Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றுவோம்!''

Featured Replies

நடேசன் நம்பிக்கை பேட்டி

''கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றுவோம்!''

ஐந்து மாதங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது இலங்கை. ராணுவத்தின் ஓயாத குண்டு வீச்சுகள்... அதிரும் துப்பாக்கிகள்... பலியாகும் அப்பாவித் தமிழர்கள் என்று நிலவரம் சூடேறிக்கொண்டிருக்க, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியிருக்கிறது இலங்கை ராணுவம். தமிழீழ காவல்துறை அலுவலகம், தமிழீழ தேசிய வங்கி, நீதித்துறை, வரி வசூலிப்புத் துறை என்று சகலத்தையும் நிர்மாணித்து புலிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடமான கிளிநொச்சி வீழ்ந்தது, புலி களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''பத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் இலங்கை வசம் போய் விட்டது புலிகளுக்குப் பின்னடைவுதானே..?''

''கிளிநொச்சி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல. பல தடவை ராணு வத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டது மட்டுமல்ல, கட்டுப்பாட்டுக்குள்ளும் நீண்ட காலம் வைத்திருந் துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்ன டைவாகப் பார்க்கவில்லை.''

''தற்போது நடந்து வரும் போரில் விடுதலைப்புலிகள் சில இடங்களில் எதிர்த் தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கிப் போகிறார்களே, ஏன்?''

''யுத்தத்தில் இழப்புகளைக் குறைப்பதற்காக பின்வாங்குவதென்பது தந்திரோபாயம்.''

''இந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது இலங்கை அரசு?''

''முழுத் தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கின்றது. இருப்பினும் ஈழத் தமிழர்கள் யாரு மற்ற அநாதைகள் அல்லர் என்பதையும் ஈழத்தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால், தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடித் தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்பதும் இச்சூழலில் இலங்கை அரசுக்கும் உலகத்துக்கும் முக்கியச் செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.''

''பிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளி நொச்சி சிதைத்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா..?''

''வருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே தவிர விடுதலைக்கான எம்முடைய கதவுகள் தகர்க்கப் படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களைக் கைப்பற்றி கட்டடங்களை உருவாக்குவோம். கிளிநொச்சியில் இயங்கிவந்த காவல்துறை, வங்கி, நிதித்துறை போன்றவை இடம்பெயர்ந்த நிலையில் இயங்கிவருகின்றன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.''

''கிளிநொச்சியில் இருந்த மக்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?''

''அவர்கள் அனைவரும் வன்னிப் பெருநிலப் பரப் பில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமான சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களைக் குடி யேற்றுவோம்.''

''சமீபத்தில் போரில் கொல்லப்பட்ட பெண் புலிகளின் உடைகளை உரித்தெறிந்து சிங்களப் படை யினர் நடத்திய பாலியல் அத்துமீறல்களைப் பற்றி..?''

''சிங்கள அரசு படையினரின் மனிதாபிமானமற்ற இத்தகைய செயல் சிங்கள அரசின் பேரினவாத சிந்தனைக் கோட்பாட்டின் பிரதிபலிப்புத்தான். இவ்வா றான அநாகரிகச் செயற்பாடுகளைப் பார்த்த பின்ன ராவது சர்வதேச சமூகம் எம்முடைய மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்த உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க முன்வரவேண்டும்.''

''புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பரப்பில் தற்போதுள்ள நிலைமை என்ன?''

''எம்முடைய மக்கள் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகளுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் முகம் கொடுத்த நிலையில், இழந்த பிரதேசங்களை மீளக் கைப்பற்றவேண்டும் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக சகல மக்களும் அளப்பரிய தியாகங் களையும் அர்ப்பணிப்புகளையும் நல்கிவருகின்றனர்.''

''புலிகளின் தலைமை மற்றும் புலிகளின் மன உறுதி குறித்து வரும் செய்திகள் பற்றி..?''

''இந்த விடுதலைப்போராட்டம், ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ச்சிபெற எம்முடைய மனவலிமையே காரணம். இந்த மன வலிமையே கடந்த முப்பது வருடங்களாக சிங்கள ராணுவத்துடன் வீராவேசத்துடன் நாங்கள் போரிடக் காரணம்.''

''புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி கள் இலங்கை ராணுவத்தின் பிடியில் போனது அவர்களுக்கு பலம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?''

''சிறீலங்கா ஒரு அரசு. அதற்குப் பல நாடுகள் ராணுவ, பொருளாதார உதவிகளை நல்கிவருகின்றன. நாம் ஒரு விடுதலை இயக்கம். தமிழ் தேசிய இனத்தின் எண்ணிக்கை சிங்கள தேசிய இனத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது சிறியதே. எம்முடைய மக்களின் பலத்துடனும் உலகத் தமிழினத்தின் தார்மீக ஆதரவுடனும் இந்த விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமர்க்களங்களில் இடங்கள் பறிபோவதும் மீள நாம் கைப்பற்றுவதும் வழமை.''

''புலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்ககூடியதா?''

''உலகத் தமிழினம் ஒன்றுபட்டு எம்முடைய விடுதலைப் போராட்டத்துக்கு நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதையே காட்டுகிறது.''

''புலிகளைவிட இலங்கை அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே..?''

''இது எமக்கு மிகவும் மனவேதனை யைத் தருகிறது. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழ் மக்கள்தான் என்பதை இந்திய அரசு விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.''

''இலங்கையோடு பிற நாடுகள் கைகோத்துக்கொண்டு போர் நடத்திவருகிறது என்று சொல்லப்படுகிறதே..?''

''இது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடு களில் இருந்து, குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைக் கொழும்பிலுள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன.''

''இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?''

''இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகள் செய்வதை நிறுத்தி, எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.''

''இலங்கை அரசின் விமான குண்டு வீச்சுகள், ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகிறதே... மக்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்?''

''முப்பது வருடகாலமாக எம்முடைய மக்கள் விமான குண்டு வீச்சுகளுக்கும் ஷெல் வீச்சுகளுக்கும் பாரிய ராணுவ நடவடிக்கைகளுக்கும் முகம்கொடுத்தவண்ணமே வாழ்ந்துவருகின்றனர். அரசின் கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும்போது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் மக்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. போராட்டமே வாழ்வாக மாறிவிட்ட எம் மக்கள் சிறு குழந்தைகளிலிருந்து முதியோர்வரை தம்மைத் தற் காத்துக்கொள்வதில் தேர்ச்சிபெற்று வருகின்றனர். உலக அளவில் தடை செய்யப்பட்ட 'கிளஸ்டர்' குண்டுகளையே அரசு எம்மக்கள் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்திவருகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.''

''தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?''

''தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தி னூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக, நேர்மையான முறையில் பொருட்களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளது.''

நன்றி விகடன்

1996 இல விட்ட கிளிநொச்சியை 1998 இல மீளவும் கைப்பற்றினவை. அந்தக் காலத்திலேயே 2 வருடத்தில எண்டா இப்ப முப்படைகள் பிரிகேடியர் தமிழ்செல்வன் படையணி பிரிகேடியர் பால்ரஜ் படையணி ஈரூடக படையணி சமாதானம் சண்டை எண்டு பல்குழல் ஏவுகணைகள் எல்லாம் இருக்கும் போது நிலமை எப்பிடி? எந்த நேரமும் கிளிநொச்சி புலிகளிடம் விழலாம் எண்டது தான் உண்மை நிலை.

எனவே எந்த நேரமும் வரக் கூடிய பாாாாாாாாரிய வெற்றி செய்திக்கு புலம்பெயர்ந்தவர்கள் தயாராக பொப்கோனுடன் இருக்கவும்.

அதில சுணக்கம் எண்டாலும் எண்டுதான் முதல் எல்லாளன் எண்டு 1 படம் வருகுதாம். அதை வைச்சு சாமாளியுங்கோ.

முந்தி USS Cole மீதான தாக்குதலுக்கு பிரச்சாரம் செய்த மாதிரி எல்லாளன் மாதிரித்தான் .... எண்டு பிரச்சாரங்கள் செய்தா பிறகுதான் உப்பிடி படங்கள் எடுத்து வெளிநாடுகளுக்கு விடுறதை நிப்பாட்டுவினம் போல. :mellow:

முந்தி USS Cole மீதான தாக்குதலுக்கு பிரச்சாரம் செய்த மாதிரி எல்லாளன் மாதிரித்தான் .... எண்டு பிரச்சாரங்கள் செய்தா பிறகுதான் உப்பிடி படங்கள் எடுத்து வெளிநாடுகளுக்கு விடுறதை நிப்பாட்டுவினம் போல. :(

இதை விளங்கிக்கொள்ளுற மாதிரி அழகான தமிழ்ழ சொல்ல முடியுமா ? எனக்கெண்ணடா நீங்க என்ன சொல்ல வாறிங்கள் எண்டு விளங்கேல்ல. :blink::mellow:

இதை விளங்கிக்கொள்ளுற மாதிரி அழகான தமிழ்ழ சொல்ல முடியுமா ? எனக்கெண்ணடா நீங்க என்ன சொல்ல வாறிங்கள் எண்டு விளங்கேல்ல. :(:mellow:

அவரோடை கூட ஆஸ்பத்திரியிலை இருக்கிறவைக்கும் விளங்கிறதில்லையாம்.... அதுக்கை உங்களுக்கு எங்கை..?? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நாடு இருக்கிற நிலையிலையும், மக்கள் படுகிறபாட்டிலையும் சனத்துக்கு இப்ப படம் பார்க்கிற மனநிலை வருமா என்று தெரியவில்லை. யதார்த்தத்துக்கு ஒத்துவராத நடவடிக்கைதான் இந்தப் பட வெளியீடு. குறைந்தது இந்தப் படத்தில் காட்டப்படுகிற இடங்களாவது இப்போது கைவசம் இருக்கிறதா என்றுதெரியவில்லை. உந்தப் படங்கள் எடுத்து மினக்கெடுற நேரம் உலகத்துக்கு அங்க நடக்கிற அக்கிரமங்களையாவது விளங்கப்படுத்தலாம். சும்மா தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு பேட்டி குடுக்கிறதோட நில்லாமல் வேற நாடுகளின்ர செய்திச் சேவைகளுக்கு ஏதாச்சும் சொல்லலாம்.

நாங்கள் எந்த எதிர்ப்புமில்லாமல் கிளிநொச்சியை விட்டு வெளியேறியது போல, ராணுவமும் வெளியேறும் என்று எதிர்பார்க்க முடியுமா? இல்லையென்றால் ஒவ்வொருமுறையும் பிடிக்கிறதுக்காக குடுக்கிற விலை பற்றி சிந்திக்கவும் வேணும். பிரதேசங்கள் கைமாறும் எண்டு இலகுவாகச் சொல்லிவிட்டுப் போகலாம். அவ்வாறு ஒவ்வொருமுறையும் கை மாறும்போதும் பலியாகிற போராளிகளை எந்தக் கணக்கில் வைக்க?

நாடு இருக்கிற நிலையிலையும், மக்கள் படுகிறபாட்டிலையும் சனத்துக்கு இப்ப படம் பார்க்கிற மனநிலை வருமா என்று தெரியவில்லை. யதார்த்தத்துக்கு ஒத்துவராத நடவடிக்கைதான் இந்தப் பட வெளியீடு. குறைந்தது இந்தப் படத்தில் காட்டப்படுகிற இடங்களாவது இப்போது கைவசம் இருக்கிறதா என்றுதெரியவில்லை. உந்தப் படங்கள் எடுத்து மினக்கெடுற நேரம் உலகத்துக்கு அங்க நடக்கிற அக்கிரமங்களையாவது விளங்கப்படுத்தலாம். சும்மா தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு பேட்டி குடுக்கிறதோட நில்லாமல் வேற நாடுகளின்ர செய்திச் சேவைகளுக்கு ஏதாச்சும் சொல்லலாம்.

அது சரிதான்... ஆனால் ஏன் சொல்லுறீயள் எண்டுதான் விளங்க இல்லை.... :(:mellow:

அவரோடை கூட ஆஸ்பத்திரியிலை இருக்கிறவைக்கும் விளங்கிறதில்லையாம்.... அதுக்கை உங்களுக்கு எங்கை..?? :mellow:

அட கடவுளே. எனக்கு உது தெரியாமல் போட்டுது... :(

  • கருத்துக்கள உறவுகள்

தயா, மக்களுக்கு இப்ப வேண்டியது வன்னியில் என்ன நடக்கிறது என்கிற விளக்கம் தான். நாளுக்கு நாள் இடங்கள் பறிபோவதோடு, நாடோடிகளாக அலையும் அந்த 4 லட்சம் மக்களும் இப்போது ஒரு சின்ன இடப் பரப்பினுள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அங்கு நடப்பவை எதுவுமே வெளியே தெரியாத நிலையில் அவை பற்றி விளக்கமளிக்க வேண்டிய கடமை புலிகளுக்கு இருக்கிறது. எத்தனையோ ஆயிரம் போராளிகளின் குருதியினால் சிறுகச் சிறுக கைப்பற்றப்பட்ட இடங்கள் இப்போது சிலவேளைகளில் இழப்பின்றியே ராணுவத்தின் வசமாகும் போது புலிகள் மவுனம் சாதிப்பதும், யதார்த்தத்துக்கு ஒவ்வாத படங்களை வெளியிடுவதும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. களம் எமக்குச் சார்பாக இல்லாத போது நாம் வெற்றியடைவதாகக் காட்டும் ஒரு பிரமையை இப்போது வெளியிடக் காரணம் என்ன? இதுக்கு மக்களிடையே எவ்வாறான வரவேற்பு இருக்கும் என்பதை வெளியிடுபவர்கள் சிந்திக்கவில்லையா? மக்களின் மன நிலையை உயர்த்த வேண்டுமென்றால் அது களத்தில் நடக்கும் நிகழ்வுகளோடுதான் ஆரம்பிக்கப்பட வேண்டும், மாறாக செயற்கைத் தனங்களால் அல்ல.

இப்போது வேண்டியது புலிகளின் நகர்வுகள் மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட வேண்டும். புலிகள் எதற்காக அப்படிச் செய்தார்கள் என்ற புரிதல் மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேன்டும்.சரியான தெளிவுபடுத்தல் இருந்தாலே போதும், மக்கள் விளங்கிக் கொள்வார்கள். மாறாக இந்தத் தருணத்தில் செயற்கைத் தனமான படங்கள் எதையுமே மக்களிடத்தில் ஏற்படுத்தப் போவதில்லை.

ரகு...! வன்னி என்பதும், மட்டக்களப்பு என்பதும், திருகோண மலை என்பதும், யாழ்ப்பாணம் எல்லாமே தமிழீழ பிரதேசங்கள்தான்... இதில் எந்த இடம் போவதும் எங்களின் மனதுக்கு இதமாக இருக்க போவதில்லை... வெறும் கிளிநொச்சிக்காகவும், ஆனையிறவுக்காகவும் புலிகளோ தமிழரோ போராடவில்லை... சுதந்திரம் எனும் ஒண்றுக்காக தான் எல்லாமே....!!

இண்டைக்கு இந்திய தொழில் நுட்பம், பயிற்சி ( ராடர் , உளவு பகுப்பாய்வுகள், இலக்கு தெரிவுகள், தாக்குதல் விமான கட்டுப்பாட்டு தொடர்பாடல்கள் எண்று எல்லாமே) இந்தியாவும், சிறு ரக ஆயுதங்கள், பீரங்கீகள் எண்று ஆயுதங்களை எல்லாம் சீனா பாக்கிஸ்தான் எண்று எல்லாரிடமும் வாங்கி தலையில் கொட்டுகிறது இலங்கை படைகள்...

அவர்களின் நோக்கம் புலிகளின் இடங்களை தாங்கள் கையக படுத்துவது மட்டும் அல்ல... உண்மையில் சொன்னால் இடங்களை பிடிப்பது அவர்களின் முக்கிய நோக்கமே அல்ல... அவர்களின் முக்கிய குறி புலிகளை வலுச்சண்டைக்கு இழுத்து வெடி பொருட்களால் அவர்களையும் அவர்களின் வழங்கல்களையும் சிதைப்பது... புலிகளை பலவீன படுத்த அவர்கள் போடும் முக்கிய கணிப்பு இப்படித்தான் இருக்கிறது.. இல்லையே நீண்டகால படை எடுப்பு என்பது அரச படைகளுக்கும் தேவை அற்றது...

நாள் ஒண்றுக்கு 10 புலிகளை கொல்ல வேண்டும் என்பது பாதுகாப்பு கூட்டம் ஒண்றில் சரத் பொன்ஸ்சேகா குறிப்பிட்ட ஒரு விடயம்... புலிகளை பலவீன படுத்த அவர்கள் போடும் திட்டங்களில் முக்கியமானது அது...

புலிகளை வலுச்சண்டைக்கு வரவளைக்க(வலிந்த தாக்குதல்களை செய்ய வைப்பது) வேண்டும் என்பதுதான் அரச படை நிலையினரின் நீண்டகால திட்ட அடிப்படை... எல்லாரும் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை செய்வதுக்கு பெயர் விடுதலை போர் கிடையாது... எது சரியானதோ அதை செய்து காப்பதுதான் நல்ல வன்மையான தலைமை...

கிளிநொச்சி என்ன... திருகோண மலை கூட எங்களின் கைகளின் வரும் கவலையை விடுங்கள்....!!!

Edited by தயா

நம்பிக்கைதான் வாழ்க்கை

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நேரத்தில், சரியான இடத்தில் தலைவர் முடிவு எடுப்பார். முன்பும் பல இக்கட்டான சந்தர்ப்பங்களில் தலைவர் பலரும் எதிர்ப்பார்க்காத முடிவுகளை எடுத்து வியக்கவைத்தவர். அவருக்குத் தெரியும் எப்ப என்ன செய்வது என்று. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொடர்ந்து உங்களின் பங்களிப்பை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சத்திய வேள்வி சாய்ந்ததாய்ச் சரிதம் இல்லை

சந்தனக் காடுகள் வாசத்தைத் தொலைத்ததில்லை

நித்திலச் சூரியனை இருள் மூடித் தின்றதில்லை

நிலம் பிடித்த பகையும் நீடிக்கப் போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருப்பவர்களே கலங்கவில்லை புலத்தில்தான் ஏனோ......... நம்புங்கள் புலம்பெயர் தாயக உறவுகளே எமக்கே உரித்தான தலைவன் இருக்கிறான் அவரின் கரங்களை பலப்படுத்துங்கள் தமிழீழம் மலரும்

தர்மத்தின் வாழ்வுதனை சிலநாள் சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும் - நாளை நமதே!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.