Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சண்டே லீடர்" பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்க துப்பாக்கிச் சூட்டில் மரணம்

Featured Replies

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

"சண்டே லீடர்" பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்க துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். (உறுதிப்படுத்தப்படாத தகவல்)

- அத தெரண

இவர் கல்கிசை அத்திடிய பகுதியில் மகிழூர்ந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடும் காயங்களுக்குள்ளான இவரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

- சக்தி செய்திகள்

Edited by மோகன்
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது

Lasantha critical

Lasantha-50.jpg

Lasantha Wickramatunga is in critical condition, hospital sources confirmed. He is currently being taken to the Colombo General Hospital for surgery. According to reports available at the moment, two armed men had come in two motorcycles, blocked his vehicle and shot him near the ear.

http://www.dailymirror.lk

சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு

[ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 05:40.08 AM GMT +05:30 ]

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், முன்னணி ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் கல்கிஸையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

மகரகம பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோதே கல்கிஸை மலகலகே பாடசாலைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லசந்த மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பாரதூரமான காயங்களுடன் சற்று முன்னர் லசந்த விக்ரமதுங்க களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சண்டே லீடர் பிரதான ஆசிரியர் லசந்த விக்கிரமதூங்க மீது துப்பாக்கி சூடு

வியாழன், 08 ஜனவரி 2009, 10:59 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ]

இலங்கையின் தலைநகர் கொழும்பில் வெளியாகும் ஆங்கில வாரேடான சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான செய்தியாசிரியர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுடப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிளவில் வேக்கரி சந்தியில் அற்றியா பகுதியில் வைத்து இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கொழும்பு பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தூதுவர் இன்னும் அறிக்கை விடவில்லையோ?

அமெரிக்கா தூதுவர் இன்னும் அறிக்கை விடவில்லையோ?

அவர் என்ன வைத்தியரே :mellow:

லசந்த விக்கிரமதுங்க மரணம் :mellow:

- அத தெரண

லசந்த விக்கிரமதுங்க மரணம் :mellow:

- அத தெரண

சுடச்சுட செய்தி போடுகிறீர்கள். :(:blink:

நமக்கு தான் சிங்களவனில் என்னபாசம் வைத்திருக்கின்றோம்.வன்னியல் சிங்களவன் எறிகணையால் 5 பேரை கொலைசெய்திருக்கின்றான் அதை பற்றி சொல்ல யாரும் இல்லை.

சற்று முன்னர் டெய்லிமிரர் ஆங்கிலப்பத்திரிகையில் வந்த செய்தியின் படி லசந்த விக்கிரமதுங்க இறந்து விட்டார்.இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒலித்த இந்தக்குரலும் அடங்கி விட்டது.

Lasantha Wickramatunga has passed away moments ago, hospital sources confirmed.

சிங்கத்தின் குகையில் இருந்து துணிவுடன் அந்த சிங்கத்திற்கு எதிராக ஒலித்த இன்னுமொரு குரல்வளை நசிக்கப்பட்டுள்ளது!

இரத்தலானை விமானநிலையத்தை அண்டிய அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற இந்தக் கொலைக்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த பரகசியம்!

இனியும் "இலங்கை அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்" என்று அறிக்கை விடுபவர்கள் அனைவரும் கொலைக்கு உடந்தையானவர்களே!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தூதுவர் இன்னும் அறிக்கை விடவில்லையோ?

பூங் கொத்தோட போய் இறுதி வணக்கம் செய்திட்டு, அதாவது அவை சொல்லுற சனநாயகத்தைக் கொல்லுற சிறீலங்கா அரசுக்கு வலிக்காத வகையிலை, மனுசன் மண்டையை குடைஞசு ஒரு அறிக்கை வரும். உலகில் ஊடகத்துறைக்கு ஆபத்தான நாடுகளில் முதலிடம் பிடித்த நாடுகள் வரிசையில் சிறீலங்காவுக்கே வெற்றிக் கேடயம். அதையும் இவரே கொடுப்பாரோ தெரியேல்ல..........

நமக்கு தான் சிங்களவனில் என்னபாசம் வைத்திருக்கின்றோம்.வன்னியல் சிங்களவன் எறிகணையால் 5 பேரை கொலைசெய்திருக்கின்றான் அதை பற்றி சொல்ல யாரும் இல்லை.

இது ஒரு இனவாதக் கருத்து!

ஒருவர் நல்லவனா கெட்டவனா என்பதை இனத்தின் அடிப்படையிலன்றி, அவரின் தனிப்பட்ட செயலின் அடிப்படையிலேயே தீர்மாணிக்க வேண்டும்.

எனக்கு தெரிந்ததை நான் செய்கிறேன். உங்கள் பாசத்தை நீங்கள் காட்டுங்கள்!

அனியாயமாய் விடுதலை புலிகள் ஒரு செய்தியாளரை கொலை செய்து போட்டினம் எண்டும் இதை மகிந்த குடும்பம் வன்மையாக கண்டித்து புலிகளை தடை செய்கிறது...!!

அனியாயமாய் விடுதலை புலிகள் ஒரு செய்தியாளரை கொலை செய்து போட்டினம் எண்டும் இதை மகிந்த குடும்பம் வன்மையாக கண்டித்து புலிகளை தடை செய்கிறது...!!

:blink::(:mellow:

இவருக்கு ஏன் இந்த நிலமை? பேசாமல் இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் மாதிரி மகிந்தவின் காலை நக்கிகொண்டிருந்திந்தால் உயிரோட இருந்திருக்கலாம்..

இவர் மறைந்த தமிழ்த்தேசியக்கூட்டணி பா.உ அமரர் இரவிராஜ் அவர்களின் நண்பர் ஆவார் அத்துடன் இப்பொழுதைய அராஜக அரசின் நடவடிக்கைகளை மிகவும் துணிந்து விமர்சித்த ஒரு பத்திரிகையாளர்.

கடந்த வாரம் தான் ஊடக அமைச்சையும் மகிந்தர் தன்னகப்படுதினார் அநேகமாக இப்பொழுது ஊடகம் சார்பாக அரசை எதிர்க்க இனி எந்த ஊடகமும் துணியாது இனி அனைத்து ஊடகங்களுமே சிங்கள பேரினவாத்தின் ஊதுகுழல்கள் தான்.ஊடக்தர்மத்திற்கு சாவுமணி...............

அடுத்த ஆப்பு யாருக்கு.... பிரதம நீதியரசர் சரத் என் டி சில்வாவிற்குத்தான் ...இப்ப அவர்தான் மகிந்தருக்கு எதிராக அவரையும் மடக்கிட்டால் பிறகென்ன எப்படியிருந்த இலங்கை சனநாயகக் குடியரசு இப்படி ஆகிடுமோ என்று குறிப்பு சொல்ல யார் வருவினம்?????

சரத்து உனக்கு மகிந்தர் வைக்கப்போறாரு ஆப்பு :mellow:

சாணக்கியன் நீங்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லுங்கள் ஆனால் நான் எனது இனத்தை பற்றித்தான் சிந்திப்பேன் எனது குறிப்பிட்ட வயது மட்டும் இனத்தைபற்றி சிந்திக்கதோன்றவில்லை ஆனால் இப்போது சிந்திக்கின்றேன்.இனவாதியாக ஆக்கப்பட்டுள்ளேன் என்பது பொருந்தும்.50 லட்சம் இப்போது 25-30 லட்சம் ஆகிவிட்டது.இப்போது கூட இனத்தை பற்றி சிந்திக்காமல் விட்டால் 0 வந்து நிக்கும்.

உங்களுக்கு ஏன் நான் சொன்னதில் வருத்தம் வருகின்றது.அவரும் சதையாலும் ரத்தத்தாலும் உருவாக்கப்பட்டவர் இன்று வன்னியில் இறந்த 5 பேரும் அப்படி தான் உருவாகினார்கள்.அவர் இறந்ததற்கு காரணம் உணடு சிங்கள அரசாங்கத்துக்கெதிராக செய்தி வெளியிட்டதால் வன்னியில் இன்று இறந்தவர்களுக்கு என்ன காரணம் உண்டு?

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஜெயசிக்குறு காலம் மீண்டு வருவதைக் காணக் கூடியதா இருக்குது. ஜெயசிக்குறுவில.. வன்னில நிலம் விழுங்க விழுங்க.. மகாராஜாவுக்கு அடி... (சந்திரிக்கா காலத்திலும் மகாராஜா அடி வாங்கினவர் தான். இத்தனைக்கும் அவை.. அவாவோட நல்ல.. கூட்டாளிக் குடும்பம்) ஐக்கிய தேசியக் கட்சி பத்திரிகையாளர்கள்.. மற்றும் சந்திரிக்கா எதிர்ப்பு ஊடகவியலாளர்கள் கொலை.. நுகோகொடையில வைச்சு பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆக.. யுத்த வெறி.. அவர்களுக்கே இப்ப ஆபத்தாகிட்டு வருகுது. எதைச் செய்தாலும்.. யுத்த வெற்றிச் செய்தியை வைச்சு சிங்கள பேரினவாதத்துக்குள் புதைந்து கிடக்கும் சாமானிய சிங்கள மக்களை சரிக்கட்டிடலாம் என்பது சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் தாரக மந்திரம். அதற்கு ஜே ஆரும் விதிவிலக்கல்ல.. பிரேமதாசவும் விதிவிலக்கல்ல.. சந்திரிக்காவும் விதிவிலக்கல்ல.. இப்போ மகிந்தவும் விதிவிலக்கல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

சரத்து உனக்கு மகிந்தர் வைக்கப்போறாரு ஆப்பு

சரத் ( N Silva) தப்பி விடுவார் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறப்போறாரு! அது தான் இவ்வளவு நாளும் இல்லாத வேகம்

Edited by சாணக்கியன்

சாணக்கியன் நீங்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லுங்கள் ஆனால் நான் எனது இனத்தை பற்றித்தான் சிந்திப்பேன் எனது குறிப்பிட்ட வயது மட்டும் இனத்தைபற்றி சிந்திக்கதோன்றவில்லை ஆனால் இப்போது சிந்திக்கின்றேன்.இனவாதியாக ஆக்கப்பட்டுள்ளேன் என்பது பொருந்தும்.50 லட்சம் இப்போது 25-30 லட்சம் ஆகிவிட்டது.இப்போது கூட இனத்தை பற்றி சிந்திக்காமல் விட்டால் 0 வந்து நிக்கும்.

உங்களுக்கு ஏன் நான் சொன்னதில் வருத்தம் வருகின்றது.அவரும் சதையாலும் ரத்தத்தாலும் உருவாக்கப்பட்டவர் இன்று வன்னியில் இறந்த 5 பேரும் அப்படி தான் உருவாகினார்கள்.அவர் இறந்ததற்கு காரம் உண்டு சிங்கள அரசாங்கத்துக்கெதிராக செய்தி வெளியிட்டதால் வன்னியில் இன்று இறந்தவர்களுக்கு என்ன காரணம் உண்டு?

நீங்கள் யாராக இருப்பது என்பதை காலமும் சூழலும் தான் தீர்மாணிக்கும்.. நீங்கள் இல்லை!

ஒன்றுமே தெரியாதமாதிரி அப்பாவி மாதிரி நீங்கள் கேட்டாலும்.. உங்கடை கருத்தில எனக்கு என்ன வருத்தம் என்றா... வேறு ஒரு தலைப்பையும் இந்த தலைப்பையும் இணைச்சு நீங்கள் என்னை தாக்க முயன்றீர்கள்...!

நீங்கள் முதலில் அந்தத்தலைப்பில் என்ன கருத்தை எழுதினீர்கள்? சரி நான் என் கருத்தை எழுதினால் அந்தக் கருத்து அகற்றப்படாது என்றோ அல்லது அந்தத்தலைப்பு நிர்வாகத்திற்கு நகர்த்தப்படாது என்றோ உத்தரவாதம் தரமுடியுமா உங்களால்?

Edited by சாணக்கியன்

ஒரு சிறந்த, திறமைமிக்க பத்திரிகை ஆசிரியரை சிறீலங்காவின் அரச பயங்கரவாதம் பலி எடுத்துள்ளது!!!

அன்னாருக்கு வெற்றிவேலின் அஞ்சலிகள்!

Sri Lankan State Terrorism has gunnned down one more democratic voice against it!

Tributes to Sunday Leader Editor Mr. Lasantha Wickramatunga!!!

Edited by vettri-vel

.அவர் இறந்ததற்கு காரம் உண்டு. வன்னியில் இன்று இறந்தவர்களுக்கு என்ன காரணம் உண்டு?
  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பத்திரிகை ஆசிரியாளரான லசந்த விக்கிரமசிங்கவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.