகளின் முக்கிய இடமாக கருதப்படும் கிளிநொச்சியைக் கைப்பற்றும் முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபடுகின்ற இலங்கை அரச படையினருக்கும், அதனைத் தடுத்து நிறுத்தப் போராடிவருகின்ற விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றுவரும் உக்கிர மோதல்களின்போது இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை பாதுகாப்பு அமைச்சு இன்றுமாலை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கிளிநொச்சியை நோக்கி பல முனைகளில் படையினர் முன்னேறி வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த மோதல்களில் சுமார் 27 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 70 படையினர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட சில இராணுவத்தினர் தத்தமது படையணிகளுடன் இன்னமும் வந்து இணைந்து கொள்ளவில்லையென்றும், காயமடைந்த 70 பேரில் சுமார் 35 சிப்பாய்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மோதல்கள் குறித்து கருத்துவெளியிட்டுள்ள விடுதலைபுலிகளின் ஆதரவு இணையத்தளங்கள், ஞாயிற்றுக்கிழமை முதல் இடம்பெற்றுவரும் இந்த கடும்மோதல்களின்போது சுமார் 43 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 70 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும், இறந்த படையினரின் எட்டு சடலங்களை புலிகள் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.

அத்துடன், செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:15 மணியளவில் உருத்திரபுரம் பகுதி ஊடாக குஞ்சுப்பரந்தன் நோக்கி மும்முனைகளில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டதாகவும், இம்மும்முனை முன்நகர்வுகளுக்கு எதிராக பிற்பகல் 2:30 மணி வரை விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வுகளை முறியடித்திருப்பதாகவும் அந்த இணையத்தளங்கள் விடுதலைப்புலிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா இது ஒருத்தன் ஒரமாதிரிச்சுல்லுறான்

கிளிநொச்சி பகுதியினை நோக்கி முன்னேறும் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் சமர் - 27 படையினர் பலி; பலரைக் காணவில்லை

வீரகேசரி நாளேடு 11/24/2008 11:19:43 PM - கிளிநொச்சியினை நோக்கி மூன்று முனைகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் படையினர் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அடம்பன், புதுமுறிப்புக்குளம், திருமுறிகண்டி பகுதிகளிலிருந்தே படையினர் கிளிநொச்சி நோக்கிய முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை ஆரம்பமான மோதல் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது. நேற்று இடம்பெற்ற மோதலில் 27 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 70 படையினர் வரையில் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் 120 க்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் வரையில் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியை நோக்கிய படை நகர்வில் படையினர் நகரை அண்மித்து விட்டனர் என்றும் இந்த மோதலில் புலிகளுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், படையினரில் பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் கூறியதாவது:

கிளிநொச்சி நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மண்மேடுகளை மும்முனைகளிலிருந்தும் தகர்த்தவாறு இன்று அதிகாலை முதல் படையினர் கடும் முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டனர். நேற்று அதிகாலை 3.10 மணியளவில் ஆரம்பித்த இருதரப்பு மோதல்கள் மாலை 6 மணிவரை நீடித்துள்ளன. அத்துடன், இன்று அதிகாலையும் அவை தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை கிளிநொச்சி நிவில், யாழ்ப்பாணம் கிளாலி மற்றும் முல்லைத்தீவு ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளிலும் இருதரப்புக்களுக்குமிடையில் நேற்று முழுவதும் சுமார் 8 மணித்தியாலங்களாக கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் போது படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மோதல்களை அடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.

27 படையினர் ....

Commenting on Mangala Samaraweera's Defense Watch analysis that over 200 security forces personnel were killed and the rumors that over 600 were killed,

கொழும்பிலிருந்து கிடைத்த ஒரு தகவலின்படி (தகவலின் உண்மை, பொய் சரியாக தெரியவில்லை)

நல்லூரை திரும்ப பிடித்து விட்டார்களாம்!! அடுத்தது பூநகரி நோக்கி நகருகிறார்களாம்!! யார்???????

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரை திரும்ப பிடித்து விட்டார்களாம்!! அடுத்தது பூநகரி நோக்கி நகருகிறார்களாம்!! யார்???????

புலம்பெயர் தமிழர்களின் நெஞ்சில் பால் வார்க்கிற செய்திகளைக் கொண்டு வருவோர்க்கு வாயில் சக்கரை போடப் பலர் காத்திருக்கிறார்கள். எனவே தெளிவான செய்திகளை, உறுதிப்படுத்திவிட்டு எழுதுங்கள்..

27 படையினர் ....

கொழும்பிலிருந்து கிடைத்த ஒரு தகவலின்படி (தகவலின் உண்மை, பொய் சரியாக தெரியவில்லை)

நல்லூரை திரும்ப பிடித்து விட்டார்களாம்!! அடுத்தது பூநகரி நோக்கி நகருகிறார்களாம்!! யார்???????

மனலாற்றில் இருந்து அளம்பிலால வந்த இரானுவமாக இருக்குமோ?....

  • தொடங்கியவர்

கிளிநொச்சி பகுதியினை நோக்கி முன்னேறும் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் சமர் - 27 படையினர் பலி; பலரைக் காணவில்லை

கிளிநொச்சியினை நோக்கி மூன்று முனைகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் படையினர் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அடம்பன், புதுமுறிப்புக்குளம், திருமுறிகண்டி பகுதிகளிலிருந்தே படையினர் கிளிநொச்சி நோக்கிய முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை ஆரம்பமான மோதல் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது. நேற்று இடம்பெற்ற மோதலில் 27 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 70 படையினர் வரையில் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் 120 க்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் வரையில் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியை நோக்கிய படை நகர்வில் படையினர் நகரை அண்மித்து விட்டனர் என்றும் இந்த மோதலில் புலிகளுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், படையினரில் பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் கூறியதாவது:

கிளிநொச்சி நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மண்மேடுகளை மும்முனைகளிலிருந்தும் தகர்த்தவாறு இன்று அதிகாலை முதல் படையினர் கடும் முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டனர். நேற்று அதிகாலை 3.10 மணியளவில் ஆரம்பித்த இருதரப்பு மோதல்கள் மாலை 6 மணிவரை நீடித்துள்ளன. அத்துடன், இன்று அதிகாலையும் அவை தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை கிளிநொச்சி நிவில், யாழ்ப்பாணம் கிளாலி மற்றும் முல்லைத்தீவு ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளிலும் இருதரப்புக்களுக்குமிடையில் நேற்று முழுவதும் சுமார் 8 மணித்தியாலங்களாக கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் போது படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மோதல்களை அடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.

http://www.virakesari.lk/

மகிந்த அரசின் யுத்த ஊதுகுழல்களான சிங்கள கெல உறுவையவின் இத்திடீர் தடம்புரளல் எதற்கு????????

JHU agrees to a cease fire on Indian guarantee

November 24th, 2008 · No Comments

The JHU says if India could guarantee a ceasefire with LTTE the government could consider the issue.

JHU propaganda secretary Nishantha Sri Warnasinghe stressed this point to ‘Lanka Dissent’ when asked for a comment on media reports that the government has agreed for a truce with the LTTE.

“The central Indian government is under intense pressure today over the war in northern Sri Lanka. India will have a general election early next year. To gain political mileage, various parties have included Sri Lanka in their agendas,” he said.

The JHU spokesman noted that previously only pro-Tiger TN parties had pressurized New Delhi, while now the CPI has entered and changed the situation qualitatively.

“We should accept that reality. The pressure on the Indian centre has increased.”

The Indian High Commission had called the entire politburo of the JHU a few days ago, and reports confirm that the JHU till then had vehemently opposed any talk on a ceasefire with the LTTE.

The issue of an Indian guarantee for a cease fire for the government to consider it, is thus the first apparent change on the issue on the JHU side.

http://www.orunews.com/?p=2690#more-2690

நிச்சயமாக இதன் பின்னனியில் மகிந்த அரசே உள்ளது!!! பிரளயத்துக்கு முன்னாக குத்திக்கரணம் அடிக்க மகிந்த தயாராகிறரா?????

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சிக்கான இந்த மோதலில் ராணுவத்தினர் 78 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் புலிகள் இன்று அறிவித்துள்ளனர். மேலும் இந்த முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும

இறுதிச்சமர் இறுதிச்சமர் எண்டு எத்தினை உறுதிச்சமர் வந்துட்டுது.... வெக்கமிலாமல் திரும்பவவும் வந்து இதையே சொல்லிக்கொண்டு?.....

இடங்களைப்பிடிக்கிறதால வெற்றி யடையமுடியாது.... எங்கள் போரட்டத்தின் இலக்கையும் அழிக்கமுடியாது... ஆகவே சிங்கள அரசபங்கரவாதம் வெற்றி பெறமுடியாது.... இதை உணரத்தொடங்கிட்டாங்கள் அதுதான் இப்ப பேச்சுவார்த்தை அது இது எண்டு கதை விடுறாங்கள்

இறுதிச்சமர் இறுதிச்சமர் எண்டு எத்தினை உறுதிச்சமர் வந்துட்டுது.... வெக்கமிலாமல் திரும்பவவும் வந்து இதையே சொல்லிக்கொண்டு?.....

இடங்களைப்பிடிக்கிறதால வெற்றி யடையமுடியாது.... எங்கள் போரட்டத்தின் இலக்கையும் அழிக்கமுடியாது... ஆகவே சிங்கள அரசபங்கரவாதம் வெற்றி பெறமுடியாது.... இதை உணரத்தொடங்கிட்டாங்கள் அதுதான் இப்ப பேச்சுவார்த்தை அது இது எண்டு கதை விடுறாங்கள்

இந்த நில ஆக்கிரமிப்பில் சிங்களம் தோற்றால் உலகமே தோற்றதற்கு சரி. அதுதான் மெதுவாக காயை மாற்றி நகர்த்த பார்க்கினம்.

அதுதான் கலைஞர் கூட்ட முடிவும் பிரதமரை சந்திப்பதும். கலைஞரால் தான் போர்நிறுத்தம் வந்தது என்று தமிழகத்தை அமுங்கச்செய்ய திட்டங்கள் போகின்றன் போலும்.

ரகுநாதன் massive attack எண்டால் ஒரு டிவிசனையே காணவில்லை எண்டு தேடுறாங்கள் போல கிடக்கு. எல்லா ஸ்கோரும் இன்னம் 48 மணத்தியாலத்தில வாசிபடும். அப்ப சிங்களத்துக் என்ன முழு உலகத்துக்கே பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நேசன் ,

இன்று போர்நிறுத்தம் என்பது வன்னியிலுள்ள மக்களுக்கும், போராளிகளுக்கும் நிச்சயம் அவசியமானதொன்று. தொடர்ந்து நடக்கும் இந்த வன்னி ஆக்கிரமிப்புக்குள் இருந்து சிறிதுகாலமேனும் அவர்களுக்கு மூச்சுவிடச் சந்தர்ப்பம் கிடைத்தால் அது நல்ல விடயந்தான்.

இந்தியாவை இலங்கைப் பாவித்தாலும் கூட, தமிழ்நாட்டு அழுத்தத்தாலோ அல்லது வேறு எந்தவொரு அழுத்தத்தாலோ யுத்த நிறுத்தம் ஒன்றிற்குப் பேரினவாதம் உடன்படுமானால் அதை நாம் இன்றைய கட்டத்தில் ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது. ஆனால் இது பேச்சுவார்த்தை, கிராமசபைத் தீர்வு என்று வருமானால் எமக்குச் சரியான தருணத்தில் அதிலிருந்து வெளியேறுவதுதான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் massive attack எண்டால் ஒரு டிவிசனையே காணவில்லை எண்டு தேடுறாங்கள் போல கிடக்கு. எல்லா ஸ்கோரும் இன்னம் 48 மணத்தியாலத்தில வாசிபடும். அப்ப சிங்களத்துக் என்ன முழு உலகத்துக்கே பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஆமாம்

அத்துடன்

செஞ்சிலுவை சங்கத்திடம் குளிராத............??? ம் கொடுக்கப்படலாம்???????????

ஆமாம்

அத்துடன்

செஞ்சிலுவை சங்கத்திடம் குளிராத............??? ம் கொடுக்கப்படலாம்???????????

ஆமாம் அத்துடன் நந்தவனத்தில ஒழுங்கு செய்திருக்கிற பிறந்த தின கொண்டாட்டங்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் அழைப்பு விட்டிருக்காம்.

அங்கை.....????

என்ன......????

பரிமாறுவார்கள்....????

குளிரா ஏதாலும்?....???

இல்லாட்டி மாரி மழைக் குளிருக்கு சூடா... ஏதாலும்...?????

  • கருத்துக்கள உறவுகள்

மாரிகாலம் என்பது சிங்களப் படைகளுக்கு படை நடவடிக்கை செய்ய முடியாத காலம் என நம்பிக் கொண்டிருப்பதை விட அச் சமயத்தில் கொட்டகைகளுக்குள் வாழப் போகுகின்ற மக்கள் குறித்துச் சிந்தியுங்கள். வன்னியில் மலேரியா என்பது மிகவும் பாராதூரமான ஒரு நோய்.. மலேரியாவிற்கான தடுப்பைச் செய்யச் சொல்லிச் செஞ்சிலுவைச் சங்கத்தை வலியுறுத்துங்கள்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு என்பது மலேசியாவிற்குப் பிரபலமான இடம்

:lol: :lol: :lol:

Sri Lanka rebel HQ 'to fall soon'

The Sri Lankan army has said that the capture of the Tamil Tiger rebels' stronghold of Kilinochchi is imminent.

Kilinochchi is the rebels' de facto capital in the north and troops have been attacking it from three directions since Sunday morning.

The rebels have been fighting for a separate homeland for Tamils in the north and east since 1983 and 70,000 people have died in the violence.

The Tamil Tigers have not yet commented on the army claims.

"The fall of Kilinochchi is very imminent," defence spokesman Keheliya Rambukwella was quoted by Reuters news agency as saying.

The spokesman said the rebels appeared to be retreating.

Heavy fighting has been going on in the area for the past few days as the Sri Lankan military makes a final push to claim the territory.

The army wants to crush efforts by the rebels to secure a separate Tamil state.

Later on Thursday, the Tigers' leader Velupillai Prabhakaran is to deliver his only speech of the year as the rebels commemorate their dead.

Aid agencies have estimated as many as 230,000 people in rebel-controlled areas have been displaced by the fighting.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7749475.stm

யுத்தகாலத்திலும் நடுநிலை தவறாத செய்திகள் தர நினைப்பது பாராட்டத்தக்கது தான்.

ஆனால் தமிழ் ஊடகங்களை சிங்கள சார்பு செய்திகளால் ஆக்கிரமிப்பு செய்து தமிழர்களுக்கு நடுநிலை என்னும் பெயரால் விச ஊசி ஏற்ற நினைப்பவர்கள் தமிழர் தரப்பு செய்திகள் இனவாத சிறிலங்காவின் ஊடகங்களால் முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதே அவற்றை முறியடிக்க என்ன செய்தீர்கள்?!

உண்மையான நடுநிலை வாதிகளுக்கு, தமிழர்தரப்பு ஊடகங்களை சிங்கள சார்பு செய்திகளால் ஆக்கிரமிப்பு செய்வதை போலவே சிங்களத்தின் ஊடகங்களில் தமிழர் தரப்பு செய்திகளை கொண்டு போய் சேர்க்கும் தைரியம் வேண்டும். இல்லையென்றால் உங்கள் நிலைக்கு பெயர் நடுநிலை அல்ல. சிங்கள இனவாத பிரச்சாரங்களின் ஊதுகுழலாய் செயற்படும் நிலை என்பதே அதற்கு பொருத்தமான பெயர்.

சிங்களம் முற்று முழுதாக இருட்டடிப்பு செய்யும் பொங்குதமிழ், மாவீரர் நிகழ்வுகள் போன்ற தமிழர் தரப்பு செய்திகளை சிறிலங்காவின் ஊடகங்களில் பிரசுரிக்கும் வண்ணம் இந்த நடுநிலை பேர்வழிகள் இதுவரை ஏதாவது முயற்சிகள் செய்ததுண்டா? போராட்டங்கள் நடத்தியதுண்டா?

உங்கள் நடுநிலையை நிரூபிக்க, சிங்களம் இருட்டடிப்பு செய்யும் தமிழர் தரப்பு செய்திகளை சுவரொட்டிகளாக கொழும்பு நகரின் தெருக்களில் ஒட்டி சிங்களத்தின் செய்தி இருட்டடிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், நடுநிலை செய்தி வினியோகத்தின் மேல் உங்களுக்கு உள்ள தீராத காதலை நிருபிக்கவும் உங்களில் எவருக்கும் முதுகெலும்பு இருக்கிறதா?

இத்தனை ஆள், அணி, சேனை, இராஜதந்திர தொடர்புகள் உள்ள சிங்களமே செய்தி இருட்டடிப்பு செய்கிறதென்றால், அதன் பின்னணியில் இருக்கக் கூடிய, இராணுவ அரசியல் காரணிகளை புரியாத அறிவிலிகளா நீங்கள்?!

இல்லை! தமிழர் தரப்பு ஒரு யுத்தகாலத்தில் எல்லாவற்றையும் திறந்து காட்டி, ஒற்றுமை கெட்டு, ஓராயிரமாய் பிளவுபட்டு, இந்த யுத்தத்துடன் இப்படியே நாசமாய் போய் விடாதா என்கிற நப்பாசையில் போட்டது தான் உங்கள் நடுநிலை முகமூடி!!!.

முகமூடிகளை பார்த்து முகங்களாய் எண்ணி ஏமாறும் அளவுக்கு தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று புரியாமல் வெட்டி ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் தான் உண்மையில் முட்டாள்கள்

Edited by vettri-vel

வெற்றிவேல்!

எய்தவனிருக்க அம்பை நோவானேன்.......

நாங்களும் நடுநிலயான ஊடகமெண்டு காட்ட இந்தமாதிரி சில சில்லறைகளை யாழ்க்கழ நிர்வாகம் அனுமதிக்கிறது நல்லம்தான்

நாங்கள் செய்யவேண்டியதை அவரே செய்யட்டும்.... கவனிக்காமல் விட்டால் சரி..

ஏற்கனவே அண்ணாச்சிக்கான முத்திரை அஞ்சலாகிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.