Jump to content

குறுந்தகவல் - தத்துவங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முட்டாள் தான் மழைநீரை சேமிப்பான்.

அறிவாளியோ, மரம் வைத்து மழை நீரை உண்டாக்கிக் கொள்வான்!

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்.

அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!

அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!

முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!

கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!

எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!

நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.

கோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.

என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.

துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.

ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.

மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் சாதிக்க முடியும்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்

எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.

நான் செய்யக்கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்வதுதான்.

மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.

இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பில்லாத படகு போன்றது.

முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்குத் தானாக வந்து சேரும்.

நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று, நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.

ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத்தன்மையும் அதுவேதான்!

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்.!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வதே மேல்.

ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.

மற்றவனுக்கு உபதேசிப்பது போல் ஒரு எளிமையான விடயம் உலகில் எதுவும் இல்லை.

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.

Link to comment
Share on other sites

*** உனக்கு என்ன தெரியும் என்பதை விட, யாரையெல்லாம் தெரியும் என்பதே முக்கியமானது. ஏனெனில், நீ சந்திக்கும் மனிதர்களும் புத்தகங்கள் போல புதிய தகவல்களை, அனுபவப் பாடங்களை உனக்குப் போதிப்பார்கள்.

*** ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்திருந்தும், அதை வாழ்வில் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது, அந்த விஷயத்தை (தெரிந்தும்) தெரியாமலிருப்பதற்குச் சமனானது.

(அறிஞர்களின் சிந்தனையிலிருந்து...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோல்வி மனச்சோர்வை தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகின்றது - காந்தியடிகள்.

"நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் உன்னை விட்டு மரணம் விலகிச் செல்கிறது.'' - விவேகானந்தர்.

* புத்தகங்கள் காலம் என்னும் கடலின் கரையில் நிறுத்தப்பட்டுள்ள கலங்கரை விளக்கங்கள்- இ.பி.விப்பிள்.

* தலைமுறைகள் கடந்துவிட்டாலும் நிலைத்து நிற்கும் அறிஞர்களின் கருவூலங்களாக விளங்குவது புத்தகங்கள். - ஜோசப் அடிசன்.

* சிறந்த நூல்கள் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களை தன்னகத்தே தாங்கியுள்ள எல்லையற்ற சமுத்திரங்கள். - நேரு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*பலன்களை எதிர்பாராமல் காரியத்தை செய்து முடிப்பவரே வீரர்.

*தேளின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் அது நொடிக்கு நொடி கொட்டும்.

*நாம் சுகமாகவும் உறுதியாகவும் அமர ஏற்றது நம் சொந்த நாற்காலிதான்!

*பொதுசனம் என்பது கொடிய மிருகத்தைப் போன்றது. ஒன்று அதை கட்டிப்போட வேண்டும். இல்லையேல் அதைவிட்டு ஓடிவிட வேண்டும்.

*பசி வந்தால் மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தவம், முயற்சி, தாளாமை, காமம், தானம் ஆகிய பத்தும் பறந்து போய் விடும்.

*உன்னால் அணைக்க முடியாத நெருப்பை தூண்டாதே.

*உலகில் அதிக காலம் சிறையில் கிடப்பது நாக்குதான். அதனை வெளியில் விட்டால் ஆபத்து.

*கோழிகூட தண்ணீர் பருகும்போது வானத்தைப் பார்த்து நன்றி சொல்கிறது.

*தன்னைக் கொத்திச் சிதைக்கும் கோடரிக்கும் வாசம் கொடுக்கும் சந்தனமரமே மரங்களில் உயர்ந்தது.

*அதிகாரத்திற்குப் பயந்து ஒன்றும் செய்யாமல் துருப்பிடித்து அழிவதை விட விரும்பியதைச் செய்து தேய்ந்து அழிவதே மேல்.

*துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்.

*தன்னை மறந்து பிதற்றும் பைத்தியக் காரன் அருகில் செல்லாதே.

*மெத்தையில் வைத்து பால் வார்த்தாலும் கடைசியில் அணில் சருக்குள்தான் சென்று மறையும்.

*தூய்மையும் தியாகமும் பேசுகிறவனின் பணப்பையைத் தட்டிப் பார்த்தால் அவன் மடியின் கனம் அறியலாம்.

*நாற்காலியில் இருப்பதால் மூடன் அறிஞனாவதில்லை.

*உன்னுடைய செய்கைகளை நீயே கவனி. அவைதான் உனது பழக்கம்.

*உத்தமன் என்பது ஒரு பெயரல்ல; ஒருவரின் செயலின் முடிவில் கிடைக்கும் மதிப்பீடு.

*நமது கழுத்தை வெட்டி எறிந்தாலும், சூரியனை ஒரு வினாடி முன்னால் வரவழைக்க முடியாது.

*உலகில் உள்ள அனைத்தையும் அடைய உதவுவது நேரம்தான். அது போனால் எதையும் அடையாமலே வாழ்க்கை போய் விடும்.

*மனிதனை மிருக நிலையில் இருந்து மாற்றி மனிதனாக்குவது கல்வி ஒன்றுதான்.

*திருட்டு ஒரு பழக்கம். அது வந்தால் சிறிய பொருள்கள் என்றோ பெரிய பொருள்கள் என்றோ வேறுபாடு காண்பதில்லை.

Link to comment
Share on other sites

ஒரு கோயில் திறக்கப்பட்டால்

இந்து மதம் வளரும்

ஒரு பள்ளிவாசல் திறக்கப்பட்டால்

இஸ்லாம் மதம் வளரும்

ஒரு தேவலாயம் திறக்கப்பட்டால்

கிறிஸ்துவ மதம் வளரும்

ஒரு நூலகம் திறக்கப்பட்டால்

மனித நேயம் வளரும்

யாரோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயங்கள்.......... இணைத்தமைக்கு நன்றி. பல விடயங்கள் என் அறிவை சிந்க்க துண்டின அதில் சில என்னை செயலாற்ற துண்டுகின்றன...... அதில் நான் வெற்றி பெறின் அது எனது வெற்றியாகாது அது உங்களுடைய வெற்றி. ......

"யாரவது இதை படித்து அறிவை பெற்றால் அதுவே எனக்கு போதும்"

புஸ்பாவிஜி

Link to comment
Share on other sites

கரையான் புற்று கட்ட

கருநாகம் குடிபுகுமாம்!

இதில் விந்தையெங்கே?

வியப்பு எங்கே?

அப்பாவிகள் ஓட்டில்

அரசியல்வாதிகள்

அரியணை ஏறுவதைவிடவா ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நேல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.

திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள்.

நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.

வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.

சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும்.

லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம்.

காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.

எவன், எந்தெந்த அளவு பாத்திரத்தை என்னென்ன முறையில் வைத்திருக்கிறானோ... அந்தந்த அளவு அவனுக்குகடவுளின் கருணை கிடைக்கிறது.

உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை.

சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான்.

வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும்.

கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்கா!

ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே இல்லறம்.

மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால் ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு.

தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்து கொடுக்கிற கருவிதான் அறிவு.

எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை.

தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.

லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்.

மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும்.

உறுதி... உறுதி... இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம்.

உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்!

குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.

தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது!

நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்.

எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்றாக உள்ளன.இவற்றை எல்லாரும் பின்பற்றினால் எப்படி இருக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம். உன் பாதையும் வழுக்கல் நிறைந்ததே. -ரஸ்யா.

*அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை; அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. -ஸ்காட்லாந்து.

*நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில் அவன் துரோகம் செய்ய மாட்டான்.-ஸ்பெயின்

*நாக்கு மூன்று அங்குலமேயானாலும், ஆறடி உயரமுள்ள மனிதனைக் கொல்லும் திறனுள்ளது. -ஜப்பான்

*தேவையில்லாதவற்றை வாங்குவதால் விரைவில் அவசியமானவற்றை விற்க நேரிடும். -பிரான்ஸ்.

*நல்லவனாக இருப்பது எளிது; நேர்மையாளனக இருப்பது கடினம். -பிரெஞ்ச்

*ஒரு மனிதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அவனிடம் அதிகாரத்தைக் கொடு. - பல்கேரியா

*நிகழ்காலத்தை நாம் இழப்பதால் எல்லாக் காலத்தையும் இழக்கிறோம். -இங்கிலாந்து.

*சுயநலம் என்ற நெருப்பு, முதலில் மற்றவர்களைப் புசிக்கிறது; பின்னர் தன்னையேப் புசிக்கிறது. -ரஷ்யா

*வாய்ப்புகளை உணர்வதே அறிவுக் கூர்மை. - சீனா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சான்றேர் சொல்

ஜீவாத்மாக்கள்கொன்டுள்ளவருத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோல்வி அடைவதற்கு பல வழிகள் இருக்கலாம். எனினும் உழைப்புதான் வெற்றி பெற ஒரே ஒரு வழி.

கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே!

மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே!

அழுகையில் ஒருவரையும் நம்பாதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிடம் சோகமாய் வந்தான் ஒருவன்.

‘‘குருவே, வாழ்க்கையில் நிறைய கஷ்டம். என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்றான்.

‘‘அப்படியா, என்ன ஆயிற்று?’’ வினவினார் குரு.

‘‘நான் செய்து வந்த வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் வந்துவிட்டது. இனிமேல் என்னால் நிமிர முடியாது. இத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிட்டது.’’

அவனை அமைதியாய் பார்த்த குரு, ‘‘வா, என்னுடன்’’ என்று, அருகிலிருந்த குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே நிறைய குழந்தைகள். சில தவழ்ந்து கொண்டிருந்தன. சில நடக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. சில ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தன. கீழே விழுவதும் பிறகு எழுந்து நடப்பதுமாக உற்சாகமாய் இருந்தன.

‘‘இந்தக் குழந்தைகளைப் பார். என்ன தெரிகிறது?’’ என்று கேட்டார் குரு.

‘‘எதுவும் புரியவில்லையே குரு.’’

‘‘இந்தக் குழந்தைகளிடம் ஒரு பாடம் இருக்கிறது. விழுகின்ற எந்தக் குழந்தையும் ‘என்னால் முடியாது’ என்று விழுந்தே கிடக்கவில்லை. உடனே எழுந்திரிக்க முயற்சி செய்கின்றன. எழுந்து ஓடுகின்றன. வாழ்க்கையும் அப்படித்தான்’’ என்றார் குரு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ...புஷ்பா விஜி , தத்துவங்கள் நன்றாக உள்ளன , மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றியடைய தேவையானவை சுறுசுறுப்பும் ஊக்கமும்தான்.

வாழ்க்கையின் பிற்பகுதியில் வெற்றியடையதேவையானவை பொறுமையும் தன்னம்பிக்கையும் தான்.

-அரிஸ்டாடில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னதமான ஒவ்வோர் வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.

பெரிய காரியங்கள் யாவும் வல்லமையால் நிறைவேற வில்லை. விடா முயற்சியால் தான் நிறைவேறுகின்றன.

தளராத இதயத்தை பெறறுள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது எதுவும் இல்லை.

உறுதி உள்ளவன் உள்ளத்தில் திடம் உள்ளவன் உலகை தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கெல்லாம் இரண்டு அடி கொடுத்தால் தான் சரி வரும்.

கையில் வெண்ணெய் இருக்க நெய் தேடி அலைவானேன்? ஒரு முறை திருக்குறளைப் படித்துப் பாருங்கள். இங்கு எழுதப்பட்ட தத்துவங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வடிவில் அங்கே இருக்கும்.

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி

குறுகத் தடித்த குறள்.

அங்கே தான் எல்லோரும் சுட்டிருக்கிறார்கள் போலும்.

2000 ஆண்டுகளுக்கு முன்னே எழுதப் பட்ட குறுந்தகவல் தத்துவங்கள் அவை.

Link to comment
Share on other sites

எங்கே சுட்டால் என்ன... எல்லோருக்கும் திருக்குறளை வாசித்து அர்த்தம் புரியும் புலமை இல்லை. இங்கே எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் அவை தரப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, மேலை நாட்டு அறிஞர்களின் தத்துவங்களும் இங்கே பகிரப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. பொறுத்தார் பூமி ஆள்வார்.

2. வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்.

3. சிறு தீயே பெரு நெருப்பாகும்.

4. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

5. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* `வெற்றி பெற வேண்டுமென்று போராடாதே. தோல்வி அடையக் கூடாது என்று நினைத்து போராடு. உலகம் உன் கையில்...! - மாவீரன் அலெக்சாண்டர்.

* நல்ல நட்பை இழப்பதை விட கொஞ்சம் பணத்தை இழப்பது மேல் - மகாத்மா காந்தியடிகள்.

* கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, நீயே உனக்கு கொடுத்துக் கொள்ளும் தண்டனை - புத்தபிரான்.

* உன்னிடம் பாசம் வைக்கும் இதயத்தை நேசி. உன்னை கோபப்படுத்தும் இதயத்தை காயப்படுத்தாதே! - அன்னை தெரசா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*உலகில் அதிக காலம் சிறையில் கிடப்பது நாக்குதான். அதனை வெளியில் விட்டால் ஆபத்து.

*கோழிகூட தண்ணீர் பருகும்போது வானத்தைப் பார்த்து நன்றி சொல்கிறது.

புஸ்பாவிஜி , தத்துவங்கள் நன்றாக உள்ளன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்மானம், தன்னறிவு, தன்னடக்கம் ஆகிய இம்மூன்றுமே வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலை அளிக்கக் கூடியவை. - டென்னிசன்.

மிகச் சுவையான சிந்தனைகளை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன். - டிமோகி டிஸ்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*உலகத்தில் நடக்கும் செய்திகளின் எண்ணிக்கை அனைத்தும் ஒரு பத்திரிக்கையில் வெளியிடும் அளவாக இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்! - ஜெர்ரி சைன்ஃபீல்ட்

*நீ வெற்றி பெறுகிறாயா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் வெற்றி பெறுகிறேனா இல்லையா என்பதுதான் முக்கியம்! - டாரின் வைன்பர்க்.

*வாழ்க்கை மிகவும் சந்தோஷமானது. இறப்பு மிகவும் அமைதியானது. இடையே இருக்கும் மாற்றமே மிகவும் துன்பமானது.

*எல்லா வெற்றிகரமான பெண்ணுக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான். ஆச்சர்யப்பட்டுக் கொண்டு!

*சந்தோஷத்தை விலைகொடுத்து வாங்க முடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை சந்தோஷத்தை!

*பெரும்பாலான மக்கள் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களைச் சுடுவது சட்டத்துக்கு புறம்பானது என்பதாலேயே.

*உன் எதிரிகளை மன்னித்து விடு. ஆனால் அவர்களின் பெயர்களை மறக்காதிரு!

*உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை நேராக உன்னுடைய காரியத்தின் முட்டாள் தனத்தைப் பொறுத்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் 
    • முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024   தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின.  இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும்.  இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர்.  நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை.  இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை.  இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும்.  இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர்.  இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை.  சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
    • வணக்கம் பாஞ் அண்ணா  உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 
    • ம‌கிழ்ச்சி ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்  வி பிர‌பாக‌ர‌ன்  வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்🙏🥰......................................
    • விருதுநகர் தொகுதியில்  8000 வா‌க்குக‌ள் வித்தியாசத்தில் விஜய பிரபாகர்  மீண்டும் முன்னணியில் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.