Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுத்திருமணம் எம் தமிழ்ப்பெண்களுக்கு அநீதியானதா???

Featured Replies

வணக்கம் யாழ் கள நண்பர்களே எமது பண்பாட்டு வாழ்வியல் நிகழ்வுகளில் ஒன்று திருமணம். அத் திருமணங்களில் நூற்றுக்கு எண்பது வீதமானவை பேச்சுத்திருமணங்களே! மனித வாழ்க்கை வட்டத்தில் மிகவும் முக்கியமான இந் நிகழ்வில் இப்போதைய கால கட்டங்களில் பெரும்பாலான பேச்சுத்திருமணங்கள் இப்பொழுது பெரும் துன்பியல் நிகழ்வாக மாறிவருகின்றன இதில் மிகவும் பாதிக்கப்படும் தரப்பினரும் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர் குறிப்பாக தாயகத்தில் இருந்து வெளிநாட்டு மாப்பிள்ளைகளை மணந்து வெளிநாட்டுக்கு குடிபெயரும் தமிழ்ப் பெண்களே கூடுதலாக பாதிக்கப் படுகின்றனர்.

ஆதலினால் என் யாழ் கள நண்பர்களே பேச்சுத்திருமணம் என்பது எம் தமிழ்ப்பெண்களுக்கு அநீதியானதா (unfair)? அல்லது இம் முறை எங்கள் சமூகப்பிழையா?

ஒரு ஆரோக்கியமான விவாதத்தை தொடக்கலாம் என நினைக்கின்றேன் அத்துடன் உங்கள் தெளிவான வரவேற்கத்தக்க கருத்துகளை முன்வையுங்கள் தொடர்ந்து விவாதிப்போம்.....

நன்றி அன்புடன்

தமிழன்பன்

100 இற்கு 100 சதவிகிதம் காதல் திருமணம் செய்யும் வெள்ளைக்காரர்களின் எத்தனை சதவிகித திருமணங்கள் வெற்றிபெறுகின்றன ? :(

போன‌ ச‌ந்த‌தியில் 90 ச‌த‌விகித்த‌த்திற்குமேல் பேச்சுத்திரும‌ண‌மே. அரிதிலேயே தோல்வி அடைந்த‌ன‌.

தற்போது நம்மவரின் எத்தனை சதவீதமான காதல் திருமணங்கள் வெற்றிபெறுகின்றன ?

ஆகவே இதிலிருந்து திருமணங்களின் தோல்விக்கு திருமணங்கள் நடைபெறும் முறையல்ல ( பேச்சா \ காதலா ) வேறு காரணிகளே என்பது தெளிவாகிறது.

ஊரில் உறவினர் கூட்டம், நண்பர் கூட்டம் என்று திருமணம் உட்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பலப் படுத்துகின்றார்கள். வெளிநாட்டில் நமக்கு இத்தகைய ஒரு சமூக வலைப் பிண்ணணி கிடையாது.

மேலும் இந்த பேச்சுத் திருமணம் என்று ஒன்று இருப்பதால் தான் பல பேருக்கு திருமணம் என்ற ஒன்றே நடக்கின்றது. இல்லாவிட்டால் வெளிநாட்டில் இருக்கும் ஆணும் ஊரில் இருக்கும் பெண்ணும் எப்படிச் சந்திப்பார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்த வரை இரண்டிலும் நன்மை தீமை உள்ளது.பேச்சுத் திருமணத்ததில் புலம் பெயர்ந்த இடத்து ஆண்கள் ஊரில் சென்றூ திருமணம் செயிவினம்.அவர்கள் தாங்கள் புலத்தில் கல்வி கற்றதாகவும் நல்ல வேலையில் இருப்பாதகவும் கூறீ திருமணம் செய்வார்கள்.ஆண்கள் மட்டுமே பிழை விடுவார்கள் என்றூ கூறவில்ல.ஆண்,பெண் இருவரும் மனப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்வதால் திருமணத்துக்கு பிறகு கஸ்டப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமே வேஸ்ட் தான்

திருமணமே வேஸ்ட் தான்

அது

சபாஷ்... கப்பி யக்கோவ்

  • கருத்துக்கள உறவுகள்

இரு மனங்கள் ஒத்து போவது தான் திருமணம்.ஆணோ,பெண்ணோ மனத்தால் ஒத்து போகாவிட்டால் அத் திருமணமே அநியாயமாக போய் விடும்.இருவரது ரசனையும் ஒத்து போகவிட்டால் கஸ்டம் தான்.எனக்கு தெரிந்த ஒரு குடும்பதில் அந்த பெண்ணுக்கு திருமணம் பேசினார்கள்.எழத்து முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து சுற்றீனார்கள்.ஆனால் அவர்கள் மனம் ஒத்து போக இல்லை என்றவுடன் பிரிந்து போய் விட்டார்கள்.இது புலத்தில் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இயந்திர வாழ்கையிலே எங்கே திரு "மணம் " . வெறும் வேஷம் .உலகத்துக்காக ஒன்று சேர்ந்தாலும் , மனங்கள் ஒன்று சேர்வதில்லை .பழகி ஒன்று சேர்ந்தாலும் காலப்போக்கில் பிளவு ஏற்படுகிறது .குடும்பம் குழந்தை என்ற பொறுப்புகளில் இருந்து விலகி போய் விடுகிறார்கள். தன் இன்பம் .தன் சுதந்திரம் . தன் ஆசைகள் என்ற சுய நல வாழ்வில் சிக்கி ,வாழ்வை.... இளமையை ....தொலைத்து விடுகிறார்கள்.

இருந்தும் ......சகித்து ,இன்பமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.வெகு சிலர்.

பேசி .........பழகி ..........திருமணம் முடிப்பது ஆரோக்கியமானது.

.

கறுப்பி Posted Yesterday, 03:17 PM

திருமணமே வேஸ்ட் தான்

கறுப்பி அக்கா, you are so sweet.

பேச்சு திருமணம், பெற்றோர் தங்கட சுமை முடியட்டுமென்று பிள்ளைகளை பாண் கிணற்றில தள்ளி விடுகிற செயல். காதல் திருமணம்- வயதும் கோமோனும் செய்கிற கோளாறு. இறுதியில இரண்டுமே வேஸ்ட்டு

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா, you are so sweet.

பேச்சு திருமணம், பெற்றோர் தங்கட சுமை முடியட்டுமென்று பிள்ளைகளை பாண் கிணற்றில தள்ளி விடுகிற செயல். காதல் திருமணம்- வயதும் கோமோனும் செய்கிற கோளாறு. இறுதியில இரண்டுமே வேஸ்ட்டு

பிள்ளைக்கு இப்பதான் நல்லா விளங்குது போலக் கிடக்கிறது

quote name='கந்தப்பு' date='Jan 8 2009, 01:31 AM' post='476828']

பிள்ளைக்கு இப்பதான் நல்லா விளங்குது போலக் கிடக்கிறது

  • தொடங்கியவர்

ஈசன் மற்றும் ரதி இருவரினதும் கருத்துக்களுக்கு நன்றிகள் இங்கு காதல் திருமணத்தைப் பற்றி நான் கதைக்கவில்லை ஒரு பேச்சுக்கு அதை நாங்கள் எடுத்துக்கொண்டாலுமே இருவரும் திருமணவட்டத்துக்குள் வருவதற்கு முன்னர் இருவருமே தங்களின் நிறைகளைக் () காட்டித்தான் பழகுவார்கள் பொதுவாக குறைகள் உள்ளவன்(ள்)தான் மனிதன். குறையுள்ள இருவருமே தம் குறைகளை ஏற்று அனுசரித்து புரிந்துணர்வுள்ள துணைகளாக இருந்துவிட்டால் மணவாழ்வில் ஒரு பொழுதும் பிரச்சனைகள் ஏற்படாது.

ஆனால் பொதுவாக எம் தமிழ் சமூக ஒழுங்கு முறையில் திருமண‌குடும்ப முறையில் ஆணின் ஆதிக்கம் பொதுவாகவே ஆதிக்கம் செலுத்துகிறது இதனால் ஆண்துணை எனப்படும் கணவன் ஒருவரின் விருப்பத்தை அவரின் முழு எதிர்பார்ப்பை தன் பெண்துணையின் மீது திணிக்கும் போதுதான் பிரச்சனைகளே ஆரம்பம் ஆகிறது.காதல் திருமண பந்தத்தில் இணைந்தவர்களின் நிலைமயே இப்படியென்றால் பேச்சுத்திருமணங்களின் நிலைமையினை சொல்லவும் வேண்டுமா????

திருமணம் என்பது ஒரு பந்தமே, அது அமைக்கப்படப் போகும் கட்டிடத்தின் அத்திவாரம். அதன் மீது எழுப்பப்படும் கட்டிடம் கணவன், மனைவி இருவராலும் கட்டப்படவேண்டியதொன்று.

காதலித்த உள்ளங்கள் இரண்டு, கலியாணத்திலே கட்டுண்டு போகின்றன . வருடங்கள் பல போன பின்னால் ஏன் சிலசமயங்களில் அவை தம்மைப் பிரித்துக் கொள்ள மீண்டும் சட்டத்தைத் துணைக்கு

அழைக்கின்றன? காதலிக்கும் போது அவர்களுக்குச் சட்டத்தின் துணை தேவைப்படவில்லை. அப்போது நாம போய் அந்தச் சொந்தம் இன்னும் சில வருடங்கள்தான் நிலைக்கும் என்று கூறியிருந்தால்

"உனக்கு பைத்தியம் " என்று விரட்டியிருப்பார்கள் ஏன் நம்மளோடையே கதைக்காமல் கூட விட்டிருப்பார்கள். சரி அது கிடக்கட்டும் இப்படி ஒன்றாய் இணைந்த உள்ளங்கள் சட்டத்தின் துணை

கொண்டு ஏன் தம்மைப் பிரிக்கும் அளவிற்கு வெறுக்கும் நிலை அங்கே உருவாகிறது?

சரி அது போகட்டும் அம்மா, அப்பா பார்த்த மாப்பிள்ளையை மணந்த, முன் ஒரு போதும் அறிந்திராத ஒருவனோடு தன்னை இணைத்துக் கொண்டவள், இறுதிவரை இறுக்கமாய் வாழ்கிறாள்.

கணவன் அங்கே அதிகாரபீடத்தில் சர்வாதியாகிறான். கேட்டால் நீதானே வந்தாய் என்னிடம், உன் பெற்றோர் உன்னை விற்றார் என்னிடம் என்பது போல இறுமாப்பான வியாக்கியனங்கள்.

சில பெண்கள் கண்ணீரைக் கண்ணுக்குள் மறைத்து விட்டுக் கல்லாக வாழ்வதுமுண்டு. வேதனையின் சிகரத்திற்குத் தள்ளப்படும் சிலரோ, கழுத்தில் கட்டப்பட்ட அந்த வேலியைச் சட்டத்தின் துணை

கொண்டு அறுத்தெறிவதுமுண்டு.

இதற்கு எல்லாம் என்ன காரணம் நம்பிக்கையின்மை மற்றது பேசிய திருமணங்களில் பார்த்தீர்களானால் சீதனம் எனும் பேய். எனக்கு

இன்னும்தான் விழங்கவில்லை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறார்களே அப்படியானால் இங்கு எப்படி

ரொக்கம் வந்தது??? ரொக்கம் கைமாற மாலைகள் இடமாறும் வைபவம் தான் திருமணமோ???ம்ம் இங்கே பெண்ணின் மனதுக்கு

விலை நிர்ணயிக்கப்படுகிறது அப்படியானால் எப்படி மனங்கள் இணையும் ஒரு அன்னியோன்யம் விட்டுக்கொடுப்பு எப்படி வரும்???.

ஹும்ம்ம்ம்ம்ம் திருமணம் வியாபாரமாகக் கூடாது. இல்லறத்தில் நல்லறம் ஆண்பாதி , பெண்பாதி உழைப்பினால் உறுதிப்படுத்தப்படும் ஓரு கூட்டமைப்பேயாகும்.

அது பேச்சுத் திருமணமோ அன்றி காதலித்த திருமணமோ இரு மனங்களின் சேர்க்கை நம்பிக்கை எனும் அத்திவாரத்தில் எழும்போதுதான் அது சகல கால

நிலைகளையும் எதிர்த்து வாழக்கூடிய சக்தியைப் பெறுகிறது என்பதே நிஜம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு எல்லாம் என்ன காரணம் நம்பிக்கையின்மை மற்றது பேசிய திருமணங்களில் பார்த்தீர்களானால் சீதனம் எனும் பேய். எனக்கு

இன்னும்தான் விழங்கவில்லை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறார்களே அப்படியானால் இங்கு எப்படி

ரொக்கம் வந்தது??? ரொக்கம் கைமாற மாலைகள் இடமாறும் வைபவம் தான் திருமணமோ???ம்ம் இங்கே பெண்ணின் மனதுக்கு

விலை நிர்ணயிக்கப்படுகிறது அப்படியானால் எப்படி மனங்கள் இணையும் ஒரு அன்னியோன்யம் விட்டுக்கொடுப்பு எப்படி வரும்???.

உண்மை தான். திருமணம் ஒரு வியாபாரமானது ஒரு காரணமாகிப்போய்விட்டது.

நானறிந்தவரை கீழ்வரும் விடையங்களுக்காக சீதனம் வாங்கப்படுகிறது...

1. தன் தங்கைக்கு சீதனம் கொடுக்க.

2. பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி ஆண்களின் எண்ணிககை குறைந்துள்ளமை. (Demand & Supply... பொருளாதார விதிமுறையை இங்கு பயன்படுத்துகிறார்கள். இது தான் வியாபாரம் போன்றது. நியாயம் அற்றது)

3. மற்றவர்கள் வாங்குகிறார்கள். ஆகையால் நான் வாங்குகிறேன்.

4. பெற்றவர்கள் பிள்ளைகளை படிக்கவைக்க ஏற்ற கடனை அடைப்பதற்கு சீதனம் காரணமாகிறது. (இது நடுத்தர குடும்பங்களுக்கு பொதுவானது. நன்றாக உழைப்பவன் இதை செய்யமாட்டான்)

பக்கத்துவீட்டுக்காரன் தன் மகளுக்கு 40லட்சம் கொடுத்தால் கடன வாங்கியாவது 41 லட்சம் கொடுத்து தன்பிள்ளையின் திருமணத்தை நடத்திப்பார்க்கும் வரட்டுக்கௌரவ குடும்பத்தினரும் நம் சமுதாயத்தில் வாழ்கிறார்கள்.

சீதனம் வாங்காவிட்டால் மாப்பிள்ளைக்கு ஏதோ குறை இருக்கிறது என்ற மூடநம்பிக்கை கலந்த முட்டாள் எண்ணமும் நம் சமுதாயத்தில் உண்டு.

இதில் யாரை குற்றம் காண........ திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்ற கருத்து தான் சீதனத்திற்கு மருந்து......

==================

காதல் திருமணத்திற்கு அவசியம் காதலிக்கும் போதுள்ள விட்டுக்கொடுப்புக்களும் அர்ப்பணிப்புக்களும் தொடரவேண்டும். பேச்சு திருமண வாழ்க்கை எந்தவித தாழ்வுமனப்பான்மைஇன்றியும் விட்டுக்கொடுப்புக்களுடனும் நகரவேண்டும். இதற்கு நம் சமுதாயம் ஒன்றும் விதிவிலக்கல்ல...

தற்காலத்தில் நம்சமுதாயத்திலும் ஆண்பெண் என்ற பேதம் மறைந்து வருவது என்னமோ உண்மை. ஆனால் அது நிரந்தரமாக்கப்படல் வேண்டும்.

  • தொடங்கியவர்

ஆணாதிக்கம் என்பது எமது சமூகத்தில் ஊறிய ஒரு நச்சுவிதை அனைவருக்குமே தெரிந்த ஒருசிறிய உதாரணம் : பெண்கள் துவிச்சக்கரவண்டியினை ஆண்கள் ஓட்டலாம் ஆனால் ஆண்கள் துவிச்சக்கர வண்டியினை ஒரு பெண் ஓட்டினால் எங்கிருந்து ஆரம்பிக்கும் விமர்சனம் ஏனென்றால் எமது சமூகம் பெண்களை அடக்கியே வைத்திருக்கின்றது."பொம்பிளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு" எண்டு எம் பெண்கள் சிரிப்பதிலிருந்து நடமாடுவதிலுருந்து எல்லாவற்றிற்குமே ஒரு மட்டுப்படுத்திய அளவுகோல் ....

"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" , "சேறு கண்ட இடத்தில் உழக்கி தண்ணி கண்ட இடத்தில் கழுவுறவன்தான் ஆம்பளை" இப்படியே அனுசரித்துப்போதல்.பெண்ணெனப்

Edited by thamizhanpan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரையில் இரண்டிலுமே நண்மையும் இருக்கு தீமையும் இருக்கு காதல் திருமணம் செய்தவர்கள் அணைவரும் நல்லா வாழ்ந்தவர்களும் இல்ல பேச்சுத்திருமணத்தில கட்டினஆக்கள் அனைவரும் ஒண்றாய் வாழ்ந்தவர்களும் இல்ல இரண்டிலும் நண்மையும் இருக்கு தீமையும் இருக்கு

காதலித்து திருமணம் முடிப்பவர்கள் என்ன கொஞ்சம் இந்தக்காலத்தில தங்களைத்தாங்களே புரிஞ்சு கொண்டு திருமணத்தில இனையினம் ஆனால் பலபேர் புரியாமலே காதலித்துப்போட்டு கலியாணம் முடிச்சு பேந்து புரிசனுக்கு அந்தஇடத்தில தீ வைத்துக்கொழுத்துறதும் பொஞ்சாதியை கழுத்தநெரித்துக்கொலை செய்யுறதும் இப்படி வாழ்கையை சிரழிக்கின்றார்கள்

என்னைப்பொறுத்தவரையில் இப்பத்தே காலத்தில விட்டுக்கொடுப்புடன் புரிங்சுகொண்டு திருமணம் முடிப்பவர்கள் தான் வாழ்க்கையில முன்னேற முடியும் இரண்டு பேருமே விட்டுக்கொடுக்கத்தயாராக இருக்கவேண்டும் அது காதலானாலும் சரி பேச்சானாலும் சரி

Edited by புஸ்பாவிஜி

திருமணமே வேஸ்ட் தான்

அப்ப நீங்க இன்னும் சிங்களா? :mellow:

அப்பு முந்தி எனக்கும் வயது கோளாறு, இப்பதான் புத்தி வந்திருக்கு. என்ன செய்கிறது too late :blink:

லவ் பண்ணி மாட்டிக் கொண்டது நிதர்சனம் :(

  • கருத்துக்கள உறவுகள்

காதல் திருமணம் என்றாலும் அல்லது பேச்சு திருமணம் என்றாலும் ஆண்,பெண் இருவருக்கும் பரஸ்பரம், புரிந்துணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கை கடினம் தான்.பொதுவாக ஆண்கள் பெண்களை எப்போதும் அடக்கி ஆழ நினைப்பார்கள்.பெண் ஆணை விட படித்து இருந்தாலும் அல்லது நல்ல வேலையில் இருந்தாலும் ஆண் பெண்ணை தனக்கு கீழாகவே வைத்து இருக்கிறான்.இருவரும் வேலைக்கு போவதாக இருந்தாலும் பெண் தான் வேலை முடிந்து வந்து வீட்டு வேலை,பிள்ளைகள் வளர்ப்பது எல்லாம் பெண்னின் பொறூப்பு ஆகும்.இதில் சிலர் விதி விலக்கு ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமே சுத்த வேஸ்டு. இதுக்க காதலென்ன.. பேச்சென்ன.

திருமணம் என்பது தேனீர் குடிப்பதற்கு தேயிலை தோட்டத்தை உரிமையாக்குவது போன்ற அபரிமித ஆசை..! வெளில இருந்து கற்பனை செய்து பார்க்கேக்க சுவாரசியமா இருக்கும். உண்மையில.. தேயிலை தோட்டத்தை உரிமையாக்கினா.. என்னென்ன பிரச்சனை வரும்.. தேவையில்லாத செலவுகள்.. தலையிடிகள் வரும் என்றது தெரியும் தானே. அதுக்கு அப்புறம் தேனீரே வெறுத்திடும். அதிலும்.. கடையில போய் ரீ குடிச்சமா விட்டமா என்றிருக்கனும்..! இல்ல ரீயை விட்டிட்டு.. மில்க் சேக் பக்கற் ஒன்று வேண்டிக் குடிச்சமா என்று இருக்கனும்..! அதுக்காக கெட்ட வழில போய் சாராயம் குடிக்கக் கூடாது..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

திருமணமே வேஸ்ட் தான்

அடேய்ய்ய்ய்ய்ய்ங் அப்ப்ப்ப்ப்பா

வேஸ்ட்டா இல்ல ரேஸ்ட்டா ன்னு கலியாணம் கட்டிற்று அப்புறமா சொல்லுங்க கறுப்பி

Edited by vvsiva

......... கேட்டால் நீதானே வந்தாய் என்னிடம், உன் பெற்றோர் உன்னை விற்றார் என்னிடம் என்பது போல இறுமாப்பான வியாக்கியனங்கள்.

...............

...................? ரொக்கம் கைமாற மாலைகள் இடமாறும் வைபவம் தான் திருமணமோ???ம்ம் இங்கே பெண்ணின் மனதுக்கு

விலை நிர்ணயிக்கப்படுகிறது அப்படியானால் எப்படி மனங்கள் இணையும் ஒரு அன்னியோன்யம் விட்டுக்கொடுப்பு எப்படி வரும்???.

............

விற்றல் வாங்கலில் பொருளை வாங்குபவர்தானே பணம் கொடுப்பார். அப்படியானால் ஆண்கள் தானே இங்கே வியாபாரப் பொருட்களாகிறார்கள். அதை ஏன் எவரும் புரிந்துகொள்கிறார்களில்லை.

கொள்வனவு செய்த பொருள் ஒன்று கொள்வனவு செய்தவரை அதிகாரம் செய்வது என்பது புதுமையானது :icon_idea:

இங்கு பெண்களின் மனதுக்கல்ல ஆண்களிற்கே விலை நிர்ணயிக்கப்படுகிறது அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமே சுத்த வேஸ்டு. இதுக்க காதலென்ன.. பேச்சென்ன.

திருமணம் என்பது தேனீர் குடிப்பதற்கு தேயிலை தோட்டத்தை உரிமையாக்குவது போன்ற அபரிமித ஆசை..! வெளில இருந்து கற்பனை செய்து பார்க்கேக்க சுவாரசியமா இருக்கும். உண்மையில.. தேயிலை தோட்டத்தை உரிமையாக்கினா.. என்னென்ன பிரச்சனை வரும்.. தேவையில்லாத செலவுகள்.. தலையிடிகள் வரும் என்றது தெரியும் தானே. அதுக்கு அப்புறம் தேனீரே வெறுத்திடும். அதிலும்.. கடையில போய் ரீ குடிச்சமா விட்டமா என்றிருக்கனும்..! இல்ல ரீயை விட்டிட்டு.. மில்க் சேக் பக்கற் ஒன்று வேண்டிக் குடிச்சமா என்று இருக்கனும்..! அதுக்காக கெட்ட வழில போய் சாராயம் குடிக்கக் கூடாது..!

கடையிலை ரீ குடிக்கலாமெண்டு போனா அங்கை ஒரே ஈ தொல்லை அதோடை பலபேர் குடித்த குவளையிலை தான் ரீ யை பரிமாறுறாங்க. சும்மா வெறுந் தண்ணியிலை மட்டுந்தான் ரீ கடைக்காரர் குவளையை அலசுறாரு. அதனாலை நான் வீட்டிலேயே போட்டு வேண்டும்போது நிம்மதியா ரீ குடிச்சுக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடையிலை ரீ குடிக்கலாமெண்டு போனா அங்கை ஒரே ஈ தொல்லை அதோடை பலபேர் குடித்த குவளையிலை தான் ரீ யை பரிமாறுறாங்க. சும்மா வெறுந் தண்ணியிலை மட்டுந்தான் ரீ கடைக்காரர் குவளையை அலசுறாரு. அதனாலை நான் வீட்டிலேயே போட்டு வேண்டும்போது நிம்மதியா ரீ குடிச்சுக்கிறன்.

ம்ம்ம்... இது நல்லதுதான். உடலாரோக்கியத்துக்கு..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்... இது நல்லதுதான். உடலாரோக்கியத்துக்கு..! :icon_idea:

ரீயோ குடிக்காமல் விட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் நல்லமே நெடுக்ஸ்? :lol:

நீங்க இப்படி சொல்லிறீயள்

ஆனா எங்கட தமிழ் இளம் பெண்கள் 18 வயது வர முதலே காதல் வந்து பெடியனோடேயே போய் குடும்பம் நடத்த போறன் என்று வீட்டை விட்டு போகினம். அப்ப அவைக்கும் திருமண வாழ்க்கை இனிக்கும் எண்டு தெரியுது தானே

அல்லது தேநீர் குடிச்ச கதை தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இப்படி சொல்லிறீயள்

ஆனா எங்கட தமிழ் இளம் பெண்கள் 18 வயது வர முதலே காதல் வந்து பெடியனோடேயே போய் குடும்பம் நடத்த போறன் என்று வீட்டை விட்டு போகினம். அப்ப அவைக்கும் திருமண வாழ்க்கை இனிக்கும் எண்டு தெரியுது தானே

அல்லது தேநீர் குடிச்ச கதை தானோ?

அம்மா அப்பா கொடுத்த பால் குடிச்சவை.. தாங்களா தேனீர் குடிக்க ஆரம்பிக்கேக்க.. ஆரம்பத்தில நல்லா இனிப்பாத்தான் இருக்கும். போகப் போகத்தான் தெரியும்.. தேயிலைத்தோட்டமும்.. தேத்தண்ணியும்.. எவ்வளவு கசப்பு என்பது. அதுவரைக்கும் விட்டுப்போட்டு விடுப்புப் பார்ப்பதுதான் நல்லது..! :D :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.