Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தள நண்பர் வட்டம்: சில எண்ணப்பகிர்வுகள்

Featured Replies

சிறப்பாகத் திட்டமிட்டு இந்த நிகழ்வை நாடத்திய உங்கள் அனைவருக்கும் இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்.

  • Replies 54
  • Views 9k
  • Created
  • Last Reply

ஒன்று கூடலில் கலந்து கொண்டமை ஒரு இனிமையான அனுபம் என்பதனை போலவே, அதனை பற்றி முரளி எழுதி இருக்கும் குறிப்பும் இனிமை தருகின்றது. எல்லா விடயத்தினையும் அழகாக விபரித்துள்ளீர்கள் முரளி

பிரமிக்க வைத்து விட்டீர், முரளி!!

லண்டனிலும் பலர் இருக்கிறோம், ஏதாவது ..........????????

ஆசைகளை துண்டிவிட்டீர்கள் முரளி. யாழ் உறவுகளை சந்திக்க வேண்டும் என்ற அவா எப்போதோ இருக்கின்றது. சந்தர்ப்பம் சூழ்நிலை அமையவில்லை. ஆனால் முரளியின் பதிவு நானும் அதில் கலந்துகொண்ட உணர்வை ஏற்படுத்திவிட்டது. வாழ்த்துக்கள் முரளி. . தாய்மண்ணில் ஒரு நாள் நாம் சந்திக்கும் காலம் வரும் அன்று அனைவரும் சந்திப்போம்

நான் ஊரில் இல்லாத நேரத்தில் இப்படியொரு ஒன்றுகூடலை நடத்த உங்களுக்கு எப்பிடி மனசு வந்தது :-(...மாப்ஸ் ரசி அக்கா யு ருருருருருருரு

சினேகிதி சரி சரி கோவிக்காதையுங்கோ அடுத்த முறை எல்லாரும் போவம் வாங்கோ

முரளி அழகாக உங்கள் எண்ணப் பகிர்வுகளை எங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள் பாராட்டுக்கள்

முரளி! அழகான முறையில் நிகழ்வை படம்பிடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி அண்ணோய்...!

அழகாக பதிந்திருந்தீர்கள்.

பல விமர்சனங்களுக்கு மத்தியில் திறம்பட நடத்தியதுக்கு வாழ்த்துக்கள்.

முரளி அண்ணா உங்களிடமிருந்து இப்படி ஒரு ஆக்கத்தை எதிர் பார்க்கவில்லை. உங்களின் வாந்திகளை பலமுறை பார்த்த எனக்கு இது ஒரு வித்தியாசமான ஆக்கமாகபடுகின்றது. உங்களின் திறமைக்கு சபாஷ் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. இதையே தொடருங்கள்.

நீங்கள் கையைாளும் உங்கள் ஈழத்தமிழ் இதற்கு பிளஸ் பாயிண்டா அல்லது மைளஸ் பாயிண்டா என்று தெரியவில்லை

இப்படியான ஆக்கங்களினால் உங்களை வளர்த்துக்கொள்வதைவிட்டு தயவு செய்து பழைய ஆக்கங்களை கையிலெடுக்காதீர்கள்.

வாழத்துக்கள் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றுகூடலை அறிக்கை தொகுத்து இணையத்தில் வெளியிட்ட முரளி முயற்சி பாராட்டத்தக்கது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

முரளி

கனடாவில் நடந்த சந்திப்பு மிக மிக அருமையாக உள்ளது. அதனை நீங்கள் தந்த விதம் அழகுடன் கூடிய அருமை. வாழ்த்துகள். தொடருங்கள்.

வசம்பு அண்ணாவின் கருத்தே என் கருத்தும்

  • தொடங்கியவர்

உற்சாகமான கருத்துக்களை அன்புடன் சொன்ன தமிழ்சிறி, நாரதர், சின்னக்குட்டி, நிழலி, பரணி, ரசிகை, மணிவாசகன், தங்கச்சி நிரூஜா, சோழன், பென்மண், ஜில் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

பிரமிக்க வைத்து விட்டீர், முரளி!!

லண்டனிலும் பலர் இருக்கிறோம், ஏதாவது ..........????????

லண்டனில ஏற்கனவே பலர் பலதடவைகள் கூடி இருக்கிறீனம் எண்டு நினைக்கிறன். ஆனால் அவர்களிண்ட செயல்திட்டம் இல்லாட்டிக்கு நட்புறவு வட்டம் பற்றி மேலதிகமாக எனக்கு ஒன்றும் தெரியாது. எங்களைப்போல நீங்களும் இப்படி லண்டனிலும் ஓர் நட்புறவு வட்டம் ஒன்றை ஆரம்பிச்சால் நல்லது என்று நினைக்கிறன். இதன்மூலம் பல்வேறு விசயங்களில ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கமுடியும்.

தமிழ்சிறி கருத்துக்களுக்கும், ஆக்களிண்ட உருவத்துக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிதா எண்டு கேட்டு இருந்தீங்கள். இதற்கு எப்படி பதில் சொல்லிறது எண்டு தெரிய இல்லை. ஒருவரிண்ட வெளி உருவத்திற்கும் அவரிண்ட Personality, மற்றது உள்ளுக்க இருக்கிற உண்மையான ஜீவனுக்கும் இடையில பெரும்பாலும் சம்மந்தமே இருக்கிறது இல்லை. எண்டாலும் நேரில காண்கின்ற உருவங்கள் ஒவ்வொருவர்மீதும் கொஞ்சம் புரிந்துணர்வு - understanding ஏறபட நிச்சயம் உதவும் எண்டு சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் முரளி,

"நீங்கள் கலைஞனாக பரிணமித்து உள்ளீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் எழுத்துக்கள் மூலம் நிலை நாட்டுகின்றீர்கள். கலந்து கொண்ட தருணங்களில் எதுவும் இன்னும் நினைவை விட்டு அகலா நிலையில் மீண்டும் நீரூற்றிவிட்டு 'அணையா நெருப்பாக்கி விட்டீர்கள் முரளி.

வளமான எழுத்துக்கு வாழ்த்துகள்;..

விதுஷா அடுத்த முறை ஏமாத்திப்போடாதீங்கோ வந்திடுங்கோ...

முரளி நல்லா எழுதியிருக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது குருஜி! வாழ்த்துகள்!!!

  • தொடங்கியவர்

மனமார்ந்த நன்றிகள் தமிழ்தங்கை, வசி, குருஜி.

***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு! நல்லதொரு எண்ணப்பகிர்வுகள்.

Assignmentல நல்ல புள்ளிகள் வாங்குவீங்கள் என்று நினைக்கிறன். அருமையான பகிர்வு. வாழ்த்துக்க

Assignmentல நல்ல புள்ளிகள் வாங்குவீங்கள் என்று நினைக்கிறன். அருமையான பகிர்வு. வாழ்த்துக்க

:(அப்ப புள்ளி ராசா போல முரளியும் புள்ளி முரளி என்கின்றீர்களா?? :D

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் குமாரசாமி அண்ணா, யாழ்கவி.

வசம்பு,

இப்படி சொல்லிப்போட்டு பிறகு எல்லாருமாய் சேர்ந்து எனக்கு நெற்றியில பெரிய ஒரு புள்ளி - நாமம் போட்டுவிடுறீனமோ தெரியாது. :rolleyes:

முரளியின் பதிவு பாராட்டப்படவேண்டியது. சிறிய கூட்டமானாலும் இணைந்தவர்கள், சிரத்தை எடுத்து சந்திப்பை சிறப்பாக்கியுள்ளார்கள். உங்கள் தயக்கங்கள் (இப்படியான கூட்டம் ஒன்றுக்கு போவதற்கான) எனக்கும் உள்ள ஒன்று தான். தயக்கங்களை வெளிப்படுத்துவதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

அடுத்த கூட்டங்களும் நன்றாக அமைய வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி!

உங்களால் ஏற்கப்பட்ட பொறுப்பை மிகவும் சிறப்பாகவும், நிதானமாகவும் நிறைவேற்றியுள்ளீர்கள்.

மணிவாசகன், தமிழ்த்தங்கை உட்பட உங்களுடைய இந்த விமர்சனப்பதிவுகள் எல்லாம் ஒவ்வொரு வித்தியாசமான கோணத்தில் , கருத்துக்கள உறவுகளுக்கு தெளிவு படுத்தியுள்ளீர்கள்.

உங்களது இந்த விமர்சனப்பதிவுகள் எங்களது அடுத்தகட்ட நகர்வுக்கு உற்சாகமளிக்கின்றன.

இணைவோம் தமிழராய்!

Edited by Valvai Mainthan

முரளி, உங்களின் பதிவு மிகவும் அருமை. உங்களைத் தவிர, வேறு எவராலும் அந்த சந்திப்பைப் பற்றி எழுதியிருக்க முடியாது. அந்த நண்பர் வட்டத்தில் கலந்து கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றாலும் சிறிய வருத்தமும் உள்ளது.

நண்பர் வட்டத்திற்கு வரும் எல்லோரும் தாம் ஏதாவது கொண்டுவருவதாகக் கூறியிருந்தார்கள். அதனால் நானும் ஏதாவது கொண்டு செல்லலாம் என நினைத்திருந்தேன். மற்றவர்கள் கொண்டுவருவதையே நானும் கொண்டு போவதைத் தவிர்ப்பதற்காக, சஹாராக்காவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவா பீடாவை வாங்கிவரும்படி கூறினார். நண்பர் வட்டம் நடைபெற்ற நாளுக்கு முந்தைய நாள் எனக்கு வேறொரு நிகழ்வு இருந்தது. அது முடிந்து வீடு வந்தபோது, மணி அதிகாலை மூன்று. அதோடு, நண்பர் வட்டச் சந்திப்பிற்கு ரோல்ஸ் செய்துகொண்டு செல்ல நினைத்திருந்தேன். அதனை விடிகாலையில்தான் செய்தேன். அதனைச் செய்து முடித்தபோது, மணி பத்து. அதன்பிறகு, நான் வெளிக்கிட்டுக் கிளம்ப மணி பதினொன்றாகிவிட்டது. நிறைகுடத்தையும் நான் கொண்டுவருவதாகச் சொல்லியிருந்தேன். அதனால், தொடங்குவதற்கு முன்பே செல்லவேண்டிய கட்டாயம் வேறு. நிறைகுடத்திற்குத் தேவையான சாமான்கள், பீடா போன்றவற்றை வாங்கக் கடைக்குச் (ஸ்பைஸ்லாண்ட்) சென்றபோது, அங்கு பீடாவிற்குத் தேவையான வெற்றிலை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அந்தக் கடையில் பூசைக்குத் தேவையான அனைத்துச் சாமான்களும் கிடைக்கும். ஆனால், அன்று மாத்திரம் அங்கு வெற்றிலை இருக்கவில்லை. அது எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. நேரமோ பதினொன்றரையாகிவிட்டது. குறித்த நேரத்தில் நிகழ்வு ஆரம்பிக்கவேண்டுமென ஏற்கனவே நாம் முடிவு செய்திருந்ததால், வெற்றிலையை வாங்காமலே நிகழ்விடத்திற்குச் சென்றுவிட்டேன். ஆனால், அங்கு போனபின்பு, எனது மனம் ஒருநிலையிலில்லை. எல்லோரும் சிற்றுண்டி சாப்பிடத் தொடங்கியதும் தூரத்திலிருக்கும் வேறொரு கடைக்குச் சென்று வாங்கிவந்தேன். வெளியில்வேறு நல்ல மழை கொட்டிக் கொண்டிருந்தது. அதனால் வாகனத்தை குறைந்த வேகத்திலேயே ஓடவேண்டிய கட்டாயம் வேறு. கிட்டத்தட்ட ஒருமணிநேரத்தை நான் வெளியில் செலவழித்தேன். நான் வெளியில் சென்றிருந்தவேளைதான் அறிமுகமும், தாங்கள் யாழுக்கு வந்த காரணத்தையும், வழிமுறைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். அதனால், நான் நண்பர் வட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும், மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ளக் கிடைக்கவில்லை என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது. (என்னைப் பற்றி அவர்களுக்குச் சொல்லாதது அதைவிடக் கொடியது :):lol::lol: ) அடுத்தமுறை, எந்நிலையிலும் நான் வெளியில் செல்வதில்லை என உறுதி கொண்டிருக்கிறேன். :o

அன்று எனக்கு வேலை வேறு இருந்தது. வேலைக்கு வரமாட்டேன் என போன் செய்து அவர்களுக்குத் தெரிவிக்கக்கூட மறந்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆரம்பத்தில், வேலைக்குப் போய்விட்டு, அரைநாளோடு வருவதாகத்தான் இருந்தேன். ஆனால், சந்திப்பு நாள் நெருங்க, நெருங்க வேலைக்குப் போவதில்லை என்று முடிவெடுத்தவிட்டேன். எது எப்படியிருப்பினும், அந்த சந்திப்பில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். அடுத்த சந்திப்பை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நேரமின்மை காரணமாக அதிகம் எழுத முடியவில்லை. நாளுக்கொருமுறை மட்டும் வந்து பார்த்துவிட்டுப் போய்விடுவேன். கள உறவுகளை நேரில் சந்தித்தபோது, ஏற்பட்ட உணர்வுகளைப் பற்றி அடுத்தமுறை எழுதுகிறேன்.

  • 5 months later...
  • தொடங்கியவர்

நன்றி வல்வை அண்ணா, தமிழச்சி. ஆரம்பத்தில் நாங்கள் நல்லவேளை இந்த சந்திப்பை அப்போது மேற்கொண்டு இருந்தோம். சந்திப்பின் காரணமாக ஆக்கபூர்வமாக பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது பல உபயோகமான விடயங்களை செய்யமுடிந்தது. அன்று சந்திப்பை மேற்கொண்டு இல்லாவிட்டால் அதன்பின் தாயகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நாங்கள் ஒருவரை ஒருவர் முகமே பார்க்காது போயிருப்போம். ஆகக்குறைந்தது இந்தச் சந்திப்பின் மூலம் தற்போது ஏறக்குறைய 30 கனேடிய யாழ் உறவுகள் ஒருவருடன் ஒருவர் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி நாங்கள் அடுத்த சந்திப்பிற்கான காலவாசலில் நிற்கிறோம். புதியவர்களையும் இணைத்து விரிவாக்கம் பெற வேண்டும். விரிவாக்கம் என்பது இன்றைய காலத்தின் அவசியமும் கூட...

முயற்சிகளைத் தொடர்வோம். யாழ்க்கள கனடா, அமெரிக்க உறவுகளே! விரிவாக்கம் பெறும் இணையத்தள நண்பர் வட்டத்திற்கான உங்கள் கருத்துகளை முன் வையுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிள்ளை

நீங்கள் விரிவாக சொன்னதைக் கேட்க லீவு எடுத்தென்றாலும் அடுத்த ஒன்று கூடலுக்கு வரவேண்டும் போல இருக்கிறது. லண்டனில இப்படி ஒன்று கூடுவதாக எனக்கு தெரியவில்லை அப்படி கூடியிருந்தாலும் நீங்கள் செய்தது போல நடந்துதா என்பது சந்தேகமே, அடுத்த தடவை நீங்கள் செய்யும் போது வரவேண்டும் போல இருக்கிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.