Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்கர் விருது.... ரஹ்மானுக்கு எதிராக சதி?

Featured Replies

"யாரோ ஒருத்தரு ஜெயிச்சாங்கல்ல, ஸ்வீட் எடுத்துக்கோங்க..." என்கிற மாதிரியான விஷயம் அல்ல இது. ஒவ்வொரு இந்தியனும் ஆனந்த கும்மி அடித்திருக்க வேண்டிய விஷயம்! அடித்தார்களா?

கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் 'கோல்டன் குளோப்' விருதை பெறுவதற்காக மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு அழுத்தமான 'உம்மா' கொடுத்தார் அறிவிப்பாளராக இருந்த அழகி! இந்த 'உம்மா'

இந்தியாவின் சந்தோஷம்!

இந்தியாவின் ஆனந்தம்!!

இந்தியாவின் பேருணர்ச்சி!!!

ஏனென்றால் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.

அந்த வினாடியிலிருந்தே உலக தமிழர்களுக்கு கொண்டாட்டம் தலைக்கேறியது. எல்லா முக்கிய இணைய தளங்களிலும் பிளாஷ் நியூஸ் இதுதான். டைம்ஸ் நவ், சிஎன்என் போன்ற சேனல்கள் முக்கிய அறிவிப்பாக இந்த செய்தியை வெளியிட்டன.

1944 ல் நிறுவப்பட்ட கோல்டன் குளோப் 66 ஆண்டுகளாக உலகில் உள்ள பல்வேறு சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது பற்றி சொல்பவர்கள் 'ஆஸ்கர் விருதுக்கு முந்தைய அடையாளம் இது' என்றே பெருமை பேசுகிறார்கள். இந்த முறை பிரிட்டிஷ் இயக்குனர் டேனி போயல் இயக்கிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் இசையமைத்தற்காக பெற்றிருக்கிறார் ரஹ்மான்.

ஆனால் இவ்வளவு சந்தோஷமும், திருமங்கலம் வேட்டு சத்தத்தில் அமுங்கிப் போனதுதான் துரதிருஷ்டம். தமிழ் சேனல்களில் பலவற்றை ஆக்ரமித்துக் கொண்டது இடைத்தேர்தல் முடிவும், அது குறித்த அலசல்களும்தான். அட, இதுவாவது போகட்டும். விருதை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்திறங்கிய ரஹ்மானை வரவேற்க தமிழ் திரையுலகத்தை சேர்ந்த வி.ஐ.பிகள் ஒருவருமே போகவில்லை. நல்லவேளையாக ரஹ்மான் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தார்கள். நாதஸ்வரம், மேளதாளத்தோடு விருது ராஜாவை அவரது வீடு வரைக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அன்று நள்ளிரவு வரை அந்த தெருவே திருவிழா கோலம் பூண்டிருந்தது. ஒரு தெருவோடு முடிந்து போகிற கொண்டாட்டமா இது?

இருந்தாலும் சற்று தாமதமாகதான் திரையுலகத்தை சேர்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ தலைவர் அத்வானி, அபிஷேக் பச்சன், ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்தினார்கள். கை நிறைய மலர் கொத்துகளோடு நேரில் வந்து வாழ்த்தினார்கள் நடிகர் பார்த்திபனும், இயக்குனர் கதிரும். தமிழக முதல்வர் கலைஞரும், அதிமுக தலைவி ஜெயலலிதாவும் தங்கள் வாழ்த்துகளை அறிக்கையாகவே வெளியிட்டார்கள்.

தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், ரஹ்மானுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது. (மற்ற இசையமைப்பாளர்கள் யாருக்கும் மனசே வரவில்லை போலிருக்கிறது)

இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும், தன்னை சூழ்ந்து கொண்ட ஆங்கில பத்திரிகையாளர்களிடம் ரஹ்மான் கேட்ட ஒரே கேள்வி "தமிழ் பத்திரிகைகளிலிருந்து யாரும் வரலையா?" என்பதுதான். என்றாலும், மறுநாள் தமிழ் பத்திரிகைகள் சார்பாக சில நிருபர்களை சந்தித்தார் இசைப்புயல்! ஏராளமான கேள்விகள். எல்லாவற்றுக்கும் தனது இசையைப் போலவே இனிக்க இனிக்க பதில் சொன்னார் தனக்கு பின்னால் நடக்கும் கசப்பான ஒரு விஷயத்தை ஜீரணித்துக் கொண்டே! மறந்தும் கூட இவர்களிடம் அதுபற்றி வாய் திறக்காத ரஹ்மான் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் வேதனையோடு குறிப்பிட்டாராம் இப்படி...

"நான் ஆஸ்கர் விருதை வென்று விடுவேனோ என்று அஞ்சுகிற சிலர் எனக்கு எதிராக புரளிகளை கிளப்பிவிடுகிறார்கள்"

தயங்கி தயங்கி இந்த வார்த்தையை அப்படியே நம் காதிலும் போட்டார் நண்பர். எந்த மாதிரியான புரளிகள் என்பது குறித்து மேலும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அதே நண்பர். "ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட கோல்டன் குளோப் விருது, ஒரிஜனல் இசைக்கான விருது. ஆனால், ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கு ரஹ்மான் ஒரிஜனலாக இசையமைத்தது ஐந்தே டிராக்குகள்தான் என்றும், மற்ற டிராக்குகள் எல்லாம் ஏற்கனவே அவரால் பயன்படுத்தப்பட்டவை" என்றும் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் எல்லா டிராக்குகளும் ஒரிஜனலாக இந்த படத்திற்கென்றே உருவாக்கப்பட்டது. அதுவும் லண்டனில் ரஹ்மானுக்கு சொந்தமான வீட்டிலிருக்கும் இசைக்கூடத்தில் இருபதே நாட்களில் உருவாக்கப்பட்டது" என்று கவலையோடு சொன்னார் அந்த நண்பர்.

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்கு இந்த படத்தை அனுப்பும்போது படத்திற்கு விருது கிடைத்தாலும், இசைக்கோ, இசையமைப்பாளருக்கோ விருது கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு கிளப்பி விடப்பட்ட வதந்திதானாம் இது. ஏனென்றால் ஒரிஜனல் இசை டிராக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே விருது கமிட்டியால் தேர்வு செய்யப்படுவார் ரஹ்மான். மீடியாக்களின் கருத்தும் இந்த கமிட்டியால் பரிசீலிக்கப்படும் என்பதால், இதை திட்டமிட்ட சதியாகவே கருதுகிறாராம் ரஹ்மான்!

கோல்டன் குளோப் விருதை ரஹ்மான் வென்றவுடன் முதலில் கொண்டாடிய இதே மும்பை மீடியாக்கள் மூலமாகதான் இப்படி ஒரு தகவலும் பரப்பப்படுகிறதாம். சிஎன்என் சேனலில் ராஜிவ் மசந்த் என்பவர் ரஹ்மானின் கோல்டன் குளோப் விருது குறித்து எழுப்பிய விமர்சனங்களில்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டு பகிரங்கமாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து பிற சேனல்களும் இதே கருத்தை வழி மொழிய துவங்கியிருக்கிறார்களாம்.

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், யாரோ திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்புகிறார்கள் என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறாராம் ரஹ்மான்.

ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக்... காதல் கோட்டை படத்திற்காக முதன் முதலாக தேசிய விருதை பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய இயக்குனர் அகத்தியனுக்கு தங்கத்தில் அடையாள அட்டை கொடுத்து கௌரவித்தது இயக்குனர்கள் சங்கம். அதுமட்டுமல்ல... பாலசந்தர், பாரதிராஜா போன்ற இரு ஜாம்பவான்களும் இருபுறமும் நின்று அவரை மலர் தூவி வரவேற்றார்கள்.

நாற்பத்தி மூன்றே வயதில், ரஹ்மான் சாதித்தது ஏராளம். இவரது ஆடியோ சிடிக்கள் இதுவரை 200 மில்லியனுக்கு மேல் விற்றிருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விபரம். அகத்தியனுக்கு வழங்கியதை போல ரஹ்மானுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டால், அதுவே ஆயிரம் ஆஸ்கருக்கு சமம்!

செய்வீர்களா தோழர்களே!

டெயில் பீஸ்-

ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் குடிசைப் பகுதி மக்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் தபேஸ்வர் விஸ்வகர்மா என்ற வழக்கறிஞர். நடிகர் அனில் கபூர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை ரஹ்மானுக்கு எதிரான சதியோடு இணைத்து பார்க்கிறார்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில்!

-ஆர்.எஸ்.அந்தணன்

நன்றி- தமிழக அரசியல் வார இதழ்

:wub::wub::)

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர்.. அமிதாப் விளாசல்!சனிக்கிழமை, ஜனவரி 24, 2009, 17:26 [iST]

மேலும் புதிய படங்கள் இந்திய சினிமாவுக்கும், கலைஞர்களுக்கும் ஆஸ்கர் கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் அதுவே நமது கலைஞர்களின் திறமைக்கான ஒட்டுமொத்த அங்கீகாரம் என எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவரான அமிதாப்பச்சன்.

'பச்சனாலியா' என்ற புத்தக வெளியிட்டு விழா நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமிதாப், பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களும் நிருபர்களாக மாறி அவரிடம் கேள்விகளை எழுப்பினர்.

பெரும்பாலான கேள்விகள், ஸ்லம்டாக் மில்லியனேர் குறித்து அவர் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பற்றியதாகவே இருந்தன.

இந்தப் படம் 10 ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகி இருப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில்:

இந்தியக் கலைஞர்கள் எதற்காக வெளிநாட்டு அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இந்தியாவின் தேசிய விருதுதான் இந்தியப் படங்களுக்கு மிக மிக உயர்ந்த விருது.

நமது கலாச்சாரத்தை, மக்களைப் பற்றி நாம்தான் படமெடுக்க முடியும். இந்தக் கலாச்சாரம் பிடித்துப் போய், இதன் சிறப்பை வியந்து ஒரு வெளிநாட்டு விருது தரப்பட்டால் மகிழ்ச்சிதான். அதை வேண்டாம் எனமறும் சொல்லத் தேவையில்லை.

ஆனால் இப்போது நடப்பது மிகுந்த வருத்தமாக உள்ளது. ஆஸ்கர் விருதுக்காக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் இந்தியர்கள். காரணம் ஆஸ்கர் விருதுதான் தனது திறமையின் உச்சபட்ச அங்கீகாரம் என்ற நம்மவர்களின் மாயை.

ஆஸ்கர் விருதுகள் அவர்கள் நாட்டுப் படங்களுக்கானவை. அவர்கள் வீட்டுக்குள் நுழைய நாம் எதற்காகப் போட்டி போடுகிறோம்... புரியவில்லை.

குறிப்பிட்ட எந்தப் படத்துக்காகவும் இதை நான் சொல்லவில்லை. இந்தியக் கலைஞர்களின் பொதுவான மனநிலையைக் குறிப்பிடவே இதைச் சொன்னேன்.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், இந்திய சினிமாதான் பல காலமாக உலகில் முன்னிலை வகிக்கிறது; சிறப்பிடம் பெற்றுள்ளது.

அதே நேரம், இந்த ஆஸ்கார் விருது பரிந்துரைகளில் ரஹ்மான், குல்ஸார் ஆகியோருக்கும், கேமராவுக்கு பின்னால் உழைக்கும் ரெசுல் பூக்குட்டி போன்றோருக்கும் ஆஸ்க பரிந்துரைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ஆஸ்கருக்கு ரெசுல் பரிந்துரைக்கப்பட்டது, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவுக்கு பெருமைகள் பல சேர்த்துள்ள ரஹ்மானுக்கு கண்டிப்பாக ஆஸ்கர் கிடைக்கும். அந்த விஷயத்தில் எனக்கு மகிழ்ச்சிதான், அவருக்கு வாழ்த்துக்கள் என்றார்.

http://thatstamil.oneindia.in/movies/speci...-for-oscar.html

சரி அமிர்தாப்பச்சனின் பொறாமையை என்னவென்று சொல்ல. அவரின் மருமகள் இதே வெள்ளைகளால் உலக அழகி பட்டம் வழங்கப்பட்டார் என்பதை இலகுவில் மறந்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விருது வடக்கில் உள்ளவர் ஒருவருக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தால் ......... அச்சாகே , ஆத்தாகே என்று தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவன் எதை வெறுத்தானோ அதே அவனுக்கு இன்று மூதேவியாக நிற்கின்றது.

வாழ்த்துக்கள் ஏ,ஆர் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விருது வடக்கில் உள்ளவர் ஒருவருக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தால் ......... அச்சாகே , ஆத்தாகே என்று தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள் .

இதுதான் உண்மை..! மதராசி என்று எப்பவுமே மட்டந்தட்டியே பழகிவிட்ட வடக்கத்திய வாலாக்களுக்கு வயிற்றெரிச்சல் பாடாய்ப் படுத்துகிறது..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விருது வடக்கில் உள்ளவர் ஒருவருக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தால் ......... அச்சாகே , ஆத்தாகே என்று தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள் .

மச்சான் சிறி எப்ப கிந்தி படிச்சிங்கள் ....... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் ஏ.ஆர்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் சிறி எப்ப கிந்தி படிச்சிங்கள் ....... :o

எங்கடை வீட்டுக்கு பக்கத்திலை பிட்ஸா கடை நடத்தும் பொபீந்தர் சிங் தான் என்ரை கிந்தி மாஸ்ரர் . :icon_mrgreen:

பிட்ஸா வாங்க போகேக்கை அப்பப்போ அவர் கிந்தி சொல்லித்தருவார் .

அவர் சரியாசொல்லித் தந்திருக்கிறாரோ ....... மச்சான் . :wub:

இந்த விருது வடக்கில் உள்ளவர் ஒருவருக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தால் ......... அச்சாகே , ஆத்தாகே என்று தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள் .

சிறி

:wub: அச்சாகே , ஆத்தாகே என்று அடுத்தது "அப்பாகே"யா வரும் ??? :o

எவர் சதி செய்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வெல்லுவார் என்றே நம்புகின்றேன். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எவர் சதி செய்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வெல்லுவார் என்றே நம்புகின்றேன். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
.

எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு. திறமையானவரை பாராட்டுவதில் எந்த தப்புமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி

:wub: அச்சாகே , ஆத்தாகே என்று அடுத்தது "அப்பாகே"யா வரும் ??? :o

ஓம் வசம்பு , கிந்தியை எதுகை , மோனையோடை கதைத்தால் அப்படித்தான் வரும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர்.. அமிதாப் விளாசல்!சனிக்கிழமை, ஜனவரி 24, 2009, 17:26 [iST]

மேலும் புதிய படங்கள் இந்திய சினிமாவுக்கும், கலைஞர்களுக்கும் ஆஸ்கர் கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் அதுவே நமது கலைஞர்களின் திறமைக்கான ஒட்டுமொத்த அங்கீகாரம் என எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவரான அமிதாப்பச்சன்.

'பச்சனாலியா' என்ற புத்தக வெளியிட்டு விழா நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமிதாப், பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களும் நிருபர்களாக மாறி அவரிடம் கேள்விகளை எழுப்பினர்.

பெரும்பாலான கேள்விகள், ஸ்லம்டாக் மில்லியனேர் குறித்து அவர் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பற்றியதாகவே இருந்தன.

இந்தப் படம் 10 ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகி இருப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில்:

இந்தியக் கலைஞர்கள் எதற்காக வெளிநாட்டு அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இந்தியாவின் தேசிய விருதுதான் இந்தியப் படங்களுக்கு மிக மிக உயர்ந்த விருது.

நமது கலாச்சாரத்தை, மக்களைப் பற்றி நாம்தான் படமெடுக்க முடியும். இந்தக் கலாச்சாரம் பிடித்துப் போய், இதன் சிறப்பை வியந்து ஒரு வெளிநாட்டு விருது தரப்பட்டால் மகிழ்ச்சிதான். அதை வேண்டாம் எனமறும் சொல்லத் தேவையில்லை.

ஆனால் இப்போது நடப்பது மிகுந்த வருத்தமாக உள்ளது. ஆஸ்கர் விருதுக்காக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் இந்தியர்கள். காரணம் ஆஸ்கர் விருதுதான் தனது திறமையின் உச்சபட்ச அங்கீகாரம் என்ற நம்மவர்களின் மாயை.

ஆஸ்கர் விருதுகள் அவர்கள் நாட்டுப் படங்களுக்கானவை. அவர்கள் வீட்டுக்குள் நுழைய நாம் எதற்காகப் போட்டி போடுகிறோம்... புரியவில்லை.

குறிப்பிட்ட எந்தப் படத்துக்காகவும் இதை நான் சொல்லவில்லை. இந்தியக் கலைஞர்களின் பொதுவான மனநிலையைக் குறிப்பிடவே இதைச் சொன்னேன்.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், இந்திய சினிமாதான் பல காலமாக உலகில் முன்னிலை வகிக்கிறது; சிறப்பிடம் பெற்றுள்ளது.

அதே நேரம், இந்த ஆஸ்கார் விருது பரிந்துரைகளில் ரஹ்மான், குல்ஸார் ஆகியோருக்கும், கேமராவுக்கு பின்னால் உழைக்கும் ரெசுல் பூக்குட்டி போன்றோருக்கும் ஆஸ்க பரிந்துரைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ஆஸ்கருக்கு ரெசுல் பரிந்துரைக்கப்பட்டது, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவுக்கு பெருமைகள் பல சேர்த்துள்ள ரஹ்மானுக்கு கண்டிப்பாக ஆஸ்கர் கிடைக்கும். அந்த விஷயத்தில் எனக்கு மகிழ்ச்சிதான், அவருக்கு வாழ்த்துக்கள் என்றார்.

http://thatstamil.oneindia.in/movies/speci...-for-oscar.html

சரி அமிர்தாப்பச்சனின் பொறாமையை என்னவென்று சொல்ல. அவரின் மருமகள் இதே வெள்ளைகளால் உலக அழகி பட்டம் வழங்கப்பட்டார் என்பதை இலகுவில் மறந்து விட்டார்.

வட இந்தியர்களின் ஆங்கில பத்திரிகையில் ஆஸ்கர்.. அமிதாப் விளாசல் என்ற தலைப்பில் செய்தி போட்டுருந்தார்கள் ரகுமானை பற்றிய செய்தியை தவிர்த்து இருந்தார்கள்.நான் இந்த செய்தியை படித்ததும் நினைத்தேன் அமிதாப்பிற்கு ஷாருக்கான்,அமீர்கானுடன் போட்டி அது தான் இப்படி பேட்டி கொடுத்து உள்ளார் என்று பிறகு நுனாவினானின் இந்த பதிவை படித்த உடன் தான் எனக்கு விளங்கியது அவர் ரகுமானைத் தான் சொல்லி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் ஏ ஆர் ரகுமாமானுக்கு வாழ்த்துக்கள் வெல்ல வேண்டும் ஒஸ்க்கார்

ரகுமான் ஜீ ஆப்கா மியுசிக் அச்சாகே .......இது வசம்பருக்கு :huh::lol:

Edited by முனிவர் ஜீ

என்றும் ஏ ஆர் ரகுமாமானுக்கு வாழ்த்துக்கள் வெல்ல வேண்டும் ஒஸ்க்கார்

ரகுமான் ஜீ ஆப்கா மியுசிக் அச்சாகே .......இது வசம்பருக்கு :D:)

முனிவர் ஜீ

:) நீங்கள் "ரகுமான் ஜீ அப்பாகே மியுசிக் அச்சாகே" என்று எழுதினால்த் தான் நான் ஏற்றுக் கொள்வேன். :) இல்லையேல் உங்களுக்கு ஹிந்தி தெரியாதென்று தான் அர்த்தம். :D பேசாமல் நம்ம தமிழ்சிறியிடம் வகுப்பு எடுங்கள். :D

Edited by Vasampu

ஆஸ்கருக்கு அருகில் ஏ.ஆர்.ரஹ்மான்!

வெள்ளிக்கிழமை, ஜனவரி 23, 2009, 11:06

ஸ்லம் டாக் .. 10 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை - ரஹ்மானுக்கு 3

ஆஸ்கர்... சாதாரண கலைஞன் தொடங்கி கமல் ஹாசன் வரை (வெளியே மறைத்தாலும்!!) ஒவ்வொரு இந்தியக் கலைஞனின் கனவு விருது அது.

அந்த விருதை இன்னும் சில தினங்களில் எட்டிப் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் 'மெட்ராஸ் மொஸார்ட்'

என இசை ரசிகர்களால் கொணாடாடப்படும் 'நம்ம ரஹ்மான்'.

ஸ்லம்டாக் படம் 10 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரஹ்மானின் பெயர் 2 பிரிவுகளில் 3 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதே படத்துக்காக கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள ரஹ்மானுக்கு இப்போது ஆஸ்கர் விருதும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிரகாசமாகியுள்ளது.

சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் மற்றும் இரண்டு சிறந்த பாடல்களுக்கான பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்தப்படம்.

பரிந்துரை செய்யப்பட்ட பிரிவுகள் விவரம்:

பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் - ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த ஒரிஜினல் பாடல் 'ஜெய் ஹோ..' - ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த ஒரிஜினல் பாடல் 'ஓ சாயா…' - ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த படம் - ஏ காலண்டர் பிலிம்ஸ் புரடக்ஷன், கிறிஸ்டியன் கோல்சன்

சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட்மென்டில்

சிறந்த அடாப்டட் திரைக்கதை - சைமன் பியூஃபோய்

சிறந்த எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்

சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்

சவுண்ட் எடிட்டிங் - டாம் சேயர்ஸ்

சிறந்த இயக்குனர் - டானி பாய்ல்

ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியன்று நடைபெறுகிறது.

ஒரு இந்திய திரைக் கலைஞர் ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் புதிய சாதனை படைத்துள்ளார்.

தனது பெயரும், ஸ்லம்டாக் படமும் பெருமளவில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், எனது இசை இந்த அளவுக்கு பேசப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனது முதல் நன்றி குல்ஸாருக்குத்தான்.

நான் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன். இல்லாவிட்டாலும் ஏமாற்றமடைய மாட்டேன் என்றார்.

யுவன் ஷங்கர் ராஜா வாழ்த்து!

கோல்டன் குளோப் விருது பெற்று இந்திய சினிமாவை உலகத் தரத்துக்கு உயர்த்திய ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் விருதுகளையும் வெல்வது நிச்சயம் என பாராட்டு தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதை அவர் தெரிவித்தார்.

நாமும் மெட்ராஸ் மொசார்ட்டுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களைச் சொல்வோம்!

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப விளங்குது தானே தமிழன் எந்த விதத்திலும் தலை எடுப்பது இந்தியன்களுக்கு பிடிக்காது :):D:D

  • கருத்துக்கள உறவுகள்

"திறமை எங்கிருந்தாலும் மதிக்கப்பட வேண்டும்"........அது யாராக இருந்தாலும் .... ஏ ஆர் ,

அதற்கு தகுதியானவர் என்பது என் பணிவான் கருத்து ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.