Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தமது முழுப் பலத்தையும் பாவிக்கின்றார்களா?

Featured Replies

தி.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில் பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. இணையத்தளங்களின் ஊடாக பல மக்களைப் போய்ச் சேர்ந்த இந்தக் கடிதங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கடிதங்களில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல உண்டு. ஆயினும் ஓரிரு விடயங்கள் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டன.

இரண்டாவது கடிதத்தில் “”புலிகள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போராடுகிறார்கள், தமது சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள், தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும் எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்” என்கின்ற ஒரு “செய்தியை” குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாவது கடிதத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகையிட வேண்டும் என்றும், “தமிழீழமே இந்தியாவின் உண்மையான நட்பு நாடு” என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஒரு “ஆலோசனையையும்” கூறியிருந்தார். இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் என்னுடைய சில கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

விடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும், வளங்களையும் பயன்படுத்தி போரிடுகின்றார்கள் என்னும் செய்தியை தன்னுடைய ஊகிப்பின் அடிப்படையில் கூறவதாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால் “வன்னியின் உண்மை நிலை இதுதான்” என்று உறுதியான முறையில் கூறுகின்றார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவது போன்று விடுதலைப் புலிகள் ஒரு போதும் போரிடுவது இல்லை.

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்தி போரிட்டால், அது எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவதாகவே இருக்கும். தமது பலத்தை பாதுகாப்பதை முதன்மையாகக் கொண்டே விடுதலைப் புலிகள் போரை எதிர்கொள்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்தி நடத்திய போர்களும் உண்டு. உதாரணமாக ஓயாத அலைகள் மூன்றைச் சொல்லலாம். அதில் விடுதலைப் புலிகளின் அனைத்துப் படையணிகளும், அனைத்து விதமான ஆயுதங்களும், வளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தார்.

குடாரப்பு தரையிறக்கத்திற்கான தயார்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 1500 போராளிகளையும் அவர்களின் ஆயுதங்களையும், அவர்களுக்கு தேவையான மற்றைய பொருட்களையும் கடலால் கொண்டு சென்று இறக்க வேண்டும். இந்தப் பணிகளை செய்வதற்கு நுற்றுக் கணக்கான படகுகள் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பல சண்டைப் படகுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில் சிறப்புத் தளபதி சூசை பிரிகேடியர் பால்ராஜிடம் கூறிய தகவல் இதுதான். “உங்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மட்டுதான் எம்மிடம் உள்ள எரிபொருள் போதும்”. அதாவது குடாரப்பில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால், அவர்களை மீண்டும் கடலால் அழைத்து வர முடியாது. தம்மிடம் உள்ள கடைசி வளங்களையும் பயன்படுத்தி ஓயாத அலைகள் மூன்றை விடுதலைப் புலிகள் நடத்தினார்கள்.

அனைத்து வளங்களைப் பயன்படுத்தினாலும், அடி வாங்கித் தோற்றோடிய சிறிலங்காப் படைகளால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பதில் தாக்குதல் எதையும் பெரியளவில் செய்ய முடியாது என்பதை சரியாக கணித்தே அதைச் செய்தார்கள். அதே வேளை அனைத்து வளங்களையும் பாவித்து விட்டு நிற்கின்றோம் என்னும் எச்சரிக்கை உணர்வே விடுதலைப் புலிகளை யாழ் குடாவிற்குள் தொடர்ந்தும் முன்னேறாது தடுத்தது.

பின்பு சிறிலங்கா அரசு உலகநாடுகளிடம் இருந்து பல்குழல் பீரங்கிகள் உட்பட பல நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்து சாவகச்சேரி, அரியாலை போன்ற இடங்கள் மீது படைநடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இழப்புக்களை சந்தித்த விடுதலைப் புலிகள் அப் பகுதிகளில் இருந்து பின்வாங்க வேண்டி நேர்ந்தது.

ஆயினும் சில மாதங்கள் கழித்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கையை விடுதலைப் புலிகள் சிறந்த திட்டமிடலோடு எதிர்கொண்டு சிறிலங்காப் படைகளை ஒரு பொறிக்குள் வீழ்த்தி பெரும் அழிவுக்கு உள்ளாக்கி முறியடித்தார்கள். ஏற்கனவே ஓயாத அலைகள் மூன்றில் ஏற்பட்ட இழப்போடு, தீச்சுவாலை முறியடிப்பும் கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதலும் சேர்ந்து சிறிலங்காப் படையினரை முடக்கிப் போட்டது.

தம்முடைய நடவடிக்கை சிறிலங்காப் படைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் எழ விடாமல் செய்யும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே, விடுதலைப் புலிகள் தமது முழ வளங்களையும் ஒருங்கிணைத்து பெரும் சமர்களை செய்வார்கள். சிறிலங்காப் படைகள் முடங்கிக் கிடக்கும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் தமது படையணிகளை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்.

இன்றைய நிலையில் தற்காப்புச் சண்டைகள் என்றாலும் சரி, வலிந்த தாக்குதல்கள் என்றாலும் சரி, விடுதலைப் புலிகள் தமது அனைத்து வளங்களையும் பலத்தையும் பயன்படுத்துவது சரியான உத்தியாக அமையாது என்றே கருதப்படுகின்றது. இன்றைக்கு விடுதலைப் புலிகள் தமது அனைத்து படையணிகளையும், வளங்களையும் பயன்படுத்தி சிறிலங்காப் படைகள் மீது தாக்குதல் தொடுத்தால், விடுதலைப் புலிகளால் பல பகுதிகளை மீட்க முடியும். சிறிலங்காப் படைகளும் பின்வாங்கி ஓடும்.

ஆனால் சிறிலங்காவிற்கு முண்டுகொடுத்து போரை நேரடியாக நடத்தும் இந்தியாவும், மற்றைய உதவிகளை செய்து வரும் வல்லரசு நாடுகளும் உடனடியாகவே சிறிலங்காப் படைகளை மீளப் பலப்படுத்தி விடும். தன்னுடைய படையினரை நேரடியாக களத்தில் இறக்கியிருக்கும் இந்தியாவும் உடனடியாகவே மேலதிக படையினரை தருவித்து ஆட்பலப் பிரச்சனையையும் தீர்த்து வைக்கும்.

தமது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, அனைத்துப் படையணிகளையும் களம் இறக்கி பெரும் சண்டையை நடத்திய விடுதலைப் புலிகள் ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் கண்டிருக்கக் கூடிய சேதங்களை சரி செய்வதற்குள் சிறிலங்காப் படைகள் மீண்டும் அசுர பலத்தோடு எழுந்து நிற்கும். இப்பொழுது மீண்டும் தாக்குதல் நடத்தி பலவீனப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடித்தும் விடுவார்கள்.

ஆகவே அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நடத்தக் கூடிய சண்டை, கடைசியில் அவர்களுக்கு பாதகமாக முடியக் கூடிய நிலையே தற்பொழுது காணப்படுகின்றது. விடுதலைப் புலிகள் தமது கடைசிப் பலத்தையும் பயன்படுத்தி போரிட வேண்டும் என்றுதான் சிறிலங்காவும், அதன் நட்பு சக்திகளும் விரும்புகின்றன. ஆனால் அதை விடுதலைப் புலிகள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள்.

விடுதலைப் புலிகள் தமது பலத்தை முடிந்தளவு பாதுகாத்தபடியே, போரின் எல்லைகளை விரிவுபடுத்தி, எதிரிக்கு பெரும் இழப்பைக் கொடுத்தபடி போரை நீடித்துக் கொண்டு போவார்கள் என்பதே இன்றைக்கு எதிர்பார்க்கக் கூடிய ஒன்று. இந்திய அரசு இந்தப் போரில் இருந்து விலகும் வரை இதைத் தவிர வேறு வழியேதும் இருக்கப் போவதில்லை. அந்த வகையில் இந்திய அரசை இந்தப் போரில் இருந்து விலகச் செய்வதற்கான வேலைகளில் இறங்க வேண்டியதே அனைத்துத் தமிழர்கள் முன் உள்ள பெரும் பணியாக இருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகை இடலாம் என்று திரு வழுதி அவர்கள் யோசினை சொல்லியுள்ளார். அதையும் செய்யலாம். ஆனால் அது மட்டுமே போதுமானது அன்று. உலகில் உள்ள இந்தியத் தூதரகங்கள் என்பவை இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பவை. இந்தியாவின் ஆட்சியில் உள்ள அரசாங்களை பிரதிநிதித்துவம் செய்பவை அல்ல. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பன. அரசு என்பது மாறுவது இல்லை. இந்திய அரசை இயக்கிக் கொண்டிருக்கும் இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்களை முற்றுகையிடுவது ஒரு அளவுக்கு மேல் பலனைத் தரப் போவது இல்லை.

ஒரு நாடு தன்னுடைய நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கலாம். ஆனால் அந்த நாட்டில் வாழும் ஒரு சிறு தொகையைக் கொண்ட புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தினால் குறிப்பிடக் கூடிய அழுத்தம் எதையும் கொடுக்க முடியாது. மின்னஞ்சல்கள் அதற்கான குப்பைத்தொட்டிக்குள் போனால், கடிதங்களும் அதற்கென்று உள்ள குப்பைத்தொட்டிக்குள் போகும். அவ்வளவுதான்.

“தமிழீழம்தான் இந்தியாவின் உண்மையான நண்பன்” என்று இந்தியாவிற்கு விளங்கப்படுத்தலாம் என்று நம்புவதும் அர்த்தமற்றதாகவே இருக்கின்றது. நாம் சொல்லும் காரணங்கள் இந்தியாவிற்கு புரியவில்லை என்று உண்மையிலேயே யாராவது நம்புகின்றீர்களா? இந்தியாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் அத்தனை முட்டாள்களா?

தன்னுடைய நலன்களை முன்னிலைப்படுத்தும் இந்திய அதிகார மையம் இந்திய அரசை வழிநடத்துவதே இன்றைய பிரச்சனைகளுக்கு காரணம். இவர்களுடைய நலன்கள் வேறு வகையானவை. பனிப்போர் காலத்தில் இருந்த இந்திய நாட்டின் நலன்களைப் பற்றி நாம் இன்றைக்கும் இவர்களோடு பேசிக் கொண்டிருப்பதில் பலன் ஏதும் இல்லை.

“நாங்கள்தான் உங்கள் நண்பன்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால், அவர்களிடம் இருந்து ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான் வருமே தவிர, வேறு ஒன்றும் நடக்கப் போவது இல்லை.

தமிழீழம் உருவாவது இந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகிறார்கள். நீண்ட கால நோக்கில் தமது இருப்பைப் தமிழீழத்தின் உருவாக்கம் பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றார்கள். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆட்சியைக் குழப்புவதற்கு இவர்கள் செய்கின்ற சதி வேலைகளும் இது போன்ற கருத்தின் அடிப்படையிலானதே.

இந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு ஏற்றபடி எம்மால் நடக்க முடியாது என்பதும், அப்படிச் செய்வதானது எமது விடுதலைப் போராட்டத்தையே காவு கொடுப்பதற்கு ஒப்பானது என்பதுமே யதார்த்த நிலையாக இருக்கின்றது.

இந்த நிலையில் இந்திய மக்களினதும், உலக மக்களினதும் மனச் சாட்சியைத் தட்டியெழுப்பும்படியான அறப் போராட்டங்களை தொடர்வதோடு, தமிழ்நாட்டிலும் உலகின் மற்றைய நாடுகளிலும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து இந்திய சிறிலங்கா அரசுகளின் இனவழிப்பு யுத்தத்தை எதிர்கொள்வதுதான் இன்று எமக்கு முன் உள்ள வழி

TAMILWIN.COM

புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகை இடலாம் என்று திரு வழுதி அவர்கள் யோசினை சொல்லியுள்ளார். அதையும் செய்யலாம். ஆனால் அது மட்டுமே போதுமானது அன்று. உலகில் உள்ள இந்தியத் தூதரகங்கள் என்பவை இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பவை. இந்தியாவின் ஆட்சியில் உள்ள அரசாங்களை பிரதிநிதித்துவம் செய்பவை அல்ல. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பன. அரசு என்பது மாறுவது இல்லை. இந்திய அரசை இயக்கிக் கொண்டிருக்கும் இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்களை முற்றுகையிடுவது ஒரு அளவுக்கு மேல் பலனைத் தரப் போவது இல்லை

சர்வதேச நாடுகளில் இந்திய தற்போதையை அரசை விமர்ச்சித்து போராடுவது மிக நல்ல பலனை தரும்... இந்த யுத்ததில் இந்தியா தமிழரை கொலை செய்ய உதவிகள் புரிகிறது எனும் தமிழரின் வாதம் இலங்கை அரசையும் இந்திய அரசையும் அவமானத்துக்குள் தள்ளும்... வெளி வந்து பதில் அளிக்கும் நிலையை தோறும்...

சோனியாவின் நீண்டகால நோக்கம் ராகுல் அல்லது பிரியங்காவை பிரதமராக்கி அவர்களின் பரம்பரை ஆட்சியைத்தொடர்வது தான். அவர் தான் பதவியேற்காமல் அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்த்துக்கொண்டு, நுணுக்கமாக இந்த நீண்ட கால நோக்கத்திற்காக காய்களை நகர்த்துகின்றார்.

தான் பதவியேற்காமல் இந்திய அரசியலையும் காங்கிரஸையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இந்த காலகட்டத்தை, தன் பிள்ளைகளை அரசியற்தலைவர்களாக்கும் தயார்படுத்தலைச் செய்கின்றார்.

இத்தகைய தயார்படுத்தலின் போது அரசியற்சிக்கல்களில் தானோ, தன் பிள்ளைகளோ மாட்டுப்படாமல் சுமூகமாக நகர்வதையே விரும்புவார்.

உதாரணமாக BJP பாஷையில் சொல்வதானால் "இலங்கையில் அப்பாவி இந்துக்கள் ஆயிரக்கணக்கில் கொல்வதற்கு இந்த இந்தியிரல்லாத சோனியா இரகசியமாக ஆயுத உதவி செய்கின்றார் " என்ற வாசகம் சோனியாவின் பரம்பரை அரசியற் கனவில் ஒரு கறையை ஏற்படுத்தும்.

இத்தகைய செய்திகள் BJP ஐ அடைய வேண்டும்.

இராஜீவின் பின் சோனியாவையும், அவர் பிள்ளைகளை மட்டுமே தமிழின விரோதிகளாக இருக்கிறார்கள்... அதோடு அவர்களின் ஆதரவாளர்கள்... ஒட்டு மொத்த இந்தியாவும் அல்ல...

ஆகவே தமிழர்கள் சோனியா காங்கிரசை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடுவதுதான் நல்லது....

இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் " SONIA , STOP KILLING THE TAMILS !! " என்னும் வசகத்தின் தாக்கம் அதிகம்.

பிரித்தானியா பெர்மிங்கம் நகரில் இந்திய உபதூதுவரகத்தின் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

A peaceful protest has been arranged opposite to the Indian High Commission in Birmingham on the 18th February 2009 at 2 PM. Please take part in it to show your solidarity.

இலங்கை அரசபடைகளால் வன்னியில் அரங்கேற்றப் படுகிற படுமோசமான தமிழின அழிப்பைக் கண்டித்து வரும் 18ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் Birmingham இந்திய உபதூதுவரகத்தின் முன் நடை பெற இருக்கிறது. Coventry, Birmingham, Leicester, Rugby, Lemington Spa, Warwick போன்ற இடங்களிலிருந்து தமிழ் மக்கள் அனைவரும் பெருமளவில் இதில் கலந்து கொள்ள வேண்டி அழைக்கப் படுகிறீர்கள்..

"we shall never surrender..."

மேலும் வாசிக்க...

Edited by Small Point

இதுவரை தமிழ்நாட்டு ஊடகங்களில் மட்டுமே தமிழர் அவலம் வெளிவந்துள்ளது.

வட இந்திய ஊடகங்களில் தமிழர் அவலம் வெளிவருமாயின் காங்கிரஸ் அரசிற்கு தலையிடி ஏற்படும்.

எப்படி வட இந்திய ஊடகங்களில் இடம் பிடிப்பது ?

காங்கிரஸிற்கு எதிரான கட்சி உறுப்பினர்கள் அணுகி , நம்மவர் அவலங்களைச் சித்தரிக்கும் படங்கள், கானொளிகள் போன்றவை காங்கிரஸ் கட்சிக்கெதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தமுடியுமா என கேட்டுப் பார்த்தல்.

காங்கிரஸை விழுத்தும் எதற்கும் அவர்கள் உடன்படுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேசன் எழுதிய கட்டுரை ஆய்வு சரியா தவறா என்பதை ஆய்வு செய்வது எனது நோக்கம் அல்ல

ஆனால் தி.வழுதி எழுதிய கட்டுரையில் குரிப்பிட்டது போல இந்துய தூதரகங்கள் முன்னல் ஆர்ப்பட்டம் செய்வது விழலுக்கு இறைத்த நீரகத்தான் மறும்.

இதை விட சிறந்த வழி எதிரிக்கு எதிரி நன்பன் மதிரி

நாமும் சீனவை நோக்கி கைகளை நீட்டினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்

அதுடன் தமிழ் நாடு ஒரு கலத்தில் சுதந்திரதிற்காக போரடிநவை அதனல் இந்திய தமிழிழ்ம் கிடைதால்

தமிழ் நடு பிரியும் என்றுதானே சிரிலன்காவிற்கு முண்டு குடிக்கினம் அதை இப்பொழுது செய்வது

இதன் மூலம் நம்மல எபையும் நினைதால் முடியும் என்ரு காட்டுவது.ஒரே கலில இரண்டுக்கு கூட்ன மங்கய்

அதுடன் தமிழ் நாடு ஒரு கலத்தில் சுதந்திரதிற்காக போரடிநவை அதனல் இந்திய தமிழிழ்ம் கிடைதால்

தமிழ் நடு பிரியும் என்றுதானே சிரிலன்காவிற்கு முண்டு குடிக்கினம் அதை இப்பொழுது செய்வது

:rolleyes::rolleyes:

சபேசன் என்ன சொல்ல வருகிறார்?

புலிகள் இன்னும் பலத்துடனே இருக்கிறார்கள் அவர்களை அழிக்க முடியாது என்றா? அல்லது பெரிய ததக்க்குதல் செய்வார்கள் காத்திருக்க சொல்லியா?

ஆனால் வ்ழுதி எழுதியதில் பெரிய தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை அவர் எழுதியதில் சில நேரம் புலிகளின் இராணுஅவ் பலத்தால் மட்டும் தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்தவர்களுக்கு பாதிப்பைஅ ஏற்படுத்தி இருகலாம் ஆனால் உண்மையில் நாங்கள் இங்கு செய்யும் போராட்டங்கலுக்கு நல்ல பலன் கிடைக்கும் அதில் சோர்வு ஏற்படுத்த நினைக்கும் சபேசன் அருல்ஸ் போன்றவர்கள் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும்

புலிகள் பெரும் தாக்குதல் செய்து அதில் வரும் வெற்ரியை நாம் சேர்ந்து கொண்டாடுவோம் ஆனால் புலத்தில் நாம் செய்யும் ஆர்ப்பாட்டத்தால் வரும் வெற்றியை புலிகளும் சேர்ந்து கொண்டாட நாங்கள் எமது ஆர்பாட்டங்களை விரைவாக செய்ய வேண்டும்.

குறிப்பாக புலிகளின் இராணுவ பலம் அவர்கள் மீதான தடையை நீக்காது ஆனால் நாம் இங்கு செய்யும் ஆர்ப்பாட்டங்கள் அதுக்கு வழி அமைத்து கொடுக்கும்.

சாபேசன், வேர்ல்ஸ் அருல்ஸ் போன்றோர் எழுதுவதை எழுதிவிட்டு போகட்டும் அதில் உண்மையும் கற்ப்பனையும் இருக்கட்டும் நாம் இங்கு செய்வதை செய்வோம். இங்கு எமக்கு ஏற்ப்படும் சோர்வு வன்னியில் இறக்கும் மக்களின் தொகையய தான் கூட்டும்.

வினித்,

நீங்கள் தவறான கோணத்தில்பார்க்கின்றீர்கள்.

விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது என்பது உண்மை. அவர்கள் பெரும் பலத்துடன் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. ஆனால் எதிரி இன்றைக்கு அதை விட பெரும் பலத்துடன் இருக்கின்றான். இந்த நிலையில் தமது பலத்தை அழிய விடாது பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு புலிகள் போரிடுகின்றார்கள். இதை முதலாவதாகக் குறிப்பிடுகின்றேன்.

இரண்டாவதைப் பற்றிச் சொல்ல வேண்டும். உண்மையில் எனக்கு அதில் ஒரு சங்கடம் நேர்ந்து விட்டது.

இன்றைக்கு சர்வதேச நாடுகளை நோக்கி தமிழர்கள் நடத்துகின்ற அனைத்து விதமான போராட்டங்களையும் நிறுத்தி விட்டு, இந்தியத் தூதரகத்தை முற்றுகை இடும் போராட்டத்தை மட்டும் செய்யுங்கள் என்றுதான் வழுதி எழுதியிருந்தார். இதுதான் எனக்கு முக்கிய பிரச்சனையாகப் பட்டது.

அந்த வகையில் இரண்டாவதாக இதைப் பற்றி நீளமாக எழுதினேன். எழுதி விட்டுப் பார்த்தால், மற்றைய போராட்டங்களை நிறுத்தும்படி எழுதியிருந்ததை தன்னுடைய கட்டுரையில் இருந்து வழுதி நீக்கியிருந்தார். தற்பொழுது தமிழ்நாதத்தில் அவருடைய கட்டுரையில் அந்த வசனம் இல்லை.

இதையடுத்து இதைப் பற்றி நான் எழுதிய வசனங்களையும் நீக்க வேண்டியதாகி விட்டது. இதனால் நான் சொல்ல வந்த விடயம் சற்று தெளிவற்ற முறையில் அமைந்திருக்கக் கூடும்.

சொல்வது இதைத்தான்: உங்கள் அனைத்து விதமான போராட்டங்களையும் தொடர்ந்து செய்யுங்கள். இந்தியத் தூதரகத்தில் மட்டும் உங்கள் போராட்ட நோக்கங்களை குவிக்க வேண்டாம். அங்கும் போராடுங்கள். ஆனால் அதை மட்டும் செய்யாதீhகள்.

உங்களின் போராட்டச் செய்தியின் இலக்கு இந்திய அதிகார மையத்தை நோக்கியதாக இருப்பதை விட, இந்திய மக்களாக இருப்பதே பலனைத் தரும்.

இப்படித்தான் சொல்கிறேனே தவிர, உங்களை யாரும் போராட வேண்டாம் என்று சொல்லவில்லை.

இரண்டாவதைப் பற்றிச் சொல்ல வேண்டும். உண்மையில் எனக்கு அதில் ஒரு சங்கடம் நேர்ந்து விட்டது.

இன்றைக்கு சர்வதேச நாடுகளை நோக்கி தமிழர்கள் நடத்துகின்ற அனைத்து விதமான போராட்டங்களையும் நிறுத்தி விட்டு, இந்தியத் தூதரகத்தை முற்றுகை இடும் போராட்டத்தை மட்டும் செய்யுங்கள் என்றுதான் வழுதி எழுதியிருந்தார். இதுதான் எனக்கு முக்கிய பிரச்சனையாகப் பட்டது.

மன்னிக வேண்டும் சபேசன் அண்ணா,

எனக்குள் எப்போதும் 2 சபேசன் அண்ணாக்களின் கருத்துகள் முரன்படும்

அவுஸ்ரேலியாவில் இருந்து ஒருவர் எழுதுவார் , ஜேர்மனியில் இருந்து எழுதுவார் இவர்கள் இருவரும் ஒருவரோ என்ரு முரன்பட்டாலும் ஜெர்மனி சபேசன் அண்ணாவின் கருத்து கிட்ட தட்ட சராசரி தமிழர்களின் மனோ நிலையில் இருக்கும்

நீங்கள் எழுதும் வரை அவுஸ்ரேலியா சபேசனின் கருத்து என்று தான் நினைத்தேன், அதனால் தான் யாழ்களம் பார்ப்பதில்லையா என்று கேட்டேன்.

நீங்கள் எழுதிய கருத்திக்களில் எவளவு தான் யதார்த்தம் இருந்தாலும் என்னஒ பொறுத்த மட்டில் இன் க்கு நாம் செய்யும் ஆர்ப்பாட்ட த்தில் வரும் மாற்றம் உண்மையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்திற்கான தமிழர்களின் பதில் இல்லை என்பதே. புலிகள் பெரும் பாய்சல் ஒன்றை நடத்துவார்கள் என்பது புலிகளின் ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல இன்றைய சூழ்நிலையில் போராட்டத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்கு கூட நெஞ்சத்தின் ஒரு

மூலையில் சாம்பல் மூடிய தீயாகக் கிடக்கின்றது.அது எப்போது ? மற்றும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உண்மையில் மூடர்களே என்னது வெகு விரைவில் தெரிய வரும் தமிழர்களின் மேல் கொண்ட தேவையற்ற அச்சத்pனால் அதானால் இயல்பாய் எழும் வெறுப்பினால் தமிழின அழிப்புக்கு துணை போகிறார்கள். இந்தியாவின் வடக்கு எல்லையில் எதிரிகளையே சம்பாதித்து இருக்கிறார்கள்.தெற்கு எல்லையிலும் தேவையில்லாமல் எதிரிகளைக் கூட்டவதால் நீண்டகால நோக்கில் இந்தியாவுக்கு பாதகமே.இந்தியாவின் ஒருமைப்பாடு ஒருபோதும் நிலைத்திருக்கப் போவதில்லை.ஆனானப்பட்ட சோவியத் யூனியனைப் போல் சிதறும் அப்பொழுது தமிழர்களுக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.(சோவியத் யூனியனிலும் பார்க்க இந்தியாவில் இன மொழி சாதி வர்க்க முரண்பாடுகள் அதிகம்)

மற்றும்படி இத்தகைய ஆய்வுகள் தமிழ்மக்களின் உளவுரணை அதிகரிப்பதற்காக எழுதப்பட்டாலும் மறுபக்கத்தில் எதிரியை உசார் நிலையில் வைத்திருப்பதற்கு எங்களை அறியாமல் உதவுகிறமோ என்ற கேள்வியும் எழுவதை தவிர்க்க முடியாது.

சபேசனுடைய கோமணம் தான் மிகப்பெரிய பலம். அதையே என்னும் புலிகள் பாவிக்கவில்லை என்று கூறுகிறார்.

Edited by உமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் என்ன சொல்ல வருகிறார்?

புலிகள் இன்னும் பலத்துடனே இருக்கிறார்கள் அவர்களை அழிக்க முடியாது என்றா? அல்லது பெரிய ததக்க்குதல் செய்வார்கள் காத்திருக்க சொல்லியா?

அப்படிஎன்றால் புலிகள் பலம் இழந்துவிட்டார்கள் என்று சொல்கின்றீர்களா? எனக்கு புரியவில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.