Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்யாணம் ஆன ஆண்களின் பிரச்சினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் ஆன ஆண்களின் பிரச்சினை

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது எப்படி?

கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா?

எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி பாராட்டுவது.

சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும் ஆண்களுக்காக இந்த பதிவு.

chilily0006yp6.jpg

சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?

மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம், போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள் (கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.

ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.

ரசம் என்று உறுதி செய்வது எப்படி?

நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ரிஸ்க்:

தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து இருக்கலாம்).

புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.

chiliidly0002pa8.jpg

சாதம் வகைகள்

சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).

ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில் மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால் அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.

புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும், காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில சமயம் புளிப்பு.

லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை மிளகாய் கிடக்கும்.

இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.

சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.

ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.

அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.

chilidly0005aa4.jpg

முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.

இதர சில குறிப்புகள்

சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.

ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!

கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).

வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து போய்விட்டது)

chiliidly0001vt5.jpg

சில சமயம் தமிழ்குடும்பம்.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?, தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல் சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி இருந்தாலும் "என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற" என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுங்க.

chilidly0003bm9.jpg

இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க, எஞ்சாய் செய்யுங்க!

டிஸ்கி: சில சமயம் உப்பு, உறைப்பு, புளிப்பு எதுவும் இருக்காது இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸையும், மூலப்பொருட்களையும் வைத்து அது என்ன என்று கண்டுபிடிக்கனும்.

chiliidly0007ay3.jpg

பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும் பயந்து சொல்லவில்லை!!! Enjoy!

மின்னஞ்சல் தகவல்

பாவபட்ட ஆண்கள் சங்கம்

தமிழ் குடும்பம்

  • Replies 91
  • Views 21k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆ .... இதுவா ?

நான் மற்ற ...... பிரச்சினை ,

அதாவது சீதனப் பிரச்சினை எண்டு பயந்திட்டன் .

Edited by தமிழ் சிறி

1. நினைச்ச நேரத்தில் தண்ணி அடிக்க முடியாது.. அப்படி அடித்தாலும் சேர்ந்து சாப்பிட ஒன்றும் கிடைக்காது (Bites)

2. தெருவில் போகும் அழகிய பெண்களை கலை நோக்கோடு தைரியமாக பார்க்க முடியாது (மீறி பார்த்து வீரம் காட்டினால் சோறு கிடைக்காது அல்லது தள்ளி படுக்க வேண்டும் என்பது அதன் முக்கிய விளைவுகள்)

3. எவனாவது அஜித் போல ஒருவன் வந்து "மணி என்ன" என்று கேட்டால், மனைவி முகத்தை முறைக்க வேண்டும் என்று நம்பி, பின் ஏமாறுதல் (நாங்கள் மட்டும் நமீதா, ஸ்னேகா போன்றவர்களுக்கு மணி என்னவென்று சொல்வோம்)

4. ஒரு மண்ணாங்கட்டியும் பிள்ளைக்கு செய்யாமல் மனைவியை 'அப்பா செல்லம்' என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது

5. அவர்கள் என்ன புதிய உடைகள் வாங்கி உள்ளார்கள் என்று கவனித்து அது எவ்வளவு கேவலமாக இருந்தாலும் 'நல்லா இருக்கு" என்று சமயோசிதமாக சொல்வது (அலுவலக சக பெண்கள் அணியும் புது ஆடைகள் மட்டும் மிக அழகாக தெரிவது வேறு விடயம்)

::: தொடரும்::

-நிழலி-

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ,

இது நல்லாயிருக்கு , எல்லாம் அற்புதம் .

நெடுக்ஸ்சும் ஊரிலை இல்லை போலை கிடக்குது . :lol:

பின்ன என்ன , விளாச வேண்டியது தானே .

எப்போ மிச்சம் வரும்

ஆவலுடன்.....

நான். :lol:

6. எப்பவாவது அவதானித்து ... அடடா.. இந்த உடுப்பு நல்லா இருக்கே என்று என்று சொல்லும் போது "இது நான் வாங்கி 1 வருடமாகுது... 10 தரமாவது உடுத்தி இருப்பன் ..அப்பொழுது யாரை பார்த்து வழிஞ்சு கொண்டு இருந்தீர்கள் என்று கேட்பதை சமாளிப்பது (உண்மை அது தானென்றாலும்.. சமாளிக்க வேண்டும்... )

7. எது கேட்டாலும் பழக்க தோஷத்தில் "ம்ம் ம்ம்" என்று சரியாக கேட்காமல் தலையாட்டி விட்டு அடுத்த நாள் சம்மதம் கேட்ட விடயம் பற்றி கதைக்கும் போது "நான் எப்ப சரி என்று சொன்னேன் என்று பேய் முழி முழிப்பது

8. நல்ல 'மூட்' டில் வந்து படுக்கும் போது... மனைவி நித்திரை வருகுது என்று சொல்கையில் வெறும் சுவரை பார்த்து வேதாந்தம் பேசுவது (கல்யாணம் முடி என்று சொன்ன அத்தனை நண்பர்களும் எதிரிகளாக தெரிவது அப்போது தான்)

9. ஒரு நாள் மனைவி ஏதாவது ஒரு நோயில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் விட்டால் (ஒரு காச்சலில்) உலகமே இருண்டதாக தெரிவதும், ஒரு சின்ன விடயம் ("எங்கே என்ற சொக்ஸ்") கூட தெரியாமல் அந்தரபடும் போது தாயைப் போலத்தான் மனைவியும் அல்லது தாயை விட உயர்த்தி என்று உணர்ந்தாலும், அடுத்த நாள் அதனை காட்டாமல் நடிப்பது

::: தொடரும்::

  • கருத்துக்கள உறவுகள்

9. ஒரு நாள் மனைவி ஏதாவது ஒரு நோயில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் விட்டால் (ஒரு காச்சலில்) உலகமே இருண்டதாக தெரிவதும், ஒரு சின்ன விடயம் ("எங்கே என்ற சொக்ஸ்") கூட தெரியாமல் அந்தரபடும் போது தாயைப் போலத்தான் மனைவியும் அல்லது தாயை விட உயர்த்தி என்று உணர்ந்தாலும், அடுத்த நாள் அதனை காட்டாமல் நடிப்பது

கண்ணை கலங்க வைத்துவிட்டீர்கள் , நிழலி .

1) மனைவி எவ்வளவுதான் அழகாக இருந்தாலும், மற்றப் பெண்களே மிகவும் அழகாகத் தெரிவது.

2) மனைவியின் திருப்தியைப் பற்றிக் கவலைப்படாது, தனது சந்தோசத்திற்காக மட்டும் அனுபவித்தல்

3) சுவையாகச் சமைத்தாலும் பாராட்டாமல் இருத்தல்

4) பக்கத்திலேயே இருக்கும் பொருளைக்கூட தேடி எடுக்க முடியாமல், மனைவியிடம் கத்துதல்

5) மற்றவர்களிடம் (அலுவலகம்) உள்ள கோபத்தை மனைவியிடம் காட்டுதல்

6) மனைவியின் பிறந்தநாள், மற்றும் விசேட தினங்களை மறந்து, அந்நாட்களிலேயே சண்டை போடுதல்

அப்பப்பா ......பிச்சு வாங்குறாங்களே ....... தமிழச்சி .

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்மளுக்கு இந்த பிரச்சினை இல்லை அதனாலே சந்தோசம் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாங்கள் எல்லாம் தனியாள வாழ்வில்லையா.. கலியாணம் முடிக்க முதல் உவையலெல்லாம்.. தனியாக்களா வாழ்வில்லையா. ஒரு பெண்ணை மனிசி என்று கட்டிக் கொண்டு வந்து.. வீட்டுக்கு வேலைக்காரியாகவும் அப்பப்ப கட்டிலில துணைக்கு கட்டிப்பிடிக்கவும்.. குட்டி போட்டு வளர்க்கிற ஜந்துவாகவும்.. பாவிக்கத் தான் வேண்டுமா..??! அதுதான் ஆண்மையா.. ஆண்களின் தொழிலா..??! இதெல்லாம் ஒரு மனிசப் பிழைப்பாவா தெரியுது....??! இதெல்லாம் முதுகெலும்பில்லாத தன் காலில தானே நிற்கத்துணிவற்ற ஆண் ஜந்துகளுக்குத்தானே தவிர.. மனிசப் பயல்களுக்கு.. இது பொருந்தாது.

ஒரு மனிசப் பயலுக்கு..

தன்ர உணவை தானே தயாரிக்க சாப்பிட தெரிந்திருக்கும்.

தன்ர தேவைகளை தானே பூர்த்தி செய்யத் தெரிஞ்சிருக்கும்.

தன்னைப் பராமரிக்கத் தெரிஞ்சவனுக்கு வீட்டைப் பராமரிக்க அதிகம் நேரம் எடுக்காது.

சின்னச் சின்ன அலுவலுக்கு உதவிக்கு பொம்பிளை வேணும் என்ற அவசியத்தை உண்டாக்காத நிலையில இருப்பான்.

பிள்ளை குட்டிகள் வைச்சிருக்கிறவங்க.. அவர்களை வளர்த்து படிப்பிச்சு ஆளாக்கிற வழிமுறைகளை அறிந்து நடப்பார்கள். மனைவிமாரில் தங்கி இருக்கமாட்டார்கள்.

பிள்ளை குட்டி என்றால்.. தான் தனக்குரிய அன்பைக் காட்டி பிள்ளைகளை தன் சொந்த அன்பால் கட்டி வைப்பான். மனைவி என்றொருத்தி பிள்ளைகளுக்கு தன்னை ரெக்கமெண்ட் பண்ண சந்தர்ப்பம் அளிக்கமாட்டான்.

பிள்ளைகளை தன் அச்சுப் பற்றி வளர்த்து சமூகத்திற்கான நல்ல வழிகாட்டிகளாக சமர்ப்பிப்பார்கள்.

அழகோ.. கலையோ.. ரசிக்க வேண்டிய இடத்தில ரசிப்பான். எவருக்கும் பயப்பிடமாட்டான். ஆனால் தனக்குரியதைத் தவிர எதையும் சொந்த கொண்டாட மாட்டான்.

போற வாற இடமெல்லாம்.. பொம்பிளையலோட இழுபட்டுக் கொண்டு திரியமாட்டான். தன் வழியில சுதந்திரமா போய்க்கிட்டுருப்பான்.

வழிஞ்சு கொண்டு யாரும் நேரம் அல்லது அலுவல் கேட்டு வந்தால்.. அநேகம் சொறி சொல்லிவிட்டுப் போய் விடுவான். அடம் பிடித்தால்.. மணிக்கூடு ஒன்றை வாங்கிக் கட்டச் சொல்லிட்டு போய்க்கிட்டிருப்பான்.

பொது இடத்தில் பொண்டுகள் ஏதேனும் பாதைக்கு வழி.. அல்லது உதவி கேட்டால் (வயதுபோனவங்க.. குழந்தைகள் தவிர) தெரியாது போவான். தொந்தரவு பண்ணினால் பொது ஆலோசனை வழங்கு ஊழியர்களின் உதவியை நாடச் சொல்லிவிட்டு தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் நடந்திடுவான்.

பொண்டுகள் வழியில காரை மறிச்சு இடம் கேட்டால்.. கொடுக்க மாட்டான். மனிதாபிமானச் சூழலில்.. அத்தியாசவசியம் என்று கண்டால்.. வழங்குவான். அல்லது பொலிஸாருக்கு தகவல் தருவான்.

இத்தனையும் இல்லாதவன்.. ஒழுங்கான மனிசப் பயலே அல்ல. :)

பல ஆண்கள்.. பெண்களில் தங்கி வாழும் ஒருவகை ஒட்டுண்ணிகளாகவே இருக்கின்றனர். அதில் பெண்கள் பலருக்கும் உடன்பாடு உண்டு. ஏனெனில் ஆண்களை தங்களுக்கு அடிமையாக்க.. பெண்கள் இந்த ஒட்டுண்ணித் தன்மையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அது மனிசப் பயல்களுக்குரிய நல்ல பண்பல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான், நீங்கள் எந்த ஊர் கதை சொல்லுறீங்கள். எனக்கு தெரிஞ்சு உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தை பார்த்தால் ஆம்பளைகள் தான் வீட்டில சமையல் மற்றும் பிள்ளை வளர்க்கிற பொறுப்பும். குழந்தை நடுச்சாமத்தில நித்திரை குழம்பி எழும்பி அழுதால் அப்பாதான் பாப்பா கரைச்சு போச்சியில ஊத்தி ஊட்டிவிடுறது. அம்மா குரட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருப்பா. கனடாவில பிறந்த பெண்களை இல்லாட்டிக்கு சிறுவயதில கனடாவுக்கு வந்த பெண்களை கலியாணம் கட்டின ஆம்பளைகளிண்ட நிலை இதுதான். நீங்கள் சொல்லிறமாதிரியான ஒட்டுண்ணி வாழ்க்கை ஊரில கலியாணம் கட்டின ஆக்களுக்கு பொருந்தும். ஊரில இருந்து பொம்பிளையை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு பிறகு அதுகளை அடிமை மாதிரி வச்சு இருக்கிற ஆம்பளைகளுக்கும் அது பொருந்தும். பொதுவாக பார்த்தால் இதுதான் நடக்கிது. ஆனால் இதற்கு விதிவிலக்காக பல ஆண்கள், பெண்களும் இருக்கிறீனம்.

வழிஞ்சு கொண்டு யாரும் நேரம் அல்லது அலுவல் கேட்டு வந்தால்.. அநேகம் சொறி சொல்லிவிட்டுப் போய் விடுவான். அடம் பிடித்தால்.. மணிக்கூடு ஒன்றை வாங்கிக் கட்டச் சொல்லிட்டு போய்க்கிட்டிருப்பான்.

பொது இடத்தில் பொண்டுகள் ஏதேனும் பாதைக்கு வழி.. அல்லது உதவி கேட்டால் (வயதுபோனவங்க.. குழந்தைகள் தவிர) தெரியாது போவான். தொந்தரவு பண்ணினால் பொது ஆலோசனை வழங்கு ஊழியர்களின் உதவியை நாடச் சொல்லிவிட்டு தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் நடந்திடுவான்.

அப்படியானால் அழகான இளம் பெண்கள் பாதைக்கு வழி கேட்டால் வழி காட்டுவது தப்பா? :lol:

பல ஆண்கள்.. பெண்களில் தங்கி வாழும் ஒருவகை ஒட்டுண்ணிகளாகவே இருக்கின்றனர். அதில் பெண்கள் பலருக்கும் உடன்பாடு உண்டு. ஏனெனில் ஆண்களை தங்களுக்கு அடிமையாக்க.. பெண்கள் இந்த ஒட்டுண்ணித் தன்மையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அப்படியா விஷயம்?! எனக்கு தெரியாத புதுப்புது தகவல்களை தருகிறீர்கள். தகவலுக்கு நன்றி :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், நீங்கள் எந்த ஊர் கதை சொல்லுறீங்கள். எனக்கு தெரிஞ்சு உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தை பார்த்தால் ஆம்பளைகள் தான் வீட்டில சமையல் மற்றும் பிள்ளை வளர்க்கிற பொறுப்பும். குழந்தை நடுச்சாமத்தில நித்திரை குழம்பி எழும்பி அழுதால் அப்பாதான் பாப்பா கரைச்சு போச்சியில ஊத்தி ஊட்டிவிடுறது. அம்மா குரட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருப்பா. கனடாவில பிறந்த பெண்களை இல்லாட்டிக்கு சிறுவயதில கனடாவுக்கு வந்த பெண்களை கலியாணம் கட்டின ஆம்பளைகளிண்ட நிலை இதுதான். நீங்கள் சொல்லிறமாதிரியான ஒட்டுண்ணி வாழ்க்கை ஊரில கலியாணம் கட்டின ஆக்களுக்கு பொருந்தும். ஊரில இருந்து பொம்பிளையை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு பிறகு அதுகளை அடிமை மாதிரி வச்சு இருக்கிற ஆம்பளைகளுக்கும் அது பொருந்தும். பொதுவாக பார்த்தால் இதுதான் நடக்கிது. ஆனால் இதற்கு விதிவிலக்காக பல ஆண்கள், பெண்களும் இருக்கிறீனம்.

ம்ம் நீங்கள் சொல்லுறப்போலவும் தான் நடக்குது. அதுவும் ஒட்டுண்ணி வாழ்க்கைதானே.

பிள்ளை அழுதா பாப்பா கரைச்சுக் கொடுக்கிறதில இருந்து மட்டுமல்ல.. மனிசிமார் விடிய எழும்பினதில இருந்து.. நித்திரைக்கும் போகும் வரை உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தங்கொடுத்தே மூஞ்சி கழுவிவிடுற கணவான்களும் இருக்கினம். அதுமட்டுமே.. சமான் வாங்க சுப்பர் மாக்கற்றுக்குப் போனாக்கூட.. மனிசிமார் தேர்ந்தெடுக்கிற ஒவ்வொரு சாமானுக்கு நாலு முத்தம் கொடுக்கிறாங்க. முத்தங் கொடுக்காட்டி.. கவுண்டரில நிக்கிறவன் கூட ஓடிடுவாளே என்ற பயம் போல. :):D

உதெல்லாம் ஒரு மண வாழ்க்கை மண்ணாங்கட்டி வாழ்க்கை.. இப்படியொரு மானங்கெட்ட பிழைப்பு தேவையா மனிசனுக்கு..! ஏன் தான்.. வழியிதுகளோ தெரியல்ல. நாய் கூட ஒரு காலத்துக்குத்தான். அப்புறம் பார்த்தும் பார்க்காமலும் போய்க்கிட்டு இருக்கும். ஆனால்.. உந்த துப்புக்கெட்ட ஆண்கள். :lol:

அண்மையில் வீதியில ஒரு காட்சி. ஒரு வெள்ளை பையன்.. பெரிய நாலு கொக்கக்கோலா பக்கோட நடந்து போறான். பின்னால வெள்ளைக்காரி.. சிறிய பாக்கில சாமான் கூட நடந்து போறாவு. அவன் முன்னாடி போக.. நில்லுங்க.. நானும் வாறன் எண்டாவோ. விட்டானே ஒரு பேச்சு.. W*** த... F***.. இருந்து..ஈறாக எல்லாம் றோட்டில... வீட்டில கொஞ்சிக்கிறது.. றோட்டில கொஞ்சிக்கிறது.. எல்லாம் அன்பில என்றா நினைச்சுக்கிறீங்க. இல்லவே இல்ல.. காரியம் ஆகிறதுக்குத்தானே தவிர.. வேற என்னத்துக்கு. அந்த வகை ஒட்டுண்ணிகளை பெண்களும் லாவகமா பாவிச்சிக்கிறாங்க..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் அழகான இளம் பெண்கள் பாதைக்கு வழி கேட்டால் வழி காட்டுவது தப்பா? :lol:

அப்படியா விஷயம்?! எனக்கு தெரியாத புதுப்புது தகவல்களை தருகிறீர்கள். தகவலுக்கு நன்றி :D

கொஞ்சம் வெளுப்பான தோலோட.. மொடேனா உடுப்பிடுத்திட்டு.. ஸ்ரெயிட்னர் போட்ட கெயார் ஸ்ரைலோட வாற பெண்களைப் பார்த்தா.. வழியத் தெரியுற ஆம்பிளையள் பலர் வழி தெரியாம திண்டாடுறதும்.. இழிச்சுக் கொண்டு வந்து பொண்டுகளட்ட வழி கேட்டு வழியிறதும்.. அவையும்.. ஆம்பிளையள் கொஞ்சம்.. கிறுதா வச்ச தலை வெட்டோட.. தலைக்கு பசையை கிசையைப் பூசி.. கோட்டக் கீட்ட மாட்டி இருந்திட்டா.. பதிலுக்கு இழிச்சுக் கொண்டு நின்று பதில் சொல்லுறதும்.. தினமும் பார்க்கிற வேடிக்கை தானே.

பக்கத்தில வழி காட்ட என்று கெல்ப்பேர்ஸ் நிப்பாங்க.. கெல்ப் கவுண்டர் இருக்கும்.. அதெல்லாம்... அவையிட கண்ணுக்குத் தெரியாது.. குமரியள் இழிச்சுக் கொண்டு வாறது மட்டும் தெரியும்.

பொண்டுகளுக்கு மட்டும் என்னவாம்.. அரைக் கு*டி தெரிய கலுசான் போட்டுக்கிட்டு.. போலியோ அட்டாங் வந்தது போல.. சிம்பென்சி தாவு தாவிற.. குமரங்களை கண்டதும்.. கண்ணு கண்ணோட்டம் விட ஆரம்பிச்சிடும். இன்னும் கொஞ்சப் பேர்.. கோட்டு சூட்டு ரையும் கட்டிக்கிட்டு.. பெரிய உத்தியோகம் போற கணக்கிலயும் திரியினம். இத்தனைக்கும் அவை செய்யுற வேலை என்ன தெரியுமோ.. சேல் எக்சிகியுட்டி... முடியல்ல... என்னமா உலகத்தை பொடி லங்குவேஜ்ஜை காட்டி.. ஏய்க்கிறாங்க..!!

ஒட்டுண்ணி வாழ்க்கையில.. இதெல்லாம் சகஜமப்பா..! கண்ணால் காண்பது எல்லாமே பொய் என்ற அளவுக்கு மனித வாழ்க்கையில போலித் தன்மை கூடிட்டுது. :D:)

நான் உதவி செய்திருக்கன்.. நடக்க முடியாம எஸ்கலேட்டரில போக முடியாம உதவி கேட்கிற வயதான தாத்தா பாட்டிக்கு உதவி செய்திருக்கன். அவசரமா.. உண்மையிலேயே பதட்டத்தில இடம் தெரியாம வந்து கேட்கிறவங்களுக்கு வழி காட்டி இருக்கிறன். ஆனால்.. மிச்ச ஆக்களுக்கு "சொறி" தான் அதிகம் சொல்லி இருக்கன். :D

Edited by nedukkalapoovan

என்ன நெடுக்காலபோவான், உண்மைகள் கொஞ்சம் எடுத்துவிட்டீங்கள். பிறகு சாமியாரா போறதுக்கு வழிகாட்டுறமாதிரி கருத்துக்கள் சொல்லி இருக்கிறீங்கள். அவனவன் வாழைத்தண்டு, வெண்டிக்காய், மரவள்ளிக்கிழங்கு, பச்சைமிளகாய் எண்டு உடம்பிண்ட பாகங்களை வர்ணிச்சு, அனுபவிச்சு கலை அம்சத்தோட குடும்பத்தை ரசிக்கிறாங்கள். நீங்கள் அதை கொச்சைப்படுத்தி இருக்கிறீங்கள். எங்களுக்கு கிடைச்சது ஒரே ஒரு வாழ்க்கை. செத்தாப்பிறகு எல்லாம் சூனியமோவும் தெரியாது. இருக்கிற ஒரே ஒரு வாழ்க்கையை வாழத்தானே வேணும். வாழ்க்கை வெறுத்து சாமியாரா போறதில என்னபயன்? ஏதோ பாத்து நல்ல ஒண்டாய் மாட்டினீங்கள் எண்டால் உங்கடபாடும் கொண்டாட்டமாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நம்மளுக்கு இந்த பிரச்சினை இல்லை அதனாலே சந்தோசம் :lol::)

பொங்கினவனுக்கு ஒரு பொங்கல் பொங்காதவனுக்கு பல வீட்டு பொங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

உதுகள் எல்லாத்தையும் விட வில்லங்மான பிரச்சனைகள் எல்லாம் இருக்கு.பெணடுகள் தங்களுக்குள்ள போட்டி பொறாமைகளினால் சின்னப்பிரச்சனைக்கும் தங்களுக்குள்ள கொழுவுப்படுகிறதும் இல்லாமல் கணவன் மாரிடம் வந்து இனி அந்தவீட்டை(குடும்பம்)போகக்க

ூடாது,அவையோட கதைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறது.நேற்றுவரைக்கும் வந்துபோனவன் என்னடா இருந்தாப்போல வாறதும் இல்லை தொலை பேசியும் எடுப்பதில்லை என்று அவர்கள் கேட்டால் இவன் காரனம் சொல்ல ஏலாமல் திண்டாடவேன்டியநிலமை. :lol: இதுல என்ன இக்கட்டான நிலமை என்றால் பெண் சம்பந்தப்பட்டவர்களை கண்டால் ஒன்றும் நடக்காத மாதிரி கதைச்சுப்பழகுவா. :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்காலபோவான், உண்மைகள் கொஞ்சம் எடுத்துவிட்டீங்கள். பிறகு சாமியாரா போறதுக்கு வழிகாட்டுறமாதிரி கருத்துக்கள் சொல்லி இருக்கிறீங்கள். அவனவன் வாழைத்தண்டு, வெண்டிக்காய், மரவள்ளிக்கிழங்கு, பச்சைமிளகாய் எண்டு உடம்பிண்ட பாகங்களை வர்ணிச்சு, அனுபவிச்சு கலை அம்சத்தோட குடும்பத்தை ரசிக்கிறாங்கள். நீங்கள் அதை கொச்சைப்படுத்தி இருக்கிறீங்கள். எங்களுக்கு கிடைச்சது ஒரே ஒரு வாழ்க்கை. செத்தாப்பிறகு எல்லாம் சூனியமோவும் தெரியாது. இருக்கிற ஒரே ஒரு வாழ்க்கையை வாழத்தானே வேணும். வாழ்க்கை வெறுத்து சாமியாரா போறதில என்னபயன்? ஏதோ பாத்து நல்ல ஒண்டாய் மாட்டினீங்கள் எண்டால் உங்கடபாடும் கொண்டாட்டமாய் இருக்கும்.

எனக்கு ஒன்று விளங்கேல்ல.. இல்லாததுகளை எல்லாம் இருக்கென்று நினைச்சுக் கொண்டு பொம்பிளையள வர்ணிச்சுக் கொண்டு திரியுறதும்.. ஒருவகை மனநோய் தானே. மரவெள்ளிக்கிழங்கு.. வெண்டிக்காய்.. தேன்.. அமிர்தம்.. எல்லாமே.. கடையில நிஜமா விற்குது. வேண்டி உண்டு களிக்க வேண்டியதுதானே. அதையேன் போய்.. இல்லாத பொம்பிளையிளட்டத் தேடினம். அவையளட்ட என்ன இருக்கு.. ஆண்கள் வர்ணிக்கிறாப் போல எதுவுமே இல்ல.

கற்பனையோட பொம்பிளையளப் பார்க்கிற படியாத்தான்.. அவையட அசிங்கங்கள் புலப்படுறதில்ல. அது உண்மையில.. மனிதனை மாயையால கட்டி வைச்சிருக்கிற செயல். உண்மை என்ன என்று பார்த்தால்.. வெறும்.. தசையும் எலும்பும்.. வியர்வை.. கழிவு துர்நாற்றங்களும்.. ஓமோன்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்.. ஆணை பெண்ணை நாட வைச்சு.. மிருகத்தனமா வாழ வைக்குது. அது மிருக வாழ்க்கைதானே. அதையேன் வாழனும் ஆறறிவு படைச்ச மனிசன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கினவனுக்கு ஒரு பொங்கல் பொங்காதவனுக்கு பல வீட்டு பொங்கல்.

அனுபவம் போல் தெரிகிறது இப்பவுமா கு.சா மி அண்ணை பார்த்து வீட்டுக்காரிக்கு தெரிந்தால் திண்ணைதானாக்கும் :):D:lol:

கற்பனையோட பொம்பிளையளப் பார்க்கிற படியாத்தான்.. அவையட அசிங்கங்கள் புலப்படுறதில்ல.

உண்மை தான்...

மனிதனை மாயையால கட்டி வைச்சிருக்கிற செயல். உண்மை என்ன என்று பார்த்தால்.. வெறும்.. தசையும் எலும்பும்.. வியர்வை.. கழிவு துர்நாற்றங்களும்.. ஓமோன்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்.. ஆணை பெண்ணை நாட வைச்சு.. மிருகத்தனமா வாழ வைக்குது. அது மிருக வாழ்க்கைதானே. அதையேன் வாழனும் ஆறறிவு படைச்ச மனிசன். :lol:

ஆனாலும், ஆண்-பெண் இனக் கவர்ச்சி மட்டுமல்ல உலகத்திலுள்ள எல்லா வகையான உறவுகளுக்கும் (நட்பு, பெற்றோர், சகோதர பாசம், விசுவாசம்.....) இந்த சுரப்புக்களோ அல்லது வேறு ஏதாவது காரணிகள் இல்லையா? (உறவுகளின் வடிவங்கள் மாறுபட்டாலும் கூட). இப்படி எல்லாவிதமான மனித உறவுகளுக்கும் சுரப்புகளை காரணம் காட்டி அருவருத்தால், சாமியாராக போய்விட வேண்டியது தான்.

(எனக்கு உயிரியல் விஞ்ஞானம் பற்றிய ஆழமாக தெரியாது. தவறெனில் விளக்கவும்).

எனக்கு ஒன்று விளங்கேல்ல.. இல்லாததுகளை எல்லாம் இருக்கென்று நினைச்சுக் கொண்டு பொம்பிளையள வர்ணிச்சுக் கொண்டு திரியுறதும்.. ஒருவகை மனநோய் தானே. மரவெள்ளிக்கிழங்கு.. வெண்டிக்காய்.. தேன்.. அமிர்தம்.. எல்லாமே.. கடையில நிஜமா விற்குது. வேண்டி உண்டு களிக்க வேண்டியதுதானே. அதையேன் போய்.. இல்லாத பொம்பிளையிளட்டத் தேடினம். அவையளட்ட என்ன இருக்கு.. ஆண்கள் வர்ணிக்கிறாப் போல எதுவுமே இல்ல.

கற்பனையோட பொம்பிளையளப் பார்க்கிற படியாத்தான்.. அவையட அசிங்கங்கள் புலப்படுறதில்ல. அது உண்மையில.. மனிதனை மாயையால கட்டி வைச்சிருக்கிற செயல். உண்மை என்ன என்று பார்த்தால்.. வெறும்.. தசையும் எலும்பும்.. வியர்வை.. கழிவு துர்நாற்றங்களும்.. ஓமோன்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்.. ஆணை பெண்ணை நாட வைச்சு.. மிருகத்தனமா வாழ வைக்குது. அது மிருக வாழ்க்கைதானே. அதையேன் வாழனும் ஆறறிவு படைச்ச மனிசன். :lol:

உப்பிடியெல்லாம் யோசிச்சுத்தான், கலியாணம் வேண்டாமெண்டு இருக்க நினைச்சா, இந்தக் குடும்பமும் சமுதாயமும் விடுகுதில்லையே????

உங்கட பார்வையில ஆகவும் உள்ளுக்கபோய் பார்த்தால் எல்லாமே கற்பனையும், மாயையும்தான் நெடுக்காலபோவன். அதுக்காக நாங்கள் வாழ்க்கையை அதேபாதையில அமைக்கவெளிக்கிட்டால் பிறகு மேல்வீடு பழுதாய்போயிடும். மனம்சமநிலையாய் இருக்கிறதுக்கு சில பொய்களை மெய் எண்டு நினைச்சு அதன்படி வாழவேணும். நான் உங்கட சிந்தனையில வாழ்ந்து பார்த்ததுதான் உயர்தரம் படிக்கிற நேரத்தில. ஆனால்.. அதனால பெற்றதைவிட இழந்தது அதிகம். ஒருக்கால் இழை வெட்டுப்பட்டால் அவ்வளவுதான் திரும்பவும் இணைக்கிறது மிகக்கடினம். மனசமநிலை குழம்பினால் திரும்ப அதேநிலைக்கு திரும்புறது மிகக்கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியெல்லாம் யோசிச்சுத்தான், கலியாணம் வேண்டாமெண்டு இருக்க நினைச்சா, இந்தக் குடும்பமும் சமுதாயமும் விடுகுதில்லையே????

சமுதாயம்.. குடும்பம் என்பதெல்லாம் ஒரு சாட்டு. இப்படிச் சொல்லிச் சொல்லியே உலகத்தை ஏமாற்றிக் கொள்ளுறாங்க பல பேர்..! :)

உங்கட பார்வையில ஆகவும் உள்ளுக்கபோய் பார்த்தால் எல்லாமே கற்பனையும், மாயையும்தான் நெடுக்காலபோவன். அதுக்காக நாங்கள் வாழ்க்கையை அதேபாதையில அமைக்கவெளிக்கிட்டால் பிறகு மேல்வீடு பழுதாய்போயிடும். மனம்சமநிலையாய் இருக்கிறதுக்கு சில பொய்களை மெய் எண்டு நினைச்சு அதன்படி வாழவேணும். நான் உங்கட சிந்தனையில வாழ்ந்து பார்த்ததுதான் உயர்தரம் படிக்கிற நேரத்தில. ஆனால்.. அதனால பெற்றதைவிட இழந்தது அதிகம். ஒருக்கால் இழை வெட்டுப்பட்டால் அவ்வளவுதான் திரும்பவும் இணைக்கிறது மிகக்கடினம். மனசமநிலை குழம்பினால் திரும்ப அதேநிலைக்கு திரும்புறது மிகக்கடினம்.

எமக்கு ஏற்கக் கஸ்டமா இருக்கு என்பதற்காக.. இல்லாத பொல்லாததுகளை எல்லாம் நம்பி வாழ்க்கையை நாசம் பண்ணவா வேணும்..! :)

ஏதோ உங்கட விருப்பப்படி செய்யுங்கோ நெடுக்கானந்தாஜி. உங்கட வாழ்க்கை. உங்கட தீர்மானம். அத்தோட உங்கட ஆச்சிரம் எங்கை எண்டு பிறகு யாழில முகவரியை அறியத்தந்தால் ஒருகாலத்தில நாம கலியாணம் கட்டினால் மனுசி, பிள்ளைகளோட வந்து உங்கட ஆச்சிரமத்தில தங்கி நிண்டு சேவைகள் செய்து, ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டுபோகலாம். :)

அது எங்கட முனிவரின்ர ஆச்சிரமம் மாதிரி இருக்காதெண்டு நம்புவோமாக..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.