Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை லன்டனில்...........

Featured Replies

நாளை லன்டனில்........... நடக்கவிருக்கும் போருக்கு ஆதரவான லன்டன்வாழ் சிங்கள மக்களின் கூட்டத்திற்க்கு எதிரில் போரினால் பாதிக்கபட்ட லன்டன்வாழ் தமிழ் மக்களினது கூட்டத்தை நடத்த மெட்ரொபொலிடன் போலீஸ் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது...

fighter.gif

அவசரமாக விபரங்கள் தேவை......................................

Edited by Panangkai

fighter.gif

என்ன இது? அப்ப ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கிறீங்கள் போல :)

அவர்கள் நிச்சயம் ஊடகங்களை பயன்படுத்த அனைத்தும் செய்திருப்பார்கள்.

அதை எமக்காக பாவிக்க அனைத்து பிரயோகங்களையும் செய்தல் வேண்டும்.

  • தொடங்கியவர்

இத்தாலியில் இருந்து 2 பஸ்களில் சிங்களவர்கள் வந்திருப்பதாக சொல்கிறார்கள்........ :)

அப்படியானால் லண்டனில் உள்ள தமிழர்கள் எல்லோரையும் வரச்சொல்ல வேண்டும்

  • தொடங்கியவர்

என்ன இது? அப்ப ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கிறீங்கள் போல :)

பின்ன என்ன... இது லண்டனப்பு... எக்குதப்பாபோச்சுதென்டா தப்பியோட எல்லா குச்சிபாதையும் நமக்கு அத்துபடியுங்கோ....

அப்படியானால் லண்டனில் உள்ள தமிழர்கள் எல்லோரையும் வரச்சொல்ல வேண்டும்

யாரங்கே.... ஆஸ்தான மொபைல் மெஸேஜ்காரரை சபைக்கு அழையுங்கள்....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51201

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51201

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51201

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51201

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51201

நாளைய நிகழ்வுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு வந்திருக்காமே பனங்காட்டு நரி

:)

பனங்காய்...

இங்குதான் நேரடியாக ஆரம்பிக்கிறாங்கள். இங்கு எங்கள் மக்கள் காட்டப்போகும் பெரும் பலம்தான் எங்கள் பக்கத்தின் வலியையும் வலுவையும் காட்ட ஏதுவாக இருக்கும். பிரிட்டன்தான் எங்கள் வாழ்வின் இச்சீர்கேட்டுக்கு அத்திவாரம் போட்டுச் சென்றது என்பதை தெளிவாக வெளிக் கொண்டுவாருங்கள்.

நாளை நடக்கவிருக்கும் நிகழ்வு தமிழ்மக்களை தூண்டிவிட்டு குழப்பங்கள் விளைவிப்பதற்காகவே சிங்களத்தால் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை வைத்து இனிவரும் காலங்களில் லண்டனில் நடைபெற இருக்கும் தமிழரின் எழுச்சி நிகழ்வுகளை தடுக்க சிங்க அரசால் இப்படி ஒரு நாடகம் நாளை அரங்கேற்றப் படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிரித்தானியா காவல்துறை தமிழர்களுக்கு அனுமதி மறுத்துள்ளதாகவும் இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன..

எனவே தமிழ்மக்கள் யாரும் நாளை அங்கு சென்று சிங்களவன் விரித்த வலையில் சிக்கவேண்டாம் என கோரிக்கை விடப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

உது என்ன சுத்த பைத்தியக்காரதனமான கதையாக இருக்குது? சிங்களவருக்கு மட்டும்தான் அனுமதியா? தமிழர்களுக்கு இல்லையா? நாமும் சிரீலன்கன்ஸ்தானே.... சிரீலன்கா நடத்தும் எந்த கூட்டத்திற்க்கு போகவும் எமக்கு உரிமை உள்ளது மட்டுமல்ல லண்டனில் எமக்கு சுதந்திரமும் உண்டு.

:)

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

அடேப்பா!

என்னவெல்லாம் செய்யலாமோ, அந்தளவுக்கு முயற்சிக்கிறாங்க.

ஆமா எனக்கொரு சந்தேகம், அதாவது போருலை தாங்கள் வெல்லுறதாக சொல்லுறாங்க, இந்த சர்வதேசமெல்லாம் தங்களுக்கு பின்னாலை நிற்கிறதாகவும் சொல்லுறாங்க, அப்படியென்றால் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு எதற்கு?

ஏதோ இருக்கு, தமிழர்களே புரிந்துகொள்ளுங்கோப்பா.

Edited by Valvai Mainthan

பனங்காய்...ஆதிவாசி இது சிறீலங்கா தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சதி செய்வார்கள். அங்கு கலவரங்களை தூண்டிவிட்டு தமிழரின் மீது பழிபோடவும் தயங்கமாட்டார்கள்.

இந்த சர்வதேசமெல்லாம் தங்களுக்கு பின்னாலை நிற்கிறதாகவும் செல்லுறாங்க, அப்படியென்றால் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு எதற்கு?

ஏதோ இருக்கு, தமிழர்களே புரிந்துகொள்ளுங்கோப்பா.

அதுதானே? :)

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் சதிவலையில் விழுந்து விடாதீகள். யார் இவ் ஊர்வலத்தை ஒழுங்கு செய்துள்ளார்கள் என அறிந்து செல்லுங்கள். குழப்ப வருபவர்களை காவல் துறை பார்த்துக்கொள்ளும். வன்முறையில் ஈடுபட்டு ஒருமுறையும் மீண்டும் அனுமதியை பெற முடியாத நிலையை ஏற்படுத்தாதீர்கள்.

சிங்களவர்களினால் நடத்தப்படும் ஊர்வலத்தில் கலகம் விளைவிக்க, புலி ஆதரவாளர்கள் போல அரசின் கைக்கூலிகளையே அரசு பயன்படுத்தக்கூடும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரையும் 10 Downing Street ற்கோ அல்லது பாராளுமன்றத்திற்கு முன்பாகவோ போகவேண்டாம் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

Edited by MEERA

நிஜம்!!! இங்கே பலரது கூற்றுகளினுள் பொதிந்திருக்கும் எச்சரிக்கை தொனிகள் வரவேற்கத்தக்கதே....

உண்மைகளை உணரவைப்பது எதிர்வாதங்களல்ல.... எச்சரிக்கை வாதங்கள்.

உணர்ச்சிவசப்பட்டு பலப்பரீட்சைகள் நடத்திப்பார்க்க புலம் பெயர்ந்த களங்கள் சரியான தெரிவுகள் அல்ல... மேலும்

இது விளையாட்டுத் திடலுமல்ல.. வெற்றி தோல்விகளை உடனடியாக நிர்ணயித்துக்கொள்ள.

தமிழின உணர்வுககுக்கானதும், விடிவிக்குமானதும், உரிமைகளுக்கானதுமான கண்டனக் குரல்கள் எழுப்புவதே புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் போராட்டங்களின் முழுமுதல் நோக்கங்களாகும்.

எனவே ஒவ்வோர் அசைவிலும்....

எச்சரிக்கை....நிதானம்..... நிதர்சனம் என்பவை இன்றய காலகட்டத் தேவைகள்

வெண்ணை திரண்டு வருகையில் தாளியை உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

இங்கே செயற்படாதே! என்பதல்ல பொருள்....

சிந்தியாது செயற்படாதே என்பதே குறள்

இன்னும் உள்ளது தமிழா!

ஒரு கண முட்டாள்தனம்

ஒரு விடியலின் அஸ்தமனமும் ஆகலாம்.

விழித்திரு தமிழா!!!!! :icon_idea:

  • தொடங்கியவர்

சற்று முன் எனக்கு வந்த SMSமெஸேஜ்.................

Your COUNTRY Eelam needs you. PLEASE BE KIND ENOUGH TO FORWARD THIS TEXT TO FIVE OF YOUR FRIENDS.A counter DEMONSTRATION against THE MURDERER Sinhala LANKA will be held on 14th February (Saturday) 2009 from 1.30- 6.00pm,OUTSIDE No10 Downing Street London. NEAREST Tube, WESTMINSTER. Refreshments will be provided throughout the day.Please SUPPORT OUR PEOPLE,LET US STAND TOGETHER FOR FREEDOM -one people,one voice,One NATION- EELAM.

:icon_idea:

ஒருவரையும் 10 Downing Street ற்கோ அல்லது பாராளுமன்றத்திற்கு முன்பாகவோ போகவேண்டாம் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

யார்? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

சற்று சிந்தியுங்கள் எப்போதாவது(Refreshments will be provided throughout the day) சாப்பாடு தண்ணி தருவோம் என்று சொல்லி கூப்பிட்டிருக்கிறார்களா..?

இது எங்களையும் தங்களுக்காக வரவழைக்கும் யுக்தி..

இங்கு போவதால் நமது உறவுகள் தான் பாதிக்கப்பட போகின்றன. இன்னும் படுகொலைகள் அரங்கேறப் போகின்றன.

எனவே தயவு செய்து போக வேண்டாம்.

இங்கு இலண்டனில் உள்ள சில வஞ்சகர்களின் சூழ்ச்சி இது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்போல்சென்று குளப்பம் விழைவித்தால்??? :icon_idea:

லண்டனில் நிகழ்வுகளை எற்பாடு செய்பவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறினார்கள் இது சிங்களத்தின் திட்டமிட்ட சதி. தமிழ் மக்களை வம்புக்கு இழுத்து பிரச்சினையை எற்படுத்த அவர்கள் முயற்சி செய்வதால் தமிழ்மக்களை அங்கு போக வேண்டாம் என அன்பாக கேட்டு கொள்கிறார்கள்.

அன்பார்ந்த புலம்பெயர்ந்த மக்களே நீங்கள் ஆத்திரத்தின் உச்சித்தில் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் சில வேளைகள் தமிழ் தேசியப்போராட்டத்தினை பின்நோக்கியே நகர்த்தும். அவை எமக்கு பின்விளைவுகளையே எற்படுத்தும். சிந்தித்து பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள். இவ்வறான சந்தர்ப்பங்களில் தமிழ்தேசியத்திற்கு எதிராக சிங்களத்துடன் செயற்படுபவார்கள் உங்கள் உணர்வுகளை தங்களின் தேவைக்கு பயன்படுத்தி எமது போராட்டத்தினை சிதைக்க முற்படுவார்கள்.

இப்படிதான் 80 களில் போராட்டத்தின் உணர்ச்சியுடன் சென்றவார்கள் இந்தியாவின் சதியில் தவறான பாதையில் சென்று எமது போராட்டத்தினை சிதைக்க முற்பட்டார்கள். அது போல சிங்களத்தின் சதியில் விழுந்து எனது போராட்டத்திற்கு எதிராக விலைபோக வேண்டாம். உங்களின் உணர்வுகளை பயன்படுத்தி உங்களை அறியாமாலே அவர்கள் உங்களினை தவறான வழியில் பயன்படுத்துவார்கள். எச்சரிக்கையுடன் இருக்கவும்.

நிகழ்வுகள் உரியவர்களின் எற்பாட்டில் நடைபெறுகின்றதா என்பதை உறுதிப்படுத்திய பின் அது பற்றிய அறிவுப்புக்களை செய்யவும். யாழ் கள நிருவாகத்தினார் இதில் கூடிய கவனம் செலுத்தவும். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எமது எதிரிகள் ஆதரவாளர் என்ற போர்வையில் உள்ளே நுழைய முயலவார்கள். மிகவும் கவனமாக இருக்கவும்.

மீண்டும் செல்லுகிறேன் நாளைய சிங்களவரின் நிகழ்வுக்கு எதிராக எந்த நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்படவில்லை. புலப்பெயர்ந்த தமிழ்மக்கள் எவரும் நிகழ்வுக்கு போக வேண்டாம் என்பதை அவர்கள் அன்பாக கேட்டு கொள்கிறார்கள்.

Edited by உமை

சற்று முன் எனக்கு வந்த SMSமெஸேஜ்.................

Your COUNTRY Eelam needs you. PLEASE BE KIND ENOUGH TO FORWARD THIS TEXT TO FIVE OF YOUR FRIENDS.A counter DEMONSTRATION against THE MURDERER Sinhala LANKA will be held on 14th February (Saturday) 2009 from 1.30- 6.00pm,OUTSIDE No10 Downing Street London. NEAREST Tube, WESTMINSTER. Refreshments will be provided throughout the day.Please SUPPORT OUR PEOPLE,LET US STAND TOGETHER FOR FREEDOM -one people,one voice,One NATION- EELAM.

பனங்காய் இந்த SMS உரியவர்களினால் அனுப்ப படவில்லை. இது தமிழதேசியத்திற்கு எதிரானவர்களின் சதி. இவற்றுக்கு உடந்தையாக நிற்காக வேண்டாம்.

யாழ்கள நிருவாகம் நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட செய்திகளை உங்கள் தொடர்புகள் ஊடாக உறுதி செய்யவும்.

எங்களுடைய போராட்டத்திற்கு பங்கம் விளைவிற்கும் செயல்களில் எமது பத்திரிகைகளும், இணையதளங்களும், பிற செய்தி உடகங்களும் தம்மினை அறியாமாலே அல்லது அறிந்தும் ஈடுபடுகின்றன. தம் முதலில் செய்தியை கொடுக்கின்றோம் என்றே போட்டியில் பிழையான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றான. எம் கையினாலே எமது கண்களை குத்திக்கொண்டிருக்கின்றோம்.

சிங்களவர்போல்சென்று குளப்பம் விழைவித்தால்??? :icon_idea:

நீங்கள் சிங்களவர்கள் போல சென்று குழப்பம் விளைவித்தால் என்ன அல்லது சிங்களவர்கள் குழப்பம் விளைவித்தலே பழி எம்மீதுதான் வீழும். எதற்கும் நாம் எச்சரிக்கையாக இருப்பதுதான் நல்லம்.

நண்பர்களே! தயவுசெய்து உணர்ச்சிவசப் படாதீர்கள். சிங்களவர்கள் ஒழுங்குசெய்துள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலம் இது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் எதிர் ஊர்வலம் நடத்தினாலோ அல்லது குழப்பம் விளைவித்தாலோ எங்களுக்கு நல்லதல்ல.

1. இது தமிழர்களுக்கும் புலிகளுக்கும் மட்டுமல்ல, பிரித்தானியாவுக்கும் எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலம். அதனை சிங்களவர் செய்வது எமக்கு நல்லது.

2. இதில் ஒலிக்கவுள்ள இனவாதக் கருத்துகள் அவர்களுக்கு எதிராகவே சர்வதேசத்தை சிந்திக்கத் தூண்டும்.

3. இதில் நாங்களும் கலந்துகொண்டு ஸ்ரீலங்காவுக்கு எதிராக குரலெழுப்பினாலும் அது எடுபடாது ஏனென்றால் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியவர்களையே ஊடகங்கள் கவனிக்கும்.

4. கலந்துகொள்ளும் எமது எண்ணிக்கையும் அவர்களுடன் சேர்த்து எண்ணப்படும்.

5. கலந்துகொண்டு குழப்பம் விளைவித்தால் தமிழர்கள் பயங்கரவாதச் செயற்பாட்டில் இறங்கினார்கள் என்ற கருத்து பரப்பப்படும்.

எனவே தயவுசெய்து உணர்ச்சிவசப்படாது சிந்தித்துச் செயற்படுவது அவசியமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

fighter.gif

உறவுகளே ..... அவதானம் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறி ( மாற்றி ) விடக்கூடாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.