Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி:

சாத்திரி அண்ணா யாழில இருக்கிற படைப்பாளிகளில முக்கியமான ஒருத்தர். நான் சாத்திரி அண்ணாவின் ஏராளம் ஆக்கங்களை வாசிச்சுஇ கேட்டு மகிழ்ந்து இருக்கிறன். அதில முக்கியமான ஒண்டு காதல் பற்றின ஒரு கவிதை. அந்தமாதிரியான ஒரு சூப்பர் கவிதை. திடீரெண்டு ஏதோ புத்தருக்கு நிறைஞானம் கிடைச்சமாதிரி அந்தக்கவிதையை எழுதி யாழில இணைச்சு இருந்தார். இந்தக்கவிதைய வாசிச்ச மணிவாசகன் என்ன சாத்திரி இவ்வளவு காலமும் சரக்கை எங்க வச்சு இருந்தனீங்கள் எண்டு பகிடியாக கேட்டு இருந்தார். அப்படி ஒரு அருமையான கவிதை அது.

இப்ப கொஞ்சக்காலமாய் சாத்திரி அண்ணைக்கு என்னோட கோபம். எனக்கும் ஒரு பட்டம் தந்து இருந்தார். மாற்றுக்கருத்து மாணிக்கம்இ மற்றது மீட்பர் யேசு எண்டு எதோ.. யாழில பட்டங்கள் தாறனீங்கள் தாராளமாய் தாங்கோ ஆனால் அதைவச்சு நான் காசு பண்ணக்கூடியமாதிரியான ஆ.டீ.டீ.ளுஇ கு.சு.ஊ.ளுஇ னு.ளுஉ.. அப்பிடி ஏதாவது பெரிய பட்டங்களாய் தந்தால் நான் வாழ்க்கையில பிழைச்சுக்கொள்ள உதவியாய் இருக்கும். ஹாஹா

சாத்திரி அண்ணாவிடம் ஏராளம் ஆற்றல்கள் இருக்கிது. ஆனால்.. நான் கவலைப்படுவது அந்த ஆற்றல்களை ஒரு சதத்துக்கு உபயோகம் இல்லாத ஆக்களை விமர்சனம் செய்யவெளிக்கிட்டு வீணாக்கிவிடுவாரோ எண்டு. உங்கள் எல்லாருக்கும் மாமனிதர். பொன்.கணேசமூர்த்தியை தெரிஞ்சு இருக்கும். அவர் தனது ஆற்றல்களை எப்படி பயன்படுத்தி இருந்தார் எண்டும் தெரிஞ்சு இருக்கும். ஒருவரை நேரடியாக தாக்காதுஇ சமூகத்தில இருக்கிற பிரச்சனையை பச்சையாக சொல்லாதுஇ சூசகமாக நாகரீகமான முறையிலஇ மிகவும் நகைச்சுவையுடன் விழுந்து விழுந்து சிரிக்கக்கூடியதாக சொல்வதில அவர் வல்லவர். அவரிண்ட சந்தனக்காடு நாடகத்தை எத்தனைபேர் ஊரில பார்த்து இருப்பீங்களோ தெரியாது. அவரை மாதிரி சாத்திரி அண்ணாவும் தனது அடுத்த படிமுறை வளர்ச்சியை நோக்கி தனது ஆற்றல்களை ஒருமுகம் செய்து குவிச்சுஇ விருத்தி செய்து நல்லதொரு கலைஞராக மிளிரவேணும் என்பதே எனது எதிர்பார்ப்பும்இ ஆசைகளும்இ வாழ்த்துகளும்இ பிரார்த்தனைகளும்!

உங்கள் பிரார்த்தனை நிறைவேறி விட்டது கலைஞன்..நான் கட்டுரைகள் விமர்சனங்கள் எழுதுவதை நிறுத்தியாகி விட்டது..இனி வலருங்காலங்களில் எனது ஆற்றல் நேரம் உழைப்பு அத்தனையும் நேசக்கரம் திட்டங்களிற்காகவே செவழிக்க முடிவெடுத்து அதன்படியே செயற்பட்டு வருகிறேன்..

  • Replies 183
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான உறவிற்கு ஆயிரம் வணக்கங்கள்.

இத்தனை காலத்திற்குப் பிறகுதான் உங்கள் ஆக்கத்தினைப் பார்த்தேன். ஆகா! என்னைப் பற்றியும் ஒருவர் அறிந்து வைத்து மறக்காமல் எழுதியிருப்பதைப் பபார்த்தவுடன் நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை. எப்போதும் களத்திற்கு வருவேன் ஆனால் கருத்தெழுத முற்படுவதில்லை. குழந்தைபோல் ஒருவர், தொடங்குவதும் முடிப்பதும் வௌ;வேறாய் ஒருவர், எதற்கெடுத்தாலும் ஏறுமாறாக வாதிடுவார் ஒருவர் இப்படிப் பல உறவுகள். ஏதோ மனம் விரும்பவில்லை அதனால் ஒதுங்கிக்கொண்டேன்.

நான் களத்தில் நுழைந்த காலத்தில் பல கண்காணா உறவுகளைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். ஒருநாள் களத்திற்கு வரவில்லையென்றால் அந்தநாள் திருப்திகரமானதாகவே இருக்காது. பட்டிமன்றங்களும், விவாதங்களும், கவிதைகளும், கவிதைப் போட்டிகளும் பலபல. தொடர்பற்றிருந்த ஊர் உறவுகளைக்கூடச் சந்திக்க வாய்ப்பளித்தது இந்த யாழ்தான். அண்மையில் கனடா சென்றிருந்தபோதுகூட கண்காணாத யாழ்கள உறவுகள் சிலர் என்னை நேரே வந்து சந்திக்க ஆவல் கொண்டார்கள். ஆனால் காலமும் நேரமும் கைகூடவில்லை. தொலைபேசியில் மட்டும்தான் உரையாடினேன். யான் யாழில் பெற்ற அனுபவமே தனியானது, என்றுமே மறக்கமுடியாதவை.

தமிழை தவறாக எழுதுவது தவறு. அதனால்தான் அவ்வப்போது சில அறிவுரைகளை அள்ளி வழங்கினேன். அதனால் நீங்களும் பயன் அடைந்ததாகப் படித்தவுடன் கட்டாயம் களத்தில் எழுதவேண்டும் என்றே இவ்வளவற்றையும் எழுதினேன். நேரமிருப்பின் நிச்சயம் களத்தில் கருத்தெழுத முயல்கிறேன். அதுவரை உங்கள் நல்ல பணிகள் தொடரட்டும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிரார்த்தனை நிறைவேறி விட்டது கலைஞன்..நான் கட்டுரைகள் விமர்சனங்கள் எழுதுவதை நிறுத்தியாகி விட்டது..இனி வலருங்காலங்களில் எனது ஆற்றல் நேரம் உழைப்பு அத்தனையும் நேசக்கரம் திட்டங்களிற்காகவே செவழிக்க முடிவெடுத்து அதன்படியே செயற்பட்டு வருகிறேன்..

யாழில் நான் கதைகள் பகுதிகளில் விரும்பி படிக்கும் ஆக்கங்களில் உங்களின் ஆக்கமும் ஒன்று.இருள் அழகனுடன் நீங்கள் ஒடி ஆடிய பசுமையான நினைவுகளை சுவைபட இனிமையாக எங்களுக்கு முன்பு வழங்கி இருந்தீர்கள்.நீங்கள் தொடர்ந்து உங்களின் படைப்புக்கள் வரவேண்டும்.

நேரமிருப்பின் நிச்சயம் களத்தில் கருத்தெழுத முயல்கிறேன்.

கட்டாயம் வாருங்கள். கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்.

மச்சான்.

நான் ஊர்ப்புதினத்துடன் கூட மினக்கிடுவதால் வேறு பல நல்ல ஆக்கங்களை தவறவிட்டுவிடுவேன்.இன்னமும் யாழில் முழுதாக என்ன இருக்கு என்று தெரியாது.இன்றுதான் யாழின் ஒரு வரலாற்றுப் பதிவுபார்த்தேன்.மிகப் போற்றப்படவேண்டிய ஒரு பதிவு.ஆட்களை அளவிடுவதென்பது இலகுவான விடயமன்று.தொடரட்டும் உங்கள் பணி.

கல்லேறிபவர்களை விட்டு எங்கள் கருத்தை சொல்வதில் நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.எத்தனையக் கண்டுவந்த பலர் இங்கு இருப்பார்கள் இந்த கல்லெறிகளொன்றும் பெரிதில்லை.

  • தொடங்கியவர்

நன்றி சகாறா அக்கா, சாத்திரி அண்ணா, அர்ஜுன்

+++

ஆசிரியர், நீங்கள் கனடா வந்தபோது தூயவன் / ரமா மூலம் நீங்கள் இங்கு வந்த செய்தியை அறிந்து இருந்தன். அதன்பின்னர் உங்களுடன் தொலைபேசியில் உரையாடினன் என்றும் நினைக்கிறன், சரியாக ஞாபகம் மறந்துபோச்சிது. நீங்கள் உடனடியாகவே செவ்வாய் / புதன் மறுநாள் பிரயாணம் என்றபடியால சந்திக்க முடியவில்லை. நீங்கள் யாழில் எழுதிய [ சொல்லித்தந்த ] "ஓர்" என்கின்ற திருவடி திருப்புகழ் எழுதிறதுக்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அடி எடுத்து கொடுத்ததுபோல நான் எழுதிக்கொண்டு இருக்கின்ற நூல் ஒன்றினதும் பெயரின் முதல் அடியாய் இருக்கிது. :rolleyes:

நன்றி!

Edited by மச்சான்

யூகே வாழ்

பைங்கிளி..

அவள்

பொங்கினால் பால்

பூரித்தால் தோசை

புன்னகை செய்தால் இட்டலி

நேற்று..

தலையை குனிந்து நடந்தவள்

இன்று..

வலையில் வேட்டு வைக்கின்றாள்

நாளை?

பிரித்தானிய மகாராணி!

ஓ...

இவள்தான் எங்கள்

யாழ் இணையத்து

நங்கை ரதி! :D

மச்சான் என்ன அக்காவை பப்பாவில ஏத்திறியல் போல இருக்கு. :D

விழுத்திப்புட்டா அழுதிடுவா... :rolleyes:

குறிப்பு: என்னை பத்தி எழுதிட வேணாம்..ஏற்கனவே என்ரை முதல் அவதாரத்தை நீங்கள் பத்தி எழுதியிருக்கீங்க :)

  • தொடங்கியவர்

'ஏழையைத் தூக்கி எறியாதே' என்று இந்தப்பாடலில ஓர் வரி வரும் மனிதன். இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். நாளைக்கு யார் யார் எப்படி வருவீனம் என்று எங்களுக்கு தெரியாது. பக்கத்து தெரு குப்பத்தில இருக்கிறவன் நாட்டு அதிபராய் வரலாம். இந்தவகையில ரதியுக்கு மரியாதை செலுத்தி இருக்கறன் மனிதன். வேற ஒன்றும் இல்லை. நாளைக்கு ரதியும் ஒரு பெரிய ஆளாய் வந்தால் எங்களையும் கவனிப்பா தானே.

http://infoplate.com/music/hindisongs/new%20%20and%20old%20hindi%20music%20collection%20%20%20K%20%20%20to%20%20%20%20%20R/Mr%20Romeo%20-%20Aatam.mp3

+++

ஆட்சேபணை இல்லையென்றால் உங்கள் மற்ற முகம் பற்றியும் சொல்லுங்கோ. சும்மா தெரிஞ்சு வச்சு இருக்கத்தான். :rolleyes:

'ஏழையைத் தூக்கி எறியாதே' என்று இந்தப்பாடலில ஓர் வரி வரும் மனிதன். இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். நாளைக்கு யார் யார் எப்படி வருவீனம் என்று எங்களுக்கு தெரியாது. பக்கத்து தெரு குப்பத்தில இருக்கிறவன் நாட்டு அதிபராய் வரலாம். இந்தவகையில ரதியுக்கு மரியாதை செலுத்தி இருக்கறன் மனிதன். வேற ஒன்றும் இல்லை. நாளைக்கு ரதியும் ஒரு பெரிய ஆளாய் வந்தால் எங்களையும் கவனிப்பா தானே.

அடடா..சொல்லி முடிக்கவும் ரதியக்காவை இப்படித் தொப்படீர்னு கவுத்துவிட்டியலே... ஏழை, குப்பத்து பெண் என்று.. :rolleyes:

Edited by மனிதன்

ஆட்சேபணை இல்லையென்றால் உங்கள் மற்ற முகம் பற்றியும் சொல்லுங்கோ. சும்மா தெரிஞ்சு வச்சு இருக்கத்தான். :lol:

ஆட்சேபணை உள்ளதாலதான் பெயர்மாத்தி வாறம் :rolleyes:

  • தொடங்கியவர்

கொடுமை சார். நாமளும் குப்பத்து ஏழைகள்தான் சாமியோவ் :rolleyes:.

நகைச்சுவையாய் இட்லி, வடை என்று எழுதியது, ரதி அடிக்கவரக்கூடாது.

:rolleyes::lol::D

  • தொடங்கியவர்

போல் என்கின்ற பெயரை வச்சுக்கொண்டு "போல்" ஐ போல் விரும்பாவிட்டால் என்ன மாதிரி :rolleyes:

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்…

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

அடடா..சொல்லி முடிக்கவும் ரதியக்காவை இப்படித் தொப்படீர்னு கவுத்துவிட்டியலே... ஏழை, குப்பத்து பெண் என்று.. :rolleyes:

மனிதன் குறைநினைக்கதேங்கோ ஏழை எண்டால் என்ன குறைச்சல் ?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கலைஞன் நீங்கள் எனக்காக கவிதை எல்லாம் எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை...நான் சும்மா பகிடிக்கு தான் கேட்டேன்...எனக்கு அதற்கு எல்லாம் தகுதி இருக்கா தெரியாது எனினும் கவிதைக்கு நன்றி...கவிதை சூப்பராய் இருக்கு...என்ன கொஞ்சம் கவலை என்னவென்றால் என்னை சாப்பாட்டோடு ஒப்பிட்டு எழுதி விட்டீர்கள்...எனினும் உங்களது [ யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்] ஒரு சிறந்த வரலாற்று பொக்கிசம் ஆகும்...உங்களால் முடியுமானால் தற்போது யாழில் இருப்பவர்கள் பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள்...உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகளும் நன்றியும்.

  • தொடங்கியவர்

ரதியை மீண்டும் கண்டது சந்தோசம். ரெண்டு நாளாய் காண இல்லை. நான் நினைச்சன் கோவிச்சுக்கொண்டு போயிட்டீங்களாக்கும் என்று. சித்தன் தூசி தட்டி ஒன்று அரை வருசத்துக்கு முன்னம் எழுதின பதிவை மீண்டும் கிளப்பி இருக்கிறார். அன்று எழுதியது போல் இன்று எழுதமுடியாது, என்றும் எழுதமுடியாது. அதை அதை அப்பப்ப செய்துவிட வேண்டியதுதான். இப்போது எழுதவேண்டிய முக்கியமான பல விசயங்கள் இருக்கிது. இதனால தொடர்ந்து புதிய யாழ் உறவுகளின் பதிவையும் இட முடியாமைக்கு வருந்துகின்றேன். வேறு யாராவது தொடர்ந்து எழுதுங்கள். இப்ப நிறைய ஆக்கள் எழுதிறீனம். யாராச்சும் நேரம் இருக்கேக்க மெல்ல, மெல்ல ஓர் நினைவுப்பதிவை எழுதலாம்.

என்னால் இப்போது செய்யக்கூடியது.. விருப்பம் உள்ள யாழ் உறவுகள் தங்கள் குரல்களில் சில செக்கன்கள் ஒலிப்பதிவை ஏதாவது செய்து தந்தால் அதை எல்லாவற்றையும் இணைச்சு ஓர் ஞாபகார்த்த யாழ் ஒலி இழையை பதியலாம். எங்கள் எல்லார் குரலும் அதில இடம்பெறும்போது ஒரு காலத்தில நல்லதொரு நினைவுமீட்டலாய் வரலாற்று ஆவணமாய் அப்படியான ஒலி இழை விளங்கக்கூடும். சில தனிப்பட்ட காரணங்கள், அந்தரங்கங்கள் காரணமாக எல்லாரும் ஒலிப்பதிவை தருவதற்கு முன்வராவிட்டாலும்.. பெறக்கூடிய ஒலித்துண்டுகளை பெற்று அதை ஓர் பதிவு ஆக்கினால் நல்லது என்று நினைக்கிறன். பார்ப்பம், இதுபற்றி பிறகு உறவோசையில கலந்துரையாடுவோம். வணக்கம்.

:rolleyes: தூசி தட்டுறது இருக்கட்டும் பிறகு நம்மட சாத்து பழைய பேப்பர் பொறுக்க வந்திடும் ஆள் ...

அப்ப நான் வட்டா பாயய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான் வாசிக்க நல்லா இருக்கு நீங்க அட்டாவதானியோ??

வாசிக்கும் போதெல்லாம் யாழும் அதன் உறுப்பினர்களும் இப்படியா இருந்தினம் என்று வியக்க வைக்குது!!!!!!

உண்மையை சொல்லணும் என்றால் பொறாமையா இருக்கு பழைய ஆக்களை நினைத்து

(பழத்தை சாப்பிட்டிடு கொட்டையை விட்டிட்டு போயிட்டாங்கப்பா) :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கிருபன் ஒரு கருத்தை இஞ்ச சொன்னால் அதன் உண்மையான உட்கிடக்கை என்ன எண்டு யாழில ஆக ஒருசிலருக்கு மாத்திரம்தான் விளங்கும்

மச்சி.. இப்படி நீங்கள் எழுதினதைத் தக்கவைக்கிறதுக்கு நான் படுகிற கஷ்டம் சொல்லி மாளாது. :rolleyes:

என்றாலும் காலம் எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற இயங்கியல் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளதால் எனது சிந்தனைமுறையிலும் மாற்றத்தை நானே அவதானிக்கின்றேன் :o

யாழின் பலவிழுதுகளில்... நீங்கள் யாழுக்கு மிகஅருமையானவர் மச்சி நன்றி :rolleyes:

  • தொடங்கியவர்

நன்றி சின்னப்ஸ், ஜீவா, கிருபன், இணையநண்பன்

+++

நான் சில மாதங்களுக்கு முன்னர் சயந்தனுடன் கதைச்சன். அப்ப பேசிக்கொண்ட ஒரு விசயம் என்ன எண்டால்.. இந்த யாழுக்கை வந்து பலவித தகவல்களை பரிமாறி தமிழில பன்பல் அடிக்கிற, பயன்பெறுகிற முதலாவதும் கடைசியுமான தலைமுறை நாங்களாய்த்தான் இருக்கும் எண்டு. ஏன் என்றால் எதிர்காலத்தில வெளிநாட்டு பிள்ளைகள் தமிழில எழுதி வாசிக்கிற ஆற்றல்களை கொண்டிருக்காது என்பது ஒரு காரணம். சிறீ லங்காவில இருந்து யாழ் இணையத்துக்கு வந்து மினக்கடக்கூடிய தமிழ் பிள்ளைகளின் வரவின்மை இரண்டாவது காரணமாக இருக்கக்கூடும் என்று நினைச்சம். பேஸ்புக் வந்தாப்பிறகு கருத்துக்கள வசதிகள், அத்தோட ஏராளம் வசதிகள் பேஸ்புக்கிலையே காணப்படுவதால... யாழுக்கு ஆக்கள் வாறது குறைஞ்சு போச்சிது என்பதோட எதிர்காலத்திலையும் பேஸ்புக்கின் ஆதிக்கம் யாழை வெகுவாய் பாதிக்கலாம். நான் அறிஞ்ச அளவில பல ஆக்கள் யாழுக்கு வராமல் இருக்கிறதுக்கு அல்லது எழுதாமல் இருக்கிறதுக்கு பேஸ்புக்கும் காரணம். நான் பேஸ்புக் கணக்கை இரத்து செய்து இருந்தன். ஆனாலும்.. அதன் அபரிமிதமான popularity காரணமாய் மீண்டும் கணக்கை அண்மையில புதுப்பிக்கவேண்டியதாய் போச்சிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறியாத உறவுகளையும் அறியத் தந்த நட்பின் முரளிக்கு!!!

நன்றி!! நன்றி நன்றி!!(சொல்லப்படாதுதான்!!:lol: ஆனாலும் சொல்லத் தோன்றியது!.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பட்டியலில் நானும் எங்காவது இருக்கிறேனா?

  • தொடங்கியவர்

நன்றி த.த

++

ஆர்.கே.ஆர் பட்டியலில நீங்கள் விடுபட்டு போனீர்கள். தாயகத்தில் அவலங்கள் உக்கிரம் அடைந்த கட்டத்திலேயே நீங்கள் இங்கு உயிர்ப்பு அடைந்தீர்கள். காத்திரமான பலப்பல கருத்துப்படங்கள், சுலோகங்களை உருவாக்கினீர்கள். உங்கள் கருத்துப்படங்கள் மூலம் நீங்கள் என்றென்றும் அனைவரினதும் நினைவுகளில் இருப்பீர்கள் ஆர்.கே.ஆர்.

  • கருத்துக்கள உறவுகள்

அறியாத உறவுகளையும் அறியத் தந்த நட்பின் முரளிக்கு!!!

நன்றி!! நன்றி நன்றி!!(சொல்லப்படாதுதான்!!:D ஆனாலும் சொல்லத் தோன்றியது!.

தங்காள்!!!

என்ன இந்தப்பக்கம் முகங்காட்ட தயங்குகிறீர்கள்???

மச்சானின் இந்தப்பதிவை அவர் இங்கு எழுததொடங்கும் போதே பார்த்தேன்,

அந்த நேரம் நானும் மச்சானும் யாழ்களத்தில் கருத்தால் மோதிக்கொண்டோம்."தூசனங்கள்" பற்றிய தலைப்பு என்று நினைக்கிறேன்.

ஆனால் இப்போ அதை நினைக்கும் போது கவலையாய் இருக்கு! சிலயுதார்த்தங்களை எம் மனம் உடனே ஏற்பதில்லை என்பதுதான்.

மச்சான் தன்னைபற்றி ஒருமுறை எழுதியிருந்தார், அன்று எனக்கு தோன்றியது அடடே ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டோமே என்று,

என்றாலும் எனது தலைக்கணம் என்னை உங்களிடம் மன்னிப்பு கேட்க விடவில்லை! இப்போ என்னை மன்னிப்பாயா மச்சான். :blink:

Edited by r.raja

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.