Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொத்தாமான தாலிக்கொடி

Featured Replies

தாலி தமிழ் திருமணத்தில் அணிவிக்கப்படும் ஒரு முக்கிய ஆபரணம். இதிலும் தாலியை கோர்க்கும் கொடி முக்கியத்துவம் பெரும். கொடி என்று வரும் போது அதன் அளவு என்ன என்ற கேள்வி வருவது உண்டு. முன்னெரெல்லம் சாதாரணமாக 11 தொடக்கம்15இக்குல் செய்ய்வது உண்டு. ஆனால் புலத்தில் பலர் 30,40 ஏன் 70 பவுணையும் தாண்டி மொத்தமான் தாலி கொடிகளை செய்கிறர்கள். கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளக தாலிக்கொடிகளின் அளவு அதிகரிக்க காரணம் என்ன? நான் பார்ர்தவரை மொத்தமான தாலிகொடி போடும் போது எல்லோரும் பெண்களயே விமர்சனம் செய்வது உண்டு. அதைவிட பல சந்தர்பன்களில் ஏற்கனவே மெல்லியதாக இருந்த தாலிக்கொடியை மொத்தமாக செய்பவர்களும் உண்டு. நான் கடந்த சில வருடங்களக யோசிப்பது உண்டு ஏஞ் எல்லொறும் மொத்த்மாக கொடி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்று. முன்ன்ரெல்லாம் தாலிக்கொடி ஓரளவுக்கு மொத்தமாக செய்வது உண்டு, ஆனால் 1970ளின் பின்னர் உலகில் ஏற்பட்ட பொருளாதார் நெருக்கடி காரணமாக தங்க விலை உயர தாலி கொடிகளின் அளவும் குறைந்தது, ஆனால்1990Mஇல் தங்க விலை குறையவும் எம்மவர்களின் கொள்வனவு சக்தியும் சேர்ந்து அதிகரிக்க மீண்டும் தாலி கொடிகளின் அளவு அதிகரித்தது.ஆனால் இம்முறை 100 பவுணில் கொடி செய்தவர்களும் உண்டு. குறிப்பாக மொத்தமாக ஜேர்மனி, சுவிஸ் நாட்டவர்கள் அதிகம். கள உறுப்பினர்கள் தமக்குத் தெரிந்த காரணன்கள் இது சம்பந்தமாக தெரிந்த விடயங்களை பகிர்வீர்கள் என எதிர்பார்க்ரேன். நான் அறிந்த சில சம்பவங்கள் சில

1.மணமகன் லண்டனில் இருந்தாளும் அவரிடம் பெரிசாக பண வசதி இருக்கவில்லை, எனவே அவரது மச்சான் தான் அந்தச் செலவை ஏற்றார் ஆனால் மணமகனின் தாயாரோ 18 பவுணில் தாலிக்கொடி செய்ய வேண்டும் என்று கேட்டார், மச்சானோ மறுத்து விட்டு இறுதியில் 9 பவுணில் தான் தாலிகொடி செய்ய பணத்தை நான் தருகிரேன் ஆனால் மீதி 9 பவுணுக்கு நீங்கலே செலவு செய்யுங்கள் என்று கூறி விட்டார்.இறுதியில் மணமகனின் தாயாரும் அவ்வெண்ணத்தை விட்டுவிட்டார்.

2. இச்சந்தர்ப்பத்தில் திருமணமே தடைப்பட்ட்து. மணமகளின் பெற்றோர் 25 பவுணில் தாலிக்கொடி செய்ய வேன்டும் என்று நிர்பந்தித்தனர், ஆனால் மணமகன் வீடு மறுத்து விட்டனர், இறுதியில் தாலிக்கொடி பிரச்சனை வேறு பிரச்சனைகளக உருவெடுத்து, ஒரு சந்தர்பத்தில் சீதனம் வாங்காமல் தானே செய்கிரோம் என்று வக்குவாதம் முற்றி இறுதியில் இருவருமே திருமணம் செய்யவில்லை, இதில் முக்கியமான் விடயம் என்னவென்றால் அவர்கல் இருவர்ம் காதலித்து தான் திருமணம் செய்யவிருந்தனர்.

3.எனது நண்பி ஒருத்தி திருமணம் செய்ய்த போது அவரது கணவர் திருமணத்தின் பின் தாலியை எப்போதும் அணிய வேண்டும் என்று கூறினாறாம், இவரும் ஒத்துக்கொண்டு விட்டார். ஆனால் தாலி கட்டிய பொது தான் புரிந்தது தாலி கொடின் அளவு 50 பவுண் என்று, அதை அணிந்து கொண்டு எமது வீட்டிற்கு வந்த போது எனது அம்மா கேட்டார் "எப்படி ஆத்தை நீ உதை போட்டுக்கொண்டு திரியிராயி என்றுகேற்க அவர் மிகவும் கஷ்ட்டமாகத் தான் இருக்கிரது இன்னும் சில நாட்கள்க்கு பின் ஒரு மெல்லிய சங்கிலிக்கு மாத்தப் போரேன் என்று கூறினார். இது நடந்து 2004 இல் ஆனால் சில வாரங்களுக்கு முன் நான் அவருடன் பேசிய போது அவர் கூறினார் இன்னமும் தான் அதே 50 பவுண் கொடியயை தான் அணிவதாகக் கூறினார் ஏன்னென்றால் தான் கணவரிடம் எவ்வள்வோ கேட்டும் அவர் மறுத்து விட்டார் என்வே இதை நான் அவ்வாரே அணிகிறேன் என்றார்.எனவே அவர் கடந்த 4 1/2 வருடங்களக 400 கிராம் எடையுள்ள கொடியை இடைவிடாது அணிகிறார்.

4. இச்சம்பவம் கிட்டதட்ட 12 மாதங்களுக்கு முன் நான் வசிக்கும் வீதியில் வசித்த தமில் குடும்பத்தில் நடந்தது. மனைவிக்கு ஒருவருக்கு மொத்தமான தாலி கொடி போட வேண்டும் என்று ஆசை, ஆனால் அவரது கணவருக்கு அப்போது பொதுமான் பண வசதி இருக்கவில்லை. அவருக்கு திருமணம் நடந்தது 1988 இல் அதன் பின்னர் புலத்திற்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட 9 வருடங்காளாக பணம் சேர்த்து 2007ம் ஆண்டில் டிசெம்பர் மாதமளவில் 39 பவுணில் கொடி செய்தார். ஜனவரி மாதம் அவருடய 20வதாவது திருமண நிறைவின் போது அதை முதல் முறையாக அணிந்து கோயிலுக்கு பொக வேண்டும் என்று கூறிக்கொன்டிருந்தார், ஆனால் விதி அவரை விடவில்லை அவரது கணவர்

தாலி கொடியை நகை கடையில் இருந்து எடுத்துக்கொன்டு வந்து வீட்டில் வைத்து விட்டு இருந்தவர்ருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்ட்டு வைத்தியசலையில் அன்று மலைலே மரணமானர். அதாவது அவரது மனைவி தனது புது தாலி கொடியயை பார்க்க முன் கணவர் இற்ந்து விட்டார். இறுதியில் அவர் தான் ஆசையாய் செய்த 39 பவுண் தாலி கொடியை கணவரின் மரணச்சடங்கில் தான் போடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த மொத்த கொடியுடன் அவர் நின்று அலுததை பார்க்க மிகவும் கவலையாக இருந்து. மரணச் சடங்கின் இறுதியில் தாலி கொடியை கழட்டிஇ வைக்க வேன்டிய நேரம், அவரோ மறுத்து விட்டார் கிட்டத்தட்ட 10 நிமிடங்களக முயற்சித்தும் முடியவில்லை இருதியைல் 2 பெண்கல் அவரை இறுகப் பிடிக்க அவரது மைத்துனி கழட்டி பாலில் வைத்துவிட்டு அதை அவரது கணவ்ரின் மார்பில் வைத்தார்.

மொத்தமான் தாலிகொடிகளைபொருத்தவரையில் அதை மொத்தமாக செய்ய விரும்பியவர் ஆணாக இருந்தாலும் சரி பெண் என்றாலும் சரி எல்லொரும் பிலை கூறுவது பெண்களைத்தான்.மொத்தாமான தாலிக்கொடி செய்வதை பைத்தியக்காரத்தனம் என்று கூறுவது உண்டு. இன்னும் சிலர் பட்டிக்காடுத்தனம் என்றும் கூறுவது உண்டு அல்லது படிக்காத சனம் என்ரும் விமர்சிப்பர்.. ஆனால் மொத்தமான தாலிக்கொடியை இவ்வாரெல்லாம் விமர்சிப்பவர்கல் வருங்காலமெல்லம் தமக்குத் துணையாக இருப்பாவளிடம் லட்சக்கணக்கில் சீதனம் வாங்கும் போது மட்டும் அது பைத்தியக்காரத்தனமாகவோ படிக்காத சனமாகவோ தெரிவதில்லை. ஏன் எமக்குத் தெரிந்த பெண் சத்திர சிகிச்சை நிபுணர் கூட தனது கொடியை மீண்டும் புதிசாக 41 பவுணில் செய்தார்.

அப்படி பார்க்கும் போது அவர் படிக்காதவரா இல்லயே. மொத்தமான கொடிகலை விமர்சிப்பவர்கல் பெரும்பாலும் மெல்லிய கொடி பொடுபவர்கள் என்பதை விட மொத்தமாக கொடி பொட வசதி இல்லாதோராகத் தான் கணப்படுகிறனர். இது எட்டக்கனி புளிக்கும் என்ற கதை தான்.

நான் கள உருப்பினர்களிடம் தாங்கல் அறிந்த சம்பவஙகள் அல்லது ஆர்வதிர்குரிய சம்பவங்கள் மற்றும் விடயங்கலை பகிர்ந்து கொள்வீர்கள் என எதிர்பார்கிரேன். அத்தோடு மொத்தமான தாலிக்கொடிகள் சம்பந்தமான உங்களது கருதுக்கள் போன்றவற்ரை எதிர்பார்கிரேன்.

தயவு செய்து இவ்விவாததுடன் சம்பந்தமில்லாத கருதுக்காளை ஆரம்பிக்கவேண்டாம் என் கேட்டுக்கொள்கிரேன்.

  • Replies 155
  • Views 52.5k
  • Created
  • Last Reply

எனக்கும் தாலி செய்ய வேண்டிய தருணம் வந்தபோது இருப்பதிலேயே மிக குறைந்த தெரிவான 9 பவுணில் செய்து போட்டேன். தாலிக் கொடி பல விசயங்களுக்கு எந்தளவுக்கு 'இடைஞ்சல்' ஆக இருக்கும் என்று அன்று இரவே

எனக்கு புரிய கூடியதாக இருந்தது. அன்று கழட்டி எறி என்று சொன்னது தான்... இன்றுவரை, இந்த 4 வருடத்தில்.. அதனை பின்பு பார்த்தாக நினைவு இல்லை..

(தாலி கட்டாமல் living together முறையில் வாழ்வோமா என்று கேட்டு பலரிடம் அடி வாங்காத நிலமை வந்த விடயங்கள் எல்லாம் பின் ஒரு நாளில் எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்)

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் ஒரு பொது நிகழ்ச்சியில் , ஒரு பெண்ணை தற்செயலாக பார்த்தபோது அவர் அணிந்திருந்த தாலிக்கொடி நடு விரல் அளவு மொத்தம் இருந்தது . நிச்சயம் அதன் நிறை மூன்று கிலோ ஆவது இருக்கும் .

அவர் அதனை நெடுகவும் அணிந்திருந்தாலோ என்னவோ , அவவின் கழுத்தின் பின் பகுதி அவ்வளவு நிறையையும் தாங்கி , வண்டில் மாடுகளுக்கு கழுத்தில் காய்த்திருப்பது போல் கறுத்து காய்த்திருந்தது .

இதனை விட கொடுமை அவரின் கணவர் 500 கிராம் ( 1/2 கிலோ , அதாவது ஒரு இறாத்தல் ) தங்க பிஸ்கட்டை கழுத்தில் பென்ரனாக கட்டி தொங்க விட்டிருக்கிறாராம் .

அப்போது தான் யோசித்தேன் ..... அது தொங்க எத்தனை கிலோ தங்க சங்கிலி வேண்டும் என்று .

என்ன செய்வது இவர்கள் ஒரு வித மன நோயாளிகளாகவோ .........

அல்லது அதனை பெருமையாகவோ நினைக்கிறார்களோ தெரியாது .

உண்மையில் இவர்களின் செய்கைகளை பார்த்து , மற்றவர்கள் சிரிப்பாய் சிரிக்கின்றார்கள் என்பதனை இவர்கள் அறிய மாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் 3,4 தாலிக்கொடிகளும் வைத்திருக்கினமாம். ஒன்று கலியாண வீட்டுக்கு, மற்றது கடைக்கு, மற்றது சொந்தகாரர் வீட்டுக்கு என்று. கேள்விபட்டது தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் 3,4 தாலிக்கொடிகளும் வைத்திருக்கினமாம். ஒன்று கலியாண வீட்டுக்கு, மற்றது கடைக்கு, மற்றது சொந்தகாரர் வீட்டுக்கு என்று. கேள்விபட்டது தான். :)

3 , 4 தாலிக்கொடிகளா .......... அப்போ அதனை கட்டியவர் ஒருவரா ? :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்னும் தாலி கட்டவில்லை கட்டேக்க பார்ப்பம் ஒருகிலோவில செய்வம் என்டு யோசிச்சனான் இதப்பார்த்தாப்பிறகு இரண்டுகிலோவில செய்வமென்டு தீர்மானிச்சிருக்கிறன் :D

3 , 4 தாலிக்கொடிகளா .......... அப்போ அதனை கட்டியவர் ஒருவரா ? :):)

அதில நுனாவிலானும் ஒருத்தர் :)

  • கருத்துக்கள உறவுகள்

3 , 4 தாலிக்கொடிகளா .......... அப்போ அதனை கட்டியவர் ஒருவரா ? :):)

கட்டியவர் ஒருவர் தான். உள்ளாடை போல மாற்றி மாற்றி போடத்தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி செய்வதால் தான் .....திருடர்கள கவரப்படுகிறார்கள்.... வைப்பு பெட்டகங்களில் (.bank locker..) தூங்குகிறது .இப்போதெலாம் நம் இளம்பெண்களில் இந்த மோகம் அவ்வளவு இல்லை , மாமியாருக்கு இருக்க லாம் . கலர் கலராக் அல்லவா நகை போடுகிறார்கள். . கொடி மட்டும் போடுவதில் அர்த்தம் இல்லை . தாலி (கணவன் ) நெஞ்சில் இருக்கவேண்டும் போலியான உலகில் எத்தனை வேஷங்கள். .எதுவும் அளவாக இருந்தால் போதும். உண்மையான மண உறவுக்கு மஞ்சள் கயிறே போதும் .வசதி வந்த பின் தான் அது தங்க பவுணில் ஆனது. உண்மையான திரு மணம்(ஆண் பெண்ணுக்கான புனித உறவு )இருவர் மனங்களில் தான் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி செய்வதால் தான் .....திருடர்கள கவரப்படுகிறார்கள்.... வைப்பு பெட்டகங்களில் (.bank locker..) தூங்குகிறது .இப்போதெலாம் நம் இளம்பெண்களில் இந்த மோகம் அவ்வளவு இல்லை , மாமியாருக்கு இருக்க லாம் . கலர் கலராக் அல்லவா நகை போடுகிறார்கள். . கொடி மட்டும் போடுவதில் அர்த்தம் இல்லை . தாலி (கணவன் ) நெஞ்சில் இருக்கவேண்டும் போலியான உலகில் எத்தனை வேஷங்கள். .எதுவும் அளவாக இருந்தால் போதும். உண்மையான மண உறவுக்கு மஞ்சள் கயிறே போதும் .வசதி வந்த பின் தான் அது தங்க பவுணில் ஆனது. உண்மையான திரு மணம்(ஆண் பெண்ணுக்கான புனித உறவு )இருவர் மனங்களில் தான் உள்ளது .

ஆகாவாசிக்கவே இவ்வளவு சந்தோசமாய் கிடக்கு

தாலியைவிட தாலிக் கொடியில்தான்

பெண்களுக்கு விருப்பு அதிகம்

தாலி சின்னனா பெரிதா என்பதில்

பெண்களுக்கு கவலையில்லை

கவலையெல்லாம் கொடியில்தான்

கொடி மொத்த்த்த்த்தமாக நிறை கூகூகூகூகூகூகூகூடிகதாக இருக்கவேண்டுமென்பதுதான்

பெண்களின் மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய ஆசை

கொடி பெரிதாக இருப்பதிலும் சில நன்மைகள் உண்டு

கொடி பெரிதாக இருந்ததால் திரடர்களிடம் இருந்து தப்பியது

உண்மைசம்பவம் ஒன்று

பல வருடங்களுக்குமுன் மொன்றியலில் ஒரு தமிழ் குடும்பத்தவர்களது வீ;டடில் களவு நடைபெற்றது:விலை மதிப்புள்ள பொருட்களையும் மற்றும்நகைகளையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார்கள்

கொடிமட்டும் மூலையில் அனாதரவாகக்கிடந்தது(விலை மதிப்பில்லை போலும்)

வெள்ளையளோ கறுவல்களோ வந்து கொள்ளையடித்திருக்கிறார்கள் கொடிபற்றி தெரிந்திருக்கவில்லை இந்தளவு மொத்தத்தில் பவுண் இருக்காது எனநினைத்து

தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டார்கள். இப்பொழுதென்றால் விடமாட்டார்கள்

ஏனெனில் நம்மைப்பற்றி எல்லாவிடயமும் அவர்கழுக்கு தெரியும்

ஆக மொத்தத்தில் மொத்தமாக கொடி போடுவதில் நன்மைக்கும் இடமுண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தங்கத்தில் தாலி எல்லாத்தையும் விட மஞ்சள் கயிறு ரொம்ப விசேசம்.

இந்த பொண்ணுங்களுக்கு தங்கம் எண்டாலே பிரியம் அதிகமாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் எப்போதும் விலை கூடிக் கொண்டே போகும் ஒரு முதலீடு தான். ஆனால் தாலிக் கொடியில் உள்ள தங்கம் முதலீடு அல்ல. அது பெட்டிக்குள் பூட்டி வைக்க அல்லது கொள்ளையரிடம் பறிகொடுக்க நாங்கள் வைத்திருக்கும் சொத்து, யாருக்கும் ஒரு பயனும் இல்லை. எனது சகோதரியின் 15 பவுண் தாலிக்கொடி போன வருஷம் கொள்ளை போய் விட்டது. 11 பவுணில் செய்ய இருந்த தாலிக் கொடியை, சகோதரியே கேட்டு 15 பவுணில் செய்து கொண்டார். பிறகும் திருந்தினதா மனுசி என்றால் இல்லை. அவர்களின் காணியில் ஒரு பகுதியை விற்று மீளவும் ஒரு தாலியும் கொடியும் செய்து கொண்டார்-எனது திருமண வீட்டுக்கு அணிய வேண்டுமென்பதற்காக. அதிர்ந்து போனேன் நான், வீடு கட்டக் கூடிய பயிர் செய்யக் கூடிய காணியை விற்றுச் செய்த தாலி அடுத்த கொள்ளையரின் வரவை எதிர் பார்த்து பெட்டிக்குள் காத்திருக்கிறது இப்போது.

எனக்கும் காதல் திருமணம், திருமணத்தின் போது கையில் காசும் இல்லை, வேலையும் இல்லை... தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மஞ்சள்கயிற்றில் கட்டினேன். பின்னர் மனைவி தன்னிடம் இருந்த சங்கிலியில் கோர்த்து அணிந்து கொண்டார். அதைக் கூட சில சந்தர்ப்பங்களில் பாதகாப்பு கருதி அணிவதில்லை. இப்போது நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். கல்யாண வீடுகளுக்கு போகும் போது மட்டும் கொஞ்சம் சங்கடமாக உணருவார். அப்போதெல்லாம் நான் அவருக்கு கூறும் பதில், நாம் கஸ்டப்படும் போது அவர்கள் யாரும் ஏன் என்ன என்று கேட்கப் போவதில்லை. எனவே நாம் அவர்களுக்காக வாழாமல் எங்களுக்காக வாழுவோம் என்று!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காலத்தில் தாலியை எவ்வளவு மொத்தமாக செய்து போட முடியுமோ அவ்வளவு மொத்தமாக செய்வது ஆண்களுக்கு நல்லது காரணம்.

1) இந்த காலத்தில் பெண்கள் தலை குனித்து வெட்கப்படுவதை பார்க்கமுடியாது ஆகவே நீங்கள் தாலியை பாரமாக செய்தால் கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும் (ஆனாலும் வெட்க்கப்படமாட்டார்கள் நீங்கள் அவர்கள் வெட்கப்படுவதாக நினைத்து கொள்ளுங்கள்)

2) பல பெண்களுக்கு இப்ப கலியாணம் கட்டினவுடனேயே தங்களுக்கு கலியாணம் ஆகிட்டுது என்றது மறந்து போகுது ஆகவே கழுத்தில ஏதாவது பாரமாக தொங்கிட்டு இருந்தால் ஏன் தொங்குது என்றாவது கொஞ்சம் ஜோசிப்பினம்.

3) வீட்டில் மனிசியை கட்டி வைக்கவேண்டும் என்றால் கழுத்தில வேற கயிறு போற தேவையில்லை அந்த தாலியிலேயே நீங்கள் வேலைக்கு போகும் போது கட்டி வைத்து விட்டு போகலாம்.

4) கழுத்தில அதுவே பெரிய இட பரப்பை பிடித்திருப்பதால் அடிக்கடி நகைகள் வங்க தேவையில்லை வாங்கிய நகைகளின் டிசைன் மாற்றவும் தேவையில்லை.

5) உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஊஞ்சல் கட்ட தேவையில்லை தாலியிலேயே தொங்கி விளையாட சொல்லலாம் (மோசமான பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல).

தீமைகள்

1) மிருகவதை தடை சட்டத்தின் கீழ் உங்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது.

2) உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

3) இரவு நேரங்களில் அதாவது வெளிச்சம் இல்லாத நேரங்களில் மனைவியின் கழுத்தில் பாம்பு என்று நீங்கள் பயப்படவும் சந்தர்ப்பம் உள்ளது.

4) கள்வர்கள் களவாட சந்தர்ப்பம் உண்டு (தாலியையும் அதை போட்டிருப்பவரையும்)

இப்பிடி கணக்கா வருகுது ஆனால் எழுத நேரமில்லை. :unsure:

  • தொடங்கியவர்

தாலி கட்டாமல் விடுவதால் மட்டும் என்ன பயன் வரப்போகிறது ???? எல்லா மதத்திலும் தான் திருமணதின் போது ஏதாவது மணமகளுக்கு அணிவிக்கப்படும் அப்படியானல் ஏன் எல்லோறும் தாலியை மட்டும் நக்கல்?????.

Edited by Dash

  • தொடங்கியவர்

மொத்தமான தாலிகொடிகளை அதிகம் விரும்புவது யார் ? ஆண்களா ? பெண்களா?? அதை விட மொத்தமான தாலிகொடிகளை போடத் தோன்டும் காரணி என்ன??? இவ் நோக்கில் சில கருத்துக்களை இடலாமே ?????

இது அவரவர் விருப்பம் DASH இதற்கு நாங்கள் என்னத்தை தான் கூறமுடியும்? ஆனால் கணவன் விரும்பியதால் மனைவி அதனை வேண்டா வெறுப்போடு அணிந்திருப்பது தான் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

மொத்தமான தாலி கொடிகளை செய்ய தோன்றும் காரணிகள்

பணவசதி

பொறாமை

இதனை செய்ய தூண்டுபவர்கள் என பார்த்தால்

பெண்களே அதிகம் பங்கெடுக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இந்த உலகில் ஒரு தொகைப்பணத்தை கொண்டுபோய் தாலிக்கொடி எனும் பெயரில் வீசுவது தான் கொஞ்சம் கூடாத செயல் போல் எனக்கு தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வரை ஆண்கள் தான் தங்கள் மனைவிமார் தாலி அணீய வேண்டும் என விரும்புகிறார்கள்.(இல்லாவிட்

டால் யாரவது வேறுஆண்கள் வளைத்து போடுவார்கள் என்ற நினைப்பு)ஆனால் பெண்கள் தான் மற்ற பெண்களுடான போட்டியில் மொத்தமாக செய்கிறார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் தனது முதலிரவு அன்றே தனது தாலியை கழட்டி உடுப்பு போடும் (கங்கரில்) தொங்கவிட்டார்.தாலியின் மரியாதை அந்த அளவிற்கு இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வரை ஆண்கள் தான் தங்கள் மனைவிமார் தாலி அணீய வேண்டும் என விரும்புகிறார்கள்.(இல்லாவிட்

டால் யாரவது வேறுஆண்கள் வளைத்து போடுவார்கள் என்ற நினைப்பு)ஆனால் பெண்கள் தான் மற்ற பெண்களுடான போட்டியில் மொத்தமாக செய்கிறார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் தனது முதலிரவு அன்றே தனது தாலியை கழட்டி உடுப்பு போடும் (கங்கரில்) தொங்கவிட்டார்.தாலியின் மரியாதை அந்த அளவிற்கு இருக்குது.

ஆண்களுக்கு குடைதல் கொடுப்பவர்கள் முதலில் பெண்கள் தான் அவள் எந்தம் பெரிய தாலிகொடி போட்டிருக்காள் இதை பாருங்கள் நூல் போல் உள்ளது என்று குடையிறது பெண்கள் தான் பின்பு ஆண்கள் மீது எப்படி குற்றம் சொல்லலாம்[....வளைத்து போடுதல் என்பது தவறு] :unsure::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் காதல் திருமணம், திருமணத்தின் போது கையில் காசும் இல்லை, வேலையும் இல்லை... தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மஞ்சள்கயிற்றில் கட்டினேன். பின்னர் மனைவி தன்னிடம் இருந்த சங்கிலியில் கோர்த்து அணிந்து கொண்டார். அதைக் கூட சில சந்தர்ப்பங்களில் பாதகாப்பு கருதி அணிவதில்லை. இப்போது நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். கல்யாண வீடுகளுக்கு போகும் போது மட்டும் கொஞ்சம் சங்கடமாக உணருவார். அப்போதெல்லாம் நான் அவருக்கு கூறும் பதில், நாம் கஸ்டப்படும் போது அவர்கள் யாரும் ஏன் என்ன என்று கேட்கப் போவதில்லை. எனவே நாம் அவர்களுக்காக வாழாமல் எங்களுக்காக வாழுவோம் என்று!

வாழ்த்துக்கள் சாணக்கியன் இப்படியே இருக்க என்னடைய வாழ்த்துக்கள் நானும் இப்படித்தான் ஆனால் இன்னும் திருமணம்முடிக்கவில்லை. நாங்கள் எப்போதுமே இப்படித்தான் அவன் என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் என்று நினைத்துத்தான் இப்படி இருக்கிறறோம். உங்களுடைய செயலை நான் பாராட்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தங்களுக்கிடையிலான போட்டியில் தான் மொத்தமாக தாலி அணீவார்கள் அதை நான் ஒத்து கொள்கிறேன் ஆனால் ஆண்கள் தங்கள் மனைவிமாரை விழாக்களுக்கோ அல்லது வேறு எங்காவது தன்னொடு அழைத்து செல்லும் போது கட்டாயம் தாலி அணீய சொல்வார்கள் அங்கு இருப்பவர்களுக்கு காட்டுவதற்காக குறீப்பாக ஆண்களுக்கு காட்டுவதற்காக இது என் மனைவி ஒருதரும் பார்க்க கூடாது என்ற காரணத்திற்காக அணீய சொல்வார்கள் அல்லாவிடின் வேறு ஆண்கள் பார்க்க கூடும்(சைட் அடிக்க கூடும்).புலத்தில் பெண்கள் தாலி அணீயாவிட்டால் அப் பெண் திருமணம் ஆனவரா இல்லையா என்பது தெரியாது.திருமணம் ஆன பெண்கள் தான் இங்கு இளமையாகவும் கவர்ச்சிகரமாகவும் உள்ளனர். :unsure:

தங்கம் எப்போதும் விலை கூடிக் கொண்டே போகும் ஒரு முதலீடு தான். ஆனால் தாலிக் கொடியில் உள்ள தங்கம் முதலீடு அல்ல. அது பெட்டிக்குள் பூட்டி வைக்க அல்லது கொள்ளையரிடம் பறிகொடுக்க நாங்கள் வைத்திருக்கும் சொத்து, யாருக்கும் ஒரு பயனும் இல்லை. எனது சகோதரியின் 15 பவுண் தாலிக்கொடி போன வருஷம் கொள்ளை போய் விட்டது. 11 பவுணில் செய்ய இருந்த தாலிக் கொடியை, சகோதரியே கேட்டு 15 பவுணில் செய்து கொண்டார். பிறகும் திருந்தினதா மனுசி என்றால் இல்லை. அவர்களின் காணியில் ஒரு பகுதியை விற்று மீளவும் ஒரு தாலியும் கொடியும் செய்து கொண்டார்-எனது திருமண வீட்டுக்கு அணிய வேண்டுமென்பதற்காக. அதிர்ந்து போனேன் நான், வீடு கட்டக் கூடிய பயிர் செய்யக் கூடிய காணியை விற்றுச் செய்த தாலி அடுத்த கொள்ளையரின் வரவை எதிர் பார்த்து பெட்டிக்குள் காத்திருக்கிறது இப்போது.

ஏன் ஜஸ்டின் சகோதரிக்கு உதவி பண்ணக் கூடாது தாலிக்கொடி வாங்க வெளீநாட்டில் தானே இருக்கீங்க. :unsure:

ஆண்கள் தங்கள் மனைவிமாரை விழாக்களுக்கோ அல்லது வேறு எங்காவது தன்னொடு அழைத்து செல்லும் போது கட்டாயம் தாலி அணீய சொல்வார்கள் அங்கு ஆண்களுக்கு காட்டுவதற்காக இது என் மனைவி ஒருதரும் பார்க்க கூடாது என்ற காரணத்திற்காக அணீய சொல்வார்கள் அல்லாவிடின் வேறு ஆண்கள் பார்க்க கூடும்.

இன்றைய நாட்களில் அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் இப்படி எதிர்பார்ப்பது தப்பு கண்டியளோ. பிகர் கொஞ்சம் நல்லா இருந்தால் திருமணமாகியிருந்தாலும், ஏன் குழந்தைகள் இருந்தாலும் இவர்கள் தம் கை வரிசையை காட்ட பின் நிற்கமாட்டார்கள். இப்படியானவர்களுக்கு தாலி ஒன்றும் பொருட்டல்ல.

இன்றைய நாட்களில் அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் இப்படி எதிர்பார்ப்பது தப்பு கண்டியளோ. பிகர் கொஞ்சம் நல்லா இருந்தால் திருமணமாகியிருந்தாலும், ஏன் குழந்தைகள் இருந்தாலும் இவர்கள் தம் கை வரிசையை காட்ட பின் நிற்கமாட்டார்கள். இப்படியானவர்களுக்கு தாலி ஒன்றும் பொருட்டல்ல.

இப்படி எல்லாம் ஒரே அடியாக போட்டுடைக்க கூடாது கண்டியளோ....

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் ஒரே அடியாக போட்டுடைக்க கூடாது கண்டியளோ....

என்னத்தை ..... ? :)

  • கருத்துக்கள உறவுகள்
:):):) தாலி போட்டு கொண்டு போகும் போதே உங்களை போன்று பலர் சைட் அடிக்கினம் போடாமல் போனால்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.