Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயன்தாராவுக்கும் கோயில் ? !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாராவுக்கும் கோயில்: 'சாதனை' படைக்கத் துடிக்கும் ரசிகர்கள்!

ரசிகர்களின் பைத்தியக்காரத்தனத்துக்கும், விளம்பர மோகத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

குறிப்பாக திருச்சிக்காரர்கள், இதில் டபுள் பிஎச்டி வாங்குமளவுக்கு தேறிவிட்டார்கள். நடிகைகளுக்கு கோயில் கட்டும் அரிய திருப்பணியை ஆரம்பித்து வைத்தவர்களும் இவர்கள்தான்.

இவர்களைப் பார்த்து, சும்மா இருக்க முடியாமல் நெல்லையைச் சேர்ந்த சிலர் எங்கோ ஒரு கிராமத்தில் நமீதாவுக்கு கோயில் கட்டியதாக அறிவிக்க, அதை போலீசார் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேட வேண்டி வந்தது.

இப்போது மீண்டும் திருச்சியைச் சேர்ந்த சிலர் கோயில் திருப்பணியைத் துவங்கிவிட்டனர்.

இந்த முறை அவர்களுக்கு நயன்தாரா மீது 'பக்தி' பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிட்டது.

அரவக்குறிச்சிக்குப் பக்கத்தில் கோயில் கட்டப் போவதாக அறிவித்துளனராம். இதை சில ஊடகங்களும் பரபரப்பாக கொளுத்திப் போட, திருச்சி மாவட்ட போலீசாருக்கு நெருக்கடியாகிவிட்டது. உண்மையிலேயே இப்படியெல்லாம் கட்டப் போகிறார்களா... இல்லை சும்மா கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா... எனத் தெரியாத போலீசார், அரவக்குறிச்சி முழுவதும் தேடத் துவங்கி இருக்கிறார்களாம்.

"சும்மாவே சிலர் தேவையில்லாம பரபரப்புக் கிளப்ப இப்படி செய்தி பரப்புறாங்க சார். குறிப்பா சில இணைய தளங்கள்ல ஆதாரமே இல்லாமே எதையெதையோ எழுதி வைக்க அதனால நமக்கு பெரும் தொல்லை. முதல்ல அவங்களைக் கட்டுப்படுத்தணும்... இந்தச் செய்தி கூட ஏதோ ஒரு பிளாக்லதான் வந்திருக்கு. அதோட நம்பகத் தன்மை தெரிஞ்ச பிறகுதான் சொல்ல முடியும்.

கோயில் கட்டுவதைப் பற்றி நாங்க கருத்து சொல்ல விரும்பல... ஆனா காதுல கேக்கறதையெல்லாம் செய்தியாக்கும், சுய செய்தியாளர்களை முதலில் அடக்கி வச்சாதான் சரிப்படும்," என்கிறார் சென்னை மாநகர சைபர் குற்றப் பிரிவு அதிகாரி சைலேஷ்குமார்.

திருச்சி அரவக்குறிச்சியை சேர்ந்த ரசிகர்கள் சிலர், நயன்தாராவுக்கு கோவில் கட்ட நிலம்கூட வாங்கிவிட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது போலீஸ்.

இதுகுறித்து நயனதாராவின் கருத்தறிய அவரது மேலாளரை அணுகினோம். அவரோ, "இதெல்லாம் சும்மா ரீல் சார். நயன்தாராவுக்கு ரசிகர் மன்றம் கூட கிடையாது. தேவை.யில்லாம போலீஸ் வேற எங்ககிட்ட விசாரிக்குது..." என்றார்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • Replies 147
  • Views 18.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில சாமியக் கும்பிடக்கானோம்.. இவங்களையெல்லாம் என்ன செய்யுறது யாருக்கு கோவில் கட்டுறது என்து ஒரு விவஸ்தையேயில்ல

நயன்தாரா மீது 'பக்தி' பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிட்டது.

Edited by புஸ்பாவிஜி

குஷ்பு... நமீதா... வரிசையில் இப்போது நயன்.

இந்து மதத்தில் கடவுளர்களின் எண்ணிக்கைக்குப் பஞ்சம் தான்... எனவே, இவர்களுக்கு கோயில் தேவை தான். :)

Edited by Mallikai Vaasam

நான் அவுஸ்திரிலியாவில அவாக்கு ஒரு கோயில் கட்டுவம் என்றால், திருச்சிகாரன்கள் முந்திட்டாங்கள். வைகாசி குன்றத்துக்கு அருகில் போட்டியாய்.

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாராவுக்கு பிறகு யாருக்கு கோயில் கட்ட போயினம்?

நயன்தாராவுக்கு பிறகு யாருக்கு கோயில் கட்ட போயினம்?

இவன் தம்பு ஜம்பு பாவானுக்கு கட்ட வேணும் என்று ஒற்றைக் காலில நிற்கிறான். அது தான் நாங்கள் வெள்ளிக் கிழமை கோயிலுக்கு போறம், பூக் கட்டி பார்க்க....

இல்லாத கற்பனை உருவங்களுக்கு கோயில் கட்டுவதை விட, இருக்கின்ற நயன்தாரா, நமீதா போன்றோருக்கு தாரளமாக கோயில் கட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவுஸ்திரிலியாவில அவாக்கு ஒரு கோயில் கட்டுவம் என்றால், திருச்சிகாரன்கள் முந்திட்டாங்கள். வைகாசி குன்றத்துக்கு அருகில் போட்டியாய்.

நீங்கள் திரீஸாவிற்கு கட்டுங்கோ......... மெல்லிய கல்லலேயே சிலையும் செதுக்கிடலாம்

நாயன்தாரா என்றால் ................... பெரிய கல்லும் பெரிய செலவும் ஆகும்

நீங்கள் திரீஸாவிற்கு கட்டுங்கோ......... மெல்லிய கல்லலேயே சிலையும் செதுக்கிடலாம்

நாயன்தாரா என்றால் ................... பெரிய கல்லும் பெரிய செலவும் ஆகும்

அட... இப்ப தானே புரியுது..! நமீதாவுக்கு கோயில் கட்ட வெளிக்கிட்டு, பிறகு ஏன் அந்த திட்டம் கைவிடப்பட்டதென்று.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அயனுக்கு கோவில் கட்டி வழிபடலாம் என்றால் நயனுக்கு ஏன் கூடாது என்று பகுத்தறிவாளர்கள் சிந்தித்துவிட்டார்கள்..! என்னே பகுத்தறிவு... ஒருத்தன் தான் முட்டாள் என்று பார்த்தால் அவன் வழியில்... பகுத்தறிவு என்று கொண்டு..

உந்தக் காசைக் கொண்டு நாலு ஏழை எளியவர்களுக்கு ஒரு வீட்டுத்திட்டம் கட்டிக் கொடுக்கலாமே..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமீதாவுக்கோ , நயன் தாராவுக்கோ ....... யாருக்கு கோவில் கட்டினாலும் , அங்கு எங்கடை முனிவர் தான் பூசாரியாக இருக்க தகுதியானவர் .

  • கருத்துக்கள உறவுகள்

அயனுக்கு கோவில் கட்டி வழிபடலாம் என்றால் நயனுக்கு ஏன் கூடாது என்று பகுத்தறிவாளர்கள் சிந்தித்துவிட்டார்கள்..! என்னே பகுத்தறிவு... ஒருத்தன் தான் முட்டாள் என்று பார்த்தால் அவன் வழியில்... பகுத்தறிவு என்று கொண்டு..

உந்தக் காசைக் கொண்டு நாலு ஏழை எளியவர்களுக்கு ஒரு வீட்டுத்திட்டம் கட்டிக் கொடுக்கலாமே..! :)

இதை நாங்கள் வாய்கிழிய வார்தைகளால் சொன்னால் புரியாது............

நாயன்தாராவிற்கு ஒரு சின்ன கோயிலகட்ட எல்லாம் விழங்குது????

நெடுக்கண்ணா என்ன அண்ணே சொல்றீங்கள்..... தேங்காயை வீணாக றோட்டிலபோட்டு உடைக்கிறாங்களே புகலிடம் கொடுத்த நாட்டவனின் நாட்டையும் றோட்டையும் அசுத்தம் பண்ணுறாங்களே என்று சொன்னப்போ........... எங்கயோ தேடிபோய் அவூஸ்ரேலியாவில் சில பாட்டிகளில் தமிழ் பெண்கள் குடிக்கினமாம் அதலால் தேங்காய் உடைப்பதை நிறுத்தவே தேவையி;ல்லை என்றீர்கள்..... இப்போ அந்தபிள்ள பாவம் ஏதோ தன்னால காட்ட கூடிய கருணைகளை ரசிகரிடத்தில் காட்டுது நன்றிக்காய் ரசிகர்கள் ஒரு சின்ன கோவிலை கட்டினால்.

வீட்டுதிட்டம்??? நல்ல திட்டம்......... மனிதருக்கு உதாவத உபத்திரபம் மட்டுமே கொடுக்க கூடிய எல்லா திட்டங்களையும் வீட்டுதிட்மாக்கினால் வீடற்றோர் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

இப்போதைக்கு பூமியில் வாழ்பவர்களுக்கு வீட்டை கட்டுவோம்..... பின்பு வசதியும் நிலமும் இருப்பின் பூமில் இல்லாதவர்களுக்கு கட்டிடங்கள் கட்டுவோம் என்று நாம் சொன்னால் உங்களுக்கு அது ஏறாது.......

என்னை என்ன இப்படியே விடவா போறிங்கள் ஒரு பெரிய பந்திய எழுதி கடைசியில கோவிலை கட்டுவோம் என்றுதான் சொல்லபோறீங்கள். கட்டுவோம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை...... அப்படியே நாயன்அம்பாளுக்கும் சின்னதாய் ஒன்றை கட்ட அனுமதியுங்கள் என்றுதான் சொல்லுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா என்ன அண்ணே சொல்றீங்கள்..... தேங்காயை வீணாக றோட்டிலபோட்டு உடைக்கிறாங்களே புகலிடம் கொடுத்த நாட்டவனின் நாட்டையும் றோட்டையும் அசுத்தம் பண்ணுறாங்களே என்று சொன்னப்போ........... எங்கயோ தேடிபோய் அவூஸ்ரேலியாவில் சில பாட்டிகளில் தமிழ் பெண்கள் குடிக்கினமாம் அதலால் தேங்காய் உடைப்பதை நிறுத்தவே தேவையி;ல்லை என்றீர்கள்..... இப்போ அந்தபிள்ள பாவம் ஏதோ தன்னால காட்ட கூடிய கருணைகளை ரசிகரிடத்தில் காட்டுது நன்றிக்காய் ரசிகர்கள் ஒரு சின்ன கோவிலை கட்டினால்.

நீங்கள் அந்த தலைப்பில் நான் எழுதிய கருத்தை சரிவர உள்வாங்கவில்லை என்று நினைக்கிறேன்..!

நம்மவர்களில் பெண்கள் உட்பட பெருமளவிலானோர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மாறிவருவது ஒன்றும் ரகசியம் அல்ல.ஆனால் அங்கு குறிப்பிட்ட முக்கிய விடயம் தேங்காய் உடைப்பதற்காக கவலைப்படுபவர்கள் இதர ஆடம்பர செலவீனங்களைக் கட்டுப்படுத்த முனைவதும் இல்லை.. சுட்டிக்காட்டுவதும் இல்லை. காரணம் தாமும் அதில் ஈடுபட்டு வருவதாலாகும். அந்த வகையில் தேங்காய் உடைப்பது மட்டுமல்ல புகலிட நாடுகளில் நடைபெறுகிறது.. இதர பல அநாவசிய ஆடம்பரத்தில் செலவிடப்படும் பணம் தேங்காய் உடைப்பதிலும் அதிகம் என்பதையே அங்கு சுட்டிக்காட்டினேன்.

மற்றும்படி தேங்காய் உடைப்பதை அங்கீகரிப்பதல்ல என் நோக்கம். அதேபோல்.. ஒரு சில பெண்கள் அல்ல குடிக்கிறார்கள். பலரும் குடிக்கிறார்கள். இதனால் ஆகும் செலவு பல ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அவற்றை ஒரு நேர தேனீருக்கு வழியில்லாமல் வாழும் மக்களுக்கு வழங்க முன் வரவேண்டும் என்பதுதான் எனது கருத்தின் நோக்கமே அன்றி. வெறும் பெண்கள் மட்டுமே குடிகாரர் என்ற நிறுவலையல்ல நான் முன்னிறுத்தியது..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கட்டும் நடக்கட்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

"பாம்பு தின்கிற ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு" என்று ஒரு பழமொழி இருக்கு. அதன்படி புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தற்போது ஒரு தலைமுறை காலம் அளவில் வசிக்கின்றார்கள். எனவே இங்குள்ள பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் தவறு ஒன்றுமில்லை (பண்டிகை காலம் நெருங்குது, பல பார்ட்டிகள் வருகின்றன!)

மேலும் நயனுக்குக் கோயில் கட்டினால் ஐயராகப் போகச் சந்தர்ப்பம் இருக்குமே? குறைந்தது பட்டுச் சாத்திற வேலையாவது கிடைத்தான் போதும் :)

இது கிராமங்களில இருந்து அகதியாக வந்தவர்களுக்குப் பொருந்தலாம். ஆனால் நகரங்களில் இருந்து அகதியா வந்தவை ஏற்கனவே உதெல்லாம் ஊரில பழகிட்டுத்தான் வந்திருக்கினம். எப்ப மேற்குலக காலணித்துவம் வந்திச்சோ அப்பவே உதுகளும் கூடி வந்திட்டுது.

இப்ப என்ன.. அது பலமாகிட்டு வருகுது. நம்ம கலாசாரம் என்ற தோறணையில் ஒன்றுக்கு ஒன்றாக ஆக்கப்பட்டு வருகுது

புகலிடத்தில் எத்தனையோ நன்மையான விடயங்களைப் பழக இருந்தும்.. அதைச் செய்யும் அளவை விட கெட்டத்தை பழக எம்மவர்கள் முண்டி அடிப்பதுதான் தவறானது என்பதாகத் தெரிகிறது.

இறுதியில்.. உணர்வார்கள். எம்மவர்கள் எப்போதும் முன்கூட்டி தீர்மானிப்பவர்கள் அல்ல. பட்ட பின் உணர்வார்கள்..! அல்லது அடையாளம் இழப்பார்கள்..! :)

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவானும் தேங்காய் உடைப்பதை நியாயப்படுத்தவில்லை. நானும் நயன்தாராவிற்கு கோயில் கட்டுவதை நியாயப்படுத்தவில்லை.

பலவிதங்களில் வீண்விரயம் செய்கின்ற நாம் தேங்காய் உடைப்பதைப் பற்றி மட்டும் பேசுவது தவறு என்று அவர் சொல்கின்றார்.

இல்லாத அம்மனுக்கு கோயில் கட்டுகின்ற நாங்கள் நயன்தாராவுக்கு கோயில் கட்டுவதை மட்டும் எதிர்ப்பது தவறு என்று நான் சொல்கிறேன்.

அம்மனை நம்பி பக்தியுற்று கிளர்ச்சி அடைந்தவர்கள் கோயில் கட்டலாம் என்றால், நயன்தாரவாலும் நமீதாவாலும் கிளர்ச்சி அடைந்தவர்களும் கோயில் கட்டலாம்.

அவர்களுக்கு உள்ள உரிமை இவர்களுக்கு உண்டு.

இரு தரப்புமே முட்டாள்களாக இருந்தாலும், இல்லாதவற்றிற்கு கோயில் கட்டுபவர்களை விட இருப்பவைக்கு கோயில் கட்டுபவன் புத்திசாலி என்பது என்னுடைய கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

"பாம்பு தின்கிற ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு" என்று ஒரு பழமொழி இருக்கு. அதன்படி புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தற்போது ஒரு தலைமுறை காலம் அளவில் வசிக்கின்றார்கள். எனவே இங்குள்ள பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் தவறு ஒன்றுமில்லை (பண்டிகை காலம் நெருங்குது, பல பார்ட்டிகள் வருகின்றன!)

மேலும் நயனுக்குக் கோயில் கட்டினால் ஐயராகப் போகச் சந்தர்ப்பம் இருக்குமே? குறைந்தது பட்டுச் சாத்திற வேலையாவது கிடைத்தான் போதும் :)

கிருபன் இந்த நக்கல்தானே வேண்டாம் எண்டிறது நீங்கள் பட்டுச்சாத்தினால் நாங்கள் பாத்துக்கொண்டிருப்பமா??நானும் கு.சாவும் பட்டையை சாத்திப்போட்டு உம்மை் சாத்திப்போடுவம் கவனம்.பட்டு சாத்தாமல் விட்டால்தான் அழகே :lol: :lol: :)

எனக்கு இப்பதானே விளங்குது. கோயில் கோபுரங்களிலே இருக்கிற பெண்சிலைகள் எப்பிடி வந்தது எண்டு. வரலாறு புதுப்பிக்கப்படுகுது போல....

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இந்த நக்கல்தானே வேண்டாம் எண்டிறது நீங்கள் பட்டுச்சாத்தினால் நாங்கள் பாத்துக்கொண்டிருப்பமா??நானும் கு.சாவும் பட்டையை சாத்திப்போட்டு உம்மை் சாத்திப்போடுவம் கவனம்.பட்டு சாத்தாமல் விட்டால்தான் அழகே :):lol: :lol:

சாத்து ஆறஅமர இருந்து யோசித்துப்போட்டு சொல்லுங்கோ எது அழகு என்று :):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானும் தேங்காய் உடைப்பதை நியாயப்படுத்தவில்லை. நானும் நயன்தாராவிற்கு கோயில் கட்டுவதை நியாயப்படுத்தவில்லை.

பலவிதங்களில் வீண்விரயம் செய்கின்ற நாம் தேங்காய் உடைப்பதைப் பற்றி மட்டும் பேசுவது தவறு என்று அவர் சொல்கின்றார்.

இல்லாத அம்மனுக்கு கோயில் கட்டுகின்ற நாங்கள் நயன்தாராவுக்கு கோயில் கட்டுவதை மட்டும் எதிர்ப்பது தவறு என்று நான் சொல்கிறேன்.

அம்மனை நம்பி பக்தியுற்று கிளர்ச்சி அடைந்தவர்கள் கோயில் கட்டலாம் என்றால், நயன்தாரவாலும் நமீதாவாலும் கிளர்ச்சி அடைந்தவர்களும் கோயில் கட்டலாம்.

அவர்களுக்கு உள்ள உரிமை இவர்களுக்கு உண்டு.

இரு தரப்புமே முட்டாள்களாக இருந்தாலும், இல்லாதவற்றிற்கு கோயில் கட்டுபவர்களை விட இருப்பவைக்கு கோயில் கட்டுபவன் புத்திசாலி என்பது என்னுடைய கருத்து.

கோவில் என்பது புனிதமாக கருதப்படும் ஒரு இடம்.அது மசூதியாகட்டும்.. தேவாலயமாகட்டும்.

மனிதர்களுக்கு கட்டுவது நினைவாலயங்களும்.. வசந்தமாளிகைகளும்.. தாஜ்மகால்களும். நயன் கோவிக்கப் போகிறார். ஒரு குட்டிக் கோவில் கட்டி.. வைரவருக்கு சமனா றோட்டில் இருத்திப் போட்டியள் என்று. ****

Edited by மோகன்
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

பெண்களால தீவிரமாக பாதிக்கப்பட்டு வாழ்க்கை வெறுத்த சிலர் உங்களுக்கு கோயில் கட்டப்போறீனமாம் கேள்விப்பட்டனீங்களோ நெடுக்காலபோவான்? உங்கட கோயில் கற்பக்கிரகத்தில என்ன சிலையை வைக்கிறது எண்டு இப்பவே சொல்லிவிட்டீங்கள் எண்டால் நல்லாய் இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களால தீவிரமாக பாதிக்கப்பட்டு வாழ்க்கை வெறுத்த சிலர் உங்களுக்கு கோயில் கட்டப்போறீனமாம் கேள்விப்பட்டனீங்களோ நெடுக்காலபோவான்? உங்கட கோயில் கற்பக்கிரகத்தில என்ன சிலையை வைக்கிறது எண்டு இப்பவே சொல்லிவிட்டீங்கள் எண்டால் நல்லாய் இருக்கும். :lol:

கோவில் எல்லாம் கட்ட வேண்டாம். அந்தப் பெண்களுக்கு நல்ல உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்து அவர்களை மனிசராக்கினாலே போதும். அவைக்கும் சந்தோசம்.. அவை சார்ந்தவைக்கும் சந்தோசம். அது தான் முக்கியம். எனக்கு கோவில் கட்டவும் வேண்டாம் கருமாரியும் செய்ய வேண்டாம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அந்த தலைப்பில் நான் எழுதிய கருத்தை சரிவர உள்வாங்கவில்லை என்று நினைக்கிறேன்..!

நம்மவர்களில் பெண்கள் உட்பட பெருமளவிலானோர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மாறிவருவது ஒன்றும் ரகசியம் அல்ல.ஆனால் அங்கு குறிப்பிட்ட முக்கிய விடயம் தேங்காய் உடைப்பதற்காக கவலைப்படுபவர்கள் இதர ஆடம்பர செலவீனங்களைக் கட்டுப்படுத்த முனைவதும் இல்லை.. சுட்டிக்காட்டுவதும் இல்லை. காரணம் தாமும் அதில் ஈடுபட்டு வருவதாலாகும். அந்த வகையில் தேங்காய் உடைப்பது மட்டுமல்ல புகலிட நாடுகளில் நடைபெறுகிறது.. இதர பல அநாவசிய ஆடம்பரத்தில் செலவிடப்படும் பணம் தேங்காய் உடைப்பதிலும் அதிகம் என்பதையே அங்கு சுட்டிக்காட்டினேன்.

மற்றும்படி தேங்காய் உடைப்பதை அங்கீகரிப்பதல்ல என் நோக்கம். அதேபோல்.. ஒரு சில பெண்கள் அல்ல குடிக்கிறார்கள். பலரும் குடிக்கிறார்கள். இதனால் ஆகும் செலவு பல ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அவற்றை ஒரு நேர தேனீருக்கு வழியில்லாமல் வாழும் மக்களுக்கு வழங்க முன் வரவேண்டும் என்பதுதான் எனது கருத்தின் நோக்கமே அன்றி. வெறும் பெண்கள் மட்டுமே குடிகாரர் என்ற நிறுவலையல்ல நான் முன்னிறுத்தியது..! :lol::)

என்னை மன்னித்து கொள்ளவும்..... உங்களின் கருத்தை நான் தவறாகவே புரிந்துவைத்திருந்திருக்கி

கோவில் என்பது புனிதமாக கருதப்படும் ஒரு இடம்.அது மசூதியாகட்டும்.. தேவாலயமாகட்டும்.

மனிதர்களுக்கு கட்டுவது நினைவாலயங்களும்.. வசந்தமாளிகைகளும்.. தாஜ்மகால்களும். நயன் கோவிக்கப் போகிறார். ஒரு குட்டிக் கோவில் கட்டி.. வைரவருக்கு சமனா றோட்டில் இருத்திப் போட்டியள் என்று. ****:)

கோயில் என்பது உங்களுக்குப் புனிதமானது. நயன்தாரா ரசிகர்களுக்கு நயன்தாராவின் கோயில் புனிதமானது.

உங்கள் கோயிலுக்கு மற்றவர்கள் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பையும் புனிதத்தையும் நயன்தாரா கோயிலுக்கும் நீங்கள் கொடுப்பதே நேர்மையானது.

அனைத்துமே கோயில்தான். அங்கே அம்மாளாச்சி இருந்தால் என்ன? வாழும் தெய்வம் நயன்தாரா இருந்தால் என்ன? எல்லாம் கோயில்தான். எல்லாம் புனிதம்தான்.

உங்களுக்கு நயன்தாராவில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். உங்களுக்குப் பிடிக்காது விட்டால் நீங்கள் நயன்தாரா கோயிலுக்குப் போக வேண்டாம்.

ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை நக்கலடிக்க வேண்டாம். புண்படுத்த வேண்டாம்.

எமது முன்னோர்கள் தாம் கற்பனையில் கண்ட பெண் தெய்வங்களை பெருத்த மார்புகளோடு சிலை வடிவில் செய்து வணங்கினார்கள்.

அந்த வடிவங்களை குஸ்பு, நமீதா, நயன்தாராவிடம் கண்ட இன்றைய தலைமுறையினர் அவர்களுக்கு சிலை வடித்து வணங்குகின்றார்கள்.

அனைத்து ஆறுகளும் ஒரே கடலிலேயே கலப்பதை புரிந்து கொள்ளுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.