Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி: 54 ஆயிரம் பேர் வேலையிழப்பு

Featured Replies

சிறிலங்காவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நல்ல விடயம்தான். சிங்கள்வனுக்கு போர் தங்களின் முற்றத்திற்கு வரும் வரை சந்தோசம்

பார்ப்போம் என்னவென்று

காசும் இல்லை

திமிர் அடங்குமா

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கிடந்த இலங்கையை இந்திய காங்கிரஸ்காரர் ஆதரவு தாறம், ஆயுதம் தாறம், ஆக்கள் தாறம் எண்டு சொல்லி கடைசியாகத்தேரை இழுத்து தெருவிலை விட்டுப்போட்டினம்,பொன்சேகாவ

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுக்க இதே ....... ,

பொருளாதார நெருக்க்கடி உள்ளது .

அதற்காக , முழங்காலுக்கும் ........... மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் பாக்க வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மிதக்க விடப்பட்ட நாணயக்கொள்கையை கடைப்பிடிக்கும் நாடு! ஏற்றுமதி வர்த்தகத்தைப்பொறுத்த வரை உள் நாட்டு நாண்யப்பெறுமதி நிலையாகவிருக்க வேண்டும் அதனை தீர்மானிக்கும் கருவிகள்

உள்னாட்டு ஏற்றுமதி இறக்குமதி,பண வீக்கம்,வெளி நாட்டு முதலீடுகள் என்று காரணிகள் உண்டு!

இலங்கையரசினால் ஒவ்வொருமுறையும் கொண்டுவரப்படும் குறை நிரப்பு பிரேணணை பாதுகாப்புச்செலவுக்கான குறை நிறப்பு பிரேரணையாகும். பாதீடானது ஒரு நிதியாண்டிற்கு முன்கூட்டியே நாட்டின் செலவுகள் அதற்கான வருமானங்கள் பற்றி தீர்மானிப்பதாகும் எதிர்பாரத விதமாக ஏற்படும் செலவுகளை இப்படி குறைனிரப்பு பிரேரணை மூலம் அதற்கான நிதிகளை தேடிக்கொள்வர்கள் அத்ற்கு புதிய பணம் அச்சிடுதல் குறுங்க்காலப்பத்திரங்கள்,வங

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நெருக்கடி போரினால் வந்ததாக தெரியவில்லை. இனிமேல் எந்த ஒரு நாடும் இவர்களுக்கு அபிவிருத்திக்கென்று பணம் வழங்காது. பாரிய வழங்கியான ஜப்பான் கூட நிறுத்திவிட்டதாக RDA இல் பணிபுரியும் ஒரு நண்பர் கூறினார். இனிமேல் எந்த ஒரு வங்கியும் வீட்டுக்கடன் அது இது என்று ஒன்றும் வழங்காது. இதனால் பாதிக்கப்படப்போகிறவர்கள் நம்மவர்களும் தான்.

அண்மையில் படித்த ஒரு கிண்டலான நகைச்சுவை. 2 தொழில் தான் இதனால் பாதிக்கப்படாதது. 1. வைத்தியம் 2. விபச்சாரம் (ஆனால் இதற்கும் ஆப்பு இருக்குத்தானே. பணம் இருந்தால் தானே .................)

சிங்களம் வங்குரோத்து நிலைக்கு ஏற்கனவே சென்றுவிட்டது! கொமோஷல் வங்கி ஏற்கனவே கையைத் தூக்கிப் போட்டுது .... சம்பத்தும், மக்கள் வங்கியும் போட்டி போட்டுக் கொண்டு நிற்கிறது!! ........ மொத்தத்தில் கொழும்பின் பொருளாதாரத்தை முழு இலங்கையின் பொருளாதாரமாக காட்டித்தான் உலக நாடுகளிடமும், உலக வங்கிகளிடமும் கையேந்துகிறது .... குட்டு உடையும் நிலையில் .... சிங்களம்!! ........... பாரதமாதாவின் இத்தாலிய மருமகளின் தயவில் யுத்தத்தை தொடர ஆயுதம் சிங்களத்துக்கு வருகிறது என்ன ...... இத்தாலிய பெண்ணே யுத்தத்தை நடத்துகிறார்!!

ஆனால் சிங்களத்தின் பொருளாதார வீழ்ச்சியிலும், நாங்கள் குறிப்பாக புலம் பெயர் எம்மவர்கள்சிங்களத்தை தாங்கிப் பிடித்து வருகிறோம்!! "பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய கதையாக" .... நாமே பணத்தை சிங்களத்துக்கு கொடுத்து எம்மைக் கொல்ல வழி ஏற்படுத்துகிறோம்!!

சிங்கள பொருளாதாரம் இன்று 50% விழுக்காட்டுக்கு மேல் எம்மிலேயே தங்கியுள்ளதாம்!! ஒவ்வொரு நாளும் எமக்கு சாப்பாடு எனும் பெயரில் சிங்கள எயாலைன்ஸ் 20க்கு மேற்பட்ட பறப்புகளை மேற்கொள்கிறதாம்!! 20 ரூபா சாமானுக்கு 200 ரூபாவிற்கு மேல் இங்கு நாம் கொடுக்கிறோம்!! இங்குள்ள கொக்கக்கோலா குடிக்க மாட்டாமல் சிங்கள கோக்கிற்கு அலைகிறோம்! உழுர்த்த பிஸ்கட்டுகளை அள்ளி வாங்குகிறோம்!! புழுக்கள் இனி அரிக்க இடமே இல்லாத கீரைகளை சுருட்டிக் கொண்டு போகிறோம் .......... மொத்தத்தில் சிங்களம் எம்மிடம் எந்த கழிவையும் பொன்னாக்கும் நிலையிலேயே உள்ளது!!

அளவுக்கு அதிகமாக பணத்தை அனுப்புகிறோம் .... முடிபு ..... கப்பங்களும்,வீண் விரயங்களிலேயே போகிறது!! கொழும்பின் மற்றைய பகுதிகளில் 100 ரூபாவிற்கு விற்கும் மரக்கறிகள் வெள்ளவத்தையில் 300ஐத் தாண்டும்!! வங்கிகளுக்கு பணம் சென்றவுடனேயே அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு செய்தி போந் விடும் ... ஒரு கைது ... வங்கியில் இருப்பதில் அரைவாசி பிணையோ, கப்பமாகவோ போந் விடும்!!!

நாம் உணர்ந்தால்தான் ..........!!!!!!!!!!!?????????????

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்கு ஆக்கள் எடுக்க வசதிதானே..! :wub:<_<

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி: 54 ஆயிரம் பேர் வேலையிழப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2009, 06:58 மு.ப ஈழம்] [பி.கெளரி]

சிறிலங்காவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலக பொருளாதார நெருக்கடி சிறிலங்காவை கடுமையாக பாதித்து வருகின்றது.

சிறிலங்காவில் உள்ள 53 ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 54 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

ஆடை உற்பத்தி, கட்டுமானத்துறை, வெப்ப ஆடை உற்பத்தி, சீமெந்து உற்பத்தி, இரத்தினக்கல் ஏற்றுமதி, நிதி முகாமைத்துவ நிறுவனங்களே அதிகளவில் மூடப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதங்களில் மேலும் பலர் வேலை இழப்புக்களை சந்திக்கலாம் என வர்த்தக சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்டுநாயக்க, பியகம, கோகல பகுதிகளில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள பல நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளன.

பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள், பயண கொடுப்பனவுகள், மேலதிக நேர வேலை போன்றவற்றை இந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் தமது பணியாளர்களை விடுமுறையில் அனுப்பியுள்ளன.

கம்பகா மாவட்டத்தில் உள்ள சினோரெக்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் மூடப்பட்டதனால் 3 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்ற் லங்கா மூடப்பட்டதனால் 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

:wub:

இலங்கை பொருட்களையும் நாம் புலத்தில் யாவரும் முழுமனதுடன் நிராகரித்தால் இலங்கையை விரைவில் நாம் பணியவைக்கலாம். <_<

சிங்களக் கூட்டம் படைக்கு பெருமளவில் முதலீடு செய்வதன் நோக்கம் குறுகிய கால வெற்றியை இலக்கில் வைத்துத் தான். நீண்ட காலத்திற்கு இப்படி தொடர்ச்சியாக இராணுவ முதலீடு செய்து கொண்டிருக்க முடியாது.

ஏனென்றால் இராணுவ முதலீடு ஏனய முதலீடுகளைப் போலல்லாமல் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுப்பதில்லை. அது முற்றும் முழுதாக ஒரு மீளப்பெறமுடியாத செலவாகவே முடிந்துவிடுகின்றது.

போர் தொடரப்போகின்றது என்ற தோற்றப்பாடு சிங்களத்தின் பொருளாதார திட்டமிடளாள‌ர்களின் ஊக்கத்தைக் கொன்றுவிடும்.

சிங்களத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு புறக்காரணிகளில் மாத்திரம் தங்கியிராது (Passive approach), தமிழர் சிங்களத்தின் பொருளாதார இலக்குகளை கவனத்தில் எடுத்தல் வேண்டும்( Active approach).

அணுகுமுறைகள் சிங்களத்தின் செலவைக் கூட்டும் முறையில் இருக்கவேண்டும்.

1. எரிபொருள் இறக்குமதியைக் கூட்டும் வகையான செயற்பாடுகள்.

2. உணவு இறக்குமதியை கூட்டும் வகையான செயற்பாடுகள்.

3. கட்டுமானப் பொருட்களின் இறக்குமதியை கூட்டும் வகையான செயற்பாடுகள்.

தற்சமயம் சிங்கள நாட்டில் பாதுகாப்புப் பொறிமுறையானது மிக முக்கிய நபர்களைப் பாதுகாத்தல், இராணுவ \ அரசியல் \ கேந்திர முக்கியமான இடங்களப் பாதுகாத்தல் என்று மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. பொருளாதார இலக்குகள் தாக்கப் பட்டால் அவர்களது பாதுகாப்புப் பொறிமுறை விசாலப் படுத்தப் படவேண்டும். இது இன்னும் அவர்களது செலவை அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இராணுவதாக்குதலால் அரசை நிலைகுலைய செய்தாலும் .பொருளாதார தாக்குதலால் அரசை தலையெடுக்காமல் பண்ணலாம்.எல்லாம் எம்மில் தான் தங்கியுள்ளது.

தனது சொந்தப் பணத்தில் போரிடுவதாயிருந்தால் இந்தத் தாக்கங்கள் அரசைப் பாதிக்கும். மற்றைய நாடுகள் உதவும் போது பெரியளவில் பாதிப்பு அரசிற்கு இருக்காது. பொருளாதாரப் பாதிப்பினால் மக்கள்தான் கஷ்ரமடைவார்கள்.

இங்கு சில செயற்பாடுகளை நம்மவர்கள் தொடங்கியுள்ளார்கள்! அதற்கு எமது வர்த்தகர்களின் ஆதரவும், எம்மவர்களின் ஒத்துளைப்பும் இருந்தால் சிங்களத்தின். எம்மீது தங்கி உள்ள பொருளாதாரத்தில் பேரிடியைக் கொடுக்கலாம்!!

.......... "எம் பணத்திலேயே, எம்மவர்கள் அழிக்கப்படுவதை நிறுத்துவோம்" ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.