Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு நகரை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அனைக்கட்டு உடைந்தது உண்மை ஆனால் அதை யார் உடைத்தது என்பது தான் கேள்வி

புலிகள் அதை உடைத்திருப்பார்கள் என்பது சந்தேகமே அதனால் விவசாயம் பாதிக்கப்படும் மேலும் சர்வதேச போரியல் விதிகளுக்கு அமைய இயற்கையாக அமைந்தவைக்கு சேதம் விளைவிக்க கூடாது.

சர்வதேசத்தில் புலிகளுக்கு கெட்ட பெயரையும்,அவ கீர்த்தியையும் ஏற்படுத்தவே அரசு தானே உடைத்து விட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகள் உடைத்து இதனால் பல ரானுவம் இறந்தது உண்மையானல் புலிகள் உத்திய பூர்வமாக தகவல் வெளியிட்டு இருப்பார்கள்.

  • Replies 54
  • Views 15.2k
  • Created
  • Last Reply

சிங்களம் ஏற்படுத்தும் இன அழிப்பையும் அவலங்களையும் உலகத் தமிழினம் கண்டுகொள்ளாமல் இருக்க பரப்பப் பட்ட வதந்திகள் கணிசமானளவு வெற்றி பெற்றுள்ளது. புலிகளின் ஊடகங்களோ அல்லது அரச ஊடகங்களோ உலக செய்தி நிறுவனங்களோ தமிழ் தேசிய சார்பு ஊடகங்களோ எதுவும் சொல்ல முனையாத செய்திகளை அவரவர் விருப்பத்துக்கு காவிச் சென்று இன அழிப்பை வெளிப்படுத்தும் போராட்டங்களின் வீரியத்தை குறைக்க முயற்ச்சித்துள்ளனர்.

வதந்திகளின் மூலங்கள் என்னவென்று தெரியாது. ஆனால் இதை காவிச் செல்லும் வெற்றியை எதிர்பார்த்து துடிக்கும் எம்மவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். புலிகள் வெற்றிபெற்றாலும் அவர்களை மீள நிரந்தர தோல்வி சூழ்ந்து கொள்ளும். புலிகள் ஒரு பாரிய வெற்றிக்கு கொடுக்க கூடிய உயிரிளப்புக்களை மீள நிவர்த்தி செய்ய கூடிய ஆட்பலம் இல்லை. தமிழீழத்துக்கான போராட்டம் மிகக் கணிசமானளவு மக்களிடமே இன்று சுமத்தப்பட்டுள்ளது. இந்த மக்களிடம் இருந்தே போராட்டத்துக்குரிய ஆட்பலம் நிவர்த்தி செய்ய முடியும். இதே நேரம் சிங்களத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த மக்களிடமும் என்றுமில்லாதவாறு சிங்கள தேசியம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. என்னும் பல தோல்விகளுக்கு முகம் கொடுத்து மீளக் கூடிய பலம் சிங்களத்திடம் உள்ளது. போராட்ட வரலாற்றில் ஆட்பல பிரச்சனை என்பது இரு தரப்புக்கும் சிக்கலான ஒன்றாக இருந்தே வந்துள்ளது. முதற்கட்ட ஆனையிறவு மீட்பு முயற்சியின் ஆளணி இழப்பு பூநகரி வீழ்ச்சியானது, பூநகரி மீட்பு முயற்சி ஆளணி இழப்பு யாழ் வீழ்ச்சியானது. அதன் பிறகான ஜெயசிக்குறு தொடர்ந்து உள்ள வளங்களை திரட்டி பெறப்பட்ட வெற்றிகள். இந்த வெற்றியின் முடிவில் இருந்த மாபெரும் தோல்வி ஆறுவருட பேச்சுவர்த்தை காலத்தை கடந்து தற்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற

இராணுவம் முல்லைத்தீவை பிடித்தும் இருக்கலாம். அல்லது அவர்கள் தங்கள் இழப்புக்களை மறைப்பதற்காகவும் முல்லைத்தீவை பிடித்திருக்கலாம். முன்பும் பல இடங்கள் அடிக்கடி பிடிக்கப்பட்டன.

பல பொய்பிரசாரங்களுக்கு நேற்று யாழும் துணை போயிருக்கின்றது. நேற்று அவரவர் தங்கள் இஷ்டப்படி தகவல்களை இணைத்து மக்களை ஒரு குழப்பத்துக்குள் வைத்திருந்தனர். அந்த நேரத்தில் ஒரு மட்டுறுத்துனரரும் யாழில் இருந்தார். ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மொத்தத்தில் நேற்று துரோகிகள் தங்கள் காரியத்தை நன்றாக சாதித்துவிட்டனர்.

கதை கதையாம் காரணமாய்

காரணங்கள் மட்டும் பூரணமாம்

பூரணங்கள் தொங்குமாம் மலர்த்தோரணமாய்

மலர்த்தோரணம் கொண்டு வர திரு.வாரணமாம். :)

விழித்துநில் தமிழா!!!!

கல்மடு அணைக்கட்டு உடைக்கப்பட்டது உண்மை. அதன் பிறகு சண்டை நடந்ததும் உண்மை.

ஆனால் ஆயிரக் கணக்கில் படையினர் கொல்லப்பட்டதும், 600 சடலங்கள் கைப்பற்றப்பட்டதும், 5000 படையினர் உயிரோடு பிடிக்கப்பட்டதும், இரண்டு கிபீர் சுட்டு வீழ்த்தப்பட்டதும், யாழ் குடாவிலும், கிளிநொச்சி நகரிலும் சண்டைகள் நடந்ததும் பொய்.

இவைகள் எதிரியால் பரப்பப்பட்ட வதந்தியா என்பதுதான் இதில் உள்ள கேள்வி

அப்படியானால் இந்த வதந்திகள் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை எம்மைவிட நன்றாக புரிந்து கொள்ள கூடிய புலிகள்

இவற்றை மறுத்து உடனடியாக ஏன் எந்த அறிக்கையும் விடவில்லை என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறதே!!!

Edited by vettri-vel

அப்படியானால் இந்த வதந்திகள் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை எம்மைவிட நன்றாக புரிந்து கொள்ள கூடிய புலிகள்

இவற்றை மறுத்து உடனடியாக ஏன் எந்த அறிக்கையும் விடவில்லை என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறதே!!!

நிச்சயமாக வெற்றிவேல்.

இவ்வாறு புலம்பெயர் நாடுகளிலும் தமிழத்திலும் இந்தச் செய்திகள் வெளியாகியதையடுத்து மக்கள் இனிப்புப்பண்டங்களை வழங்கியும் பட்டாசுகள் கொழுத்தியும் தமது மகிழ்வை தொடர்ந்து மேற்கொண்ட போதும் புலிகள் தரப்பு அமைதியே காத்தது. பல செய்தியாளர்கள் புலிகளின் முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் செய்தியை மறுக்கவில்லை. ஆனால் விபரங்கள் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதேவேளை புலம்பெயர் நாடுகளில் உள்ள சில முக்கிய அல்லது நெருக்கமான ஊடகவியலாளர்களிற்கு படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டமை போன்ற தகவல்களையும் அவர்களே வழங்கிவிட்டு தமது அதிகாரபூர்வ அறிக்கை வரும்வரை செய்தியை வெளியிடவேண்டாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் செய்தியை வெளியே கசியவிட்டவர்களும் அவர்களே என்று புலத்தில் செய்தியை பரப்பியவர்கள் சொல்கிறார்கள்.

தொடக்கத்தில் வந்த செய்திகளை விட மேலதிகமாக கற்பனைகள் சேர்க்கப்பட்டு புலம்பெயர் நாடுகளில் செய்திகள் உலாவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த செய்தியை தொடக்கத்தில் வெறும் வதந்தி என்று நம்பி இங்கே யாழ். களத்தில் நான் எனது கற்பனையில் 3381 படையினர் பலி எண்டு எழுதியதையும் பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன. கல்மடுவில் தொடங்கிய மோதல், கிளிநொச்சியில் தேசியக் கொடியேற்றல் ஆனையிறவு மீட்பு, அரியாலையில் கடும்சமர், நல்லூர்வரை போராளிகள் சென்றுவிட்டனர், இரு கிபிர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதில் போய் இறுதியாக வலிகாமத்தின் அராலியில் கூட சண்டை நடைபெறுவதாக சொல்லப்பட்டது.

சோடிக்கப்பட்ட செய்திகள் யாழ். களத்திலிருந்தே பரவியிருந்தமை மறுக்கப்படமுடியாதது. எனவே கள உறவுகள் கள நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிடுவதே நல்லது.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

700 உடல்கள்இ 6 டாங்கிக் கதைகள் சொன்னது நீங்கள் தானே மின்னல்..

இப்போது தற்றிஸ் தமிழில் வந்துள்ள தொலைபேசித் தூண்டிப்பு, என்பது வலைஞனின் இந்தச் செய்தியைக் கொஞ்சம் வித்தியாசமாகப் புரிந்து கொண்டதன் விளைவாகக் கூட இருக்கலாம்..

ஊரில் தொலைத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கொழும்புத் தொடர்புகளினூடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைநகர்தான் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது முல்லைமாவட்டம் அல்ல..... சிலாவத்தையில் நின்ற இராணுவத்தினர் முல்லைநகருக்கு வர சுமார் 2கிலோ மீற்றர் இருக்கம் என்று நினைக்கிறன் இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை

முல்லை கைப்பற்ற பட்டெதெனில் இடையில் அகப்பட்ட நாலரை லட்சம் மக்களின் கதி என்ன ஆனது? மிகப் பெரும் மனித அவலம் சத்தமின்றி நடந்து கொண்டிருக்கின்றதா?

முல்லை நகரம் கைப்பற்றப் பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. முல்லை மாவட்டத்தின் எஞ்சிய பகுதிகளில் ( 300 சதுர கிலோ மீட்டர்) மக்கள் ஒதுங்கியிருப்பர். மிகப் பெரும் மனித அவலம் இனி நடை பெறலாம்.

இந்தச் செய்தி ஏன் இன்னும் புதினம் தமிழ்நெட் போன்ற தளங்களில் வரவில்லை?

இந்தச் செய்தி ஏன் இன்னும் புதினம் தமிழ்நெட் போன்ற தளங்களில் வரவில்லை?

வெற்றி செய்திக்காக காத்து இருக்கிறார்கள்

இந்தச் செய்தி ஏன் இன்னும் புதினம் தமிழ்நெட் போன்ற தளங்களில் வரவில்லை?

முல்லைத்தீவை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2009, 09:13 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முல்லைத்தீவு நகரை சிறிலங்கா படையினர் கைப்பற்றியுள்ளதாக அரச இலத்திரனியல் ஊடகங்களில் நேரடியாக தோன்றி அந்நாட்டு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 59 ஆவது படை அணி வெற்றிகரமாக நகரை கைப்பற்றியதாகவும் விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

13 ஆண்டுகளின் பின்னர் முல்லைத்தீவு நகரை படையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் மற்றுமொரு வரலாற்று ரீதியான வெற்றி எனவும் சரத்பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

http://www.puthinam.com/full.php?2b0OrOe0d...d43dTR2a031Qn3e

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு, ஏன் புதுக்குடியிருப்புக் கூட இராணுவ ரீதியில் முக்கியமில்லாமல் போகலாம்..

சண்டையில் அதிகளவு இராணுவம் இறந்து போனதாக மகிழ்ச்சிப்படுபவர்கள் வன்னியில் தினம் தினம் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது. நாங்களே மக்களின் துன்பங்களைக் கண்டுகொள்ளாமல் தமிழக உறவுகளும், சர்வதேச நாடுகளும் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கேட்பதனால்தான் அவர்கள் கூட அதிகமாக ஒன்றும் செய்யாமல் உதட்டளவில் முடித்துவிடுகின்றார்கள்.

தாயகத்தில் மக்கள் படும் துன்பங்களைக் குறைக்கமுடியாத குற்றவுணர்வாவது குறைந்தபட்சம் எங்களிடம் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியில் உண்மை எதுவும் இல்லையென்றால் மக்களுக்கு புலிகள் நிச்சயம் மறுப்புத் தெரிவித்து இருப்பர். ஏனெனில் இது மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப் பட்டது;'

செய்தியில் உண்மை எதுவும் இல்லையென்றால் மக்களுக்கு புலிகள் நிச்சயம் மறுப்புத் தெரிவித்து இருப்பர். ஏனெனில் இது மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப் பட்டது;'

செய்தியில் உண்மை எதுவும் இல்லையென்றால் மக்களுக்கு புலிகள் நிச்சயம் மறுப்புத் தெரிவித்து இருப்பர். ஏனெனில் இது மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப் பட்டது;'

செய்தியில் உண்மை எதுவும் இல்லையென்றால் மக்களுக்கு புலிகள் நிச்சயம் மறுப்புத் தெரிவித்து இருப்பர். ஏனெனில் இது மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப் பட்டது;'

2 முறை சொன்னாலும்?

  • கருத்துக்கள உறவுகள்

புரளிகளை கிளப்பிவிட்டு, இன்று ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி குற்றஞ்சுமத்துவதில் என்ன நியாயம்?

எது எப்படியிருப்பினும் பொறுப்புள்ள ஊடகங்களோ அல்லது பொறுப்பான தனிப்பட்ட நபர்களினாலோ இந்த புரளிகள் பற்றி பெரிதுபடுத்தப்படவில்லை.

உதாரனத்துக்கு யாழில்கூட அரட்டைமாதிரித்தான் சிலர் மாறி மாறி தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தார்களே தவிர பொறுப்புள்ளவர்கள் இதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

தமிழ்த்தேசியத்தில் பற்றுக்கொண்டவர்கள் தங்களால் மேற்கொண்டுவரும் அறநிலைப்போராட்டத்தில் தான் முக்கிய கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தனர்.

இதற்கு உதாரனமாக கனடாவில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் அன்னை அழைக்கின்றாள் என்ற உண்ணா நிலைப்போராட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.

ஆகவே நாம் எங்களது கடமையில் கண்ணும்கருத்துமாக இருப்போம் நடப்பவை நல்லதாகவே இருக்கும்.

ஆனால் ஒன்றுமட்டும் உறுதி, அதாவது எங்களது தேசிய இயக்கம் நல்ல நிதானமாக, சரியான, நெடுநோக்கம் கொண்ட வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. இதன் பிரதிபலிப்புக்களை விரைவில் எங்களால் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

சில ராஜதந்திர நகர்வுகளை இலகுவாக ஊகிக்கமுடியாது, ஆகவே நாங்கள் எங்களது நம்பிக்கையை இழக்காது, எங்களது செயல்பாடுகளை தொடர்வோம்.

இணைவோம் தமிழராய்!

Edited by Valvai Mainthan

4 இலட்சத்து 70 ஆயிரம் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அவசியம்

* முல்லைத்தீவு அரச அதிபர் இரு தரப்பினரிடமும் வேண்டுகோள்

http://www.thinakkural.com/news/2009/1/25/...s_page66534.htm

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத் தீவில் கொடியேற்றி படம் பிடிக்க மறந்து விட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ராணுவம் முல்லைத்தீவை கைப்பற்ற இல்லை.

வீரகேசரி நாளேடு 1/25/2009 9:07:25 PM - இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான எந்தவொரு அரசியல் தலைவர்களும் இலங்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  • தொடங்கியவர்

கிளிநொச்சி வெற்றிக்கு மனிதவெடிகுண்டு, முல்லைத்தீவு வெற்றிக்கு இணையவெடிகுண்டு!

புயல் மழைக்கு முன்னால் குடை எம்மாத்திரம்?

இராணுவ மேலாதிக்கம் ஒன்றே தமிழர் சமஉரிமை கோரிக்கைக்கு தீர்வென புகட்டப்பட்ட புலம்பெயர் தமிழினம், சொந்த சகோதரர் அழிவிலும் அரசியல் செய்யும் முற்படும் மனோபாவம்!

காலம்கடந்த ஞானோதயங்களும், அவசர செயற்பாடுகளும், நாள்தோறும் கொல்லப்படும் மக்களின் உடனடித் தேவைகள் அல்ல!

சொந்த உறவுகள் செத்து மடிந்து, காணாமல் போய், கடத்தப்பட்டு, கொலை செய்யபட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டாலும், அவர்களை வைத்து அரசியல் செய்து வயிறு நிரப்பவும் ஒரு கூட்டம் அலையுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவை பிடித்ததாக கூறிய அரசால், ஒரு புகைபடத்தை கூட வெளியிட முடியவில்லை. கல்மடுவில் நடை பெற்ற சம்பவத்தால் குழம்பிய சிங்களவரின் உளவுரனை காப்பாற்ற சொல்லப்பட்ட பொய்யாக இருக்கலாம்,

முல்லைத்தீவை பிடித்ததாக கூறிய அரசால், ஒரு புகைபடத்தை கூட வெளியிட முடியவில்லை. கல்மடுவில் நடை பெற்ற சம்பவத்தால் குழம்பிய சிங்களவரின் உளவுரனை காப்பாற்ற சொல்லப்பட்ட பொய்யாக இருக்கலாம்,

இருக்கலாம் இருக்கலாம்.

இருக்கலாம் இருக்கலாம்.

வேறு என்னத்தை சொல்ல

முல்லைத்தீவை பிடித்ததாக கூறிய அரசால், ஒரு புகைபடத்தை கூட வெளியிட முடியவில்லை. கல்மடுவில் நடை பெற்ற சம்பவத்தால் குழம்பிய சிங்களவரின் உளவுரனை காப்பாற்ற சொல்லப்பட்ட பொய்யாக இருக்கலாம்,

:wub::o:icon_mrgreen:

நான் நினைக்கிறன் வீடியோ கமராக்கள் போட்டோ எடுக்கிற சாதனங்கறள் எல்லாம் நீரோட போட்டுதோ ....... அரசாங்கம் நாளைக்கு வீடியோ வாங்க ரசியாவோட ஓப்பந்தம் செய்தாலும் சந்தேநக்கட இல்லi.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.