Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு

[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2008, 11:52.10 AM GMT +05:30 ] [ புதினம் ]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோமீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

இதன் பின்னர் விடுதலைப் புலிகளால் இரண்டு கிலோமீற்றர் முன்னரண் மீட்கப்பட்டது.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த அதிரடித்தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/view.php?22IWnz200...d44QQH3b02LLS3e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா..அப்படி போடு..போடு...ஆமி..ஒட..ஓட...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி வாசிக்க உச்சாகம் பிறக்குது..

தமிழர் படை வெல்லும்..

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

2 கி..மீ தூரம் சிங்களப் படைகள் இரணமடு-முறிகண்டிப் பகுதியிலிருந்து பின்தள்ளப் பட்டிருப்பதாக தமிழ்நெற் கூறுகிறது. இந்த வலிந்த தற்காப்பு நடவடிக்கையில் 40 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 7 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்தி கூறுகிறது.

LTTE's preemptive strike kills 40, pushes SLA 2 km back in Ki'linochchi

[TamilNet, Saturday, 20 December 2008, 16:03 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) counter-offensive units carried out a preemptive strike on Sri Lanka Army (SLA) offensive formation in Mu'rika'ndi - Ira'naimadu area Saturday, killing 40 SLA soldiers, LTTE officials told TamilNet. The SLA was pushed back 2 km and the Tigers said they have recovered 7 dead bodies of SLA soldiers so far in the clearing mission.

The preemptive strike was carried out as the SLA was preparing for another offensive push, according to LTTE officials.

The first LTTE-claimed preemptive strike comes in the wake of SLA suffering three debacles within the last few weeks in Ki'linochchi.

நல்ல செய்தி வாசிக்க உச்சாகம் பிறக்குது..

தமிழர் படை வெல்லும்..

அப்ப இதற்கு முன்னர் வெல்லாது என்று நினைத்து இருந்திருக்கின்றீர்கள். அண்ணா தமிழர்படை வெல்வது உறுதி இதை அறுதியிட்டு கூறலாம்.

10 படைய உடலங்களும் பெருமளவு ஆயுதங்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

படையினர் தமது அடுத்த கட்ட முன்னகர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தவேளையே இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே பெருமளவு ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி- இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளதுடன், இத்தாக்குதலின்போது 40 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உயிரிழந்த படையினரின் 7 சடலங்களை மீட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்பாராத அதிரடித் தாக்குதலினால் சிறிலங்கா படையினர் கடந்த சில வாரங்களாக பாரிய இழப்புக்களுடன் கைப்பற்றியிருந்த 2 கிலோ மீற்றர் நீளமான அரண் பகுதியை கைவிட்டு பின்வாங்கி ஓடினர்.

முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.

இந்த அதிரடித்தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

www.tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் 40 படையினர் பலி - 7 உடலங்களும் ஆயுதங்களும் புலிகள் வசம்

திகதி: 20.12.2008 // தமிழீழம் // [வன்னியன்]

முன்னேறிய சிறிலங்காப் படையினருக்கு எதிராக இன்று விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. முறுகண்டி - இருணைமடுப் பகுதிகளில் முன்னேறி நிலைகொண்டிருந்த படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் படையினருக்கு மீண்டும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஏழு படையினரின் உடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அத்துடன் படையினர் முன்னைய நிலைகளில் இருந்து 2 கிலோ மீற்றர் பின் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

சப்பாத்தோடை உள்ளை போனவைக்கு முருகண்டி பிள்ளையர் வேலையை காட்டி போட்டார்.... :):D:)

அதாலை ஜெகத் டயசுக்கா இந்த நிலை...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயாண்ணை

புலம்பெயர் மந்தைகள் கோவில் மணியை உருக்கிச் செய்த ஆயுதத்தால் தானாம் விளாசல் நடந்ததாம்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட் பிரேக்கிங் நியூஸ் போடுறது கூட சில பேருக்கு கடுப்பை உருவாக்குது. இப்ப டிபன்ஸ்.எல் கேயில கிளிநொச்சியை இராணுவம் பிடிச்சிட்டு என்று பிரேக்கிங் நியூஸ் போட்டால்.. சிங்களப் படையினரின் காணொளிகளோடு சிலர் குறுக்கால அடிக்கடி போய் வருவினம்..! :):D:)

Edited by nedukkalapoovan

பலி 60................150 காயம்..............12 உடலங்கள் கைபற்ற பட்டுள்ளது..........

தமிழ்நெட் பிரேக்கிங் நியூஸ் போடுறது கூட சில பேருக்கு கடுப்பை உருவாக்குது. இப்ப டிபன்ஸ்.எல் கேயில கிளிநொச்சியை இராணுவம் பிடிச்சிட்டு என்று பிரேக்கிங் நியூஸ் போட்டால்.. சிங்களப் படையினரின் காணொளிகளோடு சிலர் குறுக்கால அடிக்கடி போய் வருவினம்..! :) :) :D

அண்ணா, இந்த கருத்த்தை நான் நூறு வீதம் ஆதரிக்கிறேன்... நீங்கள் சொல்லுறது உண்மைதான். :D

வேண்டாமண்ணை.. அவையள் கோவிக்கப்போயினம்..! :)

தமிழ்நெட் பிரேக்கிங் நியூஸ் போடுறது கூட சில பேருக்கு கடுப்பை உருவாக்குது. இப்ப டிபன்ஸ்.எல் கேயில கிளிநொச்சியை இராணுவம் பிடிச்சிட்டு என்று பிரேக்கிங் நியூஸ் போட்டால்.. சிங்களப் படையினரின் காணொளிகளோடு சிலர் குறுக்கால அடிக்கடி போய் வருவினம்..! :):D :D
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட் பிரேக்கிங் நியூஸ் போடுறது கூட சில பேருக்கு கடுப்பை உருவாக்குது. இப்ப டிபன்ஸ்.எல் கேயில கிளிநொச்சியை இராணுவம் பிடிச்சிட்டு என்று பிரேக்கிங் நியூஸ் போட்டால்.. சிங்களப் படையினரின் காணொளிகளோடு சிலர் குறுக்கால அடிக்கடி போய் வருவினம்..! :) :) :D

அண்ணா, இந்த கருத்த்தை நான் நூறு வீதம் ஆதரிக்கிறேன்... நீங்கள் சொல்லுறது உண்மைதான். :D

வேண்டாமண்ணை.. அவையள் கோவிக்கப்போயினம்..! :D

கருத்துக்கு கருத்து எழுதலாம்

அவரைக் கூப்பிட்டு அடிப்பது சரியல்ல

அவரைப்பலர் குறுக் எங்கே குறுக் எங்கே என்று இங்கு கூப்பிடுகிறார்கள்

நல்லதை எழுதும்போது வரவேற்பதுதான் நமக்கு தற்போது தேவை

இதில் என்ன எமக்கு குறைந்துவிடப்போகிறது

உள்ள எதிரிகளும்

ஓணான்களும் போதும்

நமது செயல்களினால் அல்லது நாமே மேலும் மேலும் இவர்களை உருவாக்காதிருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு கருத்து எழுதலாம்

அவரைக் கூப்பிட்டு அடிப்பது சரியல்ல

அவரைப்பலர் குறுக் எங்கே குறுக் எங்கே என்று இங்கு கூப்பிடுகிறார்கள்

நல்லதை எழுதும்போது வரவேற்பதுதான் நமக்கு தற்போது தேவை

இதில் என்ன எமக்கு குறைந்துவிடப்போகிறது

உள்ள எதிரிகளும்

ஓணான்களும் போதும்

நமது செயல்களினால் அல்லது நாமே மேலும் மேலும் இவர்களை உருவாக்காதிருப்போம்

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முதல்.. குறிப்பிட்டவர் தொடர்சியாக போராளிகளின் தகவல்களுக்கும் அதைப் பிரசுரிக்கும் தமிழ்நெட்டுக்கும் புத்திமதி சொல்ல வெளிக்கிடுறதும்.. அதைச் சாட்டு வைச்சு போராளிகளின் முயற்சிகளை மட்டம் தட்டுவதும் இங்கு வேடிக்கை பார்க்கக் கூடிய ஒன்றல்ல.

சொல்லனாத் துயரங்களோடும் இழப்புகளோடும் போராளிகள் போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எங்கோ வெளிநாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு குளிருக்க.. பியரும் அடிச்சுக் கொண்டு புத்திமதி சொல்ல இணையத்தில தட்டிறது இலகு. அதை எவரும் செய்யலாம்..! இப்ப பிறந்த குழந்தையும் அதைச் செய்யும்..! ஒரு போராளியின் போரில் சிக்கியுள்ள மக்களின் மன நிலையில் இருந்து பார்க்க வேண்டும் சில விடயங்களை..!

கருத்தை கருத்தாக எழுதினால் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது பதில் கருத்தை வைக்கலாம். உள்குத்து வெளிக்குத்து வைச்சு இங்க ஓணான் ஓட்டிக் கொண்டிருக்கலாம் என்று நினைச்சால் அதை தொடர்ந்து வேடிக்கை பார்க்க முடியுமா..??! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை மறுக்கவில்லை

மறுக்கவும் முடியாது

சிலவிடயங்களில் சமரசம் என்றபேச்சுக்கே இடமில்லை

உண்மைதான்

அப்ப உண்மையான திருவிழா தொடங்கிட்டுது போலை ... டண்டணக்கா டண்டணக்கா ஆமிக்காரருக்கு....

நண்பர்களே சிலகாலம் விட்டு நான் மீண்டும் களத்துக்கு வந்துள்ளேன் ... வரவேற்பீர்களென நம்புகி;;றேன்...

களத்தில் உங்களுடன் கருத்து பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி..வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

2வது இணைப்பு) வன்னியில் 60 படையினர் பலி, 150 பேர் படுகாயம் - 12 உடலங்களும் ஆயுதங்களும் புலிகள் வசம்

திகதி: 20.12.2008 // தமிழீழம் // [வன்னியன்]

வன்னிக் களமுனைகளில் முன்னேறிய சிறிலங்காப் படையினருக்கு எதிராக இன்று விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 150ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளதா

நல்ல செய்திதான்..... இருந்தாலும் நாங்கள் எல்லாரும் குறுக்கரை கூப்பிட்டு குத்தினாத்தான் இந்த சிறுவெற்றிக்கு ஒரு பெறுமதி.

எம் மக்களுக்கு விடிவு நிச்சயம் கிடைக்க வேண்டும்.

நல்ல செய்தி..

நமக்கேன் குறுக்காலபோன புத்தி வரவேண்டும். இப்போ அதையெல்லாம் கவனிப்பதே குறைவு. :wub:

இடங்களை விட்டுட்டு பின்வாங்கும் போது மட்டும் மனச்சோர்வடையுங்கோ ! இப்ப இடத்தை பிடிச்ச உடன கும்மாங்குத்து போடங்கோ ! ......எப்பவும் மனதைத் தளராமல் மற்றவனையும் குழப்பாமல் இருக்கப்பாருங்கொ !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.