Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்திரபாக்கியம் : புரிதலும் , அணுகுமுறையும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு பிறகு மூன்று மாதத்தில் இருந்தே கணவனிடமும், மனைவியிடமும் கேட்கத் தொடங்கப்படும் கேள்விகள்தான்.. "விசேஷம் ஏதாவது உண்டா?", "இது வரையிலும் ஒன்றுமில்லையா?" போன்றவை. "அதெல்லாம் ஒரு வருஷம் பொறுத்துதான்," என்று நழுவுவதுக்கு ஒரு பதில் சொல்லி நாம் சமாளிப்பது வழக்கம்.

ஆனால், நாளடைவில் நம்முடைய மனதிலும் ஒரு குழந்தையைக் கொஞ்சிப் பார்க்க ஆசையும், அதற்கு தமதமாவதினால் வருத்தமும் உண்டாக தொடங்குகிறது. அதோடு, நம் மனதிலும் டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். கடைசியில், மருத்துவமனைகளில் ஏறி இறங்கத் தொடங்குவோம். இங்கேயும் ஆரம்பிக்கின்றது புதிய பிரச்னைகள்...

ஆணுக்கும் பெண்ணுக்கும்...

குழந்தைப் பேறுக்காக சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது, யாருக்கு முதலில் பரிசோதனை மேற்கொள்வது என்பதில் கணவனுக்கும், மனைவிக்கும் பிரச்னைகள் ஆரம்பிகின்றது.

ஆயினும், சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் பெரும்பாலும் பெண்கள்தான் தங்களை பரிசோதனைக்கு முதலில் உட்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆண்களுக்கான பரிசோதனைகள் மிகவும் சுலபமானது என்றாலும்கூட, அவர்கள் அதை மேற்கொள்ள தயாராக இருப்பதில்லை.

பெண்ணுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையைத் தொடங்கும்போதே, அவளது கணவனும் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். காரணம், ஆணோ பெண்ணோ குழந்தை இல்லை என்று வந்துவிட்டால் இரண்டு பேருமே பரிசோதனை செய்து கொள்வது தான் நல்லது. இவர்களில் ஒருவர் மட்டும் பரிசோதனை செய்து கொள்ளவது உசிதமானது அல்ல என்பதை இருவருமே புரிந்துகொள்ள வேண்டும்.

தங்களுடைய பிரச்னைகள் தெரிந்து கொள்வதற்கும், அதற்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளவதற்கும் இரண்டு பேரும் ஒன்றாக செல்வதுதான் நல்லது. ஏனென்றால் இதற்கு தேவையான கவுன்சிலிங் இரண்டு பேருக்கும் தேவை.

கவுன்சிலிங் நேரத்தில் கணவன் - மனைவி இரண்டு பேரிடமும் எல்லா விஷயங்களை பற்றியும் ஒன்றாக மருத்துவர்கள் விளக்குவர். ஒருவரிடம் மட்டும் சொன்னால், அவர்களுக்கு எதோ கடுமையான கோளாறு இருப்பதாக நினைப்பதற்கும், சந்தேகப்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

மேலும், தங்களுடைய பிரச்னைகள் உறவினர்களிடையே சொல்வதை தவிர்க்க வேண்டும். அது சில நேரங்களில் கணவனுக்கோ, மனைவிக்கோ மனச் சங்கடங்களை உருவாக்க நேரிடலாம்.

மலட்டுத்தன்மைகான காரணங்கள்...

மாதவிலக்கில் தடைகள், என்டோமெட்ரியாசிஸ், கருமுட்டை உருவாகுவதிலுள்ள தடைகள், டியூபில் ஏற்படுகின்ற அடைப்புகள் முதலான பிரச்னைகள் பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களாக இருக்கின்றது.

ஆண்களில் வெரிகோஸ், உயிரணுக்களில் எண்ணிக்கை குறைவாக இருப்பது போன்றவை மலட்டுத்தன்மைக்கு காரணங்களாக இருக்கின்றது.

ஒரு வருடம் வரை முயற்சித்த பின்னும் தாய்மை அடையாமல் இருக்கும் போதுதான் நமக்கு மலட்டுத்தன்மை இருக்கலாம் என்று உணர முடிகின்றது. இதை ஒரு நோயாக கருதி மனதை வாட்டிக் கொள்வது தவறு.

இன்று சாதாரணமாக 10-ல் ஒருவருக்காவது இப்பிரச்னைகள் இருக்கின்றது. இதில் முக்கால்வாசி பேர்களும் மாற்று சிகிச்சை முறைகள் இல்லாமலயே குழந்தைகள் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், சிலருக்கு சிகிச்சை முறைகள் தேவைப்படுகிறது.

ஊட்டசத்து குறைவான உணவு, தண்ணிரிலும் உணவிலும் அடங்கி உள்ள கிருமிகள், சிகரெட், குடிப்பழக்கம் போன்றவையும் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கின்றது.

சரியான சிகிச்சை முறை...

கணவன், மனைவி இவர்களில் எவருக்கேனும் மலட்டுத்தன்மை இருந்தால் கூட தாம்பத்ய உறவில் வழக்கம்போல் ஈடுபட வேண்டும். இதனால், உயிரணுக்களுடைய சக்தி குறைவதற்கு பதிலாக கூடத்தான் செய்யும். அதிக அளவில் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது கருத்தரிக்க வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அவ்விதம் இருக்கின்ற நேரம் தம்பதிகளின் மன ஒற்றுமையும் சிராக இருக்கும்.

கருவாக்க சிகிச்சைக்கு ஒரு மருத்துவரை அணுகும் முன், அவர் நடத்துகின்ற அல்லது பணியாற்றுகின்ற மருத்துவமனையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் . நவீன கருவிகள் உள்ளதா, சிகிச்சைக்கு வருபவர்களை அவர் நன்றாக பராமரித்து கொள்கிறார்களா என்பதை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டியிருக்கும்.

எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் வசதி கொண்ட மருத்துவமனையையும், எல்லோராலும் எளிதில் அணுக இயலுகின்ற மருத்துவரையும் அணுகுவதுதான் நன்மை பயக்கும்.

சிறந்த மருத்துவரின் ஆலோசனைகளை சரியாக பெற்று சிகிச்சையைப் பெறவேண்டும். மாறாக, கலர்ஃபுல்லான விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது.

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் வீட்டிலும் தேவதைகள் வலம் வருவது உறுதி!

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

:D ...... :( இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் வீட்டிலும் தேவதைகள் வலம் வருவது உறுதி! :(

கல்யாண காட்சிகளை கண்டால் தானே இது எல்லாம்

நானும் ,நெடுக்கும் இதால தப்பி விட்டோம் :lol::(

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண காட்சிகளை கண்டால் தானே இது எல்லாம்

நானும் ,நெடுக்கும் இதால தப்பி விட்டோம் :D:(

எவ்வளவு காலத்திற்கு ......... முனிவரும் , நெடுக்ஸ்சும் இதே வைராக்கியத்தோடை இருக்கப்போகின்றீர்கள் என்று நாமும் பார்க்கத்தானே போகின்றோம் . :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறித்தம்பி! தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு காலத்திற்கு ......... முனிவரும் , நெடுக்ஸ்சும் இதே வைராக்கியத்தோடை இருக்கப்போகின்றீர்கள் என்று நாமும் பார்க்கத்தானே போகின்றோம் . :rolleyes:

நாங்க அறிவியல் உலகில வாழுறம். பைத்தியக்காரத்தனமா.. கற்கால மனிசரைப் போல.. வாழ மாட்டம்..!

இப்ப எல்லாம் விலைக்கே மனித முட்டை கிடைக்குது. அதை ஆய்வுசாலையில கருக்கட்ட வைக்க வழிமுறை இருக்குது. அதை பத்திரமா.. கருப்பையில வளர்த்து குழந்தையா பெற்றுத்தர .. விலைக்கு.. வாடகை அம்மாமாரும் இருக்கிறாங்க. டொலர் இருந்தா.. எல்லாம் நடக்கும்..!

இல்ல எத்தனையோ குழந்தைகள் போராலும்.. உலக பொருளாதார சமூக கட்டமைப்பாலும்.. அனாதைகளாகி இருக்கிறார்கள். அவர்களில் சிலரை தத்தெடுத்து.. உங்கள் குழந்தைகளாக வளர்த்து.. பெரியவர்களானதும்.. நல்ல ஒரு வழியைக் காட்டி அவர்கள் வழியில் வாழ விட்டிட்டு.. ஒதுங்கிக் கொள்ளலாம்..!

அதைவிட்டிட்டு...

ஒன்றைக் கட்டி.. அதுக்கு.. மொத்தத் தாலிக்கொடி செய்ய செலவழிக்கிறதும்.. இன்னும்.. ஆடம்பரத்துக்கு.. வாழ்க்கை பூரா செல்வழிக்கிறதிலும்... இப்படி ஒன்றுக்கு செலவழிக்கிறது.. ரெம்ப சிக்கனமும் உபயோகமுமானது..! அதுமட்டுமன்றி.. சுதந்திரமான.. சண்டை சச்சரவற்ற.. பிரிவினையற்ற.. வீணான துன்பமற்ற.. உங்களின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கக் கூடிய மகிழ்வான வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கை இருக்கும்..! :D

இதனால் தான் என்னவோ.. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியானியான நியூட்டன் தொடங்கி.. அப்துல் கலாம் வரை திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்து விட்டிருக்கிறார்கள்.! அவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்வாக சாதனையோடு.. வாழ்ந்து முடிக்கவில்லையா..!! அறிவியலாளன்.. அறிவை பாவிக்கிறான்..! அரைகுறையள்.. மாட்டுப்பட்டிட்டு.. முழிக்கினம்..! :rolleyes: :rolleyes:

சாதனை படைத்த.. திலீபன் அண்ணா சரி.. மில்லர் அண்ணா சரி.. இன்னும் இன்னும் ஆண்.. பெண் போராளிகள் சரி.. குழந்தை குட்டி.. கலியாணத்துக்கு ஆசைப்பட்டிருந்தா.. இன்று சாதனையாளர்களாக நின்றிருக்க முடியுமா..??! சாதாரண மனிதர்களாகவே விலங்குகளோடு விலங்குகளாக.. கோடியில் ஒருவராக.. வாழ்ந்து இறந்து போயிருப்பர்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் குழந்தைகள் தத்து எடுத்து வளர்ப்பது ஒரு நல்ல செயல் ஆனால் உங்கள் பெயர் சொல்லவும் ஒரு பிள்ளை வேண்டும் இல்லையா? உங்கள் தசைகளாலும் இரத்தத்தாலும் ஆன உங்கள் பிள்ளை என்றவுடன் கூட மகிழ்ச்சியல்லவா.தலைவர் கூட திருமணம் முடித்திருக்கிறார் ஏன் அவர் சாதனை செய்யவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் குழந்தைகள் தத்து எடுத்து வளர்ப்பது ஒரு நல்ல செயல் ஆனால் உங்கள் பெயர் சொல்லவும் ஒரு பிள்ளை வேண்டும் இல்லையா? உங்கள் தசைகளாலும் இரத்தத்தாலும் ஆன உங்கள் பிள்ளை என்றவுடன் கூட மகிழ்ச்சியல்லவா.தலைவர் கூட திருமணம் முடித்திருக்கிறார் ஏன் அவர் சாதனை செய்யவில்லையா?

மனிதன் எல்லாம் ஒன்றுதானே. என்னில் வேறு தசை.. உங்களில் வேறு தசையா இருக்கிறது. இல்லையே. நாம் எமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்க.. தேடும் இவ்வகையான காரணங்கள் அவ்வளவு வலிதானவையாக இல்லை..!

உங்கள் குழந்தையிடம் உங்கள் பிறப்புரிமை தகவல் இருக்கனும் என்பது அவசியம் என்றால் அதற்கும் மேலே வழிமுறை சொல்லி இருக்கிறேனே. யாரோ ஒரு பெண்ணை திருமணம் என்று கட்டி.. முட்டையைப் பெறுவதிலும்.. பணத்தைக் கொடுத்து.. அதே முட்டையை ஆய்வுசாலை முட்டை வங்கியில் தெரிவுக்குரிய முறையில் தெரிவு செய்தும்.. (பெண்கள்..விந்து வங்கியில் இருந்து எடுக்கலாம்) உங்கள் மரபணுவை கலக்க வைக்க முடியும் தானே...! அப்புறம்.. எதற்கு... காதல்.. கலியாணம் என்ற போலி நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்க வேண்டும்...???! :rolleyes:<_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஆண்,பெண் இருவரும் திருமணம் வேண்டாம் என்று இருந்தால் ஒன்று இந்த சமுதாயம் நினைக்கும் அவர்கள் ஏதோ குறைபாடு(மலடுத்தன்மை,ஆண்மையி

ன்மை) கொண்டவர்கள் என்று இரண்டாவது ஓரின சேர்க்கையாளரோ என்று நினைப்பார்கள்.மூன்றாவது எயிட்ஸ் நோயாளீக‌ளும் அநாதை பிள்ளைகளும் கூடுமே வழிய குறையாது காரணம் ஆண்கள் பெண் சுகத்திற்காக விபச்சாரிகளையும் முறையற்ற தொடர்புக‌ளையும் ஏற்படுத்துவார்.அது என்னும் பாதிப்பையே ஏற்படுத்தும்.நடிகர் கமல் ஒரு தடவை பேட்டியில் சொன்னார் சென்னையில் இருக்கும் அநாதை குழந்தைகளீல் எத்தனை குழந்தை தனது குழந்தை என்று தெரியாது என்று சொன்னார்.திருமணம் வேண்டாம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் பேசாமல் கரும்புலியில் சேர்ந்து விடுங்கள்.திருமணம் முடித்தால் நாட்டுக்கு சேவை செய்ய முடியாது என்று யார் சொன்னது மனமிருந்தால் இடமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஆண்,பெண் இருவரும் திருமணம் வேண்டாம் என்று இருந்தால் ஒன்று இந்த சமுதாயம் நினைக்கும் அவர்கள் ஏதோ குறைபாடு(மலடுத்தன்மை,ஆண்மையி

ன்மை) கொண்டவர்கள் என்று இரண்டாவது ஓரின சேர்க்கையாளரோ என்று நினைப்பார்கள்.மூன்றாவது எயிட்ஸ் நோயாளீக‌ளும் அநாதை பிள்ளைகளும் கூடுமே வழிய குறையாது காரணம் ஆண்கள் பெண் சுகத்திற்காக விபச்சாரிகளையும் முறையற்ற தொடர்புக‌ளையும் ஏற்படுத்துவார்.அது என்னும் பாதிப்பையே ஏற்படுத்தும்.நடிகர் கமல் ஒரு தடவை பேட்டியில் சொன்னார் சென்னையில் இருக்கும் அநாதை குழந்தைகளீல் எத்தனை குழந்தை தனது குழந்தை என்று தெரியாது என்று சொன்னார்.திருமணம் வேண்டாம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் பேசாமல் கரும்புலியில் சேர்ந்து விடுங்கள்.திருமணம் முடித்தால் நாட்டுக்கு சேவை செய்ய முடியாது என்று யார் சொன்னது மனமிருந்தால் இடமுண்டு.

திருமணம் வேணாம் என்றவர்கள் எல்லாம்.. ஆண்மைக் குறைபாடு.. பெண்மைக் குறைபாடு.. கேய்.. லெஸ்பியன் என்றால்.. உலகில் எத்தனையோ பேர் திருமணமாகாமல் வாழ்ந்து பெரும் சாதனைகளைச் சாதித்திருக்கிறார்களே.. அவர்கள் எல்லாம் அப்படிப்பட்டவர்களா...??! :wub::o

எதுக்கும் ஒரு மருத்துவ சான்றிதழ் எடுத்து வைக்கிறது நல்லம் என்றீங்க. சமூகத்துக்கு காட்ட..! அல்லது..

உந்தப் பிரச்சனைகள் வராமல் இருக்க.. விலைக்கு முட்டை வாங்கி... வாடகை செலுத்தி.. பெத்துக்கிறது.. சமூகத்தின் பேச்சை செவிமடுப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்..!

பாலியல் என்பது மனதளவில் எழும்.. ஆனால் கட்டுப்படுத்தக் கூடிய உணர்வுகளில் ஒன்று. அப்படிச் செய்திட்டால்.. விபச்சாரியும் தேவையில்லை.... எயிட்ஸும் வராது..!

உண்மையான பிரமச்சாரியம் காத்து வாழ்ந்த மனிதர்கள் பலர். அதுவும் பிரமச்சாரியம் என்பதை ஒரு நெறியாகவே மனிதர்களிடத்தில் பார்க்கப்படுவதும் உண்டு. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ திருமணமாகி குறைந்தது ஒரு வருடத்திற்குள் தம்பதியினருக்கு குழந்தை இல்லாவிடின் இச் சமுதாயம் பெண்களைத் தான் குறை சொல்லும்.ஆண்களிலும் குறை இருப்பதை சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ திருமணமாகி குறைந்தது ஒரு வருடத்திற்குள் தம்பதியினருக்கு குழந்தை இல்லாவிடின் இச் சமுதாயம் பெண்களைத் தான் குறை சொல்லும்.ஆண்களிலும் குறை இருப்பதை சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை.

அது முன்னொரு காலத்தில் இருந்திருக்கலாம். இப்போ அப்படியல்ல. குறைகள் இனங்காணப்படவும்.. நிவர்த்தி செய்யவும் ஆண்களும் பெண்களும் பெருமளவில் முன் வருகிறார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குறைகள் இனம் காணப்பட்ட பின் இருவரும் சிகிச்சைக்கு வருவார்கள்.ஆனால் இனங் காட்டப்படுவதற்கு முன்னர் எல்லோரும் பெண்களையே விசாரிப்பார்கள்.மாத விலக்கு ஒழுங்காக வருகிறதா?... ஆனால் ஆண்களைப் பற்றி விசாரிக்க மாட்டார்கள்.அத் தம்பதியினருக்கு குழந்தை இல்லாவிடின் முதலில் பெண் தான் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.பெண் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தி குறை அவரிடம் இல்லை என்ற பிறகு தான் ஆண் பரிசோதனைக்கு செல்வார்.ஏன் ஆண் முதலில் பரிசோதனைக்கு செல்ல கூடாதா?

குறை உள்ள தம்பதியினர் நவீன சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொள்கிறார்கள்.ஆனால் பெண் இடம் குறை காணப்பட்டால் ஆணது உறவினர் குத்திக் காட்டுவார்.எல்லோரிடம் சொல்லுவர்.அதே குறை ஆண் இடம் காணப்பட்டால் எல்லோரும் அமுக்கி வாசிப்பார்கள்.அப் பெண் கூட குடும்ப நலன் கருதி ஒருவரிடம் சொல்லமாட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதைக்கு பிரச்சனையில்லை எதுக்கும் டவுட்டாத்தான் இருக்கு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் எல்லாம் ஒன்றுதானே. என்னில் வேறு தசை.. உங்களில் வேறு தசையா இருக்கிறது. இல்லையே. நாம் எமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்க.. தேடும் இவ்வகையான காரணங்கள் அவ்வளவு வலிதானவையாக இல்லை..!

உங்கள் குழந்தையிடம் உங்கள் பிறப்புரிமை தகவல் இருக்கனும் என்பது அவசியம் என்றால் அதற்கும் மேலே வழிமுறை சொல்லி இருக்கிறேனே. யாரோ ஒரு பெண்ணை திருமணம் என்று கட்டி.. முட்டையைப் பெறுவதிலும்.. பணத்தைக் கொடுத்து.. அதே முட்டையை ஆய்வுசாலை முட்டை வங்கியில் தெரிவுக்குரிய முறையில் தெரிவு செய்தும்.. (பெண்கள்..விந்து வங்கியில் இருந்து எடுக்கலாம்) உங்கள் மரபணுவை கலக்க வைக்க முடியும் தானே...! அப்புறம்.. எதற்கு... காதல்.. கலியாணம் என்ற போலி நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்க வேண்டும்...???! :rolleyes::D

நைனா நெடுக்கு..! கண்ணாலங்கட்டிக்கிறது கொயந்த பெத்துகிறதுக்குனு நென்ச்சியா? அய்யே.. இன்னா ஆளுபா நீயி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நைனா நெடுக்கு..! கண்ணாலங்கட்டிக்கிறது கொயந்த பெத்துகிறதுக்குனு நென்ச்சியா? அய்யே.. இன்னா ஆளுபா நீயி..! :rolleyes:

க்ம்! அப்பிடி போடு அடிவாள! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நைனா நெடுக்கு..! கண்ணாலங்கட்டிக்கிறது கொயந்த பெத்துகிறதுக்குனு நென்ச்சியா? அய்யே.. இன்னா ஆளுபா நீயி..! :rolleyes:

பின்னா.. என்னாத்துக்கு நைனா கட்டிக்கிறாங்க. கட்டிக்கிறவங்கள பாறு நைனா.. ஆண்டு ஒன்னு முடியறப்போ.. கொழந்தை குட்டி என்னு.. திரியுறாங்க... காய்ஞ்ச மாடு கப்பில விழுந்த கணக்கா. நீங்க என்னாடான்னா... பெரிய பில்டப் கொடுக்கிறீங்க.... போங்க.. டுபுக்கு..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டில பெண்களுக்கு தான் சட்டம் சார்பா இருக்கு , அதனால நெடுக் அண்ணா சொல்ற ஐடியா வும் ஒகேயாதான் இருக்கு , இல்லேன்னா , நாளைக்கு மனிசி டிவோர்சு கிவோர்சு எண்டு போனா , ஆண்கலட்ட இருக்கிற கோவணத்தையும் சேர்த்து ஜீவனாம்சம் என்கிற பேர்ல கோர்ட் பெண்களட்ட குடுத்திடும், அப்புறம் பிரிஞ்சுபோன பொண்டாட்டிக்கும் , பக்கத்தில இல்லாத பிள்ளைக்கும் சேர்த்து ஆண்கள் உழைச்சு ஜீவனாம்சம் கட்ட வேண்டியது தான். அப்புறம் ஆண்கள் பாடு முருகன விட ஒரு துண்டு குறைவா தான் இருக்கும். . ஊர்ல எண்டா ஓகே ரெண்டு போடு போட்டா அடங்கி இருப்பாங்க, வெளிநாட்டில கோபமா பேசினாலே அட்டேம் டு மேர்டர் ல கேச போட்டுடுவாங்க.

அதனால என்ட ஓட்டு நெடுக் அண்ணாக்கு தான் . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குறைகள் இனம் காணப்பட்ட பின் இருவரும் சிகிச்சைக்கு வருவார்கள்.ஆனால் இனங் காட்டப்படுவதற்கு முன்னர் எல்லோரும் பெண்களையே விசாரிப்பார்கள்.மாத விலக்கு ஒழுங்காக வருகிறதா?... ஆனால் ஆண்களைப் பற்றி விசாரிக்க மாட்டார்கள்.அத் தம்பதியினருக்கு குழந்தை இல்லாவிடின் முதலில் பெண் தான் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.பெண் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தி குறை அவரிடம் இல்லை என்ற பிறகு தான் ஆண் பரிசோதனைக்கு செல்வார்.ஏன் ஆண் முதலில் பரிசோதனைக்கு செல்ல கூடாதா?

குறை உள்ள தம்பதியினர் நவீன சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொள்கிறார்கள்.ஆனால் பெண் இடம் குறை காணப்பட்டால் ஆணது உறவினர் குத்திக் காட்டுவார்.எல்லோரிடம் சொல்லுவர்.அதே குறை ஆண் இடம் காணப்பட்டால் எல்லோரும் அமுக்கி வாசிப்பார்கள்.அப் பெண் கூட குடும்ப நலன் கருதி ஒருவரிடம் சொல்லமாட்டார்.

ரதி தாயே.. உங்கட இந்த வில்லங்கமான ஆண் - பெண் போட்டி விளையாட்டுக்கு நான் வரேல்ல. ஏன்னா.. நாங்க நியாயம் பேச வெளிக்கிட்டா.. நீங்க.. பெண்களை நாங்க தோற்கடிக்கிறதா நினைக்கிறதுமில்லா.. களத்தில் இருந்து துரத்தி அடிச்சது என்றும் புலம்ப வேண்டி வரும் என்பதால..!

கர்ப்பம் தரிக்கிறது என்றதில.. ஆண்களின் பங்கு சிறியது என்றாலும்.. முக்கியமானது. பெண்களின் பங்கு பெரியது. அதனால பெண்களிடம் கேள்வி எழுவது இயல்பானது. அதுமட்டுமன்றி.. பெண்களில் சோதனைகளை சாதாரண இயற்கை நிகழ்வுகளில் இருந்து கொண்டு ஆரம்பிக்கலாம். ஆனால் ஆண்களில் சிக்கல்களை.. ஆய்வுகூடத்துக்குக் கொண்டு போய்த்தான் முடிவு கட்டனும்..!

இதில யாரை.. முதல் செய்தால் என்ன.. குறை என்பதை இனங்காண்பதற்கு ஒத்துழைக்கிறதுதான் முக்கியம்..! நீங்க என்னடான்னா.. ஏன் ஆம்பிளையளுக்கு சோதனை முதலில செய்யக் கூடாது.. பொம்பிளையளுக்குச் செய்யனும் என்றீங்க..??! இதில என்ன நியாயம் இருக்குது.

இப்ப கூட குடும்பக் கட்டுப்பாட்டுக்கு.. மாத்திரை குடிக்கிறது.. பெண்கள் தான். ஆண்கள் இல்லையே. ஆனால்.. அதை பெண்கள் குறைவா நினைக்கிறதில்ல. ஏன்னா.. அவைக்கும் அதில பலன் கிடைக்கிறதாலப் போல..!

இப்பவும் பல குடும்பங்களில் பெண்களுக்குத்தான் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இருந்தும்.. பெண்கள் அதற்காக போர்க் கொடி தூக்குவதில்லை. காரணம்.. அவர்களுக்கு பிள்ளை பெறுற தொந்தரவு நீங்கிச்சே என்ற சந்தோசமாகக் கூட இருக்கலாம்..!

ஆனால் ஆண்கள்.. பாவங்கள். அதுக்குப் பிறகும்.. பெண்களை பாலியல் ரீதியில திருப்திப்படுத்தனும் என்ற கவலைக்கிடமான நிலையில்...! ஆண்களை ஏதோ.. ஊரில.. . கடாவை மறியாட்டுக்கு விடுற கணக்கா பாவிக்கிறாங்க..! இது தேவையா. இந்த அவமானம் அவசியமா. அதிலும்.. முட்டையை வாங்கினமா.. வாடகைக்கு எடுத்தமா.. பொத்திக்கிட்டமா.. போயிட்டிருந்தமா என்றிருக்கனும்..! :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில பெண்களுக்கு தான் சட்டம் சார்பா இருக்கு , அதனால நெடுக் அண்ணா சொல்ற ஐடியா வும் ஒகேயாதான் இருக்கு , இல்லேன்னா , நாளைக்கு மனிசி டிவோர்சு கிவோர்சு எண்டு போனா , ஆண்கலட்ட இருக்கிற கோவணத்தையும் சேர்த்து ஜீவனாம்சம் என்கிற பேர்ல கோர்ட் பெண்களட்ட குடுத்திடும், அப்புறம் பிரிஞ்சுபோன பொண்டாட்டிக்கும் , பக்கத்தில இல்லாத பிள்ளைக்கும் சேர்த்து ஆண்கள் உழைச்சு ஜீவனாம்சம் கட்ட வேண்டியது தான். அப்புறம் ஆண்கள் பாடு முருகன விட ஒரு துண்டு குறைவா தான் இருக்கும். . ஊர்ல எண்டா ஓகே ரெண்டு போடு போட்டா அடங்கி இருப்பாங்க, வெளிநாட்டில கோபமா பேசினாலே அட்டேம் டு மேர்டர் ல கேச போட்டுடுவாங்க.

அதனால என்ட ஓட்டு நெடுக் அண்ணாக்கு தான் . :rolleyes:

இது தொடர்பா இப்ப விழிப்புணர்வு ஏற்பட்டு வருகுது. அண்மையில.. பிரபல அமெரிக்க ஆங்கிலப் பாடகி மடோனா.. பல மில்லியன் டொலர்களை அவரை விட இள வயதான அவரின்.. மூன்றோ.. நாலாவதோ.. கணவருக்கு ஜிவனாம்சமாக வழங்கி இருந்தார். இப்போ குழந்தைகளை பார்க்கவும்.. பராமரிக்கவும் தந்தை மாருக்கு தீர்ப்பு தாறாங்க. இருந்தாலும் அது போதாது..! ஏனெனில் குழந்தைகளை அம்மாவிடம் தான் அதிக நேரம் விடப்படுகின்றன. அதனால் அம்மாமார்.. அப்பாமாருக்கு எதிரான கருத்துக்களை குழந்தைகளிடத்தில் விதைத்து.. அவற்றை அப்பாமாருக்கு எதிராக கோட்டில் நிறுத்தி விடுகிறார்கள்..! :lol::D

ஆனால் ஒரு விசயத்தில உண்மை உணரப்பட்டும்.. சட்டமும் பிரச்சாரமும் பெண்களுக்குச் சார்பாகவே இருக்கின்றன. குறிப்பாக வீட்டு வன்முறைகள். வீட்டு வன்முறைகளை தூண்டுபவர்களாக பெண்கள் அதிகம் இனங்காணப்பட்டுள்ள போதிலும்.. தண்டனைக்கு ஆளாபவர்களாக ஆண்களே இன்னும் விளங்குகின்றனர். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கச்சி ரதி :lol:

இப்பவும் அந்தக்கால மகளிர்பிரச்சனையிலை இருக்கிறா போலை கிடக்கு உலகம் உருண்டுபிரண்டு இப்ப எங்கையோ நிக்குது

சகோதரி ரதி ஊரிலை சிரிபி வசுவிலை மகளிர்மட்டும் பொது இடத்திலை இருக்கிற கக்குசுலிலை பெண்கள் மாத்திரம் எண்ட விசயங்களுக்கு இப்பவும் போராட்டம் நடத்துறாபோலை கிடக்கு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி ரதி :D

இப்பவும் அந்தக்கால மகளிர்பிரச்சனையிலை இருக்கிறா போலை கிடக்கு உலகம் உருண்டுபிரண்டு இப்ப எங்கையோ நிக்குது

சகோதரி ரதி ஊரிலை சிரிபி வசுவிலை மகளிர்மட்டும் பொது இடத்திலை இருக்கிற கக்குசுலிலை பெண்கள் மாத்திரம் எண்ட விசயங்களுக்கு இப்பவும் போராட்டம் நடத்துறாபோலை கிடக்கு :lol:

அதுதானே. இப்ப பெண்கள் எல்லாம்.. நெருக்கமான பஸ்ஸில.. உரசுப்பட்டுக்கொண்டு.. கட்டிப்பிடிச்சு... முத்தம் கொடுத்துக் கொண்டு.. கதகதப்பா பயணம் போறதை எல்லோ விரும்பினம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே. இப்ப பெண்கள் எல்லாம்.. நெருக்கமான பஸ்ஸில.. உரசுப்பட்டுக்கொண்டு.. கட்டிப்பிடிச்சு... முத்தம் கொடுத்துக் கொண்டு.. கதகதப்பா பயணம் போறதை எல்லோ விரும்பினம்..! :unsure:

சும்மாய் இருங்கோ நெடுக்கு சாமி? எதுக்கெடுத்தாலும் பகிடி விட்டுக்கொண்டு :o

எங்கடை பொம்புளையள் எப்பவும் ஆண்வாசனையில்லாமல் ஒண்டுமே செய்ய மாட்டினம் அதுக்குள்ளை ஆச்சு ஊச்சு எண்டால் பெண் உரிமை பெண் அடிமை எண்டு கத்த வெளிக்கிட்டுவிடுவினம் :)

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கே தனக்கென்டு ஒரு கணவன்-- மணைவி, தனக்கே தனக்கென சில பிள்ளைகள், தாங்களே உருவாக்கிக் கொள்ளும் சில பல இன்ப துன்பங்கள் இவையாவும் அற்புதமானவையும், அனுபவிக்க வேண்டியவையுமே! உடலும் உணர்வும் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் இவையாவும் இயல்பானதும், இயற்கையானதுமாகும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கே தனக்கென்டு ஒரு கணவன்-- மணைவி, தனக்கே தனக்கென சில பிள்ளைகள், தாங்களே உருவாக்கிக் கொள்ளும் சில பல இன்ப துன்பங்கள் இவையாவும் அற்புதமானவையும், அனுபவிக்க வேண்டியவையுமே! உடலும் உணர்வும் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் இவையாவும் இயல்பானதும், இயற்கையானதுமாகும்!!!

உடலும் உணர்வும் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும்.. இப்படிச் செய்யுறதில்லை.

உலகத்துக்கு வழிகாட்ட வந்த.. ஜேசு.. ஒரு பிரமச்சாரி.

இளைஞர்களுக்கு வழிகாட்டிய விவேகானந்தர் ஒரு பிரமச்சாரி.

உலகத்துக்கு பெளதீக தத்துவவியல் தந்த நியூட்டன் ஒரு பிரமச்சாரி.

அகிம்சையின் நாயகன் திலீபன் அண்ணா ஒரு பிரமச்சாரி.

இந்தியாவுக்கே தலைமை விஞ்ஞானியான அப்துள் கலாம் ஒரு பிரமச்சாரி.

இந்தியாவின் தலை சிறந்த பிரதமரான வாஜ்பேய்.. ஒரு பிரமச்சாரி.

எனக்கு இரசாயனவியல் படிப்பிச்ச பேராசிரியர்.. ஒரு பிரமச்சாரி..!

இப்படி.. அவையள் எல்லாம்.. உயிரும் உணர்வும் இருந்தும்.. பிரமச்சாரிகளா ஏன் வாழ்ந்தவை..??!

அதுமட்டுமில்லாம.. உயிரின இராச்சியத்தில்.. உடலும் உணர்வும் இருந்தும்.. பெண் என்ற நிலையே இல்லாத உயிரங்கிகளும் இருக்கின்றன..!

சிந்திக்கத் தெரிந்தவன்.. உடலுக்கும் உடலின் இச்சைக்கும் தீனிபோட.. நினைப்பதிலும்.. சிந்தனைக்கு தீனிபோடுவான் அதன் மூலம் வழமான எதிர்கால உலகை ஏற்படுத்தப் பாடும் படுவான் இல்லையா..!!!

எங்கட பழைய கால முனிவர்கள் அநேகர்.. பிரமச்சாரியம் காத்தே.. வாழ்ந்துள்ளனர். அவர்கள் இன்றும் பேசப்படுகின்றனர். கலியாணம் முடிச்சு.. பிள்ளை பெத்தவையைப் பற்றி எவராவது.. விசேடமா கதைக்கினமா...??! இல்லையே..! இச்சையின் வழி மூளை இயங்குவது.. விலங்கின் இயல்பு. மூளையின் வழி இச்சையை ஆள்வது மனித இயல்பு. அதனால் தான் முனிவர்கள் போற்றப்பட்டனர். உண்மையில் மனிதர்கள் பலர் தோற்றத்தில் மனித உருவம் பெற்றிருப்பினும்.. இயல்பில்.. விலங்கையே பிரதிபலிக்கின்றனர். குறிப்பாக இவ்வாறான செயற்பாடுகளின் போது..! :o:unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாய் இருங்கோ நெடுக்கு சாமி? எதுக்கெடுத்தாலும் பகிடி விட்டுக்கொண்டு :)

எங்கடை பொம்புளையள் எப்பவும் ஆண்வாசனையில்லாமல் ஒண்டுமே செய்ய மாட்டினம் அதுக்குள்ளை ஆச்சு ஊச்சு எண்டால் பெண் உரிமை பெண் அடிமை எண்டு கத்த வெளிக்கிட்டுவிடுவினம் :lol:

அது தானே.முன்பெல்லாம் பெண்கள் மேல தெரியாமல் முட்டுப்பட்டாலோ அல்லது சும்மா பார்த்தாலோ ஏதோ கிரிமனல் போல பார்ப்பார்கள்.இப்ப என்ன என்றால் பாக்காமல் போனாலோ அல்லது தொட்டு தொட்டுப்பேசாமல் இருந்தாலோ கேனையன் போல எல்லோ பார்கிறார்கள். <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.