Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடம் 12 விமானங்கள்!!

Featured Replies

wrapper.jpg

சார்லஸ் ஆண்டனி... வயது 23...

இந்த இரண்டு விவரங்களைத் தவிர பிரபா கரனின் மூத்த மகனைப் பற்றிய சமீபத்திய வேறெந்தத் தகவலும் மீடியாக்களுக்கோ சிங்கள ராணுவத்துக்கோ இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனால், தற்போது புலிகளின் விமானப் படைத் தலைவராக இருக்கும் சார்லஸ் ஆண்டனியின் திறமைகளைப் பற்றிய செய்திகள் மட்டும் மெள்ள மெள்ளக் கசிந்து சிங்கள ராணுவத் தினரின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு இருக்கிறது.

குறிப்பாக, கடந்த 21-ம் தேதி இரவு சார்லஸ் ஆண்டனி மிகப் பெரிய விமானத் தாக்குதலை கொழும்பில் நடத்தப் போகிறார் என்று கிளம்பிய செய்தி, சிங்கள அரசையே கிடுகிடுக்க வைத்தது.விமானப் படையில் சகல சக்தி களையும் சார்லஸ் ஆண்டனியின் படையணியினர் பெற்றிருக்கிறார்கள் என்பதை உறுதியாக உணர்ந்து

வைத்திருப்பதால்தான், சிங்கள ராணுவம் அடுத்தடுத்து புலிகளின் விமான ஓடுதளங்களைக் கைப்பற்றத் துடிக்கிறது. ஆனாலும், குறைவான நீளமுள்ள ஓடுதளங்களே புலிகளின் விமானங்களுக்குப் போதும் என்றும், அத்தகைய ஓடுதளங்களைக் குறைவான நேரத்திலேயே புலிகளால் உருவாக்கிவிட முடியும் என்றும் சிங்கள அதிகாரிகளுக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ராணுவத்தின் தாக்குதல் நெருக்கடியைக் கொடுத்தால், அதற்கு பதிலடியாக புலிகளின் விமானப்படை எந்த நேரத்திலும் கொழும்பில் உள்ள அரசுக் கட்டடங்களை பஸ்பமாக்கக் கூடும் என்பது சிங்கள ராணுவத்தின் கணிப்பு. அதனால் புலிகளின் விமானப் படையைப் பூண்டோடு அழிக்கவேண்டும் அல்லது சார்லஸ் ஆண்டனிக்கு முடிவு கட்டவேண்டும் என்பதுதான் சிங்கள ராணுவத்தின் பிரதான குறி.

21-ம் தேதி இரவு நடந்தது என்ன?

அன்றிரவு எட்டு மணி வாக்கில் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியிலிருந்து கடல் பகுதியை நோக்கி ஒரு மர்ம விமானம் பறந்திருக்கிறது. அப்போது அந்த விமானத்தை நோக்கித் தாக்குதல் நடக்க, அது சட்டென எஸ்கேப் ஆகிவிட்டதாம். அடுத்த கால் மணி நேரத்துக்குள் மறுபடி அந்த விமானம் பறந்து மறைந்திருக்கிறது!

''சாளை நகரை நோக்கி அந்த விமானம் பறந்த போது எங்களின் ரேடார் கண்டுபிடித்தது. உடனே, அதிநவீன விமானங்கள் மூலமாகத் தாக்குதல் நடத்தினோம். அதில் தப்பி விமானம் மறுபடியும் முல்லைத்தீவு பகுதிக்கே சென்றுவிட்டது. புலி களின் முயற்சியை அதிநவீன ரேடார்கள் மூலமாக தடுத்துவிட்டோம்!'' என்று சிங்களராணுவ அதிகாரிகள் செய்தி பரப்பிக்கொண்டு இருக் கிறார்கள்.

ஆனால், கொழும்பு தமிழ்ப் பிரதிநிதிகள் சிலரோ..., ''அன்றைக்குப் பறந்தது புலிகளின் விமானமில்லை. அந்த மர்ம விமானத்தின்மீதுதாக்குதல் நடத்தி யவர்களே புலிகள்தான். புலி களிடம் விமானத் தளங்களே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த ராணுவ அதிகாரிகள், திடீரென புலிகளின் விமானம் பறந்ததாகக் கதை கட்டுகிறார்கள். நிஜமாகவே அந்த மர்ம விமானம் முல்லைத்தீவை ஆராய வந்த வெளிநாட்டு உளவு விமானம். அது இந்திய உளவு விமானமாக இருக்கும் என்று கணித்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் புலிகள்.

விமானங்களைச் சுட்டு வீழ்த்துகிற அதிநவீன ஆயுதங்கள் புலிகளால் இதுநாள் வரை பயன்படுத்தப்படவில்லை. சார்லஸ் ஆண்டனியின் ஏற்பாட்டின்படிஇரண்டு வருடங்களுக்கு முன்பே புலிகளி டம்அத்தகைய ஆயுதங்கள் வந்து சேர்ந்து விட்டன. அந்த உளவு விமானத்தைப் புலிகள் சரியாகச் சுட்டு வீழ்த்தியிருந்தால், இந்தியாவின் குட்டு இந்நேரம் உடைந்துபோயிருக்கும் என்பது புலிகளின் கணிப்பு. இருந்தாலும், தக்க சமயத்தில் புலிகள் அந்த விமானத்தை விரட்டி அடித்தது, ராணுவ அதிகாரிகளை மிடறு விழுங்க வைத்திருக்கிறது. இதற்கிடையில், புலிகளின் விமானப் படையை இனியும் பயன்படுத்தாமல் வைத்திருக்கக்கூடாது என்பதில் சார்லஸ் உறுதியாக இருக்கிறாராம். கொழும்பைத் தாக்குவதன் மூலம் மொத்த இலங்கையையும் ஸ்தம்பிக்க வைத்து, ராணுவத்தைப் பின்வாங்க வைக்கலாம் என்பதுதான் சார்லஸின் திட்டமாம். புலிகளின் பதிலடிகளால் போர் இன்னும் தீவிரமடையும்!'' என்கிறார்கள்.

ஜிவுஜிவுக்கும் சார்லஸ்!

சிங்கள ராணுவத்தின் தாக்குதல்கள் உச்சமடைந்திருப்பதால், 'இனியும் பொறுப் பதற்கில்லை' என்கிற முடிவில் இருக்கிறதாம் புலிகளின் விமானப் படை. இதுகுறித்துச் சொல்லும் புலிகளின் தரப்பிலான சிலர், ''புலிகள் அமைப்பே குலைந்து போய் விட்டதாக சிங்கள ராணுவம் பொய்களைக் கட்ட விழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. போர் தீவிரமடைந்திருக்கும் இந்த நேரத்தில் தலைவரோடு தொடர்பு இல்லாமல் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் புலிகளின் தளபதிகள், இந்த வதந்திகளால் குழப்பமடைவதோடு மனத ளவிலும் சோர்ந்து போகக்கூடும். இதையெல்லாம் நன்றாக கிரகித்து வைத்தி ருக்கும் சார்லஸ், விமானத் தாக்குதல்கள் மூலம் சிங்களப் படைகளைத் திணறடிக்க வியூகங்கள் வகுத்துக்கொண்டு இருக்கிறார். விமானத்தின் அலுமினியப் பரப்புக்கு மேலே ரசாயனப் பூச்சுகளைப் பயன்படுத்தியும், தாழ்வான பரப்பில் பறந்தும் சிங்கள அரசின் ரேடாரில் சிக்காமல் பெரிய அளவில் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்ப முடியும் என உறுதியாக நம்புகிறார். இப்போது புலிகளின் கையில் எட்டு போர் விமானங்களும், இக்கட்டான நேரங்களில் பயன்படுத்தக் கூடிய நான்கு குட்டி விமானங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். எளிதில் பிரித்து மாட்டும்படியான 'ஸ்லின் -143' ரகத்தைச் சேர்ந்த 'செக்' நாட்டு விமானத்தைக் கூடுதல் பாதுகாப்புகளுடன் வடிவமைத்து வைத்திருக்கும் சார்லஸ் ஆண்டனி, அதன் மூலம் சிங்கள ராணுவ முகாம்களையே துவம்சம் செய்ய முடியும் என்று நம்புகிறார். ஆனால், பிரபாகரனிடமிருந்து விமானத் தாக்குதலை நடத்துவதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தால் அடுத்த கணமே அட்டாக்தான்!'' என்கிறார்கள்.

தகவல் தொடர்புத் தடை!

சார்லஸ் ஆண்டனி விமானத் தாக்குதலை எந்நேரமும் தொடுக்கலாம் என்கிற பரபரப்பு ஒரு பக்கம் பரவிக்கிடந்தாலும், தாக்குதல் நடத்துவதில் பிரபாகரனுக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை என்கிற தகவலும் றெக்கை கட்டிக்கொண்டிருக்கிறது. ''விமானத் தாக்குதலை நடத்துவது குறித்து பிரபாகரன் இன்றளவும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அது மட்டுமல்லாமல், இதர படையணிகளையும் தற்காப்புத் தாக்குதல் நடத்த மட்டுமே அவர் உத்தரவிட்டிருக்கிறார். பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பகைமையை சம்பாதித்துக்கொள்ளக் கூடாது என்பது பிரபாகரனின் எண்ணம். தக்க தீர்வை ஏற்படுத்துவார்கள் என்று அவர் நம்புகின்ற நாடுகள் கைவிரிக்கிற நிலை ஏற்பட்டால்தான், பிரபாகரன் பதில் தாக்குதலில் இறங்குவார். 35 ராணுவ வீரர்களை ஒரே சமயத்தில் அழித்த டாங்கிப் படையைக்கூட இனி பயன்படுத்தக் கூடாது என்று சாதுர்யமாக முடிவெடுத்திருக்கும் பிரபாகரன், விமானப் படைத் தாக்குதலுக்கு ஒப்புதல் தெரிவிக்கவே மாட்டார். ஆனால், இது குறித்து எத்தகைய கருத்துகளையும் மகன் சார்லஸ் ஆண்டனியிடம் பிரபாகரனால் சொல்ல முடியாத சூழ்நிலை இப்போது நிலவுகிறது. வயர்லெஸ், செல்போன் என எல்லா தகவல் பரிமாற்றங்களையும் ஒட்டுக்கேட்கும் வேலையில் சிங்கள அதிகாரிகள் தீவிரமாகி இருக்கிறார்கள். அதனால், முக்கியமான தளபதிகளுடன்கூட பிரபாகரன் பேசுவதைத் தவிர்த்துவருகிறார். போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்பதன் மூலம் பிரபாகரன் இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியும் என்று ராணுவத்தினர் உறுதியாக நம்புகின்றனர். அதனால் இள ரத்தத் துடிப்பில் இருக்கும் மகன் சார்லஸை எப்படி அமைதிப்படுத்துவது என்று புரியாமல் தவிக்கிறார். ஆனால், புலிகள் அமைப்பில் இருக்கும் இதர தளபதிகளோ, 'பத்திரமாகத் திரும்புகிற நம்பிக்கை இருந்தால் விமானத் தாக்குதலை உடனடியாக நடத்தலாம். நிலப்பரப்பு குறைந்துகொண்டே வரும் வேளையில் விமானத் தாக்குதலை சார்லஸ் தலைமையில் நடத்துவதுதான் சாலச் சிறந்த வழி' என்று நினைக்கிறார்கள். சிங்கள ராணுவத்தினர் நவீன ரேடார் மூலம் பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிகிற முயற்சியில் தீவிரமாகியிருப்பதும் சார்லஸை கடுங்கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தந்தைக்குத் தோள் கொடுக்கும் மகனாக மாற, தாக்குதலைத் தொடங்குவதுதான் சரி என நினைக்கிறார். முக்கியமானவர்களுக்கான தகவல் தொடர்புத் தடையாகி இருப்பதால், யாருடைய எண்ணம் ஈடேறப் போகிறது என்று புரியவில்லை!'' என்கிறார்கள் புலிகளுக்கு நெருக்கமாக இருக்கும் இலங்கைப் பத்திரிகையாளர்கள்.

புதிர் தீர்க்கும் பொட்டு அம்மான்!

புலிகள் அமைப்பில் இப்போது முதன்மையாகப் பணியாற்றிக்கொண்டு இருப்பது உளவுத் துறையினர்தானாம். இதுபற்றிச் சொல்லும் விவரப் புள்ளிகள், ''உளவுத் துறைத் தலைவராக இருக்கும் பொட்டு அம்மான் மட்டும்தான் இப்போது பிரபாகரனுக்கு நெருக்கத்தில் இருக்கிறார். உளவுப் படையினர் மூலமாகத் திரட்டப்படும் தகவல்களில் சார்லஸின் 'மூவ்' குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. 'தலைவரின் உத்தரவு இல்லாமல் எதையும் செய்யக்கூடாது' என்று அவரை சமாதானப்படுத்தியிருக்கும் பொட்டு அம்மான், 'இப்போதைக்கு பெரிய அளவிலான நெருக்கடிகள் இல்லை. வெளியுலக உதவிகள் கிடைக்கப்போகிற நேரத்தில் பெரிய அளவிலான தாக்குதல்கள் வேண்டாம்!' என்று சொல்லியிருக்கிறாராம். இதர படையணிகளின் தளபதிகளுக்கும் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறதாம். அதே நேரம், 'சிங்கள ராணுவத்தினர், அடுத்த கட்டத் தலைவராக சார்லஸைத்தான் நினைக்கிறார்கள். அதனால் கருணாவின் உதவியுடன் (சார்லஸ் எப்படி இருப்பார் என்பதை சிங்களத் தரப்பில் அறிந்த ஒரே நபர்) சார்லஸின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து நவீன ஏவுகணைத் தாக்குதல் நடத்துகிற திட்டமும் இருக்கிறது' என்கிற உளவுத் தகவலையும் பிரபாகரனின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார் பொட்டு அம்மான். இந்தத் தகவல்க¬ளையெல்லாம் வைத்தே போர் குறித்த முடிவை பிரபாகரன் எடுக்கக்கூடும்!'' என்கிறார்கள்.

ஒருவேளை புலிகளுக்குக் கூடுதல் நெருக்கடிகள் ஏற்பட்டால், சிங்கள ராணுவத்துக்குப் பேயடி கொடுக்க நினைக்கும் சார்லஸ§க்கு பிரபாகரன் அனுமதி வழங்குவார் என்பது இவர்கள் அடித்துச் சொல்லும் வார்த்தை! சிங்கள ராணுவம் மட்டுமல்லாமல்... புலிகளின் கட்டமைப்பைக் கண்டு வியக்கும் உலக நாடுகளும் இப்போது உற்று கவனித்துக்கொண்டு இருப்பது, சார்லஸ் என்கிற 23 வயது இளம்புலியைத்தான்!

அட்டையில்: செஞ்சோலைக் குழந்தையுடன் பிரபாகரன்... (பழைய படம்)

அன்னதானம்... ஆதங்கம்!

கடந்த இதழ் ஜூ.வி-யில் பிரபாகரனின் நலனுக்காக உலகம் முழுவதும் நடக்கவிருக்கும் அன்னதானம் குறித்து எழுதி இருந்தோம். அதேபோல் கடந்த 22-ம் தேதி உலகம் முழுக்க உள்ள ஈழ ஆர்வலர்களால் அன்னதானம் நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள ஆதரவற்றோர் பள்ளிகளில் நடத்தப்பட்ட அன்னதானத்தில் பங்கேற்ற இயக்குநர் 'சந்தனக்காடு' கௌதமனிடம் பேசினோம்.

''ஈழ விவகாரத்தில் தமிழர்களுக்கு சாதகமான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அன்னதானம் நடக்கிறது. அநாதைக் குழந்தைகள் கைகூப்பி ஈழ விடிவுக்காக பிரார்த்தித்த காட்சியைப் பார்த்தபோது என் கண்கள் குளமாகி விட்டன. ஈழத் தமிழர் பிரச்னையில் அநாதைக் குழந்தைகளுக்கு இருக்கும் அக்கறைகூட காங்கிரஸ்காரர்களுக்கு இல்லாமல் போனதுதான் சோகம். முதல்வர் கருணாநிதியின் ஆட்சியிலேயே ஈழ விடிவுக்கு இங்கிருந்து ஆதரவு பிறக்காவிட்டால், நாம் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதில் கொஞ்சமும் அர்த்தமே இல்லாமல் போய் விடும்!'' என ஆதங்கத்தோடு சொன்ன கௌதமனிடம்,

''பிரபாகரனுக்கு இருந்த கண்டம் நீங்குவதற்குத்தானே அன்னதானம் வழங்கப்படுகிறது?'' என்றதும், ''நல்லது நடக்கணும்... அவ்வளவுதான்!'' என்றார்.

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

ஏனய்யா ..... சும்மா ..... சும்மா ...... உசுப்பேத்திறியள் ?

ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளை ........

நீங்க என்னத்தையோ அறுக்க நிக்குறீங்க .

  • கருத்துக்கள உறவுகள்

wrapper.jpg

மந்திரத்தால் மாங்காய் விழாது! மக்களே விழிப்பாயிருங்கள்! களமுனைபற்றிய கற்பனைகளை விடுத்து வீதியில் இறங்கி எம் தேசத்தைக் காப்போம்! தாய்மண் பாசத்தோடு பங்களிப்பச் செய்வோம் !

எல்லோரும் உசுப்பேத்தி..... பிறகு வெறுப்பேத்தி.......... திட்டமிட்ட பரபரப்புக்களை விட எமது உழைப்பே உண்மையானது.

ஏனய்யா ..... சும்மா ..... சும்மா ...... உசுப்பேத்திறியள் ?

ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளை ........

நீங்க என்னத்தையோ அறுக்க நிக்குறீங்க .

எல்லாம் நம்ம தலைவிதி

Edited by Jil

அதே நேரம், 'சிங்கள ராணுவத்தினர், அடுத்த கட்டத் தலைவராக சார்லஸைத்தான் நினைக்கிறார்கள்.

:) போராட்டம் என்ன தமிழக வாரிசு அரசியலா?

திறமை உள்ள யார் வேண்டுமானாலும் தளபதியாகலாம். அது தலைவரின் மகனாக இருந்தால் தான் ஒத்து கொள்ள மாட்டியளோ ?

அதே நேரம், 'சிங்கள ராணுவத்தினர், அடுத்த கட்டத் தலைவராக சார்லஸைத்தான் நினைக்கிறார்கள்.

:) போராட்டம் என்ன தமிழக வாரிசு அரசியலா?

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ellam naalai unkalukku puriyum.

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்புக்கு போட்டியாக ஜூனீயர் விகடனும்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை நம்பி ரொம்ப பேர் பிழைப்பு நடத்திராங்க....நடத்தட்டும் நடத்தட்டும்.......

ஈழத்தவர் செய்யாத ஒன்றையா ஜீனியர் செய்கிறது?

ஈழத்தவர் செய்யாத ஒன்றையா ஜீனியர் செய்கிறது?

அவர்களை சொல்லியும் குற்றம் இல்லை. எல்லாம் ஒருவகை ஆதங்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படி இருப்பினும் நம்பிக்கையுட்டும் வகையில் எழுதியதற்கு நனறி

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரும் மகன் சார்ள்ஸ் அன்ரனியும் வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தால் எப்படி இப்படியான செய்திகள் இருபக்கமிருந்தும் கிடைக்கிறது.

ஜீனியர் விகடன் மைபோட்டு ஜோசியம் பார்ப்பதில் சளைத்தவர்களில்லை.

சிங்கள ராணுவத்தின் தாக்குதல்கள் உச்சமடைந்திருப்பதால் இனியும் பொறுப் பதற்கில்லை' என்கிற முடிவில் இருக்கிறதாம் புலிகளின் விமானப் படை. இதுகுறித்துச் சொல்லும் புலிகளின் தரப்பிலான சிலர் ''புலிகள் அமைப்பே குலைந்து போய் விட்டதாக சிங்கள ராணுவம் பொய்களைக் கட்ட விழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. போர் தீவிரமடைந்திருக்கும் இந்த நேரத்தில் தலைவரோடு தொடர்பு இல்லாமல் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் புலிகளின் தளபதிகள் இந்த வதந்திகளால் குழப்பமடைவதோடு மனத ளவிலும் சோர்ந்து போகக்கூடும். இதையெல்லாம் நன்றாக கிரகித்து வைத்தி ருக்கும் சார்லஸ் விமானத் தாக்குதல்கள் மூலம் சிங்களப் படைகளைத் திணறடிக்க வியூகங்கள் வகுத்துக்கொண்டு இருக்கிறார். விமானத்தின் அலுமினியப் பரப்புக்கு மேலே ரசாயனப் பூச்சுகளைப் பயன்படுத்தியும் தாழ்வான பரப்பில் பறந்தும் சிங்கள அரசின் ரேடாரில் சிக்காமல் பெரிய அளவில் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்ப முடியும் என உறுதியாக நம்புகிறார். இப்போது புலிகளின் கையில் எட்டு போர் விமானங்களும் இக்கட்டான நேரங்களில் பயன்படுத்தக் கூடிய நான்கு குட்டி விமானங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். எளிதில் பிரித்து மாட்டும்படியான 'ஸ்லின் -143' ரகத்தைச் சேர்ந்த 'செக்' நாட்டு விமானத்தைக் கூடுதல் பாதுகாப்புகளுடன் வடிவமைத்து வைத்திருக்கும் சார்லஸ் ஆண்டனி அதன் மூலம் சிங்கள ராணுவ முகாம்களையே துவம்சம் செய்ய முடியும் என்று நம்புகிறார். ஆனால் பிரபாகரனிடமிருந்து விமானத் தாக்குதலை நடத்துவதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தால் அடுத்த கணமே அட்டாக்தான்!'' என்கிறார்கள்.

இந்த வேலையை செய்வது சிங்களவன் மட்டுமல்ல இந்தியாவும் கூடத் தான்

  • கருத்துக்கள உறவுகள்

திறமை உள்ள யார் வேண்டுமானாலும் தளபதியாகலாம். அது தலைவரின் மகனாக இருந்தால் தான் ஒத்து கொள்ள மாட்டியளோ ?

ஈழத்தமிழர்களின் தேசியப்போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலோடு ஒப்பிட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் மகன் விமான சம்மந்தமான தொழில் நுட்பத்திலும்,போரியலிலும் சிறந்த திறமை கொண்டவர் அதற்காக நிர்வாக திறமை இருக்கும் என்று கூற முடியாது.நிர்வாக திறமை என்பது தனிய போரியலை மட்டும் அடிப்படை ஆக கொண்டது இல்லை.

தமிழக மக்களுக்கு இவ்வாறான ஒரு கட்டுரை இப்போது அவசியம்தான். ஏன், சில தமிழீழ மக்களுக்குமே அவசியம்தான்.

தலைவரின் மகன் விமான சம்மந்தமான தொழில் நுட்பத்திலும்,போரியலிலும் சிறந்த திறமை கொண்டவர் அதற்காக நிர்வாக திறமை இருக்கும் என்று கூற முடியாது.நிர்வாக திறமை என்பது தனிய போரியலை மட்டும் அடிப்படை ஆக கொண்டது இல்லை.

இதைப் பற்றிக் கருத்துக் கூறவோ அல்லது முடிவெடுக்கவோ அங்குள்ள தளபதிகளுக்குத்தான் தகுதி இருக்கே தவிர, சொகுசாகவிருந்து அரட்டை அடிக்கும் எங்களுக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களுக்கு இவ்வாறான ஒரு கட்டுரை இப்போது அவசியம்தான். ஏன், சில தமிழீழ மக்களுக்குமே அவசியம்தான்.

இதைப் பற்றிக் கருத்துக் கூறவோ அல்லது முடிவெடுக்கவோ அங்குள்ள தளபதிகளுக்குத்தான் தகுதி இருக்கே தவிர, சொகுசாகவிருந்து அரட்டை அடிக்கும் எங்களுக்கல்ல.

உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான செய்திகளின் விளைவு எவ்வாறு இருக்குமென்றால் தமிழக மக்களிடத்தில் எங்கள் போராட்டத்தை ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக பார்ப்பதை தவிர்த்து பிரபாகரனும் அவர் சார்ந்த கும்பலின் போராட்டமாக ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். இந்த எழுத்தின் பாணி தமிழ் சினிமாவின் gang fight ரேஞ்சில் இருப்பதாக நான் உணர்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் இப்படியான எழுத்துக்கள் நல்லதற்கல்ல.

இப்படியான செய்திகளின் விளைவு எவ்வாறு இருக்குமென்றால் தமிழக மக்களிடத்தில் எங்கள் போராட்டத்தை ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக பார்ப்பதை தவிர்த்து பிரபாகரனும் அவர் சார்ந்த கும்பலின் போராட்டமாக ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். இந்த எழுத்தின் பாணி தமிழ் சினிமாவின் gang fight ரேஞ்சில் இருப்பதாக நான் உணர்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் இப்படியான எழுத்துக்கள் நல்லதற்கல்ல.

உண்மை!

இப்படியான எழுத்துக்கள் ஜூனியர் விகடனின் விற்பனையை அதிகரிக்க வேண்டுமானால் உதவலாம்.

ஆனால் தமிழர் விடுதலை போராட்டத்திற்கு ஒரு விதத்திலும் உதவப்போவதில்ல்லை.

இன்னும் சொல்லப்போனால் இது போன்ற எழுத்துக்கள் இனிப்பு தடவிய விசத்தை போன்றவை!!!

Edited by vettri-vel

இதுகள் எங்கட கருத்துக் கள நிர்வாகத்தார் கண்களில படுகிறது இல்லையோ சாமியொவ் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.