Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் நகர்வுகள் களத்தில் மாறுதலை ஏற்படுத்துமா? -இதயச்சந்திரன்

Featured Replies

வன்னிக் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. புதுக்குடியிருப்பை கைப்பற்றிவிட்டோமென கூறிய மறுதினமே, அங்கு தொடர்ந்தும் சண்டை நடைபெறுவதாக உதய நாணயக்கார கூறுகிறார்.

இராணுவம் நிலைகொண்டுள்ள, பின் தளப்பகுதிகளில், விடுதலைப் புலிகளின் அணிகள், ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்வதாக களச் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. அதேவேளை இரு வாரங்களிற்கு முன்னர், ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் எதிர் வினையாக, முன்னரங்கில் மோதலில் ஈடுபட்டுள்ள சில அரச படையணிகள் பின்னகர்த்தப் பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அரசு கூறும் குறுகிய நிலப்பரப்பில், சமர்கள் தீவிரம் அடையும் அதேவேளை கொழும்பு மீதான வான் கரும்புலிகளின் தாக்குதல்கள் பலத்த சேதத்தை உண்டு பண்ணியுள்ளன. அரச இறைவரித் திணைக்களம் மீது இத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர், உண்மையை மூடி மறைக்க முயன்றுள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, வான்படைத் தலைமையகத்தைப் பார்வையிட, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டு வானோடிகள் 12 பேர், இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆதார பூர்வமான செய்தியன்று வெளிவந்துள்ளது. இந்த அந்நியப்படை வானோடிகளே, முன்னரங்கில் யுத்த உலங்கு வானூர்திகளை இயக்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாகக் கையிருப்பில் இருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்களையும் சுட்டு வீழ்த்தி, வான்புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டிய சிங்களத்தின் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, விடுதலைப் புலிகளின் விமானங்களால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படலாமென்று ஒன்றுக்குப் பின் ஒன்று முரணான தகவல்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

இந்தியாவை அச்சமூட்ட இவ்வாறான கண்டுபிடிப்புக்களை வெளியிடும் சரத்பொன்சேக்கா, தாக்குதல் நடாத்திய விமானத்தில் காணப்பட்ட தொடர் இலக்கங்களிலிருந்து, அவை தென்னாபிரிக்காவிலிருந்து பெறப்பட்டதாக புதிய தகவலொன்றையும் உலவ விட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் அதிகரித்து வரும் ஈழ ஆதரவுப் போராட்டங்களைச் சிதைப்பதற்கு, அந்நாட்டின் மீது அவதூறுகளை சுமத்தும் உத்திகளை சிங்களம் கையாளத் தொடங்கியுள்ளதென்று கருதலாம். ஆனாலும் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் பல இன அழிவுக்கெதிரான அமைப்புக்களும் இணைந்து குவாசுலு என்கிற மாநிலத்தில் நிகழ்த்திய ஈழ அங்கீகாரப் போராட்டமே சிங்களத்தை அதிர வைத்துள்ளதென்பதை இவர்களின் பரப்புரைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றத்திலும், அமெரிக்க செனட் சபை விசேட கூட்டத்திலும் சிறீலங்கா விவகாரம் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளதை நோக்கலாம். ஆனாலும் இலங்கையில் நடைபெறுவது பயங்கரவாதப் பிரச்சனை என்கிற தனது கோட்பாட்டிலிருந்து, இன்னமும் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் மாறவில்லைபோல் தெரிகிறது.சிறீலங்காவிற்கான பிரித்தானியாவின் விசேட தூதுவராக. திரு. டெஸ் பிறவுனி (DES BROWNE) அவர்களை நியமித்திருப்பதாக, பல வாரங்களாகக் கூறப்படும் கதையே திரும்பவும் பெருமையாக முன் வைக்கப்பட்டது.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் மெக்சிக்கோ கிளப்பிய சிறீலங்காப் பிரச்சனையை பிரித்தானியா ஓரங்கட்டிய விவகாரத்தை ஒரு உறுப்பினர் அம்பலமாக்கியபோது டேவிட் மிலிபாண்ட் கொடுத்த விளக்கம், மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.அதாவது இவ் விவகாரத்தை பாதுகாப்புச்சபையில் முன்வைக்கும் போது, யாராவது ஒரு உறுப்பினர் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்நகர்வினைத் தடுத்தால், அதனை மறுபடியும் கொண்டுவர முடியாத இக்கட்டான நிலையன்று ஏற்படலாமென்பதால், தாம் அதற்கு அநுசரணை வழங்கவில்லையென்று புதிய வியாக்கியானமொன்றை பிரி, வெளியுறவு செயலர் கூறியிருந்தார்.

அதேவேளை அமெரிக்க செனட்சபையின் விசேட கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம் சற்று ஆழமாக விவாதிக்கப்பட்டது. வெளியுறவிற்கான உப குழு ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தினை திரு. கேசி ( Casey)வழிநடாத்த, 2003 - 2006 வரை சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவராகவிருந்த திரு. ஜெவ்ரி, லன்ஸ்டெட் அவர்களும், மனித உரிமைக்கண்காணிப்பகத்தின் விசேட ஆய்வாளர் அனா. நைஸ்ரட் (Ms. Anna Neistat)அம்மையாரும், செனட்டர் திரு. பொப். பீட்ஸ் (BOB.DDIETZ) அவர்களும் பங்குபற்றினர்.

சிறீலங்காவின் ஊடக அடக்கு முறை குறித்து விரிவாக ஆராய்ந்த பொப். பீட்ஸ் அவர்கள், எதிர்கால சிறீலங்கா அரசின் மாற்றங்கள் குறித்து பேசுகையில், அந்நாடு இன்னுமொரு சிம்பாம்வேயாகவோ அல்லது இராணுவ ஆட்சி நடக்கும் மியன்மார் (பர்மா) போன்றோ தோற்றம் பெறலாமெனக் கூறினார்.ஆயினும் ஜோர்ஜ் புஷ்சின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கத் தூதுவராகப் பணிபுரிந்த ஜெவ்ரி லன்ஸ்டேட்டின் பேச்சில், சிங்களத்திற்கு சார்பான தொனியே அதிகம் காணப்பட்டது.மகிந்த இராஜபக்ச ஒரு இனவாதி அல்ல என்கிற கருத்தை உறுதிபடக் கூறினார் லன்ஸ்டேட். அத்தோடு அமெரிக்காவைப் பொறுத்தவரை, எந்தவிதமான கேந்திர நலனும் சிறீலங்காவில் இல்லையென்பதை அவர் கூற முற்பட்டாலும், ஏனையோர் நிகழ்த்திய உரைகளில் அதன் உண்மைத் தன்மை வெளிப்பட்டது.

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதால், அமெரிக்கா இப்பிரச்சனையில் தலையிட்டு, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இது குறித்த தீர்மானமொன்றினை நிறைவேற்ற வேண்டுமென அனா. நைஸ்ராட் அம்மையார் கூறுகையில், இதனை ரஷ்யாவும், சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்குமென்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது.இந்த விவாதத்தில் கலந்துகொண்ட அனைவரும், இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து பேசுவதை தவிர்த்தார்களென்றே கூற வேண்டும்.

தமிழ்மக்களின் ஏக தலைமை, தமிழீழவிடுதலைப் புலிகள் என்கிற பேருண்மையை இப்பெருமக்கள் ஒத்துக்கொள்ள விரும்பவில்லை. இரண்டாவதாக, சர்வதேச வல்லரசாளர்களின் ஆடுகளமாக சிறீலங்கா மாறிவிட்டதென்கிற பிராந்திய யதார்த்தத்தையும் இவர்கள் ஆராய முயலவில்லை. சீனாவும் பாகிஸ்தானும், சிறீலங்காவின் நிரந்தர நண்பர்கள் என்பதையும், தற்காலிக தந்திரோபாய நண்பன் இந்தியா என்பதையும், இவர்களின் விவாத உட்பொருள் உணர்த்தினாலும், சிங்களத்தின் சர்வதேசப் பார்வை குறித்து இவர்களின் சந்தேகம் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாகவிருக்கிறது. விடுதலைப்புலிகளை சிங்களத்தால் அழிக்க முடியாதென்கிற கருத்தும் இவர்களிடம் தென்படுகிறது.

உருமாற்றமடையக்கூடிய போராட்ட வடிவங்கள் பற்றி எல்லோரும் பேசினார்கள்.இந்தியாவை மீறி, புதிய நகர்வொன்றை துணிவாக முன்னெடுக்க முடியாத தடுமாற்றமும், பொருளாதார நண்பன் ஜப்பான் சுமத்தும் சிங்கள சார்பு அழுத்தங்களும், அமெரிக்காவை ஆட்டிப்படைப்பதுபோல் தெரிகிறது.ஆயினும் வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்து சில பிரதேசங்களை விடுதலைப் புலிகள் மீட்டெடுத்தால், அமெரிக்கத் தயக்கம் மாறுதலடையலாம்.அதனையே அமெரிக்க அரசு எதிர்பார்ப்பது போலுள்ளது.

http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் புலிகளின் கைகளிலே. எல்லாம் சுபமாக முடியும்.

அடுத்துவரும் வாரம் தமிழர்க்கு நற்செய்தி தரும் வாரமாக அமையும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் புலிகளின் கைகளிலே. எல்லாம் சுபமாக முடியும்.

அடுத்துவரும் வாரம் தமிழர்க்கு நற்செய்தி தரும் வாரமாக அமையும்

இதை எத வைத்து சொல்லுரீங்கள்?

இதை எத வைத்து சொல்லுரீங்கள்?

கக்கக்கா போ இரனைமடுகுளத்தை வைத்து சொன்னார் :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வு!

சர்வதேசம், ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளின் பொய்பிரச்சாரங்களை ஏற்கத்தயாரில்லை என்பது புரிகின்றது.

அவர்களிடமிருந்து திடீர் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது, இதற்காக நாங்கள் அதாவது பாதிக்கப்பட்ட தரப்பினர்களாகிய தமிழர் இன்னும் கடினமாக செயல்பட வேண்டியுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் எங்களால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஒரே மாதிரியாக வழி நடத்துவதிற்கு ஒரு இணைப்பாளர் அவசியம் இருக்கவேண்டும்.

Edited by Valvai Mainthan

நல்ல ஆய்வு!

சர்வதேசம், ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளின் பொய்பிரச்சாரங்களை ஏற்கத்தயாரில்லை என்பது புரிகின்றது.

அவர்களிடமிருந்து திடீர் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது, இதற்காக நாங்கள் அதாவது பாதிக்கப்பட்ட தரப்பினர்களாகிய தமிழர் இன்னும் கடினமாக செயல்பட வேண்டியுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் எங்களால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஒரே மாதிரியாக வழி நடத்துவதிற்கு ஒரு இணைப்பாளர் அவசியம் இருக்கவேண்டும்.

சத்தியமான வார்த்தைகள்.. தற்போது கவனஈர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடும் எம்மவரிடையே சில இடங்களில் வேதனையளிக்கும் பிளவுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. நாளை இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதே ஒரு பெரிய பிரச்சனையாகாமல் இருக்கவேண்டும்..

எல்லாம் புலிகளின் கைகளிலே. எல்லாம் சுபமாக முடியும்.

அடுத்துவரும் வாரம் தமிழர்க்கு நற்செய்தி தரும் வாரமாக அமையும்

இத தானே நாங்க மாவிலாறு தொடங்கி சொல்லிறம்..அடுத்த வருடம் நல்ல செய்தி, அடுத்த மாவீரர் தினத்தோட அடி விழும்..5 வருஷ சமாதானம் முடிந்தவுடன் விழும்..வன்னிய தொட்டவுடன் வெடிக்கும்...கிளிநொச்சி ஒரு ஸ்டாலின்கிராட்..முல்லைத்தீவு ஒரு லெனின்கிராட்..இப்ப புதுக்குடியிருப்பு ஒரு வரலாற்று சமர் என்டு கொஞ்ச காலத்திக்கு முதல் அருஸ் எழுத நேற்று புதுக்குடியிருப்பும் போயிட்டுது. இனி புதுசா அடுத்த கிழமை நல்ல செய்தி....அடுத்த கிழமை என்ன சொல்லுவீங்க?..தலைவர் உங்களிட்ட வந்து சொன்னவரா அடுத்த கிழமை நாங்க அடிக்கபோறம் நல்ல செய்தி வரபோகுது என்டு??

நாங்க வீணா புலி அப்படி அடிக்கும் இப்படி அடிக்கும் என்டு எங்கட கற்பனை சக்திக்கு ஏற்ற மாதிரி கதைகளை சொல்லாம..எங்களால முடிஞ்ச போராட்டங்களை செய்து அரசியல் ரீதியான பலத்தை பெற முயற்சிப்பம்.யுத்த களத்தை தலைவர் பார்த்துக்கொள்ளட்டும்.

Edited by நெப்போலியன்

உலக அரங்கில் மக்களின் அவலத்தாலும் பிராந்திய சக்தியின் மிலேச்சத்தனமான செயற்;பாடுகளாலும் சர்வதேசத்தில் மாற்றம் ஏற்படத்தான் செய்யும். அந்த மாற்றம் எமக்குச் சார்பாக நகரும் என்பதை எதிர்வு கூற முடியாது. ஆனாலும் நல்ல பலனைத் தரும் மாற்றங்களில் எம்மையும் இணைத்துக் கொள்ளுதல் நன்று.

அமெரிக்காவின் எதிர்பார்ப்பை இதுதான் என்று ஆய்வாளர் கூறும் கருத்து, அது தலையீடு செய்வதற்கு காரணம் தேடும் முயற்சி. சமகால நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒரு ஆய்வு.

சத்தியமான வார்த்தைகள்.. தற்போது கவனஈர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடும் எம்மவரிடையே சில இடங்களில் வேதனையளிக்கும் பிளவுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. நாளை இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதே ஒரு பெரிய பிரச்சனையாகாமல் இருக்கவேண்டும்..

நக்கீரனின் ஆதங்கம் உண்மையானதுதான். எது எமது பிரச்சனை என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களிடத்திலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. தங்களை முன்னிறுத்தும் நோக்கமே அது. அதனை விடுத்து எல்லோரும் ஒன்றிணைந்து தற்காலத்தில் செயற்பட வேண்டியது முக்கியமானது.

நாங்க வீணா புலி அப்படி அடிக்கும் இப்படி அடிக்கும் என்டு எங்கட கற்பனை சக்திக்கு ஏற்ற மாதிரி கதைகளை சொல்லாம..எங்களால முடிஞ்ச போராட்டங்களை செய்து அரசியல் ரீதியான பலத்தை பெற முயற்சிப்பம்.யுத்த களத்தை தலைவர் பார்த்துக்கொள்ளட்டும்.

சரியா சொன்னீங்க!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் புலிகளின் கைகளிலே. எல்லாம் சுபமாக முடியும்.

அடுத்துவரும் வாரம் தமிழர்க்கு நற்செய்தி தரும் வாரமாக அமையும்

ஏன் நாமின்னும் எம்மை உணராதிருக்கின்றோம் என்பது புரியவில்லை. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் நமது பங்கென்ன என்பது தொடர்பாக சரியாகப் புரியாதிருக்கிறோம் என்பதையே, இது போன்ற கருத்துகளால் உணரக் கூடியதாக உள்ளது. இது தமிழினத்திற்குப் பாதகமானதொரு விடயமாகும். எதிரிக்குச் சாதகமான விடயமும் கூட. எப்படி என்றால் இது போன்ற சிந்தனைத் தளமானது உண்மையான உழைப்பிற்க்குப் பதிலாக, அவர்கள் செய்வார்கள் என்ற பின், எல்லாம் முடிந்ததென இருப்பது போன்றதே. புலிகள் செய்வார்கள் என்பது உண்மை. அதனால்தான் கடந்த 32 ஆண்டுகால ஆயுதப் போராட்டமானது சரியான திசைவழியில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் செய்வதற்காக நாம் எப்படியான பங்களிப்பை நல்கப் போகிறோம் என்பதும் கேள்வியாகின்றது. கடந்த இரண்டாண்டுகளில் தமிழினம் சந்தித்த சரிவிலிருந்தும் அழிவிலிருந்தும் நாமின்னும் கற்றுக் கொள்ளவில்லையாயின் இனி எப்போது. மகிந்தவின் ஆட்சிக்காலமான 2006 முதல் 2008 இறுதிவரை களமுனைகளில் 4500 போராளிகள் விதையாகிப் போனதாகவும் 4500 போராளிகள் காயமுற்றுள்ளதாகவும், அண்மைய மக்கள் சந்திப்புகளில் வெளிவரும் விடயமாக உள்ளது. எதிரியானவன் பெருமளவு நிதி, 14 நாடுகளது படைத்துறை வழங்கல்கள் 7 நாடுகளின் நேரடி படைத்துறை ஆலோசனைகள், இந்தியாவின் நேரடித் தலைமைப் பாத்திரம் யாவும் சேர்ந்து எம்மினத்தை அழிவுப் புள்ளி நோக்கி நகர்த்திச் செல்கின்ற வேளையில், இன்றும் எம்மவர்களில் பெரும்பாலானோர், அதிசயங்கள் நிகழுமென்றும் - மந்திரத்தால் மாங்காய் விழுமென்றும் நினைப்பதுதான் அர்த்தமற்ற பார்வையாகும்.

விடுதலை என்பது காலநிர்ணயங்களுக்கப்பால் நிகழும் ஒரு அரசியல் மாற்றத்திற்கான வழிமுறை. எங்களுடைய அரசியல் இலக்காக இருப்பது தமிழருக்கான தனியரசு. ஏலவே இருந்த தமிழரது தனி அரசை மீள நிறுவுதல். அதனை அடையக் கடுமையான உழைப்பு, அதியுச்ச அர்பணிப்பு, அதிகூடிய பங்களிப்பு என்ற வினைத்திறனான புள்ளிகள் எட்டப்படும்போதே களமுனை மாற்றம் சாத்தியமாகும். இன்றைய இந்தத் துயரமான நிலைக்கும் நாமே காரணர்கள். புலம்பெயர் வாழ் உறவுகள் நாளொன்றுக்கு ஒரு டொலர் வீதம் தொடர்ச்சியாகப் போட்டிருந்தால், ஐந்து லட்சம் பேரென்று பார்த்தாலும் மாதமொன்றுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் (வருடம் 18க்கோடி இது ஒரு குறைந்த கணிப்பு) டொலர்களைத் திரட்டியிருக்க முடியும். இதனூடாக எமது பாதுகாப்பு எப்போதோ உறுதிப்படுத்தப்பட்டிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உவர் திங்கட் கிழமை GTV இல சொல்லுலார் பிரித்தானியாவில் BBC முன்பாக தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தது லசந்தவின் கொலையை கண்டிக்கவாம். அதோட வித்தியாதரனின் கைதிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஒருதரும் முன்வரவில்லையாம் என்று வேற..

முதலில எப்படிப்பட்ட சூழ்நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றது என்பது இவருக்கு தெரியவில்லை.

ஆய்வுகள் எழுதிறம் என்டு சும்மா சனத்தை உசுப்பேத்தி விட்டிட்டு, இப்ப புலி அடிச்சால் அமெரிக்கா வரும் என்டு கதைவேற.

முதலில உங்கட ஆய்வுகளை விட்டிட்டு வாங்கோ புலத்தில போராட....

அப்படி முடியாவிட்டால் எப்படி இலங்கையிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தலாம் என்டு ஆய்வுகளை செய்யுங்கோ(அதுக்காக சோடாவையும் சவுக்காரத்தையும் பற்றி ஆயாதிங்கோ).

Edited by MEERA

உள்ள ஆய்வாளர்களில் மக்களை உசுப்போத்தும் இராணுவ ஆய்வுகளை விடுத்து அரசில் ரீதியாக சிந்திக்க வைக்கும் ஆய்வுகளை தரும் இதயச்சந்திரனை மீரா சாடுவது ஏதோ தனிப்பட்ட கோபமோ என்னவோ! லண்டனிலை ஒரு பேப்பர் இப்படி தான் தன்றை சொந்த கோபங்களை வெளிக்கொணரவே இலவசமாக வருகிறது.

இதயச்சந்திரன் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவ களத்தில் இறங்கி போராடியவர் என்று கேள்வியுற்றுள்ளேன். அதை என் நண்பர்களும் ஊர்ஜிதம் செய்தனர். அது மட்டுமல்லாது அவரின் ஆய்வில் உள்ள அரசியில் நெளிவு சுளிவுகள் பலருக்கு புரிய நேரம் எடுக்கும். புரிந்தால் அவரும் ஒரு வகையில் போராட்டத்தை தன் வழியில் செய்கிறார் என்பது புரியும்! கொழும்பில் கைது செய்யப்பட்ட வித்தியாதரன் போராளி அல்ல! அனால் அவர்களை போராட்டத்தில் ஈடுபட வில்லை சும்மா உசுப்பேத்த தான் பத்திரிகை நடாத்துகிறார் என்றால்.... இதை விட விதண்டா வாதம் இருக்க முடியாது. ஒரு வேளை ஒரு பேப்பர் ஒன்றை நடாத்தினால் எங்களுக்கு புரியுமோ என்னவோ!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு பரபரப்பு தான்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவும் போராடியவர் தான் அதற்காக அவர் இப்போது கூறும் கருத்துக்களை ஏற்கமுடியுமா..?

1980 களில் தான் ஆயுத போராட்டம் ஆரம்பமானது.. அப்ப எப்படி "இதயச்சந்திரன் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவ களத்தில் இறங்கி போராடியவர்" எந்த களத்தில் இறங்கினவர்?

"வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்து சில பிரதேசங்களை விடுதலைப் புலிகள் மீட்டெடுத்தால்இ அமெரிக்கத் தயக்கம் மாறுதலடையலாம்.அதனையே அமெரிக்க அரசு எதிர்பார்ப்பது போலுள்ளது." இது எப்படி சாத்தியமாகும்.

மற்றது யாரையோ நினைத்து உரலை இடிக்கிறீர்கள்.

"ஒரு வேளை ஒரு பேப்பர் ஒன்றை நடாத்தினால் எங்களுக்கு புரியுமோ என்னவோ!"

ற்கு முன்பான ஆர்ப்பாட்டம் யை எங்களை நோக்கி திருப்புவதற்கான முயற்சியே..

முதலில அவரை இதை செய்ய சொல்லுங்கோ..

"முதலில உங்கட ஆய்வுகளை விட்டிட்டு வாங்கோ புலத்தில போராட....

அப்படி முடியாவிட்டால் எப்படி இலங்கையிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தலாம் என்டு ஆய்வுகளை செய்யுங்கோ(அதுக்காக சோடாவையும் சவுக்காரத்தையும் பற்றி ஆயாதிங்கோ). "

மேலும் மாணவர் பேரவையின் சத்தியசீலன் அவர்கள் இலன்ட்னில் தான் இருக்கிறார். அவரை தொடர்பு கொண்டாவது அரசியலை படிக்க சொல்லுங்கள்.

Edited by MEERA

மீரா! நான் நினைத்தது 100வீதம் சரி! ஏதோ கோபம் தாக்குங்கோ! வாழ்க வளமுடன்!!!

  • தொடங்கியவர்

மீரா புலிகள் இயக்கம் 1976 இல் தோற்றப்பெற்றது மற்றும் புலம் என்பது தாயகம் தான் புலம் பெயர்ந்தவர்கள் நாம் அனைவரும் இதை விளங்குங்கள்

அதுவும் நல்லது தான். புலம் பெயர்ந்தவர்கள் எல்லாம் தாயகத்திற்கு போய் போராடினால் ஈழம் வெகு விரைவில் மலரும்.

தாராக்கி, அரசியல் இலாபங்களை மனதில் கொண்டு இன்று புலம் பெயர் மண்ணில் அரசியல் நடாத்தும் மறறும் அரசியல் களத்தில் குதிக்க நினைக்கும் பலரும் தற்போது புலம்பெயர் மண்ணில் போராட்டம் நடாத்துகிறார்கள். லண்டன் வாழ் கவுன்சிலர்கள்கள், கவுன்சிலராக முனைபவர்கள் பலர் தமிழ் மக்களின் வோட்டை வேட்டையாட புலத்தில் போராட்டம்?? வாழ்க வளமுடன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரச இறைவரித் திணைக்களம் மீது இத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர், உண்மையை மூடி மறைக்க முயன்றுள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, வான்படைத் தலைமையகத்தைப் பார்வையிட, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டு வானோடிகள் 12 பேர், இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆதார பூர்வமான செய்தியன்று வெளிவந்துள்ளது. இந்த அந்நியப்படை வானோடிகளே, முன்னரங்கில் யுத்த உலங்கு வானூர்திகளை இயக்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள்!

திருடனுக்கு தேள் கொட்டியது போல இருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.