Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம்

[திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 07:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தொடர்கின்றன. இதில் 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இத் தகவலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

_________________

மூலம்: புதினம்

கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம்

கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தாக்குதல் தொடர்கின்றன. இதில் 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிளிநொச்சியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் அதன் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மூன்று முனைகளிலும்

குஞ்சுப்பரந்தன் பகுதியில் இரண்டு முனைகளிலும் இன்று திங்கட்கிழமை காலை 5:00 மணிக்கு செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வுத் தாக்குதலை சிறிலங்கா படையினரின் 57, 58 ஆம் டிவிசன்களின் படையினர் மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வு தாக்குதலுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

கிளிநொச்சிக்கு தெற்காக இரணமடுப் பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முறியடிக்கப்பட்டது.

இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கு மேற்கில் உருத்திரபுரம் பகுதியில் படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர்.

இந்த முனை முன்னகர்வும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதிலும் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன.

மேலும் மூன்று முனைகளில் படையினரின் நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இன்றைய முறியடிப்புத் தாக்குதல்களில் படையினர் தரப்பில் 100 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிக படையினர் காயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinam.com/full.php?22tVo0202...d40KOAda0eMMRbe

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியோ புதுவரியம் பிறக்கேக்கை கிளிநொச்சி தங்களின்ர கையில வந்திர வேணுமெண்டு பாடுபடுறாங்கள். மலையைக் கல்லி எலியப் பிடிக்கப் போன கதைமாதிரி கிளிநொச்சிக்குள்ள என்ன கிடக்குது. புது வரியத்தில எருப்பொறுக்கப் போயினம் போல. வறாட்டி தட்டவும் பயன்படாது.

ம்ம்ம் .. அங்காலை விழுறது கனக்கத்தான்.. ஆனால் எங்கடைபக்கம் என்னமாதிரியெண்டு தெரியேல்லை..

எப்படியும் கவனமாத்தான் தலைவர்டை திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கும் .... எவ்வளவு நாளைக்கு தற்காப்பு போர் புரிவது? ..பெரிய புலிப்பாய்ச்சல் ஒன்றுதான் மகிந்தற்றை முடிவைமாற்றும்...

தலைவருக்கு தெரியும் என்ன செய்யவேணும் எண்டு.. பொறுத்திருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

100 SLA killed, 250 wounded, heavy fighting in Ki'linochchi - LTTE

[TamilNet, Monday, 22 December 2008, 14:28 GMT]

More than 100 Sri Lanka Army (SLA) soldiers were killed and at least 250 SLA soldiers wounded Monday when the Liberation Tigers of Tamileelam (LTTE) repulsed a fresh offensive push, said S. Puleedevan, the director of LTTE's Peace Secretariat, quoting LTTE's field commanders. Heavy fighting raged from 5:30 to 12:45 when the SLA attempted to advance from Uruththirapuram towards Ki'linochchi and Ira'naimadu. Several corpses of the SLA soldiers were seen in the battlefield and the Tigers were engaged in seizing arms and ammunitions after routing the offensive on two fronts, Mr. Puleedevan further said. The fighting was continuing on three fronts.

Sri Lanka Air Force (SLAF) bombers were also engaged in attacking LTTE Forward Defence Line localities in Ki'linochchi.

Meanwhile sources in Puthukkuiyiruppu said the SLAF bombers were engaged in air raids along Mullaiththeeuv coastal area, attacking several localities throughout the day.

The fresh offensive push comes after the Tigers claimed that the SLA suffered 170 deaths and more than 250 wounded 6 days ago on 16 December and a preemptive strike on Saturday that killed 60 SLA soldiers.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியை நோக்கி 5 முனைகளில் படையினர் முன்னேறுவதற்கு முயற்சி

வீரகேசரி நாளேடு 12/22/2008 11:22:56 PM - கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் முன்னேறுவதற்குப் படையினர் இன்று முயற்சித்துள்ளனர். முன்னேற முயன்ற படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் இன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்தும் கடும் சண்டை இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் 100 படையினர் வரை கொல்லப்பட்டதுடன், 250 பேர் வரையில் காயமடைந்ததாகவும், இரு முனைகளில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும

செயரட்ன மலர்சாலைக்கு எத்தினை போனாலும் காணாது எண்டு தானே மகிந்தவும் பொன்சேகாவும் நிக்கினம்.. கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்டொக் குறைய மேசைக்கு வருவினம்..

  • கருத்துக்கள உறவுகள்

செயரட்ன மலர்சாலைக்கு எத்தினை போனாலும் காணாது எண்டு தானே மகிந்தவும் பொன்சேகாவும் நிக்கினம்.. கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்டொக் குறைய மேசைக்கு வருவினம்..

அவங்கட பிள்ளைகலா அடிபடுடினம் கலத்தில இல்லையே.. அவங்கள் தங்கட பதவிய தக்க வைக்கிரதுக்கான்டி அப்பாவி சிங்கள பெடியங்களை வைச்சு தானே சண்டைய செய்யுராங்கள்..100 என்ன 1000 செத்தா குட மகிந்த' ராஜபக்சவோ சரத் பொன்சேகாவோ கவலை பட போரது இல்ல..

2005 ஆண்டு 'மகிந்த' ராஜபக்ச பதவி எற்கேக்க சொன்னதுவல் ஞாவகம் இருக்கா.. தான் ஆட்சில வந்தா புலிகளுடன் பொசி இந்த பிரச்சனைய 3 மாசத்தில முடிப்பென் இந்த சின்னன் சிறுசுகளுக்கு நல்ல ஒரு எதிர் காலம் அமைச்சு குடுப்பேன் என்று.. ஆனால் என்று நிலமை வேறு.. தன் இனத்து சின்ன பெடியங்களை இரானுவத்தில் சேத்து தானே பலி குடுக்கிரான் .. இது தான் உண்மை..

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சில ரண்டு முடிச்சாச்சு. மிச்சம் இன்னமும் முடிஞ்சமாதிரி செய்தி வரயில்லை.. அதுவும் வந்தாப் பிறகு நிறைய சீனவெடிகள், சரவெடிகள் கொளுத்தலாம்..

ஜஙரழவந யெஅநஸ்ரீ'கிருபன்' னயவநஸ்ரீ'னுநஉ 22 2008இ 09:16 Pஆ' pழளவஸ்ரீ'471478'ஸ

அஞ்சில ரண்டு முடிச்சாச்சு. மிச்சம் இன்னமும் முடிஞ்சமாதிரி செய்தி வரயில்லை.. அதுவும் வந்தாப் பிறகு நிறைய சீனவெடிகள்இ சரவெடிகள் கொளுத்தலாம்..

ஜஃஙரழவநஸ

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் எதிர்பார்த்தமாதிரி ஆமி நேரத்தோடை கிளிநொச்சியில கொடியேத்தையில்லையெண்டு கவலையாயிருக்கிறியள். ..வேகமா வந்தவை நீங்கள் எதிர்பார்த்தது என்ன இருந்தாலும் நாயமில்லை மாப்பு... ம்ம்ம்ம் என்ன செய்றது நீங்கள் வேண்டுற சம்பளத்துக்கு இதையாவது செய்யாட்டி சரியில்லை கண்டியளோ.... எப்பிடி தமிழரை வித்தா நல்லா தேறுது போல... இஞ்சை நேரத்தை வீணடிக்காம அதைச்செய்யுங்கோ...

இப்பிடி எத்தினைபேர் கிளம்பியிருக்கிறியள்... ரீபிசீ றேடியோவில் தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்..

நன்றி போய்ட்டுவாங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சில ரண்டு முடிச்சாச்சு. மிச்சம் இன்னமும் முடிஞ்சமாதிரி செய்தி வரயில்லை.. அதுவும் வந்தாப் பிறகு நிறைய சீனவெடிகள், சரவெடிகள் கொளுத்தலாம்..

அங்கால பாதுகாப்பமைச்சும்.. மூச்சு விடாம இருக்குது. பழைய படங்களை தரவேற்றிக் கொண்டு..! ஏதோ இடக்குமுடக்கா நடந்திருக்குது என்றது மட்டும் விளங்குது..!

போராளிகளின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி எத்தினைபேர் கிளம்பியிருக்கிறியள்... ரீபிசீ றேடியோவில் தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்..

நன்றி போய்ட்டுவாங்கோ..

ரிபிசி காசில்லாமல் மூடிட்டாங்கள் எண்டு சொன்னாங்கள்.. காசைக் கொட்டிட்டாங்கள் போல கிடக்கு..

மதிப்பெல்லாம் தேவையில்லை. காசாப் பணமாகக் கொடுத்தால் போதும்.

நன்றி. நாங்கள் போகமாட்டோமுங்கோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பிற்குரிய யாழ்கள தோழர்களே!

தமிழகத்தில் 5000திற்கும் மேற்பட்ட அலைபேசி எண்களுக்கு போர்கள நிலவரத்தையும், தமிழ்மக்களின் வரலாறு காணாத அவலத்தையும் ஒரு மாபெரும் "குறுஞ்செய்தி வழித்தகவல்" அனுப்பி வருகிறோம். செய்திகளை அனுப்புவதின் அடிப்படை நோக்கம் தமிழகத்தில் தினஏடுகளின் செய்திகள் முழுக்க முழுக்க சிங்களவன் தருகிற செய்திகளையும், இந்திய அரசு தருகிற செய்திகளையும் மட்டுமே அச்சிடுகிறார்கள். இது ஒருவகையில் மக்களை அச்சுறுத்துதல், சோர்ந்து போகச் செய்தல் என்ற உளவியல் அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள். நாளொன்றுக்கு 18 மணிநேரம் இணையத்தில் கழிக்கிறோம். தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகிறோம். ஆகவே, நேற்றைய தாக்குதல் விவரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அறியக்கிடைத்தால் உடனே தரவும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Heavy fighting in north Sri Lanka

The army and rebels have been fighting for weeks

Dozens of Sri Lankan soldiers and Tamil Tiger rebels have been killed in the latest heavy fighting in the north of the country, the two sides say.

The rebels say they beat back an army attack against the town of Kilinochchi, killing at least 100 troops.

The army, on the other hand, says that it only lost 10 soldiers, and that more than 50 rebels died.

There have been no independent reports from the frontlines, and it is impossible to verify either account.

There has been fierce fighting in recent months as the army closes in on Kilinochchi.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7796441.stm

அன்பிற்குரிய யாழ்கள தோழர்களே!

தமிழகத்தில் 5000திற்கும் மேற்பட்ட அலைபேசி எண்களுக்கு போர்கள நிலவரத்தையும், தமிழ்மக்களின் வரலாறு காணாத அவலத்தையும் ஒரு மாபெரும் "குறுஞ்செய்தி வழித்தகவல்" அனுப்பி வருகிறோம். செய்திகளை அனுப்புவதின் அடிப்படை நோக்கம் தமிழகத்தில் தினஏடுகளின் செய்திகள் முழுக்க முழுக்க சிங்களவன் தருகிற செய்திகளையும், இந்திய அரசு தருகிற செய்திகளையும் மட்டுமே அச்சிடுகிறார்கள். இது ஒருவகையில் மக்களை அச்சுறுத்துதல், சோர்ந்து போகச் செய்தல் என்ற உளவியல் அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள். நாளொன்றுக்கு 18 மணிநேரம் இணையத்தில் கழிக்கிறோம். தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகிறோம். ஆகவே, நேற்றைய தாக்குதல் விவரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அறியக்கிடைத்தால் உடனே தரவும்.

நன்றி

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். உங்களுக்கு ஈழத்தமிழராகிய நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.

அன்பிற்குரிய யாழ்கள தோழர்களே!

தமிழகத்தில் 5000திற்கும் மேற்பட்ட அலைபேசி எண்களுக்கு போர்கள நிலவரத்தையும், தமிழ்மக்களின் வரலாறு காணாத அவலத்தையும் ஒரு மாபெரும் "குறுஞ்செய்தி வழித்தகவல்" அனுப்பி வருகிறோம். செய்திகளை அனுப்புவதின் அடிப்படை நோக்கம் தமிழகத்தில் தினஏடுகளின் செய்திகள் முழுக்க முழுக்க சிங்களவன் தருகிற செய்திகளையும், இந்திய அரசு தருகிற செய்திகளையும் மட்டுமே அச்சிடுகிறார்கள். இது ஒருவகையில் மக்களை அச்சுறுத்துதல், சோர்ந்து போகச் செய்தல் என்ற உளவியல் அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள். நாளொன்றுக்கு 18 மணிநேரம் இணையத்தில் கழிக்கிறோம். தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகிறோம். ஆகவே, நேற்றைய தாக்குதல் விவரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அறியக்கிடைத்தால் உடனே தரவும்.

நன்றி

மிக நல்ல முயற்சி! நன்றி ஐயா!!

Edited by vettri-vel

மதிப்புக்கும் பாசத்துக்குமுரிய உறவே உங்கள் சேவை காலத்தின் தேவை

முடிந்தளவு இந்தக்களமும் உறுப்பினர்களும் உங்களுக்கு முடிந்தளவு பக்க துணையா இருப்பார்கள்....

உங்களின் முயற்சி வெற்றிபெறவேண்டும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி திரு பெரியார் குயில் அவர்களே! தொடரட்டும் உங்கள் சேவை.

(3ம் இணைப்பு)கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம்

[திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 07:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

[3 ஆம் இணைப்பு: கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்]

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிளிநொச்சியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் அதன் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஊடாக மூன்று முனைகளிலும்

குஞ்சுப்பரந்தன் பகுதியில் இரண்டு முனைகளிலும் இன்று திங்கட்கிழமை காலை 5:00 மணிக்கு செறிவான அட்லெறி, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக பீரங்கிகளின் கடும் சூட்டாதரவுடகளுடன் முன்நகர்வுத் தாக்குதலை சிறிலங்கா படையினரின் 57, 58 ஆம் டிவிசன்களின் படையினர் மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வு தாக்குதல்களுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர்.

கிளிநொச்சிக்கு தெற்காக இரணைமடுப் பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு ஏற்கனவே முறியடிக்கப்பட்டு விட்டது.

கிளிநொச்சிக்கு மேற்கில் உருத்திரபுரம் பகுதி ஊடாக படையினர் மேற்கொண்ட முன்நகர்வும் முறியடிக்கப்பட்டு விட்டது.

மேலும் மூன்று முனைகளில் படையினரின் நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றைய முறியடிப்புத் தாக்குதல்களில் படையினர் தரப்பில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமான காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் களமுனையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.

உருத்திரபுரம் ஊடாக படையினர் மேற்கொண்ட முறியடிப்பின் போது கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

ஏகே எல்எம்ஜி - 01

ஆர்பிஜி - 01

லோ கணை செலுத்தி - 01

ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 04

ரி-56 ரக துப்பாக்கி - 01

சி-61 - 01

பிகே இணைப்பிகளுடன் ரவைகள் - 2,061

பிகே ரவை இணைப்பிகள் - 2,575

ஏகே ரவைகள் 2 லட்சத்து 95 ஆயிரம்

கைக்குண்டுகள் - 36

ஆர்பிஜி வெடிகணைகள் - 27

பிறப்ளர்கள் - 22

ஏகே ரவைக் கூடுகள் - 44

ரவைக்கூடு தாங்கி அணிகள் - 15

பைகள் - 08

தண்ணீர்க் கொள்கலன்கள் - 08

தலைக்கவசங்கள் - 02

சுவாசப் பாதுகாப்பு மூடிகள் - 05

என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinam.com/full.php?22tVo0202...d40KOAda0eMMRbe

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி திரு பெரியார் குயில் அவர்களே! தொடரட்டும் உங்கள் சேவை.

தலை வணங்குகின்றோம் தங்களது சேவைக்கு

Edited by KUGATHASAN

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன (குஞ்சு?) பரந்தன் பகுதியில் 300 மீற்றர் நீளமான மண்ணணையை சிங்கள இராணுவம் கைப்பற்றியதாகச் சொல்கின்றது.. எனினும் அவர்கள் எதிர்பார்த்ததுபோல முன்னேறமுடியவில்லை.. புதுவருடத்தில் சிங்கள மக்களுக்கு நல்லதோர் செய்தியைக் கொடுக்கவேண்டும் என்று மகிந்த அவசரப்படுத்துகின்றார் போலத்தான் தெரிகின்றது. "அவசரக்காரனுக்கு உரலுக்குள் கை நுழையாது; கோபுர வாசலில் தலை இடிக்கும்" என்ற நிலைதான் மகிந்த/சரத் பொன்சேகாவின் நிலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.